«

»

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற “சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற
“சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

வரவேற்பு

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் மேற்படி விழா ஆரம்பமானது. கல்லூரி மாணவர்களின் பான்ட் இசைக்குழு மற்றும் தமிழ்ப் பாரம்பரிய இசைக்குழுவினரின் வரவேற்புடன் விழா நாயகர் தம்பதிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப் பட்டனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென அமைக்கப்பட்ட விசேடமான பந்தல் மற்றும் சிறப்பு மிக்க மேடை அலங்காரங்கள் ஆகியவற்றுடன் விழா நடைபெற்றது. விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.

விழா நிகழ்வுகள்

கடவுள் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகி விருந்தினர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் சாதனையாளன் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருந்தன.

“முருகோதயம்” மலர் வெளியீடு

அதிபரினது சேவைகளையும் கற்பித்தல் பணிகளையும் பாராட்டி உள்ளடக்கியதும் மற்றும் கல்லூரியில் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பௌதீக வள வளர்ச்சிகள் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகள் கல்லூரியின் கற்றல் அலகுகள் ஆகியவற்றின் படங்களை உள்ளடக்கியதாக இம்மலர் உள்ளது.
இம்மலருக்கான கௌரவப் பிரதி விழாவின் அனுசரணையாளரான காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு (சுவிஸ்நாதன்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழா நாயகரின் (அதிபர்) ஏற்புரை

அதிபர் தனது ஏற்புரையில் தனது காலத்தில் கல்லூரியில் ஏற்பட்ட வளர்ச்சி,மாணவர்களின் கல்வி சார் சாதனைகள் என்பவற்றை துல்லியமாக எடுத்துக்காட்டினார்.தனது காலத்தில் பௌதீக வள வளர்ச்சியில் ஈடுபாடுகளைக் காட்டிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் விசேடமாக கல்லூரிக்கு காணிகளை வாங்கி நன்கொடையாகக் கொடுத்துதவிய திரு.சு.கதிர்காமநாதன்( பிரபல வர்த்தகர் சுவிஸ்) திரு.சு.கணநாதன் (உரிமையாளர் Quency distributers Colombo) திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) திரு.க விமலச்சந்திரன் (கனடா)ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விழா நாயகர் இறுதியாக தனக்கு வாழ்த்துரைகள்,ஆசியுரைகள் வழங்கியவர்களுக்கும் இவ்விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய திரு.சு.கதிர்காமநாதன் (சுவிஸ்நாதன்) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் விழாக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் திரு.வே.சிற்சபேசன், செயலாளர் திரு.வே.சிவனேசன் ஆகியோருக்கும் தனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்தார்.மற்றும் விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>