கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக வருடந்தோறும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கடந்தகால நிர்வாகங்களினால் தீர்மானிக்கப்பட்ட செயற்பாடுகள்

                                                                             

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக வருடந்தோறும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கடந்தகால நிர்வாகங்களினால் தீர்மானிக்கப்பட்ட செயற்பாடுகள்

1. வன்னியில் இருந்து போரினால் காரைநகரிற்கு இடம்பெயர்ந்த சிறுவன் நக்கீரனுக்கான மாதாந்த உதவிகள் முறையே காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக செயற்படுத்தப்பட வேண்டும். அனுசரணை திரு.லக்கிராஜா.

2. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் வருடந்தோறும் உரிய நேரத்தில் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நடாத்தப்படவேண்டும்.

3. காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் 12க்கும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ள 12 வங்கி வைப்புக்கள் மூலம் கிடைக்கப்பெறும் நிதி மூலம் காரைநகர் பாடசாலைகள் செயற்படுத்தும் செயற்பாடுகள் முறையே வருடந்தோறும் வட்டிக்குரிய இரண்டு காலப்பகுதியாக மே மாதம் 5ம் திகதியும், நவம்பர் மாதம் 5ம் திகதியும் பெறப்பட்டு அங்கத்தவர்களிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

4. சிவன்கோயில் நித்திய பூசைக்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெயரில் ஹட்டன் நாஷனல் வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ள 5 இலட்சம் ரூபாய்களில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி காரைநகர் அபிவிருத்தி சபையின் நடைமுறைக் கணக்கிற்கு வருடந்தோறும் நவம்பர் 28ம் திகதி வைப்பில் இடப்படும். அதனை கனடா காரை கலாச்சார மன்றத்தினரின் அறிவித்தலின் பிரகாரம் பூசைக்காக கோயிலுக்கு வழங்கப்பட வேண்டும்.