காரை வசந்தம் – 2015 சிறப்பு மலரின் முகப்பு அட்டையினை வடிவமைக்கும் போட்டி

Featured

CKCA logo

எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவின் போது வெளியிடப்படவுள்ள காரை வசந்தம் – 2015 என்கின்ற சிறப்பு மலரின் முகப்பு அட்டையினை வர்ணத்தில் வடிவமைப்பு செய்யும் போட்டியினை நடாத்தி மிகச் சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் அட்டையினை வடிவமைத்தவருக்கு காரை வசந்த விழாவின் போது பாராட்டு விருது வழங்கி கௌரவிப்பதுடன் அவரது பெயர் விபரங்கள் சிறப்பு மலரில் பதிவு செய்யப்படும்.

போட்டியில் பங்குகொள்வதற்கான நிபந்தனைகள்

காரைநகர் உள்ளிட்ட உலகின் எப்பாகத்தில் வதியும் காரைநகரைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது வாழ்கைத் துணைகள் அல்லது அவர்களது பிள்ளைகள் அனைவரும் பங்குபற்றமுடியும்.

டிவமைக்கப்படும் அட்டை காரைநகரின் அடையாளங்களாக அமைந்து விளங்கும் பிரதானமான மையங்களையும் வனப்பு மிக்க காட்சிகளையும் வர்ணத்தில் பின்னணியில் கொண்டிருப்பதுடன் 8.5அங்.(அகலம்) X 11.00அங்.(உயரம்) என்ற அளவினைக்கொண்டதாகவும்  இருக்கவேண்டும்.

காரை வசந்தம் – 2015 என அட்டையின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியில் இடம்பெறும் மன்ற இலட்சினைக்கு நேராக கனடா-காரை கலாசார மன்றம் Canada-Karai Cultural Association   என தமிழிலும் ஆங்கிலத்திலும் பதியப்படுவதுடன் டிசம்பர் 19, 2015 என்ற திகதியும் கூடவே பதியப்படுதல் வேண்டும்.

வடிவமைப்புச் செய்யப்பட்ட அட்டை  karainagar@gmail.com   என்ற மின் அஞ்சல் முகவரிக்கு நொவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படுதல்வேண்டும்.

விரும்பின் ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட அட்டைகளையும் வடிவமைத்து அனுப்பமுடியும்.

416-817-8479

 416-267-6999

 647-766-2522 

என்ற தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

வடிவமைக்கப்பட்ட File PDF அல்லது JPEG வடிவில் அமைந்திருப்பதுடன் Resolution 300DPI ஆகவும் இருத்தல் வேண்டும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்.

 

 

கனடா – காரை கலாச்சார மன்றம் தமிழ் மொழித்திறன் போட்டிகள்

Featured

CKCA LOGO-2015

                  

    கனடா – காரை கலாச்சார மன்றம்


 தமிழ் மொழித்திறன் போட்டிகள்

 

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும்  
தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் எதிர்வரும் December 13, 2015  இல் நடாத்தப்படவுள்ளன.

 

விண்ணப்ப முடிவு திகதி: November 30, 2015


இடம்:  Scarborough Civic Centre                

 காலம்: ஞாயிற்றுக்கிழமை,  December 13, 2015
நேரம்: காலை 8.00மணி

இத் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில்
பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து
கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

பிரிவுகள்: 


பாலர் பிரிவு:        Junior/Senior Kindergarden students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/paalar_nilai.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T_C_2015_Reading_-_JK_SK.pdf


கீழ்ப்பிரிவு:        Gr 1 / Gr 2 students

 

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/kielpirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-1-Gr-2.pdf


மத்தியபிரிவு:        Gr 3 / Gr 4 students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/maththiya-pirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-3-Gr-4.pdf


மேல்பிரிவு:        Gr 5 / Gr 6 students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/metpirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-5-Gr-6.pdf


அதிமேற்பிரிவு:        Gr 7 / Gr 8 students 

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/athi-metpirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-7-Gr-8.pdf


உயர்பிரிவு:        Gr 9 / Gr 10 students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/uyar-pirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-9-Gr-10.pdf

 

இதற்கான விதிகள் பின்வருமாறு:

பங்குபற்றுபவரின் பெற்றோர் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் இந்த ஆண்டுக்கான உறுப்பினராக இருத்தல் வேண்டும்.


பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பேச்சினை மனனம் செய்து பேசுதல் வேண்டும்.
வாசிப்புப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட விடயங்களை வாசித்துப் பயிற்சி செய்து வரவும். இவற்றுள் கேட்கப்படும் பகுதிகளை போட்டியின் போது வாசித்துக் காட்டுதல் வேண்டும்.

பண்ணிசைப் போட்டி: 


பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு –             ஏதாவதுதொரு தேவாரம்


மத்திய பிரிவு, மேற் பிரிவு:     ஏதாவதொரு தேவாரமும், புராணமும்.


அதிமேற்பிரிவு:                         ஏதாவதொரு தேவாரமும், திருவாசகமும்,

                                                            புராணமும்.

ஒவ்வொரு பிரிவிலும் பங்குபற்றும் போட்டியாளர்களுள் வெற்றி பெறும் முதல் மூவருக்கு வெற்றிக் கிண்ணங்களும், பங்கு பற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன் அனைவரினதும் புகைப்படங்கள் காரை வசந்தம் சிறப்பு மலரிலும், மன்ற இணையதளத்திலும் (Karainagar.com) இடம்பெறச் செய்யப்படும்.
பேச்சுப்போட்டியில் பங்கு பற்றி ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது இடத்தைப் பெறும் போட்டியாளர்களுக்கு காரை வசந்தம் கலையரங்கத்தில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

 

எல்லாப் போட்டிகளிலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்.

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920) நூல் வெளியீடு

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).
(மீழ்பதிப்பு 2015) நூல் வெளியீடு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை (22/11/2015) ஞாயிற்றுக்கிழமை ,04:30மணியளவில் ஆச்வே முருகன் ஆலய மண்டபத்தில் (ighgatehill Murugan Temple Hall, 200A Archway Rd, London N6 5BA.) இன் நூல் வெளியீடு பல அறிஞர் பெருமக்கள் மத்தியில்,120 க்கும்  மேற்பட்ட சபையோர் சூழ வெளியீடு செய்யப்பட்டது. பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கமும் , இலண்டன் திரிசக்தி இலக்கிய மன்றமும் இணைந்து இந்நூல் வெளியீட்டை ஏற்பாடு செய்திருந்தது.

   நிகழ்வு  திரு இளயதம்பி தயானந்தா அவர்கள் தலைமையில், ஆசான் ச.அருணாசலம் அவர்களின் பூட்டன் திரு. சிவானந்தரட்ணம் சிவஞானேஸ்வரன்,  திருமதி ரஞ்சினிதேவி வஞானேஸ்வரன், மற்றும் பல சுமங்கலிகள் மங்கள விளக்கேற்றலுடனும் , திரு க.ஒப்பிலாமணி அவர்களின் தேவாரத்துடனும் விழா ஆரம்பமானது.

        உயர்வாசற்குன்று முருகன் ஆலய சிவாச்சாரியார் அவர்கள் ஆசியுரை வழங்க,   ஆலய  கலாச்சார பிரிவு பொறுப்பாளர் திரு. மாணிக்கவாசகர் ஸ்ரீகாந்தா அவர்களும் , திரு ஐ.தி. சம்பந்தன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
 
                 நூல் அறிமுகத்தை , நூலை மீள்பதிப்பு செய்த சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் தி.விஸ்வலிங்கம் அவர்கள் செய்துவைத்தார்.  நூல் ஆய்வுரையை பேராசிரியர் மு நித்தியானந்தன்  அவர்கள் சிறப்புற ஆய்வு செய்தார். 
                                            புதினம் பத்திரிகை ஆசிரியர் திரு இ.கே.இராஜகோபால் சிறப்புரை வழங்கியிருந்தார். நூல் முதற்பிரதியை கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் திரு.க .இரட்ணசிங்கம் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

 

  இந்த அரிய நூலை மீள்பதிப்பு செய்த கனடா சைவசித்தாந்த மன்றத்தலைவர் சிவநெறிச் செல்வர் தி.விஸ்வலிங்கம் அவர்களுக்கு  பேராசிரியர் இரட்ணம் நித்தியானந்தன் இலண்டன் திரிசக்தி இலக்கிய மன்றம் சார்பில்  '' சிவநெறிச் சாதனையாளன் '' எனும் விருதினை வழங்கி கௌரவித்தது. பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கமும் விருதினை வழங்கி திரு. திருமதி விஸ்வலிங்கத்தை கௌரவித்தனர். அத்துடன் இந்நூல் மட்டுமல்ல , இதற்கு முதல் நாம் வெளியிட்ட ''காரை மான்மியம் '' நூல் வெளிவர மிகவும் உறுதுணையும் ஒத்தாசையும் வழங்கிய திரு எஸ். கே .சதாசிவம் அவர்களுக்கான  விருதினை, திரு விஸ்வலிங்கம் அவர்களிடம் கையளித்து , வரும் மாதம் 20ம் திகதி காரைநகரில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டில் அவரிடம் கையளிக்கும்படி வேண்டிக்கொள்ளப்பட்டது.  இந்நூல் மீள்பதிப்பிற்கு பலவையிலும் உதவிபுரிந்த திருமதி .கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களுக்கும் மன்றத்தினர் தங்கள் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

                      
நிகழ்வு மற்றும்பல கலை நிகழ்வுகளுடனும், இராப்போசன விருந்துடனும் இனிதே நிறைவுற்றது.


நன்றி வணக்கம்.

முதுசங்களைத்தேடி – நூல் வெளியீட்டுக் குழு 
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
23/11/2015

L1IMG_5696 IMG_5697 IMG_5698 IMG_5699 IMG_5700 IMG_5701 IMG_5702 IMG_5703 L2 L3

யாழ் காரைநகரில் வெங்காயம் விழுங்கிய குழந்தை மூச்சுத் திணறி பரிதாப மரணம்…!

கையில் அகப்பட்ட முழு வெங்காயத்தை வாய்க்குள் வைத்தபோது அது தொண்டைக்குள் சென்றதால் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத் திணறிப் பரிதாபகரமாக உயிரிழந்தது.

குழந்தையின் தொண்டைக்குள் வெங்காயம் இருந்தபோது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அங்கு மருத்துவர் இருக்கவில்லை. நின்றிருந்த தாதியரும் ஆரம்பச் சிகிச்சைகூடச் செய்ய முற்படவில்லை என்று குற்றம் சுமத்தும் குழந்தையின் பெற்றோர், வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

காரைநகர் அல்லீன் வீதியைச் சேர்ந்த மனோகரன் ஜெனவன் என்ற ஒரு வயதுக் குழந்தையே உயிரிழந்தது.

நேற்றுதாயார் சம்பல் அரைப்பதற்காக வெங்காயம் உள்ளிட்ட பொருள்களை  எடுத்து வைத்துள்ளார்.

தவண்டு வந்த குழந்தை வெங்காயம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைத் தட்டிவிட்டது. அதனால் சிதறுண்ட வெங்காயத்தைத் தாயார் மறுபடி பாத்திரத்தில் எடுத்துச் சென்று சம்பல் அரைத்துள்ளார். ஆனால், சிதறுண்டு கிடந்தபோதே குழந்தை ஒரு வெங்காயத்தைக் கையில் எடுத்துவிட்டது.

அதனைத் தாயார் கவனிக்கவில்லை போலும். அந்தக் குழந்தை கையிலெடுத்த வெங்காயத்தை வாய்க்குள் வைத்துள்ளது.

அதன்போது அந்த வெங்காயம் குழந்தையின் தொண்டையினுள் சிக்கியதனால் சுவாசிக்க முடியாமல் திணறியுள்ளது. சம்பல் அரைத்துக் கொண்டிருந்தபோது குழந்தை திணறுவதனைக் கண்ட தாயார் உடனடியாகக் குழந்தையைக் காரைநகர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்.

ஆபத்தான நிலையில் குழந்தையை வைத்தியசாலையில் சேர்க்கும்போது அங்கு மருத்துவர் இருக்கவில்லை.

சுமார் 15 நிமிடங்களாக அங்கு மருத்துவர் வரவில்லை என்று குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

நின்றிருந்த தாதியர்களும் ஏற்ற ஒழுங்குகள் செய்யவில்லை. அங்கு கட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்திருந்தனர்.

பின்னர் அம்புலன்ஸில் குழந்தையை ஏற்றி யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது அம்புலன்ஸில் பயணிப்பதற்கு அங்கு நின்றிருந்த தாதியர்கள் அக்கறை கொள்ளாது மறுத்துவிட்டனர்.

இதனால் அங்கு நின்றிருந்த சிற்றூழியர் ஒருவரே அம்புலன்ஸில் குழந்தையையும் பெற்றோரையும் ஏற்றிக் கொண்டு போதனா வைத்தியசாலைக்குப் புறப்பட்டார் என்றும் பெற்றோர் குற்றம் கூறினர்.

அதுமட்டுமன்றி குறித்த அம்புலன்ஸில் இரவு 10.30 மணியளவிலேயே பயணித்ததாகவும், அம்புலன்ஸின் உள்ளே மின்குமிழ் எதுவும் ஒளிரவில்லை எனவும், அதனால் கைத்தொலைபேசியின் வெளிச்சத்திலேயே குழந்தையை அவதானித்தவாறு பயணித்ததாகவும், எனினும் சிறிது தூரம் திணறிக்கொண்டிருந்த குழந்தை பின்னர் அசைவற்றுக் கிடந்ததாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கும்போது குழந்தை உயிரிழந்துவிட்டதாகப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதாகவும் பெற்றோர் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றப் பணிப்புக்கமைய திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் உயிரிழப்புக்கு வைத்தியசாலை நிர்வாகம் மீது பெற்றோர் குற்றம் சுமத்துவது தொடர்பில், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் க.நந்தகுமாரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது தொடர்பில் விசாரிப்பதாகத் தெரிவித்தார்.

நன்றி: Lankasri News

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துச் செய்தி

 CKCA LOGO (Copy)

நாவலப் பெருமான் மறைவுக்கு பின்னர் அவர் பணியை முழுமூச்சாய் முன்னெடுத்து வெற்றி கண்டவர் எம் அருமை ஆசான் அருணாசலம் ஐயா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழையும் சைவத்தையும், பேசியும் பூசியும் போராடி தக்க வைத்தவர்.

எமது சைவ மகா சபையால் 29.09.1971 அன்று வெளியிடப்பட்ட "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ஐயா அருணாசலம்" அவர்களின் நூலின் மீள்பதிப்பு (இரண்டாம் பதிப்பு) கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டது. இது எமக்கு பெரு மகிழ்ச்சியை தருவதுடன், எமது மண்ணுக்கு விலைமதிப்பற்ற மதிப்பையும் கொடுக்கின்றது

இந்நூல் மீள்வெளியீட்டு விழா செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் , இந்நூல் மீள்வெளியீட்டு விழா சிறப்புற வெற்றி பெற கனடா – காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது.

நன்றி,

நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்