«

»

02.12.2017 சனிக்கிழமை அன்று சங்கானை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா 2017 வின் போது விக்காவில் காரைநகரை சேர்ந்த மூத்த கலைஞர் திரு.சின்னையா சோமசேகரம்பிள்ளை அவர்களுக்கு நாடகத்துறைக்கு “யாழ் முத்து” விருது 2017 எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விக்காவில் காரைநகரை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இக் கலைஞர் நாடகத் துறையில் மட்டுமல்ல கைவினைத் துறையிலும் வல்லமை கொண்டவர். ஐந்து அடி விட்டமுடைய மிகப்பெரிய பேரிகையை உருவாக்கி சாதனை படைத்தவர்.

1967 ஆம் ஆண்டு சேக்ஸ்பியரின் ” வெனிஸ் நகர வணிகன்” ஆங்கில மொழி நாடகத்தில் நடித்ததன் மூலம் நாடகக் கலையுலகில் காலடி பதித்த இக் கலைஞர் பல்வேறு நாடகங்களையும், இசை நாடகங்களையும் நடித்து புகழ் பெற்றவர்.

இவரின் ” பூதத்தம்பி”என்னும் இசை நாடகம் 15 தடைவைகளுக்கு மேல் அரங்கம் கண்டது. நாடகக் கலையுலக ஜாம்பவான்”கலையரசு சொர்ணலிங்கம்” அவர்களால் பாராட்டுப் பெற்ற இவரின் கலைப்பணியைப் பாராட்டி காரைநகர் பிரதேச கலாசாரப் பேரவை இவருக்கு ” கலை ஞானச் சுடர்” எனும் விருதினை 2016 ஆம் ஆண்டு வழங்கி கெளரவித்தது.

மேலும் காரைநகர் கங்கை மதி சனசமூக நிலையம் இவரின் கலைச்சேவை, சமூகத் தொண்டு ஆகியவற்றைப் பாராட்டி பாராட்டு மடல் வழங்கி பெருமைப்படுத்தியது. இவரது இத்தகைய கலைச்சேவையைப் பாராட்டி யாழ். மாவட்ட கலை, கலாசாரப் பேரவை 2017 ஆம் ஆண்டு (2017. 12. 02) யாழ். மாவட்ட பண்பாட்டு விழாவில் ” யாழ் முத்து” விருது வழங்கி கெளரவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>