Tag Archive: Karai Hindu O.S.A

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு

School Front

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் 
பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு

கனடா, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய நாடுகளில் வதியும்
அன்பார்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு


"அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" என்கின்ற 250 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான எதிர்காலச் சிறார்களுக்கு பெரும் பயனை வழங்கக்கூடிய அரசின் பாரிய உதவித் திட்டம் எமது கல்லூரிக்கும் கிடைத்துள்ளது என்கின்;ற உவப்பான செய்தியை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது 48 பரப்புக் காணி உடனடியாகத் தேவைப்படும் நிலையில் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள பொருத்தமான காணிகளை இனம்கண்டு அவற்றினை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் கல்லூரிச் சமூகம் ஈடுபட்டிருக்கின்றது.  இக்காணிகளை கொள்முதல் செய்வதற்கு உதவுமாறு விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் நன்கொடைகளை தாராள சிந்தையுடனும் கல்லூரி மீதான விசுவாச உணர்வுடனும் வழங்கி வருவதானது, குறித்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டு அதன் பயனை எமது சிறார்கள் அனுபவிக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவுள்ளது. 


புழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைஇ பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை ஆகியவற்றின் உதவியுடன்; கல்லூரிக்கு அணித்தாகவுள்ள 5 1/2 பரப்புக் காணி ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை காணிக் கொள்வனவுக்கு மேலும் உதவும் பொருட்டான நிதி சேகரிப்புத் திட்டத்தினை கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் பழைய மாணவர்கள்இ நலன் விரும்பிகள் மத்தியில் சென்ற மே மாதம் முதல் ஆரம்பித்து செயற்படுத்திவருகின்றது. இத்திட்டம் குறித்த விபரங்களை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தெரியப்படுத்தி அவர்களது ஆதரவினைப் பெற்று வருகின்றோம். பின்வரும் நான்கு வழிகளில் அவர்கள் தமது ஆதரவினை வழங்கிவருவது எமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிப்பதாகவுள்ளது.


1. இயன்றளவு நன்கொடையினை வழங்குதல்


2. நிதியுதவி நிகழ்ச்சியாக செப்ரெம்பர் 17ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள விஜே ரிவி சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டொன்றினைப் பெற்றுக்கொள்ளல்


3. நன்கொடையினை வழங்குவதுடன் நுழைவுச் சீட்டொன்றினையும் பெற்றுக்கொள்ளுதல்


4. இசைக் கச்சேரிக்கான அனுசரணையினை வழங்குவதுடன் நன்கொடையினையும் வழங்குதல்;


நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 250.00 டொலர்களுக்கு மேலான நன்கொடையினை வழங்குபவர்களுக்கு இசைக் கச்சேரிக்கான இலவச நுழைவுச் சீட்டினை வழங்கி வருகின்றோம்.


நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதுஇ நிதியுதவி நிகழ்ச்சி ஆகிய இரண்டு முயற்சிகள் ஊடாகவும் முப்பதினாயிரம் (30,000.00) டொலர்களைத் திரட்டி தேவைப்படும் காணியின்; ஒரு பகுதிக் கொள்வனவுக்கு உதவுவது என்ற இலக்குடன் எமது சங்கம் செயலாற்றி வருகின்றது. 


எமக்கு அறிவையும்; ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி வளர்த்த  காரை இந்து அன்னையின் அரவணைப்பில் இருந்த காலமே எமது வளமான வாழ்வினை நிர்ணயம் செய்வதற்கு வழிகோலியது என்பதை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க கல்லூரிக்கான உதவிப் பணியில் பங்கேற்று வருகின்ற பழைய மாணவர்களஇ; நலன் விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் தொடர்புத் தகவல்கள் கிடைக்காத நிலையில் இதுவரை எம்மால் தொடர்பு கொள்ளப்படாதவர்கள் இவ்வறிவித்தலைப் பார்வையிட்டதும் தமது உதவிகளை விரைந்து வழங்கி உதவுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கின்றோம். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதியுடன் இந்நிதி சேகரிப்புச் செயற்பாடு நிறுத்தப்படவிருப்பதால் அதற்கு முன்னதாக தங்களது நன்கொடைகளை வழங்கி உதவுவீ;ரகள் என எதிர்பார்க்கின்றோம்.


திட்டம் குறித்த விபரங்களை அறியவும் தமது உதவிகளை வழங்கவும் விரும்புவோர்களுக்கான தொடர்புத் தகவல்கள்:


தொலைபேசி இலக்கங்கள்: (647)532-6217  (416)804-0587  (647)639-2930


மின்னஞ்சல் முகவரி: karaihinducanad@gmail.com


தாங்கள் வழங்கத் தீர்மானிக்கும் நன்கொடையினை மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் அல்லது; மேற்குறித்த மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொண்டு அறியத்தந்தால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள்;; தங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும்.


கடன் அட்டையை (Credit Card)) பயன்படுத்தி PayPal வழியாக நன்கொடையினை வழங்க விரும்புவோர் www.Karaihinducanada.com இணையத்தளத்திற்கு சென்று PayPal இணைப்பினை அழுத்தி வழங்கலாம். 


நன்றி.
பழைய மாணவர் சங்கம் – கனடா

‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay

'மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2014ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம் (Charitable Trust Fund)  என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டுக்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர மருத்தவகலாநிதி; வி.விஜயரத்தினம் அவர்கள் வைப்பிலிட முன்வந்து அத்தொகையினை வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன்மூலம் நிதியத்தின் வைப்புத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை கல்லூரியின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உதவிவருகின்ற மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களை  கல்லூரிச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றிகூறுகின்றது.

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

IMG_0174

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் மக்கள் நலன்பேண அர்ப்பணிப்போடு அல்லும் பகலும் ஓயாது செலாற்றிய காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை(11.06.2016) மாலை செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்த இவ்விழாவில் அமரர் தியாகராசா அவர்களின் நிர்வாகத்திறமையும் அர்ப்பணிப்பும்மிக்க சேவையினால் உன்னதமான நிலையைப் பெற்று விளங்கிய கல்லூரியினால் உருவாக்கப்பட்டிருந்த கல்வியாளர்களஇ; பல்துறை சார்ந்த அறிஞர்களஇ; சாதனையாளர்கள்இ காரை மண்ணின் அபிமானிகள் எனக் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் கலந்து கொண்டு காரை மண்ணிற்கு ஒளியேற்றியதுடன் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த ஈடு இணையற்ற சேவையாளரை நினைவு கூர்ந்து மதிப்பளித்தனர்.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவரும் ஓய்வு நிலை ஆசிரியருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை கல்லூரி உதை பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் நில அளவைத் திணைக்கள ஓய்வு நிலை அலுவலருமாகிய திரு.பொன்னையா தியாகராசாவும் பாரியாரும்  S.P.S. நினைவு உதவித் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.சுப்பிரமணியம் அரிகரனும் பாரியாரும் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து பிற்பகல்3.00 மணிக்கு விழா ஆரம்பமாகியது. 

சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் திருமுறை ஓதி கடவுள் வணக்கம் செய்யப்பட்டதுடன் அக வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து  கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்'; என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண் ஒலி பரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று தாம் கற்று வளம்பெற்ற கல்லூரிக்கு மதிப்பளித்தனர்.

அமரரின் திருவுருவப் படத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் கணக்காய்வாளரும் துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை அதிகாரியுமாகிய திரு.கந்தப்பு அம்பலவாணர் மலர் மாலை அணிவித்தார்.  

பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் விருந்தினர்களையும் சபையோரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து தலைவரது உரை இடம்பெற்றது. 

இதனையடுத்து அமரரின் வாழ்க்கை வரலாறுஇ கல்லூரியின் அதிபராக 25ஆண்டுகள் ஆற்றிய பணிகள்இ பொதுப்பணிஇ ஊருக்கான பணி என்பனவற்றை உள்ளடக்கி அவ்வப்போது வெளிவந்திருந்த ஆக்கங்களைத் தாங்கிய ஆவணப்படுத்தும் வகையிலான விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரின் வெளியீட்டுரையினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் மலரின் தொகுப்பாளருள் ஒருவருமாகிய திரு.கனக சிவகுமாரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளரும் மலரின் மற்றைய தொகுப்பாளருமாகிய திரு.மாணிக்கம் கனகசபாபதி முதற் பிரதியை  Double Seal Insulating அதிபரும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவி வருபவருமாகிய தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் கௌரவ பிரதியை அமரரின் உறவினரும் பழைய மாணவருமாகிய திரு.கந்தசாமி தேவகுமார் அவர்களுக்கும் வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.. அமரர் பல துறை சார்ந்து பரந்து பட்ட சேவையினை சமூகத்திற்காக வழங்கியிருந்தார் எனவும் இவை குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டு ஆவணப்படுத்தும்வகையிலான ஓரு முழுமையான நூல் எதிர்காலத்தில் வெளிவருவதற்கான முதற்படியாக இம்மலரின் வெளியீடு; அமையும் என்ற நம்பிக்கையை திரு கனக சிவகுமாரன் தனது வெளியீட்டுரையின்போது வெளிப்படுத்தியிருந்தார்.

தமது மருத்துவ சேவையினாலும் சமூக உணர்வினாலும் காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது கனடா வாழ் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்று கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற கனடாவின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அதே போன்று கல்லூரியின் மற்றுமொரு மகிமை மிக்க பழைய  மாணவரும் சிறந்த கல்வியாளருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தார். கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற பழைய மாணவரும் கனடாவின் பிரபல பல் மருத்துவ நிபணரும் சமய உணர்வாளருமாகிய பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை மேலும் மேன்மையுறச் செய்தார்.

பிரதம விருந்தினர் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டு சிறந்த கல்வியாளராக விளங்கி காரைநகருக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் காரைநகர் இந்துக் கல்லூரியில் 25ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தும் பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்தும் ஆற்றிய அளப்பரிய பணிகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விளங்குகின்றார் எனக் குறிப்பிட்டார.; அதிபராக இருந்த காலத்தில் கல்வித்தர விருத்தியில் எவ்வளவு கவனம் செலுத்திச் செயற்பட்டாரோ அதேயளவு கவனத்தினை மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் வழங்கி செயலாற்றியிருந்ததுடன் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தெரிவு செய்து பரிசில்கள் வழங்கி வந்துள்ளார். கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்ற இவர் ;தாம் ;கல்வி பயின்ற காலத்தில் பாடசாலையில்  கச்சேரி செய்து மற்றையவர்களை மகிழ்வித்தவர் எனவும் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

விழா சிறப்புற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார் விழா அரங்கில் வாசித்தார்.

கௌரவ விருந்தினர் பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா அதிபராக சேவையாற்றிய காலத்தில் பாடசாலையின் உயர்வுக்காக இவர் ஆற்றிய சாதனைப் பணிகள் இவரது சேவைக் காலத்தை பொற்காலமாக அடையாளப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் கல்வியைத் தொடர்ந்து கற்று பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் கல்வியானது ஒருவரது வாழ்நாள் முழுவதற்குமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுடன் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் பாராது அனைவரையும் சமமாக மதித்து செயலாற்றியவர் எனவும் குறிப்பிட்ட சிவகுமாரன,; தமது உரையின் இறுதியில் அமரரின் பெருமைகளை கவிதை வடிவில் சபையில் சமர்ப்பித்தமை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

காரை அபிவிருத்தி சபை வழங்கிய வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக  உறுப்பினர் திருமதி.பிரபா ரவிச்சந்திரன் விழா மேடையில் வாசித்தார். 

சிறப்பு விருந்தினர் பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் தமது உரையில் அமரர் தியாகராசா காரை மண்ணுக்கு ஒளியேற்றி வைத்து தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிய கர்மவீரர் என்பதுடன் காரை மண்ணில் தோன்றிய சேவையாளர்களுள் முதன்மையானவராக விளங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டதுடன்  அமரரால் தரமான கல்வியை வழங்கும் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட இந்துக் கல்லூரியிலிருந்து தாம் பல்மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டதுடன் அக்காலகட்டத்தில் அதிக அளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தார். அமரர் தியாகராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை அட்டவணைப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆற்றிய மருத்துவகலாநிதி ஆதிகணபதியின் விரிவான உரையானது தாம் நேசித்த மக்களுக்காக இத்துணைப் பணிகளை வெற்றிகரமாக சாதித்தாரே என சபையோரை ஒரு கணம் வியக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது எனலாம்.

பழைய மாணவர் சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை பிரபல ஆசிரியருமாகிய சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவரும் கணக்காளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.தம்பிஐயா பரமானந்தராசாஇ  பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுநிலை உதவி நிலஅளவையாளர் நாயகமுமான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளைஇ கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் துறைமுக அதிகார சபையின் பிரதம காசாளருமாகிய திரு.முருகேசு சின்னத்துரைஇ வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் ஆகியோர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா மக்களுக்காக விட்டுச்சென்ற வரலாற்றுப் பணிகளை பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கி உரையாற்றியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பலரும் அமரர் தியாகராசாவின் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினைப் பாராட்டி நன்றி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வுரைகளின் இடையே கல்லூரியில் நடைபெற்ற அமரரின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வரும் அறிவிப்பாளருக்கான தேசிய நிலை போட்டியாளருமாகிய செல்வன் விநோதன் கனகலிங்கம் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.

சிறந்த பேச்சாளராக மிளிர்ந்து வருகின்ற செல்வன் விநோதன் அமரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னாரது வரலாற்றுப் பணிகளை தனது பேச்சாற்றல் ஊடாக வெளிப்படுத்தியிருந்த பாணி சபையோரை வெகுவாக கவர்ந்திருந்தது. 


பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் இலங்கை வங்கி அதிகாரியுமான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் சிறப்புற்று விளங்கிய அமரர் கலாநிதி தியாகராசாவின் நூற்றாண்டு விழா நிறைவுற்றது.

படங்கள்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி

செய்தி பிரதியாக்கம்: திரு.கனக.சிவகுமாரன்

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

' †

‘ †

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று அதிபர்,வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை(11.05.2016) அன்று கனடா செல்வச் சந்நிதி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி.வி.விஜயரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். 

கல்வியாளர்களும் காரைநகர் மக்களும் கலந்து கொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழா பற்றிய முழுமையான விபரம் பின்னர் எடுத்து வரப்படும். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம். 

காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001

 

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது.

அமரர் அவர்களின் 100வது விழா அவர் 25ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் 17-04-2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்வில் பல கோணங்களில் அவரது பணிகள் பலராலும் நினைவுகூரப்பட்டது. காரைநகரின் அடையாளத்தை பலதுறையில் ஐந்து தசாப்த காலம் நிலைநிறுத்தியவர் அமரர் தியாகராசா அவர்கள்.

காரைநகர் அபிவிருத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்து அவரின் சிந்தனையின் அடிப்படையில் எமது ஊரை வளப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு ஆகும். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த அமரர் தியாகராசா அவர்கள் எப்பொழுதும் எம்மக்களின் நினைவில் போற்றி வணங்கக்கூடியவர் என்றால் மிகைஒன்றும் 'இல்லை.

அவரைச் சிறப்பித்து விழா எடுக்கும் கனடா காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ப.விக்கினேஸ்வரன்              இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
தலைவர்                                         செயலாளர்                                   பொருளாளர

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/Doc1-scan.pdf

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

UK LOGO
அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிற்கு,
 
 அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா
 
 காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த ஓயாது உழைத்தவரும்,  காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமான அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்துவதையிட்டு நாம் எல்லோரும் பெருமிதம் அடைகிறோம்.
 
 அன்னாரின் பணியினை அனைத்து காரை மக்களும் தொடர்ந்து பேணுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இவரின் பணிகள் காரைநகரை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டு சென்றதென்றால் அது மிகையாகாது. அன்னாரின் அளப்பெரிய பணிகளை இந்த நூற்றாண்டு விழா மூலம் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கு வழிசமைத்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நிர்வாகத்தினரின் இந்த முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியதே!
 
 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொண்டு இந்த விழா சிறப்புற அமைய பிரித்தானிய வாழ் காரை மக்கள் மற்றும் காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
 
 நன்றி.
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்  

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா, எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

              அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காநைகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த இறுதி மூச்சு வரை ஓயாது உழைத்த வெள்ளி விழா அதிபர், காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்விழா எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere  சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

விழாவின் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றது.

                     நன்றி.
காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

Anniversary Agenda of Late Dr.A.Thiyagarajah (1)

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

SaiVigneshVijaytv1

விஜே ரிவியின் சுப்பர் சிங்கர்-4 போட்டியில் பங்கு பற்றி முன்னணி போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டதுடன் கர்நாடக இசை ரசிகர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றவரான சாயி விக்னேஸ்; காரைநகர் இந்துக் கல்லூரி மேம்பாட்டு நிதிக்காக கர்நாடக இசைக் கச்சேரியினை நிகழ்த்தும் பொருட்டு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். 

காரைநகர் இந்துக் கல்லூரி மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் ஸ்காபுரோவில் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி கனடாவில் நடைபெறும் இவரது முதல் கர்நாடக இசை நிகழ்வு என்பதால் கர்நாடக இசை ரசிகர்களிற்கு அரிய வாய்ப்பாகவும் பெரு விருந்தாகவும் அமையவுள்ளது. 

சுப்பர் சிங்கர்-4 போட்டியில் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி இலட்சக்கணக்கான விஜே தொலைக்காட்சி ரசிகர்களை அசத்தியிருந்ததுடன் இவரது கர்நாடக இசை ஆற்றல் சுப்பர் சிங்கர் நடுவர்களினால் வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா

Dr.A.Thiagarajah-flyer

காரைத் தென்றல்-2016 பொலிவு பெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது

HLogoW

 

தலைவர், செயலாளர், பொருளாளர்,  நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை
அனைவருக்கும் வணக்கம்.

காரைத் தென்றல்-2016 பொலிவு பெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது

15-05-2016 ல் தங்களது அமைப்பின் ஆதரவில் நடைபெறவுள்ள காரைத் தென்றல் நிகழ்வில் தங்களது நட்பான அழைப்பினை ஏற்று எமது சங்கம் தவிர்க்கமுடியாத காரணங்களினால் கலந்துகொள்ளமுடியாமைக்கு வருந்துகின்றோம். அடுத்து வரும் ஆண்டுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றே நம்புகின்றோம். எமது இரு சங்கங்களுககுமிடையே பேணப்பட்டு வருகின்ற நல்லுறவும் நல்லெண்ண வெளிப்பாடுகளும் மண்ணையும் மண்ணின் முதன்மைப் பாடசாலையையும் வளம்பெற வைக்க வழிவகுக்கும் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை காரை மண்ணின் சிந்தனையுடன் பாரட்டும்படியாக ஆற்றி வருகின்ற மகத்தான பணிகள் வரிசையில் “காரைத் தென்றல-2016;” கலை விழா 12வது ஆண்டாக நடைபெறுகின்றது என்பதனை அறிந்து எமது சங்கம் பேருவகை அடைகின்றது. 
காரைநகர் மக்களின் கலைத்துறை ஈடுபாடும் அதில் அவர்கள் ஏற்படுத்தி வருகின்ற சாதனைப் பதிவுகளும் காரை மக்களை பெருமைகொள்ளவைப்பதாகும். சுவிஸ் நாட்டிலள்ள எமது மண்ணின் எதிர்காலச் சந்ததி தமிழ்ப் பாரம்பரியக் கலையின் பெருமைகளை உணர்ந்து அதில் ஈடுபாடு கொள்ள ஊக்குவிக்கின்ற ஓரு விழாவாக மட்டுமல்லாது ஊரின் பெயரால் ஒன்று கூடி உறவுகொள்ள வைக்கவேண்டும் என்கின்ற கருத்தியல் மனத்தோடு உழைத்து வருகின்ற சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாகக் குழுவைப் பாராட்டுகின்றோம்.

புலம் பெயர் தேசங்களிலுள்ள மண்ணின் சேவையாளர்களுடன் இடப்பெயர்வினால் சிதைவுற்றிருந்த காரைநகர் இந்துக் கல்லூரியை மீள ஆரம்பித்து அதனை கட்டியெழுப்பத் துணிச்சலோடு உழைத்த முன்னாள் அதிபர் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் இவ்விழாவிற்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருப்பது விழாவினை உன்னதமைடைய வைத்துள்ளது.

தென்றல் காற்று வருடுகின்றபோது ஏற்படுகின்ற இனிமையான சுக அனுபவத்தைப் போன்ற அனுபவத்தினை காரைத்தென்றல் வழங்கும் வகையில் இவ்விழா பொலிவுபெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.

           த.அம்பிகைபாகன்                       கனக சிவகுமாரன்               மா.கனகசபாபதி
                  தலைவர்                                    செயலாளர்                           பொருளாளர்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் (30-04-2016) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற சங்க யாப்பு விதிக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பொதுக் கூட்டம் முன்னாள் இலங்கை பிரதி நிலஅளவையாளர் நாயகமும் சங்கத்தின் தலைவருமாகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இருபத்தைந்து வரையான சங்கத்தின் உறுப்பினர்கள் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். திரு. தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து எமது பாடசாலை சமூகத்தைச் சேர்ந்து அமரத்துவம் அடைந்தோரை நினைவு கூர்ந்தும் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்து அமரர் சங்கீதபூசணம் காரை ஆ. புண்ணியமூர்த்தி அவர்களினால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்' எனத் தொடங்கும் கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று பாடசாலை அன்னைக்கு வணக்கம் செலுத்தினர்.

தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது தலைமை உரையில், சென்ற ஆண்டு சங்கம் பாடசாலையின் முக்கியமான தேவைகளை நிறைவு செய்ய உதவியதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான உதவிகளையும் வழங்கி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறித்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்ததுடன் இவற்றிற்கு மூலகாரணமாகவிருந்து ஆதரவளித்த சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் அனுசரணையாளர்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தாம் அண்மையில் பாடசாலைக்குச் சென்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை குறித்த பல்வேறு விடயங்களையும் சபையில் பகிர்ந்துகொண்டார்.

தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரவு-செலவு அறிக்கையை உதவிப் பொருளாளர் திரு. நடராசா பிரகலாதீஸ்வரன் சமர்ப்பித்திருந்தார். இந்த வரவு செலவு அறிக்கையின் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்த யோசனை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அவ்வடிவம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

புதிய நிர்வாக சபைத் தெரிவினை தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டடிருந்த சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நடத்தி வைத்தார். நிர்வாக சபையில் உள்ள பதினொரு வெற்றிடங்களுக்கும் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, பதவிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு உறுப்பினர் வீதம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் அவற்றின் விபரங்களையும் தேர்தல் அலுவலர் சபைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

இவ்விண்ணப்பங்கள் தொடர்பில் சபையிலிருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்காதமையினால் குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த அனைவரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து போசகராக மீண்டும் சிவநெறிச்செல்வர் திரு.தி விசுவலிங்கம் அவர்களும் கணக்காய்வாளராக திரு.த.பரமானந்தராசா அவர்களும் ஒட்டாவா இணைப்பாளராக திருமதி.சந்திராதேவி முத்துராசா அவர்களும் மொன்றியல் இணைப்பாளாராக திருமதி.செல்வதி ஸ்ரீகணேசர் அவர்களும் ஜக்கிய அமெரிக்கா இணைப்பாளராக திரு.கந்தையா தர்மராசா அவர்களும் சபையினால் நியமிக்கப்பட்டனர். 

நிர்வாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

தலைவர்: திரு.தம்பையா அம்பிகைபாகன்

உப-தலைவர்: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம்

செயலாளர்: திரு.கனகசுந்தரம் சிவகுமாரன்

உப-செயலாளர்: திருமதி. செல்வா இந்திராணி சித்திரவடிவேல்

பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி

உப-பொருளாளர்: திரு. திரு. நடராசா பிரகலாதீஸ்வரன்

 

நிர்வாக சபை உறுப்பினர்கள்: 

திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார்

திருமதி.பிரபா ரவிச்சந்திரன்

திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்

திரு. திருவேங்கடம் சந்திரசோதி

திரு. செல்வரத்தினம் சிவானந்தன்

 

போசகர்: சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம்

ஒட்டாவா பிரதிநிதி: திருமதி.சந்திராதேவி முத்துராசா

மொன்றியல் பிரதிநிதி: திருமதி.செல்வதி சிறிகணேசர்

ஜக்கிய அமெரிக்க இராச்சியம்: திரு.கந்தையா தர்மராசா

கணக்காய்வாளர்: திரு.தம்பிஐயா பரமானந்தராசா

 

புதிய தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையில் தாம் கல்வி கற்ற காலத்தின் நினைவகளை பகிர்ந்துகொண்டதுடன் தன்னை நல்லாசிரியர் என்ற பெருமைக்குரியவராக உருவாக்கிய பாடசாலையின் வளர்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகத் தாம் தலைவராக பதவியேற்றமை குறித்து மகிழ்வதாகத் தெரிவித்தார். மேலும் அவர் தமது உரையில், கல்லூரியை உன்னதமான நிலைக்கு கொண்டு வருவதில் அயராது உழைத்த வெள்ளி விழா அதிபர் உத்தமர் அமரர் தியாகராசாவின் அரும் பணிகளைக் குறிப்பிட்டு அன்னாரை நினைவு கூர்ந்தார்.

அடுத்ததாக, பழைய நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் புதிய நிர்வாகத்தை வாழ்த்தியும் கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன, பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் ஆகியோரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த செய்திகள் செயலாளரினால் வாசிக்கப்பட்டன.

அடுத்து யாப்புத் திருத்தப் பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சங்க யாப்புக்கு நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் சில நிபந்தனைகளுடன் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆயுட்கால சந்தா மற்றும் சங்கத்திற்கான இணை உறுப்பினர்கள் (Associate Members) தொடர்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் சங்க நலனிற்கு பாதகமில்லாத வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானித்த பின்னர் செயற்படுத்துவதற்கான அதிகாரத்தினை பொதுச்சபை நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தது.

சங்க நிர்வாக சபையின் பதவிக்காலம் ஒர் ஆண்டுக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளாக இருக்கவேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்ட அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபை ஏதோ ஒரு வகையில் கூட்டப்படுதல் வேண்டும் எனவும் வரவு-செலவு அறிக்கை செயற்பாட்டு அறிக்கை என்பன பொதச் சபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் பொதச் சபை தீர்மானித்தது.

செயலாளர் திரு.கனக சிவகுமாரன் இறுதியில் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைத்தும் உதவிகள் வழங்கியும் ஊக்கிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். முன்னைய தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஏனையோர் பாராட்டும் வண்ணம் துரிதமான வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள உழைத்திருந்தார் என பாராட்டியதுடன் அவரது சேவை தொடர்ந்தும் சங்கத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டு உரையாற்றிய கனக சிவகுமாரன் புதிய தலைவர் திரு.அம்பிகைபாகன் அவர்களையும் வரவேற்றுக்கொண்டு நல்லாசிரியர் என்ற பெயர்பெற்றவரும் சமூக அக்கறை கொண்டு விளங்குபவருமாகிய  அவரது தலைமையில் சங்கம் பல முன்னேற்றகரமான திட்டங்களை செயற்படுத்தும் எனவும் மேலும் தனது நம்பிக்கையினை வெளியிட்டார்.

நிறைவாக போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் கூட்டம் இனிதே முடிவுக்கு வந்தது. 

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினை ஆரம்பிப்பது முதல் இன்று வரை சங்கத்தினைச் சீரிய முறையில் வழிநடத்துவதில் முதுகெலும்பாக அயராது உழைத்துவரும் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.

கூட்ட நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

IMG_0006 (Copy) IMG_0007 (Copy) IMG_0008 (Copy) IMG_0009 (Copy) IMG_0010 (Copy) IMG_0011 (Copy) IMG_0012 (Copy) IMG_0013 (Copy) IMG_0014 (Copy) IMG_0015 (Copy) IMG_0016 (Copy) IMG_0017 (Copy) IMG_0018 (Copy) IMG_0019 (Copy) IMG_0020 (Copy) IMG_0021 (Copy) IMG_0022 (Copy) IMG_0023 (Copy) IMG_0024 (Copy) IMG_0025 (Copy) IMG_0026 (Copy) IMG_0027 (Copy) IMG_0028 (Copy) IMG_0029 (Copy) IMG_0030 (Copy) IMG_0031 (Copy) IMG_0032 (Copy) IMG_0033 (Copy) IMG_0034 (Copy) IMG_0035 (Copy) IMG_0036 (Copy) IMG_0037 (Copy) IMG_0038 (Copy) IMG_0039 (Copy) IMG_0040 (Copy) IMG_0041 (Copy) IMG_0042 (Copy) IMG_0043 (Copy) IMG_0044 (Copy) IMG_0045 (Copy) IMG_0046 (Copy) IMG_0047 (Copy) IMG_0048 (Copy) IMG_0049 (Copy) IMG_0050 (Copy) IMG_0051 (Copy) IMG_0052 (Copy) IMG_0053 (Copy) IMG_0054 (Copy) IMG_0055 (Copy) IMG_0056 (Copy) IMG_0057 (Copy) IMG_0058 (Copy) IMG_0059 (Copy) IMG_0060 (Copy) IMG_0061 (Copy) IMG_0062 (Copy) IMG_0063 (Copy) IMG_0064 (Copy) IMG_0065 (Copy) IMG_0066 (Copy) IMG_0067 (Copy) IMG_0068 (Copy) IMG_0069 (Copy) IMG_0070 (Copy) IMG_0071 (Copy) IMG_0073 (Copy) IMG_0074 (Copy) IMG_0075 (Copy) IMG_0076 (Copy) l20160430_160225 l20160430_160226 l20160430_160227 l20160430_160250 l20160430_160302 l20160430_160324 l20160430_160402 l20160430_160416 l20160430_160433 l20160430_160600 l20160430_160614 l20160430_160627 l20160430_161533 l20160430_161539

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா 4வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

AGM Notice

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபை தேர்தல் -2016

                     கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

                                                காரைநகர் இந்துக் கல்லூரி

                                            பழைய மாணவர் சங்கம் – கனடா

                                          நிர்வாக சபை தேர்தல் -2016

  போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது முதல் தேர்தலை நடாத்தி தெரிவுகளை  பிரகடனப்படுத்துவது வரைக்குமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

30-04-2016ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் 7வது நிகழ்வாக நிர்வாக சபை தேர்தல் இடம்பெறும்

தலைவர், உப-தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர், மற்றும் ஜந்து நிர்வாக உறுப்பினர்கள் ஆகிய பதவிகளிற்கு போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் இதன் கீழுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பூர்த்திசெய்து 22-04-2016ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும்வண்ணம் தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கலாம். நேரிலும் கையளிக்கமுடியும்.

ஒருவர் ஏதாவது இரு பதவிகளிற்கு விண்ணப்பிக்க முடியும் ஆயினும் இவ்விண்ணப்பங்கள் தனித்தனியாக அனுப்பப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இரு அங்கத்தவர்களினால் முறையே பிரேரித்து வழிமொழியப்பட்டிருக்கவேண்டும்.விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து தேர்தல் அலுவலரால் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரிகளிற்கு உறுதிப்படுத்தப்படும்.

விண்ணப்பதாரியும் பிரேரிப்பவரும் வழிமொழிபவரும் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக சங்க அங்கத்துவத்தை பெற்றவர்களாக இருக்கவேண்டும். 

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலரும், நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் http://karaihinducanada.com இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஒரு பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு இடம்பெறும். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான வெற்றிடம் சமூகமளித்திருக்கும் அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து நிரப்பப்படும். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பதாரர் விரும்பின் தமது விண்ணப்பத்தினை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்.

தபால் முகவரி: Mr.T.Visuvalingam, 1008-50 Elm Drive, Mississauga, ON.L5A 3X2.

மின்னஞ்சல் முகவரி: tvisuvalingam@yahoo.com       தொலைபேசி இல.: 905-5664822

நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா 647-7662522

 விண்ணப்பபடிவத்தை பார்வையிட   தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/04/Application-Form-2016.pdf

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா 4வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

                                         'உனக்கு நீயே உண்மையாய் இரு'

                   கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

                                            காரைநகர் இந்துக் கல்லூரி

                                        பழைய மாணவர் சங்கம் – கனடா

4வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

இடம்: கனடா ஸ்ரீ செல்வச் சந்நதி முருகன் ஆலய திருமண மண்டபம்

            01,Golden Gate, Unit # 01 Scarborough(Brimley & Ellesmere)


காலமும் நேரமும்;: 2016 ஏப்பிரல் 30ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி

தலைமை: திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்

                                                         நிகழ்ச்சி நிரல்

1.கடவுள் வணக்கம்இ அக வணக்கம் 

2.பாடசாலைப் பண் இசைத்தல்

3.தலைவர் முன்னுரை

4.சென்ற ஆண்டுப் பொதுக் கூட்டஅறிக்கை வாசித்தல் – செயலாளர்

5.செயற்பாட்டு அறிக்கை வாசித்தல் – செயலாளர்

6.வரவு–செலவு அறிக்கை வாசித்தல் (ஜனவரி 2015–டிசம்பர் 2015) – பொருளாளர்

7.புதிய நிர்வாக சபை தெரிவு: தலைவர், உப-தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர் மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவுசெய்யப்படுவர்.
நிர்வாக சபை தெரிவுமுறை தொடர்பான விபரத்தினை பின்னே பார்வையிடமுடியும்.

8;.போசகர், கணக்காய்வாளர் ஆகியோரின் தெரிவும் மொன்றியல், ஒட்டாவா, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய பிரதேசங்களிற்கான இணைப்பாளர்கள் நியமனமும்

9.புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்

10.அங்கத்தவர் பிரேரணைகள்:  அ)யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்

                                                               ஆ)வேறு பிரேரணைகள்

22-04-2016ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்.

11.வேறுவிடயங்கள்

12.அங்கத்தவர் கருத்துரைகள்

13.நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.

மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com    தொலைபேசி: 647-7662522

அங்கத்தவர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு தயவாக வேண்டுகின்றோம்.

மு.வேலாயுதபிள்ளை      கனக.சிவகுமாரன்        மா.கனகசபாபதி
தலைவர்.                                  செயலாளர்.                  பொருளாளர்

 

தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிகளில் அண்மையில் பங்கு பற்றி சாதனையாளர்களாகத் தடம்பதித்துள்ளனர். 

தனிஇசை, கிராமிய நடனம், இளம்பாடகர், அறிவிப்பாளர், தடகளப்போட்டியில் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளிலேயே மேற்படி பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தல் பங்குபற்றியிருந்தனர். 

செல்வன். S.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியிலும், செல்வன் K.விநோதன் அறிவிப்பாளர்களுக்கான போட்டியிலும்,  செல்வி. A.அமிர்தா தனிப்பாட்டு போட்டியிலும் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.


இப்போட்டிகளில், கிராமிய நடனத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

மேற்படி தேசிய மட்டப்போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கான நிதி அநுசரணையை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டிகளில் பங்குகொண்ட, வெற்றி பெற்ற சாதனை மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் மற்றும் அதிபர், பதில்-அதிபர், பகுதித் தலைவர் ஆகியோரையும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. 

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்று காரைநகர் இந்துக் கல்லூரி சாதனை

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்று காரைநகர் இந்துக் கல்லூரி சாதனை

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் –2014 ஆண்டுக்கான தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமை விருதினை பெற்ற வடமாகாணத்தின் ஒரே ஒரு பாடசாலையாக காரை இந்துக் கல்லூரி விளங்குகின்றது.

இச்சான்றிதழைப் பெற்றதன் மூலம் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற ஒரே பாடசாலை என்ற பெருமையைப் பெற்று விளங்குவதுடன் பல நகர்ப்புறப் பாடசாலைகளையும் பின்தள்ளி இவ்வெற்றியைப் பெற்றமை குறித்து கல்லூரி அதிபர் தமது மகிழ்ச்சியினை தெரிவித்தார். 

கல்விச் செயற்பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், கற்றலை மேற்கொள்வதற்கான சூழல், பாதுகாப்பான சூழல், சமூகத்திற்கும் பாடசாலைக்குமிடையேயான உறவு,பாடசாலைச் சுவர்களில் அறிவு சார்ந்த வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தமை, பாடசாலைத் தோட்டம் உள்ளிட்ட பசுமைப் புரட்சி, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றிபெற்ற பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.  

இவ்வெற்றியைப் பெறுவதற்கு மூலகாரணமாக விளங்கி சிறப்பான முறையில் பாடசாலையை நிர்வகித்து வருகின்ற அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களையும் அவருடன் இணைந்து பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.  

அண்மையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதிபருடன் இணைந்து ஆசிரியை திருமதி தயாளினி ஜெயகுமார் அவர்களும் சிறப்புத் தகமைச் சான்றிதழை பெற்றக்கொண்டார். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

20160218_093905 photo 20160218_112236 20160218_111858 20160218_111745 20160218_111716 20160218_102024 20160218_102004

காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றியாளர்கள் தின விழாவிற்கு(Winners Day) பழைய மாணவர் சங்க கனடா கிளை வாழ்த்து

காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றியாளர்கள் தின விழாவிற்கு(Winners Day) பழைய மாணவர் சங்க கனடா கிளை வாழ்த்து

கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,மற்றும் பாடசாலைச் சமூகம் என்பன தனித்தும் ஒருங்கிணைந்தும் முன்னெடுத்து வருகின்ற பல செயற்பாடுகள் பல்வேறு சாதனைப் பதிவுகளை  நிலைநாட்டி வருவதன் ஊடாக பாடசாலையின் புகழை மேலோங்க வைத்து வருவது பேருவகைகொள்ளவைக்கின்றது. 

அண்மைக் காலத்தில் பாடசாலையினால் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளில் நாடளாவிய ரீதியில் நடாத்தபட்டிருந்த தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமை விருதினைப் பெற்றுக் கொண்ட வடமாகாணத்தின் ஒரே பாடசாலை என்ற பெருமையை எமது பாடசாலை பெற்றுக்கொண்டமை வரலாற்றுப் பதிவானதாகும். 

இச்சாதனையை மையப்படுத்தியும் தேசிய தரவலயப் போட்டியில் வெற்றி பெற்றமை, பல்வேறு போட்டிகளிலும் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் பங்குகொண்டதுடன் கிராமிய நடனத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை, பல மாணவர்கள் க.பொ.த(உயர்தரம்) பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லும் தகமையினைப் பெற்றமை ஆகிய சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய சாதனையாளர்களையும் பாடசாலையையும் பாராட்டி மதிப்பளிக்கும் வகையிலும் மேலும் பல சாதனைப் பதிவுகளை ஏற்படுத்த ஊக்கிவிக்கும் வகையிலும் பாடசாலைச் சமூகத்தினால் எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வெற்றியாளர்கள் தின விழா அனைத்துவகையிலும் நிறைவுபெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துவதுடன் இதனை ஒழுங்கமைத்த பாடசாலைச் சமூகத்தை பாராட்டி நன்றி கூறுகின்றது.

 

இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.S.பத்மநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.S.பத்மநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்


              அமரர் செல்லத்துரை பத்மநாதன் B.Sc. Dip.In.Ed.


காரைநகர் இந்துக் கல்லூரியில் மாணவர்களின் மனம் கவர்ந்த சிறந்த உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் நிர்வாகத்திறன் மிக்க அதிபராகவும் ஆறு ஆண்டுகள் பதவி வகித்து கல்லூரியின் கல்வித்தர மேம்பாட்டிற்கும் பௌதிக வள மேம்பாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்த திரு.செல்லத்துரை பத்மநாதன் தமது 84வது வயதில் இறைபதம் அடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஆழ்ந்த துயரடைந்துள்ளது. 


அமரர் பத்மநாதனின் முயற்சியினால் பாரதி நூற்றாண்டு விழா கல்லூரியில் வெகு சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டதுடன் இவ்விழாவிற்கு தமிழக அறிஞர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவரது காலத்திலேயே முறைசாராப் பிரிவின் கீழ் தையலஇ; கைப்பணி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தின் தூபி முகப்பு நிர்மாணிக்கப்பட்டமை அமரர் பத்மநாதன் அவர்களின் முயற்சியின் விளைவே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அன்னாரின் பிரிவால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவித்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.


                                                                            பழைய மாணவர் சங்கம் – கனடா


பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம். 

PATMANATHAN TRIBUTE -5 copy

 

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பொருளாளர் திரு.மா.கனகசபாபதி ஆகியோர் பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை(29.12.2015) அன்று நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு அதன் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்தனர்.

கனடாக் கிளையின் நிர்வாக சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும் அத்தீர்மானத்தினை தாய்ச்சங்க நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கனடாக் கிளை நிர்வாகம் வேண்டிக்கொண்டமைக்கு அமையவும் போசகர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் மேற்படி கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

Visuvalingam-Mas-W

அதாவது தாய்ச்சங்க நிர்வாகம் எந்தவொரு விண்ணப்பத்தினையும் எழுத்து மூலமாகவே கனடாக் கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அத்தோடு கனடாக் கிளை தாய்ச்சங்கத்திற்கு அனுப்பி வைக்கும் நிதிக்கான கணக்கு விபரங்களை உடனுக்குடன் அனுப்பி வைத்து உதவ வேண்டுமெனவும் அப்போதுதான் கனடாக் கிளையின் நிர்வாக சபை அவற்றினை ஆராய்ந்து முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் போசகர் குறிப்பிட்ட மேற்படி கருத்தினை வழிமொழிந்திருந்தார்.

Kanagasabapathy-W

மேலும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பாடசாலையின் தற்போதுள்ள “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்” என்ற பெயரை “காரைநகர் இந்துக்கல்லூரி” என்று மாற்றுவதற்கான அனுமதிக் கடிதம் கல்வித்திணைக்களத்திடமிருந்து தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களைக் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.

திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தனது கருத்துரையில் பாடசாலையின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை எனவும் அப்படி மாற்றுவதாயின் புதிய பெயர் எதுவும் தேட வேண்டிய அவசியமில்லை எனவும், இப்பாடசாலையைத் தோற்றுவித்தவர்களுடைய எண்ணக்கருவைச் சிதைக்காதவாறு மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களும், சயம்பு உபாத்தியாயரும் இணைந்து இட்ட நாமமாகிய ‘திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை’ என்ற பெயரையல்லவா மீண்டும் மாற்ற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தமது கருத்தில் பாடசாலையின் பெயரை மாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள், பாடசாலையின் தரத்தை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிறிய பௌதீக வளம் கொண்ட பாடசாலைகளை எடுத்துக்காட்டாகக் கூறி அவை பின்னர் அதிசிறந்த முதல்தர பாடசாலைகளாக எவ்வாறு தரமுயர்ந்தன என்றும் விளக்கிக் கூறியிருந்தார்.

பாடசாலையின் பெயர் மாற்ற விவகாரத்தில் தாம் தலையிட  விரும்பவில்லை என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் என இக்கூட்டத்தில் பொருளாளர் திரு.மா. கனகசபாபதி அவர்கள் தெரிவித்தார்.

பிருத்தானியாவில் ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்து

OSA KARAI HINDU LOGO

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க கல்வி என்னும் கருவியைத் தனது கையிலெடுத்தவர் எமது காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள். 
காரைநகரிலும், யாழ் குடாநாட்டிலும் இன்றும் சைவப் பாரம்பரியம் மிக்க பாடசாலைகளாக விளங்கி சாதனைகள் படைத்து வரும் கல்விக்கூடங்களையும் ஆசிரியர் கலாசாலையையும் நிறுவிட மூலகர்த்தாவாக தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து உழைத்த காரைநகர் தந்த அருணாசல உபாத்தியாயர் அவர்கள் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படுகின்றார்.  
சைவப்பாரம்பரியத்தைப் பேணியவாறு கல்விப்பயிர் வளர்ந்த மகான் அருணாசலம் அவர்களுக்கு காரைநகர் மைந்தர்கள் ஒவ்வொருவரும் நன்றிக்கடன்பட்டவர்கள் ஆவார். 
அந்த நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் பிருத்தானியா வாழ் காரை மைந்தர்களின் அமைப்பான பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது. 
மேற்படி நூலின் முதல் பதிப்பு காரைநகர் சைவமகா சபையினால் 1971 ஆம் ஆண்டு காரைநகரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
தமக்கே உரித்தான தனித்துவமான துடிப்புடனும் பொறுப்புடனும் மிகச் சிறப்பாக இந்நூலினை பிருத்தானியா வாழ் காரை மக்களுக்கும்; கல்வியாளர்கள், சைவத் தமிழ் அன்பர்களு;ககும் அறிமுகஞ் செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் இந்நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது

 

அமரர். மார்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமான திரு.மார்க்கண்டு பாலசிங்கம் (முன்னாள் உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை (18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது.

எமது கல்லூரியின் பழைய மாணவியும், விஞ்ஞான பட்டதாரியுமான திருமதி. தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியில் 23 ஆண்டு காலமாக உயிரியல் விஞ்ஞான ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் சேவையாற்றியவர் ஆவார். கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவதுடன்1991 இடப்பெயர்வு காலத்தில் கல்லூரியின் தனித்துவத்தைப் பேணி வளர்ப்பதில் அரும்பாடுபட்டார். காரைநகரில் மீளக் குடியேறியபோது கல்லூரியை துணிவுடன் சொந்த இடத்தில் இயங்க வைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்து ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அதிபர் திருமதி.தே.பாலசிங்கம் அவர்கள் ஆவார்.

இத்தகைய அர்ப்பணிப்பும் துணிவும் ஆளுமையும்மிக்க அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளுக்கு அவருக்குப் பின்னால் உறுதுiணையாகவிருந்து உற்சாகமளித்தவர் அவரின் அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவர் திரு.மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

அத்தகைய அன்புக் கணவரை இழந்து தவிக்கும் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களுக்கும் அவரது புதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அநுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஈழத்துச் சிதம்பரத்தில் உறையும் சிவகாமி சமேத நடராசப் பெருமானை இறைஞ்சுகின்றது.

கலாநிதி..தியாகரசா ..வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம்கனடா

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute Balasingam OSA

 

தேசிய மட்ட சாதனையாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டி வாழ்த்துகின்றது

KARAI HINDU LOGO

தேசிய மட்ட சாதனையாளர் செல்வி.அமிர்தா ஆனந்தராசாவிற்கும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரியைகள், அதிபர் அகியோருக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது பாராட்டினையும் வாழ்த்தினையும் கல்லூரி அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் தேசிய ரீதியாக நடைபெற்ற தனிப்பாடல் போட்டியில் எமது பாடசாலையின் மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசா இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட செய்தி தங்கள் மூலமாக அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கன்டா கிளை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றது. சாதனைப் பதிவுகளை ஏற்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருகின்ற மாணவர்களின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக்கொண்ட செல்வி அமிர்தா ஆனந்தராசாவினை எமது சங்கம் பாராட்டி வாழ்த்துகின்றது.

பாடசாலையின் இசைத்துறை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் வழங்கிய பயிற்சி செல்வி அமிர்தாவின் உழைப்பு என்பனவற்றுடன் தங்களுடைய மேலான நெறிப்படுத்தலும் இணைந்து செல்வி அமிர்தாவின்; வெற்றிக்கு வழிவகுத்திருந்தன என்ற வகையில் தங்களையும் இசைத்துறை ஆசிரியைகள் இருவரையும் கூடவே எமது சங்கம் பாராட்டி நன்றி கூறுகின்றது.

மு.வேலாயுதபிள்ளை               கனக சிவகுமாரன்             மா.கனகசபாபதி
தலைவர்                                         செயலாளர்                           பொருளாளர்

முழுமையான கடிதத்தின் பிரதியைக் கீழே காணலாம்.

Amirtha.Appreciation Message-page-001

 

‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது

schoollogo

சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் 
தலைவர், 
சைவ சித்தாந்த மன்றம் கனடா. 
பேரன்புடையீர்!


'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்' நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது


அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி சைவ சமயம் வீழ்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் அதன் எழுச்சிக்கு வித்திட்டு உழைத்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் பணிகளை தொடர்ந்து செயற்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்திருந்த காரைநகர் தந்த மகான் ஸ்ரீமான் அருணாசல உபாத்தியாயர் அவர்களின் அளப்பரிய சைவப்பணிகளை வெளிப்படுத்துகின்ற 'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்' என்கின்ற அரிய நூலினை தங்களது மன்றம் மறுபிரசுரம் செய்து வெளியிடவிருப்பது அறிந்து எமது சங்கம் மகிழ்ச்சியடைகின்றது. 


ஸ்ரீமான் அருணாசல உபாத்தியாயர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சைவ பாடசாலைகளையும் சைவ ஆசிரிய கலாசாலைகளையும் தோற்றுவிக்க முன்னின்று உழைத்த பெருமகனாவார். இன்று கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் என அழைக்கப்பட்டு வருகின்ற காரைநகரின் முதன்மைப் ;பாடசாலையினை காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை என்ற பெயரில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் நிறுவப்படுவதற்கும் வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய கல்வி நிறுவனங்கள் தோற்றம் பெறுவதற்கும் அருணாசல உபாத்தியாயர் அவர்களே மூல காரணமாக அமைந்து விளங்கினார் என்பது வரலாறாகும். 


அனைவராலும் விதந்து போற்றப்படுகின்ற காரை மக்களின் சைவப் பாரம்பரியம் மேம்பட்டு விளங்கவும் நீடித்து நிலைபெறவும் காரணமாக விளங்கிய அருணாசல உபாத்தியாயர் காரை மக்களால் மட்டுமன்றி சைவத்தமிழ் மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவராவார். 


சைவசமயம் சார்ந்த அரிய பல நூல்களை தேர்ந்தெடுத்து அவை சைவ மக்களை சென்றடைந்து பயனடையும்வண்ணம் மறு பிரசுரம்செய்து வெளியிட்டு வருகின்ற தங்களது பணி பாராட்டுக்குரியதாகும். அந்த வரிசையில் சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் என்ற நூலின் வெளியீடு வரலாற்றில் பதிவுசெய்யப்டவேண்டியதொன்றாகும். 


எதிர்வரும் யூலை25ஆம் திகதி Scarborough Civic Centre  மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நூலின் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது. 


மு.வேலாயுதபிள்ளை         கனக சிவகுமாரன்                             மா.கனகசபாபதி 
தலைவர்                                    செயலாளர்                                            பொருளாளர்


முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம் 

Greeting-Message-for-Book-Release-OSA

கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் பயன்பெற்ற பயிற்சிப்பட்டறை (Workshop)

கர்நாடக இசையைப் பயிற்றுவிப்பதில் அனுபவமும் ஆற்றலும் பயிற்சியும் மிக்க யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மூதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A(Music), M.Phil(Music)  அவர்களால் கடந்த (28.06.2015) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை(Workshop) வாய்ப்பாட்டு இசை பயிலும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது.


கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்றையில் பின்வரும் இரு தொனிப்பொருட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


1.குரலிசையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைப் பயிற்சி முறைகள்


2. குரலிசையும் கமகங்களின் முக்கியத்துவமும்


ரொரன்ரோவில் கர்நாடக இசை பயின்றுவரும் மாணவர்கள் ஆர்வத்துடன் இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிப் பயன்பெற்றனர். வாய்ப்பாட்டு இசை கற்கும்போது குரலிசையில் கடைப்பிடிக்க வேண்டிய நுணுக்கங்களைச் செயல் முறையுடன் விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி அவர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தமை குறிபபிடத்தக்கது.


கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இப்பயிற்சிப் பட்டறை அமைந்திருந்ததாக பெற்றோர் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.


பயிற்சிப்பட்டறையில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

Dsc_0866 Dsc_0862 Dsc_0859 Dsc_0858 Dsc_0855

 

செல்வி பரமேஸ்வரி கணேசன் கனடாவிற்கான கலைப் பயணத்தினை நிறைவு செய்துகொண்டு தாயகம் திரும்பினார்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்னிசைக் கச்சேரியில் கலந்துகொள்ளும்பொருட்டு அச்சங்கத்தின் அழைப்பிற்கிணங்க கலைப் பயணத்தினை மேற்கொண்டு கனடாவிற்கு வருகைதந்திருந்த யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன் 03-07-2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வழியாக தாயகம் திரும்பினார்.


செல்வி பரமேஸ்வரி குறுகிய கால கலைப்பயணத்தினூடாக ஆயிரக்கணக்கான கனடா வாழ் கர்நாடக சங்கீத ரசிகர்களை தம்வசப்படுத்தியதுடன் இசை ரசிகர்களினதும் கனடா வாழ் காரைநகர் மக்களினதும் அன்பினை சுமந்தவண்ணம் தாயகம் திரும்பியுள்ளார்.


பழைய மாணவர் சங்க கனடா கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செல்வி பரமேஸ்வரியை விமானநிலையம்வரை சென்று அன்புடன் வழியனுப்பி வைத்திருந்தனர்.


விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே காணலாம். 

Dsc_0880 Dsc_0926 Dsc_0920 Dsc_0916 Dsc_0914 Dsc_0913 Dsc_0912 Dsc_0910 Dsc_0909 Dsc_0906 Dsc_0902 Dsc_0900 Dsc_0898 Dsc_0897 Dsc_0893 Dsc_0891 Dsc_0888 Dsc_0885 Dsc_0881Dsc_0882Dsc_0908

 

செல்வி பரமேஸ்வரி கணேசனுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை மதிய போசன விருந்து வழங்கி மதிப்பளித்தது

பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு வருகை தந்து பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக இசைக் கச்சேரியினை நிகழ்த்திய பாடசாலையின் பெருமைக்குரிய பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமான செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகம் சென்ற 01-07-2015 அன்று புதன் கிழமை மதியபோசன விருந்தளித்து மதிப்பளித்திருந்தது.


சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் தலைமையில் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாகசபை உறுப்பினர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவருமான சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்கள் தமது உரையில் செல்வி பரமேசுவரி கணேசன் அவர்கள் கனடா பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று வந்து இன்னிசைக் கச்சேரியை நிகழ்த்தி எல்லோரையும் இன்புறச் செய்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றி கூறினார். எல்லோரும் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்ற கச்சேரியில் அசையாமல் இருந்து கச்சேரியை இரசித்துக் கொண்டிருந்தது பிரமிக்கச் செய்தது. செல்வி அவர்கள் இசைத்துறையில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று கலாநிதிப் பட்டம் பெற்று பல்கலைக்கழகப் பேராசிரியராக வரவேண்டும் என்றும், வாய்ப்புகள் கிடைக்கும்போது வேறு நாடுகளுக்கும் சென்று சிறப்புற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.


இங்கு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் ஈழத்தின் முன்னணி இசைக்கலைஞர் ஒருவரை இனம்கண்டு எமது சங்கம் இங்கு வரவழைத்தமையையிட்டு கனடாவின் இசைத்துறை வட்டாரம் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடமிருந்தும் எமது சங்கத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதை குறிப்பிட்டதுடன் இதையிட்டு எமது சங்கமும் கனடா வாழ் பழைய மாணவர்களும் பெருமைப்படமுடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் செல்வி பரமேஸ்வரியின் கனடாவிற்கான வருகை சங்கத்தின் வளர்ச்சிப்பாதையில் முக்கியமான படிக்கல்லாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கி பாடசாலையின் மேம்பாட்டிற்கு உதவியது மட்டுமல்லாது பாடசாலைக்கும் தாம் பிறந்த காரை மண்ணிற்கும் பெருமை சேர்த்த செல்வி பரமேஸ்வரிக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.


சங்கத்தின் உத்தியோபூர்வ இணையத்தளமான karaihinducanada.com   நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் பேசுகையில் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்கள் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்து எம்மில் பலருடன் குழந்தையாகப் பழகி இன்று இசை வானில் குயிலாக உயரப் பறந்தாலும் தான் கல்வி கற்ற பாடசாலையையும் எம்மையும் மறவாமால் எமது அழைப்பை ஏற்று இங்கு வந்து இங்குள்ள முன்னணி சங்கீத வித்துவான்களும் கர்நாடக சங்கீத இசை ரசிகர்களும் பாராட்டும்படியாக அருமையான இசைக் கச்சேரிகளை நடத்தியமை எமக்கு எல்லாம் மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கின்றது எனக் கூறி அவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் வைத்து பழைய மாணவர் சங்க கனடா கிளையின் சார்பில் சிறிய சன்மானத் தொகை பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களினால் செல்வி பரமேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டது.


செல்வி பரமேஸ்வரி தமக்கு வழங்கப்பட்ட மதிப்பிற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அவர் தமதுரையில் நீங்கள் என்மீது இவ்வளவு அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதற்குக் காரணம் நீங்கள் ஒவ்வொருவரும் எனது தந்தையார் மீது (நாதஸ்வரக் கலைஞர் காரையம்பதி என்.கே.கணேசன்) குறிப்பாக காரைநகர் மக்கள் வைத்துள்ள அன்பும் மதிப்புமே எனவும் தமது தந்தையாரின் ஆத்மா தம்மை ஆசிர்வதித்து வருவதே பல்வேறு சவால்களையும் தாண்டி இசையுலகில் உயர்ந்து விளங்க காரணமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.


மேலும் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்கள் தமது உரையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தாம் பயின்ற பாடசாலையின் மேம்பாட்டிற்கு இசைக் கச்சேரியினை வழங்கியதையிட்டு மனநிறைவடைவதுடன் தாம் கனடாவில் தங்கியிருந்த குறுகிய காலப்பகுதியில் இங்குள்ள மூத்த கலைஞர்கள் முன்னணிக் கலைஞர்கள் மற்றும் இசைவளர்க்கும் அமைப்புக்கள் தமக்கு வழங்கிய வரவேற்பும் மதிப்பளிப்பும் தம்மை பெரிதும் ஊக்கிவித்திருப்பதாகவும் தாம் வேறு பல நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் கனடாவிற்கான பயணமே என்னை உலகப்புகழ் அடைய வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தம்மை இங்கு வரவழைத்ததன்மூலம் இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாகவிருந்து செயற்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

Img_2778 Img_2779 Img_2780 Img_2781 Img_2782 Img_2783 Img_2784 Img_2785 Img_2786 Img_2787 Img_2789 Img_2790 Img_2791 Img_2792 Img_2793 Img_2794 Img_2795 Img_2796 Img_2798 Img_2799 Img_2800 Img_2801 Img_2802 Img_2803 Img_2804 Img_2805 Img_2806 Img_2808 Img_2809 Img_2810 Img_2811 Img_2812 Img_2813 Img_2814 Img_2815 Img_2816 Img_2817 Img_2818 Img_2819 Img_2821 Img_2822 Img_2829

 

மூன்று மணிநேரம் ரசிகர்களை சங்கீத சாகரத்தில் மூழ்க வைத்த செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

Dsc_0772

ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர்.N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Phil. அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி ரசிகர்களை மூன்று மணிநேரம் சங்கீத சாகரத்தில் மூழ்கடித்த வெற்றி நிகழ்வாக நடைபெற்றது.

அருமையான இந்த இன்னிசைக் கச்சேரிக்கு பக்கவாத்திமாக வயலின் வித்துவான் திரு. A.ஜெயதேவன் அவர்களும் காரைநகர் தந்த மிருதங்க வித்துவான் யாழ்ப்பாணம் T.செந்தூரன் அவர்களும் அணிசெய்து கச்சேரியை மேலும் மெருகூட்டியிருந்தனர்.

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசைக் கச்சேரி கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கத்தில் சென்ற சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 6:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

நிகழ்விற்கான நிதி அநுசரணையை குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம், மருத்துவ கலாநிதி இராமலிங்கம் செல்வராசா அவரது பாரியார் மருத்துவ கலாநிதி திருமதி.சறோ செல்வராசா, தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம், காசிப்பிள்ளை சக புத்திரர்கள் துரித பணமாற்றுச் சேவை நிறுவனத்தின் திரு.முருகேசு காசிப்பிள்ளை, இதயநோய் வைத்திய நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம், பிரபல மோட்டார் வாகன விற்பனை முகவர் திரு.அண்டி திருச்செல்வம், பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ரவி ரவீந்திரன், பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா, ஜக்கிய அமெரிக்க இராச்சியத்தில் பொறியியலாளராக பணியாற்றும் திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் அவரது பாரியார் நிர்மலாதேவி, karainews.com  இணையத்தள ஆசிரியர் திரு.தீசன் திரவியநாதன், ஆகியோர் வழங்கி உதவியிருந்தனர். 

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியில் விளையாட்டிலும், கல்வியிலும் சாதனைகள் படைத்த சிறப்பு மிக்க பழைய மாணவர் இருதய மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்கள் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து சிறப்பித்திருந்தார்.

கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களும் அவர்தம் பாரியார் திருமதி.பவானி மகாதேவன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஈழத்து முன்னணிக் கலைஞர்களான இன்னிசை வேந்தர் சங்கீதபூஷணம் திரு.பொன்.சுந்தரலிங்கம், இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷ்மி ஸ்ரீநிவாசகம், பல்கலை வேந்தர் திரு.வர்ணராமேஸ்வரன், இசைக்கலா வித்தகர் திரு.மோகன் திருச்செல்வம், இசைக்கலைமணி திருமதி.ராதிகா நாகேந்திர சர்மா, நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம், பரதகலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள், காரைநகர் மக்கள் மற்றும் கனடா வாழ் சங்கீத இசை ரசிகர்கள் என பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சமூகமளித்திருந்து மண்டபத்தை நிரப்பியிருந்தனர். 

நிகழ்வுகளை கல்லூரியின் சிறப்பு மிக்க பழைய மாணவர் பேராசிரியர் தில்லைநாதன் சிவகுமாரன், கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்களும் பாரியாரும், கல்லூரியின் மூத்த பழைய மாணவர் திரு.முருகேசு சின்னத்துரை அவர்களும் பாரியாரும் ஆகியோர் மங்கள விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.

கனடாப் பண் தமிழ் பண் ஆகியவற்றை திரு.கார்த்திக் இராமலிங்கம் அவர்களின் மாணவியான செல்வி ராகவி மனோராகவன் பண்ணோடு இசைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினரும் இணையத்தள நிர்வாகியுமான திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.

கல்லூரியின் பழைய மாணவரும் காரைநகர் தந்த வாய்ப்பாட்டுக் கலைஞருமான அமரர் சங்கீதபூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் குரலில் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கல்லூரிப் பண் இசைக்கப்பட்டது.

அடுத்து வந்த மூன்று மணிநேரத்திற்கு செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் கரைபுரண்டோடும் கர்நாடக இசை வெள்ளத்திற்காக அரங்கம் விரிந்தது. ஆவலோடு தமது இருக்கைகளில் நிமிர்ந்து இருந்த ரசிகர்கள் தம்மை மறந்து தாளம் போட்டு இசையரசியின் இசைக் கோலங்களை ரசித்தனர்.

ஒவ்வொரு உருப்படியும் பாடத் தொடங்கும் போதும் முடியும்போதும் இராக ஆலாபனை செய்தபோதும் அரங்கத்தில் ரசிகர்களின் கரவொலி எதிரொலித்தது.

காம்போதி, ஆபேதி, லதாங்கி ஆகிய மூன்று இராகங்களிலும் ஆலாபனை செய்திருந்தார். அதில் லதாங்கி இராகத்தில் அமைந்திருந்த ‘பிறவா வரம் தாரும்’ என்னும் பாபநாபன் சிவன் அவர்களின் கீர்த்தனையும் ஆபேதி இராகத்தில் அமைந்த ஸ்ரீதியாகராஜர் இயற்றிய  ‘நகுமோ’ எனத் தொடங்கும் கீர்த்தனையும் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

ஒவ்வொரு பாடல் முடிவிலும் கற்பனாஸ்வரம் பாடி முடிக்கும் போதும் ஜோன்புரி இராகத்தில் சிவபுராணத்தின் சில வரிகளை இசைத்தபின் அதே இராகத்தில் ‘எப்போ வருவாரோ’ என்ற பாடலைப் பாடிய போதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுததினர்.

வீரமணி ஐயர் அவர்களின் பாடலைப் பாடியபோதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய போதும் சபையோர்  உற்சாகப்படுத்திய கரவொலியில் அரங்கு நிறைந்தது.

பக்கவாத்தியக் கலைஞர்களும் தாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தம்பங்கை நிரூபித்தனர். வயலின் வித்துவான் A.ஜெயதேவன் அவர்களும் மிருதங்க வித்துவான் யாழ்ப்பாணம் T.செந்தூரன் அவர்களும் தனியாவர்த்தனம் வாசித்தபோது மண்டபம் இசைப் பிரவாகத்தில் மூழ்கித் திணறியது.

அடுத்து பிரதம விருந்தினர் இருதய மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களை சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் பொன்னாடை போர்த்து கௌரவித்தார். பிரதம விருத்தினர் உரையாற்றும்போது பல ஆண்டுகளாக தமிழ் பேசும் வாய்ப்பு தமக்கு இருக்கவில்லை என்றும் அதனால் தனது தமிழ் மறந்து போய்விட்டதாகவும் ஆனால் இன்று இந்த இசைக் கச்சேரியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தனது தாய்மொழி, பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வருகின்றது என்றும் கூறினார். இருதய மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான மருத்தவகலாநிதி ராதகோபாலன், எமது நினைவுகள் எமது இதயங்களில் பதிவுசெய்யப்படுவதாகவும் அதற்கு எடுத்துக்காட்டாக தமது அநுபவத்தில் இருதய மாற்று சிகிச்சை செய்த ஒரு பத்து வயது சிறுமியின் வாழ்வில் இடம்பெற்ற சம்பவத்தை உணர்வு பூர்வமாகக் கூறினார்.

மேலும் அவர் தனது உரையில் இன்று எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை தாம் கல்வி கற்ற பாடசாலையை மறக்காது பல்வேறு வகையான உதவித்திட்டங்களை எமது பாடசாலைக்கு செ;ய்து வருவதற்கு காரணம் எங்கள் வாழ்விற்கு அத்திவாரம் இட்ட எமது பள்ளிக்கால நினைவுகள் எம் ஒவ்வொருவரினதும் இதயத்தில் அழியாது இடம்பிடித்திருப்பதாகும் என்றும் கூறி சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தமது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

அடுத்து இளம்கலைஞர் மன்ற நிறுவுநர் இன்னிசை வேந்தர் சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் அரங்கத்தின் நாயகி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு பாராட்டுரையை வழங்கினார். திரு.பொன்.சுந்தரலிங்கம் அவர்களை சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார். இன்னிசை வேந்தரின் பாரியார் திருமதி.பொன் சுந்தரலிங்கம் அவர்கள் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். 

 இன்னிசை வேந்தர் தனது உரையில் ஈழத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது கலைத்துறையை வளர்த்து வருகின்ற இவ்வாறான கலைஞர்களை இனம் கண்டு நாம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு “இசையே அவரின் உயிர் “ எனவும் இன்று அவர் தனது திறiமையினால் தமது தந்தையாரையும் விஞ்சுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனவும கூறி பாராட்டியபோது சபையோர் தமது பலத்த கரவொலியால் அதனை வழிமொழிந்தனர்.

அடுத்து செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிறுவுனர்களில் ஒருவரும் எமது கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய அமரர்.சின்னத்திம்பி தம்பிராஜா அவர்களின் பாரியாரும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி.மனோன்மணி தம்பிராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் சங்கத்தின் சார்பில் நினைவுக் கேடயத்தை வாசித்து செல்வி பரமேஸ்வரி அவர்களுக்கு வழங்கினார்.

வயலின் இசை வேந்தன் A.ஜெயதேவன் அவர்களை குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம்அவர்களும் மிருதங்க வித்துவான் யாழ்ப்;பாணம்T.செந்தூரன் அவர்களை தொழலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் தலைவரும் தற்போதயை போசகருமாகிய திரு.ரவி ரவீந்திரன் அவர்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் நினைவுக் கேடயத்தை வழங்கினார்.

அடுத்து கலைஞர்கள் இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷ்மி ஸ்ரீனிவாசகம், நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம், இசைக்கலைமணி திருமதி.ராதிகா நாகேந்திரசர்மா ஆகியோர் இன்னிசை அரசி செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தினர்.

அடுத்து கௌரவ விருந்தினர் தொழிலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களையும் பாரியாரையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாக சபை உறுப்பினர் திரு.திருவேங்கடம் சந்திரசோதி தம்பதிகள் பொன்னாடை போர்த்தி மலர்ச்செண்டு வழங்கிக் கௌரவித்தினர்.

அடுத்து செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்கள் தமது பதிலுரையில் தான் கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தம் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததாகவும், அதனை நிறைவேற்றவும் இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் தனது இசைக்கச்சேரியை வழங்குவதற்கும் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு தமது நன்றியைக் கூறினார்.

நிறைவாக பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல அறிவிப்பாளருமான திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன் எமது ஊரில் பிறந்து கலை ஈடுபாட்டுடன் வளர்ந்த தமது அநுபவத்தில் செல்வி.கணேசன் குடும்பத்தினரை நன்கு அறிந்தவராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்.

வெளியே அடை மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது இனிமைiயான கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியை பொறுமையாக இருந்து ரசித்து மகிழ்ந்ததோடு எமது மண்ணின் மகளை இசையின் அரசியை எமது ஊர்மக்களும் இசை ரசிகர்களும் வாழ்த்தி தமது அன்பினைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

அரங்கம் நிறைந்த சங்கீத ரசிகர்களுடன் வெற்றி நிகழ்வாக நடந்தேறிய செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர் N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Phil. அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் வெற்றி நிகழ்வாக நடைபெற்றது.

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி கனடா-கந்தசுவாமி கோயில் கலை அரங்கத்தில் நேற்று சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 5:30 இற்கு நடைபெற்றிருந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு ஈழத்து முன்னணிக் கலைஞர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், காரைநகர் மக்கள் மற்றும் கனடா வாழ் சங்கீத இசை ரசிகர்கள் என பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சமூகமளித்து கச்சேரியை ரசித்தனர். 
வெளியே பெரும் மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுததாது இந்த இசை வெள்ளத்தில் பெருந்திரளான ரசிகர் கூட்டம் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். முழுமையான செய்தியுடன் படத்தொகுப்பும் மிக விரைவில் எடுத்து வரப்படும். 

Dsc_0676 Dsc_0693 Dsc_0695 Dsc_0705 Dsc_0737 Dsc_0741

செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சி நிரலும் அநுசரணையாளர்களும்

Parama - flyer 3 ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil  அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்வின் நிகழ்ச்சி நிரலும் நிகழ்வின் அநுசரணையாளர்கள் மற்றும் கச்சேரிக்கு அடுத்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு Scarborough Civic Centre  இல் நடைபெறவிருக்கும் பயிற்சிப் பட்டறை (Workshop) பற்றிய விபரங்களையும் கீழே காணலாம். 

program-2015program-2-2015

 

Older posts «