Admin

Author's details

Date registered: August 18, 2012

Latest posts

  1. திருமதி ஆறுமுகம் கனகம்மா — December 9, 2012
  2. திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) — December 9, 2012
  3. காரைநகர் சுற்றுவீதிக்கு 2013 இல் காற்பெற் இடப்படும்! — December 11, 2012
  4. பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள் — December 11, 2012
  5. சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள் — December 11, 2012

Author's posts listings

காரைநகர் களபூமி தன்னை சித்திவிநாயகர் ஆலயத்தில் 19/02/2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி உற்சவம்

காரைநகர் களபூமி தன்னை சித்திவிநாயகர் ஆலயத்தில் 19/02/2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி உற்சவம் காலை 10.00 மணிக்கு அபிஷேக தீபாராதனையும் மற்றும் அன்னதான நிகழ்வும். மாலை 7.00 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வும் தொடர்ந்து மாணவர்களுக்கான திருக்குறள் போட்டியும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வசந்த மண்டப பூஜையும் சாமி வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

Video

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 19.02.2018 திங்கட்கிழமை நடைபெற்ற 1ம் இரவு திருவிழா காணொளி!

Video

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 19.02.2018 திங்கட்கிழமை நடைபெற்ற கொடியேற்ற திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 19.02.2018 திங்கட்கிழமை இரவு நடைபெற்ற 1ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 19.02.2018 திங்கட்கிழமை நடைபெற்ற கொடியேற்ற திருவிழா காட்சிகள்!

வான் புகழ் பெற்றுயர வாழ்த்துகின்றோம்


சிவமயம்
”பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே

வான் புகழ் பெற்றுயர வாழ்த்துகின்றோம்

தமிழர் பண்பாட்டில் இசை இரண்டறக் கலந்தது. மிருதங்கம் என்பது தனிக் கலையாகவும் பக்க வாத்தியக் கலையாகவும் வளர்ந்து வரும் கலையாகும். சுருதி லயம் என்பன இசையின் ஆதாரமானவை. அதில் லயத்தை அடிப்படையாகக் கொண்டது மிருதங்கம். கேட்பவர் மனதை லயப்படுத்தும் ஆற்றல் கொண்டது மிருதங்கக் கலை.

மிருதங்கம் இந்திய வாத்தியக் கலைகளில் மிகவும் தொன்மையானது. கூத்துகந்தானாகிய ஆடற்கரசன் சிவனுடைய ஐந்தொழில் நடனத்திற்கு நந்தி தேவர் மிருதங்கம் வாசிப்பது என்பது ஐதீகம். அதனால் சிவாலயங்களில் நந்தியந் தேவர் மூலஸ்த்தானத்திற்கு முன்பாதாக அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

அத்தகைய தென்மையானதும் புனிதமானதுமான மிருதங்கக் கலையை தொன்று தொட்டு தமிழர் கண்ணெனப் போற்றி வளர்க்கின்றனர். எமது உயர்புகழ் மண்ணின் உத்தம குணங்களுடன் விழைந்த உறவு ஜலக்சிகன் மேலும் நம் ஊரின் புகழ் விளங்கச் செய்யும் வகையில் ஒரு மிருதங்கக் கலைஞனாக உருவாகி இருக்கிறார். இது எமக்கும் எம்மண்ணிற்கும் பெருமை சேர்க்கிறது. ஈன்ற பொழுதிற் பெரிதுக்கும் தாயைப் போல ஜலக்சிகனைச் சான்றோனாகப் பார்த்து நாமும் மகிழ்கிறோம்.

சுவிற்சர்லாந்தில் பல்கலைக் கழக புகுமுக உயர்தர வகுப்பில் (Schule Gymnasium, Muttenz) பயிலும் கல்லூரி மாணவனும் திரு திருமதி கணேசபிள்ளை சந்திரலிங்கம் தம்பதிகளின் புதல்வனுமாகிய திருநிறைச் செல்வன் சந்திரலிங்கம் ஜலக்சிகன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றத் தினத்தில் அவரை உவகையுடன் வாழ்த்துகிறோம்.

இவர் யாழ் காரைநகரைச் சேர்ந்த திரு, திருமதி கணேசபிள்ளை, தவமணி, பரஞ்சோதி, பத்மாவதி ஆகியோரின் பேரனும், கனடாவைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் பரஞ்சோதி ரதிரூபன் அவர்களின் மருமகனுமாய்த் திகழ்பவர் என்பது இவரது மேலதிக சிறப்புக்கள்.

செல்வன் ஜலக்சிகன் எமது சபையால் வருடாந்தம் நடாத்தப்படும் “காரைத்தென்றல்” கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனது கலைத் திறனை வெளிப்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்துவான் ருக்ஷன் ஸ்ரீரங்கராஜா அவர்களிடம் முறைப்படி மிருதங்கம் பயின்று அரங்கேற்றம் காணும் செல்வன் சந்திரலிங்கம் ஜலக்சிகன் அவர்களின் இசையுலகப் பிரவேசம் ஈடில்லாப் புகழையும் அவரது ஆற்றல் கடல் அலை போலப் பொங்கியெழுந்து பிரவாகித்து எண்ணற்ற சிறப்புக்களையும் அவர் பெறவேண்டுமென ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரப் பெருமானின் ஆசிகள் பெற்றுச் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து வாழ வாழ்த்தியமைகிறோம்.

நன்றி

இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
24.02.2018

 

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை திருவருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் -2018

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 16.02.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக 9ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் தங்கோடை திருவருள்மிகு புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேகம் 30.04.2018 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது!

மரண அறிவித்தல், திருமதி கணேசபாக்கியம் கந்தையா (செம்பாடு,தங்கோடை,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

                    மரண அறிவித்தல்

                              திருமதி கணேசபாக்கியம் கந்தையா

அன்னை மடியில் : 12 யூன் 1935                                                ஆண்டவன் அடியில் : 11 பெப்ரவரி 2018

காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபாக்கியம் கந்தையா அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணகுமாரி(சித்ரா), சாந்தகுமாரி(சாந்தி), விக்னராஜா(இந்திரன்), சண்முகராஜா(ராஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செந்தில்நாதன், சிறிஸ்காந்தா, ராணி, கமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகன், கார்த்திகா, துளசி, தீலீபன், பியன்கா, சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கணேசன், ஆனைமுகன், பராசக்தி(பேபி), நாகரத்னம்(மணி), கங்கா, மஹேஸ்வரி, ஞானேஸ்வரி, விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணிதேவி, இந்திரா, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், லட்சுமணபிள்ளை, துரைராசசிங்கம் மற்றும் சொக்கநாதன், தவரத்தினராசா, சுந்தரமூர்த்தி, கிரிஷ்ணரத்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, நடராசா, சிவபாக்கியம், இரத்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No 18B Kingsdowne Rd,
Surbiton,
KT6 6JZ,
UK.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 11:20 மு.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Ln, Morden SM4 4NU, UK

தொடர்புகளுக்கு:
சித்ரா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447834641751
இந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447715428104
ராஜி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447710138830
சாந்தி(மகள்) — கனடா
தொலைபேசி: +19055423002

மரண அறிவித்தல், திரு. முருகேசு தியாகராசா (முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி) (முல்லைப்பிலவு, காரைநகர்) (Fussles Lane,வெள்ளவத்தை,கொழும்பு) ( Scarborough,கனடா)

                     மரண அறிவித்தல்

                          திரு.முருகேசு தியாகராசா
                                   (முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி)

 

தோற்றம் : 28 யூன் 1929                                    மறைவு : 12 பெப்ரவரி 2018

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussles Lane, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராசா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சாமியார்) மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநிதி, கண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாதேவன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இலக்சுமணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்கேஸ்வரன், வானதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவானந்தன்(இலங்கை), பரமானந்தம்(இலங்கை), அருளானந்தம்(இலங்கை), நாகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகரத்தினம்(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீனன், தனுஷா, பியூரன், பிரஜீஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
கெங்கேஸ்வரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472868168
சிவம்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162698168
கண்ணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447948963042
வானதி(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447986098023
சர்வேஸ்வரி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +19057901055
மகாதேவன்(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442083812364
பரமானந்தம்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771252193

Video

காரைநகர் களபூமி கலையகத்தில் 23.07.2017 அன்று நடைபெற்ற கலையகத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா காணொளி!

Video

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 31.01.2018 புதன்கிழமை இரவு நடைபெற்ற திருவூஞ்சல், சுவாமி வீதியுலா வரும் காணொளி!

Video

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 07.02.2018 புதன்கிழமை இரவு நடைபெற்ற திருவூஞ்சல், சுவாமி வீதியுலா வரும் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் நான்கு சாமங்களும் விஷேட அபிஸேக ஆராதனைகளும் பூசை வழிபாடுகளும் இடம்பெற உள்ளதுடன் அதிகாலை தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் இருபத்து நான்கு மணிநேரம் ஓதும் அகண்டநாம வழிபாடும் அஷ்டோத்திர நாம அர்ச்சனை ஆகியனவும் அன்றைய நாள் முழுவதும் நடாத்துவதற்கு காரைநகர் மணிவாசகர் சபை எற்பாடு செய்துள்ளது.

மறுநாள் புதன்கிழமை அதிகாலை இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையையடுத்து சுவாமி துர்வாக சாகர சமுத்திரதீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்த நிகழ்வு இடம்பெறும்.தொடர்ந்து மாணிக்கவாசகர் மடாலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இரு தினங்களும் யாழ் நகரிலிருந்து ஆலயம் வரை பஸ் சேவையும் இடம்பெற உள்ளது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 1952ஆம் ஆண்டு காரைநகர் கருங்காலியென்னும் குறிச்சியிற் பிறந்தவர். தற்போது காரைநகரின் சமூகசேவை வரலாற்றில் இவரது பங்கு கணிப்பிற்குரியது. ஆரம்பக் கல்வியை வியாவில் சைவ வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ற்ரன் காரை கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றார். அறிவியலின் மெய்யத்தகு பட்டத்தையும் பெற்றக் கொண்டவர்.

10.05.1974 இல் காரை இந்துக் கல்லூரியில் இவரது கல்விச் சேவை ஆரம்பித்தது. அதிபராக ஸ்கந்தா கல்லூரி , கோட்டக்கல்வி அதிகாரி சங்கானை, வலயக்கல்விப் பணிப்பாளர் தீவகம், யாழ்ப்பாணம், வலிகாமம், மாகணக்கல்விப் பணிப்பாளர் வடமாகாணம், ஆகியவற்றில் கடமையாற்றினார். பிரதிச் செயலாளராக வடமாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றி 07.06.2012 இல் ஒய்வு பெற்றார். 38 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பாடசாலைகளிலும், கல்வி திணைக்களங்களிலும் கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

வடமாகாண பொதுச் சேவைகள் அணைக்குழு உறுப்பினர் (2014-2017), சிரேஷ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றியம் வடமாகாணம், வடமாகாணக் கல்வி அமைச்சின் மீளாய்வுக்கான நடைமுறைப்படுத்தும் ஆயம், ஆகியவற்றில் தலைவராக பல வருடங்கள் செயலாற்றியவர் காரைநகர் கருங்காலி போசுட்டி முருகன் திருப்பணிச் சபை, காரைநகர் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவராகவும், தற்போதைய காரை அபிவிருத்திச் சபைத் தலைவராகவும் சிறப்புற பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் இளையோருக்கு விடுக்கும் செய்தியாக குடும்பப்பற்று, கிராமப்பற்று, நாட்டுப்பற்றுள்ள ஒழுக்க சீலர்களாக வளர்ந்து வர வேண்டும், கல்வியில் உயர்நிலை பெற அயராது முயற்சித்தல் வேண்டும், எமது இனத்தின் அடையாளமாக இருக்கும் கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்வுகளில் பங்காளராவதற்கு முயற்சித்தல் வேண்டும், தங்களது நேரத்திலும், உழைப்பிலும் ஒரு பகுதியை சமூதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தல் வேண்டும் எனக் கூறி இருக்கின்றார்.

ஊருக்கு உழைத்த பெரியோரை “வாழும்போது வாழ்த்துவோம்” என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. காரைநகரின் கல்விக்கும் பொது ஊர் மேம்பாட்டுக்கும் காத்திரமான பங்காற்றியவரும் சுறுசுறுப்பாகப் பொதுப்பணி ஆற்றிவருபவருமாகிய முன்னாள் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு “கல்வி நிர்வாகக் கடல்” விருதளிப்பதில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் பெருமிதமடைகிறோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 03 – 12 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2017” இல் முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு “கல்வி நிர்வாகக் கடல்” விருதளித்து மதிப்பளித்தது.

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு திரு.ஆறுமுகம் சிவசோதி (முன்னாள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்) அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பாவையும் விருதையும் வழங்கி மதிப்பளித்தார்.

குருவே சரணம்!

எங்களது அன்புக்குரிய இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமையன்று இயற்கையெய்தினார். அவர் நினைவாக சில சிந்தனைகள்.

எமது சபையால் நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை எங்கள் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மிகத் திறமையாக எழுதி வந்தார்கள் தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பால் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் கடந்த மூன்று வருடங்களாக இதுவரை பதினாறு வாழ்த்துப்பாக்களை எழுதி வந்துள்ளார். அதில் முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திருவாளர் கார்த்திகேசு நடராசா அவர்களினதும், காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்களினதும் வாழ்த்துப்பாக்கள் இன்னும் இணையத்தளத்தில் வெளிவரவிலலை அடுத்த சில வாரங்களில் வெளிவர முயற்சிக்கின்றோம்.

எமது சபையின் மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்கள் கடந்த தைப்பொங்கள் தினத்தன்று ஒரு வாழ்த்துப்பாவினை இணையத்தளத்தில் வெளிவர தொகுப்பினை எழுதி அனுப்புவதாக எம் முடன் தொடர்பு கொண்டு கூறியிருந்தார்கள். ஆனால் காலன் அவர்களை தொடர்ந்து எம்முடன் சேர்ந்து செயற்பட அனுமதிக்கவில்லை. உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ? என்ற கேள்வி எம்மிடையே எழுந்திருக்கின்றது.

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை விருத்திக்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி; ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய அவரது பணியை தொடந்து செயற்படுத்துவதே நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் காணிக்கையாகும்.

வாழ்த்துப்பாவும் நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

‘ஆளுயர்வே ஊருயர்வு’
‘நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்’

 

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
11.02.2018

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்
திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு
“கல்வி நிர்வாகக் கடல்” விருது வழங்கி வாழ்த்திய
வாழ்த்துப்பா

ஆடல் அம்பலவாணன் பெயரன்! பரமநாதன் பெற்ற செல்வமே!
பாடல் சால் மங்கை பரிமளத் தாயார் ஏகமாய் ஈந்த நற்பேறே!
ஈடில் நல் நங்கை தவமணி இனிதுவக்கும் தவக் கொடையே!
கேடில் நற்புகழ் வடக்கின் கல்விப் பணிப்பாளரே! வாழி! வாழி!

சைவத் தரமுயர்ந்த வியாவில்! யாழ்ற்றன்! பின் பருத்தியூர்
உய்யத் தருவந்த ஹாட்லியெனப் பயின்று பின் அறிவியலின்
மெய்யத் தருவந்த பட்டம் பெற்றாய்! கையத் தொருமுகத்தான்
தெய்வப் பெயர்பூண்டாய்! காரையூரை வையத் தரமுயர்த்த வந்தாய்!

தொல்லு புகழ்ச் சயம்புபள்ளி நல்லாசிரியனாய்! கந்தரோடை
நல்ல புகழ் ஸ்கந்தாவின் அதிபராய்! கோட்டம் வலயமெனவுயர்ந்து
வெல்லு புகழ் வடமாகாணப் பணிப்பராய்! வியந்து பல்லோருமேற்ற
தௌ;ளு தமிழ்க் கல்வியமைச்சின் பிரதிச் செயலரானாய்! வாழி! வாழி!

திடமுடன் காரைச் சபையின் தலைவராய்! கருங்காலிப் போசுட்டியான்
வடமுடன் ஊரப் பணிச் சபையின் தலைவராய்! காரையூர் பெருந்-
தடமுடன் வாழ வந்தாய்! “கல்வி நிர்வாகக் கடல்” என விருதீந்தோம்
மனமுடன் சுவிஸ் காரையூரார்! கல்விச் சேவையாளனே வாழி! வாழி!

ஆக்கியோன்: சிவயோகச் செல்வன்

முத்தமிழ் விழா                                                 வாழ்த்தி வழங்கியோர்கள்
யாழ்ற்றன் கல்லூரி                                 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
காரைநகர்                                                         செயற்குழு உறுப்பினர்கள்
03.12.2017                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

 

 

காரைநகர் பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களில் இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவு

 

காரைநகர் பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களில் இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவு

இன்று நடைபெற்ற உள்ளுர் அதிகார சபைகள் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்கு இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்;து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவாகி உள்ளனர்.

இன்று அதிகாலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம் பெற்ற வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் பிரதேச சபைக்கான பத்து உறுப்பினர்கள் தெரிவாகினர்.

பத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக எட்டுக் கட்சிகளைச் சேர்ந்த 104 பேர் காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் ஆட்சி அமைப்பதில் நெருக்கடி நிலை தோன்றி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கைத் தழிழரசுக் கட்சியில் 1ம் வட்டாரத்தில் (தங்கோடை,பத்தர்கேணி,மருதபுரம்,செம்பாடு உள்ளிட்ட கிராமங்கள்) 314 வாக்குகளைப் பெற்று கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவாகி உள்ளார். 2ம் வட்டாரத்தில் (காரை மத்தி,வேதரடைப்பு,மல்லிகை உள்ளிட்ட கிராமங்கள்) 479 வாக்குகளைப் பெற்று ஆண்டிஜயா விஜயராசா தெரிவாகி உள்ளார் .3ம் வட்டாரத்தில் (பெரியமணல்,மருதடி,சடையாளி,புதுறோட்,மாப்பாணவூரி,சயம்புவீதி உள்ளிட்ட கிராமங்கள்) 328 வாக்குகளைப் பெற்று விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவாகி உள்ளார்.

மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 4ம் வட்டாரத்தில் (களபூமி,பாலாவோடை,விளானை,பொன்னாவளை,சத்திரந்தை,இடைப்பிட்டி,மொந்திபுலம்,
வலந்தலை, காளிகோவிலடி,திக்கரை,ஊரி உள்ளிட்ட கிராமங்கள்) 356வாக்குகளைப் பெற்று நல்லையா ஜெயக்கிருஸ்ணனும் 5ம் வட்டாரத்தில் (கருங்காலி,வியாவில்,பலகாடு,கல்லந்தாழ்வு உள்ளிட்ட கிராமங்கள்) 263 வாக்ககளைப் பெற்று மயிலன் அப்புத்துரையும் 6ம் வட்டாரத்தில் (துறைமுகம் பிள்ளையார் கோவிலடி, பாலாவோடை, தோப்புக்காடு உள்ளிட்ட கிராமங்கள்) 275 வாக்குகளைப் பெற்று மாணிக்கம் யோகநாதனும் தெரிவாகி உள்ளதுடன்.

காரைநகர் பிரதேசம் முழுவதும் இலங்கைத் தழிழரசுக் கட்சி 1623 வாக்குகளையும் ஜக்கிய தேசியக் கட்சி 1263 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1197 வாக்ககளையும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 1080 வாக்ககளையும் பெற்று விகிதாசாரப் பட்டியலில் உறுப்பினர்களைப் பெறும் நிலையில் உள்ளனர்.

அகில இலங்கைத் தழிழ் காங்கிரஸ் மொத்தம் 359 வாக்ககளையும் தழிழர் விடுதலைக் கூட்டணி 156 வாக்குகளைம்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 136 வாக்ககளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 வாக்குகளையும் காரைநகர் மக்களிடம் சுவீகரித்துக் கொண்ட போதும் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டதும் ஏனைய நான்கு உறுப்பினர்களின் விபரமும் எடுத்து வரப்படும்.

 

மரண அறிவித்தல், திரு.முத்துக்குமாரு கந்தையா (தங்கோடை,காரைநகர்) (முரசுமோட்டை,பரந்தன்)

                    மரண அறிவித்தல்

                                      திரு.முத்துக்குமாரு கந்தையா

பிறப்பு:-11-09-1935                                                                                       இறப்பு:-10-02-2018

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பரந்தன் முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கந்தையா 10-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார் .

அன்னார் காலம்சென்றவர்களான முத்துக்குமாரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் , காலம்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் , பராக்கிரமதேவியின் பாசமிகு கணவரும், காலம்சென்ற விஜயலட்சுமி, கனகலட் சுமி, சோதிநாதன், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், புவனேஸ்வரி, காலம்சென்ற சுந்தரமூர்த்தி , சிவனேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சுரேஸ்குமார், சுகந்தகுமார், சுரேசிகா, துர்க்கா, கீர்த்தனா, கிருத்திகா ஆகியோரின் பேரனும். சரஸ்வதி, காலம்சென்ற திலகவதி, சின்னத்தம்பி ,தருமலிங்கம் ,விசுவலிங்கம் , சுந்தரலிங்கம் ( கனடா ), கமலாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலம்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமசிவம் , நவரட்ணம் மற்றும் சிவபாக்கியம் , தனலட்சுமி, ஞானசவுந்தரி, யோகேஸ்வரி ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

தகவல்:
சுந்தரலிங்கம் ( சகோதரன்)
தொலைபேசி இல- (416) 292 – 0299

மரண அறிவித்தல்,திரு.பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை (ஓய்வுபெற்ற DIT- SriLanka Telecom)(கொம்பாவோடை, களபூமி, காரைநகர்) (சீனியர் லேன்,கலட்டி,யாழ்ப்பாணம்)

                    மரண அறிவித்தல்

           திரு.பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை
                                           (ஓய்வுபெற்ற DIT- SriLanka Telecom)

பிறப்பு : 27 ஓகஸ்ட் 1929                                                             இறப்பு : 7 பெப்ரவரி 2018

காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், கலட்டி சீனியர் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் முருகேசம்பிள்ளை அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை தங்கம்மா(Banker) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா, ரோகினி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற கோமதி, சாந்தி(நோர்வே), தவமணி(பிரான்ஸ்), சோதி, நரேந்திரன்(லண்டன்), முருகானந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சரவணபவன், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரட்ணம், பரமசாமி(பராசு), மகேந்திரன், ரவீந்திரன்(ஜெர்மனி), தவேந்திரன்(நோர்வே), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(கட்டார்), சாந்தகுமாரி(லண்டன்), ஹேமலதா(ஜெர்மனி), ஷிஷாந்தனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கிருஸ்ணப்பிள்ளை மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, இலக்சுமி, காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை, கமலாதேவி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகசபை, மகாலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்சினி, நிசாந்தி, மயூரதி(லண்டன்), பவித்ரா(லண்டன்), கார்த்திகா(கனடா), அஜந்தன், சுதர்சன்(சிங்கப்பூர்), யசோதினி, லயவாணி, அபிராமி(நோர்வே), நிரோசன்(பிரான்ஸ்), நிருஜா(பிரான்ஸ்), தேவப்பிரியன், ஹேஜன், அகல்யா, வித்யாகர்(லண்டன்), நர்மதி(லண்டன்), ராகவன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஹர்சன், கல்யாணி, திலக்‌ஷனா, நிஹேஷ்(லண்டன்), ஸ்ரீஅபிநயா(லண்டன்), சேயோன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டு முகவரி:
இல. 56, சீனியர் லேன்,
கலட்டி,
யாழ்ப்பாணம்

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுப்பிரமணியம்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212223816
செல்லிடப்பேசி: +94777915278
முருகானந்தன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492117213650
நரேந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447941284532
தவமணி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148270499
சாந்தி(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4722269821

 

 

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

 

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

வணக்கம்,
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இரண்டு கிழமைகளில்! புதிய நிர்வாகம், புதுப் பொலிவு, அதிரடி மாற்றங்கள்!

திகதி: 18 மாசி 2018 (ஞாயிறு)
நேரம்: காலை 10:00
இடம்: KACHHIA SAMAJ (UK) LIMITED, Heather Park Community Centre, MOUNT PLEASANT, WEMBLEY, MIDDLESEX, HA0 1SH.

மேலதிக விபரங்களுக்கு:
http://www.karainagar.org/kwsuk-agm2017-notification2/

நாதன்: 07944232014
நந்தன்: 07737121187
மின்னஞ்சல்: info@karainagar.org

காரைநகர் மக்கள் எவரும் கலந்துகொள்ளலாம் (அங்கத்தவர் மட்டும் வாக்களிக்கலாம்)
அங்கத்துவ வருட சந்தா £60 ஐ அன்றைய தினம் (பணமாக மட்டும்) செலுத்தி அங்கத்தவராக இணையலாம்.

நன்றி,
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கம்

Dear All,

Karai Welfare Society (UK)’s annual general meeting (AGM) in two weeks! NEW COMMITTEE, NEW IDEAS, DRAMATIC CHANGES!

Date: 18th February 2018 (Sunday)
Time: 10:00am
Venue: KACHHIA SAMAJ (UK) LIMITED, Heather Park Community Centre,
MOUNT PLEASANT, WEMBLEY,
MIDDLESEX, HA0 1SH.

For details please visit our website:
http://www.karainagar.org/kwsuk-agm2017-notification2/
Contact :
Nathan: 07944232014
Nanthan: 07737121187
E-mail: info@karainagar.org

All Karainagarians can attend this AGM (but only paid members can vote). If you are not a paid member you can pay by cash (£60 per year) ONLY on the day and join.

Thank you,
Karai Welfare Society (UK)

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 07.02.2018 புதன்கிழமை இரவு நடைபெற்ற திருவூஞ்சல், சுவாமி வீதியுலா வரும் காட்சிகள்!

Video

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 07.02.2018 புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் இன்று 07.02.2018 புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக காட்சிகள்!

Video

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 06.02.2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான கிரியை காணொளி!

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 06.02.2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான கிரியை காட்சிகள்!

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு இன்று 06 .02 .2018 செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் திரு.அ.சாந்தகுமார் (தலைவர்) தலைமையில் நடைபெற்றது.

வித்தியாலய மைதானத்தில் இன்று 06 .02 .2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் திரு.அ.சாந்தகுமார் (தலைவர்) தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.கனகரத்தினம் தயானந்தன் (ஆசிரியர்,தர்மபுரம் மத்திய கல்லூரி-கிளிநொச்சி )(பழைய மாணவன்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.ஆ.குமரேசமூர்த்தி(கோட்டக்கல்வி பணிப்பாளர்-காரைநகர்),திரு.வே.புவனேந்திரராஜா (முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்) அவர்களும்,கௌரவ விருந்தினர்களாக திரு.ந.ஹரிகரன்(உரிமையாளர், K.S.M தொலைத்தொடர்பு நிலையம்),திருமதி.பா.திருநீலகண்டன் (ஓய்வு நிலை கிராம சேவையாளர்) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களையும் வெற்றிக்கேடயங்களையும் யாழ். K.S.M தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளர் திரு.ந.ஹரிகரன் அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தார். அவருக்கான நன்றியினை பாடசாலை சமூகம் விழாவின் முடிவில் கூறியிருந்தனர்.

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

Video

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 05.02.2018 திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான கிரியை காணொளி!

Video

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 05.02.2018 திங்கட்கிழமை பகல் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான கிரியை காணொளி!

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 05.02.2018 திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான கிரியை காட்சிகள்!

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் இன்று 05.02.2018 திங்கட்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான கிரியை காட்சிகள்!

Older posts «