நன்றி சொல்கிறோம்

காரை மக்களின் அமோக ஆதரவுடன்  21/07/2013 சனிக்கிழமையன்று   கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடல்  வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துவதற்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது   மனமுவந்த நன்றியைத் தெரிவித்துகொள்கின்றோம் 

இந் நிகழ்வை நடத்துவதற்கு  உணவு வகைகளை தந்துதவிய அம்மா கேற்றரிங் மகாராஜா, பீசா தந்துதவிய உமைபாகன் ஜெயரட்ணம். எமக்கு புதிய கூடாரத்தை அன்பளிப்பாக   வழங்கிய ரவி ரவீந்திரன், T.Shirt வழங்கிய குமரேசன், சுந்தரேசன் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு  பொருட்களை வழங்கிய சிவகரன், குமார், சுபன் சுப்பிரமணியம் பரிசில்களை வழங்க உதவிய ஆதிகணபதி, றஞ்சன் மற்றும் மணிவண்ணன் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன் கேதீஸ்வரன், சிவரூபன், பேரின்பராஜா, பரமானந்தராஜா, தயா, மகாராஜா, உதயகுமார், சுதாகரன், விக்கினராஜா, பிரபாகரன், நந்தன், மனோகரதாஸ் , Andy திருச்செல்வம், ஜெயக்குமார், குகராசன், பூங்கா நுழைவாயில் அன்பளிப்புகளையும் ,நன்கொடைகளையும் வழங்கிய அனைவருக்கும்  ஒலிபரப்புக்குதவிய CTBC இளையபாரதி ,CMR FM , வணக்கம் FM வானொலிகளுக்கும் , சதுரங்கப் போட்டி நடத்தியா  சிவா அவர்களுக்கும் , புகைப்படம் பிடிப்பதற்கு உதவிய மாறன் ஒளிப்பதிவு செய்தவருக்கும், எமது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

சமையலில்  பெரும் பங்குதவிய பரமேஸ்வரன், புஸ்பலிங்கம், காந்தி நாதன், மோகன், பாலன், சூட்டி, தவச்சந்திரன், பிரபாகரன், ரவி மேலும் பால் அப்பம் சுட்டு வழங்கியவர்களான, கணபாலா, திலகவதி, ஞானம், மற்றும்  குளிர்பானம்  வழங்கியவர் ஜீவா அவர்களுக்கும், விளையாட்டில் உதவியவர்கள் நடுவர்கள் வரவேற்பில் இருந்து பதிவுக்குதவியவர்களான அம்பிகைபாகன் மாஸ்ரர், கருணாவதி, பவானி , சுபாசினி, ஞானாம்பிகை சரீர உதவி செய்த பாடசாலை மாணவ மாணவிகள், மேடை அமைப்பதற்கும், பொருட்களை ஏற்ற இறக்க உதவி செய்தவர்களுக்கும் , இவர்களுடன் Talent Show ல் பங்குபற்றிய குழந்தைகளுக்கும்   எமது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

லண்டனில் இருந்து வருகை தந்த விக்கினராஜா குடும்பத்தினர் , அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த கனகலிங்கம் குடும்பத்தினர்    ஜேர்மனியில் இருந்து வருகை தந்து  எம்முடன் தோளுடன் தோள் நின்று  உதவி வழங்கிய  மார்க்கண்டு சோதிநாதன் அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்

இந் நிகழ்வின்போது   நடந்த தவறுகளை   மன்னிக்கும் படியும், நடந்த தவறுகளை   மின்னஞ்சல் karainagar@gmail.com  மூலம்  அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்.  உங்கள் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துகொள்ளப்படும், எதிர்காலத்தில் இவ்வாறன  தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு வழிவகுக்கும் என்பதினை தெரிவித்துக்கொள்கின்றோம்

 

நன்றி

காரை-கனடா கலாசார மன்ற நிர்வாக உறுப்பினர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>