Category Archive: அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா

“தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்  நினைவுப் போட்டியும்.

"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்

 நினைவுப் போட்டியும்.

THIYAGARAJAH

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற கல்வி சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், அவ்விழாவையொட்டிய "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் சூரிக்கில் கடந்த 17.07.2016 இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005  மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

இத் தொகுப்பு எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் மிக மிகக்குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற எமது சபையின் முப்பெரும் விழாவில் கடந்த12.01.2017இல் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 


இந்நூலின் ஆக்கங்களை வாரம் தோறும் இணையதளங்களில் பிரசுரித்து வந்துள்ளோம். இவ் வெளியீட்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஊக்குவிக்கு முகமாக "தியாக நினைவுப் போட்டி"    ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின்  தனிப்பட்ட கல்வி சமூக அரசியல்  வாழ்க்கை தொடர்பாக இத்தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பது வினாக்களடங்கிய கேள்விக் கொத்தினை இணைத்துள்ளோம். 


இக் கேள்விகளுக்கு சரியான பதில்களை 20.09.2017இற்கு முன்பதாக swisskarai2004@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சரியான பதில்களை அனுப்பும் முதல் மூன்றுவெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. ஒன்றுக்குமேற்பட்டவர்கள் சரியான பதில்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில் வெற்றியாளர்கள் திருவுளச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எதிர் வரும்  ஆதிரைத் விழாவின் போது இடம்பெறும் முத்தமிழ் விழாவில் வெற்றியாளர்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.


இதுவரை எல்லா கட்டுரைகளும் இணையதளங்களில் வெளிவந்த நிலையில் போட்டியாளர்களின் வசதிக்காக இத்தொகுப்பின் மென்பிரதியை கேள்விக் கொத்துடன் இணைத்து வெளியிடுகின்றோம் என்பதை அறியத்தருகின்றோம்.
கிழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கொத்து அனைத்தும் "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. போட்டியாளர்கள் கேள்வி இலக்கத்தை எழுதி சரியான முழுமையான விடையை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
உதாரணம்:- கேள்வி இல: 3) அ) காரை நிலா

                                                                     நன்றி


"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                     இங்ஙனம்
                                                                             சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                    செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                       சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                     20. 08. .2017

 

1) சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற கீதத்தை இயற்றியவர் யார்?
   அ) சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி 
   ஆ) கலாபூஷணம். கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
   இ) தமிழருவி த. சிவகுமாரன் 
    ஈ) யோகனந்த அடிகள் ச.பற்குணராஜா

2)    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது?
அ) உலக மரபு 
ஆ) சங்ககால மரபு 
இ) தமிழ் மரபு
ஈ) தெய்வ மரபு

3)    தனிச்சிங்கள  மொழிச் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
அ) 1920   ஆ) 1948 இ) 1960 ஈ) 1956

4)    பிரபலமான கல்வியாளனாகவும் சமூக சேவையாளனாகவும் அரசியற்களம் இறங்கி வெற்றி கண்டவர் யார்?
அ) பிரான்சிஸ் ஐயாவு 
ஆ) தோழர் சுந்தரம் 
இ) கலாநிதி ஆ. தியாகராஜா 
ஈ) தந்தை செல்வா

5)    காரைநகர் இந்துக் கல்லூரியில் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
அ) 17. 04. 2016  
ஆ) 17. 04. 1905 
இ) 17. 04. 1998  
ஈ) 17. 04. 2007

6)    ஆங்கில இந்துப் பாடசாலையென அழைக்கப்பட்ட பாடசாலை எது?
அ) யாழ்ற்றன் கல்லூரி 
ஆ) சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்  
இ) காரைநகர் இந்துக்கல்லூரி 
ஈ) வியாவில் சைவமகா வித்தியாலயம்

7)    கலாநிதி ஆ. தியாகராஜா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியில் எத்தனை ஆண்டுகள் அதிபராக கடமையாற்றினார்?
அ) 25 ஆண்டுகள்  ஆ) 27 ஆண்டுகள்  இ) 30 ஆண்டுகள்  ஈ) 24 ஆண்டுகள்

8)    நாவலர் வழிவந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் யார்?
அ) யோகர் சுவாமிகள் 
ஆ) பேப்பர் சுவாமிகள் 
இ) அருணாசல உபாத்தியார் 
ஈ) சயம்பு உபாத்தியார்

9)    காரை மண் தந்த வித்துவான் பிரான்சிஸ் சேவியர் செல்லையா நடராசா அவர்கள் எழுதிய நூலின் பெயர் யாது?
அ) காரை மான்மியம்  
ஆ) காரை நிலா  
இ) வான் அலையின் வரிகள் 
இ) பொருளாதார அறிவு

10)    இந்துக் கல்லூரியில் முத்துவிழா கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
அ) 1950  ஆ) 1968 இ) 1963 ஈ) 1959

 11) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் வடிவமைத்த அணைக்கட்டின் பெயர் என்ன?
   அ) கரம்பன் அணை ஆ) வேணன் அணை 
   இ) பண்ணைப் பாலம் ஈ) பொன்னாலைப் பாலம்

12) எந்த ஆய்வு நூலைப் பாராட்டி கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களுக்கு 
   புதுடில்லிப் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் வழங்கியது?
        அ) இலங்கையின் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு; 
ஆ) இலங்கைப் பொருளாதார அபிவிருத்தி 
இ) கல்வியில் மாணவர்களின் முன்னேற்றம் 
ஈ) மகான்களின் பெரும் பங்கு

13)  யாருடைய காலத்தில் வியாவில் உப-தபால் நிலையம் திறக்கப்பட்டது?
         அ) சேர்பொன். இராமநாதன்     ஆ) அ. அமிர்தலிங்கம் 
இ) கலாநிதி ஆ.தியாகராஜா     ஈ) வைத்தீஸ்வரக் குருக்கள்

    14) அரசியலில் அடிமட்ட மக்களின் காதல் வாகனம் எது?
         அ) மாட்டுவண்டி ஆ) மோட்டார்வண்டி 
இ) மூச்சக்கரவண்டி  ஈ) துவிச்சக்கரவண்டி

 15) தியாகராசா அவர்களின் பிறந்த திகதி மாதம் ஆண்டு எது?
     அ) 17. 04. 1916   ஆ) 20. 02. 1920  இ) 05. 01. 1907  ஈ) 01. 10. 1910

     16) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் காரை இந்துக் கல்லூரியில் அதிபராக 
      சேவை ஆற்றிய காலப்பகுதி எது?
    அ) 1909 – 1920  ஆ) 1946 – 1970  இ) 1929 – 1972  ஈ) 1979 –  1987

17) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் உதவி பெற்றுக் கல்வி கற்று  மருத்துவர்  ஆகிய சிறுவன் பெயர் யாது?
     அ) சின்னத்தம்பி  ஆ) சிவபாதம்  இ) பெரியசாமி ஈ) செல்லையா

 18) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் 1970ஆம் ஆண்டு எந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்?
      அ) மானிப்பாய் ஆ) யாழ்ப்பாணம் 
      இ) வட்டுக்கோட்டை ஈ) காங்கேசன்துறை

19) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஆண்டு எது?
      அ) 1980 ஆ) 1970 இ) 1981 ஈ) 1998

 20) "அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம" என்ற கவி வரி எவ்விலக்கியத்தில்         உள்ளது?
       அ) ஆத்திசூடி ஆ) திருக்குறள் இ) நாலடியார் ஈ) முதுரை

21) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடம் எது?
     அ) அராலி ஆ) சுழிபுரம் இ) மாவடி ஈ) தாவடி

22) "நேர்மையைத் தத்தெடுத்த ஞானக்கிறுக்கன் நீ அதனால் நேராகவே நடக்கத்    தெரிந்தவன்" எனக் கவிதை எழுதியவர்?
     அ) சைவப்புலவர் பத்மானந்தன் ஆ) புலவர் பூரணம் ஏனாதி நாதன்
     இ) பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை ஈ) வித்துவான் மு. சபாரத்தினம்

23) காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தையென வர்ணிக்கப்படுபவர்?
     அ) பேப்பர் சுவாமிகள் ஆ) அருணாசல உபாத்தியர் 
     இ) கலாநிதி ஆ.தியாகராஜா  ஈ) கணபதிஸ்வரக் குருக்கள்

24) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப்பட்டம் பெற்ற  இடம் எது?
     அ) இலங்கை ஆ) இந்தோனோசியா இ) இந்தியா ஈ) யப்பான்

25) தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூலின் அறிமுகவுரை எழுதியவர் யார்?
     அ) வித்துவான் மு. சபாரத்தினம் ஆ) காரை சுந்தரம் பிள்ளை 
இ) தமிழருவி த. சிவகுமாரன் ஈ) கலாநிதி கென்னடி விஐயரத்தினம்

26) கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின் இறுதி பயணத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்த்தர் யார்?
    அ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஆர்.பிரேமதாஸ 
    ஆ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி 
      இ) சந்திரிக்கா குமாரதுங்கா 
      ஈ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா

27) கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர்பெற்றிருந்த பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்ற திகதி,மாதம்,ஆண்டு எது?
   அ) 17-08-1950  ஆ)  15-09-1970  இ) 04-01-2016 ஈ) 07-10-1987

  28) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் தாய் தந்தையர் நாமம் என்ன?
      அ) ஆறுமுகம் பாக்கியவதி ஆ) ஆறுமுகம் அமிர்தவல்லி 
      இ) ஆறுமுகம் வள்ளியம்மை ஈ) ஆறுமுகம் சின்னப்பிள்ளை

  29 கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் மனைவியாரின் திருநாமம் என்ன?
      அ) மகேஸ்வரி ஆ) உமையாள் இ) விஜயலட்சுமி ஈ) சித்திராதேவி

  30) காரைநகர் இந்துக் கல்லூரியில் எந்த அதிபரது ஓய்வுக்குப் பின்பு கலாநிதி ஆ.தியாகராசா அதிபரானார்?
       அ) சிவதிரு அ. சீதாராமஐயர்  ஆ) திரு.சரவணமுத்து 
       இ) திரு.ஏ.கனகசபை  ஈ) திரு. பொ. வேலுப்பிள்ளை

  31) இலங்கையில் யாரால் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
     அ) சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா ஆ) ஜே.ஆர் .ஜெயவர்த்தனா 
     இ) கலாநிதி ஆ.தியாகராஜா ஈ) திரு. அ. அமிர்தலிங்கம்

  32) காரைநகர் சாமியார் பள்ளிக்கூடம் எத்தனையாம் ஆண்டு மூடப்பட்டது?
     அ) 1919 ஆ) 1927 இ) 1945 ஈ) 1929

  33) 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சஞ்சிகையின் எது?
     அ) சயம்பு ஆ) காரைநகர் இந்துக்கல்லூரி இ) காரைமண் ஈ) கல்விவளர்ச்சி

  34) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் பதவி, உயர்நிலை, என்பவற்றுக்கு காத்திராது ஓய்வு பெற்ற ஆண்டு எது?
     அ) 02.04.1970  ஆ) 24.06.1972 இ) 29.08.1974 ஈ) 20.07.1970

  35) 'எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் ||என்று கூறியவர் யார்?
      அ) பொய்யாப் மொழிப் புலவர் ஆ) யோகர் சுவாமிகள் 
      இ) வள்ளுவப் பெருந்தகை ஈ) செல்லப்பா சுவாமிகள்

  36) காரைநகரையும் யாழ்ப்பாணக்குடா நாட்டையும் இணைக்கும் பொன்னாலைப் பாலத்தை அமைத்தவர் யார்?
         அ) கு.ஆ ஆம்ஸ்ரோங்  ஆ) தியாகச்சுடர் ஆ.தியாகராஜா 
        இ) திரு. நடராசா ஈ) திரு. வேலுப்பிள்ளை

  37) காரைதீவாக இருந்த எம்மூர் காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற தினம்?
     அ) 17.07.1969 ஆ) 19.01.1922 இ) 12.09.1923 ஈ) 24.12.1927

38) காரைநகரில் முன்னைய காலத்தில் துறைமுகமாக இருந்தது எது?
     அ) வேலணை ஆ) ஊர்காவத்துறை இ) கோவளம் ஈ) தம்பாட்டி

 39) "கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் அலைவார்கள்" என்ற கருத்தை கட்டுரைப் போட்டியில் முன் வைத்த மாணவி யார்? 
     அ) செல்வி தீபிகா நவரட்ணம் ஆ) செல்வி டிலானி கார்த்திகேசு 
     இ) செல்வி காரை ரதி குமார் ஈ) செல்வி உமையாள் பாரதி

  40) யாரை காரை மணிவாசகர் சபை "சிவத்தமிழ்ச் செல்வி" என்ற பட்டழம் வழங்கி கௌரவித்தது?
     அ) திருமதி தங்கம்மா நடராசா ஆ) திருமதி பாரதி சந்திரகுமார் 
     இ) திரு. வேலுப்பிள்ளை சேகரன் ஈ) செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

  41) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் தனது 22ஆவது வயதில் பெற்றுக் கொண்ட பட்டம் என்ன?
    அ) M.A பட்டம் ஆ) M:Lit  பட்டம் இ) B .A  பட்டம் ஈ) கலாநிதிப் பட்டம்

 42) 19. 08. 1950ஆம் அன்று யாரால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டது?
      அ) திரு. கனகசபை ஆ) கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி எல்.ஏ.ராஜபக்ஷ 
     இ) திரு.மு.சீவரத்தினம் ஈ) திரு. அ. குலசிங்கம்

  43) காரைநகர் இந்துக் கல்லூரியின் சயம்பு மண்டபம் கீழ் மாடி வகுப்பறை, நூலகம் இவற்றை அமைத்திட கலாநிதியுடன் கூடி ஈடுபட்டவர்?
      அ) திரு.த. அருளையா ஆ) திரு.ச. பெரியதம்பி 
இ) திரு. சு.கலைவாணர் ஈ) திரு.க.கனகசபை

  44) காரைநகரின் வரலாற்று அதிபர் என்று அழைக்கப்பட்டவர்?
      அ) சயம்பு ஆ) அருணாசல உபாத்தியார் 
      இ) திரு. த. தர்மசீலன் ஈ) கலாநிதி ஆ.தியாகராசா

  45) "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகை சான்ற 
 சொற்காத்து சோர்விலான் பெண்" 
என்பதை வள்ளுவப் பெருந்தகை எத்தனையாவது குறளில் மொழிந்துள்ளார்?
 அ) 56 ஆ) 69 இ) 70 ஈ) 55

  46) "கற்பது பெண்களுக்கு ஆபரணம் 
கொம்புக் கல்வைத்த நகை தீராதரணம்" என்பதை கூறியவர்?
      அ) பாரதி  ஆ) பாரதிதாசன்  இ) வள்ளுவர்  ஈ) ஒளவையார்


  47) முதன் முதலில் சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம்?
     அ) 19.03.1911 ஆ) 08.03.1921 இ) 07.03.1975 ஈ) 28.03.1970

  48) கல்வித் தாய் என்று குறிப்பிடப்படுபவர்?
     அ) கீயூரி  ஆ) நெலிசாக்ஸ்  இ) வங்காரி மாதாய்  ஈ) மரியா மொண்டிசோரி

  49) சிவத்திரு. கணபதீஸ்வரக் குருக்களின் புதல்வர்?
அ) ஞானசம்பந்த குருக்கள் ஆ) சீனி ஐயர் 
இ) நாகமுத்துப்புலவர் ஈ) வைத்தீஸ்வரக்குருக்கள்

  50) தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பினை வெளியிட கரம் கொடுத்து உதவியவர்?
      அ) கலைமாடக் கோன் திரு. ச. சிவஞானம். 
ஆ) கல்விக் காருண்யன் திரு. E.S. P.  நாகரத்தினம். 
ஈ) அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன்.

இ) முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன்.

 

காரைநகர் இந்துக் கல்லூரி
வெள்ளிவிழா அதிபர்
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா
M.A., M.Lit, Ph.D
நூற்றாண்டு நினைவுத் தொகுப்பு
(1916 – 2016)

final book thigaraja

மண்ணைக் காத்த மகான்


மண்ணைக் காத்த மகான்

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்   நூற்றாண்டையொட்டி 17.07.2016இல் சூரிக் நகரில் வெளியிட்ட "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரையில் இருந்து

ஆக்கம்: திரு. வி.கேதீஸ்வரதாசன்
காரைநகர்.
 
காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராக 1946ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை25 ஆண்டுகள் சேவையாற்றிய கலாநிதி அ.தியாகராசாவின் 100 ஆவது ஜனன தினம் கடந்த17ஆம் திகதியாகும். தன்னலமற்ற அர்ப்பணிப்பான அயராத சேவையால் எமது மக்களால் போற்றப்படுகின்றது. இவர் தனது பட்டப் படிப்பை இந்தியாவில் கற்ற பொழுது கர்நாடக சங்கதம், உதைபந்தாட்டம், மல்யுத்தம், ஹொக்கி போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

    பன்னாங்கினால் சுவரும் கிடுகினால் கூரையும் அமைந்த ஒன்பது வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்தொகுதிகளை இந்தப் பாடசாலை கொண்டிருந்து. வெளிநாடுகளில் வதியும் எம்மவர்களின் உதவி மிகவும் சொற்பமாக இருந்த காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் சென்று அந்த நாடுகளில் கோலாலம்பூர், ரவுப், மென்ரகாப், செரம்பான், ஈப்போ, பினாங்குவாந்தன் போன்ற பெரிய சிறிய நகரங்களில் பரந்து வாழ்ந்த எமது ஊர் மக்களிடம் சிரமம் கருதாது சென்று நிதியுதவி பெற்று வந்து பாடசாலைக் கட்டடம் பூர்த்தி செய்யப்பட்டு மிக எளிமையாகத் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. அன்னார் எமது மக்களின் கல்வியில் மிகவும் ஆர்வம் காட்டியது மட்டுமன்றி, கால்பந்து, கைப்பந்து, தடகளப் போட்டி, கர்நாடக சங்கீதம்,கலாசாரம், சமயநெறி, ஒழுக்கம் என்பனவற்றிலும் மிகவும் அக்கறை காட்டினார். பாடசாலை மாணவர்களும், பழைய மாணவர்களும் விளையாட்டுக்களிலும் பங்குபற்ற வேண்டும் என்பது இவரது நோக்கமாக இருந்தது. இவரது காலத்தில் கல்லூரியில் கிட்டத் தட்ட ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்த தச்சன் பனை என்னும் இடத்துக்கு நடந்து வந்து கால்பந்து விளையாடுவதும் விளையாட்டுப் போட்டி நடத்துவதும் நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள மைதானத்தின் பக்கத்திலுள்ள காணிகளின் பகுதிகள் வைத்தியசாலை நிலத்தின் ஒரு பகுதி என்பன இவரது முயற்சியால் பெறப்பட்டு நிரவப்பட்டு அமைக்கப்பட்டது.

டயானா நிறுவன விற்பனை வாகனம் கொழும்பிலிருந்து வரும்போது விளையாட்டு ஆசிரியர் விளையாட்டுக் குழுத் தலைவர்களுடன் ஆலோசித்து தேவையான பொருள்களை வாங்குவது இவரது வழக்கம்.

வாழ்நாள் முழுவதும் மது, மாமிசம், வெற்றிலை, புகையிலை முதலியவற்றைத் தவிர்த்தே வாழ்ந்துள்ளார். முற்கோபி, பிழைகளை நேரடியாகக் கண்டிக்கிறவர் என்று சிலர் கூறுவர். எல்லாத் தெய்வங்களிலும் பக்தி கொண்டிருந்தாலும் மணற்காடு முத்துமாரி அம்பாளில் மிகுந்த பக்தி கொண்டவர். சமய சரிததிர திரைப்படங்களைப் பார்க்குமாறு சரித்திர திரைப்படங்களைப் பார்க்குமாறு கூறுவார். தற்போது அத்தகைய படங்கள் வருவதில்லை.
    
காரைநகர் கிழக்குக் கடற்கரையில் வேணன் அணை அமைப்பதற்கு இவரே முன்னோடியாக இருந்தார். இதனால் புற்றரை நன்னீர் என்ற நன்மைகள் உண்டாகும் எனக் கூறினார். பிரதான வீதிகள் ஒழுங்கைகளை அண்மித்த வீட்டு வளவுகளில் நிழல் மரங்கள் நடவேண்டும் என்றும் – இது சுயநலத்துடன் கூடிய பொதுநலம் என்றும் கூறினார். எல்லாச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது இவரது கொள்கை.


காரைநகர் மக்கள் வைத்திருந்த மதிப்பிற்கும் அபிமானத்திற்கும் அவரது வைர விழா ஒரு எடுத்துக்காட்டு, மத்தியானத்துக்கு சிறிது நேரம் செல்ல ஆரம்பமான ஊர்வலம் காரைநகர் பிரதான வீதியைச் சுற்றி கல்லூரி மைதானத்தை அடைய சூரிய அஸ்தமனமாகிவிட்டது. வழிநெடுக மாவிலை
தோரணம், மலர் மாலைகள், நிறைகுடங்கள், கலந்து கொண்டோருக்கு கரைகடந்த உற்சாகம். கல்லூரி மைதானத்தில் இதற்கு முன்பு ஒரு நாளும் இத்துணை மக்கள் கூட்டம் கூடியதில்லை. இனிமேலும் கூடப்போவதும் இல்லை.

இதன் பின்பு இவர் இந்த மக்களின் ஆதரவுடன் தமிழ் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், இந்தக் காலத்துக்கு முன்பிருந்த அரசை சார்நதவர்களுக்குத்தான் உத்தியோகம் நன்மை என்ற நிலை மேலும் தீவிரம் அடைந்து எமது மக்கள் இன்னலுற்றதால் செல்லையா குமாரசூரியருடன் அரசியலில் சேர்ந்து தனது தொகுதி மக்களுக்கு மாத்திரம் அல்லாமல் யாழ்.மாவட்ட வேறு தொகுதி மக்களுக்கும் உத்தியோகம் வேலைவாய்ப்பு அடிப்டை வசதிபோன்ற நன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக ஒருவித இலாபத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. சொத்து, சுகம், வாகன
வசதி தேடவில்லை. புகையிரதத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆணைச் சீட்டுக்களையே பிரயாணத்திற்குப் பயன்படுத்தினார். அவரது மைத்துனாரால் அன்பளிக்கப்பட்ட காரைத்தான் பயன்படுத்தினார். தலைநகரத்தில் அவரது உறைவிடமாகவும் கந்தோராகவும் மைத்துனரின் வீடடின்; ஒரு பகுதியை உபயோகித்தார்.

எல்லோரும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவரான இவர், கல்லூரிக் கூரையில் ஒழுக்கு உண்டான பொழுது தனது வீடடிலிருந்த ஓடுகளைத் தானே கொண்டு வந்து தனது வீட்டிலிருந்த பெட்ரோமாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார். ஏன் சேர் என்று கேட்ட போது வீட்டுக்கு அரிக்கன் விளக்குப் போதும் என்றார். அந்தக் காலத்தில் மலைநாட்டுப் பகுதியிலிருந்து வந்து வீட்டு வேலை செய்யும் சிறுவர்கள் கல்வி கற்கவும் வருவதுண்டு. அப்படிக் கல்வி பயின்ற பெரியசாமி என்னும் மாணவனின் திறமையைக் கண்ட தியாகராசா ஐயா அந்த மாணவன் இருந்த வீடடுக்காரை அணுகி அவரின் கல்வியில் கல்வியில் கூடிய அக்கறை எடுக்கச் செய்து பின்னர் அவரை மருத்துவக் கல்லூரி பிரவேசம் செய்வதற்கு பாடசாலையில் அனுமதி வாங்கிக் கொடுத்து உதவிகள் செய்தமையால், அவர் ஒரு மருத்துவர் ஆனார். அவரது பகுதியைச் சேர்நத இரண்டு ஏழைச் சிறுமிகளுக்கு படிப்புக்காகத்; தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தார் ஏன்று கூறுவார். அன்னார் மிகவும் எளிமையாக வெள்ளை
வேட்டி நஷனல் என்பவற்றையே அணிவார். சரசரவென்று சத்தமிடும் ஒரு செருப்பைத் தான் அணிவார்.

ஒரு முறை உப அதிபராகக் கடமையாற்றிய ஆங்கில ஆசிரியர் என்.சபாரத்தினம் டெயிலி நியூஸ் பத்திரிகையுடன் எங்கள் வகுப்புக்கு வந்தார். அதில் இடைக்கால பிரதமராக இருந்து பதவி விலகிச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டபிள்யூ தஹநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியான சிராவஸ்தியில் இருந்து ஒரு றங் பெட்டியுடன் வீட்டுக்குச் செல்லும் படம் முன் பக்கத்தில் போடப்பட்டிருந்தது.அத்தகைய அப்பழுக்கற்ற மறைந்த பிரதமர் டாக்டர் டபிள்யூ டபிள்யூ தஹநாயக்க போன்றவர்களைப் பின் பற்றித்தான் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களும் அரசியல், கல்வி பயிலும் அவர் தன்னலமற்ற தியாக மனப்பான்மையில் பணியாற்றியவர்.

                                                                        நன்றி

                                                             "ஆளுயர்வே ஊருயர்வு"
                                    "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                           இங்ஙனம்
                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                       சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                         25 – 06 – 2017

13765756_854626341348760_7075660729101349105_o

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நான் கண்ட அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா

நான் கண்ட அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய "தியாகச் சுடர்" 
நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 திருமதி. உஷா செல்வரத்தினம்
 ஓய்வுபெற்ற ஆசிரியர், காரைநகர்.

காரைநகர் இந்துக்கல்லூரி என்று நினைக்கும்போது, எம்மனக்கண்முன் முதற்கண் நிழலாடுபவர் அதிபர் தியாகராசாவே! இந்த உண்மையினை யாரும் மறுப்பதற்கில்லை. வெள்ளை வேட்டியும் நஷனலும் அணிந்து கம்பரமான தோற்றத்துடன் பாடசாலையின் இரு பக்க வளாகத்தினுள் நடமாடித் திரியும் அந்தக் கல்விமானின் தோற்றப் பொலிவு என்றும் எம் மனத்திரையில் விரிந்து செல்லும். காலைப் பிரார்த்தனை மணியொலி, நடராசா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஆராதனை வகுப்பு ஆரம்பம், இந்நிலைமைகளில் அதிபரின் காற்செருப்பொலியினைத் தொடர்நது எங்கும் ஒரே நிசப்தம் சிவபுராணம் ஓர் அட்சரம் கூடப் பிசகு இல்லாமல் கல்விச் செயற்பாடுகளின் மேற் பார்வை ஒழுங்குகளை மேற் கொள்ள முன்னேற்றப்படுத்தும் திட்டம்; பாடசாலை விதிமுறைகள், சட்ட  திட்டங்களை அனுசரிக்கும் மாணவர் குழாம். இதுதான் எமது அதிபர் முகாமைத்துவத்தின் கீழ் காரை இந்துக் கல்லூரியின் கல்விச் சூழல் இத்தகைய கவின் சூழலை ஏற்படுத்தி மாணவ சமுதாயத்தை அறிவு ஆற்றல், திறன் மிக்க நன்னடத்தை கொண்ட உன்னத பாதைக்கு வழிகாட்டி, நெறிப்படுத்திக் கூடவே வெற்றியும் கண்ட சாதனையாளர். எமது அதிபரை எண்ணும் தோறும் எமது உள்ளம் உவகையில் பூரித்து நிற்கின்றது. பெருமிதம் அடைகின்றது. இத்தகையாளரை காலத்தால் அழியாத உன்னத புருஷராக கருதுவதில் என்ன தவறு.

காட்சிக்கு எளியவனாய், எளிமையான தோற்றத்தைக் கொண்ட எமது அதிபர் காந்தீயத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். மகாத்மாவின் கருத்துக்களைப் பேசும் போதும், கற்பிக்கும் போதும் அடிக்கடி கூறுவார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் சமய விழாக்கள் வைபவங்களை பெரியார் சொற்பொழிவுகளை நடத்தி, மாணவர்கள் செல் நெறியினை செம்மைப்படுத்திய உத்தமர். "தொட்டனைத்தூறும் மணற்கேணிமாந்தர்  தம்கற்னைத் தூறும் அறிவு'' என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க மாணவர்கள் பல்துறை சார்ந்த நூல்களை கற்க நூலக வசதி வளங்களை விஸ்தரித்து, அதற்கென தனியானதோர் நூலகப் பொறுப்பாளரை நியமித்து, மாணவர்கள் ஓய்வு நேரங்களை நூலகத்தில் கழிக்க வாய்ப்பளித்தார். வாசிப்புத்திறனின் விருத்திக்கு வழிவகுக்கின்றார்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரதும் கடமையும் தான் வாழும் சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து, அவற்றைப் பூர்த்தி செய்வதே என்ற கல்வியியலாளரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் வரிசையில் எமது அதிபரும் இடம்பிடித்துள்ளார் என்று கூறுவதில் பெருமிதம் அடைகினறேன். பதிகளுக்குள்ளே ஓர் காரைநகர், அக்காரைநகருக்கோ ஓர் இந்துக்கல்லூரி அதனை வழிப்படுத்திய, அதன் பெருமைக்கு உறுதுணையாக விளங்கிய அதிபர்கள் வரிசையில் புதியதோர் சகாப்தத்தை உருவாக்கியவர் எமது அதிபர் எனக் கூறுவது மிகை மொழியாகா.

கல்வியே சமுதாயத்தின் வளர்ச்சிக்கான ஏணிப்படி. எமது காரைநகர் மக்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் ஏற்றம் பெற வேண்டும், காரை அன்னை ஈன்றெடுத்த புதல்விகள் உலகின் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் பெருமை பேசப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை இலட்சியமாகக் கொண்டு, "இந்துக் கல்லூரி" என்னும் கல்விக் கூடத்தினூடாக எதிர்கால நற்பிரஜைகளை சமுதாயத்திற்கு கையளிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கல்விக் குறிக்கோளை தனது மனதில் நிறுத்தி, பாடசாலைத் திட்டங்களை வகுத்து செயற்படுத்து வதில் முனைப்பாக
ஈடுபட்டவர். சாதனைகள் படைத்து மனநிறைவு அடைந்தவர். இன்று எமது கல்லூரி மாணவர்கள் மருத்துவர், பொறியியலாளர், சட்ட வல்லுநர்கள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் என தத்தம் துறைகளில் சிறப்பாக தமக்கும் தம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் சேவையாற்றி வருவது கண்கூடு. நாம் எந்தச் செல்வத்தை இழந்தாலும், கல்விச் செல்வத்தை இழக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணக்கருவினை பெற்றோர் பொதுமக்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் முனைப்புப் பெற்று நிலைபெறுவதற்கு வித்திட்டுச் சென்ற எமததிபர் கலாநிதி தியாகராசாவை மாணவ சமுதாயம் என்றும் மறக்க முடியுமா?

மேலும் பாடசாலை என்பது மாணவர்களின் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்நது, வளர்ப்பதற்கான சிறந்த ஓர் களம் என்ற கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களுள் எமது அதிபர் ஒருவர் எனக் கூறுவதில் என்ன தவறு? இன்று உலகளாவிய ரீதியில் பரந்து, வாழும் எமது நாட்டவர் மத்தியில் காரை இந்துக் கல்லூரி மாணவர்கள் தனக்கென தனித்துவமான சாதனைகளை பல்துறைகளிலும் ஈட்டி வருவதற்கு எமது அதிபரின் பணிக்கான பங்களிப்பு அடித்தளமாக அமைவதை நாம் யாரும் மறுக்க முடியாது.

எமது ஊர் காரைநகர், இன்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிறபதற்கு அடித்தளமாக அமைவது எமது பாடசாலைகளே கல்வி, ஒழுக்கம், கொண்ட பலதுறை சார்ந்த விற்பனர்கள் காரையம்பதி சமுதாயத்திறகு அன்றும் இன்றும் என்றும் கையளிககப்படுவதற்கு. இத்தகைய பெருமைக்குரியவர்கள் அதிபர்கள், ஆசிரியர்களே! அந்த வகையில் இன்று எமது பாடசாலைகள் மாணவ சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றனர் என்றால் தமது முன்னோர்கள் காட்டிய வகுத்த அரும்பணிகளே காரணம் எனக்கூறலாம். இந்த வகையில் பார்க்கும் போது தலைசிறந்த அதிபர், ஆசிரியர்களைக் கொண்ட தலைமுறையினை உருவாக்குவதில் எமது அதிபர் தியாகராசாவின் கல்விப் பணி பெருமளவில் பங்களிப்பினை செலுத்துகின்றது எனத்துணிந்து கூறலாம்.

மேலும் பாடசாலையில் மட்டுமல்ல தமது சமுதாயத்தின் தேவைகளைப் பூர்ததி செய்வதற்கு அதிபர் சேவை மட்டும் போதியதன்று என உணர்ந்த அவர் அரசியல் களத்தில் புகுந்து வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினராக (1970) தெரிவு செய்யப்பட்டார். தமது தொகுதி வாழ் மக்களின் தேவைகளை அவ்வப்போது, கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிய அவர், குறிப்பாக காரைநகர் மக்களுக்கென மருத்துவ வசதிகளை அங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வைத்தியசாலை விஸ்தரிப்பு, மத்திய தபாற்கந்தோர், குடிநீர் வசதிக்கான குழாய்நீர் விநியோகம் மின்சாரம், படித்த இளைஞர் வேலைவாய்ப்பு இன்னோரன்ன வசதிகளை பெற்றுக்கொடுத்ததோடு அமையாது, ''ஈழத்துச் சிதம்பரம்'' என அழைக்கப்படும் சிவன்கோயில் அமைந்த சூழல் எவ்விதத்திலும் புனிதத்துவம் கெடக்கூடாது என்பதற்காக கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கான உல்லாச விடுதி கட்டக்கூடாது என்பதற்கு ஆணிததரமாக தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தவர்.

எனவே ஒருங்கு சேர்த்து நோக்குமிடத்து தலைசிறந்த கல்விமான்களுள் ஒருவரான எமது அதிபர் கலாநிதி ஆ.தியாகராசாவை ஈன்றெடுத்த காரையம்பதி, இன்று தலைநிமிர்ந்து, நிற்பதற்கு தனது வாழ்க்கைப் பயணத்தில் இறுதி மூச்சு வரை அரும்பாடுபட்டுழைத்த அவர்தம் பணியினை நினைவுகூரும் முகமாக வெளியிடப்படும் இம்மலர் வெளியீட்டுக் குழுவினரை உளமாரப் பாராட்டி, நிறைவு செய்கின்றேன்.

                                                                     நன்றி

                                               "ஆளுயர்வே ஊருயர்வு"
                            "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

                                                                                                                இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                              செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                              11 – 05 – 2017

 

                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“தியாகதீபம் தியாகராசா”

"தியாகதீபம் தியாகராசா"

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

ந.கணேசமூர்த்தி
ஆசிரியர், ஊடகவியலாளர்
கல்லூரி வீதி
காரைநகர்.

இலங்கைத் திருநாட்டின் வடபுலத்து தலைநகராம் யாழ்ப்பாணத்திற்கு மேற்கே அமைந்துள்ள தீவுக்கூட்டங்களில் தரைவழித் தொடர்பால் நகராகத் திகழ்வது சைவமும் தமிழும் தழைத்து கற்றிந்த சான்றோர் வாழும் புண்ணிய பூமியான காரைநகர் ஆகும். இங்கு வாழ்ந்து சாதனை புரிந்த விரல் விட்டு எண்ணக்கூடிய தேசம் போற்றும் கல்வியியலாளர் வரிசையில் முன்னணியில் திகழும் ஸ்ரீமான் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களை யாரும் மறந்துவிட முடியாது.


ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளின் முற்;பகுதியில் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியர் சேவையில் இணைந்த அமரர் தியாகராசா ஐந்து ஆண்டுகளில் அக் கல்லூரியின் அதிபரானார். கால் நூற்றாண்டுகாலம் அதிபராக சேவையாற்றி காரைநகரில் மிகப்பெரிய கல்லூரி ஒன்றை கட்டி வளர்த்து ஆளுமையும் ஆற்றலும் மிக்க மாணவர் பரம்பரை ஒன்றின் சொந்தக்காரனாகத் திகழ்ந்தவர் தியாகராசா.


இந்தியாவில் அடையாற்றில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்ற இவர் தனது கல்வி அறிவையும் ஆற்றலையும் கல்லூரி வளர்ச்சிக்காக உச்ச நிலையில் பயன்படுத்தியவர் என்பதை மறுதலிக்க முடியாது. தான் சொந்தமாக நல்ல வீடு கட்டி வசதியாக வாழவேண்டும் என்பதற்காகவே அதிபர் பதவிக்காக அங்கலாய்த்துக் கொண்டு திரியும் இன்றைய நம்மவர்கள் சிலரின் மத்தியில், பாடசாலையில் மழை ஒழுக்கினால் வகுப்பறை நனைகிறதே என்று தனது வீட்டில் இருந்த ஓடுகளைக் கழற்றி வந்து பாடசாலைக் கட்டடத்திற்குப் போட்டவர். தாய் தந்தையர் சூட்டிய பெயருக்கு ஏற்ப தியாகம் செய்து வாழ்;ந்தவர் தியாகர். 


    பிரித்தானியர் இலங்கையின் அரசியல் யாப்பை வகுத்தபோது காரைநகரில் இருந்து கொழும்பு சென்று ஆலோசனைகளை முன்வைத்தவர். இலங்கையின் பெரும்பான்மை இனத்தவரின் அடக்கு முறைகளில்  இருந்து மீள்வதற்கு "ஈழ சுயராஜ்சியமே" ஒரே வழி என்பதை 1956இல் முதன் முதலில் முன்மொழிந்த தீர்க்கதரிசனம் மிக்கவர். எப்போதும் தனது கிராமம் முன்னேற வேண்டும், மக்கள் கஷ்டமின்றி வாழவேண்டும் என்ற சமூக சிந்தனை நிறைந்தவராக விளங்கிய தியாகராசா வட்டுக்கோட்டைத் தொகுதி வாழ் மக்களின் மனம் கவர்ந்த தொண்டனாக  அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்று 1970இல் தமிழரசுக்கட்சியின் தானைத் தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் தேர்தலில் போட்டியிட்டு எவரும் எதிர்பாரத வகையில் வெற்றி பெற்றார்.


    பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் தனது தொகுதியில் படித்த அனைவருக்கும் கட்சி பேதமின்றி வேலைவாய்ப்பு வழங்கினார். வீதி திருத்தினார், மின்சாரம் கொண்டு வந்தார், வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தார். அவர் செய்த பணிகள் ஏராளம். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமர்ப்பணம்.


    1972இல் நடைமுறைக்கு வந்த இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் புதிய அரசியல் யாப்பை அங்கீகரித்த காரணத்தினால் தமிழ் இன உளவாளர்களால்  "துரோகி" என்று தூற்றப்பட்டார். இன்றைய வாய்ப்பேச்சு வல்லவர்களான அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் தன்னலமற்ற மக்கள் சேவகனாகத் திகழ்ந்த தியாகராசா 1980களின் முற்பகுதியில் இலங்கை அரசு அறிமுகஞ் செய்த மாவட்டசபை என்ற மாயமானின் வலையில் சிக்கி ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளனாக தேர்தல் களத்தில் நின்று பிரச்சார மேடை அருகே தமிழீழத் தீவிரவாதி ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு நெஞ்சிலே குண்டு தாங்கி மரணத்தைத் தழுவிக் கொண்டார்.


தமிழ்த்தேசியவாதிகளின் அணியில் நின்று தியாகராசாவின் துரோக அரசியலைக் கண்டித்து தூற்றித் திரிந்தவன் என்ற வகையில் அவரது அந்திம காலத்தில் "நடுநிலை ஊடகவியலாளனாக" இறுதி ஒரு சில நாட்கள் அவரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்து அவரது உயர்ந்த உள்ளத்தை உணர்ந்து கொண்டேன். இறுதியாக மாவடி கண்ணகி அம்மன் கோவிலடி தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக க.க. அவரது ஜீப் வண்டியில் சென்று மக்கள் எல்லோரும் "இம்முறை உங்களுக்குத் தான் ஐயா எங்கள் 'வோட்டு' " என்று ஒருமித்த குரலில் கூற துப்பாக்கிதாரி உங்களுக்குத் தான் எனது 'வேட்டு' என்று கூறி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். "ஐயோ அம்மா சுட்டு விட்டார்கள்" என்ற அவரது இறுதி வார்த்தையைத் தான் என்னால் கேட்க முடிந்தது. மறுநாள் யாழ் அரசினர் போதனா வைத்தியசாலையில் அவரது உயிர் பிரிந்தது.
    

அவரது இறுதிக்கிரியைகளில் இலங்கைப் பிரதம மந்திரி ஆர். பிரேமதாஸ உட்பட அமைச்சர்கள் சிலரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். காரைநகர் வரலாறு காணாத சனசமுத்திரத்தில் அவரது பூதவுடல் காரைநகரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வலந்தலை கடற்கரை வெளியில் விசேடமாக அமைக்கப்பட்ட சிதையில் தீயுடன் சங்கமமாகியது.


அமரர். ஆ. தியாகராசா மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் மறைந்தோடி விட்டபோதிலும் அவரது மாணவர்கள், ஆதரவாளர்கள் மனங்களில் அவர் என்றுமே மறையாமல் நிலைத்து நிற்கிறார். அவரைப் போன்ற தியாகி  காரைநகரில் இதுவரை தோன்றியதில்லை. இனியும் தோன்றப் போவதில்லை.

வாழ்க தியாகராசா நாமம்!
வளர்க அவர் தம்பணி!


நன்றி

"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                      இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                      செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                           மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                     03 – 06 – 2017

 

 

 

 

 

சொல்! செயல்! இரண்டிலும் வாழ்ந்து காட்டிய தியாகச்சுடர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா

சொல்! செயல்! இரண்டிலும் வாழ்ந்து காட்டிய

 தியாகச்சுடர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா 

Karai Thayaparan

 

 

 


எமது பார்வையில் உயர்திரு கலாநிதி ஆ தியாகராசாவின் வாழ்க்கைப் பணி பற்றி குறிப்பிடுவதில் மிகப் பெரிய பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிறந்த சமுதாய பேரறிஞன் என சட்டெனச் சொல்லித் தொடங்கலாம். காரணம் சமூக சேவை என்பது கற்றுக் கொள்ளாமல் அனுபவத்திலும் வரமுடியும் ஆனால் திட்டமிட்ட சமூகப்பார்வை சமூகக் கொள்கை என்பது கற்றுக் கொண்டால் மட்டுமே வரமுடியும் என்பதற்கு கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் ஒர் சிறந்த ஒர் உதாரணம்.

அன்னார் இலங்கைத் திருநாட்டின் வடபால் அமைந்த கற்பக தருக்கள் நிறைந்த சைவமும் தமிழும் ஒங்கி வருகின்ற காரையம்பதியிலே வாழ்ந்து எமது வட்டுக்கோட்டை தொகுதிக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவை அளப்பெரியதும் தன்னலமற்றதும் என்றால் அது மிகையாகதது. இப்படிப்பட்ட தியாகச் சுடர் 1981 ம் ஆண்டு அணைந்தது. இல்லை. அணைக்கப்பட்டது. 

ஓர் உன்னதமான நிலையை ஒரு தேசம் பெற வேண்டுமானால் முதலில் கடின உழைப்பு அவசியம். பின்பு அதற்கான கல்வித் தகைமை, அனுபவம், பயிற்சி, இப்படி முன்பின் ஆன சரித்திர வளர்ச்சி எல்லாம் இணைந்து கொண்டால் மட்டுமே அந்த ஊர் அது சார்ந்த தேசம் உண்மையான உச்சத்தை, ஒரு வளர்ச்சியை எட்டமுடியும். பக்கத் துணை இல்லாத இந்த வளர்ச்சிக்கு பல துறைகளும் துணை நின்றால் அது சிகரத்தை எட்ட முடியும். இவற்றை எல்லாம் ஒரே நாளிலோ ஒரு நோடிப் பொழுதிலோ பெறமுடியாது. நீண்ட நெடிய பயணம். கல்லும் முள்ளும் நிறைந்த அந்தப் பாதையில் பயணித்துப் பெற வேண்டிய வளர்ச்சியை, விடுதலையை எப்படி ஒரு சிறு காலத்துக்குள் கொண்டு வரமுடியும்? இது அனைவரும் சரியாக சிந்தித்து செயற்பட வேண்டிய விடயம். ஒற்றுமை என்பதும் அரசியற் கருத்து வேறுபாடுகளற்ற நிலமை என்பதும் பயத்தினாலோ அல்லது பணத்தினாலோ பெறமுடியாது. சரியான  புரிந்துணர்வு மற்றும் ஆரோக்கியமான முன்னேற்றத்தினால் மட்டுமே பெற முடியும். இதை மனதிற் கொண்டு செயற்பட்டவர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் ஆவர்.

இவற்றைச் சரியாக உணர்ந்த பொருளியல் ஆசான் ஆ.தியாகராசா அவர்கள். அவர் சுயநலமானவர் என்றால் மலேசியாவிலே சிறப்புற வாழ்ந்திருக்க முடியும். ஊருக்குள் வந்து ஆசிரியர் வேலை பார்த்திருக்கத் தேவையில்லை. பின்பு கொஞ்சம் முன் வந்து பாராளுமன்ற உறுப்பினராகக் கூட வந்திருக்கத் தேவையில்லை. மக்கள் நலம் ஒன்றே உயரியது என்பதை சிந்தனையால் கண்டு கெண்டதால் இவர் இறுதி வரை அது விடயமாகவே செயல்பட்டார். சிலருடைய உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவினால் ஒரு தலைசிறந்த சேவையாரை நாம் இழந்தோம். 

கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் தான் கற்றுக் கொண்ட கல்வியை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். மிக எளிமையாக நடந்து கொள்ளும் அவர் எந்தக் கால கட்டத்திலும் தன்னலம் கொண்டு செயல்படவில்லை. இவ்வுண்மையை அவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களிடமிருந்து அறிந்து கொள்ளமுடியும். அது மட்டுமல்ல அவர் மூலமாக வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட அன்றைய இளைஞர்கள் இன்றைய முதியோர்களாக உள்ளவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும்.

பொருளியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் நல்ல இறைபக்தி கொண்டவர். பல துறைகளையும் ரசித்துப் பார்க்கும் கலைஞன். பொருளாதார வளர்ச்சியினாலேயே ஒரு சமூகம் தனித்து வாழும் தகுதியை பெற்றுவிடுகிறது  என்ற இறுக்கமான கொள்கை கொண்டவர். சோவியத் யூனியனை உருவாக்கிய புரட்சித் தலைவர் வளதிமிர் லெனினுடைய கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது தன்னலமற்ற சமூக சேவைக்கான பயணத்தை இறுதி வரை மனம் தளராது உறுதியாக மேற் கொண்டார். மாவடி அரசியல் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது உயிர்பறிக்கப் பட்டமை அன்னாரது தளாராத கொள்கையை வெளிக் காட்டுகிறது.

நுனிப்புல் மேய்ந்த, நல்ல தலைமையின் கீழ் பயிற்சி பெறாத இளைஞர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றே எம்மவர் எம்மை அழிக்கும் காலம் தொடங்கி விட்டது. அன்று அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டியவர்கள் இன்று அரச கட்டிலில் சுகபோகம் அனுபவித்துக் கொண்டு மக்கள் நலம், மக்கள் நலம் என்று கூக்குரல் போடுகிறார்கள். வேடிக்கை உலகம். உண்மை சொல்பவர்களை அழித்துவிடுகிறார்கள். பொய் சொல்பவர்களை மாலை போட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிறார்கள். இதுதான்  விந்தை உலகம். வேடிக்கை மனிதர்கள்.

அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் 
பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் 
வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும் 
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
                                                               –    நாலடியார் 172

அற நெறிகளை அறிந்து கொள்க. காலனுக்கு அஞ்சுக. அறியாதவர்கள் சொல்லும் தீய சொற்களைச் சகித்துக் கொள்க. வஞ்சகமென்பது உங்கள் நெஞ்சத்தை நெருங்காமல் காத்துக் கொள்க. தீய செயல் புரிவோருடைய நட்பை வெறுத்து ஒதுக்குக. எப்போதும் நல்லோர் கூறும் அறிவுரைகளையும் அறவுரைகளையும் கேட்டுத் தெளிவு பெறுக. நன்றி

                                                                                        தம்பையா தயாபரன் B.A
                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தலைவர்
                                                                               ஆசிரியர், காரை ஆதித்தியன்                                                                                                         (காலாண்டு செய்தி இதழ்)

தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை

       தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை                                        

                                       தீவுக்கு விலாசம் தேடித் தந்த தியாகன்

தீவுக்கு விலாசம் தேடித் தந்த தியாகன் நீ ! 
நீ தேடித் தந்த விலாசத்தை தொலைத்ததால் 
அறிவுத் தபால்கள் மிக அரிதாகவே ஊருக்குள் வருகின்றன ! 
படித்தவன் என்பதனால் பதவிகள் உன்னிடம் பாடம் கேட்டன
வந்து பல்லிளித்த பணம் பல்லுடைபட்டுப் போய் பதுங்கிக் கொண்டது ! 
வியாபரிகள் விளைந்த ஊரில் பிறந்தாலும் 
அரசியலில் வியாபாரமும் வியாபாரத்தில் அரசியலும் 
உனக்கு கடைசிவரை விளங்கவேயில்லை 
அதனால் நீ விரித்த சந்தையில் 
வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கினாய் !
நேர்மையைத் தத்தெடுத்த ஞானக் கிறுக்கன் நீ 
அதனால் நேராகவே நடக்கத் தெரிந்தவன்! 
உன் நடையை ஞானம் உள்ளவர்கள் மட்டுமே விளங்கிக் கொண்டனர் ! 
ஞானத்தை முறுக்கிய உன் முஷ்டிக்குள் 
முடக்கிக் கொண்டதால் முட்டாள்கள் 
பல சமயங்களில் உன்னிடம் மூக்குடைபட்டனர் !
அபிவிருத்தி அரசியல் விளக்கேற்றி 
அரசியல் அபிவிருத்தி வெளிச்சம் பெறலாம் 
என்பதை விளங்காத வீணர்கள்
 அன்று விளக்கை உடைத்ததால் 
இன்றும் விடியா இருளுக்குள்
வெளிச்சத்தை தேடுகிறோம் !

                                         ஆக்கியோன்: சைவப்புலவர் பத்மானந்தன்

                                                                          நன்றி

                                                        "ஆளுயர்வே ஊருயர்வு"
                                    "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

                             

                                                                                                       இங்ஙனம்
                                                                                 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                       25 – 05 – 2017

 

Publikation25.05.2017

பிறந்த மண்ணை பீடுற வைத்த பிதாமகன்

பிறந்த மண்ணை பீடுற வைத்த பிதாமகன்

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 13680844_1661904844133584_4160023901034229259_n[1]
 

 

 

 

 

தமிழருவி த.சிவகுமாரன்
    B.A.(Hons)

 "பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின்
 அருமை உடைய செயல்"

மேற்சொன்ன குறளுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் வாழ்ந்தவர் எம்.பி. தியாகர் ஐயா அவர்களின் கல்வித் தகைமைகள் மிகப்பலவாயினும் M.A.என்பது பலகாலம் அவருடன் ஒட்டி நினறது. கல்வியில் B.A, M.A., M.Lit., Ph.D என பெருமைகள் பல பெற்றவர். எந்த வயதிலும் ஒருவர்; கற்றுப் பட்டம் பெறலாம். கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என வாழ்ந்தும் காட்டியவர். ஓய்வு பெற்ற பின்னரே கலாநிதி (Ph.னு) பட்டம் பெற்றும் காட்டியவர்.
"யாதானும் நாராமல் ஊராமல் என்னொருவன்
 சாந்துணையும் கல்லாதவரது" என்ற குறளுக்கும் இலக்கணம் தந்தவர், எங்கள் தியாகர்.

அரசியலில் அடிமட்ட மக்களின் காதல் வாகனமாகிய சைக்கிளில் பாராளுமன்றம் போனவர், அதனால் MP.அவரது தேஜஸ், பருவப்பொலிவு, மொழிப்புலமை, ஊரை உயர்த்திய உத்தமனுக்கு கருவிகளாக வாய்த்தன. எனது தந்தையார் அவரிடம் கற்ற காலத்தை அடிக்கடி பெருமையோடு நினைவுகூர்நது சிலாகிப்பதை சிறுவயது முதலே அடிக்கடி கேட்டு வந்தவன் நான். கல்வி கற்பதையும் கற்பிப்பதையும் உலகுக்கு முன்னுதாரணமாக்கிய மகா உபாத்தியாயர் அவர்.

17.04.1916 இல் அவதரித்து 1981 தான் வாழ்ந்த 65 வயதுள் காரைநகரில் 64 கலைகளையும் மிளிர வைத்த பிதாமகன், மகான் அவர். கோவளம் பேப்பர், சுவாமிகளிடம் பெற்ற அருளாசி அவரை ஆன்மீகத்திலும் உயர்த்தியது. 29 வருடங்களாக காரைநகர் இந்துக் கல்லூரியை கல்வி உலகில் தலை நிமிர அயராது பணியாற்றியவர். வெள்ளிவிழா அதிபராக வரலாற்று அதிபராக விளங்கிய ஒருவர் இவ்வாறு அமைபவர்கள் வெகு சிலரே.

"அருமை உடைத்தன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சிதரும்" – இக்குறள் படி முயற்சிக்கு வடிவம் தந்தவர், போக்குவரத்துச் சேவை, வசதி, வேணன் அணைக்கட்டு என காரைநகரை மிளிரச் செய்தவர்.

1981இன் ஆரம்பத்தில் ஒரு நாள் காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் கோவளம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தவர்களாகிய நாம் கால்பந்து விளையாடி நிற்கையில் எப்படி வந்தார் என்று தெரியவில்லை, மிக வேகமாக மைதானத்தின் நடுவில் தோன்றிய எம்.பி.தியாகராசா அவர்கள். காரைநகர் எல்லாவிதத்திலும் முன்னேற வேண்டும். விளையாட்டுத் துறையிலும் முன்னேற வேண்டும். நல்ல விளையாட்டு வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி பெறச் செய்யப்போகிறேன் என்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன. அவர் செய்திருப்பார். இருந்திருந்தால், செய்திருப்பார். ஆனால் இருக்க விடவிலலையே. "ஐயா எங்கள் வோட்டு உங்களுக்கு"
என்று எல்லோரும் சொல்ல ஒருவன் "ஐயா எங்கள் வோட்டு உங்களுக்கு என்று மறைக்க முடியாத மாணிக்கத்தை மறக்க முடியாத மகோன்னதத்தை மறைத்தானே! மண்ணைப் பீடுற வைத்த மகான் மறைந்தமை நாம் செய்த தவக்குறைவேயாம்.

                                                               நன்றி

                                                 "ஆளுயர்வே ஊருயர்வு"
                        "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                     இங்ஙனம்
                                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                   22 – 05 – 2017

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும் நினைவுப் போட்டியும்.

"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்
 நினைவுப் போட்டியும்.

New Microsoft Office Word Document0001

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற ஆசிரிய சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் கடந்த 17.07.2016இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத் தொகுப்பு எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் மிக மிகக் குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற எமது சபையின் முப்பெரும் விழாவில் கடந்த 12.01.2017இல் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நூலின் ஆக்கங்களை வாரம் தோறும் இணைய தளங்களில் பிரசுரித்து வருகின்றோம். இவ் வெளியீட்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஊக்குவிக்கு முகமாக 'தியாக நினைவுப் போட்டி'    ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அமரர் கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின்  தனிப்பட்ட சமூக அரசியல்  வாழ்க்கை தொடர்பாக இந்நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பது வினாக்களடங்கிய கேள்விக் கொத்தினை இணையதளத்தில் 17.07.2017இல் வெளியிட இருக்கின்றோம். 

இக் கேள்விகளுக்கு சரியான பதில்களை 17.08.2017 இற்கு முன்பதாக swisskarai2004@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சரியான பதில்களை அனுப்பும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான பதில்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில் வெற்றியாளர்கள் திருவுளச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர் வரும் ஆதிரைத் திருவிழாவின் போது இடம்பெறும் முப்பெரும் விழாவில் வெகுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர், கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களால் வழங்கப்பட்ட இந்நூலிற்கான அறிமுகம் இத்துடன் இணைக்கப்படுகின்றது.

இதுவரை எட்டு கட்டுரைகள் இணைய தளங்களில் வெளிவந்த நிலையில் போட்டியாளர்களின் வசதிக்காக துரித இடைவெளியில் இத்தொகுப்பின் மிகுதி ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.  என்பதை அறியத்தருகின்றோம்.

 

PHOTO

 

 

 

 

 

 

                                                       அறிமுகம்

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், கல்வி, பொருளாதாரம், சமூக சேவைகள் ஆகிய தளங்களில் அன்னாரது பணிகள் பற்றிய தகவல்களையும் தாங்கி இந்நூல் உங்களிடம் வருகிறது. அறிமுகவுரை அன்னாரது சமகாலத்தைய சர்வதேச, பிராந்திய மற்றும் இலங்கையின் சிங்கள, தமிழ்த் தேசிய வரலாற்றுச் சூழல்களை விவரிக்கிறது. அதன் வாயிலாக நம் சமூகத்தின் வளர்ச்சியில் அன்னாரின் பங்களிப்பையும் வகிபாகத்தையும் விளக்க முற்படுகிறது.

தற்கால வரலாற்றின் தறிகெட்ட செல்நெறி

வரலாறு என்பது இன்று சமுத்திரத்தை அங்குலக் கணக்கில் அளந்து சொல்வது போல் ஆகிவிட்டது. கோடனுகோடி வகைகளாகப் பரந்து விரிந்த பிரபஞ்சம் மனித அறிவியலின் ஆணைக்குள் கட்டுண்டு சுருங்கிக் கிடப்பது போல் தோற்ற மயக்கம் தெரிகிறது. அல்லது அப்படிக் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான துரித அறிவியற் பிரயத்தனங்களின் தோள்களில் வசதியாக ஏறி நின்றபடி மூலதனம் என்ற பெரும்பூதம் பூகோள அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றைப் பந்தாடிக் கொண்டிருக்கிறது. மேற்குலகின் ஒற்றை உலகப் பார்வையே சரியென்றுபடும் வகையில் ஒட்டுமொத்த மனித அறிவுத்தொகுதியே மாற்றப்பட்டிருக்கிறது. மனித உணர்வுகள், புரிதல்கள், தலையீடுகளுக்கு அப்பாற்பட்ட இராட்சத இயந்திரமாக மூலதனம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இயற்கையின் ஆரோக்கியமான பன்முகம் பூஞ்சை பிடித்துக் கிடக்கிறது. மறுதலையில் மூலதனம் போதிக்கும் ஒற்றைப் பண்பாட்டு ஏகாந்தவாதம் பூமியின் முகத்தில் தேமலாய், போலி முலாமாய் மினுமினுத்துப் படர்கிறது. குறிச்சித் தனித்துவம், வட்டாரம், பிரதேசம், குறுநிலம், மாவட்டம், மாகாணம், மாநிலம், நாடு ஆகிய சொற்கள் வழக்கிழந்து, கருத்திழந்து, முக்கியத்துவமிழந்து போய்க்கொண்டிருக்கின்றன. காலமும் இடமும் ஓடுங்கி பிரமாண்டமான அதிகாரத்தின் பிடியில் மூச்சுத் திணறி நிற்கின்றன. காலத்தையும் இடத்தையும் சார்ந்ததுதான் வரலாறு. மூலதனம் இன்று இம்மூன்றையும் தீர்மானிக்கும் தட்டிக் கேட்க ஆளில்லாத தண்டப் பிரசண்டனாக உருவெடுத்து நிற்கிறது.

இவற்றை எதிர்கொள்ளும் முயற்சிகள்தான் நமது ஊர்ச் சங்கங்களும், பண்பாட்டு நிகழ்வுகளும், ஒன்று கூடல்களும், எமது சமூகத்தின் முன்னாள் தலைவர்களை நினைவு கூர்வதும், வரலாற்றை மீள் கட்டமைப்பதும், புத்தக வெளியீடுகளும் என விரிவான வடிவம் பெறுகின்றன. அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் உலகப் பெருந்தலைவர் அல்ல. ஆனால் தான் சார்ந்த சமூகத்தின் பல தேவைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்த மகான். உண்மையிலேயே சிறியதான ஆனால் பிரமாண்டமாகத் தோன்றுபவற்றைவிடவும் சிறிதாகத் தோன்றும் பிரமாண்டங்களே இயற்கையின் வரப்பிரசாதங்கள். அன்னாரின் எல்லை ஊர், மாவட்டம் என்பன. ஆனால் அவரது ஆளுமையும் சேவையின் வீச்சும் மிகப் பிரமாண்டமானது. 

கடந்த மூன்றரைத் தசாப்தங்களுக்கு முன்புதான்  உலக ஒழுங்கில் எதிர்பாராத மாற்றங்கள் ஆர்முடுகல் வேகத்தில் உந்தப்பெற்றன. அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் படுகொலை 1981இல்  நிகழ்ந்தது வெறும் விபத்தோ அல்லது பலர் கூறுவது போல தனிநபர் பயங்கரவாதம்மட்டுமோ அல்ல. வரலாற்றின் புறக்காரணிகளே இத்தகைய துயரச் சம்பவங்களின் பின்புலமாகும் என்பது அறிவியலாளர்களின் ஏற்புடைய கருத்தாகும். சர்வதேச, பிராந்திய, சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறுகளின் பின்னணியை விளங்கிக் கொள்கிறபோதுதான் அன்னாரின் வாழ்க்கையும் நம் சமூக மேம்பாட்டில் அவரது பங்களிப்பையும் நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது சமகாலத்தைய (சர்வதேச, பிராந்திய, தேசிய அரசியல்) வரலாற்றுப் பின்புலம்.

1970 களின் இறுதியில் தென்னாசியப் பிராந்தியத்தில் மையங்கொண்ட சர்வதேச நெருக்கடி முக்கியமானது. மேற்கத்தைய திறந்த சந்தைப் பொருளாதார நலன்களுக்கும் அதற்கெதிரான இந்தியத் துணைக்கண்டத்தின் பிராந்தியப் பொருளாதார, தந்திரோபாய, பாதுகாப்பு நலன்களுக்குமான முறுகலை இங்கு முக்கியமான பின்புலமாகக் கருதுகிறேன். 

ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்திய இறக்குமதியே முதன்மையானது. போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு, சர்வதேச அரசியல் நிலைப்பாடு என பல வழிகளிலும் இந்திய- இலங்கை உறவு இறுக்கமாக இருந்தது. இந்தியாவிலும்; இலங்கையிலும் வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் நுட்ப சாதனங்கள் பெரிதும் அறிமுகமில்லாத காலம். 

மேற்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தோன்றிய இயந்திர மயப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் இந்தியாவில் 1960 களில் பெருமுனைப்புடன் உந்தப்பெறுகிறது. இதே காலகட்டத்திற்தான் இந்தோ- சீன யுத்தமும், இந்தோ- பாகிஸ்த்தான் யுத்தமும் இடம் பெறுகின்றன. அவற்றில் கணிசமான உளவுத் தகவல் சறுக்கல்கள் இந்தியத்தரப்பில் ஏற்படுகின்றன. இதன் விளைவாக இந்திய முதலாளித்துவத்தின் நேரடிப் பொருளாதார நலன்களைப் பேணவும், அதன் தேசியச் சந்தையைக் காக்கவும் சர்வதேசத் தரத்திலான தேசிய உளவுப் பிரிவான 'றோ' 1968 இல் இந்திரா அம்மையாரால் உருவாக்கப்படுகிறது. 

இந்தியத் துணைக்கண்டத்தில் இயந்திரமயப்படுத்தப்பட்ட, நகரமயமாக்கலுடன் கூடிய இந்திய சுதேசிய முதலாளித்துவப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இந்திரா காந்தி அம்மையாரின் இறுக்கமான கொள்கை. கிராமியப் பொருளாதாரம் பேசிய காந்தி அடிகளின் காலத்திலிருந்தே மறைமுகமாக இந்தியப் பெருந்தேசிய முதலாளிகளான டாட்டா, பிர்லா, சிந்துஜா, என விரல் விட்டு எண்ணக் கூடிய ஆதிக்க சமூகக் குடும்பங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா ஆட்சிக்காலம் 1977 ம் ஆண்டு நிறைவுறும் வரை இந்திய – இலங்கையின் உறவு இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார,அரசியற் தேனிலவுக் காலமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தனா அதிரடியாக இந்தியாவுடனான மேற்கூறிய உறவுகளை நிறுத்தி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் நலம் சார்ந்த திறந்த சர்வதேசப் பொருளாதாரத்தைப் பின்பற்றினார். ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முன்னுதாரணமான பொருளாதார வெற்றிகளே அவரை இவ்வழிக்குத் தூண்டின.

பரப்பளவில் இலங்கை சிறயதெனினும் இந்தியச் சந்தை, அதன் சர்வதேச அரசியற் சமநிலை சார்ந்த நலன்கள் ஆகியன தொடர்பில் இலங்கை முக்கியமானது. இலங்கையின் அமைவிடம் காரணமாக அது இந்தியப் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்த நிலையில் இருந்தது. இன்னும் இருக்கிறது. இந்நிலையில் ஜெயவர்த்தனாவின் அரசியற் பொருளாதாரச் செல்நெறிகளின் சடுதியான திருப்பம் இந்திரா அம்மையாரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய சுதேசப் பெருமுதலாளிகளையும் குறிப்பாக அவர்களுடைய நலன் பேணும் "றோ" வையும் எரிச்சலூட்டியது. இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. 

இதே நேரம் கியூப, வியட்னாமியப் புரட்சிகளின் உந்தலில் உலகளவிலும் குறிப்பாகத் தென்னாசியாவிலும் 1960 களில் வளர்முகம் கண்ட பொதுவுடமைச் சித்தாந்தம் 1970 களில் தேய்நிலையடைந்தது, மாற்றாக 'தேசியவாதம்' மார்க்சிய முற்போக்கு முகமூடியோடு மேற்படி அரங்கை ஆக்கிரமித்தது. பிராந்திய வல்லரசான இந்தியா உண்மையில் பிற்போக்கு நிலவுடமைக் கருத்தியல் சார்ந்த தேசியவாதத்தை வைத்தே தம் மக்களின் புரட்சிகர சிந்தனைகளை மழுங்கடித்து வந்தது. திராவிடத் தனி நாடு கோரிய அண்ணாவுக்கும் வெறும் கோஷங்களைச் சார்ந்த நிலவுடமை தமிழ்த் தேசியம் மாற்று மருந்தாக வழங்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1967 இல்.

இதே காலப்பகுதியில் மேற்கூறியபடி இலங்கையிலும் 1960 களில் சிங்களவர் தமிழர் என்ற வேறுபாடின்றிய நிலையில் தொழிற் சங்கங்கள், புத்திஜீவிகள் தலைமை தாங்கிய மார்க்சிய அரசியல் ஓரளவில் வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் அதை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்குத் தேசிய இனப்பிரச்சனையும் தொடர்ச்சியான வளர்நிலையில் இருந்தது. குறிப்பாகத் தமிழர் மீதான அசம்பாவிதங்கள் அதிகரித்தன.

1956 இல் தனிச் சிங்கள மொழிச் சட்டம்.

1957 இல் திருமலை நடராசன் காவற்துறையாற் படுகொலை செய்யப்பட்டது.

1958 இல் பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர் காவற்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது.

1958 இல் தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய வன்முறை.

1959 இல் பிரதமர் பண்டார நாயக்கா பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டது.

1961 இல் மூதூர் பா. உ. க. ஏகாம்பரம் அவர்கள் அறப்போரில் ஈடுபட்டபோது காவற்துறையால் தாக்கப்பட்டு நோயுற்று இறந்தது என்பவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.

1970 களில் பெரும்பான்மை சிங்கள தேசிய அடக்குமுறைக் கொள்கைகளும்  உச்சமடைய ஈழத்தமிழ்த் தேசியவாதம் முனைப்படைகிறது. இதில் முன்னையது ஒடுக்குமுறைத் தேசியவாதமாகவும், மற்றையது தற்காப்புத் தேசியவாதமாகவும் அமைந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இக்காலத்திலும் தமிழர் தரப்பில் ஐக்கிய இலங்கை நிலைப்பாட்டை ஆதரித்த பொதுவுடமைவாதிகள் பலர் இருந்தனர். தோழர் சண்முகதாசன், வி. பொன்னம்பலம், பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் தீவிர சிங்கள-தமிழ்த் தேசியவாதிகள் மீது அருவெறுப்புப் பார்வை கொண்டிருந்தார்கள். 

எனினும் தூரநோக்கின்றியதும் அதிகார அரசியலை மட்டுமே இலக்காகக் கொண்டதுமான சிங்களத் தலைமைகளின் வாக்கு மைய அரசியல் தொடர்ந்தது. இதனால் இலங்கையின் அரசியல் சீரழிவிற் சிக்கியது. முற்போக்கு மரபிலிருந்து சறுகி துருவ நிலைப்பட்ட சிங்கள, தமிழ்த் தேசிய இனவாதச் சேற்றுக்குள் சிக்கியது. தனது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்க ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா உருவாக்கிய புதிய அரசியலமைப்புடன் இலங்கை 1972 மே 22 இல் குடியரசாகிறது.

இப்போக்கின் எதிர்வினைகள் தமிழர் தரப்பில் முனைப்புற்றது. 1970 இல் தமிழ் இளைஞர் பேரவை, சிவகுமாரனின் செயற்பாடுகள் இடம் பெற்றன. 1971 இல் தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கான கூட்டம் வல்வை ஞானமுத்தப்பா வீட்டில் இடம்பெற்றது. 1972 இல் குடியரசு யாப்பை எதிர்த்து தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயம். இப்படித் தமிழர் தரப்பிலும் தேசிய அரசியல் வலுப்பெறுகிறது.   

தமிழர்களின் தேசிய அரசியல் எனும் தேர் 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் கிழக்கு ரதவீதிக்குத் திரும்புகிறது. ஆனாலும் மிகவும் அமைதியாகவும், இனவாதமற்ற முறையிலும் இது நிகழ்கிறது. தந்தை செல்வாவின் நிதானமான ஆனால் தீர்க்கமான தலைமைத்துவம், கொள்கை, செயற்பாடுகள் ஆகியன அவரைச் சிங்கள தேசியத்துக்கு எதிரானவராக அடையாயாளங் காட்டவில்லை. ஆனால் அவரது மறைவின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியற் தலைமைகள் பெரும் தத்துவார்த்தச் சறுக்கலில் தடுமாறிப்போயினர்.

1970 இல் பிரபலமான கல்வியாளனாகவும் சமூக சேவையாளனாகவும் அரசியற்களம் இறங்கி வெற்றி கண்ட கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் வாழ்வும், அரசியல் வாழ்வும் 1981 இல் தமிழ்த் தேசியவாதி எனத் தன்னை அடையாளப்படுத்திய "தோழர்" சுந்தரம் என்பவரின் துப்பாக்கி வேட்டுக்களின் மூலம் முடிவுறுகிறது. அமரரின் மறைவுக்குக் காரணமான தமிழ்த் தேசியத் தலைமைகளின் தடுமாற்றமான, இரண்டுங்கெட்டான் அரசியற்போக்கு இறுதியில் அவர்களுக்கே ஆபத்தாய் முடிந்தது. இது பற்றிச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

கலாநிதி ஆ. தியாகராசாவின் அரசியற் பிரவேசமும் அது தமிழரசியலில் ஏற்படுத்திய அதிர்வலைகளும்.

மேடைப் பேச்சுக்கும் அரசியற் செயற்பாட்டுக்;குமான இடைவெளி தந்தைக்குப் பின்னர் அதிகரித்தபடியே சென்றது. அத்தகைய உணர்ச்சி நிலைப்பட்ட அரசியற் போக்கின் வெளிப்பாடே கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் படுகொலை. அன்னாரது படுகொலையும் அத்தகைய "உயிரகற்றல் அரசியலும்" தவறென்பது குறுகிய காலத்தில் நிரூபணமாகிறது. அவரைக் கொன்றவர் ஓராண்டிற்குள் (02- 01- 1982) கொல்லப்பட்டதும், எட்டாண்டுகளின் பின்னர் (13- 07 1989) த. வி. கூ. தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் இதையே நிரூபிக்கிறது. 

தந்தை செல்வாவிற்குப் பின்னரான த. வி. கூ. தலைமைகளின் போலித் தீவிரவாத அரசியலின் விளைவே இது. உணர்ச்சியூட்டி உசுப்பேற்றித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற "அரியாசனம்" ஏறும் வகையிலான அரசியல் மோசடிகளின் விளைவே இது. மந்திரத்தில் மாங்காய் பிடுங்கித் தருவோம் என்பது போல் அடுத்த தேர்தல் தமிழீழத்திற்தான் என தந்தை செல்வாவின் வாரிசுகள் போலி அரசியலைப் பின்பற்றினர்.

71 ஆம் ஆண்டுக் குடியரசு யாப்பு நிறைவேற்றப்படுவற்குப் பத்து மாதங்களுக்கு முன்பு தேர்தலில் அப்பாத்துரை அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தேர்தற் தொகுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைகிறார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பட்டியலில் போட்டியிட்ட புதுமுகமான கலாநிதி ஆ. தியாகராசா சிறிதளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியது "தளபதி" அமிர்தலிங்கம் அவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் படுகொலைக்கு முன்னரான மூன்று தசாப்தங்களில் ஆட்சியாளர்களின் தமிழர் விரோதச் சட்டங்கள், படுகொலைகள், வன்முறைகள் ஒரு புறமும் த. வி. கூ. பின்பற்றிய (அதிதீவிரவாத) மிதவாத -மேடைப் பேச்சு- வாக்கு அரசியல் மறுபுறுமும் தமிழரசியலில் ஒரு மடைமாற்றத்தை, உருமாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. செல்வாவின் நேர்மையான மிதவாத அரசியலின் இறுதிச் சுவாசத்திற்கும் (1977- 04- 27) முளுமையான ஆயுதப் போராட்டம் பிரசவிப்பதற்கும் இடையிலான (தடியெடுத்தவனெல்லாம் தண்டல்க்காரன் என்ற) குழப்ப அரசியற் சூழலிற்தான் அமரரது உயிர்பறிக்கப்பட்டது. 

இம்மாற்ற நிலை பத்தாண்டுகள் தொடர்ந்தது. 1977 இல் தந்தை செல்வாவின் மறைவு மற்றும் இந்திய நலன்களுக்கு எதிரான ஜே. ஆரின் ஆட்சி தொடங்கியதிலிருந்து இது தொடங்கியது. இறுதியில் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை இக்குழப்ப அரசியல் தொடர்ந்தது. மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் ஓரளவு உறவுச் சமநிலை ஏற்பட்டது. அதுவரை இந்தியா திட்டமிட்ட முறையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் ஈழத்தமிழர் தேசிய அரசியலைத் தனது நலன்களுக்காகப் பயன்படுத்தியமையும் மேற்படி குழப்ப நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. 

இன்றும் இலங்கைத் தீவின் இரு தேசிய இனங்களைத் துருவ நிலைப்படுத்தி இந்தியாவும் மேற்குலகும் இணைந்த சர்வதேசம் "சர்வசேதம்" செய்து மக்களின் குருதியில் தமது நலன்களை மாறிமாறித் தக்கவைத்துக் கொள்கிற நிலையே தொடர்கிறது. சிங்கள மற்றும் தமிழ் அரசியற் தலைமைகள் நிதானித்துச் செயற்படாவிட்டால் இந்து சமுத்திரம் அப்பாவி மக்களதும் அன்னாரைப் போன்ற தலைவர்களதும் குருதியினாற் சிவந்து கொண்டே இருக்கும்.


அன்னாரின் பன்முக ஆளுமை

காரைநகர் என்ற பல குறிச்சிகளின் தொகுதி ஓர் ஊரென உணர்வு பெற்றது அமரர் காலத்திலேதான். பல பிற்போக்குக் கருத்தியல்களால் பிளவுபட்டிருந்த காரைநகர் தமிழ்த் தேசியவாதத்தால் ஒன்றுபடுவதற்கு முன்னர் அன்னாரின் கால் நூற்றாண்டுக்கும் மேலான கல்விச் சேவையால் ஒன்றுபட்டது. பின்னர் அவரது அரசியற் பிரவேசத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை எதிர்கொண்டு ஒன்றுபட்டது. இன்று மீண்டும் மழைக்காலப் புற்றீசல்கள் போல் ஊர் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் பலர் அறியாமை, பதவி, புகழ், இன்னபிற தன்னலப் போக்குகளால் உந்தப் பெற்றுச் செயற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இது தற்காலிகமாக இருந்தால் நன்று. அன்பு, விட்டுக்கொடுப்பு, சேவை உணர்வு, பொறுமை, கடும் உழைப்பு, சகோதரத்துவம் என்பனவே சீரழிந்த எம் சமூகத்திற்கு இன்று அருமருந்தும், அன்னாருக்குச் செய்யும் நன்றியுமாகும்.

கல்வியே ஒரு பிரசையினதும், குடும்பத்தினதும், சமூகத்தினதும், தேசத்தினதும், ஏன் மொத்த உலகத்தினதும் நிரந்தர விடுதலையைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம். இதனாற்தான "என் (ஏன்) ஒருவன் சாந்துணையும் (சாகும் வரை) கல்லாதவாறு (கற்கக் கூடாது)" என வள்ளுவர் வினாவெழுப்பி அறிவுரை கூறுவார். அமரர் பணிஒய்வு பெற்றபின்னும் கற்றார். பல பட்டங்கள் பெற்றார். அது போலக்  காரைநகரினதும் அயலூர்களினதும் கல்வி மேம்பாட்டைத் தனது மூச்சாகக் கொண்டு அல்லும் பகலும் அரும்பாடுபட்டார். 

தமிழ்ச் சூழலில் சில தசாப்தங்களுக்கு முன்னர் "படிச்ச ஆள்" பற்றிய கருத்து முற்றிலும் வேறு பட்டது. அன்னாரின் காலத்தில் ஆசிரியத் தொழில் புனிதமானதாகக் கருதப்பட்டது. ஆங்கிலப் பதத்துடன் இன்று எம்மத்தியில் கவர்ச்சியாக உலாவரும் பிரத்தியோக மற்றும் தனியார் கல்வி நிறுவன முறை அக்காலத்தில் இல்லை. ஏனெனில் ஆசிரியத் தொழிலும் மருத்துவத் தொழிலும் தெய்வீகமாகப் பார்க்கப்பட்ட காலம். ஆதியில் தமிழ் மரபில் ஆசிரியரும், மருத்துவரும் தமது சேவைக்குப் பிரதியுபகாரமாகப் பணம் பெறுவதில்லை. தேவையேற்படின் உணவும், நீராகாரமும் மட்டுமே பெறுவர். அன்னார் அதையும் மீறி அத் தொழிலைத் தம்மக்கள் தொண்டாகக் கொண்டவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தமிழ் மரபு. குருவே தெய்வத்தின் முன்னின்ற காலம். பள்ளி நாட்களில் அங்கு செல்லாமல் கோவிலுக்குச் சென்றால் அங்கேயே குருநாதர் தியாகராசா மாணாக்கருக்கு கிழுவங்கம்புச் சாத்துப்படி செய்யக் கூடிய அறமிக்க காலம். பெற்றோர் அதை ஏற்றுக் கொண்ட காலம்.  இன்று மாணாக்கருக்கு முன்பே ஆசான்கள் கடமை நேரத்திலும் கல்வியை விடுத்துத் "தெய்வீகப் பணி" புரிவதைக் காண்கிறோம். ஐயா! உங்களைப் போன்ற அறமிக்க ஆசான்களை நினைத்து ஏங்குவதைத் தவிர என் செய்வது?

படித்த ஆள் என்ற பதம் முழு அர்த்தம் கண்டதும், நம் சமூகத்தில் உன்னத நிலையில் இருந்ததும் அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது காலத்திற்தான். நமது தமிழ்ப் பண்பாட்டில் சங்க காலப் புலவரான ஒளவையார் வேள் பாரிக்கும் வேந்தர் மூவருக்கும் உற்ற தோழியாகவும், ஆலோசகராகவும் இருந்தார். அவர்களுக்கிடையிலான யுத்தத்திற்கு முன்னர் சமாதானத் தூதராகவும் பணியாற்றி இருந்தார். இது நம் சமூகம் கல்வியை மேன் நிலையில் வைத்திருந்தமைக்குத் தொல் ஆதாரம். அமரருடைய வாழ்விலும் காரைநகர் மக்கள் அவரை உன்னத நிலையில் வைத்திருந்தனர். வைத்திருக்கின்றனர்.

இளைஞர்- யுவதிகளின் உடலாரோக்கியமும் பிரதானம். அமரர் விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அது போல விளையாட்டுத் துறையை வளர்க்கப் பாடுபட்டார். ஏறத்தாள 75 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் மல்யுத்தத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தீர்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையை நினைக்க நெஞ்சம் வேகாமல் என் செய்யும் ஐயா?

கல்விச் சேவை போன்றே அவர் அரசியலிலும் பணம் சேர்க்கவில்லை. அவருடைய பொருளாதார அறிவும், அபிவிருத்திப் பணிகளும் முக்கியமானவை. இந்நூலில் வரும் கட்டுரைகள் பல அவற்றை நிரற்படுத்தி நிற்கின்றன. எனவே கூறுவது கூறலஞ்சியும், விரிவஞ்சியும் அதை விடுக்கிறேன். 

சுருக்கம்

ஈழத் தமிழரின் கல்வி வரலாற்றில்  அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் பங்களிப்பு காத்திரமானது. காரைநகரின் கல்வி, அரசியல், பொருளாதாரம், அடிப்படை வசதிகளின் அபிவிருத்தி, ஆன்மீகம், கலை, விளையாட்டுத்துறை எனப் பலதுறைகளின் மேம்பாட்டிலும் தனக்கென ஒர் தடம் பதித்துச் சென்றவர் அமரர். ஒரு சகல கலா வல்லவன் என்பது மிகையல்ல. 

அவரது சமகாலத்தில் ஈழத்தமிழர் தேசிய வரலாறு பாரிய உருமாற்றம் பெற்றதால் அவரது ஆளுமையின் முழுப் பயனையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாதது எமது துர்ப்பாக்கியமும் வரலாற்றின் முரண் நகையும் ஆகும். அவர் தனது அரசியல் நிலைப் பாட்டில் வளைந்து கொடுக்காத தன்மையும் அதற்குக் காரணமாகும் என்பது காய்தல் உவத்தல் இன்றிய உண்மையாகும். 

ஆழங்காற்பட்ட அவரது பன்முக ஆளுமை கனபரிமாணங்களை உடையது. அவற்றை வெளிக்கொணரும் வகையில் உயர்தர ஆய்வு நூலொன்று தொகுக்கப்படுவது அவசியம். அதற்கு முன்னோடியாக அமையும் வண்ணம் இந்நூலை ஆக்க முயற்சித்திருக்கிறோம்.   

                                                                    நன்றி

                                                      "ஆளுயர்வே ஊருயர்வு"
                                   "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                  இங்ஙனம்
                                                                        சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                               செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                     மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                   20.05.2017

 

 

 

மறைந்தும் மறையாத மாமனிதர் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

மறைந்தும் மறையாத மாமனிதர்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

yogo

 

 

 

 

 

 

 

கலாபூஷணம் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்

 

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாய்  சிறந்த அறிவுப் புலமை மிக்க பண்பாட்டாளராய், ஊருக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய மனப்பான்மை உடையவராய் பொருளாதாரம் பற்றிய தெளிந்த சிநதனையாளராய் கல்வியின் மூலம் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத இலட்சிய நோக்கம் கொண்டவராய் வாழ்ந்தவரே அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள்.

ஆன்மீகப்பணி கல்விப் பணி, சமூகப் பணி, பொருளாதாரப் பணி, அரசியற் பணி என்ற வகையில் பன்முகப்பட்ட சிந்தனையாளராய் விரிந்து பரந்த தமது செயற்பாடுகளைத் தூர நோக்கில் அமைத்துக்கொண்டமையால் இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

                            "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
                              பண்பு பாராட்டும் உலகு"   – (994)

1916ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த இவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு அதே தினத்தில் அவர் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த காரைநகர் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டது.

பின்னர் அவரது அன்பர்கள் ஆதரவாளர்கள் ஒனறிணைந்து வெற்றிநாதன் அரங்கில் இவ்விழாவைக் கொண்டாடினர். இம்மாதம் கனடா வாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் கனடாவிலும், இன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் சுவிஸிலும் கொண்டாடுகின்றனர். இதற்கு அவரது முழுமையான செயற்பாடுகளே காரணம்.


                            "பிறப்பொக்கும் எல்லா உயிர்;க்கும் சிறப்பொவ்வா
                             செய்தொழில் வேற்றுமை யான்" – (972)

அவரது செயற்பாடுகள் யாவும் நம் கண்முன் விரிந்து பரந்து கிடக்கின்றன. எனவே அவர் காரைநகர் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து வருகிறார்.

காலத்தால் அழியாத தன்னலமற்ற சேவைகளைச் செய்த ஒரு பெரும் சாதனையாளர். சமூக சிந்தனையாளர், நாட்டுப்பற்றாளர்.

நாட்டு முன்னேற்றங்கருதி அவர் செய்த செயற்பாடுகள் ஒன்றா? இரண்டா?

1.    காரைநகர் – சிவன்கோயில் வீதி (புதுறோட்)

2. காரைநகர் – கோவளம் வீதி( வெளிச்சவீடு) முதலான வீதிகளையும்

3.    காரைநகர் மக்களுக்கான மின்சார வசதிகளையும்

4.    குழாய்நீர் – குடிநீர் வசதிகளையும் அரச உதவிகளைப் பெற்று ஏற்படுத்திக் கொடுத்தார்

5.    தபாற் கந்தோருக்கான புதிய கட்டடம்

6.    வியாவில் – உபதபால் நிலையம்

7.    கிராமிய வங்கி

8.    இலங்கை வங்கிக்கான கட்டட நிர்மாண உத்தேசம்

9.    காரைநகர் – துறைமுகத்திற்கு அண்மையில் இ.போச பேருந்துச் சாலை

10.    கோவளம், கசூரினா – பீச், கல்லுண்டாய் வீதி இ.போச.ச சேவை.

ஆகியன ஆக்க பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடுகள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக
இவரால் வடிவமைக்கப்பட்ட

11. வேணன் அணைக்கட்டு

                                "கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
                                 பெருமையின் பீடுடையத இல்" – (1021)

  சமூகச் செயற்பாடுகள் மட்டுமன்றி சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் மிக்க இவரது கல்விச் செயற்பாடுகள் சில வரையறுக்கப்பட முடியாதவை. பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக வளங் களைக் கூட வசதிகளை ஏற்படுத்தல், தரமான ஆசிரியர்களை இணைத்துச் செயற்படுத்தல், மாணவர் ஒழுக்க நலன்களில் அக்கறை, விளையாட்டுத்துறை, இசைத்துறை, போன்று பிறசெயற்பாடுகளையும் ஊக்குவித்தல் என்பன. சிறந்த ஹொக்கி அணி வீரர். உதைபந்தாட்டத்திலும் அதிக ஈடுபாடு சங்கீதக் கலையில் ஆர்வம் எனவே சமய சமூக நிகழ்வுகளில் இசைக் கலையை ஊக்குவித்தார்

வெள்ளிவிழாக் கண்ட வரலாற்று அதிபர், வைரவிழா, பவளவிழா, முத்துவிழா, என்ற முப்பெரும் விழாக்களையும் நடத்தி முடித்த ஒரே அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

                                   "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
                                    அருமை உடைய செயல்" (975)

பொருளாதாரத் துறையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். நாட்டு மக்கள் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். மாணவர் ஒழுக்க சீலராய் வாழ வேண்டும் என நாட்டு முன்னேற்றம் கருதி இரவும் பகலும் அயராது உழைத்தார். அதுவே அவரது இலட்சியமாகும்.

  இவரது சிந்தனையில் மலர்ந்த பொருளாதாரம் பற்றிய எண்ணக்கருவே இவரது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை.

"இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பும்"

என்ற ஆய்வு நூல் இந்நூலைப் பாராட்டி புதுடெல்கி பல்கலைக்கழகம் "கலாநிதிப் பட்டம்" வழங்கி இவரைக் கௌரவித்தது.

  கல்வி கலையில – அஃது கால இட எல்லைக்கு அப்பாற்பட்டது. இவர் கலாநிதிபபட்டம் பெற்ற போது வயது 63 அவரது எண்ணம், சிநதனை, செயல் எல்லாம் நாட்டின் முன்னேற்றம் ஒன்றை நோக்கியே செயற்பட்டன. எனவே அவர் எக்காலத்திலும் ஓய்ந்திருக்கவில்லை.

அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் காரை மண்ணிறகுப் பெருமை தேடித்தந்துள்ளன. இதனால் அவர் மறைந்தாலும் மறையாத மாமனிதராய் மக்கள் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

           "கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
            சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு" (981)

                                                                            நன்றி

                                                           "ஆளுயர்வே ஊருயர்வு"
                                  "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                          இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          14 – 05 – 2017

cover-01 (1)

 

 

 

 

 

 

 

 

 

 

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

DSC_4869-Copy-Copy
 
 

 

கலாநிதி (திருமதி) வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷட விரிவுரையாளர்
மொழியியல் ஆங்கிலத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

                    "தோன்றிற்  புகழொடு தோன்றுக அஃதிலார்
                             தோன்றலிற் தோன்றாமை நன்று"

    புகழ்பூத்த கல்விமான்களும், பணபலம் படைத்த வணிகப் பெருமக்களும் நிறைந்து வாழும் காரைநகர் என்ற அழகிய கிராமத்தை, நேசித்து, காதலித்து வாழ்ந்த பெருந்தகைகளுள் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் முதலிடம் பெறுகின்றார். அவருடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். அமரர் அவர்கள் காரைநகர் மண்ணுக்காக, மக்களுக்காக, காரைநகர் இந்துக் கல்லூரிக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகான். நிறைந்த கல்வி அறிவும், சிறந்த ஆளுமைப் பண்புகளும்,  சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் கொண்ட அதிபர் தியாகராசா அவர்கள் தனது மண்ணுக்கும், மக்களுக்கும், காரைநகர் இந்துக்கல்லூரிக்கும் சேவை செய்வதற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை  செலவழித்தவர் என்றால் அது மிகையாகாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் தன்னால் இயன்றவரை மிகவும் கடுமையாக உழைத்தவர் என்பதை காரைவாழ் மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. இந்தச் சேவை மனப்பாங்கு, அவரை அரசியலில் ஈடுபடுவதற்கு மேன்மேலும் உத்வேகத்தை வழங்கியது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக பல இன்னல்களை எதிர் கொள்வது போல அதிபர் தியாகராசாவும் காரை வாழ் மக்களுக்காக பல இன்னல்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். இந்த மனநிலையே அவரது மரணத்தையும் நிச்சயித்தது என்பதை இங்கே ஆணித்தரமாக கூறிவிடமுடியும். 

ஆசிரியராக, அதிபராக, காரைநகர் இந்துக்கல்லூரியில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இந்துக்கல்லூரியில் பௌதீக வளங்களையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக் கொடுத்து ஒரு சிறந்த மாணவ பரம்பரையை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. 


இவர் அதிபராகப் பொறுப்பேற்ற வேளையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், யாவற்றையும் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் கண்டார். காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும்பகலும் பாடுபட்டு, பாடசாலையை ஒரு சிறந்த 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்திய பெருமை அன்னாருக்கு உண்டு. பாடசாலையில் பல புதிய வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், நூல்நிலையம், புவியியல் அறை போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவித்து, மாணவர்களின் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் மலேசியா சென்று பாடசாலைக் கட்டிடங்களுக்காக நிதி சேகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. திரு. தியாகராசா அவர்களின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள்   ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர். 

கல்வியில் எவ்வளவு திறமையாகத் திகழ்ந்தாரோ அதேமாதிரி விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறையிலும் ஆர்வம் காட்டினார் உதைபந்தாட்டத்திலும் சங்கீதக்கலையிலும் மிகவும் ஈடுபாடுடையவர். 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவை செய்த அதிபர் அவர்கள் தனது படிப்பிலும் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். M.A, M.Lit பட்டத்தை முடித்த அவர் இந்தியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தன்னலமற்ற சேவையாளராகவும், மன உறுதி கொண்டவராகவும் விளங்கிய தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மாத்திரமல்ல, அரசியலில் ஈடுபட்டு காரைநகர் மண்ணுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்தவர்.அதிபர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஓய்வு பெற்றுக் கொண்ட அதிபர் அவர்கள் வட்டுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து, தளபதி அமிர்தலிங்கத்துடன் போட்டியிட்டு வெற்றிவாகையும் சூடிக்கொண்டவர்.

கலாநிதி தியாகராசா  அவர்கள் பரந்த சிந்தனையாளர் மாத்திரமன்றி சிறந்த சமூகசேவையாளருமாவார். ஊருக்கும், நாட்டுக்கும் உதவ வேண்டும் என்ற பேராசையில் அரசியல்வாதியாக மாறினார். அவரது கொள்கை சோசலிசக் கொள்கையாகும். தமது தொகுதியையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்பதே அவரின் இலட்சியமாகும்.
 
    பாராளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு மின்சார வசதி, குடிநீர், குழாய்நீர் விநியோகம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தார். காரைநகர் சிவன்கோவில் வீதி (புதுறோட்), கோவளம் வெளிச்சவீடு வீதி, ஆகிய இரண்டையும்  கிராமசபை நிருவாகத்தில் இருந்து பிரித்து நெடுஞ்சாலை இலாகாவுக்கு மாற்றம் செய்தார். கோவளம் வெளிச்சவீடு வீதி அகலமாக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். சிவன்கோவில் வீதி, கோவளம் வீதி ஆகிய இரண்டிற்கும் பேரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவருடைய காலத்தில் காரைநகர் தபாற்கந்தோருக்கு புதிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. வியாவிலில் ஓர் உபதபால் நிலையம் திறக்கப்பட்டது. காரைநகரில் ஓர் கிராமிய வங்கி திறக்கப்பட்டது மாத்திமல்ல கட்டிடம் நிருமாணிக்க உத்தேசிக்கப்பட்டது. 

அவர் தனது பாராளுமன்றப் பதவிக் காலத்தில் குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பது யாவரும் தெரிந்த உண்மையாகும். சுயநலம் பாராது பொதுநல எண்ணத்துடன் செயற்பட்ட அமரர் அவர்கள் தனது அறுபத்தைந்தாவது அகவையில் அகாலமரணத்தைத் தழுவிக் கொண்டது. யாராலும் ஜீரணிக்க முடியாத மாபெரும் துயரச் சம்பவமாகும்.

நல்லவர்களை இறைவன் சீக்கிரம் தன்னுடன் அழைத்துக் கொள்வான் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது போலவே அமரர் தியராகராசாவையும் இறைவன் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும். அவர் அகாலமரணத்தைத் தழுவாது இருந்திருந்தால் எமது மக்களுக்கு இன்னும் பல சேவைகளைத் தொடர்ந்தும் செய்திருப்பார். அவருடைய இழப்பு காரைநகர் மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஓர் பாரிய இழப்பாகும். 

அவருடைய நல்ல எண்ணங்களும், உயர்ந்த சிந்தனைகளும் இப்பிரபஞ்சத்தில் நிலைத்து, நிறைந்து நின்று சிறந்த சேவையாளர்களையும், கல்விமான்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், தியாகிகளையும் உருவாக்கும் என்பதே உண்மையாகும்.

                                                  "ஆளுயர்வே ஊருயர்வு"
                       "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                         இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                    13 – 03 – 2017

 

 

 

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய  "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

PATKUNARAJAH

 

 

 

ஆக்கம் திரு. ச. பற்குணராஜா
உலக சைவ பேரவைத் தலைவர் (பிரான்ஸ்)


 

மலரும் நினைவுகள்…

 

பதவியை நீ தேடிப்போனால் பதவிக்குப்பெருமை, 
பதவி உன்னைத் தேடிவந்தால் உனக்குப்பெருமை.

பலர் பதவிகளைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் வெகு சிலரோ பதவிகளைப் பயன் படுத்திச்  சமூகத்தை வளப்படுத்துவார்கள். அமரர்  கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் சமூகத்திற்கான சேவையில் தன்னை முழுவதுமாக இழந்தார்.

ஐம்பதுக்கு ஐம்பது எனக் கேட்டு இலங்கை அரசியலில் தனியிடம் பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய  திரு ஜி .ஜி  பொன்னம்பலம் அவர்கள் 1970ல் நடைபெறவிருந்த தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு தகுதியும் பலமும் கொண்ட ஒருவரின் தேவை இருந்தது. காரணம் அந்தத்தொகுதியின் தளபதியாக விளங்கியவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக விளங்கிய தளபதி திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள். அந்தக் கோட்டையைத தகர்த்து எறிந்தவர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்.

ஆதிபராக இருந்தவர் ஓய்வு பெற்று தமிழ்க்காங்கிரசின் அபேட்சகராக களமிறக்கப்பட்டார். முதல் ஊர்வலமும் கூட்டமும் காரைநகர் சைவ மகாசபையிலிந்து தொடங்கி வாரிவளவு பிள்ளையார் கோவில் வரை சென்று வீதியில் அமைந்திருந்த மேடையில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஜி .ஜி பொன்னம்பலமும் தியாகராசாவும் மற்றைய ஆதரவாளர்களுடன் ஆரவாரங்கள், வானவேடிக்கைகள், பூரண கும்பங்கள் நிறைந்த வீதிவழியே வந்துகொண்டிருந்தார்கள். நான் அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளிமாணவன். இதுவே எனது முதல் தரிசனமாக இருந்தது. தேர்தலில் 551 வாக்குகளால் வெற்றியீட்னார் என்ற செய்தி அதிகாலையில் தான் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த வெற்றி எதிர் வேட்பாளரால் மறுக்கப்பட்டு மீண்டும் வெற்றி என்பது உறுதிப்படுத்படுவதற்கு சிலகால இடைவெளிகள் தேவையாயிற்று.

காந்தியச் சிந்தனைகளில் மட்டுமன்றி, பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் தோய்ந்திருந்தவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள். அவ்வகையில்  ஆசிரியர் பானுதேவன், திரு நடராஜா, ஆசிரியர்  சுந்தரசிவம் (இவர் வட்டுக்கோட்டைத் தொகுதியில் லங்கா சம சமாஐக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்) மறைந்த பேராசிரியர  கலாநிதி இராமகிருட்ணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 

கலாநிதி. தியாகராஜா பொதுவுடைமைச் சிந்தனையாளர். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றியவர். அவர் மறைந்த பின்னர் அவருக்கான ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டத்தை திரு சுந்தரமூர்த்தி (தனிச்சிங்கள மசோதா கொண்டுவந்த போது அரசாங்க சேவையிலிருந்து விலகி தனிமனிதனாக  இருந்து காந்தீய வழியில் வாழ்ந்தவர்) அவர்களுடன் இணைந்து சைவமகாசபையில் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாராக விளங்கிய டாக்டர் எசு. ஏ. விக்கரமசிங்கா அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை 1975 களில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடிய போது அதில் பங்கு பற்றி அரசியலுக்கு அப்பால் தனது மனித நேயத்தையும் சோசலிச தத்துவத்தின் பக்கமே தனது சிந்தனைகள் உள்ளது என்பதை நிலை நிறுத்தினார்கள்.

வடக்கா, தெற்கா என்று ஊர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்ததைக் காரணம் காட்டி நமது ஊருக்கு மின்சார வசதி கிடைக்காது மின் கம்பங்கள் வயலிற்கூடாகச் சென்று கடற்படைக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றது. குடிநீர் என்பது காலங்காலமாக பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. மருத்துவ வசதிகள் குறைந்த நிலை. வுசதி உள்ளவர்கள் மூளாய் மருத்துவ விடுதியில் பயன் பெறுவார்கள். இந்த நிலையைப் போக்குவதற்கு  ஒருவர் எமது கிராமத்திற்கு காலத்தின் கட்டாயத்தால் தேவையாகவிருந்தது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்பட்ட துன்பங்கள் சிறிதல்ல.

இவ்விடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். யான் யாழ்மத்திய கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில் காரைநகர் இந்துக்கல்லூரியில் 1974 களில் ஒரு சில மாணவர்களுடன் தான் உயர்தர வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஒரு தரவு அறிக்கையை சில நண்பர்களுடன் இணைந்து தயாரித்ததில் சுமார் 80 மாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயின்று வந்தது தெரியலாயிற்று.. அந்தக் காலத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பதிலதிபராக திருவாளர்  சுப்பிரமணியம் ஆசிரியர் கடமையாற்றிவந்தார்கள். (அக்காலத்தில்  தரப்படுத்தல் என்னும் நடைமுறையால் யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற பலர் உயர்தர பரீட்சையை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற பின்தங்கிய பகுதிகளில் எழுதி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தி வந்ததும் உண்டு.)

நீண்ட கலந்துரையாடல்களின் ஊடாக யாம் வாரிவளவு நல்லியக்கச்சபையில் உயர் கல்வியும் இந்துக் கல்லூரியும் என்ற கருப்பொருளில் ஓரு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்து காரைநகர் இந்துக்கல்லுரியில் உயர்தர வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவரை அழைத்திருந்தோம். நாம் எதிர்பார்த்தது கல்லூரியின் வளர்ச்சிக்கு ஏதும் ஆலோசனை கூறுவார் என்பதே. ஆனால் விளைவு எதிர்மாறாக அமைந்தது. அவர் கூறியது இது தான்; நீங்கள் சிறு பிள்ளைகள், உங்களுக்கு அனுபவம் காணாது. இது என்ன சப்பறமா? (சப்பறம் – இது கோவிலில் விசேட திருவிழா நாட்களில் சுவாமியை வைத்து இழுத்து வருவது. பகுதி பகுதியாக இருப்பதை இணைத்து உருவாக்குவது.) பொருத்துவதற்கு?. நாங்கள் எவ்வளவோ காலம் பல முயற்சிகள் செய்தோம். முடியவில்லை என்று முடித்தார்.

இதனால் நாம் தளர்ந்து போகவில்லை. புதிலாக தொடர்முயற்சிகளில் ஈடுபட்டோம். முதல் முயற்சியானது அந்தக்காலத்தில் ஈசன் ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்காண Double maths கற்பித்தலில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கினார். அவர் வெலிங்டன் தியேட்டரின்( இப்போது அது இல்லை) பின்புறம் அமைந்திருந்த மேல் மாடியில் வகுப்புக்கள் எடுத்து வந்தார். அவரிடம் நண்பர் க. சிவபாதம் அவர்கள் மூலமாக அனுகினோம். அதற்காக பாடசாலை முடிந்ததும் ஆசிரியர் சுப்பிரமணியமும், நண்பர் சிவபாதமும் யாழ்ப்பாணம் வருவார்கள். யானும் பாடசாலை முடிந்ததும் அவர்களுடன் இனைந்து பல தடவை சந்தித்து உரையாடி ஈசன் ஆசிரியர் அவர்களின் அனுமதியைப் பெற்றோம் (பாராளுமன்ற உறுப்பினரான தியாகராஜா அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதியின் உறுப்பினர். காரைநகர் என்பது அதன் ஒரு பகுதி. அவர் ஊரை மட்டும் உயர்த்த முடியாது. மற்றைய கிராமங்களுக்கும் சேவை செய்யவேண்டிய தேவை உண்டு.) 

ஈசன் ஆசிரியர் அயற்கிராமமான வேலனையில் வசித்து வந்தார்கள். அவர் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்தார். பாராளுமன்ற உறுப்பினர் தனது  மகள் புனிதவதியையும் ஊரிற்கு அழைத்து கல்லூரியில் இணைத்தார் அவர்களுடன் விலங்கியல் கற்பித்தலில் சிவபாலராஜா சிறப்புற்று விளங்கினார். திரு ம.ம. நடராஜா அதிபராகப் பொறுப்பேற்றார்கள். யானும்  யாழ் மத்திய கல்லூரியை விடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியது. அயற் கிராமங்களான பொன்னாலை, வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், வேலனை ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர் வந்து கல்வி கற்கத் தொடங்கினார்கள்.  அந்த ஆண்டில் தோன்றிய உயர்தரப் பரீட்சையில் பங்கு பற்றிய பலர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப் பட்டார்கள் என்பதே நற்செய்தியாகும்.

ஈசன் ஆசிரின் நியமனம் 3 மாதகாலத்திற்குள் கிடைக்காவிட்டால் அவர் விலகிச் சென்று விடுவார் என்ற உடன்பாட்டில் தான் ஒப்புக்கொண்டார். நியமனம் கிடைப்பது என்பது இலகுவானதாக இருக்கவில்லை (அப்போதைய கல்வி அமைச்சர் பதியூதீன் முகமது அவர்களது அன்றைய தரப்படுத்தல் திட்டமானது பாரியளவில் விவாதத்திற்குரியதாக இருந்தது.) ஈசன் ஆசிரியரது நியமன விடயமாக தொல்புரத்தில் அமைந்த கமநல ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் கொப்பேகடுவ, தபால் தந்தி அமைச்சர் திரு குமராசூரியர் ஆகியவர்களிடம் ஒரு மகஐரை கையளிப்பதற்காக தம்முடன் என்னையும், நண்பர் சிவபாதம் அவர்களையும் தம்முடன்  அழைத்துச் சென்றார்கள்;. மகஐரை கையளித்து கூட்டம் முடிந்த நிலையில் திரும்பி வருவதற்கான சூழ்நிலை தாறுமாறாக அமைந்து விட்டது. காரணம் பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்தில் பாது காப்பு கருதி இரண்டு பொலிசார் அவருடன் சென்று விட்டனர். கடைசியில் சங்கானைப் பலநோக்கு கூட்டுறவுச் சங்க லொறியில் எங்களைப் பொன்னாலைப் பாலத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அங்கிருந்து நடைப் பயணத்தில் வீடு வந்து சேர நள்ளிரவாயிற்று.

இவ்வாறான பல அயராத முயற்சியின் விழைவாக ஈசன் ஆசிரியர் அவர்களது  நியமனம் கிடைக்கப்பெற்றது.  அவரது ஏழாண்டு அரசியல் வாழ்வில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் மக்களுக்கு தன்னாலியன்ற சேவையை செய்தார்.

எமது ஊரைப் பொறுத்த வரையில் இருண்டிருந்த ஊரிற்கு மின்னொளி கொடுத்தார். குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அமுல் படுத்தினார். சாதாரண மக்களிற்கான வைத்தியசாலையை ஏற்படுத்தினார். கல்வியின் பயன் கருதி பாடசாலைகளின் தரத்தை உயரச்செய்தார்; இவ்வாறு குறுகிய காலத்தில் நிறைந்த சேவை செய்து நன்றியுள்ளவர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கின்றார்கள்.

மரங்கள் மனிதர்களைப் பார்த்துக் கேட்டதாம் நாங்கள் எங்களிலிருந்து ஒரு சிலுவையை உருவாக்கினோம். நீங்கள் உங்களால் ஒரு யேசுவை உருவாக்க முடிந்ததா? என்று அது போல் எங்களால் ஒரு தியாகராஜாவை உருவாக்க முடியுமா?

                                                          "ஆளுயர்வே ஊருயர்வு"
                              "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                             இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                 மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          12 – 02 – 2017

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிறன்று சூரிக் நகரில் சிறப்புற நடைபெற்றன!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் 
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் 
தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிறன்று சூரிக் நகரில் சிறப்புற நடைபெற்றன 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürichமண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

மங்கலச் சுடறேற்றலும், அகவணக்கமும், கடவுள் வணக்கமும், மன்றக் கீதமும்

சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள், திரு, திருமதி. சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திரு, திருமதி  பூபாலபிள்ளை விவேகானந்தா ஆகியோர் ஒளிச் சுடர் ஏற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின் நிகழ்ச்சி அறிவித்தலுக்கு அமைய கடவுள் வணக்கத்தினை செல்வி பாரதி லோகதாஸன் அவர்கள் இனிமையான குரலில் பாடினார்.

அமரத்துவமான கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களுக்கும் ஏனைய உறவுகளுக்கும் எல்லோரும் எழுந்து நின்று நீத்தார் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மன்றக் கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தினை செல்வி பைரவி லோகதாஸன் சிறப்புற நிகழ்த்தினார்.

                                                               வாழ்த்துரைகள்

எமது சபையின் போஷகரும் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய பிரதமகுருவுமான ஸ்ரீ சரஹணானந்தக் குரக்கள் ஆசியுரை வழங்கி  இருந்தார். அவர் தனது உரையில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் அரசியல்பணி, கல்விப்பணி, சமூகப்பணி பற்றி விரிவாக கூறியிருந்தார்கள். விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் தொடங்கியிருந்த பொழுதிலும் இன் நிகழ்வில் தனது வருகையை பதிவு செய்வதற்கு வந்திருப்பதாகவும் இது அன்னாருக்கு செலுத்தும் நன்றிக்கடனும் கடமையுமாகும் எனக் கூறியிருந்தார்கள். தொடர்ந்து சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்களது வாழ்த்துரை இடம் பெற்றது.

ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நீண்ட தலைமையுரையோடு விழா களை கட்டியது. 

நிகழ்வுகளின் வரிசையில் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் வாழ்;த்துச் செய்திகளை திரு அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்) அவர்கள் வாசித்திருந்தார்கள். முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியனை திரு. கனகசபை சிவபாலன் அவர்கள் வழங்கியிருந்தார்கள். முன்னாள் அதிபர் ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர் திருமதி பாலசிங்கம் தவநாயகி  அவர்களின் வாழ்த்துரையை திரு. முருகேசு பாலசுந்தரம் வழங்கியிருந்தார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நினைவுத் தொகுப்பு மூன்று கிழமைகளில் ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டுத் துரித கதியில் வெளியிடப்பட்டது.  இதனால் காலம் தாழ்த்திக் கிடைக்கப்பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் திரு.வே.முருகமூர்த்தி;;; காரைநகர் அவர்களின் நிறுவுநர் பக்தி மிக்க முதல்வர் என்ற ஆக்கம் உலக சைவப் பேரவைத் தலைவர் திரு.சதாசிவம்.பற்குணராஜா அவர்களால் வாசிக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபையின் வாழ்த்துச் செய்தி திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களால் வாசிக்கப்பட்டது. 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக  இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தியையும்   உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணவருக்கான வருடாந்தரப் போட்டிகளுக்கான தியாகத் திறன் வேள்வி 2016 புதிய திட்டம் பற்றிய செய்தியையும் திருவாளர். பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் வாசித்தார். 

                                                                இசை அஞ்சலி
காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி ஒரு மணிநேரம் இடம் பெற்றது. பார்வையாளர்கள் கானமழையில் நனையும் வண்ணம் மிக அற்புதமாக இசையமுது வழங்கியிருந்தார்கள்.
திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின்  நிகழ்ச்சி அறிவிப்புக்கு அமைவாக தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு செய்வதற்கு ஆரம்ப ஏற்பாடுகள் நடந்த வேளை செல்வி பாரதி லோகதாஸனின் இனிமையான பாடல் எல்லோரையும் கவரும் வண்ணம் ஒலித்தது.
                                         தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு
ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்த அவர்களின் தமையில் தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது. சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் நூலை வெளியிட்டு வைத்தார். முதல் பிரதிகளை திருவாளர்களான சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,  இரத்தினம் கண்ணதாசன், தர்மலிங்கம் லோகேஸ்வரன், பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர் பிரான்ஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம்
அதனைத் தொடர்ந்து அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம் இடம்பெற்றது. நிகழ்வில் உலக சைவப் பேரவைத் தலைவர் திருவாளர்கள். சதாசிவம். பற்குணராஜா, (பிரான்ஸ்) பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர்- பிரான்ஸ்), கணபதிப்பிள்ளை கணா மாஸ்டர், த. மாணிக்கவாசகர்; (பிரான்ஸ்) ஆகியோர்கள் நினைவுரைகள் ஆற்றியிருந்தார்கள். ஓவ்வொருவருடைய உரையில் இருந்தும் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் கல்விப்பணி, அரசியல்பணி, சமூகப்பணி ஆகியனவும் அன்னாரின் பன்முக ஆளுமையும் வெளிப்பட்டிருந்தன.

              அமரருக்கான நாட்டியாஞ்சலியும் கலைஞர்கள் கௌரவிப்பும்
அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்கள் ஒர் இசைப்பிரியர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சூரிக் திருக்கோணேஸ்வர நடனாலய மாணவிகள் முப்பது மணித்துளிகள் நாட்டியாஞ்சலி மிக அற்பதமாக நிகழ்த்தியிருந்தார்கள். இன் நிகழ்வு எல்லோரையும் கவர்ந்திருந்தது. இவர்களை கௌரவிக்கும் முகமாக நடனாலய அதிபர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களை திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார்கள். சிறந்த முறையில் நடனம் ஆடிய மாணவிகளை திருமதி சியாமளா செல்வச்சந்திரன் (பிரான்ஸ்) அவர்கள் நினைவு மாலை அணிவித்து கௌரவித்திருந்தார்கள்.
அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும், தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டின் இறுதி நிகழ்வாக  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளர் திரு முருகேசு பாலசுந்தரம் நிகழ்த்தியிருந்தார்கள். நிகழ்வுகள் அனைத்தும் இரவு 9.30 மணிக்கு இராப் போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
  
              காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                                   ஞாலத்தின் மாணப் பெரிது
                                                                                             -குறள்

                             அனைத்து அன்புடை நெஞ்சங்களுக்கும் நன்றிகள்

ஒரு தசாப்த்தத்திற்கும் முன்னராக 04.12.2004 அன்று காரைநகருக்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் காரைநகர் மக்களுக்கும் ஒர் உறவுப்பாலத்தை உருவாக்கிய சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வரலாற்றிலே இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். 

காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நூற் தொகுப்பு வெளியீட்டையும் உரிய காலத்தில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பொறுப் பேற்று நிறைவேற்ற எடுத்த முடிவு காலத்தின் கட்டாயம்.

 காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அவரது தன்னலமற்ற ஆசிரிய சமூக சேவையை பாராட்டி எடுக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புற நடைபெற உழைத்த, பல வழிகளிலும் உதவி புரிந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

 எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு மிக மிகக்குறுகிய காலத்தில் அமரர். கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டிய  'தியாகச்சுடர்|| நினைவுத் தொகுப்பினை வெளியிட முடிவு செய்த போது அதற்குப் பூரண அதரவு தந்து அணுசரனை வழங்கிய ளு.மு.வு நாதன் கடை உரிமையாளர் 'அறக்கொடை அரசு|| திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு முதற்கண் நன்றி கூறவேண்டியவர்களாக காரைநகர் மக்களாகிய நாம் உள்ளோம்.

 அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா நூற்றாண்டில் அவருடைய தனிப்பட்ட மற்றும் சமூக சேவைகளின் பதிவுகளை இன்றைய இளம் சமூதாயத்தினர்க்கு எடுத்துரைக்கும் சாதனமாக 'தியாகச் சுடர்|| நினைவுத் தொகுப்பு நூல் உங்கள் கைகளில் மலர அதரவுக் கரம் நீட்டிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களை காரைநகர் மக்கள் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அடுத்த தலைமுறையினர் எமது கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு இந் நூல் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை. 
 நாதன் அவர்களுடைய தாய்மண் அபிவிருத்திப் பணிகள் 'மக்கள் சேவையே மகேசன் சேவை|| என்ற தமிழரின் தொன்மையான தத்துவத்திற்கேற்ப ஆலய பரிபாலனங்களுக்கு அப்பாலும் பரந்து விரிந்து மனிதநேயம் சார்ந்த தளங்களில் கிளைபரப்பி நிற்கிறது. பெற்றோரை இழந்த சிறார்கள், ஆதரவற்ற முதியோர்கள், கல்வி, விளையாட்டுத்துறை, கலை, பொருளாதார விருத்தித் திட்டங்கள் என கதிர்காமநாதன் அவர்களின் ஆதரவுத் திட்டங்கள் காரைநகரிலும் தமிழ்மண் எங்கும் பரந்துபட்டது. தற்போது ஒரு வரலாற்று ஆவணப்படுத்தல் முயற்சிக்கும் அவரது ஆதரவு நீட்சியுற்றிருக்கிறது. கோடி நன்றிகள்.  

 'தியாகச் சுடர்|| நினைவுத் தொகுப்பு திறம்பட வெளிவர ஏதியோப்பியாவில் இருக்கும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள்; நூலின் ஆக்கங்களை சரிவரத் தேர்ந்து, தொகுத்து, அச்சிடும் வரையிலான திருத்தங்களைச் செய்து உதவியமைக்கு நன்றிகள். எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழவைச் சேர்ந்தவர்களும் இம் மலருக்கான ஆக்கங்களை ஒழுங்கமைத்தவர்களுமான ஓய்வு நிலை ஆசிரியர் பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கட்கும், ஓய்வு நிலை அதிபர் திரு.மு.சு. வேலாயுதபிள்ளை அவர்கட்கும் இந் நூலிற்கான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொடுத்த வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு. அருணாசலம் வரதராஜன் அவர்கட்கும் எமது நன்றிகள்.

இத்தனைக்கும் மேலாக எமது தாய்ச் சங்கத்தின் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களின் கடுமையான உழைப்பிற்கும், கொழும்பிலிருந்து கொண்டு உதவிய திருமதி. பாலசிங்கம் தவநாயகி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.  

 மாணவர்களின் கட்டுரைகளை கணனியில் பதிவேற்றிய காரைநகர் அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் செல்வி ஆனந்தகுமார் பிரசாந்தினி  அவர்கட்கும், 'தியாகச் சுடர்|| நூலின் முகப்பிற்கான நிழற்படங்களைத் தந்துதவிய சிவத்தமிழ் காவலர் திரு.ஆறுமுகம் செந்தில் அவர்கட்கும். கேட்டவுடன் நூலினை அச்சிட்டுத் தருவதற்று ஒத்துழைத்த அந்ரா அச்சக  நிறுவனத்தினருக்கும், நிகழ்வின் அழைப்பிதழை வடிவமைத்த கனடாவைச் சேர்ந்த திருமதி மலர் குழந்தைவேலு அவர்கட்கும், விழாவுக்கான விளம்பரங்களை தமது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்திய காரைநகர்.கோ, காரைநகர்.கொம் மற்றும் லங்காஸ்ரீ, தினக்கதிர்.கொம் ஆகிய இணையதள நிர்வாகிகளுக்கும்; மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

 இந் நிகழ்விற்கு வருகை தந்து நிகழ்ச்சிகள் வழங்கிய தவில் நாதஸ்வரக் கலைஞர்கள், திருக்கோணேஸ்வர நடனலாய  அதிபர் மாணவிகள், இன் நிகழ்விற்கு பிரதம  அதிதியாக கலந்துகொண்ட ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா, கௌரவ விருந்தினராக வருகைதந்து சொற்பொழிவுகள் ஆற்றிய உலகசைவப் பேரவைத் தலைவர் திரு.சதாசிவம். பற்குணராஜா, (பிரான்ஸ்) திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் திரு.தம்பிப்பிள்ளை மாணிக்கவாசகர் (பிரான்ஸ்) திரு. கணபதிப்பிள்ளை கணாமாஸ்டர் ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. இன் நிகழ்வு திறம்பட நிகழ்வதற்கு ஒலி அமைப்புச் செய்த திரு. திருநாவுக்கரசு கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் நூற்றாண்டு விழா அறிவிப்புக்கு அமைவாக வருகை தந்த ஊரின் உறவுகள் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும்  விழா சிறப்பாக நடாத்துவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் சுவிஸ் காரை அபிருத்திச் சபை சார்பாக நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 இன் நிகழ்வுகள் அனைத்திற்கும் நிதி ஆதரவு வழங்கியவர் ளு.மு.வு நாதன் கடை உரிமையாளர் திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். இப்படியான ஓர் வராலாற்று நாயகனுக்கான விழாவை தானே பிரேரித்து, விழா மற்றும் நூல் வெளியீடு இரண்டுக்குமான முழமையான நிதிப் பங்களிப்பைச் செய்தவர். எமது சபை அளித்த அறக்கொடை அரசு என்ற சிறப்புப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது அறப் பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம். அவருக்கும் எமது நன்றிகள்.
                            
நன்றி

நிகழ்வுகளின் நிழற்படங்களைக் கீழேகாணலாம்.                            

                                   

                                                                                             இங்ஙனம்.
                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                       மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                               செயற்குழு உறுப்பினர்கள்
                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                 22.07.2016

 

 

2016-07-17 17.53.532016-07-17 17.57.17 2016-07-17 19.32.17 2016-07-17 19.32.58 2016-07-17 19.33.33 2016-07-17 20.57.42 2016-07-17 20.57.46 2016-07-17 20.57.50 2016-07-17 20.57.54 2016-07-17 20.58.00 2016-07-17 20.58.13 2016-07-17 20.58.17 2016-07-17 20.58.22 2016-07-17 21.00.11 2016-07-17 21.01.47 2016-07-17 21.01.54 2016-07-17 21.03.37 2016-07-17 21.05.01 2016-07-17 21.05.16 2016-07-17 21.05.32 2016-07-17 21.06.16 2016-07-17 21.06.33 2016-07-21 08.43.46-4 2016-07-21 08.43.47-1 2016-07-21 08.43.47-2 2016-07-21 08.43.47-3 2016-07-21 08.43.47-4 2016-07-21 08.43.48-1 2016-07-21 08.43.48-2 2016-07-21 08.43.48-3 2016-07-21 08.43.48-6 2016-07-21 08.43.48-7 2016-07-21 08.43.49-1 2016-07-21 08.43.49-2 2016-07-21 08.43.49-3 2016-07-21 08.43.50-2 2016-07-21 08.43.50-4 2016-07-21 08.43.50-5 2016-07-21 08.43.51-1 2016-07-21 08.43.51-2 2016-07-21 08.43.53-2 13669531_854626241348770_6519749310507526138_o 13701043_1590746177889166_5684796832034114482_o[1] 13701266_1590746117889172_1596226944715225277_o[1] 13710627_854625688015492_8482611108677507564_o 13717481_1590746477889136_7634193931603184375_o[1] 13719596_1590746307889153_2650624187001917033_o[1] 13719694_854627031348691_8301151393100105582_o 13724829_854626354682092_3584515267238762653_o 13730928_854625744682153_3692976825619748787_o 13735041_854626331348761_7675730041154629432_o 13735126_1590746264555824_4470485323093705414_o[1] banner 8x4 cover-01 (1) Flyer 2016-1 (1)

thiyagaraja2017 274 thiyagaraja2017 285 thiyagaraja2017 289 thiyagaraja2017 290 thiyagaraja2017 297 thiyagaraja2017 301 thiyagaraja2017 306 thiyagaraja2017 313 thiyagaraja2017 321 thiyagaraja2017 324 thiyagaraja2017 328 thiyagaraja2017 329 thiyagaraja2017 339 thiyagaraja2017 349 thiyagaraja2017 350 thiyagaraja2017 351 thiyagaraja2017 357 thiyagaraja2017 359 thiyagaraja2017 399

 

 

 

 

கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

காரை மடந்தை செய்த நற்றவத்தின் பயனாக காரைநகரின் உதய சூரியனாக உதித்து நான்கு தசாப்த காலமாக காரை மண்ணை பூமிப்பந்தில் ஒளிரும் மாணிக்கமாகத் துலங்க வைத்த, எவரும் வஞ்சனை செய்து மறைக்கவோ மறக்கவோ முடியாத மனிதருள் மாமனிதர் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா என்றால் மிகையாகாது.   

அத்தகைய சிறப்பு வாய்ந்த காலம் தந்த கதிரவனான கலாநிதி ஆ.தியாகரசா அவர்களுக்கு எழில்மிகு சுவிற்ஸ்லாந்து நாட்டில் வாழும் எம் காரை மைந்தர்கள் உண்மை அன்புடனும் நன்றி விசுவாசத்துடனும் 17.07.2016 அன்று நூற்றாண்டு விழா எடுத்தனர். இவ்விழாவில் 'தியாகச் சுடர்' என்னும் மலரும் வெளியிடப்பட்டது. 

அவர்களின் நூற்றாண்டு விழா மலருக்கு அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற பழைய மாணவியும் யாழ் பல்கலைகழக உயிரியில் விஞ்ஞான சிறப்புப் பட்டதாரியும் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஒய்வுநிலை அதிபரும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஒய்வுநிலை உதவி ஆணையாளருமாகிய திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். 

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களும் 1974-1978 காலப்பகுதியில் அதிபராகவிருந்த திரு.கே.கே.நடராசா அவர்களும்; திருமதி.தவநாயகி அவர்களை அவர்களின் இல்லம் சென்று அழைத்து வந்து காரைநகர் இந்துக் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர்தர வகுப்பினருக்கு உயிரியல் பாட ஆசிரியராக நியமித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது. அன்றிலிருந்து 22 ஆண்டு காலமாக பல மருத்துவத்துறை, உயிரியல் விஞ்ஞானத்துறை மாணவர்களை உருவாக்கியதுடன் முதலாவது பெண் அதிபராகவும் இருந்து இக்கட்டான இடப்பெயர்வு காலத்தில் பாடசாலையை சிதைந்து போகாமல் கட்டிக் காத்து மீளவும் துணிச்சலுடன் காரைநகரில் ஆரம்பித்து சிறப்புடன் வழிநடத்திய பெருமைக்குரிய அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவாகள் ஆவார்.
 
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்கள் தம் ஆசான் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்கள் மீது சுவரில் வரைந்த சித்திரம் போல அன்றும் இன்றும் என்றும் மாறாத மதிப்புடன் வழங்கிய வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம். 


 

வாழ்த்துச் செய்தி

T.B PHOTO


"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்ததுவே" என்ற தெய்வப் புலவரின் கூற்றுக்கமைய வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாக இன்றும் நினைவு கூரப்படும் எம் அதிபர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு அகவை தினத்தை முன்னிட்டு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வெளியிடும்; மலரிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பேருவகை அடைகின்றேன்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்கள் எமது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர், அதிபர், அரசியல்வாதி என்ற பல் ஆளுமை கொண்ட செயல் வீரனாகச் செயற்பட்டு சேவையாற்றியமை என்றென்றும் நன்றிப் பெருக்குடன் நினைவுகூரப்பட வேண்டியதாகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முன்னோரின் வாக்குக்கு அமைய நல்ல தாய், தந்தை குருவை பெற்றவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாவர். அந்த வகையில் எமது காரை மாணவ சமூகத்தின் எழுச்சிக்கு நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, மொழிப் புலமை, சீரிய தூரநோக்கு சிந்தனை, தன்னலமற்ற சேவை கொண்ட அதிபரின் வழி நடத்தல் அமைந்தமை எம் ஊரின் பொற்காலமே ஆகும். அவரிடம் கல்வி பயின்ற எமது ஊர் மாணவர்கள் இன்று பல்வேறு தகமை கொண்ட செயல் வீரர்களாக உலகம் முழுவதும் பரந்திருக்கின்றார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய மாமனிதருக்கு இந்நூலை நன்றிக் காணிக்கையாக்குதல் சாலப் பொருத்தமானதே. "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே'"என்ற பாரதியின் பாடல் வரிக்கேற்ப புலம்பெயர்ந்த நிலையிலும் தம் ஊரையும் ஊர் வாழ்ந்த நன் மகானின் பெருமையை மறவாது கௌரவிக்கும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் அயராத முயற்சியைப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். 

                                                          திருமதி. தவநாயகி பாலசிங்கம்
                                        B.Sc (Special), PGDE, PGDEM, MA in Teacher Education
                                                                    முன்னாள் அதிபர்
                                           ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர்
                                                           பரீட்சைத் திணைக்களம்.

                                                              ***

காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் “தியாச் சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீடும் சிறப்புற வாழ்த்துக்கள்

                            காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை 
 
                          கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் 
 
                                        நூற்றாண்டு விழாவும் 
 
               "தியாச் சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் 
 
                                     சிறப்புற வாழ்த்துக்கள்.
 
பெரியோர்களின் நினைவேந்தல் என்பது வெறும் சடங்கல்ல. அது கடந்த காலத்தின் சுவடுளைப் பதிவிலிடுவது. அதன் படிப்பினைகளின் வழி இளையோரை வழிநடாத்துவதற்கு ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளர்களின் முயற்சியாகும். நமது தமிழ் மரபில் பல்லாயிரம் வருடங்களாக இருந்த வழிபாட்டு மரபு மாண்டுபட்ட போர் வீரர்கள் சேவையாளர்களின் நடுகல் வழிபாடே. 
 
இன்றும் இறந்து போன தாய் தந்தையை நாம் வழிபடுகிறோம். முன்னுதாரணங்களைப் போற்றுதல் இளையோருக்கு வழிகாட்டுதலாகும். அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் நமது ஊரின் கல்வி வளர்ச்சியல் பாரிய பங்காற்றியவர்.  
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாங்குடிக் கிழார் என்னும் புலவர் எழுதிய புறநாநூற்றுப் பாடல் இங்கு கவனிக்கத் தக்கது. நாட்டிற்காகத் தியாகம் செய்த பெரியோரே, வீரர்களே நம் கடவுளர் அது தவிர நாம் பரவும் வேறோர் கடவுள் இல்லை என்கிறார் அவர். அமரரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் ஊருக்கு ஆற்றிய கல்வி மற்றும் அபிவிருத்திச் சேவைகளைப் பொருத்தவரை அவர் உண்மையிலேயே தியாகிதான் என்பதில் ஐயமில்லை. அவரை மனங்கொள்ளும் இடத்துப் பின்வரும் பாடல் அவருக்கும் பொருந்தும். அவரும் ஊர்ச் சேவைக்கான பாதையிலேயே உயிர்துறந்தார்.
 
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
 
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
 
கல்லே பரவின் அல்லது
 
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே! (புறநானூறு, பாடல் 335)
 
இது தேசத்தின் சேவையாளர்களுக்குத் தமிழ் மரபில் அளிக்கப்படும் மகோன்னதமான இறைநிலை மரியாதைக்குச் சான்று.   
 
அன்னாரது நினைவு போற்றும் இந்நிகழ்வில் எமது சுவிஸ் காரை குடும்பத்தினர் அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். இது அவர்களின் நன்றிக்கடன். செய் நன்றி போற்றுவது தமிழர் பண்பாடு. ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பிரமுகர்களுக்கு எமது நன்றிகள். 
 
இத்துடன் அன்னாருக்கான 'சேவை அஞ்சலியாக' சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் அனுமதியுடன் அச்சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் சார்பில் பின்வரும் நிகழ்ச்சித் திட்டம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 
 
                                       "தியாகத் திறன் வேள்வி 2016"
 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டு வருகிற கட்டுரைப் போட்டி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
 
17- 07- 2016 இல் மேற்படி சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீட்டு வைபவம் ஆகியன இடம் பெறும் இத் தருணத்தில் இந்த உவப்பான செய்தியை மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் சார்பாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிடைகிறேன்.
 
இந்த ஆண்டிலிருந்து மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை விரிவாக்கம் செய்யவுள்ளோம். காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக வருடந்தோறும் "தியாகத் திறன் வேள்வி" என்ற நிகழ்வாக "ஆளுயுர்வே ஊருயர்வு" என்ற மகுட வாசகத்துடன் இடம்பெறும். 
 
இவ்வருடத்தில் இருந்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கர்நாடக சங்கீதப் போட்டி, பொது அறிவு வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் இடம் பெறும். இவை அனைத்தும் அடுத்த மாதத்தில் ஆரம்பித்து எதிர்வரும் மார்கழி மாதம் ஆதிரை நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பதாக நறைவுபெறும். 
 
இந்தப் போட்டிகளைக் காரைநகரிலும் முடிந்தவரை உலகெங்கிலும் காரைநகர் மாணவர்கள் செறிந்து வாழும் முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்ய உள்ளோம். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எமது சகோர புலம்பெயர் சங்கங்களின் உதவியை நாடி நிற்கிறோம். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் அவசியமானவை. கடந்த இரண்டாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம். 
 
விதிமுறைகள், திகதி, போட்டி இடங்கள் ஆகியன குறித்த அறிக்கை விரைவில் வெளிவரும். இது ஊர் மக்கள் அனைவருக்குமான பொதுத்தொண்டு. சிரமம் பாராது மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கூறிய திட்டம் பற்றிய தமது ஆலோசனைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்: swisskarai2004@gmail.com 
 
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்". "ஆளுயர்வே ஊருயர்வு".
 
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 
                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக
                                                                                         இணைப்பாளர்
                                                                       கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
     

சுவிஸ் அபிவிருத்தி சபையினர் சுவிஸ்லாந்தில் 17.07.2016 இல் எடுக்க இருக்கும் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா நூற்றாண்டு விழா சிறப்புற காரைநகர் இந்துக்கல்லூரியின் வாழ்த்துச் செய்தி!

Greeting-News

 

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Greeting-News.pdf

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடாத்த காரைநகர் அபிவிருத்திச்சபையின் வாழ்த்துச் செய்தி!

p.vikneswaran

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/p.vikneswaran.pdf

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Doc1.pdf

 

 

Doc1-1

அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு யாழ்ற்ரன் கல்லூரியின் வாழ்த்துச்செய்தி!

letter-head1

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/letter-head1.pdf

அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு அகவை தினத்தை முன்னிட்டு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வெளியிடும் மலரிற்கு திருமதி. தவநாயகி பாலசிங்கம் (முன்னாள் அதிபர்,காரைநகர் இந்துக் கல்லூரி) அவர்களின் வாழ்த்துச் செய்தி!

Thavanayaki-corrected-word-1

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Thavanayaki-corrected-word-1.pdf

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை நடாத்தும் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும் எதிர்வரும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது!

banner 8x4

Flyer 2016-1 (1)

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை நடாத்தும் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும்!

Flyer 2016-1

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் ஏற்பாட்டில் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நிறைவை ஒட்டிய நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும்.

                             சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் ஏற்பாட்டில் 

                      கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நிறைவை 

                                               ஒட்டிய நூற்றாண்டு விழாவும் 

                                                                தியாகச்சுடர் 

                                              நினைவுத் தொகுப்பு வெளியீடும். 

                       தியாகச்சுடர் நினைவுத் தொகுப்புக்கான ஆக்கங்கள்

                              ஆர்வலர்களிடமிருந்து கோரப்படுகின்றன.


 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது –      அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்: 103

காரைமாதாவின் மடிபூத்த காரை வாழ் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் அறிஞர்களே! பொதுச் சேவையாளர்களே! எழுத்தாளர்களே! நம் மண்ணின் பெருமைக்கு வித்திட்ட ஆன்மீகவாதிகள், விஞ்ஞானிகள், கல்விமான்கள், அரசியலாளர்கள், வள்ளல்கள் ஆகியோரில் ஒருவரும் பல்லாயிரம் மாணாக்கரின் வாழ்வில் ஒளியேற்றியவருமான கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது பன்முக ஆளுமையை நம் சந்ததியினரின் அறிதலுக்காகப் பதிவு செய்யவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

இதன் ஒரு அங்கமாக அன்னாரின் நூற்றாண்டு விழாவை எதிர்வரும் ஆங்கில ஆடி மாதம் 17ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு சுவிஸ் மண்ணில் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் நாடாத்த தீரமானித்துள்ளோம். அவ்விழாவின் போது அவரது வரலாறு, சேவைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் நினைவுக் குறிப்புகளும் அடங்கிய தியாகச்சுடர் என்ற நினைவுத் தொகுப்பு நூலை வெளியிடவும் எமது சபை தீர்மானித்துள்ளது. சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையினரின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழுவினரால் தொகுக்கப்படவுள்ள இந்நூலை கனதியான வரலாற்று ஆவணமாக மலரச் செய்வதில் தங்களது பங்களிப்பையும் நாடிநிற்கிறோம்.

அன்னாரின் வாழ்க்கை வரலாறு, ஆசிரியப் பணி, அதிபர் சேவை, அரசியற் பணி, பொருளாதார அபிவிருத்தி, மற்றும் அவரது அரசியல், கல்வி மற்றும் பொருளாதாரச் சிந்தனைகள் எனப் பல கோணங்களிலும் கட்டுரைகள் அமையலாம். அன்னாருடன் நோரில் பழகியவர்கள், அவரிடம் படித்தவர்கள் நினைவுக் குறிப்புகளையும் வழங்கலாம். அன்னாரின் பணிகளை அவரது சமகால யாதார்த்தங்களுடன் ஒப்ப நோக்கிய ஆய்வுகளும் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன.

தவிர்க்க முடியாத காரணங்களால் மிகக்குறுகிய கால இடைவெளியில் இவ்விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. எனவே தயை கூர்ந்து சிரமம் பாராமல் எதிர் வரும் 7ம் திகதிக்கு முன்பதாக தங்களது ஆக்கங்களை அனுப்பி  நமதூரின் புனிதமான பணிகளிலொன்றான வரலாற்று ஆவணப் படுத்தலில் பங்காளர்களாகுமாறு ஊரவர்கள் என்ற உறவின் பாற்பட்ட அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். 

இவ்வறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக, வேண்டுகோளாகக் கருதி வினையாற்றுமாறு எமது ஊர் அறிஞர்கள், சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை வேண்டிக்கொள்கிறோம். பிறவூரைச் சார்ந்தோருடைய ஆக்கங்களும் வரவேற்படுகின்றன. ஆக்கங்களை அனுப்பவும், மேலதிக விபரங்களை அறியவும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். swisskarai2004@gmail.comமற்றும் eeveraa2000@gmail.com நன்றி. 

                                 நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.

                  "இன்று நாம் செய்யும் நற்கருமங்களே நாட்டின் நாளைய வரலாறு"

 

                                                                                                                இங்ஙனம்.
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்
                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                   சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              29 ஆனி 2016
                
                 

   


  

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

IMG_0174

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் மக்கள் நலன்பேண அர்ப்பணிப்போடு அல்லும் பகலும் ஓயாது செலாற்றிய காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை(11.06.2016) மாலை செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்த இவ்விழாவில் அமரர் தியாகராசா அவர்களின் நிர்வாகத்திறமையும் அர்ப்பணிப்பும்மிக்க சேவையினால் உன்னதமான நிலையைப் பெற்று விளங்கிய கல்லூரியினால் உருவாக்கப்பட்டிருந்த கல்வியாளர்களஇ; பல்துறை சார்ந்த அறிஞர்களஇ; சாதனையாளர்கள்இ காரை மண்ணின் அபிமானிகள் எனக் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் கலந்து கொண்டு காரை மண்ணிற்கு ஒளியேற்றியதுடன் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த ஈடு இணையற்ற சேவையாளரை நினைவு கூர்ந்து மதிப்பளித்தனர்.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவரும் ஓய்வு நிலை ஆசிரியருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை கல்லூரி உதை பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் நில அளவைத் திணைக்கள ஓய்வு நிலை அலுவலருமாகிய திரு.பொன்னையா தியாகராசாவும் பாரியாரும்  S.P.S. நினைவு உதவித் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.சுப்பிரமணியம் அரிகரனும் பாரியாரும் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து பிற்பகல்3.00 மணிக்கு விழா ஆரம்பமாகியது. 

சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் திருமுறை ஓதி கடவுள் வணக்கம் செய்யப்பட்டதுடன் அக வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து  கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்'; என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண் ஒலி பரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று தாம் கற்று வளம்பெற்ற கல்லூரிக்கு மதிப்பளித்தனர்.

அமரரின் திருவுருவப் படத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் கணக்காய்வாளரும் துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை அதிகாரியுமாகிய திரு.கந்தப்பு அம்பலவாணர் மலர் மாலை அணிவித்தார்.  

பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் விருந்தினர்களையும் சபையோரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து தலைவரது உரை இடம்பெற்றது. 

இதனையடுத்து அமரரின் வாழ்க்கை வரலாறுஇ கல்லூரியின் அதிபராக 25ஆண்டுகள் ஆற்றிய பணிகள்இ பொதுப்பணிஇ ஊருக்கான பணி என்பனவற்றை உள்ளடக்கி அவ்வப்போது வெளிவந்திருந்த ஆக்கங்களைத் தாங்கிய ஆவணப்படுத்தும் வகையிலான விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரின் வெளியீட்டுரையினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் மலரின் தொகுப்பாளருள் ஒருவருமாகிய திரு.கனக சிவகுமாரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளரும் மலரின் மற்றைய தொகுப்பாளருமாகிய திரு.மாணிக்கம் கனகசபாபதி முதற் பிரதியை  Double Seal Insulating அதிபரும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவி வருபவருமாகிய தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் கௌரவ பிரதியை அமரரின் உறவினரும் பழைய மாணவருமாகிய திரு.கந்தசாமி தேவகுமார் அவர்களுக்கும் வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.. அமரர் பல துறை சார்ந்து பரந்து பட்ட சேவையினை சமூகத்திற்காக வழங்கியிருந்தார் எனவும் இவை குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டு ஆவணப்படுத்தும்வகையிலான ஓரு முழுமையான நூல் எதிர்காலத்தில் வெளிவருவதற்கான முதற்படியாக இம்மலரின் வெளியீடு; அமையும் என்ற நம்பிக்கையை திரு கனக சிவகுமாரன் தனது வெளியீட்டுரையின்போது வெளிப்படுத்தியிருந்தார்.

தமது மருத்துவ சேவையினாலும் சமூக உணர்வினாலும் காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது கனடா வாழ் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்று கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற கனடாவின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அதே போன்று கல்லூரியின் மற்றுமொரு மகிமை மிக்க பழைய  மாணவரும் சிறந்த கல்வியாளருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தார். கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற பழைய மாணவரும் கனடாவின் பிரபல பல் மருத்துவ நிபணரும் சமய உணர்வாளருமாகிய பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை மேலும் மேன்மையுறச் செய்தார்.

பிரதம விருந்தினர் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டு சிறந்த கல்வியாளராக விளங்கி காரைநகருக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் காரைநகர் இந்துக் கல்லூரியில் 25ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தும் பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்தும் ஆற்றிய அளப்பரிய பணிகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விளங்குகின்றார் எனக் குறிப்பிட்டார.; அதிபராக இருந்த காலத்தில் கல்வித்தர விருத்தியில் எவ்வளவு கவனம் செலுத்திச் செயற்பட்டாரோ அதேயளவு கவனத்தினை மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் வழங்கி செயலாற்றியிருந்ததுடன் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தெரிவு செய்து பரிசில்கள் வழங்கி வந்துள்ளார். கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்ற இவர் ;தாம் ;கல்வி பயின்ற காலத்தில் பாடசாலையில்  கச்சேரி செய்து மற்றையவர்களை மகிழ்வித்தவர் எனவும் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

விழா சிறப்புற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார் விழா அரங்கில் வாசித்தார்.

கௌரவ விருந்தினர் பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா அதிபராக சேவையாற்றிய காலத்தில் பாடசாலையின் உயர்வுக்காக இவர் ஆற்றிய சாதனைப் பணிகள் இவரது சேவைக் காலத்தை பொற்காலமாக அடையாளப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் கல்வியைத் தொடர்ந்து கற்று பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் கல்வியானது ஒருவரது வாழ்நாள் முழுவதற்குமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுடன் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் பாராது அனைவரையும் சமமாக மதித்து செயலாற்றியவர் எனவும் குறிப்பிட்ட சிவகுமாரன,; தமது உரையின் இறுதியில் அமரரின் பெருமைகளை கவிதை வடிவில் சபையில் சமர்ப்பித்தமை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

காரை அபிவிருத்தி சபை வழங்கிய வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக  உறுப்பினர் திருமதி.பிரபா ரவிச்சந்திரன் விழா மேடையில் வாசித்தார். 

சிறப்பு விருந்தினர் பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் தமது உரையில் அமரர் தியாகராசா காரை மண்ணுக்கு ஒளியேற்றி வைத்து தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிய கர்மவீரர் என்பதுடன் காரை மண்ணில் தோன்றிய சேவையாளர்களுள் முதன்மையானவராக விளங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டதுடன்  அமரரால் தரமான கல்வியை வழங்கும் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட இந்துக் கல்லூரியிலிருந்து தாம் பல்மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டதுடன் அக்காலகட்டத்தில் அதிக அளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தார். அமரர் தியாகராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை அட்டவணைப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆற்றிய மருத்துவகலாநிதி ஆதிகணபதியின் விரிவான உரையானது தாம் நேசித்த மக்களுக்காக இத்துணைப் பணிகளை வெற்றிகரமாக சாதித்தாரே என சபையோரை ஒரு கணம் வியக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது எனலாம்.

பழைய மாணவர் சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை பிரபல ஆசிரியருமாகிய சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவரும் கணக்காளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.தம்பிஐயா பரமானந்தராசாஇ  பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுநிலை உதவி நிலஅளவையாளர் நாயகமுமான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளைஇ கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் துறைமுக அதிகார சபையின் பிரதம காசாளருமாகிய திரு.முருகேசு சின்னத்துரைஇ வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் ஆகியோர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா மக்களுக்காக விட்டுச்சென்ற வரலாற்றுப் பணிகளை பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கி உரையாற்றியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பலரும் அமரர் தியாகராசாவின் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினைப் பாராட்டி நன்றி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வுரைகளின் இடையே கல்லூரியில் நடைபெற்ற அமரரின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வரும் அறிவிப்பாளருக்கான தேசிய நிலை போட்டியாளருமாகிய செல்வன் விநோதன் கனகலிங்கம் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.

சிறந்த பேச்சாளராக மிளிர்ந்து வருகின்ற செல்வன் விநோதன் அமரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னாரது வரலாற்றுப் பணிகளை தனது பேச்சாற்றல் ஊடாக வெளிப்படுத்தியிருந்த பாணி சபையோரை வெகுவாக கவர்ந்திருந்தது. 


பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் இலங்கை வங்கி அதிகாரியுமான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் சிறப்புற்று விளங்கிய அமரர் கலாநிதி தியாகராசாவின் நூற்றாண்டு விழா நிறைவுற்றது.

படங்கள்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி

செய்தி பிரதியாக்கம்: திரு.கனக.சிவகுமாரன்

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

' †

‘ †

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று அதிபர்,வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை(11.05.2016) அன்று கனடா செல்வச் சந்நிதி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி.வி.விஜயரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். 

கல்வியாளர்களும் காரைநகர் மக்களும் கலந்து கொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழா பற்றிய முழுமையான விபரம் பின்னர் எடுத்து வரப்படும். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம். 

காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001

 

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது.

அமரர் அவர்களின் 100வது விழா அவர் 25ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் 17-04-2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்வில் பல கோணங்களில் அவரது பணிகள் பலராலும் நினைவுகூரப்பட்டது. காரைநகரின் அடையாளத்தை பலதுறையில் ஐந்து தசாப்த காலம் நிலைநிறுத்தியவர் அமரர் தியாகராசா அவர்கள்.

காரைநகர் அபிவிருத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்து அவரின் சிந்தனையின் அடிப்படையில் எமது ஊரை வளப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு ஆகும். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த அமரர் தியாகராசா அவர்கள் எப்பொழுதும் எம்மக்களின் நினைவில் போற்றி வணங்கக்கூடியவர் என்றால் மிகைஒன்றும் 'இல்லை.

அவரைச் சிறப்பித்து விழா எடுக்கும் கனடா காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ப.விக்கினேஸ்வரன்              இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
தலைவர்                                         செயலாளர்                                   பொருளாளர

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/Doc1-scan.pdf

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

UK LOGO
அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிற்கு,
 
 அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா
 
 காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த ஓயாது உழைத்தவரும்,  காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமான அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்துவதையிட்டு நாம் எல்லோரும் பெருமிதம் அடைகிறோம்.
 
 அன்னாரின் பணியினை அனைத்து காரை மக்களும் தொடர்ந்து பேணுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இவரின் பணிகள் காரைநகரை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டு சென்றதென்றால் அது மிகையாகாது. அன்னாரின் அளப்பெரிய பணிகளை இந்த நூற்றாண்டு விழா மூலம் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கு வழிசமைத்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நிர்வாகத்தினரின் இந்த முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியதே!
 
 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொண்டு இந்த விழா சிறப்புற அமைய பிரித்தானிய வாழ் காரை மக்கள் மற்றும் காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
 
 நன்றி.
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்  

KWSUK-KaraiHinduCollege-OSA-Canada-100thAnniversary-of-Dr-Thijagaraja-07062016

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா, எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

              அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காநைகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த இறுதி மூச்சு வரை ஓயாது உழைத்த வெள்ளி விழா அதிபர், காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்விழா எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere  சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

விழாவின் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றது.

                     நன்றி.
காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

Anniversary Agenda of Late Dr.A.Thiyagarajah (1)

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா

Dr.A.Thiagarajah-flyer

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் கடந்த 17.04.2016 ஆகும்.  

பாடசாலையின் வரலாற்றில், கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலமே 'பொற்காலம்' என்று அறிஞர்களினால்  போற்றப்படுகின்றது. 

அந்தவகையில், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னாரின் நூற்றாண்டு விழா 17.04.2016 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் நினைவுப்பேருரை, சிறப்புரைகள், சிந்தனை அரங்கம், இசை நிகழ்ச்சி, மாணவர் நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.

IMG_0213 IMG_0214 IMG_0215 IMG_0216 IMG_0217 IMG_0218 IMG_0219 IMG_0220 IMG_0222 (1) IMG_0229 IMG_0232 IMG_0234 IMG_0236 IMG_0237 IMG_0243 IMG_0245 IMG_0246 IMG_0253 IMG_0257 IMG_0262 IMG_0263 IMG_0268 IMG_0269 IMG_0272 IMG_0277 IMG_0279 IMG_0280 IMG_0282 IMG_0284 IMG_0289 IMG_0293 IMG_0294

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா இன்று 17.04.2016 நடைபெற்றது

Older posts «