«

»

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!

கனடா காரை கலாச்சார  மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!


28.11.2016 கடந்த திங்கட்கிழமை இரண்டு மடிக்கணணிகளும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன. காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, சபையின் கௌரவ உறுப்பினர்கள் பரம்தில்லைராசா, இரத்தினம் ஜெயராமன் ஆகியோர் சகிதம் சென்று மடிக் கணனிகளைப் பாடசாலை பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5 கணணிகள் பாவனைக்கு உட்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன. அவற்றினை அவற்றினை வழங்கிய திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க காரை மண்ணிற்கு அனுப்பி வைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் காரை சிறார்களின் பாவனைக்கு என 2013ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்ட 43 மடிக்கணணிகளில் இதுவரை 13 கணணிகள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை எடுத்துக் கொண்ட முயற்சியினால் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. மேலும் 30 மடிக்கணணிகள் தொடர்பாக விபரங்கள் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20161128_091853 20161128_110802 20161128_111849 20161128_111852 20161128_112702