Category Archive: கட்டுரைகள்

மறைந்தும் மறையாத மாமனிதர் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

மறைந்தும் மறையாத மாமனிதர்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

yogo

 

 

 

 

 

 

 

கலாபூஷணம் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்

 

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாய்  சிறந்த அறிவுப் புலமை மிக்க பண்பாட்டாளராய், ஊருக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய மனப்பான்மை உடையவராய் பொருளாதாரம் பற்றிய தெளிந்த சிநதனையாளராய் கல்வியின் மூலம் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத இலட்சிய நோக்கம் கொண்டவராய் வாழ்ந்தவரே அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள்.

ஆன்மீகப்பணி கல்விப் பணி, சமூகப் பணி, பொருளாதாரப் பணி, அரசியற் பணி என்ற வகையில் பன்முகப்பட்ட சிந்தனையாளராய் விரிந்து பரந்த தமது செயற்பாடுகளைத் தூர நோக்கில் அமைத்துக்கொண்டமையால் இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

                            "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
                              பண்பு பாராட்டும் உலகு"   – (994)

1916ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த இவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு அதே தினத்தில் அவர் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த காரைநகர் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டது.

பின்னர் அவரது அன்பர்கள் ஆதரவாளர்கள் ஒனறிணைந்து வெற்றிநாதன் அரங்கில் இவ்விழாவைக் கொண்டாடினர். இம்மாதம் கனடா வாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் கனடாவிலும், இன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் சுவிஸிலும் கொண்டாடுகின்றனர். இதற்கு அவரது முழுமையான செயற்பாடுகளே காரணம்.


                            "பிறப்பொக்கும் எல்லா உயிர்;க்கும் சிறப்பொவ்வா
                             செய்தொழில் வேற்றுமை யான்" – (972)

அவரது செயற்பாடுகள் யாவும் நம் கண்முன் விரிந்து பரந்து கிடக்கின்றன. எனவே அவர் காரைநகர் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து வருகிறார்.

காலத்தால் அழியாத தன்னலமற்ற சேவைகளைச் செய்த ஒரு பெரும் சாதனையாளர். சமூக சிந்தனையாளர், நாட்டுப்பற்றாளர்.

நாட்டு முன்னேற்றங்கருதி அவர் செய்த செயற்பாடுகள் ஒன்றா? இரண்டா?

1.    காரைநகர் – சிவன்கோயில் வீதி (புதுறோட்)

2. காரைநகர் – கோவளம் வீதி( வெளிச்சவீடு) முதலான வீதிகளையும்

3.    காரைநகர் மக்களுக்கான மின்சார வசதிகளையும்

4.    குழாய்நீர் – குடிநீர் வசதிகளையும் அரச உதவிகளைப் பெற்று ஏற்படுத்திக் கொடுத்தார்

5.    தபாற் கந்தோருக்கான புதிய கட்டடம்

6.    வியாவில் – உபதபால் நிலையம்

7.    கிராமிய வங்கி

8.    இலங்கை வங்கிக்கான கட்டட நிர்மாண உத்தேசம்

9.    காரைநகர் – துறைமுகத்திற்கு அண்மையில் இ.போச பேருந்துச் சாலை

10.    கோவளம், கசூரினா – பீச், கல்லுண்டாய் வீதி இ.போச.ச சேவை.

ஆகியன ஆக்க பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடுகள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக
இவரால் வடிவமைக்கப்பட்ட

11. வேணன் அணைக்கட்டு

                                "கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
                                 பெருமையின் பீடுடையத இல்" – (1021)

  சமூகச் செயற்பாடுகள் மட்டுமன்றி சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் மிக்க இவரது கல்விச் செயற்பாடுகள் சில வரையறுக்கப்பட முடியாதவை. பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக வளங் களைக் கூட வசதிகளை ஏற்படுத்தல், தரமான ஆசிரியர்களை இணைத்துச் செயற்படுத்தல், மாணவர் ஒழுக்க நலன்களில் அக்கறை, விளையாட்டுத்துறை, இசைத்துறை, போன்று பிறசெயற்பாடுகளையும் ஊக்குவித்தல் என்பன. சிறந்த ஹொக்கி அணி வீரர். உதைபந்தாட்டத்திலும் அதிக ஈடுபாடு சங்கீதக் கலையில் ஆர்வம் எனவே சமய சமூக நிகழ்வுகளில் இசைக் கலையை ஊக்குவித்தார்

வெள்ளிவிழாக் கண்ட வரலாற்று அதிபர், வைரவிழா, பவளவிழா, முத்துவிழா, என்ற முப்பெரும் விழாக்களையும் நடத்தி முடித்த ஒரே அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

                                   "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
                                    அருமை உடைய செயல்" (975)

பொருளாதாரத் துறையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். நாட்டு மக்கள் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். மாணவர் ஒழுக்க சீலராய் வாழ வேண்டும் என நாட்டு முன்னேற்றம் கருதி இரவும் பகலும் அயராது உழைத்தார். அதுவே அவரது இலட்சியமாகும்.

  இவரது சிந்தனையில் மலர்ந்த பொருளாதாரம் பற்றிய எண்ணக்கருவே இவரது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை.

"இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பும்"

என்ற ஆய்வு நூல் இந்நூலைப் பாராட்டி புதுடெல்கி பல்கலைக்கழகம் "கலாநிதிப் பட்டம்" வழங்கி இவரைக் கௌரவித்தது.

  கல்வி கலையில – அஃது கால இட எல்லைக்கு அப்பாற்பட்டது. இவர் கலாநிதிபபட்டம் பெற்ற போது வயது 63 அவரது எண்ணம், சிநதனை, செயல் எல்லாம் நாட்டின் முன்னேற்றம் ஒன்றை நோக்கியே செயற்பட்டன. எனவே அவர் எக்காலத்திலும் ஓய்ந்திருக்கவில்லை.

அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் காரை மண்ணிறகுப் பெருமை தேடித்தந்துள்ளன. இதனால் அவர் மறைந்தாலும் மறையாத மாமனிதராய் மக்கள் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

           "கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
            சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு" (981)

                                                                            நன்றி

                                                           "ஆளுயர்வே ஊருயர்வு"
                                  "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                          இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          14 – 05 – 2017

cover-01 (1)

 

 

 

 

 

 

 

 

 

 

கல்லூரிக்கு பெரும் புகழ் நிறுவிய இரு அதிபர்கள்

கல்லூரிக்கு பெரும் புகழ் நிறுவிய இரு அதிபர்கள்

DSC_4865-Copy-Copy

 

 

 

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 
நூற்றாண்டையொட்டி 17.07.2016இல்  வெளியிட்ட
“தியாகச் சுடர்“ நினைவுத் தொகுப்புக் கட்டுரை.

கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, ஓய்வுநிலை ஆசிரியர், காரை இந்துக் கல்லூரி.

ஆங்கில இந்துப் பாடசாலையென 1888 இல் தாபிக்கப்பட்ட காரைநகர் இந்துக் கல்லூரியில் இதுவரை காலமும் இருபத்தைந்து அதிபர்கள் இக்கல்லூரியை வழிநடத்தியிருக்கினறார்கள். இவர்கள்

அனைவரும் கல்லூரியை கட்டிக் காத்து, பாரம்பரியத்தைப் பேணி வளர்ந்த பெருந்தகையாளர்கள், இவர்களில் கல்லூரியைத் தாபித்த திரு.மு.சயம்பு அவர்களும் உயர் கல்லூரியாக வளர்த்தெடுத்த திரு.ஆ.தியாகராசா அவர்களும் கல்லூரிககு பெரும் புகழ் சேர்ததவர்களாவார். இவர்கள் கல்லூரியில் மிக நீண்ட காலம் கடமையாற்றிய பெருமைக்குரியவர்கள். சயம்பு உபாத்தியார் 43 வருட காலங்கள் ஆசிரியராக அதிபராக மனேஜராக, உள்ளூர் மனேஜராக கடமையாற்றியுள்ளார். திரு.ஆ.தியாகராசா அவர்களும் 3 வருடங்கள் ஆசிரியராகவும் 25 வருடங்கள் அதிபராகவும் சேவையை ஆற்றியவராவர்.

நாவலர் வழிவந்த அருணாசல உபாத்தியார் அவர்கள் காரைநகரில் சைவ ஆங்கில வித்தியாலயங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்றும் உயர் நோக்கை கொண்டவர். நல்லூர் முத்திரைச் சந்தியில் வாழ்ந்தவரும் ஆங்கில அறிவும் சைவப் பண்பும் மிக்கவராக விளங்கிய திரு.முத்து சயம்பு அவர்களை ஆசானாக அழைத்து வந்து 'இந்து ஆங்கிலப் பாடசாலை என்னும் பெயரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார். இதன் பயனாக முத்து சயம்பு அவர்கள் மாணவர்களின் அறிவுப் பசியைப் போக்கும் ஆசானாகவும் தலைமைப் பொறுப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். அக்காலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். ஆங்கில மொழி, அரசமொழி, கிறிஸ்தவமதம் தழைத்தோங்கிய காலம், சைவப் பிள்ளைகள் ஆங்கிலக் கல்விக் கற்க பிறமத கல்லூரியில் பயில வேண்டிய சூழ்நிலை. இந்நிலையில் பணி தொடங்கிய திரு.சயம்பு அவர்கள் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முறையில் கற்பித்தார். சைவப் பண்பை வளர்த்தார். இதனால் சைவப் பிள்ளைகள் இத்தாபனத்தை நாடினர். இதனால் மத மாற்றத்தையும் தடுத்தார். இவரின் முயற்சியினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாக சுடர்விட்டு வளரத் தொடங்கியது. 1905 ஆம் ஆண்டு பாடசாலைக்கென ஒரு மண்டபமும் இரு வகுப்பறையும் கட்டப்பட்டு அக்காலப் பகுதியில் யாழ்.அரசாங்க அதிபராக விளங்கிய திரு.W.துவைனம் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. 1912இல் உதவி நிதி பெறும் பாடசாலையாக உயர்த்தப்பட்டது. இவையாவும் சயம்பு அவர்களின் கல்விச் சாதனையாகக் கருதப்பட வேண்டிய விடயமாகும்.

திரு.ஆ.தியாகராசா அவர்கள் மலேசியாவில் ஆரம்ப சிரேஷ்ட கல்வியைக் கற்று சென்னையில் அடையாறு கலாஷேத்திரத்தில் உயர்கல்வி பயினறு B.A.பட்டம் பெற்றார். M.A.என்னும் முதுமாணிப்

பட்டத்தையும் இலக்கியத் துறையில் M.Lit.என்னும் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர் தாய், தந்தையர் வசிக்கும் மலேசியா செல்லாது “ஊருக்கு உழைத்திடல் யோகம்“ என்னும் பாரதி

பாடலுக்கேற்ப தம் ஊரான காரைநகரில் பணிபுரிய வந்தமை போற்றுதற்குரிய செயலாகும். 1943ஆம் ஆண்டு தொடக்கம் இக் கல்லூரியின் ஆசிரிய சேவையாற்றினார். 1946.01.16ஆம் நாளில்

அதிபராகப் பொறுப்பேற்றார்.

  உற்றார், நாட்டவர் ஊரார் – இவர்க்கு

  உண்மைகள் கூறி இனியன செய்தல்

  நற்றவம் ஆவது கண்டோம்- இதில்

  நல்ல பெருந்தவம் யாதொன்றுமிலலை – என்ற பாரதியின் வாக்கை உணர்தத இவர் தம் ஊர்

  பணியானது நல்ல பெருந்தவம் எனக் கருதிச் செயல்பட்டார் போலும்.

இவர் பணியாற்றத் தொடங்கிய நாளில் கல்வி அமைச்சராக இருந்த C.W.W.கன்னங்கரா அவர்களால் உருவாக்கப்பட்ட இலவச கல்வித்திட்டம் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கியது.

இலவசக் கல்வியினால் மாணவர்கள் தொகை பெருகியது. அமெரிக்க மிஷனால் நடத்தப்பட்டு வந்த சாமி பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில விததியாசாலையில் கல்வி பயினற மாணவர்கள் பலர் இக் கல்லூரியை நாடி வந்தனர். மாணவர்கள் தொகைக்கு ஏற்ப பாடசாலைக் கட்டடங்கள், தளபாடங்கள், விஞ்ஞான கூடங்கள் விஸதரிக்க வேண்டிய அவசரமும் அவசியமுமான நிலை அதிபருக்கு ஏற்பட்டது.

இதனைக் கண்டு துவளாது ஆதரவாளர்களின் உதவியைப் பெற்று இரசாயனம், பௌதீகம், தாவர, விலங்கியல் ஆகிய விஞ்ஞான பாடங்களுக்குத் தனித்தனி ஆய்வுகூடங்களை நிறுவினார்.

மனையியல் புவியியல், நூல் நிலையம் ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் யாவற்றையும் கட்டி முடித்தார். வடக்குப் பகுதி 'ப' வடிவில் கட்டடங்களுக்கு நடுவில் பெரியதொரு முற்றமுமாக

அமைத் திருந்தார். மேலும், உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.N.நடராசா K.C அவர்களின் ஞாபகார்த்த மண்டபம் ஒன்றை அவரது பாரியார் தங்கம்மா நடராசா அவர்களால் 1950இல் கட்டி முடிக்கப்பட்டது.

இம் மண்டபம் அமைப்பதற்கு உந்து கோலாக இருந்தவர் திரு.ஆ.தியாகராசா அவர்களே. இப் பெரிய மண்டபம் போல் இன்று வரை யாரும் காரைநகரில் அமைத்ததில்லையெனலாம். இம்

மண்டபத்தையும் இதற்குரிய நிலப்பரப்பையும் மாணவர்களுக்கு அத்தியாவசியமான விளையாட்டு மைத்தானத்துக்குரிய பெரும் நிலப்பரப்பையும் தர்ம சாதனமாகப் பெற்றுக்கொண்டார். இத்தகைய

பௌதீக வளங்கள் யாவும் தியாகராசா அவர்கள் ஆற்றிய கல்விச் சேவைக்கு வழங்கிய பரிசில்களாக

கருதலாம்.

திரு.ஆ. தியாகராசா அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கல்வித்திட்டத்தில் பெரும் மாற்றங்கள்

ஏற்பட்டன.

1. இலவசக் கல்வித்திட்டம்

2. தாய்மொழிக் கல்வி

3. அரசினர் பாடசாலையாக மாற்றப்பட்டமை

 

இத்திட்டங்களை முன்னெடுத்துத் திறமையாகச் செயற்பட்டு வெற்றிகண்டார். இதனால் கல்லூரி

வளர்ச்சியில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

சயம்பு அவர்கள் காலத்தில் வடமாகாண சபையால் நடத்தப்படும் J.S.C என்னும் பரீட்சை உயர் பரீட்சையாக கருதப்பட்டது. இப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சாதனையை நிலைநாட்டி பெரும் புகழை நிறுவியுள்ளார் தியாகராசா காலத்தில் அரசினால் நடத்தப்பட்ட S.S.C பரீட்சை உயர் பரீட்சையாக விளங்கியது. கால மாற்றத்தின் பின் H.S.C பரீட்சை உயர் பரீட்சையாகவும், பல்கலைக் கழக புகுமுகப் பரீட்சையாகவும் விளங்கியது.இப் பரீட்சைகளுக்கெல்லாம் மாணவர்கள் தோற்றி உயர்பெறுபேறுகளைப் பெறுவதற்கு அதிபர் தியாகராசா அவர்களின் பங்களிப்பு பெரிதாக விளங்கியது.  இதனால் இக் கல்லூரியை 1 AB பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

பாடசாலை பாட விதானங்களில் எவ்வாறு முக்கியத்துவம் செலுத்தினார்களோ அவ்வாறே விளையாட்டுத்துறையிலும் கவனம் செலுத்தினார். சயம்பு அவர்கள் காலத்திலும் அவர்களுக்குப்

பின் வந்த காலத்திலும் தேசிய மட்ட ரீதியில் மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றியீட்டி கல்லூரிக்குப் பெரும்புகழை நிலைநாட்டியுள்ளனர். திரு.தியாகராசா அவர்கள் இல்ல மெய்வல்லுநர் போட்டிக்குரிய பயிற்சியை தாமே முன்னின்று பயிற்றுவிப்பார். உதை பந்தாட்டப் போட்டிகளில் யாழ்.பிரபல்யமான

கல்லூரிகளுடன் போட்டியிட்டு சாதனையை நிலை நாட்டிய பெருமையும் இக் கல்லூரிக்கு உண்டு.

சயம்பு அவர்களும் தியாகராசா அவர்களும் உனக்கு நீயே உண்மையாக இரு (To Thine Own Self Be True) என்னும் கல்லூரி மகுட வாசகத்தை திருமந்திரமாகக் கொண்டு செயல்பட்டவர்கள். தன்னலமற்ற சேவையைப் பெரிதும் ஆற்றியவர்கள். தம் கடமை நேரம் நோக்காது அல்லும் பகலும் உழைத்தவர்கள். தாம் வேறு கல்லூரி வேறு என்று கருதியவர்கள் அல்லர். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்“ என்பதில் அசையாத நம்பிக்கையுடையவர்கள். இதனை மாணவர்கள் மத்தியிலும்

நிலைநாட்டியுள்ளனர். இவர்களிடம் கற்ற மாணவர்கள் அவர்களை அணுகுமிடத்து பயம் கலந்த அபிமானமும் அவர்களின் நற்செயல் காரணமாக பக்தி (பயம் + பக்தி = பயபக்தி) நிறைந்த மாணவர் களாக விளங்குவதைக் காண முடிகிறது.

கல்வியே சமூகத்தின் திறவுகோல் என்னும் வாக்குக்கிணங்க கல்வியை முழுமையாக வழங்கி பண்பட்ட நாகரிகம் மிக்க காரைநகரை கல்விச் சமூகமாக மாற்றியமைத்த பெரியவர்கள் இவர்கள்.

சயம்பு அவர்கள் அக்காலத்திற்கு அவசியமான ஆங்கிலக் கல்வியைப் போதித்தார். என்பதை

   இயம்பிடு ஆங்கிலக் கல்வியை

   வியன்மிகு காரைநகர் தன்னில்

   நலம்பெற உரைத்த நல்லாசான் – என்று

   காரை மண் தந்தவித்துவான் F.X.C. நடாராசா அவர்கள் “காரை மான்மியம்“ நூலில் குறிப்பிட்டுள்ளார். சயம்பு அவர்களிடம் ஆங்கிலக் கல்வி பெற்று மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு

களுக்குச் சென்ற மாணவர்கள் அரச தொழில்பெற்று உயர் பதவி அடைந்து வளமாக வாழ்ந்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்துள்ளனர். இதனை காரைநகர் மான்மியம்

என்னும் நூல் “சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு வந்திலரேல்“ பெருங்குடி மக்களாய் திகழும் மலாய் நாட்டுப் பென்சனியர்மார் (அரச ஓய்வாளர்கள்) நம்மூரில் தோன்றியிருக்க மாட்டார்கள். என்று

குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல் தியாகராசா அவர்களிடம் கற்ற பல்லாயிரம் மாணவர்களும் பல்வேறு துறைகளிலும் உயர்பதவி பெற்று நம்நாட்டிலும் வெளிநாட்டிலும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரிக்கு பெரும் புகழ் நிறுவிய இரு அதிபர்களின் நாமங்களும் என்றும் நிலைத்திருக்கும். இக் கல்லூரிக்கு பல பெயர்கள் வழங்கப்பட்டிருந்தபோதும் “சயம்பு பள்ளிக்கூடம்“ என்பதை

சயம்பற்றை பள்ளிக்கூடம் என்று கதைப்பதை இன்றும் காணலாம். தியாகராசா அவர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் 1983இல் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை(33 ஆண்டுகள்)

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் என்று பெயர் பூண்டு இக்கல்லூரி விளங்கியுள்ளது என்றால் இவரின் பெருமை தான் என்னே!

இவர்களின் பூதவுடல் அழிந்தாலும் புகழ் உடல் என்றும் அழியாது நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


                                                “ஆளுயர்வே ஊருயரவு“ 
                        “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்“ 
 
                                                                                        இங்ஙனம் 
                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை 
                                                                        செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள் 
                                                               மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                         08 – 05 – 2017         

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு – வெடியரசனும் குடிமக்களும், காரைநகர்

1.KARAINAGAR VEDIYARASAN BOOK COVER_split_1
1-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_124
2-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_81
3-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_82
4-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_83
5-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_84
6-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_85
7-KARAINAGAR VEDIYARASAN BOOK_split_86

 

 

 

 

                         விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு

                                   வெடியரசனும் குடிமக்களும்

                காரைநகர் வரலாறு பார்வையிட பக்கம் (130-138)

KARAINAGAR VEDIYARASAN BOOK

ஊர் மேம்பாட்டில் நாடகக் கலையின் சாத்தியமான பங்களிப்பு

ஊர் மேம்பாட்டில் 

நாடகக் கலையின் சாத்தியமான பங்களிப்பு 

 

அறிமுகம்: தமிழ்ச் சமூகத்தில் நாடகம் 

எம் தமிழ்ச் சமூகத்தில் ஆடுதல் என்ற சொல் மிகவும் ஆதியானது. பழங்குடிச் சமூகத்தில் ஆடற் கலையைக் குறித்தே இவ்வார்த்தை தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் உடல் சார்ந்த தொழிற்பாடுகளைக் குறிக்கும் பல வினைச் சொற்களில் ஆடு என்பது பின் பகுதியாக அமைகிறது. உதாரணமாக, நீராடு, விளையாடு, போராடு, சதிராடு,.. போர் இல்லாத காலங்களில் அல்லது வெற்றியைக் கொண்டாடும் விழாக்களில் மன்னன் படையினருக்கு கள்ளும் உணவும் வழங்கி ஆடிப்பாடி மகிழ்வது உண்டாட்டு ஆகும். சங்கப்பாடல்களில் பதிவாகியிருக்கிறது. முருகன் பெண்களைத் தொற்றிக் கொண்டு துன்பம் விளைவித்தால் வேலன் வெறியாட்டு நிகழ்த்தி முருகனுக்குப் பரிகாரம் செய்து பெண்ணைக் குணப்படுத்துவர். 

ஆடுதல் தமிழ் மரபில் இறைநிலைக் கலை. புனிமானது. இறைவனே கூத்தன். கூத்தின் மூலம் இறைவன் ஐந்தொழில்கள் புரிவது பற்றிய ஈழத்து அறிஞர் ஆனந்தக்குமாரசுவாமியின் ஆங்கில நூலான சிவானந்த நடனம் (The Dance of Shiva) மேற்கிலும் மிகப்பிரபலமானது. அது போல் பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி அவர்களது கலாநிதிப் பட்ட ஆய்வு நூல் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்ற ஆய்வு நூலும் தமிழ் நாடக ஆய்வில் முக்கிய நூலாகும்.

ஆடல் கூத்து நாடகம் நடனம் அம்பலம் அரங்கம் என்பன தமிழர் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை. பரகசியமான விடயத்தை அம்பலத்துக்கு வந்து விட்டது அல்லது அம்பலமாகியது என்போம். தில்லையில் அம்பலம் சைவர்களுக்கு. அரங்கமாநகரான திரு அரங்கம் வைணவர்களுக்கு. ஆண்டாளின் மொழியில் கண்ணனும் கூத்தனே. 

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து 
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே!

என்கிறது அவரது நாச்சியார் திருமொழி.

அம்பலம் என்பது கூத்துக் களரியைக் குறிப்பது. கூத்துக் கட்டுதல் என்பார்கள். கட்டுதல் என்பது கற்பனையில் உருவாக்குதல் என்றபொருளில் தான் கட்டுரை என்ற சொல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் திருப்பாவையில் பின்வரும் வரிகள் இதை உணர்த்தும். 

"வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்"

உன் கற்பனையான பொய்கள் நன்றாக உள்ளன. முன்னாளிலேயே உன் பேச்சை அறிவோம் என்பது பொருள். 

கட்டுக்கதை என்ற பெயர்ச் சொல்லும் கதைகட்டுதல் என்ற வினைச்சொல்லும் அது ஓர் கலையாக நம்மிடம் பண்டை நாளில் இருந்ததையே உணர்த்துகின்றன. கட்டிய கதை கட்டு ஆகும். இன்னும் நடனக்கலையில் அடவு போல கட்டு என்ற சொல் இருக்கிறது. கட்டு ஆடுதல் என்பது கூத்தாடுதலாகும். இன்னும் தென்னிந்தியாவில் கட்டு நாயக்கர் என்ற கூத்து கலைசார்ந்த குலத்தினர் உள்ளனர். ஈழத்திலும் கட்டு ஆடிகள் உள்ளனர். இவர்கள் கூத்துக்கலைஞர்கள். இன்னும் இலங்கையின் மேற்கில் ஆண்டியம்பலம், அம்பலத்தடி இடங்கள் உண்டு. அவற்றின் அருகேதான் கட்டு நாயக்கர்களைக் குறிக்கும் கட்டுநாயக்கா என்ற இடம் உண்டு என்பது மேலும் ஆய்வுக்குரிய விடயம். 

"மண்டினி ஞாலத்து மன்னுயிர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது சீத்தலைச் சாத்தனின் மணிமேகலை காப்பிய வரும் வரிகள். பசிப்பிணி போக்கி அறம் வளர்க்க ஆலயங்களில் அன்னதானத்திற்கு மடங்கள் இருந்தன. அதுபோல் கலைகள் வளர என ஆலயங்களில் அம்பலங்கள் இருந்தன. வடமொழியில் சிற்சபை, கனகசபை, சித்திரசபை என்பனவும் கோயில்களில் உள்ள இக் கூத்தரங்குகளையே குறிப்பன. தஞ்சைப் பெருங்கோயில் வெளிப்பிரகார நடுவில் கல்லினால் ஆன வெளிஅரங்கு அமைந்துள்ளது. 

அம்பலம் என்று முடியும் குறிச்சி காரைநகரில் உள்ளதா தெரியவில்லை. ஆனால் காதுகுத்தல் மற்றும் காவடியாடுபவர்களுக்கு முள் ஏற்றும் பயிற்சியுடையோர் இருந்திருக்கின்றனர் இன்னமும் "முள்ளேத்தி" என்ற அடைமொழி சில குடும்பங்களுக்கு உண்டு.  

வேலன் வெறியாட்டு கூத்து நாடகம் நடனம் காவடி சன்னதம் தெய்யான் கூத்து ஆரியக் கூத்து கோலாட்டம் குதிரையாட்டம் பொம்மலாட்டம் பாவையாட்டம் என்ற சொற்கள்;; இன்னும் தமிழில் வழக்கில் உள்ளவை. தொன்மை மகளிர் பூப்பந்தாடுதல் போல் பூவில் பாவை செய்து நீராடி இறைவனை வேண்டும் நடைமுறையில் இருந்துதான் திருவெம்பாவையும் திருப்பாவையும் கவிதை இலக்கியங்களாக மலர்ந்தன. மணிவாசகரின் திருவாசகத்தில் வரும் பல பாடற் தொகைகள் தமிழரின் அன்றாட வாழ்க்கையின் பலவிதமான கலைகள் விளையாட்டுக்கள் சடங்குகள் மற்றும் தொழில்கள் சார்ந்த பாடல்களே. பண்பாட்டு மானுடவியல் நோக்கில் அவை ஆய்வு செய்யப்பட வேண்டும். 

ஆடும் கலைகள் ஆரோக்கியத்துடன் சம்பந்தமுடையவை. ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒரு ஆட்ட முறை இருந்தது. அவர்களுக்கெனத் தனியான தெய்வம் கலைவடிவம் என்பன இருந்தன. அவை எல்லாம் அருகித் தற்போது திரைப்படங்களும் தொல்லைக் காட்சித் தொடர்களும் தான் எஞ்சியுள்ளன. 

ஈழத்தில் சமகாலத்தில் நாடகக் கலையின் நிலை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 1990களில் போராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் முன்முயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் வருடந்தார நாடக விழாக்கள் இடம் பெற்றன. நான்கு ஐந்து தினங்கள் அல்லது வாரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாக்களில் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக் கழகமும் நாடகத்துறை வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிவருகிறது. 

பாடசாலைகளில் கல்வித் திணைக்களத்தால் பல்வேறு அரச நிறுவனங்களினால் பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளின் போது பாடசாலை நிர்வாகத்தினால் என நாடகங்கள் ஒழுங்கு செய்யப் படுவதுண்டு. ஏனெனில் நாடகம் வெறும் கலை மட்டுமல்ல அது ஒரு கற்கைச் செயற்பாடு. இன்று பெரும் அரசியல் செயற்பாடுகள் மற்றும் சமூக சீர்திருத்தச் செயற்பாடுகளுக்காக ஆங்கிலத்தில் invisible theater என அழைக்கப்படும் மறைநிலை அரங்குகள் பயன்படுத்தப் படுகின்றன. அதில் செயற்பாட்டாளர் மக்களிடையே ஒரு பிரச்சனையை முன்வைத்து ஒரு மறைமுகமான விவாதத்தை முன்வைப்பார். அதில் மக்களிடமிருந்து பிரதிவாதம் எதிர்வினை செயற்பாடு என்பன எதிர்பார்க்கப்படும். இதில் ஒருவருக்கும் மேலானவர்களும் பங்கெடுக்கலாம். 

சமூக மேம்பாட்டில் நாடகக் கலையின் முக்கியத்துவம்

நாடகக்கலை என்பது சமூகப்பிணிகள் பலவற்றிற்கு மருந்தாகும். ஒரு குறிச்சியின் மக்கள் இணைந்து நாடகப் பிரதியைத் தேர்ந்தெடுத்து வசனம் பழகி ஆடல் பழகி அரங்கு அமைத்து திருவிழாக்களில் மேடையேற்றுவது ஒரு கூட்டுத் தொழிற்பாடு. இத் தொழிற்பாட்டின் போது பன்முகத் திறன்கள் மக்களிடையே வளர்கின்றன. நாடகம் போடுதல் என்பது ஒரு சமூக உளவியல் ஆற்றுப்படுத்தல். 

சிறுபிள்ளையாய் இருந்தபோது பெரியமணல், சிவகாமி அம்மன் கோவிலடி, நீலிப்பந்தனை, காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி, பட்டு மாமாவின் வாரிவளவு நல்லியக்கச் சபையரங்கு, சைவமகா சபை எனப் பல இடங்களில் நாடகங்கள் பார்த்த இனிய நினைவுகள். அரிச்சந்திரனோடு சேர்ந்து அழுதகணங்கள். சாவித்திரியையும், பக்த பிரகலாதனையும், காத்தவராயனையும், அண்ண றைட் நடத்துனரையும், டிங்கிரி சிவகுரு-கனகரத்தினம் ஆகியோரின் நகைச்சுவைப் பாத்திரங்களையும் கண்ணகியையும், குழந்தை சண்முகலிங்கம் ஐயாவின் மண் சுமந்த மேனியரையும் பார்த்து மகிழ்ந்த பள்ளிக் காலங்கள் எமக்கு வாய்த்தன. சின்னமணியென்ற கணபதிப்பிள்ளை ஒரு தனிநபர் அரங்கம். வில்லிசையிலேயே ஆடல் இசை நடிப்பு உணர்ச்சி அறிவு நகைச் சுவையென கலந்து விருந்தளித்த வித்தகர். வெளிக்கிடடி விசுவமடுவுக்கு, அப்பு வாணை ஆனையிறவுக்கு போன்ற நவீன நகைச்சுவை நாடகங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன. வெளிநாட்டு மோகம் (அந்தக் காலத்தில் லண்டன் மாப்பிளை), சீதனம், போலி மேற்கத்தைய ஆங்கில நாகரிக மோகம் என்பவற்றைச் சாடும்  நாடகங்கள் நகைச் சுவை நாடகங்களாக மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன. 

80களுக்கு முற்பட்ட காலத்தில் சிறார்களாய் இளைஞர்களாய் இருந்த நமது தலைமுறையினரின் ஆளுமை உருவாக்கத்தில் நாடகம் கனதியான பங்காற்றிருக்கிறது. 

நாடகக் கலையின் பின்னடைவும் அரசியல் யுத்தமும் தொழில்நுட்ப யுத்தமும்

எண்பதுகளில் உலகின் சுதேசிய வாழ்க்கை முறைகளை, பண்பாடுகளை, ஏன் தேசங்களின் வரலாறுகளையுமே புரட்டிப்போடுகின்ற மாற்றங்கள் நிகழ்ந்தேறின. மூலதனத்தின் வியாபித்த கரங்களுக்குள் பண்பாடுகள் சிக்கித் திக்குமுக்காடின. மூலதனம் தொழில்நுட்பத்தை கையில் வைத்துக் கொண்டது. அதன் மூலம் உலகம் முளுவதுமான ஒற்றைச் சந்தையை உருவாக்குவதற்கு வசதியாக உலக மக்களின் பன்முக வாழ்க்கை முறைகளையும் கலை உட்பட்ட பண்பாட்டுத் தனித்தன்மைகளையும் களைந்து வேரறுத்து உழுது புரட்டிப் போட்டது.

எண்பதுகளில் ஈழத்தமிழரின் கலை வரலாற்றின் சவால்களாக இரண்டு அள்ளுறுகள் வந்தன. ஒன்று தேசிய வன்முறை. தேசிய வன்முறையை விட இரண்டாவதான தொழில்நுட்ப வன்முறை நமது கலைகளை அதிகம் பாதித்துவிட்டது என்ற உண்மை நாம் உணரமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது. உதாரணம், தொலைக்காட்சியும் காணொளி நாடாவும் தொலைபேசித் தொழில்நுட்பமும். 

குறிச்சிக்கு குறிச்சி தென்னிந்தியச் திரைப்படங்கள் காணொளி நாடா மூலம் காட்டப்பட்டன. ஓரிரவில் மூன்று திரைப்படங்கள் கூடக் காட்டப்பட்டன. பார்த்துவிட்டு மறுநாள் பிற்பகல் எழுந்தால் இராமன் சிதைக்கு என்ன முறையென்று தெரியாது. குழப்பம்தான் மிஞ்சும். கவுண்டமணி செந்திலை கீழ்தரமாகத் திட்டுவது அடித்து உதைப்பதான கீழத்தரமான நகைச்சுவை உணர்வை நமக்குள் விதைத்தது. அதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். 

நவீன தொழில்நுட்பம் எமது ஆக்கத்திறன்களை முடக்கி அழித்து நம்மை வெறும் கலை நுகர்வோராக்கிவிட்டது. நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் படைப்பாளியும் ஒடுக்கப்பட்டு நாம் வெறும் பார்வையாளர்களாக மாறிவிட்டோம். இது வெறும் எதேச்சையான நிகழ்வல்ல. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டது. 

வாழ்வின் அனைத்து அம்சங்களும் வியாபாரப் பண்டங்களாக மாற்றப்பட்டது போல கலையும் விற்பனைக்குரிய பொருளாக மாற்றப்பட்டது. நுகர்பண்டங்களுக்கும் கலைப்படைப்புக்குமான வேறுபாடு அற்றுவிட்டது. மரபணுமாற்றம் செய்யப்பட்ட பொதிசெய்யப்பட உணவை உண்டபடி வர்த்தக நோக்கில் தயாரிக்கப்பட்ட விளம்பரதாரர்களின் அனுசரணையில் ஒளிபரப்பப்படும் மலினமான கலைப்படைப் படைப்புக்களைப் பார்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். 

இன்னும் ஒருபடி மேலே போய் வர்த்தகப் பரிமாற்றத்தில் எந்த தீர்மானத்தையும் தாக்கத்தையும் செலுத்த முடியாத பண்டங்களோடு பண்டங்களாகவே நம் படைப்பாற்றலும் நாமும் மாற்றப்பட்டுவிட்டோம். மக்களின் மேம்பாட்டுக்கான, பண்பாட்டின் செழுமைக்கான கலைகள் புறக்கணிக்கப்பட்டு மூலதனத்தை அதன் சந்தை விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டே கலைகள் உருவாக்கப்படுகின்றன. கலைகள் நல்ல விழுமியங்களை பண்பாட்டின் கூறுகளை வளர்ப்பதற்குப் பதிலாக காசேதான் கடவுள் என்ற தோற்றத்தை உருவாக்கவே படைக்கப்படுகின்றன.  

நவீன உலகின் பண்டமயமாக்கல் பண்பாட்டில் உடலாரோக்கியத்தின் முக்கிய கூறான உணவு மரபணுமாற்றம் செய்யப்பட்டு விடமாக்கப்பட்டது. மருந்துற்பத்திகள் உணவாக்கப்பட்டது. வைத்தியசாலை தவிர்க்க முடியாத தலமானது. வைத்தியம் செய்வது வியாபாரம் இல்லாத தர்ம காரியமாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் வைத்தியசாலைகள் பார்த்தீனியம் போல் கிளைபரப்பி பணம் கறக்கும் காளவாசல்கள் ஆகிவிட்டன. அதுபோலவே நமது உள ஆரோக்கியத்தின் அடிப்படையானதும் இயல்பூக்கங்களில் ஒன்றானதுமான படைப்பாற்றலும் காயடிக்கப்பட்டு நாம் முட்டாள்களின் பெட்டியென ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொலைக்காட்சிகளின் முன்னே அமர்ந்து மாற்றுத் திறனாளிகள் போல் கலைப் பண்டங்களை நுகர்கிறோம். 

யதார்த்தத்தில் என்ன செய்கிறோம் உண்கிறோம் என்பதை விட தொலைக்காட்சித் தொடரில் நாளைக்கு மாமியாரை எப்படி மருமகள் விஷம் வைத்துக் கொல்லப் போகிறாள் என்பது நமக்கு முக்கியமாகிறது. ஜீனியர் சுப்பர் சிங்கரில் தோற்றுப் போன பையன் என்னவானான் என்று தேட ஆரம்பித்து விட்டோம். பின்னை நவீனத்துவப் பண்பாட்டில் நிஜத்திற்கும் நிழலுக்குமான வேறுபாடு அற்றுப் போய்விட்டது. வீட்டிலுள்ள பசியுற்ற முதியோருக்கு உணவுதர மறந்து அல்லது மறுத்து தொலைக் காட்சிக் கதாபாத்திரத்துக்கு காய்ச்சலென்று உச்சுக் கொட்டுகிறோம்.

நிழல்களான கலைகள் நிஜங்களைப் புரிந்து கொள்ளவும் மாற்றியமைக்கவுமே தவிர நிஜங்களை மறைத்து நிழல்களுடன் நம்மை வாழவைக்கவல்ல.  

உழைப்பதற்காகப் படிக்கிறோம். உடல் உள ஆரோக்கியத்தைப் பேணவும் மகிழ்வாக இருக்கவும் நம் படைப்பாற்றலை பயன்படுத்தத் தவறுகிறோம். மேற்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் நிலை பரவாயில்லை. கற்றல் செயற்பாடுகளில் படைப்பாற்றலை வளர்க்கும் பொறிமுறை அங்கு உண்டு. மருத்துவ மாணவரும் கவிதை கற்கும் வாய்ப்பு பள்ளிக்கூடத்திலேயே வழங்கப்படுகிறது. 

ஏன் நாடகக் கலை புத்துயிர் பெறவேண்டும்

எனவே நமது மரபு வழி வாழ்க்கையின் ஆரோக்கியமான உணவுப் பண்பாட்டை, விவசாய உத்திகளை மீட்டெடுக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு கலைகளையும் மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முக்கியமாக உள்ளுர் மரபுகளிலிருந்து கிளம்பும் ஆற்றுகைக் கலையான நாடகக்கலை ஒரு சமூக உளவியற் செயற்பாடு என்ற வகையில் மீட்டெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

காத்தவராயனும் பிரகலாதனும் அரிச்சந்திரனும் சாவித்திரியும் ஏழுபிள்ளை நல்லதங்காளும் அருச்சுனனும் கர்ணனும் ஆனையடக்கிய அரியாத்தையும் காரைக்கால் அம்மையும் நீலியும் இன்னும் நம் வாழ்விற்கு சமூகத்திற்குத் தேவையான கதாபாத்திரங்கள். அவர்களது கதைகளிலிருந்து கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. இலக்கியமும் கலையும் காலத்தை வென்றன. காலம் பிரதேசம் என்ற வரையறைகளைக் கடந்தன. மனிதம் வளரவேண்டுமெனில் அவை ஓம்பப்பட வேண்டும். 

அதையும் விட நமது படைப்பாற்றல் வளரவேண்டியது அவசியம். அதுதான் உண்மையான கற்றற் செயற்பாடு. தகவல்களை உள்வாங்கிக் கொள்வது மட்டுமல்ல கல்வி.  உள்ளிருந்து படைப்புத் திறனை அழகியலோடு வெளிப்படுத்தும் செயற்பாடு அது. நமது ஆளுமையை தன்னடையாளத்தை வளர்க்கும் செயற்பாடு அது. அதனாற்தான் ஒரே நாடகத்தை இருவேறு குழுக்கள் மேடையேற்றும் போது நிறைய வேறுபாடுகள் தெரிகின்றன.

எனவே காரைநகரின் கலைமரபுகளிலொன்றான நாடகத் துறையை வளர்த்தெடுக்க வேண்டியது ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் ஒன்றாகிறது. ஒப்பீட்டளவில் எண்பதுகளுக்கு முன்னர் இருந்ததை விடத் தற்போது பௌதீக வளங்கள் நன்கு வளர்ச்சியுற்றிருக்கின்றன. ஆனால் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் தேக்கநிலை காணப்படுகிறது. 

போருக்கு முன்னர் 80களின் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது ஊரில் பௌதீக வளங்கள் நன்கு வளர்ச்சியுற்றிருக்கின்றன. ஆனால் கலை பண்பாடு கல்வியென்பன தேய்நிலையில் உள்ளன. நம் ஊரின் எதிர்கால இருப்பு என்பது நம் எதிர்காலச் சந்ததியின் ஒட்டுமொத்த ஆளுமை என்ற தரத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. தற்கால உலகு அளவை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. தமிழச்சமூகம் அளவை அன்றி தரத்தை மையமாகக் கொண்டே மேம்பாட்டை அளவீடு செய்தது. செய்ய வேண்டும். 

நாடகம் எண்ணக்கருவில் உருவாகி மேடையேற்றம் வரை பல படிநிலைகளைக் கொண்டது. தலைமைத்துவப் பண்புகள் மொழியாற்றல் அறக்கருத்துக்கள் முற்போக்கான சிந்தனைகள் உடலாரோக்கியம் சமூக ஒற்றுமை இணைந்து வினையாற்றல் ஆடல் பாடல் அழகியல் உணர்வு ஆரோக்கியமான போட்டி அறிவுத்தேடல் எனச் சமூகத்தில் பன்முகத்திறன் வளர்க்கும் அதன் வகிபாகம் காத்திரமானது. 

 


24-04-2017                                                                         ஆக்கம்: 
                                                                      கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
                                                 இணைப்பாளர்: மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                        சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை.

 

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

DSC_4869-Copy-Copy
 
 

 

கலாநிதி (திருமதி) வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷட விரிவுரையாளர்
மொழியியல் ஆங்கிலத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

                    "தோன்றிற்  புகழொடு தோன்றுக அஃதிலார்
                             தோன்றலிற் தோன்றாமை நன்று"

    புகழ்பூத்த கல்விமான்களும், பணபலம் படைத்த வணிகப் பெருமக்களும் நிறைந்து வாழும் காரைநகர் என்ற அழகிய கிராமத்தை, நேசித்து, காதலித்து வாழ்ந்த பெருந்தகைகளுள் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் முதலிடம் பெறுகின்றார். அவருடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். அமரர் அவர்கள் காரைநகர் மண்ணுக்காக, மக்களுக்காக, காரைநகர் இந்துக் கல்லூரிக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகான். நிறைந்த கல்வி அறிவும், சிறந்த ஆளுமைப் பண்புகளும்,  சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் கொண்ட அதிபர் தியாகராசா அவர்கள் தனது மண்ணுக்கும், மக்களுக்கும், காரைநகர் இந்துக்கல்லூரிக்கும் சேவை செய்வதற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை  செலவழித்தவர் என்றால் அது மிகையாகாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் தன்னால் இயன்றவரை மிகவும் கடுமையாக உழைத்தவர் என்பதை காரைவாழ் மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. இந்தச் சேவை மனப்பாங்கு, அவரை அரசியலில் ஈடுபடுவதற்கு மேன்மேலும் உத்வேகத்தை வழங்கியது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக பல இன்னல்களை எதிர் கொள்வது போல அதிபர் தியாகராசாவும் காரை வாழ் மக்களுக்காக பல இன்னல்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். இந்த மனநிலையே அவரது மரணத்தையும் நிச்சயித்தது என்பதை இங்கே ஆணித்தரமாக கூறிவிடமுடியும். 

ஆசிரியராக, அதிபராக, காரைநகர் இந்துக்கல்லூரியில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இந்துக்கல்லூரியில் பௌதீக வளங்களையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக் கொடுத்து ஒரு சிறந்த மாணவ பரம்பரையை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. 


இவர் அதிபராகப் பொறுப்பேற்ற வேளையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், யாவற்றையும் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் கண்டார். காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும்பகலும் பாடுபட்டு, பாடசாலையை ஒரு சிறந்த 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்திய பெருமை அன்னாருக்கு உண்டு. பாடசாலையில் பல புதிய வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், நூல்நிலையம், புவியியல் அறை போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவித்து, மாணவர்களின் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் மலேசியா சென்று பாடசாலைக் கட்டிடங்களுக்காக நிதி சேகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. திரு. தியாகராசா அவர்களின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள்   ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர். 

கல்வியில் எவ்வளவு திறமையாகத் திகழ்ந்தாரோ அதேமாதிரி விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறையிலும் ஆர்வம் காட்டினார் உதைபந்தாட்டத்திலும் சங்கீதக்கலையிலும் மிகவும் ஈடுபாடுடையவர். 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவை செய்த அதிபர் அவர்கள் தனது படிப்பிலும் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். M.A, M.Lit பட்டத்தை முடித்த அவர் இந்தியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தன்னலமற்ற சேவையாளராகவும், மன உறுதி கொண்டவராகவும் விளங்கிய தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மாத்திரமல்ல, அரசியலில் ஈடுபட்டு காரைநகர் மண்ணுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்தவர்.அதிபர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஓய்வு பெற்றுக் கொண்ட அதிபர் அவர்கள் வட்டுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து, தளபதி அமிர்தலிங்கத்துடன் போட்டியிட்டு வெற்றிவாகையும் சூடிக்கொண்டவர்.

கலாநிதி தியாகராசா  அவர்கள் பரந்த சிந்தனையாளர் மாத்திரமன்றி சிறந்த சமூகசேவையாளருமாவார். ஊருக்கும், நாட்டுக்கும் உதவ வேண்டும் என்ற பேராசையில் அரசியல்வாதியாக மாறினார். அவரது கொள்கை சோசலிசக் கொள்கையாகும். தமது தொகுதியையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்பதே அவரின் இலட்சியமாகும்.
 
    பாராளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு மின்சார வசதி, குடிநீர், குழாய்நீர் விநியோகம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தார். காரைநகர் சிவன்கோவில் வீதி (புதுறோட்), கோவளம் வெளிச்சவீடு வீதி, ஆகிய இரண்டையும்  கிராமசபை நிருவாகத்தில் இருந்து பிரித்து நெடுஞ்சாலை இலாகாவுக்கு மாற்றம் செய்தார். கோவளம் வெளிச்சவீடு வீதி அகலமாக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். சிவன்கோவில் வீதி, கோவளம் வீதி ஆகிய இரண்டிற்கும் பேரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவருடைய காலத்தில் காரைநகர் தபாற்கந்தோருக்கு புதிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. வியாவிலில் ஓர் உபதபால் நிலையம் திறக்கப்பட்டது. காரைநகரில் ஓர் கிராமிய வங்கி திறக்கப்பட்டது மாத்திமல்ல கட்டிடம் நிருமாணிக்க உத்தேசிக்கப்பட்டது. 

அவர் தனது பாராளுமன்றப் பதவிக் காலத்தில் குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பது யாவரும் தெரிந்த உண்மையாகும். சுயநலம் பாராது பொதுநல எண்ணத்துடன் செயற்பட்ட அமரர் அவர்கள் தனது அறுபத்தைந்தாவது அகவையில் அகாலமரணத்தைத் தழுவிக் கொண்டது. யாராலும் ஜீரணிக்க முடியாத மாபெரும் துயரச் சம்பவமாகும்.

நல்லவர்களை இறைவன் சீக்கிரம் தன்னுடன் அழைத்துக் கொள்வான் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது போலவே அமரர் தியராகராசாவையும் இறைவன் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும். அவர் அகாலமரணத்தைத் தழுவாது இருந்திருந்தால் எமது மக்களுக்கு இன்னும் பல சேவைகளைத் தொடர்ந்தும் செய்திருப்பார். அவருடைய இழப்பு காரைநகர் மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஓர் பாரிய இழப்பாகும். 

அவருடைய நல்ல எண்ணங்களும், உயர்ந்த சிந்தனைகளும் இப்பிரபஞ்சத்தில் நிலைத்து, நிறைந்து நின்று சிறந்த சேவையாளர்களையும், கல்விமான்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், தியாகிகளையும் உருவாக்கும் என்பதே உண்மையாகும்.

                                                  "ஆளுயர்வே ஊருயர்வு"
                       "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                         இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                    13 – 03 – 2017

 

 

 

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்பு 17.07.2016இல் வெளியிட்ட போது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் வழங்கிய சிறப்புக் கட்டுரை.

DSC_4835-Copy-Copy

 

 

 

 

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய  "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு 17.07.2016இல் வெளியிட்ட போது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் வழங்கிய சிறப்புக் கட்டுரை.   

        நிறுவுநர் பக்தி மிக்க முதல்வர்
  
சைவப்பாரம்பரியமூடான ஆங்கிலக்கல்விக்கு வித்திட்டவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆவார். இவரை அடியொற்றி காரைநகர் அருணாசல உபாத்தியார், இந்து போட் இராசரத்தினம் ஆகியோர் ஊர்கள் தோறும் சைவ வித்தியாசாலைகளை நிறுவியதுடன்; சைவப்பாரம்பரியமூடான ஆங்கில மொழிமூலக் கல்வியை மாணவர்கள் கற்கவும் பாடசாலைகளைத் தோற்றுவித்தனர். இந்த வகையில் தோற்றம் பெற்றது காரைநகர் இந்துக் கல்லூரி ஆகும்.

          ஆரம்பத்தில் பெரியார் முத்து சயம்பு அவர்களின் அர்ப்பணிப்பான சேவையே 1888 ல் ஆரம்பமான இக்கல்லூரியின்  வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து வந்த அதிபர்களும் சயம்பு அவர்களின் வழியைப் பின்பற்றி இவ் இந்து ஆங்கில வித்தியாசாலையை நிர்வகித்தனர்.

          இவ் அதிபர்களின் வரிசையில் திரு.A.கனகசபை அவர்கள் காலத்தில் இந்து ஆங்கில வித்தியாசாலையாக  இருந்த பாடசாலை இந்துக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 1946 இல் திரு.ஆ.தியாகராசா அவர்கள் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் கல்லூரியின்  பொற்காலம் எனப்படுகின்றது. தொடர்ந்து 25 ஆண்டுகாலம் (1970 ஆம் ஆண்டு வரை) அதிபராக கடமையாற்றினார். இவர் காலத்தில் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பல கல்லூரிகளையும் புகழ் பூத்த அதிபர்கள் நிர்வகித்து சிறந்த கல்லூரிகளாக்கினர். இவர்களில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியை திரு.A.குமாரசாமி அவர்களும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை திரு.தம்பா அவர்களும் ஹாட்லிக் கல்லூரியை திரு பூரணம்பிள்ளை அவர்களும் மகாஐனாக்கல்லூரியை அதிபர் ஜெயரட்ணம் அவர்களும் யாழ்ற்ரன் கல்லூரியை அதிபர் சிவராசாவும் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். இவ்வாறான அதிபர்களின் உயர்ந்த, அர்ப்பணிப்பான சேவையாலேயே யாழ்ப்பாணக்குடாநாட்டின் கல்வி முன்னிலைக்கு வந்தது எனக் கூறமுடியும்.

          திரு.தியாகராசா அவர்களும் இவர்களைப்போன்று கல்லூரியை அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தார். மாணவர்களின் ஒழுக்கத்தில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார். ஒவ்வொரு மாணவனின் ஒழுக்கம், நடத்தை என்பவற்றைக் கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் அவதானிக்கும் ஆற்றலும் இம்மாணவனின் நடத்தைப்பண்புகளை ஞாபகத்தில் வைத்திருக்கும் திறனும் அவரிடம் காணப்பட்டது ஒரு தனித்துவம் என்று கூறமுடியும். ஒழுக்கமில்லா மாணவரை தண்டித்தும், கண்டித்தும் நல்வழப்படுத்தியவர். ஒழுக்கமும், கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற கொள்கையுடன் மாணவரை நெறிப்படுத்தினார். 

        மாணவர் கற்றல் செயற்பாடுகள் வினைத்திறனுடன் நடைபெற பல திறமையான ஆசிரியர்களைக் கல்லூரிக்கு நியமிக்கச்செய்தார். அத்துடன் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் , மனையியல் ஆய்வுகூடம் , நூலகம் போன்றவற்றை ஏற்படுத்திக் கல்வியின் பண்பு சார் விருத்தியை மேலோங்கச் செய்தார்.

       இக்கல்லூரியின் நிறுவுநர் சயம்பு அவர்கள் மீது அதீத பற்றுக்கொண்டவர் அதிபர் தியாகராசா அவர்கள் கல்லூரியில் படித்த மலேசியாவில் வாழ்ந்த பழைய மாணவர்களிடம் அங்கு சென்று நிதி சேகரித்து கல்லூரி வளாகத்தில் இருமாடிக்கட்டடம் ஒன்றினை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவி அம்மண்டபத்திற்கு சயம்பு மண்டபம் எனவும் பெயரிட்டார். இல்ல விளையாட்டுப்போடடிகளில் ஓர் இல்லத்திற்கு "சயம்பு இல்லம்" எனவும் கல்லூரியில் வெளியிடப்பபட்ட சஞ்சிகைக்கு "சயம்பு" என்ற பெயரினையும் இட்டு வெளிவரச்செய்தார்.

       கல்லூரியின் வரலாற்றுப்பின்னணியை நினைவுகூருமுகமாக கல்லூரியின் வைரவிழா 19.08.1950 தொடக்கம் தொடர்ந்து மூன்று தினங்கள் கொண்டாடப்பட்டது. மேலும் 1963 ஆம் ஆண்டு கல்லூரியின் பவளவிழாவினை சிறப்பாகக் கொண்டாடியதுடன் நிறுவுநர் சயம்பு அவர்களின் உருவப்படத்தினை அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் சகிதம் பிராதான வீதி புது றோட் , நீலிப்பந்தனை , மாப்பாணவூரி,  (சயம்பு அவர்களின் வசித்த இடம்); போன்ற இடங்களிற்கூடாக' கல்லூரி வரை ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. 

      கல்லூரியின் மூத்த பழைய மாணவர் ஒருவர் இவ்ஊர்வலத்தில் தானும் மாணவனானக் கலந்து கொண்டேன் என்றும் ஊர்வலத்தில் நிறுவுனர் சயம்பு தொடர்பாக மாணவர்கள் பின்வரும் கோசங்களை எழுப்பியதாக உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்தார். 

"சமய ஒழுக்கமே சயம்புவின் தனி இலட்சியம்"

"பாடசாலை கைமாறினும் சயம்பு புகழ் ஓங்கும்"

"சயம்பு ஏற்றிய தீபம் எங்கள் ஆக்கத்தின் தூபம்" 

"சயம்புவின் பள்ளி ஒழுக்கத்தின் உறைவிடம்"

என்பவை அவற்றுட் சில என அப்பழைய மாணவர் கூறினார். 

           இதன்மூலம் அதிபர் தியாகராசா அவர்கள் நிறுவுநர் சயம்பு மீது அதீத பற்றுக்கொண்டவர், என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அக்காலத்தில் இந்துக்கல்லூரியை "சயம்பற்ரை பள்ளிக்கூடம்" என்று பல முதியவர்கள் கூற நானும் கேடடிருக்கின்றேன்.

           திரு தியாகராசா அவர்கள் கல்லூரியின் பௌதீகவள வளர்ச்சியையும் , மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளையும் சமாந்தரமாகவே வளர்த்துச் சென்றார். கற்றற் செயற்பாடுகளுக்கு பௌதீக வள வளர்ச்சி முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டார்.

            அயற்பாடசாலையான யாழ்ற்ரன் கல்லூரியை தோற்றுவிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் 29.12.1946 அன்று தியாகராசா அவர்களின் ஆயிலி இல்லத்தில் அவர் தலைமையில் நடைபெற்றது.  அதுமட்டுமன்றி , இந்துக்கல்லூரியில் கடமையாற்றிய திரு.கு.பொன்னம்பலம், திரு.மு.சிவாரட்ணம் அவர்களும் யாழ்ற்ரன் கல்லூரிக்கு விடுவிக்கப்பட்டனர்.

            திரு.தியாகராசா அவர்கள் அதிபராக இருக்கும் போது 24 மணிநேரமும் கல்லூரிச்சிந்தனையாகவே இருந்தார். இவர் கல்லூரிக்கு செய்த சேவை போன்றே வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது காரைமண்ணிற்கு செய்த சேவைகளை மறக்கமுடியாது.

            சிறந்த கல்விமானாக பொருளியல்வல்லுநராக, கர்நாடக இசைப்பிரியனாக, சமயப்பற்றாளனாக என்றவாறு பன்முக ஆளுமைகள் மிக்கவராக திரு தியாகராசா அவர்கள் விளங்கினார். ஈழத்து சிதம்பரக்கூத்தன் மீது அடங்காத பற்றுக்கொண்ட திரு.தியாகராசா அவர்கள் 1970 ம் ஆண்டு மார்கழித்திருவாதிரை அன்று அவர் காவடி எடுத்து வந்த காட்சி இப்போதும் எம் கண்முன்னால் நிற்கின்றது.

            அவர் காலத்தில் ஒரு பதிவாக கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொண்டமை சிறப்புக்குரியது. எனவே திரு.தியாகராசா அவர்களின் சமய ஒழுக்கம் கொண்ட வாழ்வு , சேவை , அர்ப்பணிப்பு அடுத்த பரம்பரைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். தற்கால அதிபர்களுக்கு ஒரு முன்மாதிரி என கூறிக்கொண்டே செல்ல முடியும்.

                              "தியாகராசா அவர்களின் மங்காப்புகழ் என்றும் ஓங்குக" 

                                                          "ஆளுயர்வே ஊருயர்வு"

                                       "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                       இங்ஙனம்
                                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                    05 – 03 – 2017

 

 


 
       

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய  "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

PATKUNARAJAH

 

 

 

ஆக்கம் திரு. ச. பற்குணராஜா
உலக சைவ பேரவைத் தலைவர் (பிரான்ஸ்)


 

மலரும் நினைவுகள்…

 

பதவியை நீ தேடிப்போனால் பதவிக்குப்பெருமை, 
பதவி உன்னைத் தேடிவந்தால் உனக்குப்பெருமை.

பலர் பதவிகளைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் வெகு சிலரோ பதவிகளைப் பயன் படுத்திச்  சமூகத்தை வளப்படுத்துவார்கள். அமரர்  கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் சமூகத்திற்கான சேவையில் தன்னை முழுவதுமாக இழந்தார்.

ஐம்பதுக்கு ஐம்பது எனக் கேட்டு இலங்கை அரசியலில் தனியிடம் பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய  திரு ஜி .ஜி  பொன்னம்பலம் அவர்கள் 1970ல் நடைபெறவிருந்த தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு தகுதியும் பலமும் கொண்ட ஒருவரின் தேவை இருந்தது. காரணம் அந்தத்தொகுதியின் தளபதியாக விளங்கியவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக விளங்கிய தளபதி திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள். அந்தக் கோட்டையைத தகர்த்து எறிந்தவர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்.

ஆதிபராக இருந்தவர் ஓய்வு பெற்று தமிழ்க்காங்கிரசின் அபேட்சகராக களமிறக்கப்பட்டார். முதல் ஊர்வலமும் கூட்டமும் காரைநகர் சைவ மகாசபையிலிந்து தொடங்கி வாரிவளவு பிள்ளையார் கோவில் வரை சென்று வீதியில் அமைந்திருந்த மேடையில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஜி .ஜி பொன்னம்பலமும் தியாகராசாவும் மற்றைய ஆதரவாளர்களுடன் ஆரவாரங்கள், வானவேடிக்கைகள், பூரண கும்பங்கள் நிறைந்த வீதிவழியே வந்துகொண்டிருந்தார்கள். நான் அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளிமாணவன். இதுவே எனது முதல் தரிசனமாக இருந்தது. தேர்தலில் 551 வாக்குகளால் வெற்றியீட்னார் என்ற செய்தி அதிகாலையில் தான் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த வெற்றி எதிர் வேட்பாளரால் மறுக்கப்பட்டு மீண்டும் வெற்றி என்பது உறுதிப்படுத்படுவதற்கு சிலகால இடைவெளிகள் தேவையாயிற்று.

காந்தியச் சிந்தனைகளில் மட்டுமன்றி, பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் தோய்ந்திருந்தவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள். அவ்வகையில்  ஆசிரியர் பானுதேவன், திரு நடராஜா, ஆசிரியர்  சுந்தரசிவம் (இவர் வட்டுக்கோட்டைத் தொகுதியில் லங்கா சம சமாஐக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்) மறைந்த பேராசிரியர  கலாநிதி இராமகிருட்ணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 

கலாநிதி. தியாகராஜா பொதுவுடைமைச் சிந்தனையாளர். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றியவர். அவர் மறைந்த பின்னர் அவருக்கான ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டத்தை திரு சுந்தரமூர்த்தி (தனிச்சிங்கள மசோதா கொண்டுவந்த போது அரசாங்க சேவையிலிருந்து விலகி தனிமனிதனாக  இருந்து காந்தீய வழியில் வாழ்ந்தவர்) அவர்களுடன் இணைந்து சைவமகாசபையில் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாராக விளங்கிய டாக்டர் எசு. ஏ. விக்கரமசிங்கா அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை 1975 களில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடிய போது அதில் பங்கு பற்றி அரசியலுக்கு அப்பால் தனது மனித நேயத்தையும் சோசலிச தத்துவத்தின் பக்கமே தனது சிந்தனைகள் உள்ளது என்பதை நிலை நிறுத்தினார்கள்.

வடக்கா, தெற்கா என்று ஊர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்ததைக் காரணம் காட்டி நமது ஊருக்கு மின்சார வசதி கிடைக்காது மின் கம்பங்கள் வயலிற்கூடாகச் சென்று கடற்படைக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றது. குடிநீர் என்பது காலங்காலமாக பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. மருத்துவ வசதிகள் குறைந்த நிலை. வுசதி உள்ளவர்கள் மூளாய் மருத்துவ விடுதியில் பயன் பெறுவார்கள். இந்த நிலையைப் போக்குவதற்கு  ஒருவர் எமது கிராமத்திற்கு காலத்தின் கட்டாயத்தால் தேவையாகவிருந்தது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்பட்ட துன்பங்கள் சிறிதல்ல.

இவ்விடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். யான் யாழ்மத்திய கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில் காரைநகர் இந்துக்கல்லூரியில் 1974 களில் ஒரு சில மாணவர்களுடன் தான் உயர்தர வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஒரு தரவு அறிக்கையை சில நண்பர்களுடன் இணைந்து தயாரித்ததில் சுமார் 80 மாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயின்று வந்தது தெரியலாயிற்று.. அந்தக் காலத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பதிலதிபராக திருவாளர்  சுப்பிரமணியம் ஆசிரியர் கடமையாற்றிவந்தார்கள். (அக்காலத்தில்  தரப்படுத்தல் என்னும் நடைமுறையால் யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற பலர் உயர்தர பரீட்சையை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற பின்தங்கிய பகுதிகளில் எழுதி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தி வந்ததும் உண்டு.)

நீண்ட கலந்துரையாடல்களின் ஊடாக யாம் வாரிவளவு நல்லியக்கச்சபையில் உயர் கல்வியும் இந்துக் கல்லூரியும் என்ற கருப்பொருளில் ஓரு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்து காரைநகர் இந்துக்கல்லுரியில் உயர்தர வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவரை அழைத்திருந்தோம். நாம் எதிர்பார்த்தது கல்லூரியின் வளர்ச்சிக்கு ஏதும் ஆலோசனை கூறுவார் என்பதே. ஆனால் விளைவு எதிர்மாறாக அமைந்தது. அவர் கூறியது இது தான்; நீங்கள் சிறு பிள்ளைகள், உங்களுக்கு அனுபவம் காணாது. இது என்ன சப்பறமா? (சப்பறம் – இது கோவிலில் விசேட திருவிழா நாட்களில் சுவாமியை வைத்து இழுத்து வருவது. பகுதி பகுதியாக இருப்பதை இணைத்து உருவாக்குவது.) பொருத்துவதற்கு?. நாங்கள் எவ்வளவோ காலம் பல முயற்சிகள் செய்தோம். முடியவில்லை என்று முடித்தார்.

இதனால் நாம் தளர்ந்து போகவில்லை. புதிலாக தொடர்முயற்சிகளில் ஈடுபட்டோம். முதல் முயற்சியானது அந்தக்காலத்தில் ஈசன் ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்காண Double maths கற்பித்தலில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கினார். அவர் வெலிங்டன் தியேட்டரின்( இப்போது அது இல்லை) பின்புறம் அமைந்திருந்த மேல் மாடியில் வகுப்புக்கள் எடுத்து வந்தார். அவரிடம் நண்பர் க. சிவபாதம் அவர்கள் மூலமாக அனுகினோம். அதற்காக பாடசாலை முடிந்ததும் ஆசிரியர் சுப்பிரமணியமும், நண்பர் சிவபாதமும் யாழ்ப்பாணம் வருவார்கள். யானும் பாடசாலை முடிந்ததும் அவர்களுடன் இனைந்து பல தடவை சந்தித்து உரையாடி ஈசன் ஆசிரியர் அவர்களின் அனுமதியைப் பெற்றோம் (பாராளுமன்ற உறுப்பினரான தியாகராஜா அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதியின் உறுப்பினர். காரைநகர் என்பது அதன் ஒரு பகுதி. அவர் ஊரை மட்டும் உயர்த்த முடியாது. மற்றைய கிராமங்களுக்கும் சேவை செய்யவேண்டிய தேவை உண்டு.) 

ஈசன் ஆசிரியர் அயற்கிராமமான வேலனையில் வசித்து வந்தார்கள். அவர் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்தார். பாராளுமன்ற உறுப்பினர் தனது  மகள் புனிதவதியையும் ஊரிற்கு அழைத்து கல்லூரியில் இணைத்தார் அவர்களுடன் விலங்கியல் கற்பித்தலில் சிவபாலராஜா சிறப்புற்று விளங்கினார். திரு ம.ம. நடராஜா அதிபராகப் பொறுப்பேற்றார்கள். யானும்  யாழ் மத்திய கல்லூரியை விடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியது. அயற் கிராமங்களான பொன்னாலை, வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், வேலனை ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர் வந்து கல்வி கற்கத் தொடங்கினார்கள்.  அந்த ஆண்டில் தோன்றிய உயர்தரப் பரீட்சையில் பங்கு பற்றிய பலர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப் பட்டார்கள் என்பதே நற்செய்தியாகும்.

ஈசன் ஆசிரின் நியமனம் 3 மாதகாலத்திற்குள் கிடைக்காவிட்டால் அவர் விலகிச் சென்று விடுவார் என்ற உடன்பாட்டில் தான் ஒப்புக்கொண்டார். நியமனம் கிடைப்பது என்பது இலகுவானதாக இருக்கவில்லை (அப்போதைய கல்வி அமைச்சர் பதியூதீன் முகமது அவர்களது அன்றைய தரப்படுத்தல் திட்டமானது பாரியளவில் விவாதத்திற்குரியதாக இருந்தது.) ஈசன் ஆசிரியரது நியமன விடயமாக தொல்புரத்தில் அமைந்த கமநல ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் கொப்பேகடுவ, தபால் தந்தி அமைச்சர் திரு குமராசூரியர் ஆகியவர்களிடம் ஒரு மகஐரை கையளிப்பதற்காக தம்முடன் என்னையும், நண்பர் சிவபாதம் அவர்களையும் தம்முடன்  அழைத்துச் சென்றார்கள்;. மகஐரை கையளித்து கூட்டம் முடிந்த நிலையில் திரும்பி வருவதற்கான சூழ்நிலை தாறுமாறாக அமைந்து விட்டது. காரணம் பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்தில் பாது காப்பு கருதி இரண்டு பொலிசார் அவருடன் சென்று விட்டனர். கடைசியில் சங்கானைப் பலநோக்கு கூட்டுறவுச் சங்க லொறியில் எங்களைப் பொன்னாலைப் பாலத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அங்கிருந்து நடைப் பயணத்தில் வீடு வந்து சேர நள்ளிரவாயிற்று.

இவ்வாறான பல அயராத முயற்சியின் விழைவாக ஈசன் ஆசிரியர் அவர்களது  நியமனம் கிடைக்கப்பெற்றது.  அவரது ஏழாண்டு அரசியல் வாழ்வில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் மக்களுக்கு தன்னாலியன்ற சேவையை செய்தார்.

எமது ஊரைப் பொறுத்த வரையில் இருண்டிருந்த ஊரிற்கு மின்னொளி கொடுத்தார். குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அமுல் படுத்தினார். சாதாரண மக்களிற்கான வைத்தியசாலையை ஏற்படுத்தினார். கல்வியின் பயன் கருதி பாடசாலைகளின் தரத்தை உயரச்செய்தார்; இவ்வாறு குறுகிய காலத்தில் நிறைந்த சேவை செய்து நன்றியுள்ளவர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கின்றார்கள்.

மரங்கள் மனிதர்களைப் பார்த்துக் கேட்டதாம் நாங்கள் எங்களிலிருந்து ஒரு சிலுவையை உருவாக்கினோம். நீங்கள் உங்களால் ஒரு யேசுவை உருவாக்க முடிந்ததா? என்று அது போல் எங்களால் ஒரு தியாகராஜாவை உருவாக்க முடியுமா?

                                                          "ஆளுயர்வே ஊருயர்வு"
                              "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                             இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                 மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          12 – 02 – 2017

 

ஸ்ரீரடி சாயி பாபா

                     ஸ்ரீரடி சாயி பாபா 

இது எப்படி நடந்தது என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. ஸ்ரீ சாயி சத்சரிதம் படித்து முடித்த பொழுது என் மனதில் ஒரு அவா. ஆசை. உந்துதல். எல்லாவற்றையும் விட தேடல். எப்படியாவது ஸ்ரீரடி சாயிபாபாவுடைய உதியைப் பெற வேண்டும் என்பதே.  

மறுநாள் காலை என் வாடிக்கையாளர்களுக்கு வீடு காட்டுவதற்காகப் போன பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஏதோ ஒரு தெய்வீக சக்தி அமைதி ஆனந்தம் அந்த வீட்டில் நிலவியது. வீடு பார்த்தாகிவிட்டது. இருபத்தி எட்டாம் நம்பர். எட்டும் இரண்டும் பத்து. முதலாம் எண்.  வடகிழக்கு வாசல். நான்கு அறைகள். கட்டப்பட்டு ஜந்து ஆண்டுகள் கூட முழுமையடையவில்லை. நல்ல சூழல். சுற்றுமுற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து. வசதியான அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் சிரமமின்றி சீற்றம் பதற்றம் படபடப்பு இன்றி செய்து கொள்ளக்கூடிய வசதி. சமையலறை நிறைந்த அலமாரி என தாய் சொல்ல ஏன் அறைகள் கூட இன்னும் வசதியாகத்தான் இருக்கிறது என மகள் அடுக்கினாள். இரண்டு கார் தரிப்பிடம் நடைபாதை இல்லை என மகனும் தன் பங்குக்கு போட்டுவைத்தான். எதிர்பார்த்ததை விட அல்லது ஆசைப்பட்டது போல அமைந்ததில் அவர்களுக்கு பூரண திருப்தி என்பது முகத்தில் தெரிந்தது. 

அடுத்தது காட்டும் பளிங்கு போல 

நெஞ்சு கடுத்தது காட்டும் முகம் என்பது தானே வள்ளுவம்.

ஓர் அறையில் ஸ்ரீரடி சாயி பாபாவினுடைய திருவுருவம் அழகாக வைக்கப்பட்டு முறையாகப் பூஜிக்கப்படுவது தெரிந்தது. ஒரு வயதான தாயார் உருத்திராட்ச மாலையுடன் படியிறங்கி வந்து தான் நாங்கள் வீட்டைப்பார்ப்தற்காக கதவு திறந்தார். தினமும் தியானம் செய்வதாகவும் ஸ்ரீரடி சாயிபாபவினுடைய புனித தலத்திற்கு சென்று வந்ததாகவும் கூறி என்னை அழைத்து என் மனம் தேடிய என் ஆன்மா அழுத அந்த உதியைக் கொடுத்தார். பாபா எத்தனை வீடுகள் விதைத்துக் கிடந்தது. அத்தனையும் தவிர்த்து இந்த வீட்டைக்காட்டி. உன் மகிமை எழுதிப்புரியாது. அதற்கு ஒரு ஏக்கம் தவிப்பு வேண்டும் என்பதை விட நீ ஆட்கொள்ள வேண்டும். பாபா நான் உன்மீது கொண்ட பக்தியை விட நீ என் மீது கொண்ட கருணை அளப்பரியது. அதுவே உன்னோடு என்னைக் கட்டிப்போட்டது. கைதொழ வைத்தது. கஸ்டம் என்ற பொழுதும் நஸ்டம் என்ற பொழுதும் நலிவடையாமல் என்னைக்காப்பது. "ஓம் ஸ்ரீ சாயி ராம்".  நான் மட்டுமா பாபா ஜெபிக்கின்றேன். இல்லை. கோடானுகோடி மாந்தர்களில் கடைக்கோடி நான். உன்கடைக்கண் பார்வைக்காக ஏங்கிப் பரிதவிக்கும் தபஸ் என்னுடையது.  

நீ பக்கிரி! மிகப் பெரிய தபஸ்வி! குருடனைப் பார்க்க வைப்பாய்! முடவனை நடக்கவைப்பாய்! ஊமையைப் பேச வைப்பாய்! நீ அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்தவன்! எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த சந்நிதியில் எந்த வீட்டில் எந்த உள்ளத்தில் எந்த உயிரில் நீ எப்போது எதைச் செய்வாய் என்பதை விட எங்கேயும் எப்போதும் எதையும் செய்யும் சர்வ வல்லமை உனக்கு உண்டு பாபா. உனக்குத் தேவை உன்னிடம் பொறுமையும் நம்பிக்கையும் தான். இது தானே நீ கேட்கும் தட்சணை. உன்னைப் பார்ப்பதற்கு இந்த ஊணக்கண்ணால் முடியாது. நெற்றிக் கண் திறந்தாலும் உன் அருள்ளின்றி அந்த ஒளியை ஸ்பரிசத்தை சுகத்தை யாரும் அனுபிவிக்க முடியாது. 

"திடமான மனதுடன் என் உதவியை நாடி வந்தால் அது உனக்கு நிச்சயம் கிடைக்கும்" என்கிறார் பாபா. உணர்வில் தெய்வத்துடன் ஜக்கியமாகி இருப்பதே முழு ஆரோக்கியத்தின் செழிப்பின் மற்றும் மகிழ்ச்சியின் இரகசியமாக இருக்கிறது. அதிக தூண்டுதல் அளிக்கும் ஊக்கமளிக்கும் மற்றும் பயத்தைக் கொல்லும் சக்திகளில் ஒன்றாகவே ஸ்ரீரடி சாயி பாபாவினுடைய தரிசனம் அவதாரம் விளங்குகிறது. நமது பிறப்பு மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு என்பது ஒரு தற்செயலான காரணமல்ல. நம்மால் கட்டுப்படுத்த முடியாத கொடூரமான விதியால் உலகத்தில் இங்கும் அங்கும் எறியப்பட்டவர்கள் இல்லை என்ற ஒரு உறுதியை நிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. 

நாம் தெய்வத்துடன் நம்மைப்படைத்தவருடன் ஒன்றி இருப்பதை உணர்ந்து கொள்ளும் அளவுக்குப் பொருத்தமான அளவில் நமது வாழ்க்கை அமைதியானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் படைப்புத்திறன் உடையதாகவும் மாறுகிறது. ஸ்ரீரடி சாயி பாபாவைத் தரிசித்த மக்கள் பெரும் அளவில் பயன் அடைந்தார்கள். பயன் அடைந்து கொண்டும் இருக்கிறார்கள். இனியும் பயன் அடைவார்கள் என்பது கண்கூடு. உங்கள் பாரத்தை சுமையை கவலையை துன்பத்தை ஏன் உங்கள் கனவைக்கூட என்னிடம் தள்ளிவிடுங்கள் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன் நனவாக்குவேன் என்பதும் பாபாவின் வாக்கு. பாபா உங்களிடம் கேட்கும் தட்சணை நம்பிக்கை மற்றும் பொறுமை தான். 

ஸ்ரீரடி சாயி பாபாவினுடைய தெய்வீகத் தன்மையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் பொழுது அந்த உண்மை எவரையும் சுதந்திர மனிதனாக்கிவிடும். அதாவது பயம் மனக்கிளர்ச்சி மூடநம்பிக்கை நிச்சயமின்மை மற்றும் தடை ஆகியவற்றின் அடிமைத்தளையிலிருந்தும் ஏழ்மை மற்றும் மனவருத்த எண்ணங்களிலிருந்தும் விடுவித்து விடும். ஸ்ரீரடி சாயி பாபாவுடன் ஒன்றியுள்ளவன் பயத்தின் முழுஉணர்வை இழந்திருப்பான். எதுவும் நம்மை அசைக்க முடியாது அல்லது நமது சமநிலையைக் குலைக்க முடியாது என்ற உண்மையில் ஒரு நம்பிக்கையிருக்கிறது. 

அளவற்ற துன்பங்களையும் கஸ்டங்களையும் அனுபிவித்த பலரைப் பாபாவின் சந்நிதியில் பார்த்திருக்கின்றேன். இருப்பினும் அவர்கள் ஒரு போதும் தடுமாறவில்லை அல்லது புலம்பவில்லை. தங்களது கெட்ட நேரத்திலும் கூட சகமனிதர்களுக்கு நிறைந்த அன்புடன் கருணையுடன் அமைதியுடன் உறுதியுடன் உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீரடி சாயி பாபாவுடன் உண்மையில் ஆழ்ந்திருந்ததாலும் ஸ்ரீரடி சாயி பாபாவுடன் முழுமையாக இணைந்து ஒன்றி இருப்பதை உணர்ந்திருந்ததாலும் மற்றும் தம்மை நிலைகுலைய வைக்கும் எதுவும் நடக்காது என்ற மிகப்பெரிய நம்பிக்கை பெற்றிருந்ததாலும் அவர்களது கண்களில் ஒரு ஒளி இருந்தது. கடும் வேதனை அல்லது பட்டினி வறுமை ஆகியவற்றிலும் கூட அவர்களது கண்களில் பிரகாசிக்கும் தெய்வீக ஒளியை அணைக்க முடியவில்லை அல்லது அவர்களது சீரான மனநிலையை அல்லது தெளிவை அழிக்க முடியவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்திச் செல்லும் தமக்கு வழி காட்டும் தங்களைப் பாதுகாக்கும் ஒரு தெய்வம் "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீரடி சாயி பாபா" இருப்பதை உணர்கிறார்கள். அதனால் அவர்கள் பயம் அடைவதில்லை. (Why Fear When I am Here, Shirdi Sai Baba). ஸ்ரீரடி சாயி பாபாவை உறுதியாக தழுவிக்கொண்டவர்களை நிலைகுலைய வைக்கும் படி எதுவும் ஏற்பட்டதில்லை. ஸ்ரீரடியில் உள்ள துவாரகாமாயியை அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மகிழ்ச்சியை அடைவார்கள் என்று பாபா அனுக்கிரகித்துள்ளார். 

நாம் ஸ்ரீரடி சாயி பாபாவுடன் ஸ்ரீரடி சாயி பாபாவின் தெய்வீக சத்தியுடன் நெருக்கமாக இருப்பதை உணரும் பொழுது அந்த சக்தியை அனுபவிக்கும் பொழுது நமக்குள் இருக்கும் உணர்வுகள் புலன்கள் புத்தி எல்லாம் மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. புரியாத புதிருக்கு விடை கிடைக்கிறது. எம்மைச்சுற்றிக் கட்டப்பட்ட முடிச்சுக்கள் அவிழ்கின்றன. எம்மைப் பிடித்த பீடை தரித்திரம் அதிஸ்டம் இன்மை வறுமை சோம்பல் நோய் காணாமல் போகிறது. உடம்பில் உஸ்ணம் குறைகிறது. சுவாசும் சீராகிறது. கோபம் தணிகிறது. அன்பு வளருகிறது. 

குறிப்பாக நாம் கொடுப்பது மட்டுமல்ல நமக்குக் கொடுக்கப்படுவதும் அதிகமாகிறது. 

நமது வாழ்விற்கு சக்திகளை அளிக்கும் ஸ்ரீரடி சாயி பாபாவின் இந்தத் தெய்வீக சக்தி நமக்குள் புகுந்திட கட்டுப்பாடு இல்லாமல் தடை இல்லாமல் நம்மை முற்றிலும் திறந்து வைத்துக்கொள்ள முடியுமானால் வாழ்வு எவ்வளவு சிறந்ததாக மாறிவிடும். நமது தவறான சிந்தனையாலும் நமது தீய வாழ்வு முறையாலும் நாம் இந்த சக்தி நமக்கு உள்ளே வரும் வழியை மூடிவிடுவதால் பலவீனமானவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் இருக்கின்றோம். எந்த மனிதனும் உணர்வுடன் தீய செயலைப்புரியும் பொழுது உண்மையில் பலமானவனாக இருக்கமுடியாது. ஒவ்வொரு தடவையும் தவறு செய்யும் பொழுது நம்மை நாமே பலவீனமானவர்களாக்கிக் கொள்கின்றோம். தவறு செய்வதன் மூலம் பலர் நீதியின் உண்மையின் அன்பின் இழைகளை வெட்டிக்கொள்கிறோம். இதனால் தெய்வத்தின் தொடர்பையும் துண்டித்துக்கொள்கின்றோம். 

ஒவ்வொரு தடவையும் தவறு செய்யும் பொழுது ஒரு நேர்மையற்ற நம்பத்தகுதியற்ற ஒரு செயலைச்செய்யும் பொழுது ஒரு இழிவான அவமதிப்பான செயலைப் புரியும் பொழுதும் நம் மீதுள்ள தெய்வத்தின் பிடியைத் தளர்த்திக் கொள்கின்றோம். அப்போது நாம் எல்லாவிதமான பயங்களுக்கும் கவலைகளுக்கும் அச்சங்களுக்கும் மற்றும் சந்தேகங்களுக்கும் இரையாகிவிடுகின்றோம்.

மனிதன் பெற்றுள்ள தெய்வீகத் தொடர்பின் முழுமைக்கு ஏற்ப அவனது சக்தி வெற்றி மகிழ்ச்சி என்பன அமைகின்றன. அது மட்டுமில்லாமல் அதை வைத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு அல்லது துண்டித்துக்கொள்ளும் அளவிற்கு ஏற்ப பலசாலியாக கோழையாக இருக்கிறான். 

நமக்கு சக்தியை வழங்கும் மூலாதாரத்துடன் உள்ள தொடர்பை முறித்து விட்டதை உணர்ந்த உடனேயே நாம் நிச்சயமின்மையும் பயமும் நிரம்பப்பெற்றவர்களாக மாறிவிடுகிறோம். நாம் உதவியற்ற நிலையில் இருப்பதை உணர்கிறோம். அது நம்மைப் பலவீனமானவராக கோழையாக கவலை துயரம் மிக்கவராக இருக்கச் செய்கிறது. பயம் கவலை துயரம் நோய் ஆகியன நாம் நமக்குள்ள தெய்வீகத் தொடர்பை இழந்து விட்டோம் முற்றிலும் பயன் பெறும் வழியிலிருந்து விலகி விட்டோம் கடவுளுடன் இணக்கமின்றி முரண்பட்டு இருக்கின்றோம் என்பதற்கு உறுதியான சாட்சிகளாக இருக்கின்றன. 

ஸ்ரீரடி சாயி பாபாவுடன் ஒன்றி இருப்பது சத்சரிதம் படிப்பது பஜனை நாம சங்கீர்த்தனம் பாடுவது வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது ஓம் ஸ்ரீ சாயி ராம் எழுதுவது ஸ்ரீரடி சாயி பாபாவை நினைத்து தியானம் இருப்பது பாபா இருப்பதை உணர்வதிலிருந்து நாம் சக்தி பெறுகின்றோம். என்னைச் சரண் அடைந்தவர்களுக்கும் நம்புகிறவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கின்றேன் என்பது பாபாவின் வாக்கு. ஸ்ரீரடி மண்ணில் கால் வைத்தவர்களை எத்தகைய துன்பமும் அனுகாது. சதையும் இரத்தமுமாக நான் இல்லாவிட்டாலும் என்னுடைய பக்தர்களை நான் என்றும் காப்பேன். நானிருக்கப் பயமேன். திடமான மனதுடன் என் உதவியை நாடி வந்தால் அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி கூறுகிறார் பாபா. 

ஸ்ரீரடி சாயி பாபாவின் தெய்வீக சத்தியுடன் ஒன்றி இருப்பதை உணர்வதிலிருந்து நாம் சக்தி பெறுகின்றோம். முழுமனதுடன் ஸ்ரீரடி சாயி பாபாவை நேசிக்கும் பொழுது பயம் வெளியே விரட்டப்படுகிறது. பரிபூரணமான நேசம் அன்பு கருணை பக்தி வழிபாடு நாமஜெபம் பிரிவைப்பற்றிய எல்லா எண்ணங்களையும் அழித்து விடுகிறது. 

ஸ்ரீரடி சாயி பாபாவுடன் தெய்வீகத் தொடர்பில் உள்ளவர்கள் பலமடங்கு சக்தி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அண்மையில் வேந்தன் தொலைக்காட்சியில் ஸ்ரீரடி சாயி பாபாவுடைய அற்புதங்கள் அதிசயங்கள் பலவற்றைப் பார்த்த பொழுது பாபா மேல் எனக்கிருந்து ஈடுபாடு சற்று இறுக்கமாகியது. நம்பிக்கை மேலும் துளிர்விட்டது. அந்தப் புண்ணியபூமியில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. 

மதுரை ஜானகி நகரிலிருக்கும் சித்ரா அம்மாவுடன் கதைத்த பொழுது பாபாவின் உன்னத லீலைகளை எல்லாம் அறிய முடிந்தது மட்டுமில்லாமல் அதை அனுபிவிக்கவும் ஆராதிக்கவும் கைங்கரியம் செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது. 

சித்ரா அம்மாவினுடைய கணவன் தான் ஸ்ரீரடி சாயி பாபாவை ஆராதித்து வந்தவர். அவருடைய இழப்பிற்குப் பின் அந்த அம்மாவே இந்தப் புனித பணியை சிரமேற்கொண்டு வருகின்றார். அவருடைய இல்லத்தில் பாபாவின் திருஉருவப்படத்திலிருந்து திறுநீறு (பாபாவின் உதி) சந்தனம் குங்குமம் என்பன இடைவிடாது மழையாகப் பெய்த வண்ணமே இருக்கிறது என்றாலும் அதற்குள் அதாவது பாபாவின் உதியைச் சேகரிக்கும் தருணத்தில் நவபாசாண சிலைகள் சில்லறைக் காசுகள் என எதிர்பார்க்க முடியாத பல பொருட்கள் இருப்பது பாபாவின் இன்னொரு அதிசயமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. சித்ரா அம்மாவுடன் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் 647.406.6352 என்ற இலக்கத்தை அழைத்து அவர்கள் இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 

உலகின் பல பாகங்களிலிருந்தும் பாபாவின் பக்தர்கள் இதைப் பார்வையிடுவதற்காக படைஎடுக்கிறார்கள். பாபாவின் திருஉருவப்படத்திலிருந்து கிடைக்கும் உதி பலபேருடைய உடல் உள ரீதியான வியாதிகளைக் குணப்படுத்துவதாக சித்ரா அம்மா சொல்கிறார். மேலும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் தாத்தா (பாபா) தனக்கு தரிசனம் தருவதாகவும்  ஏதோ ஒரு சைகை மூலம் பாபா தன்னோடு இருப்பதை உணர்த்துவதாகவும் உறுதி கூறுகிறார். 

பாபாவிற்கு மதம் கிடையாது. மொழி கிடையாது. தூய்மையான பக்தி ஒன்றே போதுமானது. பரிபூரணமாக சரணாகதியடைவதும் தியானிப்பதும் மட்டுமே நமது கடமை.  தனது பக்தர்களை நெடுந்தொலைவிலிருந்தாலும் ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கின்றேன் என்பார். 

பாபா பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்த வந்தாரோ அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மகாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார். உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருந்தார். உடலை விட்டுவிட்டதனால் இறந்துவிட்டாரா? இல்லை. பாபா எப்பொழுதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையும் கடந்தவர் அவர். எவனொருவன் முழுமனதுடன் அவரை நேசிக்கின்றானோ அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகின்றான். 

நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள். எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும். நான் மட்டுமல்ல என்னிடம் முழுஇதயத்தோடு சரணடைபவர்களுடன் எனது சமாதியும் பேசும் கூடச்செல்லும் தொடர்புகொள்ளும். நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் என்னையே எப்போதும் நினைவுகூறுங்கள். உள்ளம் உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள் என்றார் பாபா. "ஓம் சாயி ராம்". 

ஆக்கம் கணபதிப்பிள்ளை ரஞ்சன். 
               647.406.6352

 

 


 

 

தத்துவகலாநிதி பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் {(22-09-1916) – (22-09-2016)} அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் குறித்து இக் கட்டுரை வெளி வருகிறது.

தத்துவகலாநிதி பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள்

{(22-09-1916) – (22-09-2016)} அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் குறித்து இக் கட்டுரை வெளி வருகிறது.

தத்துவகலாநிதி பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள்  {(22-09-1916) – (22-09-2016)} அவர்களின் நூற்றாண்டு நிறைவைக் குறித்து இக் கட்டுரை வெளி வருகிறது.

                                தத்துவகலாநிதி பண்டிதமணி

              சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள்           

                காரைநகர் திருவூரில் சைவப்பண்பாட்டின் எழுச்சிக்கு வித்திட்ட ஆலயங்களுள் சிறப்புப் பெறுவது ஈழத்துச் சிதம்பரம் என வழங்கப்பெறும் காரைநகர் சிவன் கோவிலாகும். இதனை திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலயம் எனவும் அழைப்பர். இக் கோயில் காரைநகர் கோயில்கள்  அனைத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இத்தகைய பெருமை மிக்க கோயிலின் பண்பாட்டுப் பின்னணியில் தொடர்புபெற்ற ஒரு சிறந்த சிவாச்சாரிய மரபில் வந்தவர்தான் மூதறிஞர் தத்துவகலாநிதி சிவத்தமிழ்வித்தகர் பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள்.

                காரைநகருக்கு அணிசெய்து வரும் அறிஞர் வரிசையில் தனக்கென ஓரிடத்தை வகுத்துக்கொண்ட சிவத்திரு க. வை. குருக்களின் வாழ்வு கனிந்த வாழ்வாகும். குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை அழுக்காறின்மை, அவாவின்மை ஆகிய எண்குணங்களுக்கு இருப்பிடமாக விளங்கியவர் அந்தணச்செம்மல் சிவத்திரு க. வை. குருக்கள் அவர்கள். சுருங்கக் கூறின் சிவத்திரு க. வை. குருக்கள் அவர்கள் வள்ளுவனார் வகுத்துக் கூறிய மனிதநேய உண்மைகளாகிய அன்புடைமை, பண்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, அறிவுடைமை போன்றவற்றையே தமது செல்வமாகக் கருதி வாழ்ந்தவர்.  குருக்கள் ஐயா சைவப் பாரம்பரியத்திற்கும் சிவாச்சாரிய பாரம்பரியத்திற்கும் நல்லதோர் இலக்கண  புருடராக திகழ்ந்தவர் எளிமையான வாழ்வையே தனது வாழ்வாகக் கொண்டு விளங்கிய பண்புடையவர் பிறர் நலம் பேணும் பண்பும் பிறர்க்கு உதவும் பண்பும் மிக்கவராய் இருந்தார்.  அவர் கடமை உணர்வும், செயற் திறன் மிக்க ஆற்றலும் கொண்ட கர்ம வீரன் ஆவார்.

                சிவனடி மறவாத சிந்தையாளராக விளங்கி வந்தவரும் சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அரும்பணிகள் ஆற்றி வந்தவருமான சான்றோராகிய சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், தத்துவக்கலாநிதி, பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் தமது 98 ஆவது அகவை நிறைவுபெற்று 99 ஆவது அகவை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் 25-04-2015 சனிக்கிழமை அதிகாலை 3:00 மணி போல் சிவபதம் – திருவடிக்கலப்பு எய்தினார்.

                குருக்கள் ஐயா  கனடா சைவசித்தாந்த மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும், “அன்புநெறி” சிறப்பாசிரியர்களில் ஒருவராகவும் விளங்கி மன்றத்தின் பணிகள் சிறப்புற நடை பெற்றுவர, ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், சைவசமயகுரவர் பாடசாலை மாணவரின் வளர்ச்சியில் பாராட்டுகளும், ஊக்குவிப்புகளும் அளித்தவர். “அன்புநெறி” யின் திருவருட்செல்வர் விழா, திருவாதிரை-திருவாசக விழா மலர்கள் என்பவற்றுக்கெல்லாம் அவ்வப்போது அருளாசி உரைகளும் கட்டுரைகளும் எழுதியும், அருமையான கட்டுரைகளைத் தேடி அளித்தும், மற்றும் அருமையான சிறந்த நூல்களையும் அளித்து மன்றத்திற்கு பெருமையும் உயர்வும் அளித்த பெருமகனாவார்.

                குருக்கள் ஐயா அவர்கள் நல்லாசிரியராக, ஆளுமை மிக்க அதிபராக, பத்திரிகையாளராக, சமூகத்தொண்டராக, எழுத்தாளராக, பதிப்பாசிரியராக விளங்கியவர். அவர் ஆன்மீகவாதியாக, சிவனடிமறவாத சிந்தையாளராக, திருமுறைகளை தினமும் ஓதுபவராக தமது திருவடிக்கலப்பு நிகழும்வரை வாழ்ந்து திருவாசகப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே சிவபதம் எய்தியவர்.

                இவரது தந்தையார் சிவத்திரு ச. கணபதீசுவரக்குருக்கள் (1888-1967) ஈழத்துச் சிதம்பரத்தில் 64 ஆண்டுகள் சிவாசாரியாராகப் பணிபுரிந்தவர். சைவசமய வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவரும் “நாவலருக்குப் பிறகு அருணாசலந்தான் இந்நாட்டில் ஒரு மனிதர்” என்று நாவலர் பெருமானின் தமையனார் மகனாகிய ஸ்ரீமத் த. கைலாயபிள்ளை அவர்களால் போற்றப்பட்டவருமாகிய சைவப்பெரியார் திரு. ச. அருணாசலம் அவர்களது மாணவர் சிவஸ்ரீ ச. கணபதீசுவரக்குருக்கள். இவர் ஈழத்துச்சிதம்பரத்தை மையமாகக் கொண்டு அரை நூற்றாண்டுக்கு மேலாக சைவத்தை வளர்த்த சிறப்புக்குரியவர் வேத சிவாகமங்கள் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர் ஆலயக் கிரியைகள் ஆற்றுவதிலும் நல்ல ஆற்றலுள்ளவராக விளங்கியவர். திருவாசகம், உபநிடதங்கள் ஆகியவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சமயம் சம்பந்தமான ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு பல எண்ணிக்கையானோர் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இவரை நாடி வந்தனர். இவர் எழுதிய சமயக் கட்டுரைகளும் ஈழத்துச் சிதம்பரம் என்னும் நூலும் அறிஞர்களுக்குப் பெரிதும் உவந்தவையாயிருந்தன.

                சிவத்திரு க. வை. குருக்கள் அவர்களின் தாயார் சிவயோக சுந்தராம்பாள் ஆவார். இவரது மூதாதையர்களும் கல்வி கேள்விகளில் சிறந்த புலமைத்துவம் பெற்றவர்கள். இவர் மதுரைச் தமிழ்ச்சங்கப் பரீட்சகரும் சிறந்த தமிழ் அறிஞரும் நூலாசிரியரும் உரையாசிரியரும் பதிப்பாசிரியரும் ஆகிய பிரம்மஸ்ரீ கா. சிதம்பர ஐயர் அவர்களின் மகளாவர். காரைநகர் கார்த்திகேயப் புலவரின் பேர்த்தியாவர். காரைநகரில் பிரபல நொத்தாரிசுவாகஇருந்து பணியாற்றிய  பிரம்மஸ்ரீ கா. சி. மகேசசர்மா F. R. A. S அவர்களின் சகோதரியாவர். காரைநகர் தந்த நல்லறிஞர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் (1819-1898) சைவம் வளர்த்த பெருமைக்குரியவர். நாவலர் பெருமானின் குருவான இருபாலைச் சேனாதிராச முதலியாரைத் தமக்கும் குருவாகப் பெற்றவர். காமிகம், காரணம், முதலிய ஆகமங்களிலும் புராண இதிகாசங்களிலும் திருமுறைகளிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் சோதிடத்திலும் நிரம்பிய புலமைத்துவம் மிக்கவர். வரகவி எனப் போற்றப்படும் அளவிற்கு சிறந்த கவித்துவத் திறன்   கொண்டவராதலால் புலவர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சிறந்த நாடக ஆசிரியருமாவர். இவர் இயற்றிய திண்ணபுர அந்தாதி தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நூலாகும். நாவலரின் சொற்பொழிவுகளை ஒழுங்காக குறிப்பெழுதி வைத்தவர். எனவே நாவலர் வழி சமயப்பணி ஆற்றும் வாய்ப்புப் பெற்றவர். திக்கை அந்தாதி, திக்கை நாயகர் மும்மணிமாலை, திருப்போசை வெண்பா, நகுலேசா யமக அந்தாதி, வண்ணை திரிபந்தாதி போன்ற நூல்களை உருவாக்கிவர்.

                இவ்வாறு பல்துறை வல்லுனராக விளங்கிய இம்மகானது வழிவந்த சிவயோக சுந்தராம்பாள், சிவத்திரு. க. வை. குருக்கள் தமது மூதாதையர் போல் தமிழிலும் சைவத்திலும் நல்லறிஞனாக உருவாக வழிகோலியவர். கார்த்திகேயப் புலவரின் தந்தையார் பிரம்மஸ்ரீ முருகேசு ஐயரும் சிறந்த புலவராகவும் முத்தமிழ் வித்தகராகவும் பல நூல்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

                இத்தகைய சிறந்த சைவப் பாரம்பரியமும் தமழ்ப் புலமைத்துவம் மிக்க சந்ததியில் வந்த பெற்றோருக்கு (சிவத்திரு ச. கணபதீசுவரக் குருக்கள் அவர்களுக்கும் சிவயோக சுந்தராம்பாள் அவர்களுக்கும்) சிவத்திரு வைத்தீசுவரக்குருக்கள் 1916 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி மகனாகப் பிறந்தார். இவர் உத்தரகோசமங்கை என்னும் சிவாலயத்தில் பரம்பரையாக பூசை செய்த அந்தணர் மரபில் உதித்தவர்.

                தமது ஆரம்பக் கல்வியை, தந்தையார் சிவத்திரு ச. கணபதீசுவரக் குருக்களிடத்திலும் பண்டிதர் ச. பஞ்சாட்சரக் குருக்கள் மற்றும் பண்டிதர் சி. சுப்பிமணிய தேசிகர் ஆகியோரிடத்திலும் பெற்றவர். ஒருவன் தான் சார்ந்துள்ள சமயத்தின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு கற்க வேண்டிய நூல்களை ஐயந் திரிபறக் கற்றுத் தெளிய வேண்டும் என்று நாவலர் காட்டிய நல்வழிக்கேற்ப சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் சமயம், தமிழ், மற்றும் சமஸ்கிருதம் சார்ந்த கல்வி அறிவை விருத்தி செய்தார்.  தாம் கற்க வேண்டிய நூல்களையும் கல்வியையும் மகாவித்துவான் கணேசையா போன்ற தக்கவர்களிடம் பாடங்கேட்டுக் கற்றறிந்தார்.               

                குருக்கள் தமது புலமைத்துவத்தை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் பின்னர் பரமேசுவர பண்டித ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் கற்றுப் பண்டித பரீட்சையிலும், பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையிலும் சித்தியடைந்ததன் மூலம் செந்தமிழ்ப் புலமை மிக்க நல்லறிஞராகத் திகழும் வாய்ப்பினைப் பெற்றார்.

                இவ்வாறு தமது கல்வியறிவில் சிறந்து விளங்கிய சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் 1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.  பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வருகின்ற அகில இலங்கைச் சைவசமய பாடப்பரீட்சைக் குழுவில் அங்கம் வகித்துப் பெருஞ் சேவை செய்து வந்தார். அன்றியும் மாலை நேரத்தில், தினகரன் பத்திரிகையில் செய்திப் பிரிவில் பணியாற்றினார். ஞாயிற்றுக் கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். பின்னர் அவரது ஆசிரியப்பணி பல்வேறு பாடசாலைகளிலும் தொடர்ந்ததன் மூலம் இப்பணியில் தமது அனுபவத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தினார். சிவத்திரு குருக்கள் அவர்கள் அதிபராகப் பணி புரிந்து 1970 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் மாணவர்களது அறிவை விருத்தி செய்யும் நோக்கில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிடுவதன் மூலம் தமது கல்விப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.  தமது பெற்றோர் வழியிலும் பேராசான்கள் மூலமும் தாம் பெற்ற தமிழ்ப் புலமையை மற்றவர்களுக்கு ஒழிவு மறைவின்றி வாரி வழங்க சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் என்றும் பின்னின்றதில்லை. அவர் ஆக்கிய நூல்களும் பதிப்பித்து வெளியிட்ட நூல்களும் அவரது அயராத முயற்சிக்குரிய சான்றுகளாக அமைகின்றன.

                சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களின் நிறுவன ரீதியான பணிகள் அடுத்துச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர் மணிவாசகர் சபை ஆகியவற்றின் தாபகராக விளங்கியவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள்.  இவ்விரு நிறுவனங்கள் ஊடாக தமது நீண்டகால அனுபவத்தினைச் சமகால இளந் தலைமுறையினரின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்வதில் இவர் மிக்க ஆர்வமுடன் விளங்கியவர்.  கடமையில் அவர் கடைப்பிடித்து வரும் ஒழுங்கு இவ்விரு நிறுவனங்களும் சிறந்து வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது. 

                தமது தமிழ்ப் புலமையை மற்றவர்களின் அறிவு விருத்திக்காகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்ற பல நூல்களை சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் ஆக்கியவர்.  இவரது நூலாகிய “காரைநகரில் சைவசமய வளர்ச்சி” (1982) தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடாக அமைந்தது. 

                சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் பதிப்பித்த நூல்களின் வரிசையில் கந்தர் மட சுவாமிநாத பண்டிதரின் “திருமுறைப் பெருமை”, பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணபுர அந்தாதி”, “தன்னை அந்தாதி”, “திருப்போசை வெண்பா”, “திக்கை அந்தாதி”, மகாவித்துவான் F.X.C நடராசாவின் “நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “வினைத் தொகை”, “தெரிநிலை வினையெச்சம்”, பண்டிதர் மு. கந்தையாவின் “நாவலர் பிள்ளைத் தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”, திரு. ச. சபாபதி அவர்களின் “அருள் நெறித் திரட்டு” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

                சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் சிறப்பு மலர்களுக்குரிய ஆசிரியராக இருந்து வெளியிட்டவற்றுள் “காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”, “காரைநகர் மணிவாசகர் சபைப் பொன் விழா மலர்” (1993), “காரைநகர் – வியாவில் ஐயனார் கோயில் கும்பாபிஷேக மலர்” ஆகியவற்றுடன் திருவாதிரை மலர்கள் 5 ஐயும் குறிப்பிடலாம்.

                திருவாசக பாராயண சூழலில் வளர்ந்ததனாலும், தாயார் திருவாசகத்தில் ஏற்படுத்திய பற்றுணர்வினாலும் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களுக்கு திருவாசகத்தில் தீராத பற்று ஏற்பட்டது. அதுவே மணிவாசகர் சபையை ஆரம்பிக்க ஏதுவாயிற்று.               

                சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களால் யோகர் சுவாமிகளுடைய ஆசியுடன் காரைநகர் மணிவாசகர் சபை 01. 01. 1940 ஆரம்பிக்கப் பெற்றது.  இச்சபையின் வளர்ச்சிக்குப் பல சைவச் சான்றோர் உதவியதையும் குருக்கள் ஐயா நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.  காரைநகர் வாழ் சைவப் பெருமக்களது அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய உன்னதமான அன்பராகவே குருக்கள் ஐயா திகழ்ந்துள்ளார். அவரது சமயப் பணியில் காரைநகர் மணிவாசகர் சபையின் தாபிதமும் தொடர்ந்து அச்சபை மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுமே முக்கியத்துவம் பெற்றன. இச்சபையின் மூலம் காரைநகரில் மக்களிடையேயும் இளந்தலை முறையினர் இடையேயும் திருவாசகக் கலாச்சாரத்தினைத் தோற்றுவித்தவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். இச் சபைக்கும் தமிழகத்துக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் பெரும்பாலான ஆதீனங்களுடன் நெருக்கமான உறவை வளர்த்தவர் குருக்கள் அவர்கள். 1955 ஆம் ஆண்டு முதல் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழா நடைபெறத் தொடங்கியது.  அந்த ஆண்டு தொடக்கம் விழாக்கள் தொடர்ந்து நடைபெறச் செய்வதிலும் தமிழகத்திலுள்ள அறிஞர்களுடனும் எம் நாட்டு அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களை மணிவாசகர் விழாக்களில் சொற்பொழிவாற்றச் செய்வதிலும் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் பெரும்பணி ஆற்றி வந்தவர்.

                குருக்கள் ஐயா தனது தந்தையார் அருமையாகச் சேர்த்த பழைய கிடைத்தற்கரிய ஆகமங்கள், பத்ததிகள், சமய நூல்கள் இலக்கிய நூல்கள் உள்ளிட்ட சிறந்த ஒரு நூலகத்தைப் பேணி வந்தவர். அவற்றைப் பாதுகாத்து தாம் நிறுவிய மணிவாசகர் சபைக்கு 6000 நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார். ஆய்வுகளின் போது அறிஞர்களுக்குத் தேவைப்படும் முக்கியமானவற்றையும் மற்றும் மிக அருமையானவையுமான நூல்களை மனமுவந்து உபகரித்து உதவி வந்தவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். 

                குருக்கள் அவர்கள் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தவர்; பெருமை, பாராட்டு. கௌரவம் எதனையும் எதிர் பார்க்காமல் கடமை ஆற்றும் கர்ம வீரன்.  “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசு நாயனாரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து வந்தவர்.  அனைத்து அன்பு நெஞ்சங்களோடும் சளைக்காமல் கடிதத் தொடர்பு கொண்டு தமது அன்புப் பிணைப்பையும் உறவையும் வளர்த்துக் கொள்வதோடு காரைநகரில் தாம் தாபித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அனைவரையும் அரவணைத்துச் செயலாற்றுவதில் வல்லவராக விளங்கி வந்தவர்.                

                குருக்கள் ஐயா அவர்கள் எழுதிய, பதிப்பித்த நூல்கள் பல. ஏட்டுப்பிரதிகளில் இருந்த பலவற்றை அச்சமைத்துப் பதிப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்தது போல், ஈழத்தில் பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் பதிப்பித்த நூல்களுள் தலை சிறந்து விளங்குவது நவாலியூர் புலவர்மணி சோ. இளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும். இந்நூலின் உரையாசிரியர் நூலாசிரியரின் வாழ்க்கைத் துணைவியாராகிய பண்டிதைமணி இ. பரமேசுவரியார் ஆவார். இந்நூலில்,

 

                “அந்தணர்க்குண் மணியனையான் அருங்கலைகள்

                                மிகப் பயின்றான் அருமை ஆசான்

                 சந்தமுஞ் சிவனன்பு தழைக்கின்ற

                                உள்ளத்தான் தகைசால் நண்பன்

                 கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணபுரங்

                                கவினோங்குங் கருத்து மிக்கான்

                 வந்தவருக்கு அமுதளிப்பான் வண்பெயர்கொள்

                                வைத்தீசுவரக் குருக்கள்!”

 

                எனப் புலவர்மணி சோ. இளமுருகனார் பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவைப் போற்றிப் பாடியுள்ளார்.

                தமிழுக்கும் சைவத்திற்கும் கடந்த பல தசாப்தங்களாக அரிய பணியாற்றி வந்த சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு அகவை 79 ஆகும் போது அகில இலங்கை  கம்பன் கழகம் 1995 ஆம் ஆண்டு “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னாடை போர்த்திக் பொற்கிழி வழங்கிக் கௌரவித்தது.

                கனடா சைவ சித்தாந்த மன்றம், செப்ரெம்பர் 22, 2001 இல் குருக்கள் ஐயா அவர்களின் 85 ஆவது அகவை நிறைவின் போது “சிவத்தமிழ் வித்தகர்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்ததோடு அவர் ஆற்றிய சைவத்தமிழ்ப் பணிகளை ஆவணப்படுத்தி “வைத்தீசுவரர் மலர்” என்பதனையும் வெளியிட்டுப் போற்றிப் பெருமை பெற்றது.

                குருக்கள் ஐயாவின் 86 ஆவது அகவை நிறைவின்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான சைவத் தமிழ்த் தொண்டுகளை மதிப்பீடு செய்து அவருக்கு “தத்துவக் கலாநிதி” என்ற பட்டத்தை 12-10-2002 இல் நடைபெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்நிகழ்வு குருக்கள் ஐயாவிற்கும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை கொடுப்பது மட்டுமல்ல சைவத்தமிழ்ப் பெருமக்களுக்கும் பெரும் மகிழ்வையும் நிறைவையும் கொடுத்தது.      

                தத்துவக் கலாநிதி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 91 ஆவது அகவையில், புலவர்மணி, பண்டிதர் க. மயில்வாகனனார் அவர்களால் இயற்றிய ஆண்டிகேணி ஐயனார் புராணம் டிசம்பர் 2007 இல் உரையுடன் காரைநகர் மணிவாசகர் சபை மூலம் வெளியீடு செய்வித்தார்.

                பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 95 ஆவது அகவையில்  தாம் முன்னர் பதிப்பித்த திண்ணபுர அந்தாதி (மூலமும் உரையும்) என்ற நூலின் மூன்றாம் பதிப்பினை, கனடா சைவசித்தாந்த மன்றம் மூலம் யூன் 2011 இல் வெளியீடு செய்வித்தார்.

                சிவத்தமிழ் வித்தகர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 97 ஆவது அகவையில்  தாம் பலகாலமாகத் தொகுத்துக் கொண்டிருந்த சைவக்களஞ்சியம் என்ற நூலை தொகுப்பாசிரியராக இருந்து,  வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மூலம்  டிசம்பர் 2013 இல் வெளியீடு செய்வித்தார்.

                சான்றோராகிய குருக்கள் ஐயா அவர்கள் தமது 98 ஆவது அகவையில் தாம் தாபித்த காரைநகர் மணிவாசகர் சபை, 75 ஆண்டுகள் நிறைவுகண்டு பவளவிழாவின் தொடக்கமாக  டிசம்பர் 2014 இல் நடைபெற்ற மணிவாசகர் சபையின் பவள விழா (1940 – 2015) மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மகிழ்வோடும் மனநிறைவுடனும் எல்லோரையும் ஆசீர்வதித்தார்.

                அமரர் தத்துவ கலாநிதி, பண்டிதமணி, சிவத்தமிழ் வித்தகர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களது 99 ஆவது அகவை நிறைவு பெற்று 100 ஆவது அகவை ஆரம்பிக்கும் போது, ஐயா அவர்கள் பதிப்பித்த யாழ்ப்பாண-கந்தர்மடம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதபண்டிதர் அவர்கள் எழுதிய திருமுறைப் பெருமை என்னும் நூலை செப்ரெம்பர் 22, 2015 இல் கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியீடு செய்தது. இந்நூலை காரைநகரிலும் அதே தினத்தில் குருக்கள் ஐயாவின் மக்களின் விருப்பத்திற்கமைய வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தில் வெளியீடு செய்யப் பெற்றது.

                அமரர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தால் 27-12-2016 இல் வெளியிடப் பெற்றது. நூற்றாண்டு மலர் ஆசிரியர் திரு பா. துவாரகன் அவர்கள்.

                அமரர் சிவத்திரு க. வை. குருக்கள் அவர்களின் முதலாண்டு திருவடிக்கலப்பு நினைவு வெளியீடாக மன்றம் ஏற்கனவே பதிப்பித்த திருவாசகம் நூலின் நான்காம் பதிப்பை  ஐயாவின் நினைவு வழிபாட்டில் கனடா சைவசித்தாந்த மன்றத்தால் வெளியிடப் பெற்றது.

                அமரர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு நிறைவு செப்ரெம்பர் 22, 2016 அன்றாகும்.

                சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் சிவானந்த  ஞான வடிவேயாகி சிவபெருமான் திருவடி நீழலில் பேரின்பம் பெறுவார். அவரின் அன்பர்கள் உள்ளங்களில் என்றும்  கலங்கரை விளக்காக நின்று ஒளி ஏற்றுவார்.

 

                                                                                                   தி. விசுவலிங்கம்

                                                                                                            தலைவர்

                                                                                    சைவசித்தாந்த மன்றம், கனடா

 

 

 

 

 

 

 

காரைநகர் மேம்பட நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் ஐந்து விடயங்கள்

கடந்த வருடம் 26.9.2015 அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சுட்டெண் 117 இ பிரிவில் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி மாணவி செலவி தீபிகா நவரட்ணம் கலந்து கொண்டு இரண்டாம் பெற்று காரை இளஞ்சுடர் விருதைப் பெற்றுக் கொண்டார். இவரது ஆக்கம் அமரர் கலாநிதி  ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 17.07.2016இல் எமது சபையால் வெளியிட்டு வைக்கப்பட்ட தியாகச் சுடர் நினைவுத்தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காரைநகர் மேம்பட நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் ஐந்து விடயங்கள்

சங்குமணி முத்து நவரத்தினங்கள் வீசி சமுத்திரத்தின் அலைகள் எல்லாம் தவழ்ந்து விளை யாடி பொங்கு எழில் இயற்கை வளம் நிறைந்தது நம் காரையூர் சைவமும் தமிழும் கல்விப் பாரம் பரியங்களும் பண்பாடும் கட்டிக்காக்கும் புண்ணிய பூமி காரைதீவு ஆகும். ஆரம்ப காலத்தில் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு இருந்தமையால் இதனை காரைதீவு என்று அழைத்தார்கள். 1878 ஆம் ஆண்டு கு.ஆ.ஆம்ஸ்ரோங் என்பவர். காரைதீவையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் வகையில் பொன்னாலைப் பாலத்தை அமைத்தார். இச்சமயம் எமது ஊர் வந்த பெரியார் சேர்.பொன் இராமநாதன் அவர்கள் தரைவழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு இது தீவு அல்ல இது காரைநகர் என்று கோசமிட்டார். இதனை மக்கள் மகிழ்வுடன் ஏற்று ஆரவாரம் செய்தனர்.  இலங்கையின் கிழக்கையும் ஒரு காரைதீவு காணப்பட்டது. இதனால் அரச தபால் செய்திகள் கிடைப்பதில் குழப்ப நிலை காணப்பட்டதால் அன்று இருந்த அரசாங்கம் 1923.09.12ஆம் திகதி காரைநகர் என்று அழைக்க அனுமதி அளித்தது.

இயற்கை வளம் நிறைந்த  நம் காரை ஊரிலே கற்றறிந்த கல்வி மான்களும் தாராண்மை மிக்க வேளாண்மையாளர்களும், தன்னெறி புகட்டிய நல்லாசான்களும் கற்றுத்தேர்ந்து அரச கருமமாற்றும் அரச உத்தியோகத்தரகள் தாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வணிகள் குழாமும் கடற்றொழிலாளர்களும் ஒன்று கூடி வாழ்ந்த தொல்லூராகும் நமது காரைநகர். எம் ஊர் மேம்பாடு அடைய நாம் செய்ய வேண்டிய அம்சங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முக்கிய சில விடயங்களை ஆராய வேண்டியது காலத்தின் கட்டாய நிலைப்பாடாகும். அந்த வகையில் எம் ஊரில் கிடைக்கின்ற இயற்கை வளங்களை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளல் ஓர் சம்சமாகும். அடுத்தது எம் ஊரிலே எமக்கு வழிகாட்டியாக முன் மாதிரியாக திகழ்வோரை ஆதாவது கலைஞர்கள், அறிஞர்கள், சான்றோர்களை கௌரவித்தல் தொழில் முயற்சியில்ஈடுபடுதல், சுயநலமின்றி பொதுநல நோக்கில் வாழ்தல், பழக்க வழக்கம், பண்பாடு என்பவற்றை மரபு ரீதியாக பேணுதல் போன்ற விடயங்களாகும். அந்த வகையில் வளங்களை தக்க முறையில் பயன்படுத்தல் என்ற விடயத்தினை நோக்கு மிடத்து எமது காரைநகர் சிறந்த வருவாய் ஆகும். ஏனெனில் நெல் வயல்காணிகள், தென்னந்தோப்புக்கள், பனை வளங்கள், பண்ணை வளர்ப்புக்கள் போன்றன பல வளங்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி பாரிய முன்னேற்றத்தினை அடைய முடியும். தென்னையை எடுத்தால் தென்னங் கன்றுகளை நட்டு நீர்ஊற்றி பராமரித்துக் கொண்டால் பல பயன்பெறலாம். உணவிற்கான தேங்காய்களை நாம் வேண்ட வேண்டிய தேவை இல்லை. தேங்காயில் கொப்பிறாக்கள் எடுத்து வைத்து தேங்காய் எண்ணெய் பெறலாம். தேங்காய்த் தும்பு மூலம் தும்புத்தடி தயாரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம். முன்னைய காலத்தில் கோவளம் துறைமுகமாக இருந்திருக்கின்றது. அத்துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் தேங்காய்கள், தேங்காய் எண்ணெய் போன்றன ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் விளைவாகவே வெளிச்சவீடு கட்டப்பட்ட தாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அடுத்து பனை வளத்தை நோக்கினால் 'கற்பகதரு' என்று சிறப்பிக்கப்படும் பனையின் பழத்தை எடுத்து பனங்காய் பணியாரம், பினாட்டு போன்றனவும் பனம்பழத்தை எடுத்து பாத்தியில் இடுவது மூலம் பனங்கிழங்கு பெறப்பட்டு அதில் ஒடியல் எடுத்து ஒடியல்மாப்பபிட்டு செய்வார்கள். பனையின் கள்ளில் இருந்து பனஞ்சீனி, கருப்பணி போன்றனவும் தயாரிக்கப்படுகின்றன. மேலும் காணிகளில் பருகவ காலங்களை பொறுத்து தானிய வகைகளை விதைத்து அறுவடை செய்து நல்ல முறையில் களஞ்சியப்படுத்தி ஏற்றுமதி செய்யலாம்.

மேலும் பண்ணை வளர்ப்பு பற்றிய கண்ணோட்டத்தை செலுத்தினால் பண்ணை வளர்ப்பில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை கருதினால் மாட்டின் மூலம் பால் கறந்து பால் உற்பத்திப் பொருட்களை அதாவது தயிர், நெய் பாற்கட்டி போன்றவற்றை செய்து விற்பனை செய்யலாம். கோழிமுட்டையை விற்பனை செய்து கொள்ளலாம் அல்லது இனத்தை பெருக்கி கோழிகளை விற்பனை செய்யலாம். இவ்வாறாக எமது ஊரில் பொருத்தமான நடைமுறைக்கு சாத்தியமானவையாக மேற்குறிப்பிட்டவை விளங்குகின்றன. இவ்வாறான விடயங்கள் மூலம் நமது வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வோம்.

அடுத்து தொழில் முயற்சியை எடுத்துக்கொண்டால் காரை நகர் மக்கள் இலங்கையின் சகல பாகங்களில் மட்டுமன்றி வெளிநாடுகளில் கூட வேலைக்காக சென்றுள்ளனர். காகம் கரையாத இடமும் இல்லை. காரைதீவான் போகாத ஊரும் இல்லை. என்று முன்னொர் கூறுவார். அது போல நம் காரைவாழ் மக்கள் எந்த ஒரு மூலை முடக்கிலும் நிற்பார்கள். நம் ஊரில் மேற்குறிப்பிட்டது போல் இவ்வளவு வளங்கள் ஊடாக எத்தனையோ பயன்களை பெறுவதுடன் நின்றுவிடாது எத்தனையோ உழைப்பைத் தேடி புலம் பெயர்பவர்கள் கஷ்டப்படுபவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கலாம்."கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் அலைவார்கள்" என்பது போல தான் நம் மக்களும் தமது வளங்களைப் பயன்படுத்தி எத்தனையோ தொழில்களை மேற்கொள்ளும் வசதி இருந்தும் தக்க முறையில் பயன்படுத்தாமல் உள்ளனர். எமது ஊரில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை, பனை கருப்பனி, சீனி போன்றவற்றுக்கான தொழிற்சாலைகளை நிறுவி பலருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கலாம். நம் மக்கள் இவ்வளவு காலமும் இருந்ததைப் போல் இல்லாமல் நல்ல வேலைகளை உரியவாறு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

அடுத்து எம் ஊரில் உள்ள சான்றோர்களை கௌரவித்தல் என்ற விடயத்தை நோக்கும் கால் எமது ஊரில் ஆரம்பத்தில் பலர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் ஆனாலும் அவர்களுடைய புகழ் நிலைத் திருக்கின்றது என்றால் அன்று மக்கள் அவர்களைக கௌரவித்து அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு அலன் ஏபிராகம் அம்பலவாணர் அவர் ஒரு வானசாஸ்திர நிபுணர் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மெச்சி போற்றி இருந்ததனால் தான் அவர் புகழ் இன்று நிலைத்திருக்கிறது. மேலும் தங்கம்மா அப்பாகுட்டி அவர்கள் செய்த சேவைக்கு நமது காரைநகர் மணிவாசகர்சபை "சிவத்தமிழ்ச் செல்வி" என்ற பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஏன் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை கூட மாணவரிடையே போட்டிகளை நடத்தி திறமைபடைத்த மாணவர்களுக்கு சென்ற வருடம் விருதுப் பெயர்களை வழங்கியுள்ளது. இச் செயற்பாடு அந்த மாணவனை மேன் மேலும் ஊக்கமுடன் ஏனைய வற்றிலும் சிறந்து உயர்ந்த தலைமை தாங்கும் ஒருவனாக மாற்றும் இதனால்  கூற வருவது யாதெனில் ஒருவரின் திறமைகளை பாராட்டுகின்ற பொழுது அது அவரின் திறமை மேன்மேலும் வளர உதவி என்பதேயாகும்.  காரைநகரில் அவ்வாறானவர்கள் பலர் இருக்கினறனர். அவர்களை இனங்கண்டு கௌரவித்தல் வேண்டும். இதுவும் நம் ஊர் மேம்பட உதவும் ஒரு காரணியாகும்.

அடுத்து சுயநலமின்றி பொதுநல நோக்குடன் வாழ்தல் என்ற விடயப்பரப்பை நோக்கினால் காரைநகரின் மேம்பாட்டிற்கு அல்லது அபிவிருத்திக்க ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு அவசியமாகும். நான் எனது குடும்பம், எனது பிள்ளைகள் என்று  இருந்து விடாது. பொது நல நோக்கோடு வாழ வேண்டும். புலம் மாறினாலும் தடம் மாறாது பிறந்த மண்ணிற்கு பல வெளிநாட்டில் வாழும் காரை மண் சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றது என்றால் அது காரைநகரின் மேம்பாட்டிற்கே ஆகும். அவர்கள் தானும் தமது குடும்பமும் என்று இருந்தால் மட்டும் இன்றைக்கு காநைகர் இந்த அளவிறகு; வளர்ச்சி அடைந்திருக்காது. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தமது தேவைகளுக்காக வெளியூர் சென்றிருந்தாலும் இன்று அவர்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பொதுநல சிந்தனையே ஆகும் நம் ஊர் மேலும் மேம்பாடைய அவர்களின் உதவியும் பொதுநல சிந்தனையும் ஒரு காரணியாய் அமையும் என எதிர்பார்க்கின்றேன்.

அடுத்து பண்பாடு, பழக்க வழக்கம் என்பன மரபு ரீதியாகப் பேணப்பட வேண்டும் என்ற பண்பை நோக்கினால் காரைநகருக்கு என்று ஒரு தனித்துவ பண்பாடுகள், பழக்கவழக்கம், சம்பிரதாயங்கள் என்பன உள்ளன. காரைநகரில் அதிகம் சைவர்களும் சைவ ஆலயங்களுமே உள்ளன. நாம் நமது சைவ பாரம்பரியங்கள் பழக்கவழக்கங்களை கைவிடக்கூடாது. முன்னைய காலகட்டத்திலே அருணாசல உபாத்தியாரின் வாழ்வில் நடந்த ஒரு விடயம் தந்தையார் சைவம், தாயார் சைவம், தான் சைவம், தன் பிள்ளைகள் ஏன் கிறிஸ்தவர்களாய் இருக்க வேண்டும்  என்று தன் தொழிலை விட்டு ஊர் வந்ததாகக் கூறப்படுகின்றது. அது மட்டுமன்றி ஆலயங்களில் திருவாசகம் முற்றோதல், புராணபடலம் பாடுதல போன்ற நிகழ்வுகள் தற்பொழுதும் உள்ளன. ஓவ்வொரு வெள்ளியும் ஈழுத்துச் சிதம்பரத்திலும் ஒவ்வொரு மாதப் பிறப்பு கிழவன்காடு முருகன் ஆலயம், ஒவ்வொரு கார்த்திகையும் கருங்காலி முருகன், ஒவ்வொரு அமாவாசையும் மணற்காட்டு முத்து மாரியம்மன் என்றவாறு ஒவ்வொரு ஆலயங்களிலும் பேணப்படுகின்றது. இந்த பண்பாடு மேலும் வளரச்சி அடையவேண்டும். அடுத்து காரைநகரானது மேம்பாடடைய இளைய சந்ததிகள் ஆகிய நாமும் ஊர் மக்களும் முதலில் ஒன்று பட்டு வாழவேண்டும். இன்று நமது ஊரில் சகல துறைகளிலும் ஓரளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. நீர்த்துறையாய் இருந்தாலும் சரி, போக்குவரத்துத் துறையாக இருந்தாலும் சரி, விவசாயம் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற துறை என்றாலும் சரி ஆலயங்கள், பாடசாலைகள் போன்றவையாக இருந்தாலம் சரி துரித வளர்ச்சி அடைந்துள்ளது. இது மட்டுமன்றி வங்கி, வைத்தியசாலை, மற்றும் பிரதேச செயலகம் போன்றவையும் மேம்பாடு அடைந்துள்ளன. இவை அனைத்திலும் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தவை என்று பிறந்த பூமியை பொன்னாக மதிக்கும் வெளியூர்களில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் பங்கு இடம் பெற்றுள்ளமை யாவரும் அறிந்த உண்மையாகும். எனவே மேலும் நம் ஊர் மேம்பாடு அடைய புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் உதவி மற்றும் இறைவனின் அனுக்கிரகமும் கிடைத்து நம் ஊர் உவப்ப உயர்ந்தோங்கி நிற்க இறைவனைப் பிரார்த்தித்து எனக்கு இச் சந்தர்ப்பத்தை வழங்கிய சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கு பூப்பறித்து மாலையிட முடியவிலலை. மனதார நன்றி கூறி நிறைவு செய்கின்றேன்.

                                                        நன்றி


                                                                                         இங்ஙனம்.
                                                                         சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                     மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                          29.08.2016

 

03 kadduraipoddi2015 02

அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டு மாமா) அவர்களின் நினைவலைகளும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும்

PADU MAMAVerney07.2016

 

அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டு மாமா) அவர்களின் நினைவலைகளும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும்
 

                                                                                                                                                                                                                                   

          –  திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.Sc. 

1970 களில் இருந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைநகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த வாரிவளவு நல்லியக்க சபையானது கல்வி, கலை, விளையாட்டு என பல்துறைகளிலும் காரைநகர் வாழ் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் வகையில்; காரைநகரிலும் 1991-1996 காலத்தில் ஏற்பட்ட இடம்பெயர்வின்போது காரைநகருக்கு வெளியேயும் தளராமல் சேவையாற்றி வந்த சபையாகத் திகழ்ந்தமையை காரைநகர் வாழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். 

இச்சபையின் அச்சாணியாக அதன் செயலாளராக அரும்பெரும் தொண்டாற்றி கலைஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் என அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று அர்ப்பணிப்போடு சேவையாற்றியவர் 'பட்டுமாமா' என்று அன்பாக அழைக்கப்படும் அமரர்.சரவணமுத்து பத்மநாதன் என்றால் மிகையாது.

காரைநகர் மேற்கு, வாரிவளவு என்ற குறிச்சியில் 1932 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பிறந்த அமரர்.சரவணமுத்து பத்மநாதன் அவர்கள் தமது தொடக்கக் கல்வியை வியாவில் சைவ வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும்; முதுநிலைக் கல்வியை இவர் காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட யாழ்ற்றன் கல்லூரியிலும் பயின்று, பின்னர் இலங்கை எழுது வினைஞர்களுக்கான பொதுப் பரீட்சையில் சித்தியெய்தி கொழும்பில் இலங்கை போக்குவரத்துத் திணைக்களத்தில் எழுது வினைஞராகவும் பின்னர் யாழ் கல்வித் திணைக்களத்தில் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். 

பட்டு மாமா அவர்கள் வாரிவளவு நல்லியக்க சபையினூடாக காரைநகரில் கல்வி, கலை, விளையாட்டு எனப் பலதுறைகளில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்ததுடன் எமது பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களையும் பாதுகாத்தார். குறிப்பாக, காரைநகர் மாணவர்களுக்கிடையில் தமிழ் ஆங்கில பேச்சுப் போட்டிகள், பட்டி மன்றம், வாய்ப்பாட்டு இசைப் போட்டி, பரதநாட்டிய ஆற்றுகைப் போட்டிகள், கிராமிய நிகழ்ச்சிகளின் போட்டிகள் எனப் பல போட்டிகளை நடத்தி கலை ஆர்வமுள்ள வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டி ஊக்குவித்தார். தனது பெயரையோ புகழையோ விரும்பாமல் 

"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்"
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க 

ஆசிரியர்கள், கலைஞர்கள், கொடை வள்ளல்கள், விளையாட்டுத்துறை வீரர்கள் எனப் பல்துறை சார்ந்த பெரியவர்களை அணுகி அவர்கள் துணையுடன அக்காலத்திலிருந்து இன்று வரை காரைநகரில் கலைப்பணியாற்றி வரும் 'களபூமி முத்தமிழ் பேரவை', மற்றும் விளையாட்டுக் கழகங்கள், பாலர் பாடசாலைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த அளப்பெரும் பணிகளை அயராது பின்நின்று இயக்கியவர் பட்டுமாமா அவர்கள். 

இன்று இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் பிரபலமாக விளங்கும் காரைநகர் தந்த கலைஞர்களும், மேடைப் பேச்சாளர்களும், ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், ஏன் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற துறைசார் வல்லுநர்களும் அன்று வாரிவளவு நல்லியக்க சபை மேடையில் தமது கன்னி ஆற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வளர்ந்தவர்கள் என்று தயக்கமின்றிக் குறிப்பிடலாம்.    
 
அவரின் பொது சேவைகளில் ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். காரைநகர் மக்கள் காரைநகரை விட்டு 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து யாழ் குடநாட்டின் கிராமங்கள் எங்கும் பரந்து வாழ்ந்த சமயம், இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற காரைநகரைச் சேர்ந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஒரு பாராட்டு விழாவை நடத்தி ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஆயிரம் ரூபா(ரூ1000.00) ஊக்குவிப்புப் பரிசாக அன்று வழங்கியிருந்தார். சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்த இக்கட்டான காலகட்டதில் எங்கள் கிராம மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் பட்டுமாமா அவர்கள் அன்று சேவையாற்றியமை 

                      "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
                        ஆலயம் பதினாயிரம் நாட்டல்
                        அன்ன வாயினும் புண்ணியங்கோடி
                        ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"  

என்ற புரட்சிக் கவிஞர் பாரதியாரின் வரிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தமையை நினைவூட்டுகின்றது.

சமூக சேவையாளர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக வாழ்ந்து காரைநகரின் வரலாற்றில் மறக்க முடியாத இடம் பிடித்துக் கொண்ட பட்டுமாமா அவர்கள் 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தபோது கனடா ரொரன்ரோவில் அன்னாருக்கான இரங்கல் கூட்டம் ஒன்றினை திரு.சண்முகம் கந்தசாமி அவர்கள் தலைமையில் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களின் ஒருங்கமைப்பில் கனடா-காரை கலாச்சார மன்றம் நடத்தி கனடா வாழ் காரை மக்கள் அன்னாரை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வெளியிடப்படும் "காரைவசந்தம்-2008" சிறப்பு மலரில் அன்னாரின் பணிகள் பற்றி ஒய்வுநிலை அதிபர் திரு.க.தில்லையம்பலம் அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

காரைநகர் வாரிவளவு நல்லியக்க சபை தனது பணிகளின் ஒர் அங்கமாக காரைநகரில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசில்கள் வழங்கி வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து சேவையாற்றியது. அத்துடன் காரைநகரில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளையும், காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடற்பரப்பில் நீச்சல் போட்டி, காரைநகர் சுற்று வீதியில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், மற்றும் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம் போன்ற பெருவிளையாட்டுகளையும் நடத்தி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் பரிசளிப்பு விழாவில் பரிசுகளை வழங்கி விளையாட்டுத்துறையை ஊக்குவித்து வளர்த்தமை பட்டுமாமாவின் அளப்பரிய சேவைகளில் இன்னொன்றாகும். 

                       "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
                        செயற்கரிய செய்கலா தார்"

என்ற வள்ளுவன் குறளுக்கமைய செயற்கரிய செயல்களைச் செய்த சேவையாளராக பட்டு மாமா விளங்குகின்றார். 

அந்தவகையில், கனடா-காரை கலாச்சார மன்றம் ஆண்டு தோறும் நடத்தும் கோடை கால ஒன்று கூடல் விளையாட்டுப் போட்டிகளில் அவரின் சேவையை மதித்து ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமரர்.அருணாசலம் கருணாகரன் தலைமையிலான நிர்வாக சபை 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றியிருந்தும் அதனை அமுல்படுத்துவதில் தவிர்க்கமுடியாத சிக்கல் ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும். 

இருந்தபோதும் இவ்வாண்டு கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் வருடாந்த கோடை கால ஒன்று கூடல் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு (தாய்ச்சி) போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு "அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம"வழங்கப்பட இருக்கின்றமை "பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டகல்லும்…" என்று பதினோராம் திருமுறையில் சேரமான் பெருமாள் நாயனார் குறிப்பிடுவது போல சாலப் பொருத்தமானது.

 

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

Dr_A_Thiyagarajah-287x397         

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

காரை மாதாவின் மைந்தர்களில் மாணிக்கமாகத் திகழ்பவரும், புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகத் தான் சேவையாற்றிய பாடசாலையாகிய காரைநகர் இந்துக் கல்லூரியை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியும் தணியாத ஊர்ப்பற்றுடன் தீர்க்க தரிசனச் சிந்தனையுடன் அரசியல் என்னும் ஆயுதம் கொண்டு தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து காரை மண்ணில் அளப்பரிய அபிவிருத்தி செய்தவருமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும்.
 
தான் சேவை செய்த கல்லூரியின் காலத்தை மட்டுமல்ல தன் ஊரின் காலத்தையும் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது காரைநகர் மக்களின் கடமையாகும்.  

அந்தவகையில், இந்நாளையொட்டி "நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார்" என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.  

செல்வி.டிலானி கார்த்திகேசு எழுதிய இக்கட்டுரை 2014ம் ஆண்டில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

   

                   “நானறிந்த காரைநகர் பெரியோர்

                 கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம் 02 

 

இலங்கை திரு நாட்டிலே வட மாகாணத்திலே யாழ்ப்பாணத்திலே எண்திசை புகழும் அருளின் நிறைந்த காரைநகரிலே வலந்தலை சுட்டில் அறிவுக் கண்ணை திறக்கும் அறிவுக் கூடமாக யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் உள்ளது. இன்று அப் பாடசாலையானது தனது காரைநகர் இந்துக்கல்லூரி என்னும் பெயரை யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என மாற்றியமைக்கு காரணம் திரு.ஆ.தியாகராசா அவர்களினால் ஆற்றப்பட்ட தன்னலம் அற்ற சேவையே ஆகும். தற்போதும் இவரது மகள் திருஆ..தியாகராசா அவர்களின் நினைவாக காரைநகரில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி பணம் வழங்குவது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ்வாறான புகழும் பெருமையும் கொண்ட திருஆ..தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமை ஆற்றிய திரு.ச.ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியாரின் செல்வப்புத்திரனாக 1916ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதற்கினங்க ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட'டு வயது வரை மலேசியாவிலேயே கற்றார். பின்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது பேரன் பேத்தியுடன் இருந்து இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே இந்தியாவில் உள்ள கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஸ்பாரதி பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வயது குறைவாக காணப்பட்டமையால் சென்னை அடையாறு கலாசேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி கற்றார். தனது பதினாறாவது  வயதில் அதாவது 1932இல் சீனியர் பரீட்சையிலும் பதினெட்டாவது  வயதில் அதாவது 1934இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும் இருபதாவது  வயதில் அதாவது 1936 இல் பீ.எ பரீட்சையிலும் 22ஆவது வயதில் அதாவது 1938இல் எம்.ஏ பட்டமும் பெற்றதன் பின்னர் 1940வரை சிங்கப்புர் மருத்துவக்கல்லூரியில் கல்வி பயின்றார் 1941இல் அதாவது 25ஆவது வயதில் எம்.லிற் பட்டத்தை பெற்றார். பின்னர் இலங்கை திரும்பிய தியாகராசா அவர்கள் காரைநகரில் உள்ள இந்துக்கல்லூரி அதாவது தற்போது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்படும் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் இக் கல்லூரி கடமையாற்றிய காலம் "பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது. இவர் கல்வி பயிலும் காலத்தில் ஹாக்கி அணிவீரர் மற்றும் சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தியாகராசா அவர்கள் இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் இந்திய தேசத்திற்கான விடுதலைக்கான அண்ணல் காந்திஜி தலைமையில் அணிவகுத்து போராடியவர். இவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தன்னலம் துறந்து புசல்களை விடுத்து மக்களும் தேசபக்தர்களும் தேசவிடுதலைக்காக போராடி பெற்ற அனுபவங்களைக் கொண்டு தன் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942ம் ஆண்டு தனது 26ஆவது வயதில் ஆடம்பரமும் நவநாகரீகமும் துளியும் கிடையாத திரு.சிவகுநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணையாக கொண்டவர். தியாகராசா அவர்களின் வெற்றிக்கு மிக பக்கபலமாக காணப்பட்டதுடன் தியாகராசா அவர்களின் கருத்தறிந்து நடந்து கொண்டார்.

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.கனகசபை அவர்கள் 1945இல் ஓய்வு பெற திருஆ.தியாகராசா அவர்கள் 16.04.1946 இல் அதிபராக கடமையேற்ற காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகரில் சிரேஷட பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி மட்டுமே திகழ்ந்தது. இதனால் ஏனைய பாடசாலையில் தரம் 5ம் வகுப்புடன் இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் காரைநகர் இந்துகல்லூரியில் அனுமதி கோரினர். 1915இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையில் மாணவர்தொகை வெகுவாகக் குறைவடைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. மற்றும் காரைநகரில் உள்ள மேற்கு பிரதேச மாணவர்களும் இந்துக்கல்லூரிக்கு அனுமதிகோரி வந்திருந்தனர். இக் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அணுமதி கோரியமை பெரும் சவாலாக காணப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்பிற்பதற்கு ஆசிரியர்களோ வாங்கு மேசைகளோ இடவசதியோ இல்லை இதனால் உடனடியாக ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டினார். மாணவர்களுக்கு தேவையான வாங்குமேசைகளை பெற்றோர்களிடமும் அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை இந்துக்கல்லூரி சபையின் அனுசரனையுடன் பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்கினார்.

அமெரிக்கன் மிஷன் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக காரைநகரில் மேற்குபகுதியில் உள்ள மாணவர்கள் அணைவரும் இந்துக் கல்லூரிக்கு வந்து கல்வி கற்பதனால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைசேர்ந்த பெற்றோர்களும் கல்விமான்களும் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகராசாவின் வீட்டிலே நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப் பாடசாலைக்கு அதிபராக கடைமையாற்றுவதற்கு திரு க.கனகசபை அவர்களும் ஆசிரியர்களாக கடைமையாற்ற திருவாளர் கு.பொன்னம்பலம்  மு.சீவரத்தினம் ஆகிய மூவரையும் காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு கடைமையாற்ற விடுவிக்கப்பட்டார். திரு தியாகராசா அவர்களை யாழ்ற்ரன் கல்லூரிக்கு அதிபராக கடைமை ஏற்குமாறு காரைநகர் மேற்கை சேர்ந்த பல வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக் கல்லூரி முன்நிலை எய்ய வேண்டும் என்பதற்காக அக் கோரிக்கையை நிராகரித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா K.C அவர்களின் திடிர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபத்தையாயிரம் செலவில் நடராசா ஞாபகார்த்த மண்டபம் அமைத்தார். இம் மண்டபம் அமைக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்.  "கோபுரம் இல்லாத கோயில் தான் பாடசாலை" அதற்கினங்க மண்டபத்திற்கு தேவையான ஓடுகள் இல்லாதவிடத்து "தனது வீட்டு ஓட்டினை எடுத்துவந்து கட்டினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்." இம் மண்டபத்தை கட்டுவிக்க திரு.ஆதியாகராசா அவர்களுடன் இனைந்து மிகவும் உழைத்த ஒருவர்தான் திரு.வீ.தம்பிப்பிள்ளை ஆவார். இவர்களால் கட்டப்பட்ட நடராஜா ஞாபகார்த்த மண்டபமானது யாழ்ப்பாணத்திலேயே மிகவும் பெரிய அகலமான மண்டபம் என கூறுகின்றனர். 19.08.1950இல் கௌரவ நீதிஅமைச்சர் DR.L.A.ராஜபக்ஸ அவர்களால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள காணியை தர்மஆதாரமாக பெற்று பாடசாலைக்கு மைதானம் அமைத்தார்.

உயர்தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வுகூடங்களாக இரசாயனம் பௌதீகம் விலங்கியல் உயிரியல் மற்றும் மனையியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்களை அமைத்ததோடு புவியியல் நூலகம் என்பவற்றுக்கு அறைகளைக்கட்டுவித்தார்.

பாடசாலை வரலாற்றுச்சான்றாக அமையும் காரைநகர் இந்துக்கல்லூரி எனும் சஞ்சிகை 1948இல் வெளியிடப்பட்டது. மற்றும் 1953, 1957, 1959ம் ஆண்டுகளில் "சயம்பு" எனும் கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது. எமது பாடசாலையின் வரலாற்றுச்சுவடுகளாக இச் சஞ்சிகை காணப்படுகின்றன. மற்றும் வைரவிழா பவளவிழா முத்துவிழா என விழாக்களும் இவரது காலங்களில் கொண்டாடப்பட்டவையாகும்.

திரு.தியாகராசா அவர்கள் மலேசியா சென்று பழையமாணவர்களிடம் நிதி சேர்த்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்து கீழ்மாடியில் வகுப்பறையையும் மேல்மாடியில் நூலகத்தையும் அமைத்தார். இம்மண்டப அமைப்பு பணியில் ஆ.தியாகராசாவுடன் திரு.த.அருளையா அவர்களும் ஈடுபட்டார்.

திரு.தியாகராசாவின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் சிறப்புத்தர அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இந்துக் கல்லூரியும் ஒன்றாகும். கல்விதிணைக்களத்தால் உயர்பதவி வழங்கப்பட்ட போதிலும் தான் வளர்த்த நேசித்த பாடசாலையை சிறப்புத்தரத்திற்கு(1AB) உயத்தினார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்த்த பாடசாலைகள் வரிசையில் இந்துக்கல்லூரியை உயர்த்திய பெருமைக்குரியவர்.

திரு.தியாகராசா அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை அரவணைத்து சென்றமை கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. கல்வி போதனையிலும் பண்புடனும் பணிவுடனும் செயற்பட ஒழுக்கம்மிக்க மாணவர்களை உருவாக்குவதிலும் அல்லும்பகலும் அமரர் தியாகராசாவின் உள்ளம் ஈடுபட்டிருந்தது. கல்வி திணைக்களகத்தில் காத்திரமான பணிகளைப்பெறுவதற்கு அதற்கு பொருத்தமான பெற்றோர்களை அனுப்பி கருமம் ஆற்றினார். கல்லூரி உள்ளக நிர்வாகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தலையிட எத்தனித்த சமயத்தில் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிநின்றார்.

சமூகம் எதிர்பார்த்த கல்வியை வழங்கியமையால் நகர்புற பாடசாலையை நோக்கி மாணவர்கள் செல்வது அரிதாக காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் சுமுகமாக காணப்பட்டமையால் பிரத்தியோக வகுப்புக்கள் செல்லவேண்டிய தேவையிருக்கவில்லை. திரு.தியாகராசா அவர்கள் சிறப்புதர பதவியில் உயர்நிலை சம்பளம் ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970இல் மாணாக்கர்களின் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக கடைமையாற்றி பெற்ற அனுபவங்களைக் கொண்டு வட்டுகோட்டைதொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக கடைமையாற்றிய காலத்தில் வட்டுகோட்டைதொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவனம் செய்தார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் செலவழிக்காத வருடத்தின் இறுதி மாத ஆரம்பத்தில் பெற்று வருடம் முடிவடைவதற்கு முன்னர் பல நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்க விடையமாகும். இவற்றை உரிய காலங்களில் நிறைவேற்றியமையால் அதிபர் திரு.K.K.நடராஜா யாழ்மாவட்ட 1AB பாடசாலை அதிபர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.W.D.C.மகதந்தில்ல அவர்களால் பாரட்டப்பட்டார். இதுவே இவர் இந்துக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது பணியை தொடர்ந்து செய்தார் என்பதற்கு சான்றாக அமைகிறது. க.பொ.த(உ.த) வகுப்புக்களில் 150இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். வட்டுகோட்டை மூளாய் சுழிபுரம் மாவடி ஊர்காவற்றுறை போன்ற அயற்கிராம மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து கல்வி கற்றமை என்பது சிறப்பான விடையமாகும். அமரர் திரு.தியாகராசா அவர்கள் கல்வி மேல் கொண்ட பற்று உறுதிக்கு அதிபர் திரு. K.K.நடராஜா செயல் வடிவம் கொடுத்தார்.

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கéர்வமான கருத்துக்களை முன்வைத்தார். கல்வி அமைச்சுடன் தொடர்பினை ஏற்படுத்தி கல்வியாளர் என்ற தகமையில் சிறப்புடன் பேணிவந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

1979ம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாhதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென்ஆசியா சம்மேளனம் உதயமாவதந்கு முன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நூலின் கருத்திற் கொள்ளப்பட்ட வைசார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதிஆ.தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெருகின்றது. திருஆ..தியாகராசா அவர்கள் மிக்க கவனத்தையும் ஆக்க பூர்வமான பரிசீலனைகளையும் விடயங்களின் எல்லா அம்சங்களிலும் செலுத்தினார். கலாநிதிஆ.தியாகராசாவின் புலமைமிக்க அனுகுமுறையும்  அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடுமிக்க இந்நூல் "பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆடம்பரமற்ற தோற்றமும் கம்பீரமான நடையும் தூய்மையான நெஞ்சும் துணிவுகொண்ட எண்ணம் எடுத்ததை முடிக்கும்ஆற்றல் என்பவற்றை அணிகலனாக் கொண்டு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என பணியாற்றிய  திரு.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ்.மாவட்ட சபை தேர்லில் போட்டியிட்டதால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அன்னாரின் பூதவுடல் வலந்தலைச்சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை முடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானார். அப் பகுதியில் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடதக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமையை காரைநகர் பொன்னாலை தாம்போதிய வழியேசெல்லும் மக்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது. இது பூமாதேவி தன் உத்தம புத்திரனை நினைவில் வைத்திருக்கினறமைக்கு சான்றாகும்.

                               "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
                                       சொல்லியவண்ணம் செயல்"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு சவால் விடுத்து சொல்லவல்லவனும் சொன்னதைச் செய்பவனும் யான் என்பதை பறைசாத்தியவர் ஆவார். அமரர் தியாகராசா அவர்களை "வரலாற்று அதிபர்" எனவும் அழைக்கப்பட்டார். இன்றும் அவரது சேவையை நினைவுகூறும் முகமாகவும் பாராட்டும் முகமாகவும் நன்றிகூறும் முகமாகவும் அவரது கல்லூரிக்கு அவரது பெயரை அழைக்கின்றனர். அமரர் திரு.தியாகராசா அவர்கள் இறையடி சேர்ந்தாலும் அவர் எமது ஊருக்காக ஆற்றிய சேவை மறக்கமுடியாதவொன்றாகும்.

 

 

 

                                                                       

 

 

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

   Dr.A.Thiagarajah3

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

காரை மாதாவின் மைந்தர்களில் மாணிக்கமாகத் திகழ்பவரும், புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகத் தான் சேவையாற்றிய பாடசாலையாகிய காரைநகர் இந்துக் கல்லூரியை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியும் தணியாத ஊர்ப்பற்றுடன் தீர்க்க தரிசனச் சிந்தனையுடன் அரசியல் என்னும் ஆயுதம் கொண்டு தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து காரை மண்ணில் அளப்பரிய அபிவிருத்தி செய்தவருமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும். 

தான் சேவை செய்த கல்லூரியின் காலத்தை மட்டுமல்ல தன் ஊரின் காலத்தையும் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது காரைநகர் மக்களின் கடமையாகும்.  

அந்தவகையில், இந்நாளையொட்டி " நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார் " என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.  

செல்வன் விநோதன் கனகலிங்கம் எழுதிய இக்கட்டுரை 2014ம் ஆண்டில்  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால்  காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

 

                             நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

                     கலாநிதி ஆ.தியாகராசா ஆவார்.

 

"இந்து சமுத்திரத்தின் முத்து" எனவும்,"தெட்சணகைலாயம்" எனவும், திருமந்திரத்தை அருளிய திருமூலரால் "சிவபூமி" எனவும் போற்றப்படுகின்ற இலங்கை திருநாட்டின் வடமாகாணத்தின் சிகரமாய் செந்தமிழ் பேணி சிவநெறி காக்கும் பண்பாட்டின் உறைவிடமாய் அமையப்பெற்ற குடாநாடே யாழ்ப்பாணம். அதன் வடமேற்குத் திசையிலே பதின்நான்கு மைல் தொலைவில் எண்திசை புகழும் அருளும் நிறைந்த சௌந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் குடிகொண்ட ஈழத்துச்சிதம்பரம் என்னும் திவ்வியசேத்திரம் இனிதே அமைந்து சுந்தர ஈசனின் திருவருட்கடாட்சம் இனிதே பொழிய நல்லருள் அதனால் நலம் பல பெற்று வளம் பல கொழிக்கும் திருநிறை கொண்ட கவின் பெறும் ஊர் காரைநகர் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நானறிந்தபெரியார்களுள் ஒருவர் கலாநிதி .ஆ.தியாகராசா ஆவார்.

இவர் பிரிட்டிஷ் மலாயாவில் புகையிரதப்பாதை இடப்பட்ட பொழுது அதன் சமிக்ஞைப் பொறியமைப்பை நிர்மாணித்த திரு. ஆறுமுகம் என்பவருக்கும் அமிர்தவல்லிக்கும் கனிஷ்ட புத்திரனாக 1916 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆந் திகதி முக்காலமும் நன்கு உணர்ந்த ஞானியான திருவள்ளுவரின்

                     "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                              தோன்றலின் தோன்றாமை நன்று."   

என்ற ஈரடி வாக்குக்கு இணங்க புகழோடு மலேசியாவில் பிறந்தவரே பெரியார் கலாநிதி ஆ. தியாகராசா ஆவார். 

இப் பெரியார் கம்பீரமான ஆடம்பரமற்ற தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் துணிவு கொண்ட எண்ணத்தையும் தூய்மையான நெஞ்சத்தையும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலையும் எளிமையான வாழ்வையும் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்தார். இவர்,

                                "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
                                       உயிரினும் ஓம்பப்படும்."

என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க ஒழுக்கத்தை தனது உயிரினும் மேலாக நேசித்தார். அத்தோடு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற அதி உன்னத சிந்தனையுடன் மக்களுக்குப் பணியாற்றிய பெருந்தகை ஆவார்.

    இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலே ஆரம்பித்து தனது எட்டு வயதிலே இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் தனது பேரன் பேர்த்தியுடன் இருந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். இவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவரது தந்தையார் இந்தியாவிலுள்ள விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு அனுப்பிய போது இவருக்கு வயதுக் குறைவு காரணமாக இவர் சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வியை பயின்றார்.

    இவர் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற ஒளவைப்பிராட்டியாரால் அருளப்பட்ட கொன்றைவேந்தனில் குறிப்பிடப்பட்டுள்ள "கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" அதாவது அழிவில்லாத நிலையான பொருள் கல்வி என்பதனை நன்கு உணர்ந்து 1932 இல் சீனியர் பரீட்சையிலும், 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும், 1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம். ஏ. பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவர் 1938 இல் எம்.ஏ பட்டம் பெற்ற பின் 1940 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1941 இல் எம். லிற் பட்டத்தைப் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய இவர் காரை வாழ் மாணவர்களின் கல்விப்புலத்தைமேம்படுத்தும் நோக்கோடு பெரியார் சயம்புவால் 1888 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காரைநகரின் கலங்கரை விளக்காய் விளங்கும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார்.

    இப்பெரியார் 1942 இல் "மனைத்தக்க மாண்புடையாள்" அதாவது மனையறத்திற்கு தகுந்த நற்குண நற்செயல்களை உடையவளான திரு. சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டார். இப் பெரியாரின் வெற்றிக்கு பக்கபலமாக இவரது துணைவியார் இருந்தார்.

    பின் 1946 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி முத்து சயம்பு,ஈ.கே.சிவசுப்பிரமணியஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ணஐயர், திரு பொ.வேலுப்பிள்ளை, திரு ந. கந்தையா, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு அ.சரவணமுத்து, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு ஏ.கனகசபை ஆகிய இந்துக்கல்லூரியின் அதிபர்களின் வரிசையிலே திரு ஏ.கனகசபை ஓய்வுபெற 11 வது அதிபராக பெரியார் ஆ.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்றார்.

    இக்காலத்தில் இலவசக்கல்வியின் தந்தையான சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரால் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்கள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5 ஆம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள்; அனைவரும் காரை இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார். மாணவர்கள் அனைவரும் நன்கு கற்க வேண்டும் என்ற அவாவுடன் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். 1915 இல் சாமி பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு 7 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர் எண்ணிக்கை நன்கு குறைய 1945 இல் இப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது இதனால் காரைநகர் மேற்குப் பகுதியில் வசித்த மாணவர்களும் இக் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தமை பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கோ, மேசையோ, இடவசதியோ இருக்கவில்லை. அத்தோடு கற்பிப்பதற்கும் ஆசிரியர் இருக்கவில்லை. மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவித்தார். பெற்றோரின் உதவியுடன் வாங்குமேசைகளையும் இந்துக்கல்லூரி சபையின் அனுசரணையுடனும் கடமை உணர்வு நிறைந்த ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆதரவு வழங்கினார்.

    கோபுரம் இல்லாத கோயிலாக பல வித்தைகளைக் கற்பிக்கின்ற பூணூல் அணியாத பல பூசகர்கள் அதி உன்னத அபிஷேக ஆராதனையை அன்றும் இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கு "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற சிறப்பிற்குரிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர் மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை சிவத்தொண்டிற்காக செலவளித்தார். ஆனால் எங்கள் பெரியார் தியாகராசா அவர்கள் தனது வீட்டிலே வேயப்பட்டிருந்த ஓட்டைக் கழற்றி வந்து இந்தக் கோபுரம் இல்லாத கோவிலின் ஓட்டைகளை எல்லாம் வேய்ந்தார்.

    சாமி பள்ளிக்கூடம் (அமெரிக்கன் மிஷன் பாடசாலை) மூடப்பட்டதன் காரணமாக காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சைவ பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு தியாகராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலையைத் தாமதமின்றி ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

    பின்னர் பெரியார் ஆ.தியாகராசா அவர்களை யாழ்ற்றன் கல்லூரி அதிபராக பதவி ஏற்குமாறு பலர் வற்புறுத்தியும் 

                              "எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
                                    திண்ணியர் ஆகப் பெறின்"

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற அதி உன்னத நோக்கோடு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவரது காலத்திலே உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபாய் செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டு 19ஆம் திகதி ஆவணி மாதம் 1950 ஆண்டில் கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து இப் பெரியார் திருமதி தங்கம்மா நடராஜா என்பவரிடமிருந்து பாடசாலைக்கு பின்புறம் இருந்த காணியை தர்ம ஆதீனமாகப் பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்தார். இரசாயனம், பௌதீகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்கள் அமைத்தார் மற்றும் இவரது காலத்தில் மனையியல் ஆய்வுகூடம், புதிய நூலகம், புவியியல் அறை என்பன உருவாக்கப்பட்டன. பின்னர் 1942 இல் "காரைநகர் இந்துக் கல்லூரி"என்ற பெயரிலே சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953, 1956, 1959 ம்ஆண்டுகளில் "சயம்பு" என்ற கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது மற்றும் கல்லூரியின் வைரவிழா, பவளவிழா, முத்துவிழா என்பன இவரது காலத்திலே கொண்டாடப்பட்டன. இப் பெரியார் மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்தார். பின் இதன் மேற்குப்புறத்தில் "சியவச" நூல் நிலையத்தை அமைக்க அரசினால் வழங்கிய நிதியை விட மேலதிக நிதி தேவைப்பட்ட பொழுது நன்கொடையாளரிடம் பெற்று நூல்நிலையத்தையும் அதனோடு சேர்ந்த வகுப்பறைத் தொகுதியையும் அமைத்தார். இவர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து கல்லூரியின் தரத்தை சிறப்புத் தரத்துக்கு (1AB) உயர்த்தினார்.

    இவர் கல்விப் போதனையில் பண்புடனும் பணிவுடனும் செயற்பட்டு தன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை மதித்து ஒழுக்கம் மிக்க மாணவரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார். இவர் இருபத்தைந்து ஆண்டுகள் காரை இந்துவின் வெள்ளி விழா கண்ட அதிபராக இருந்து திறமை மிக்க உதாரண புருஷராக நிருவாகத்தை நடாத்தி மாணவர் சமுதாயம் சீரிய எதிர்காலத்தை எதிர்கொள்ள கலங்கரை விளக்கானார். இவர் சிறப்புத்தர பதவியில் உயர்நிலை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970 இல் ஓய்வு பெற்று மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார். 

இவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரை மண் புதுப் பொலிவு பெற்று விளங்கியது எனலாம். மின்சாரம், குழாய்நீர்த்திட்டம், நன்னீர்மயமாக்கல், வேணன் அணைக்கட்டு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் விசேடமாக கல்வி ஆளணி நியமனங்களின் போது கிடைக்க வேண்டிய இடங்களை தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவன செய்தார். பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார். இப் பல்கலைக்கழகம் 1974 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணகல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தின் இன்னொரு பிரிவை ஆரம்பித்தது.

    இப்பெரியார் 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் "கலாநிதி தியாகராசாஇந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் பகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென் ஆசியா சம்மேளனம் (SAARC)உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நூலில் கருத்திற் கொள்ளப்பட்டவை சார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதி தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் மிகக் கவனத்தையும் ஆக்கபூர்வமான பரிசீலனைகளையும் விடயத்தின் எல்லா அம்சங்களிலும் செலுத்தியுள்ளார். கலாநிதி தியாகராசாவின் புலமை மிக்க அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந்நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவரது திறமை வெளிப்படுகிறது.

    இவ்வுலகமானது நேற்று உண்டு, உடுத்தி, களித்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் இன்றில்லை என்னும் பெருமையுடையது. இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இதனை,

                       "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
                                  பெருமையுடைத்து இவ்வுலகு"

என்று பொய்யாமொழிப் புலவர் வாக்கு கூறுகிறது. விதியை யார் தான் வெல்ல முடியும். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயம் என்பது உலக நியதியாகும். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்" என்று ஈழத்துச் சித்தரில் ஒருவரான யோகர் சுவாமிகள் கூறுகின்றார். இவ்வாறான உலக வாழ்க்கையிலே காரை மண்ணிற்கு சேவை ஆற்றிக் கொண்டிருந்த போது 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது எம் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசாவின் உயிர் பறிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையால்,

                       "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
                           தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க மறைந்தும் காரை வாழ் மக்களின் மனங்களிலே மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

                                                              

 

 

 

காரைநகர்ச் சிவன் அந்தாதி இருபது

        காரைநகர்ச் சிவன் அந்தாதி இருபது

1
திண்ணபுரத் தேனே என் திரவியமே உனைப் பிரிந்து
திண்ணையிலிப் பேரேறாய்ப் பொருள் முயங்கித் திரிகின்றேன்- என்
மண்ணை விடுத்தேகி மேற்குலகில் மலக்குற்றேன்! – நானோ
கண்ணையிழந்து கதறுகிறேன்! எப்போநின் கழலடிக்குத் திரும்புவதோ?

2
திரும்புவனோ பரிசில் பரிசில் வாழ்வறுத்து அடிக்
கரும்பன்ன காரைநகர்த் தாயின் மடிச் சுவர்க்கம்!
அரும் பொன்னையீந்து கரிவாங்கும் கண்ணிலியேன்!
திரும்பவுமோர் விதிசெய்வாய் திரும்பிடவே திருவூர்க்கே!

3
திருவூர்;த் தொலைத்து தொரந்தோவிற் தியக்குற்றேன்
பெருவூர் மொன்றியலும் வருவூர்க்கு வழியாமோ? கற்பக
தருவூரான் என் சந்ததியும் நோர்வேயில் நிலைத்து – நீள்
துருவவூரிற் திரிபடைந்த வாழ்வாமோ? திசைகாட்டாய் புலம்புகிறேன்!

4
புலம் பெயர்ந்தேன் பெருமானைப் பிரிந்தேன் முன்னாள்
நலம் நிறைந்த நீற்றை நுதலிட்ட நின்னடியார் நெடுங்கழுவேற்றி 
வலம் குறைத்து நந்தேச நலத்தை இன்றளவும் குழியிட்ட 
வலங் குறைந்தார் சந்ததி வாழிடம் புக்கேன் இலண்டனிலே!

5
இலண்டன் நகராமோ இனியானைப் பிரிந்த எனக்கு நரகாமோ!
செருமெனியின் செல்வமெலாம் திருவாமோ அன்றி எருவாமோ!
திருமேனிப் பொடியுடையாய் திருவருளைத் தாராயோ! சிவகாமி
கருமேனித் தாயே! திருவையாற்றின் தமிழே! கரைசேராய்! 

6
கரைதெரியா நானும் கலக்குற்று அருளுக்கும் பொருளுக்கும்
திரைதெரியா மயங்கித்; திக்கிழந்தேன்! திக்கரைவேல்
வரையேற வாழ்வளித்த தாதையே! வயதாகி வளைந்து
நரைமேவுமுன் நாதியிலியெனக்கு வழிகாட்டு வடகாடே! 

7
வடகாட்டில் நடமாடும் கபாலி! கண்டத்தில் திருவோட்டு
வடமாட விதிர்த்தாடும் வேணியனே! தடங்கொண்ட புலித்தோலா!
விடநாகமாட வெருண்டு விரிசடையிற் கங்கையும் மதியுமாட
படநாகம் பழகும் பதியாம் திண்ணபுரச் சோதியனே!

8
சோதியனே ஆதியிலாய்! சூரிக் குழந்தைக்குச் சுடரீந்தாய்!
ஓதியும் உணரேன் சுவிஸில் சூரிக்கில் சுழியிலுற்றேன் 
பாதியும் விரும்புகிலேன் பாசலில் பெயண் நகரில் வாழ்வு
பாதிக் கிணறு கடந்திளைத்தேன் கைதாராயோ பாராயோ?

9
பார்த்தொருகால் பரிந்தென்னைப் போக்காயோ திண்ணபுரத்
தேரடிக்கால் பெருந்தடத்து அடியழிக்க! திருக்கோயிற் குளமதனில்
நீர்வறற்கால் சிறகடித்துப் புறமேகும் நாரைபோல் ஊர்ப்பிரிந்து 
போருறுங்கால் பேய்களிடை என்தாயேயுனை விடுத்து நீங்கினேனே!

10
நீங்கினேன் தங்கோடை கோவளம் கருங்காலி நின்
பாங்கியுறை பாலவோடை பிட்டியெல்லை வலந்தலை நினைந்து
ஏங்கினேன் கார்த்திகையான்; தாதனே! தாங்கா வலிபொறுத்து எனைத் 
தாங்கியீந்த பூம்பாவை கன்னித் தமிழினி சாதல் சரியோ சாற்று!

11
சாற்றெனக்கு சங்கரனே சரியோ என் செய்கை – ஆழ்கடலில்
காற்றிலிடைப்பட்ட கலந்தான் கவிழ்கையிலே கீச்சொலியோடு 
கூற்றம் பயந்து கரையொதுங்கும் எலியானேன் – கூற்றுவர்தாம்
நேற்றெம் பதி காடாக்கப் பார்த்திருந்து கூசிநிதம் சாகின்றேன்!

12
சாகின்றேன் சிங்கை மலேசியா ஆசியென்று அலைந்து பாவியேன் – நீயோ 
பாய்கின்ற வைகை மண்விட்டோடாமல் செம்மனத்தாய் மண்சுமந்தாய்   
காய்சினத்துப் பாண்டியன் பிரம்படித் தழும்புற்றாய் தாயுமானாய்! 
நோகின்றேன் நாணிநிதம்! நடுநிசியில் நந்தியூர்ந்தவுனை நினைந்து!

13
நினையாததொரு பொழுதோ நின்னை நினைக்குங்கால்
நனையாததொரு விழியோ! பெண்ணை சூழும் திண்ணபுரம்
நிலையானவொரு ஒளியே! அன்னை வீழக் கேழ்ச் சினைகட்கு
முலையானவொரு மருந்தே! எனை மண்ணுக்கு அழையாததேன் தலைவா!

14
தலை கிழக்கில்; பொன்னாலை மைத்துனன் முன் வைத்தாய்!
அலை மேற்கில்; அவனுறங்கத் திருவரங்கம் நீ அளித்தாய்!
தொலை தெற்கில் தீயபெருமரக்கர் திறம்குலைத்தாய்! திரைகடந்து  
தலை வடக்கில் மறைக்காட்டில் மறைந்தொளித்தாய்!

15
மறைந்தோனே மறைந்து மக்கள் மனமிருக்கும் மாயவனே! 
நிறைந்தோனே நிறைந்தும் நிறைகாக்கும் நிறைபொருளே!
உறைந்தோனே ஊர்நினைந்த உத்தமர்தம் உள்ளத்தில்!
நறுந்தேனாம் திருவாசகத்தில் உறைந்தவோர் கருவே!

16
கருவேயென் கருத்தெலாம் கனிந்த கருணையுருவே காரைநகர்த்
திருவேயென் திருப்பதியாம் திண்ணபுரத்துறையும் திரவியமே
மருவேயென் மணியே! மக்கள் சேவையொன்றே மதிப்பளிக்கும்   
குருவேயென் குறைகள் குறையாயோ குருந்தைக் கீழமர்ந்த கோனே!

17
கோனேயென்றும் வானும் வங்கமும் வரையும் வளியும் பரந்து
தானேயன்னும் அரக்கர் செருக்கொழித்தாய்! இன்றெங்கொளித்தாய்!
கானேயென்றும் கதித்த கடலருகே கழுதுகள் தாம்கரித்த – பிணக்குவியல்   
ஊனேயுண்ண ஊமத்தையுறும உறுநரியுமூளையிட ஆடினாய் உருக்கொண்டு!

18
கொண்டாயொருகால் ஆகாயம்! கொடுவிடத்தைக் கண்டத்தில்
விண்டாயொருகால்! கண்டமெலாமதிரப் படைநான்கு மொன்றாய்க் 
கண்டாயொருகால் கரிகால் பனையும் கற்தாழையும் சவுக்கும்
உண்டாயொருகால் திரள் ஆலும் திகழ் திண்ணபுரத் திருவே நீ காப்பு! 

19
காப்பாயே காலச்சுழியில் கருந்தமிழின் கவினும் காத்திரமும்! 
சேர்ப்பாயே கரையெம்மைச் சீரழிந்த மேற்குல் ஆட்பட்டோம்  
தீர்ப்பாயே  தீன்தமிழர் குறை! நிறையழிந்து நிற்கின்றோம் – ஐந்
தேர்ப்பாயும் திண்ணபுரத்தாய்! திரிபுரமெரித்தாண்ட தீன்தமிழே! 

20
தீன் தமிழே நாணிலியாய் நானகன்றேன் நற்தமிழூரை!
கூன் பிறை கேசத்துடையாய் குருதேவா! விழலூரில் – ஐயோ
வீண் பொழுதைக் கழிக்கின்றேன் விரைந்தென் ஊர்சேராய்!
தான் நிகரில் தலைவா! திண்ணபுரம் அமுதூட்டும் தாயே!

 

                                         சொற்பொருள்

பாட்டு 1: திண்ணையிலிப் பேரேறாய் – கட்டுத்தறியற்ற எருதாய்: மலக்குற்றேன் – கலங்கித் திகைப்புற்றேன். பாட்டு 2: பரிசில் பரிசில் – பாரிஸ் நகரில் சிறப்பற்ற: அடிக் கரும்பன்ன – கரும்பில் அதிக சுவையுடைய அடிப்பகுதியைப் போன்ற. பாட்டு 3: வருவூர்க்கு – மரணத்தின் பின் வருபிறப்பில்: கற்பக தருவூரான் – எல்லாச் செல்வங்களும் தரும் ஊர் அல்லது பனைவளம் நிறைந்த ஊர். பாட்டு 4: வலம் – பலம்: நுதலில் – நெற்றியில். பாட்டு 5: செருமெனியின் – ஜேர்மனியின்: திருவாமோ – செல்வமாகுமோ. பாட்டு 6: திரைதெரியா – வேறுபாடு தெரியாமல்: திக்கரைவேல் வரைமேவ – முருகன் மலையேற: தாதையே – தந்தையே: நாதியிலி – தலைமையற்ற நான். பாட்டு 7: கபாலி – கபால மாலை அணிந்த சிவன் (காபாலிக சைவத்தின் பெருங்கடவுள்): கண்டத்தில் – கழுத்தில்;: திருவோட்டு வடம்; – மண்டையோட்டு மாலை: வேணியனே – கங்கையைச் சடையிற்கொண்டவனே: தடங்கொண்ட – வரிகளையுடைய: பழகும் – வதியும். பாட்டு 8: சூரிக் குழந்தைக்கு – தவளும் சூரியனுக்கு: சூரிக், பெயண், பாசல் – சுவிஸ் நாட்டில் காரை மக்கள் அதிகம் வாழும் நகரங்கள். பாட்டு 9: தேரடிக்கால் – தேரின் சக்கரங்களின்: நீர்வறற்கால் – நீர் வற்றுங்காலம்;: புறமேகும் – வெளியேறும்: போருறுங்கால் – போர் சூழ்ந்த காலத்தில். பாட்டு 10: தாதனே: தந்தையே: பூம்பாவை – ஞானசம்பந்தர் பாடலால் உயிர்த்தெழுந்த பெண்: சாற்று – சொல். பாட்டு 11: கலந்தான் – கப்பல்: கூற்றம் – இயமன் அல்லது மரணம்: கூற்றுவர் – கொடியவர்: பதி – வாழிடம். பாடல் 12: செம்மனத்தாய் – செம்மனச்செல்வி: காய்சினத்து – கடுங்கோபமுடைய: நடுநிசியில் – நள்ளிரவில்: நந்தியூர்ந்த – எருதேறிய. பாடல் 13: பெண்ணை சூழும் – பனைகள் நிறைந்த: அன்னை வீழக் கேழ்ச் சினைகட்கு முலையானவொரு மருந்தே – தாய்ப் பன்றி வேடனால் கொல்லப்பட்டது கண்டு அதன் குட்டிகளுக்குப் பாலூட்டி உயிரளித்தவனே. பாடல் 14: மைத்துனன் – விஷ்ணு: திரை – கடல்: மறைக்காட்டில் – தமிழ்நாட்டின் வேதாரண்யம். பாடல் 16: குருந்தைக் கீழமர்ந்த – குருந்தமர நிழல் அமர்ந்த. பாடல் 17: வங்கமும் வரையும் வளியும் – கடலும் மலையும் காற்றும்: கானேயென்றும் கதித்த – எப்போதும் காடு நிறைந்த: கழுதுகள்; – பேய்கள்: கரித்த – கருக்கிய: ஊமத்தை – கூகை: பாடல் 18: கண்டத்தில்; – கழுத்தில்: விண்டு – கொண்டு: உண்டாயொருகால் திரள் ஆலும் திகழ் – ஒருதடவை பாற்கடலிற் திரண்ட ஆலகாலத்தை உண்டாய அல்லது பருத்த அடியையுடைய ஆலமரமுடைய: காப்பு – அடைக்கலம். பாட
ல் 19: கருந்தமிழின்: நிறைவான நிலையான தமிழின்: கவினும் காத்திரமும் – அழகும் உறுதியும்: நிறையழிந்து – சிறப்பழிந்து: பாடல் 20: நாணிலியாய்: வெட்கமில்லாதவனாய்: கேசத்துடையாய்: தலைமுடியில் அணிந்தவனே: தாயே – தமிழர் மதத்தில் ஆண்கடவுளரையும் தாயாகக் காண்பது அவர்தம் தாய்த்தெய்வ வழிபாட்டின் நீட்சி.

ஆக்கியோன்: கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
 
மார்கழி 2015: நன்றியுடன் கனடா காரை வசந்தம் மலரிலிருந்து.

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

p.g.94ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஜுலை 4, 2015 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும், ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஆகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் விருப்பத்திற்குரிய மாணவனும் நாற்பது ஆண்டுகள் எம் கல்லூரியில் நல்லாசிரியராகப் பணியாற்றி இன்றும் அபிமானத்துடன் நினைவுகூரும் மாணவர்களைக் கொண்டவருமான அமரர்.ஆர்.கந்தையா மாஸ்டர் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நினைவுப் பேருiரையை பரிசளிப்பு விழாவில் சமூகமளித்திருந்த பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் உட்பட்ட அனைவரும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்திய முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும்
நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே, 
பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, 
கௌரவ விருந்தினர் ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.ராசேந்திரன் அவர்களே, 
சிறப்பு விருந்தினர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே,

இக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்களே! அயல் பாடசாலை அதிபர்களே! பழைய மாணவர் சங்கச் செயலாளர் அவர்களே, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் அவர்களே, கல்லூரிக்கு வளஞ்சேர்க்கும் ஆசிரிய மணிகளே, கல்லூரிக்குப் பலமாக விளங்கும் பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே, கல்லூரியை மறவாது வெளியூரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் பழைய மாணவர்களே, பிறந்த மண்ணில் வாழ்ந்து எமது ஊருக்கும் பாடசாலைக்கும் உரமாக இருக்கும் பெற்றோர்களே! கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் மாணவச் செல்வங்களே, அனைவருக்கும் எனது இனிமையான காலை வணக்கம்.

நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக இப்பாடசாலையில் கல்வி கற்று சயம்பு உபாத்தியாயர் அவர்களினாலேயே இப்பாடசாலையில் 1915 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு நாற்பது ஆண்டு காலமாக மூன்று தலைமுறையினருக்கு நல்லாசியராகப் பணியாற்றி இன்றும் அவர் நாமம் மறவாத மாணவர்களைக் கொண்ட எனது தந்தையார் அமரர்.ஆர்.கந்தையா மாஸ்ரர் அவர்களின் இளைய மகளாக நானும் இக்கல்லூரியிலேயே கல்வி கற்று இக்கல்லூரியிலேயே ஆசிரியப்பணி செய்த காரணத்தினாலோ என்னவோ எனது அன்புக்கும் ஆசிக்குமுரிய எனது மாணவியாகிய இக்கல்லூரியின் அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்கள் இந்த நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு என்னை வேண்டிக் கொண்டார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரையைத் தொடங்குகின்றேன்.

ஈழமணித்திருநாட்டின் கல்விச் சிந்தனை உலகில் இரண்டு நூற்றாண்டுகளாகச் சைவசமயம் அந்நிய சக்திகளின் அசுரப்பிடியில் அகப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஒரு தலைவன் இன்றி இருளில் தவித்துக் கொண்டிருந்தது. இவ்வேளையில் விடிவெள்ளியாக உதித்தவரே நல்லூரின் நாவலர் பெருமான ஆவார். நாவலரின் காலம் 1822–1879 வரை ஆகும். ‘யாழ்ப்பாணச் சமய நிலை’ என்ற நூலில் நாவலரின் கருத்துக்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “கல்வி அறிவொழுக்கங்களினாற் சிறப்புற்ற மேலோர்களையே உங்களுக்குக் குருமாராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” “ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் தாபித்து உங்களுள்ளே கல்வி அறிவொழுங்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவைகளை நடத்துவியுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக் கூடங்களிலேயே அனுப்பி லௌகிக நூல்களையும் நீதி நூல்களையும் சைவசமய நூல்களையும் படிப்பியுங்கள்.”

இவ்வாறான நாவலரின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பெற்றவர் காரைநகர் மடந்தை செய்த தவம் வாய்த்ததென வந்த கர்ம வீரன் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள். இவர் மல்லிகை என்னும் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் குட்டிப்புலம்(குமிழங்குளி) என்னும் குறிச்சியில் வாழ்ந்தவரும் ஆவார். இச்செயல்வீரன் ச.அருணாசலம் அவர்களின் காலம் 1864-1920 வரையாகும். சைவம் நீறுபூத்த நெருப்பாக மூடியிருந்த காலத்தில் எங்கள் காரைநகர் மகான் அருணாசலம் அவர்கள் சைவத்தை மூடியிருந்த அழுக்குச் சாம்பலை அகற்றி விட்டார்கள். இச்செயலை உலகம் அறியவில்லை. “இச்சரித்திர நாயகராகிய ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிந்தனைகளுக்கும் இந்த நூற்றாண்டின் சைவ எழுச்சிக்கும் இடையில் அமைந்ததொரு சேதுபந்தனம” என்று அவரை நேரில் அறிந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். நாவலரையன்றி மற்றெவரையும் மதித்துப் பேசி அறியாத நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத். த.கைலாசபிள்ளை அவர்களோ “நாவலருக்குப்பின் ஒரேயொரு மனிதர் அருணாசலந்தான்” என்று வர்ணிக்கின்றார்.

ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள் சைவப்பெற்றோரின் பிள்ளைகள் தம் மதம் மாறி ஆங்கிலக் கல்வி கற்று அரச உத்தியோகம் என்ற மாய வலைக்குள் சிக்குவது கண்டு நெஞ்சம் பொறுக்காது புறப்பட்டார். தாம் தமக்கென வாழாது தம் சைவத்திற்கும் தமிழுக்குமாய் வாழத் துணிந்தார். தமது எண்ணத்தை ஸ்ரீமத் த.கைலாசபிள்ளை, சு.இராசரத்தினம் போன்ற பெரியாருடன் பகிர்ந்து அவர்களின் யோசனைகளையும் ஏற்று செயலாற்றினார். இப்பெரியார்களைக் காண்பதற்காக அதிகாலையில் காரைநகரில் இருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் செல்வார். செல்லும் வழியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைப் பார்த்து காரைநகர் மாணக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறி இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்று மலாய் நாட்டுக்கு சென்று செல்வம் ஈட்டுவது பற்றிச் சிந்தித்து கவலையுற்றார்.

சைவமாணவர்கள் கற்பதற்காக ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும என்ற எண்ணம் அருணாசல மகானின் மனதில் கருக்கொண்டது. தமது எண்ணத்தை மாப்பாணவூரி கந்தப்பர் இலட்சுமண பிள்ளைக்கும் சிதம்பரப்பிள்ளை கந்தப்புவுக்கும் அயலவர் கோவிந்தபிள்ளைக்கும் கருத்தேற்றம் செய்யத் தொடங்கினார். இவரின் கருத்தினால் உற்சாகமடைந்த திரு.கோவிந்தபிள்ளை அவர்கள் தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை பாடசாலை அமைக்க வழங்கி உதவினார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியைச் சேர்ந்த சயம்பு என்னும் சைவப்பற்றும் ஆங்கிலப் புலமையும் நிறைந்த ஆசானை அழைத்து வந்தார். திரு.கந்தர் லட்சுமணர் அவர்களின் மனைவியின் மூத்த சகோதரியின் மகனே நல்லாசிரியர் சயம்பர் ஆவார்.

இக்கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆங்கிலப் புலமை மிக்க பத்திரிகை ஆசிரியரும், ஆசிரியர் சங்க சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியவருமான திரு.N.சபாரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது “சைவப்பாடசாலைகளை அமைப்பதற்காகத் தனது செல்வம் அனைத்தையும் இழந்தவர் காரைநகர் பெருமகன் ச.அருணாசலம் அவர்கள். நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் இப்பெருமகனும் அவருக்கு உதவியாக இருந்த இரு சைவப்பெரியவர்களும் ஸ்ரீமான் சயம்பு அவர்களை சைவத்தின் பாதுகாவலராகக் கண்டனர். ஸ்ரீமான் சயம்பு அவர்கள் இன்று இந்த உன்னத கல்வி நிறுவனத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்” என்று குறிப்பிடுகின்றார். (Chief among those who heard the clarion call of Navalar was the late S.Arunasalam of Karainagar who is still immortalized as No.2 to Navalar in founding Hindu School for Hindu Children all over the peninsula spending all his wealth and becoming a pauper in the process. It was he with the assistance of the Late.K.Ledchumananpillai and S.Kandappar two benefactors of the area that founded the School in 1888. The beginnings of the school are yet misty, but the founders, the great Trinity met their man in Saymboo, a Saiva Savant who is now regarded as the Father of this great enterprise.)

சைவப் பாரம்பரியமிக்க எமது ஊர் மக்கள் பரவசப்பட, மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க இவ்வித்தியாசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் ஆசிரியராக இருந்து பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தாம் வேறு வித்தியாசாலை வேறு என்று நினைத்ததில்லை. சைவ சமய பண்பாட்டிற்கு அமையாத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் தடைசெய்து சைவசமயக் கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் திறன்மிகு மாணவர்களை உருவாக்கினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை எனத்தொடங்கிய இப்பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்பநதமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்று விளங்கியது.

இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகரதனில்
நயம்பெற உரைத்த நல்லாசான்
சயம்பர் என்று போற்றுகிறார் வித்துவான் F.X.C நடராசா

சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தன்னலங்கருதாது பொதுநல நோக்கோடு ஆங்கிலக் கல்வியைப் போதித்து வந்தார். சயம்புச் சட்டம்பியார் கல்வியை மாத்திரம் மாணக்கருக்கு ஊட்டினவரல்லர். ஒழுக்கத்தையும் கவனித்து வந்தார். சைவாசார முறைப்படி நெற்றியில் திருநீறு பொட்டுடன் மாணாக்கரை வரும்படி கட்டளையிடுவர். வெள்ளிக்கிழமை தோறும் மாணக்கரைக் காலையில் சிவன்கோயிலுக்கு வரவழைத்து கூட்டுவழிபாடு செய்வார்.

ஆங்கிலக் கல்வியைச் சயம்புச் சட்டம்பியார் கவனித்துவர அவருக்கு உறுதுணையாக அம்பலச்சட்டம்பியார் தமிழ்க்கல்வியைப் போதித்து வந்தார். தமிழ் இலக்கியத்தில் திறமைசாலியான அம்பலச் சட்டம்பியார் கணிதத்திலும் வல்லுநர். இந்த ஆங்கில பாடசாலையிற் கற்றுத் தேறிய யாவரும் தமிழிலும் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தனர். வித்தியாலயம் படிப்படியாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஊர்மக்கள் உற்சாகமடைந்து ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் நிர்மாணித்துக் வழங்கினர். அவை யாழ் அரச அதிபராகக் கடமையாற்றிய Sir.W.Twynham அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

‘சயம்புச்சட்டம்பியார் என்பவர் காரைநகருக்கு வந்திலரேல் இப்போது காரைநகரிற் பெருங்குடிமக்களாகத் திகழும் மலாய்நாட்டு பெஞ்சனியர்மார் தோன்றியிருக்கவே மாட்டார்கள்.’ என்று காரைநகர் மான்மியம் என்ற நூலில் வித்துவான் F.X.C நடராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். சயம்பு உபாத்தியாயரிடம் ஆங்கிலக் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அரச உயர்பதவிகளை வகித்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்தனர். காலப்போக்கில் வெளியூர் மாணவர்களும் வந்து கற்கத் தொடங்கினர். மாணவர் தொகை கூடியது. வித்தியாலயத்தின் மனேஜராக திரு.வி.காசிப்பிள்ளை அவர்களும் உள்ளுர் மனேஜராக பெரியார் முத்து சயம்பு அவர்களும் பணியாற்றினர்.

125 ஆண்டுகளைக் கடந்து தளர்வின்றித் தன்னிகரற்ற கல்விப்பணியாற்றி ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது காரை இந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம். இப்பெருமைமிகு கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் இதுவரை காலமும் 25 நல்லதிபர்கள் தமது தடங்களைப் பதித்துள்ளனர்.

இக்கல்லூரியின் வளர்ச்சிப்படிகளை நோக்கும்போது

1. இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சிவத்திரு.ஈ.கே.சிவசுப்பிரமணிய ஐயர்B.A அவர்களின் காலத்தில் பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைவதைக் கண்ட அரசினர் 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக ஆக்கினர்.

2. பாடசாலையின் வெள்ளி விழா 07.09.1912 அன்று மனேஜர் திரு.வி.காசிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3. பெரியார் முத்து சயம்பு அவர்கள் 1918 ஆம் ஆண்டில் பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைத்தார். எனினும் அவரே உள்ளுர் மனேஜராகத் தொடர்ந்து இருந்தார்.

4. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இக்கல்லூரியின் ஆசிரியராக, தலைமையாசிரியராக, மனேஜராக பெரும்பணியாற்றி தம்மை இக்கல்லூரிக்கு அர்ப்பணித்த ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

5. முதன் முதலாக எமது காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திருவாளர் பொ.வேலுப்பிள்ளை (பொன்னுடையார் வேலுப்பிள்ளை) அவர்கள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (இவர் யாழ்ப்பாணம், சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய மருத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் இ.கனகசுந்தரம், கனடா பல்கலைக்கழக இரசாயனவியல்துறைப் பேராசிரியர் தி.சிவகுமாரன் ஆகியோரின் பேரன் ஆவார்)

6. சிவத்திரு அ.சீதாராமஐயர் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் 1934 ஆம் ஆண்டு J.S.C பரீட்சைக்குத் தோற்றிய 15 மாணவர்களுள் 13மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் ஒருவர் வடமாகாணத்திலேயே முதற்பிரிவிலும் சித்தியெய்தினர். இதே காலத்தில் இப்பாடசாலையிலிருந்து திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகிய இருவரும் அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றனர். இதனால் பாடசாலையின் புகழ் மேலோங்கியது.

7. திரு A .கனகசபை B.A அவர்கள் அதிபராகப் பத்து ஆண்டுகள் (1936-1946)பதவி வகித்த காலத்தில் இப்பாடசாலை சிரேஸ்ட வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இக்காலத்தில் S.S.C வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர் தொகையும் ஐந்நூறைத் தாண்டிவிட்டது.

8. அதியுயர் அதிபர்தர பதவியைப் பெற்ற காரைநகரின் முதன்மைப் பேராசானாக அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா வலம் வந்தார். இப்பெருமகன் சேவையாற்றிய காலத்தையே கல்லூரியின் ‘பொற்காலம’; எனப்போற்றலாம் என்று மூதறிஞர் தத்துவக்கலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஐந்து ஆண்டுகள்(1941-1945) ஆசிரியராகவும் இருபத்தைந்து ஆண்டுகள்(1946-1970) அதிபராகவம் சேவையாற்றிய இவர் ‘வெள்ளிவிழா அதிபர்’ எனவும் போற்றப்படுகின்றார். இவரின் காலத்திலேயே இக்கல்லூரியின் வைரவிழா 1950.09.19, 20, 21 ம் திகதிகளிலும் பவளவிழா 1963 ஆம் ஆண்டும் முத்துவிழா 1968 ஆம் ஆண்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. மலேசியா சிங்கப்பூர் வாழ் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூடம், தங்கம்மா நடராஜா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்நிலையம், நடாராஜா ஞாபாகார்த்த மண்டபம் அதனை அண்டிய நிலம் என்பன அதிபர் ஆ.தியாகராசா காலத்தில் பெறப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பது அரிதான அக்காலத்தில் விஞ்ஞான ஆங்கிலப்புலமைமிக்க பட்டதாரி ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். இவ்வாசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் கல்வித்தரம் உயர்ந்து கல்லூரியின் புகழ் எங்கும் பரவியது. H.S.C எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதிபர் ஆ.தியாகராசா பாடசாலையை கல்லூரி என்ற உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பி என திரு.N.சபாரட்ணம் குறிப்பிடுகின்றார். (Principal Thiyagarajah M.A. M.Lit (Later. Ph.d) was the architect of its collegiate status)

9. அதிபர் திரு P.S குமாரசாமி அவர்கள் குறுகிய காலத்தில் (1970-1971) சீரிய முறையிலும் அதிபர் திரு A.நடராஐh அவர்கள் காலத்தில்(1971-1973) சமயவிழாக்களை நடத்தியும் கல்வி, விளiயாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்றும் கல்லூரி விளங்கியது.1971 இல் இவ் வித்தியாலத்தின் கனிஸ்ட பிரிவாக சுப்பிரமணிய வித்தியாசாலை இணைத்துக் கொள்ளப்பட்டது. திரு.K.சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில் (1973-1974)கணிதம், பௌதீகவியல் பாடங்களைக் கற்பித்துக்கொண்டே அதிபர் கடமையையும் செய்து கணித விஞ்ஞானத்துறையை மிளிரச்செய்தார்.

10. அதிபர் திரு.K.K.நடராஜா அவர்கள் சிறந்த கணித ஆசிரியராகவம் சிறந்த நிர்வாகியாகவும் சேவையாற்றிய காலத்தில் (1974-1978) 120 வரையான மாணவர்கள் உயர்தரவகுப்பில் கல்வி கற்றனர். இவ்வகுப்புகளுக்கு சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்குத் தெரிவாகச் செய்து கல்லூரியின் புகழை உயர்த்தினார். இவர்காலத்தில் வடக்குப்பகுதி இரண்டு மாடி நிர்வாக மையக் கட்டிடம், நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம், மைதான சுற்று மதில், நீர் சேகரிப்புத்தாங்கி என்பனவும், மைதான புனரமைப்பு என்பனவற்றையும் செய்து கல்லூரியின் பௌதிக வளம் அதிகளவில் விருத்தி கண்டது. 1976 இல் காரைநகர் முத்தமிழ் மன்றம் பெரியார் முத்து சயம்பு அவர்களுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்து திறப்பு விழா செய்து கௌரவம் வழங்கியது.

11. அதிபர் திரு.வே.தர்மசீலன் அவர்கள் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியாராகவும் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்புடனும் பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார். இவர் காலத்தில்(1978-1980) சிறப்பாகப் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

12. அதிபர் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் குறுகிய காலத்தில் (1981) அதிபர் பதவியை அணிசெய்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர். பன்மொழிப்புலமை மிக்க சிறந்த ஆசிரியர். எழுத்தாளர், நாடறிந்த கவிஞருமாவார்.

13. அதிபர் திரு.S.பத்மநாதன் இரு தடவைகள்(1981-1983,1985-1988) இக்கல்லூரியின் அணிசெய் தலைவராகச் சேவையாற்றினார். இவர்காலத்தில் தமிழக அறிஞர்களை அழைத்து பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நடாராசா மண்டபத்தில் சரஸ்வதி கருவறை கோயில் முகப்புத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

14. கல்லூரியில் 25 ஆண்டுகள் அதிபராகவும் பின்னர் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கலாநிதி. ஆ.தியாகராஜா அவர்கள் மரணத்திரைக்குள் மறைய அவரின் சேவையைக் கௌரவித்து அப்போதயை அரசாங்கம் 1983 இல் இக்கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்தது.

15. அதிபர் சிவஸ்ரீ A.K சர்மா அவர்கள் 1983-1985 வரை அதிபராகப் பணியாற்றினார். புன்னகையும் வசீகர வாக்கும் கொண்ட இவர் அன்பினால் மாணவரைக் கவர்ந்தார்.

16. அதிபர் திரு.மு.திருநீலகண்டசிவம் அவர்களின் காலத்தில் (1988-1991) இக்கல்லூரி கொத்தணித் தலைமைப் பாடசாலையாக்கப்பட்டது. காரைநகரின் 14பாடசாலைகளின் கொத்தணி அதிபாராக திரு.மு.திருநீலகண்டசிவம் விளங்கினார். பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைப்புச் செய்து கல்லூரியின் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

17. அதிபர் திரு.S.R.S.தேவதாசன் அவர்கள் கல்லூரியின் அதிபராகவும் காரைநகர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் சேவையாற்றினார். இவரது காலத்தில்(1991-1993) போர்ச்சூழலில் காரைநகருக்கு வெளியே பாடசாலை இடம்பெயர்ந்து இயங்கவேண்டி நேரிட்டமையால் தளர்வு ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும்.

18. கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை காரைநகர் களபூமியைச் சேர்ந்த திருமதி. தேவநாயகி பாலசிங்கம் பெறுகின்றார். இவர் காலத்தில்(1993-1998) இடம்பெயர்ந்த சூழலில் ஏனைய பாடசாலைகள் போன்று கல்லூரியைத் தளரவிடாது கட்டிக் காத்து 1996 இல் மீண்டும் சொந்த மண்ணில் கல்லூரியை இயங்க வைத்த பெருமை இவரையே சாரும்.

19. அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் காலத்தில் (1998-2005)கல்லூரியின் வடக்கு வளாக பௌதிக வளர்ச்சியை தேவைக்கேற்றவாறு திட்டமிட்டு வளப்படுத்தினார். கல்விச்செயற்பாடுகள் வளர்ச்சிப்பாதையில் பயணித்தது. ஆங்கிலக்கல்விக்கும், கணனிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும,; கல்வியியல் கல்லூரிக்கும் அனுமதி பெற்றனர். கல்லூரி தீவக வலயத்தில் முன்னணிப் பாடசாலையாக விளங்கியது.

20. அதிபர் திரு.கா.குமாரவேலு காலத்தில் (2005-2008) கனிஷ்ட பாடசாலையில் கட்டிடங்களைப் புனரமைத்ததோடு கிணறு அமைக்கப்பட்டு குழாய்நீர் விநியோகம் செய்யப்பட்டது. இவர்காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்நிலையில் இருந்தன.

21. அதிபர் திரு.A.குமரேசமூர்த்தி இக்கல்லுரியின் அதிபராக (2008-2010) சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார்.

22. அதிபர் திரு.பொன் சிவானந்தராசா அதிபராகக் கடமையாற்றிய காலத்தில்(2010-2012) கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கு கனடாவில் கிளை அமைக்கப்பட்டது. இதனால் கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் ஒரு ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது.

23.  2012 இல் ஆயிரம் பாடசாலை செயற்றிட்டத்தில் இக்கல்லூரி சேர்வதற்காக இதன் கனிஷ்ட பிரிவாகிய சுப்பிரமணிய வித்தியாசாலை மீண்டும் தனியாக இயங்கும் ஆரம்ப பாடசாலையாகியது.

24. இரண்டாவது பெண் அதிபராகிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் கல்லூரியின்125 ஆவது ஆண்டு விழா, நாட்டின் மேதகு ஜனாதிபதி வருகை ஆகிய வரலாற்று நிகழ்வுகளை குறுகிய காலத்தில் எதிர்கொண்டு சிறப்பாக நிறைவேற்றினார். பௌதீக வளவிருத்திகளாக மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம், பல்லூடக மண்டப விருத்தி, நிறுவுநர் சயம்பு சிலை புனரமைப்பு, துவிச்சக்கரவண்டி தரிப்பிடம், சிற்றுண்டிச சாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மிகவும் பாதுகாப்பும் அழகும் அமைதியும் ஒழுக்கமும் நிறைந்த சூழலாக மாறியுள்ளது. மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் பரீட்சைகளில் சித்திபெறும் சதவீதமும் அதிகரித்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கு இணையான ஆளுமை விருத்திச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வல்லவர்களாக திகழ்கின்றனர். புலம்பெயர் பழையமாணவர்களின் பார்வை எம் கல்லூரியின் பக்கம் திரும்பியுள்ளது. பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக 1 மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை, கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்காக 1.5 மில்லியன் ரூபா கனடாவில் வதியும் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களால் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். தீவகவலயத்தில் தொடர்ந்து முன்னணி வகித்துவரும எம்கல்லூரி விரைவில் ஒரு தேசியபாடசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

அறுகுபோல் வேரூன்றி ஆல் போல் தளைத்து காரைநகரின் கலங்கரை விளக்கமாக அறிவொளி வீசும் பழமையும் பாரம்பரியமும் மிக்க இக்கல்லூரியில் பணியாற்றிய நல்லதிபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லரென இக்கல்லூரியைத் தேசிய மட்டங்களில் கூட போட்டிபோடக் கூடிய நிலைக்கு மாபெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

மாணவர்களே! உங்கள் வாழ்நாளில் பாடசாலைக் காலம் பொன்னானது. அன்பு, அடக்கம், நேர்மை ஆகிய அணிகலன்களை அணிந்து மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி உயர்ந்த எண்ணங்களை எண்ணி விடாமுயற்சியுடன் உழைத்து உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கனிவாக வேண்டுகின்றேன்.

ஆசிரியர்களே! உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கற்பித்தலில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும் இக்கல்லூரியில் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது. மேலும் இவ்வாறு சாதனை படைத்து கல்லூரிக்கு வளஞ்சேர்க்க உங்களை வாழ்த்துகின்றேன். பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் இக்கல்லூரியை மறவாது உங்கள் ஆதரவை வழங்கி வருவது இக்கல்லூரிக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவினை நான் போற்றுகின்றேன்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே! குறுகிய காலத்தில் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற உங்கள் ஆற்றலையும் ஆளுமையையும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கல்லூரியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர நடராசப்பெருமானை வேண்டி வாழ்த்துகின்றேன்.

To Thine own self be True.
உனக்கு நீயே உண்மையாய் இரு.

சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 
நன்றி 
வணக்கம்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா 
ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் 
ஆங்கிலத்துறை 
காரைநகர்

அறிந்தும் அறியாமலும்

 ஒருநாள் யாழ் பல்கலைக்கழக முதுமாணி விரிவுரை அறையில் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவில் வருகிறது. என்னவென்றால் காரைநகர் மக்கள் வியாபாரத்தில் உச்ச நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் முதல்நிலை வர்த்தகர்களாக உள்ளனர். ஒரு வகை சார்ந்த வியாபாரம் என்று இல்லாமல் பல்வேறுபட்ட வகையான வியாபாரங்களையும் செய்தும் அதில் வெற்றியடைவதும் அவர்களின் இயற்கையாக காணப்படுகின்றது. அவர்கள், வியாபாரம் சார்பான முது வணிகமாணி, முது வியாபார நிர்வாகமாணி பல்கலைதுறைசார் அறிவு கொண்டவர்களே வியக்கும் வண்ணம் தங்கள் வியாபாரத்தினைச் செய்து கொள்கின்றார்களே? என்று அவ்வறையில் கலந்துரையாடும் அளவிற்கு எம்மவர்கள் பெருமைப்படக்கூடியவர்களாக வியாபாரத்தில் காணப்படுகின்றனர்.


             காரைநகர் மக்கள் கல்வியிலும், வியாபாரத்திலும், விவசாயத்திலும், கடவுள் நம்பிக்கையிலும், ஊர்ப்பற்றிலும், தமிழ்ப்பற்றிலும், அரசியலிலும் மற்றும் நிர்வாகத்திலும் தம்பங்கை தகுதியுடன் வழங்கி வரலாற்றில் இடம் பிடிப்பவர்களாக வாழ்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் தொடர்ந்தும் வாழ்பவர்கள் ஆவார்.PHOTO


          "காகம் பறக்காத இடமும் இல்லை காரைதீவான் கடை வைக்கா இடமும் இல்லை". காகம் பறந்ததோ இல்லையோ காரை தீவான் கடை வைத்தான் என்றால் அது மிகையாகாது. இதற்கிணங்க   போக்குவரத்து வசதி வளர்ந்து, வியாபித்துள்ள இக்காலத்தில் மட்டுமன்றி கால்நடையாக மாட்டுவண்டிக்காலம் தொட்டு இன்று வரை நாடு கடந்தும், கண்டம் கடந்தும் தங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் வருகின்றனர்.


             இலங்கை வரைபடத்தில் காணப்படுகின்ற இடங்கள் யாவும் தங்கள் வியாபாரங்களை செய்து வந்தனர் வருகின்றனர். காலி, மாத்தறை, மாவனல்ல, பதுளை, உறுவான்வெல, பண்டாரவளை, மூதூர்,திரிகோணமலை, வவுனியா, அனுராதபுரம், கிளிநொச்சி, பரந்தன், சாவகச்சேரி, சுன்னாகம், சங்கானை, அனுராதபுரம், பொலனறுவை, கலகா, கல்கமுவ, பசறை, புத்தளம், மட்டக்களப்பு, வாழைச்சேனை, கிரான், இங்கினியாகல, கண்டி, முத்தையன் கட்டு, நெடுங்கேணி, நெல்லியடி, பாணந்துறை, நுகேகொடை, இ ங்கிரியா, கம்பளை, பேராதனை, கதிர்காமம், குருநாகல் போன்ற இடங்களை தங்கள் பெயர்களுக்கு முன்னால் கொண்டவர்களாக ஊரவர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார்கள்.


           தற்போது கனடா, லண்டன், சுவிஸ், ஜேர்மனி, இந்தியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, நோர்வே, அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளில் வாழும் எம்மவர்களும் வியாபாரத்தினை அங்கே தொடங்கி அதனை திறம்படச்செய்து வருகின்றார்கள். அதுமட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து கப்பல் ஓடுவது, விமானம் ஓடுவது எனப் பல தளங்களில் தங்களின் வியாபாரத்தினை விஸ்தரித்து நிற்கின்றனர்.


        இவ்வாறான பல தளங்களில் தங்கள் வியாபாரத்தினை செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றபோதும் ஏன் பெரியளவிலான இலங்கை முழுவதும் கிளை பரப்பிய ஒரு நிறுவனமாக அல்லது பல்வேறுவகையான இடங்களில் கிளைபரப்பிய நிறுவனமாக அல்லது பல்வேறு நாடுகளில் கிளை பரப்பிய நிறுவனமாக இல்லாமல் இருப்பது ஏன்? என்பதுதான் முக்கியமாக எழுகின்ற கேள்வியாக உள்ளது.


        வியாபாரம்  செய்யும் திறன் மட்டும் தான் வியாபாரம் செய்பவர்களாகிய முதலாளிமாரிடம் இருந்ததா? என்றால் இல்லை எனலாம். அவர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய கல்விமான்களாக, பட்டதாரிகளாக உருவாக்கியும் உள்ளார்கள். அவர்களை அத்துறைக்குள் கொண்டு வராமல் விட்டுள்ளார்கள். ஏன் தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்து உயர்த்த முயற்சிக்கவில்லை? படித்தவர்கள் கூட பெற்றார் செய்த வியாபாரத்தை தொடரவில்லை. இது ஏன்? 


       பெரியளவிலான வியாபாரத்தை செய்த பெரும் முதலாளிகளின் பிள்ளைகள் வியாபாரத்தை தொடர்ந்த போதும் அவர்கள் ஒற்றுமையாக இல்லாமல் தனித்தனியாகவே தொடர்ந்தார்கள் ஏன்? இதற்கு எல்லாம் காரணம் என்ன?


      மேற்கூறிய கேள்விகளுக்கெல்லாம் பதில்களாக பின்வருவனவற்றை முன்வைத்து இக்கட்டுரையை தொடரலாம் என எண்ணுகின்றேன்.


1.    துறை சார் நிபுணத்துவம் பெற்றுக்கொள்ளாமை 
சில்லறை வர்ததகம், புடவை வர்த்தகம், மருந்தகம், அரச ஒப்பந்தம், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள், கட்டடப்பொருள் விற்பனைகள், தங்க நகை வியாபாரம், விவசாய கிருமி நாசினி விற்பனை, வாகன உதிரிப்பாக விற்பனை, கத்தரித்தோட்டம், மிளகாய்த்தோட்டம் என பல்வகை வியாபாரங்களை தனித்தனியே செய்தாலும் அத்தொழிலையே தொடர்ந்து செய்து
நிபுணததுவத்தை அல்லது அத்தொழில் சார்ந்த நவீன தொழிநுட்பத்தை உள்வாங்கியவர்களாக எந்தவொரு நபரும் காணப்படவில்லை. அது மட்டுமன்றி அத்தொழிலின் தன் அனுபவ நிபுணதுவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தவில்லை. அல்லது பின்னைய தலைமுறை முன்னைய தலைமுறையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை எனலாம்.

2.    செய்கின்ற தொழிலையே செய்கின்றமை
ஒருவர் சில்லறை வர்த்தகம் செய்பவராக இருந்தால் அவரது சகோதரர்கள், ஊழியர்கள், உறவினர்கள் அச்சில்லறை வர்த்தகத்தையே முன்னவர் செய்த அதே முறைமையைக் கைக்கொண்டு தொடர்ந்து செய்து வருகின்றமை.

3.    வாடிக்கையாளர் சேவையில் சிறப்புத்தேர்ச்சியின்மை
எம்மவர்கள் தங்கள் வியாபாரத்தில் கடினமான உழைப்பின் உச்சப்பயன்பாட்டை வழங்கி வியாபாரத்தை செய்கின்றனரே தவிர அவ்வியாபாரத்தின் பல்வேறுபட்ட தகவல்களையும் அனுபவங்களையும் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வாடிக்கையாளர் சேவையை விருத்தி செய்கின்ற திறன் காணப்படாமை. அதாவது ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் வேலைபெற்றுக்கொள்ளுகின்ற கருத்தியல் மட்டுமே கொண்டு அவர்களை வளம்படுத்தி, வருமானத் திருப்திப்படுத்தி அகநிலை சந்தோச நிலையில் வைத்திராது கடமையை பெற்றுக்கொள்ள முயலுதல். இதனால் ஊழியச் சுழற்சி ஏற்பட்டு விசுவாசமும், தொழில் பழகும் ஆர்வமும், ஈடுபாட்டுடன் வியாபாரத்தில் பங்குகொள்ளும் தன்மையும் இல்லாமல் போகின்றது.

4.    தொழிலை விஸ்தரிக்காமை அல்லது ஆபத்தை எதிர்கொள்ளாமை
உதாரணமாக புடவை வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் அவ்வர்த்தகத்தை அதேயளவில் ஆண்டாண்டு காலத்திற்கு தொடர்ந்து நடத்தி வருதலை குறிக்கும். ஏனெனில் அவ்வர்த்தகத்தை விஸ்தரித்தால் கொண்டு நடாத்துவது கடினமென்றும் விசுவாசமான ஊழியர்களைப் பெற்றுக்கொள்வது கடினமென்றும் தங்களுக்குள்ளேயே குறுகிய வட்டமாகச் சிந்தித்து ஆபத்தை எதிர்கொள்ளுகின்ற தன்மையை மிகக்குறைந்த மட்டத்தில் பேணுகின்ற பண்பு எம்மவர்களிடையே உள்ளது.

5.    வியாபாhர நிறுவனங்கள் 80 வீதத்திற்கும் அதிகமானவை தனியுடமையாக காணப்படுகின்றமை
பங்குடமையாகவோ, கம்பனியாகவோ வியாபார நிறுவனங்களை உருவாக்கினாலும் அதன் பங்காளர்களாகவோ, பங்குதாரர்களாகவோ தங்கள் குறுகிய குடும்ப அங்கத்தவர்களை மட்டும் கொண்டதாக இருக்கும். இக்காரணியும் வியாபார நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கு தடையாக உள்ளதொன்றாகும்.

6.    ஒரு நபர் மிகுந்த கஷ;டநிலையிலிருந்து தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்ட வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு தன் படிப்பு, தன் சந்தோஷம், தன் ஆசாபாசங்கள், தன் திருமணம் போன்ற இன்னோரன்ன தியாகங்களை குடும்ப முன்னேற்றத்திற்காக பங்களித்து வெற்றிகரமான வியாபார நிறுவனத்தை நடாத்தி வர இவரின் உதவியுடன் வாழ்க்கையின் புதிய பரிணாம வெளிச்சத்தைக் கண்டவர்கள் அவர் நடத்திய வியாபாரத்தை இழிவாகப் பார்க்கின்ற தன்மை அல்லது அவரையே இழிவாக நடத்துகின்ற தன்மை, இவற்றின் மூலம் அக் குறித்த நபர் தன் தொழிலை இழவாகப் பார்த்து அடுத்த தலைமுறைக்கு அதனை இட்டுச் செல்வதில்லை.

7.    ஒற்றுமையின்மை அல்லது தங்கள் சகோதரங்களுடன் முரண்பட்டு வெளியேறல் அது அவர்களது பிள்ளைகளுக்கும் பரவி தொடர்கின்றமை.
ஒரு குடும்பத்தில் ஜந்து பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவர்களது தகப்பனாரால் தொடரப்படும் வியாபாரத்தினை ஜந்து பிளளைகளும் முரண்பட்டு தனித்தனி வியாபார நிலையங்களாக மாற்ற இத்தன்மை அவ் ஜந்து பிள்ளைகளின் பிள்ளைகள் காலத்திலும் தொடர்ந்து பிரிந்து செல்லுகின்ற தன்மை வியாபார விரிவாக்கும் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகின்றது.

8.    வாழ்க்கைத்துணை ஒத்துழைக்காமை
ஒரு வியாபாரம் செய்கின்ற ஒருவர் வீட்டில் வருகின்ற மருமகன் அல்லது மருமகள் அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் குடும்ப ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையை குலைப்பதில் முன்னின்ற பல சம்பவங்கள் அவர்களது வியாபார எதிர்காலத்தையே பாதித்த தன்மைகள் உண்டு.

9.    வைத்தியத்ததையும், பொறியியலையும் முதன்மையாக எண்ணுதலும் தான் செய்கின்ற வியாபாரத்தினை குறைவாக மதிப்பிடுகின்ற தன்மை
பல வியாபாரிகள் தங்கள் பிள்ளைகளை நல்ல வைத்தியனாக அல்லது பொறியியலாளனாக வரவேண்டுமென்று விருப்பப்படுகின்ற தன்மை காணப்படுகின்ற அதே வேளை தான் செய்கின்ற அதே தொழிலை விஸ்தரித்து மேம்பட முன்வராமை.

10.    தன் அடுத்த தலைமுறைக்கு சிக்கனம் சொல்லி வளர்க்காமை
அடி மட்டத்திலிருந்து அசுர வேகத்தில் வியாபார வெற்றியை அடைந்தவர்கள் அதே வேகத்தில் வெற்றி கொண்டு வேகநடை போட வியாபாரத்தில் தங்கள் பிளளைகளை தயார்ப்படுத்தவில்லை. அது மட்டுமன்றி தாங்கள் பட்ட கஷடத்தை பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாதென்று அளவுக்கதிகமாக அவர்களது விருப்புக்களை நிறைவேற்றுகின்றமையும் கண்டிப்பும் சிக்கனமும் ஊட்டப்படாமல் செல்லமாக வளர்க்கப்படுகின்ற தன்மையும்.

11.    கோவில்களுக்கு அதிகமாக செலவழித்தல்
தாங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற வருமானத்தின் 40, 50 வீதத்தைக்கூட கோவில்களுக்காக செலவளிக்கின்ற தன்மை காணப்படுகின்றமை.  தங்களது பொருளீட்டலில் காணப்படுகின்ற அறச் செயற்பாட்டிற்கு முரணான தன்மையினால் தான் பயம் கொண்டு இவ்வாறான தர்ம காரியங்களில் ஈடுபடுகின்றார்களா? அல்லது அவர்களது தொழிலின் அறமற்ற தன்மையை சொல்லி நிற்கின்றதா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது. இஸ்லாத்தில் இவ்வாறான தன்மை இல்லை.

12.    தலைமைத்துவத்தில் பெருந்தன்மை இன்மையும் தன்னை விஞ்சக்கூடாது என்ற குறுகிய மனப்பாங்கும் ஆழமாக ஊன்றி வளர்ந்தமை. இதனால் நல்ல தலைமைத்துவத்தை வழங்கி வியாபாரத்தை விஸ்தரித்து குடும்ப உறவுகளை வலுப்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியாமை காணப்படுகின்றது. அத்துடன் வருமானத்துக்கு விஞ்சிய பகட்டு வாழ்க்கையை வாழ்ந்து தங்கள் வியாபாரத்தை குறுகிய காலத்துக்குள் நிறைவுறுத்துகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

மேற்கூறிய காரணங்கள் காரைநகர் வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தை பல்தேசியக் கம்பனியாக அல்லது பல கிளைகள் பரப்பிய ஒரு நிறுவனமாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு தடையாக உள்ள பலமான காரணிகளாகும். இது காரைநகர் வர்த்தகர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? அல்லது தமிழ் வர்த்தகர்களுக்கும் பொருந்துமே என்ற வாதம் ஏற்புடையதன்று. ஏனெனில் எம்மவர்கள் தங்கள் கடின உழைப்பின் உச்சத்தில் அத்தளத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தினை வழங்க வல்லவர்களாக காணப்படுகின்ற ஒரு சிறப்புத்தன்மை எம்மவர்களிடம் உள்ளது. ஆனால் அதனை குழுமமாகப் பயன்படுத்தாமல் தனியனாகப் பயன்படுத்துகின்ற பரிதாபம் மட்டுமே மிச்சமானதாகக் காணப்படுகின்றது. காரைநகர் வர்த்தகர்களே! அவர்கள் சார்ந்த தலைமுறை உறவுகளே! நாடு கடந்து கண்டம் கடந்தும் வாழும் எம் உறவுகளே! புதிதாக சிந்திப்போம். தலைமுறைக்கு புது உறவு சொல்வோம். கூட்டாக இயங்கி "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற மூத்தோர் வார்த்ததைக்கு வாழ்வின் வடிவம் கொடுப்போம்.

காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர்

காரைநகர் மகான் சிவத்திரு.சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் பற்றிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலின் இரண்டாம் பதிப்பினை கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிடுகின்றது. 
இவ்வேளையில் அருணாசால உபாத்தியாயர் அவர்களின் பேரனும் ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை முன்னாள் ஆசிரியர் அமரர்.சிவப்பிரகாசம் அவர்களின் மகனும் ஓய்வு பெற்ற ஆசிரியருமாகிய திரு.சி.சிவானந்தரத்தினம் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகின்றது.

     Mr. S. Sivanantheratnam

    காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த
                     அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர்

                                 (திரு. சி. சிவானந்தரத்தினம் )

    இந்து சமுத்திரத்தில் முத்துப் போல் விளங்குவது இலங்கை.  இலங்கைத் திருநாட்டிற்குச் சிகரமாகத் திகழ்வது யாழ்ப்பாணத் தீபகற்பம்.  இத்தீபகற்பகத்துக்குத் திலகம் போல் திகழ்வது காரைநகர்.  சைவமும் செந்தமிழும் சைவ சமயப் பண்பாடும் தழைத்தோங்கும் இந்நகரில் காரைநகர் வடக்கில் மல்லிகை குறிச்சியைச் சேர்ந்த சைவ வேளாளர் மரபில் உதித்த திரு. சிற்றம்பலம் சங்கரப்பிள்ளைக்கும் அவரின் பண்புமிக்க பாரியார் பத்தினியம்மாவுக்கும் எதிர்காலத்தில் காரைநகரில் சைவப் பாடசாலைகள் தோன்றவும் பயிற்றப்பட்ட சைவத் தமிழாசிரியர்களைத் தோற்றுவிப்பதற்கும் 1864ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் தேதி புத்திரராகப் பிறந்தார் திரு. அருணாசலம் அவர்களுக்கு அன்புச் சகோதரியாக வள்ளியம்மை விளங்கினார்.

    திரு. அருணாசலம் அவர்கள் தாய் தந்தையரைப்போல் மாமிசம் சாப்பிடமாட்டார். மதுபானம் அருந்தமாட்டார்.  புகைத்தல் பழக்கத்தையும் அறவே வெறுத்தார்.  வாழ்நாள் முழுவதும் சைவப் பண்பாட்டையே கடைப்பிடித்து வாழ்ந்தார். இளம் பராயத்தில் இருந்தே இறைபக்தி உடையவராகக் காணப்பட்டார்.

    திரு. அருணாசலம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் களபூமி ஆலடியைச் சேர்ந்த அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலையிற் கற்றார்.  இப்பாடசாலையே காரைநகரில் அக்காலத்திற் தோன்றிய முதற் பாடசாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அன்னாரின் தந்தையார் தனது மகனை சிரேஸ்ட கல்வியைத் தொடர ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களால் தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிற் சேர்த்தார். இப்பாடசாலையில் சிரேஸ்ட கல்வியைத் தொடர்ந்து படித்து சிரேஸ்ட கல்வித் தராதரப் பரீட்சையிற் சித்தியடைந்தார்.  இப்பாடசாலையிற் கல்வி கற்கும்போது தினந்தோறும் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்.  இங்கே சமயதீட்சையும் பெற்றார். ஆறுமுகநாவலர் அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்ததைக் கேள்வியுற்றார்.  இதனால் தானும் ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பதிந்தது.

   எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஆன்றோர் அருள்வாக்கு.  இதற்கு அமைய அருணாசலம் அவர்கள் தான் ஓருபயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வேர் ஊன்றியது.  இதனால் அன்னார் தெல்லிப்பழை அமெரிக்கன் மிசன் போதனா பாடசாலையில் (Training college) போய்ச் சேர்ந்தார்.  இப்பாடசாலையில் பயிற்சிக் கல்வியைத் தொடர்ந்தார்.  எனினும் மதம் மாறாது கல்வியைத் தொடர்ந்தார்.  இறுதி ஆண்டில் மதம் மாற மறுத்த படியால் போதனா பாடசாலை நிருவாகத்தினர் பயிற்சித் தராதரப் பத்திரம் வழங்கவும் கற்பிக்க பாடசாலைகளில் ஆசிரிய நியமனம் வழங்கவும் முற்று முழுதாக மறுத்துவிட்டனர்.  இவருடன் பயிற்சி பெற்ற ஏனைய மாணவர்கள் அனைவரும் மதம் மாறி ஞானஸ்தானம் பெற்றனர்.  இப்போதனா பாடசாலையே தற்போது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியாக திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    போதனா பாடசாலையை விட்டு வெளியேறியதும் கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை தாபிக்க வேண்டும் என்றும் எண்ணங்கள் அவர் உள்ளத்தில் நன்றாக வேர் ஊன்றியது.  அன்று அன்னார் மதம் மாறி இருந்தால் ஆசிரிய பயிற்சித் தராதரப் பத்திரமும் ஆசிரியர் பதவியும் பதவி உயர்வும் பணமும் சம்பாதித்து பெரும் செல்வனாக வந்திருக்க முடியும்.  ஆனால் அந்த அற்ப ஆசையை விரும்பாது சைவசமய சீலராக விளங்கினார்.  பொதுப்பணியில் ஈடுபட்டு தனது சொத்துக்களையும் விற்றுச் செலவு செய்தார்.

    போதனா பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் தனது கிராமமான காரைநகரில் திண்ணைப்பள்ளிக் கூடத்தை ஆரம்பித்தார்.  கிட்டங்கிகார பொன்னம்பலம் அவர்களின் கட்டிடத்தின் ஒரு பகுதியில் திண்ணைப்பள்ளிக் கூடத்தை ஆரம்பித்து நடத்தினார்.  நாளுக்கு நாள் பிள்ளைகளின் தொகை கூடிக் கொண்டு வந்தது.  இந்நிலையில் சைவசீலர் திரு. கந்தப்பு சுப்பிரமணியம் அவர்களின் உதவியுடன் அயலில் உள்ள அவரின் காணியில் 1889 ஆம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.  இதுவே காரைநகரில் அன்னார் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சைவத் தமிழ்ப் பாடசாலையாகும். இதற்குச் சுப்பிரமணிய வித்தியாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.  திரு. க. சுப்பிரமணியம் அவர்கள் காணியை 1896 ஆம் ஆண்டு பாடசாலைக்குத் தருமசாதனம் செய்துவிட்டார்.  இப்பாடசாலையை நிருவகிப்பதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.  திரு. க. சுப்பிரமணியம், திரு. ச. அருணாசலம், பிரம்மஸ்ரீ கா. சிவசிதம்பரஐயர்.  திரு. க. சுப்பிரமணியம் அவர்களே பாடசாலை முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

   திரு. அருணாசலம் அவர்களின் தாய் மாமனார் திரு. சண்முகம் கணபதிப்பிள்ளைக்கு நாகமுத்தாள் என்ற மகளும் ஆறுமுகம் என்ற மகனும் இருந்தனர். எனவே நாகமுத்தாள் அன்னாருக்குச் சொந்த மைத்துனி ஆவார். அக்கால வழமைப்படி தாய் மாமன் மகளான நாகமுத்தாளை 1890 ஆம் ஆண்டளவில் திருமணஞ் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்னர் குட்டிப்புலத்தை (குமிழங்குளியை) வதிவிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.  சுப்பிரமணிய வித்தியாசாலையும் குட்டிப்புலத்தையே (சக்கலாவோடை) சேர்ந்ததாகும்.

   திரு. அருணாசலம் நாகமுத்தாள் தம்பதியர்களுக்கு சிவப்பிரகாசம், சிவஞானம், சிவபாதம் ஆகிய மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர்.

   களபூமி ஆலடியில் அமெரிக்கன் மிசன் எப்படி முதல் தமிழ் பாடசாலையை ஆரம்பித்தார்களோ அதே போல் அமெரிக்கன் மிசன் ஒரு ஆங்கிலப் பாடசாலையையும் தங்கோடையில் ஆரம்பித்தது.  இப்பாடசாலையை சாமி பள்ளிக்கூடம் என மக்கள் அழைத்தனர்.

    இதனையும் கண்ணுற்ற அருணாசலம் உபாத்தியார் சைவப்பிள்ளைகள் ஆங்கிலம் கற்க சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றையும் ஆரம்பிக்க எண்ணினார்.

   அன்னார் சமய குரவர்களில் மிகவும் நம்பிக்கையும் பற்றும் உடையவர். எனவே திருஞானசமபந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை என்ற பெயரில் 1888 ஆம் ஆண்டு காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திரு. கோவிந்தர் அவர்களின் காணியில் ஆங்கில பாடசாலையை ஆரம்பித்தார். இதற்கு யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த திரு. முத்து சயம்பு ஆசிரியரை நியமித்து அவர் தலைமையில் மேற்படி ஆங்கில பாடசாலை சிறப்புடன் இயங்கியது. இப்பாடசாலை காலப்போக்கில் அமெரிக்கன் மிசன் ஆங்கில பாடசாலையிலும் பார்க்க மேன்மேலும் வளர்ச்சியுற்றது.  மக்களும் சயம்பு ஆசிரியரில் பற்று வைத்து சயம்பர் பள்ளிக்கூடம் என்றும் அழைக்கலாயினர். அருணாசல உபாத்தியார் அவர்களும் திரு. மு. சயம்பு ஆசிரியரில் மிகவும் நம்பிக்கையும் பற்றுதலும் வலது கரமாகவும் விளங்கினார். இந்த தாபனமே காலப் போக்கில் சைவ ஆங்கில வித்தியாசாலையாக பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியாக பிரகாசிக்கின்றது.  தற்பொழுது இந்தக் கல்வி தாபனத்தை கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகாவித்தியாலாயம் எனப் பெயரை மாற்றி அழைக்கின்றனர்.

    1890 ஆம் ஆண்டு காரைநகர் வியாவிலில் காரைநகர் கருங்காலி முருகமூர்த்தி கோயிலின் அர்ச்சகர் பிரம்மஸ்ரீ க. வேதகுட்டி ஐயர் அவர்களின் காணியில் சைவபரிபாலன வித்தியாசாலை என்ற பெயரில் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். பிரம்மஸ்ரீ க. வேதக்குட்டி ஐயர் அவர்களும் அக்காணியை பாடசாலைக்கே மனம் உவந்து தருமசாதனம் செய்துவிட்டார்.

    குறித்த க. வேதக்குட்டி ஐயர் அவர்கள் அருணாசல உபாத்தியாயர் அவர்களுக்கு வலது கரமாக இருந்து உதவியவர்.  1905 ஆம் ஆண்டு அருணாசல உபாத்தியாயர் இப்பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். இக்காலப் பகுதியியல் அருணாசல உபாத்தியாயர் அவர்களைக் காண வெளியூர் அன்பர்கள் வருவார்கள். அவர்களுக்கெல்லாம் திரு. வேதக்குட்டி ஐயர் அவர்கள் உபசரித்து உணவளித்து வழியனுப்புவார்.

     நீதி வெண்பா என்ற நூலில் 100 செய்யுட்கள் உண்டு.  இதற்கு பதவுரை பொழிப்புரை வெகு அழகாக எழுதி 1905 ஆம் ஆண்டு அருணாசல உபாத்தியாயர் வெளியிட்டார்.  இந்த நூல் கொக்குவில் சோதிட பிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.  இன்னும் சைவப்பாடசாலைகள் பற்றிய பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.

   1910 ஆம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு. மா. வைத்தியநாதன் B.Sc  அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு. சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

    காரைநகர் களபூமியில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது.  இதற்கு சைவசீலர் திரு. வள்ளி சுப்பிரமணியம் என்ற அன்பர் காணியை தருமசாதனம் செய்து கட்டிடத்தை நன்கு அமைத்து பாடசாலையை நல்ல முறையில் நிருவாகஞ் செய்தார். பாடசாலையும் சிறப்புற விளங்கியது.  மக்கள் இப்பாடசாலையை வள்ளி சுப்பர் பள்ளிக்கூடம் என அழைத்தனர்.

    காரைநகர் இந்துக் கல்லூரியின் கிளையாக இலகடி தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.  இப்படியே சைவப் பாடசாலைகள் பல அருணாசல உபாத்தியாயர் இட்ட வித்தினால் ஆரம்பமாகின என்று சொல்லலாம்.

    1925 ஆம் ஆண்டு காரைநகர் குமிழங்குளியைச் சேர்ந்த திரு. க. உமாபதி உபாத்தியாரால் காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்கு அண்மையில் மெய்கண்டான் தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

    1947ஆம் ஆண்டு மாசி மாதம் யாழ்ரன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.  கல்லூரிக்கு உரிய காணியை தங்கோடை யைச் சேர்ந்த மலாயன் பென்சனர் திரு. ஆ. கணபதிப்பிள்ளை அவர்கள் விலையாக வாங்கி பின்னர் அக்காணியை கல்லூரிக்கு தருமசாதனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்கல்லூரியானது வளர்ச்சி அடைய அமெரிக்கன் மிசன் ஆங்கில பாடசாலை 1948 ஆம் ஆண்டில் முற்றாக அழிந்துவிட்டது.

   அமரர் அருணாசலம் அவர்கள் வெளியூர்களில் உள்ள சைவப்பெரியார்களையும் ஊக்குவித்து சைவப்பாடசாலைகளைத் தோற்றுவித்தார். அன்னாரின் சைவ நண்பர்களில் ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். திரு. மு. சிவசிதம்பரம் அவர்களின் பேரனார் சைவசீலர் சிவபூசகர் மணியகாரன் (D.R.O) திரு. சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.  திரு. சிற்றம்பலம் அவர்கள் கரவெட்டியில் நான்கு பாடசாலைகளை ஆரம்பித்து நிருவகித்து வந்தார்.  அத்துடன் கரவெட்டி கிராப்பிள்ளையார் கோயிலின் தர்மகர்த்தாவும் ஆவார். இவ்வாலயத்தில் சைவர்களே பூசகர்களாகவும், மகோற்சவம் முதலிய கிரியைகளும் சைவக் குருமார்களே சிறப்பாக பணிபுரிவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தகவல்களை அருணாசல உபாத்தியாயர் அவர்களின் கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலை மாணவன் கெருடாவிலை வதிவிடமாகக் கொண்ட திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மூலம் அறிந்தேன் என்பதை குறிப்பிடுகிறேன்.

    அருணாசல உபாத்தியார் அவர்கள் ஆலோசனைகளுக்காக அடிக்கடி நல்லூர் கையிலாச பிள்ளையார் கோவிலடியில் வசித்த சைவசீலர் திரு. த. கையிலாயப்பிள்ளை அவர்கள் இடம் செல்வார். திரு. த. கயிலாபிள்ளை அவர்கள் ஆறுமுகநாவலர் அவர்களின் தமையனாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரே வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முகாமையாளர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

    திரு. கைலாயபிள்ளை அவர்கள் அருணாசல உபாத்தியாயர் அவர்களை தனது பாடசாலையில் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிய அனுமதி அளித்தவர். சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை ஒன்றைத் தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் நெடுநாட்களாக அவர் உள்ளத்தில் நன்கு பதிந்து இருந்தது. அடிக்கடி கீரிமலைக்குச் செல்வார்.  சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த திரு. சு. இராசரத்தினம் கீரிமலைக்கு நீராட வருவார். உபாத்தியாயர் கல்விப் பகுதியினருக்கு சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை சம்பந்தமாக கடிதங்களை தமிழில் எழுதிக் கொண்டு போவார்.  அக்கடிதங்களை திரு. இராசரத்தினம் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து உதவி செய்வார். அன்னார் தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றித் திரு. சு. இராசரத்தினம் அவர்களிடம் கூறுவார். இதுவே பிற்காலத்தில் திரு. சு. இராசரத்தினம் அவர்களுக்கு 100 க்கு மேற்பட்ட சைவப்பாடசாலைகளை ஆரம்பித்து நிருவகிக்க முடிந்தது என்பது வெள்ளிடைமலை.  சைவவித்தியா விருத்திச் சங்கம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் ஒரு அலுவலகம் இருந்தது. 

    1913 ஆம் ஆண்டு வைகாசி மாதம் உபாத்தியாயர் அவர்களின் அமைதி அடக்கம் பண்பும் மிக்க பாரியார் நாகமுத்தாள் சிவபதம் அடைந்தார்.  இதனால் அன்னாருக்கு கவலையும் சற்று மனச் சோர்வும் ஏற்பட்டது. இருந்தும் தனது இலட்சியத்தைக் கைவிடவில்லை.

    கீரிமலையில் கிருஷ்ணபிள்ளை மடத்தில் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையை ஆரம்பித்து வைத்து அதனை அங்கீகரிக்கும்படி அரசினரை வேண்டினார். அரசினர் அதனை அங்கீகரிக்க மறுத்து விட்டனர்.

    பின்னர் வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலையில் ஆரம்பித்து அதனை அங்கீகரிக்கும்படி வேண்டினார்.  அதனையும் அரசினர் அங்கீகரிக்க மறுத்து விட்டனர்.

    கிறீஸ்தவர்களுடன் சேர்ந்து ஐக்கிய போதனா பாடசாலை நடத்தினால் அங்கீகரிக்கலாம் என அரசினர் கூறினர்.  கத்தோலிக்கர் சேர மறுத்து விட்டனர். ஏனைய கிறிஸ்தவர்களுடன் இணைந்து கோப்பாயில் ஐக்கிய போதனா பாடசாலை கிட்டத்தட்ட 1916 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதனா பாடசாலை 1923 ஆம் ஆண்டு வரை நீடித்தது. சைவ மாணவர்களின் விடுதி கோப்பாய் திரு. மயில்வாகனம் அவர்களின் நாற்சார் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு அருணாசல உபாத்தியாயர் அவர்களே பொறுப்பாக இருந்து செவ்வனே நடத்தினார். இவ்விடுதிக்கு வேண்டிய அரிசி, காய்கறிகள் அதற்குத் தேவையான ஏனைய பொருட்களையும் மாணவர்களுக்குத் தேவையான உடுப்புக்கள், புத்தகங்கள் யாவற்றையும் காரைநகர் துறைமுகம் சித்திவிநாயகர் ஆலயத்துக்குத் தெற்கு எல்லை பிரதான றோட்டு, இதற்குத் தெற்குப் பக்கத்தில் வசித்த கொடைவள்ளல் சைவசீலர் பிரபல வர்த்தகர் திரு. iவிரமுத்து ஆறுமுகம் அவர்கள் பொறுப்பேற்று உதவி செய்தார்.  சகலவிதத்திலும் திரு. வை. ஆறுமுகம் உபாத்தியாயர் அவர்களுக்கு உற்சாகம் அளித்து உதவி செய்தார். 
 
       ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பின் கிராமங்கள் தோறும் சைவப் பாடசாலைகள் தோன்றுவதற்கும் பயிற்சி பெற்ற சைவத் தமிழ் ஆசிரியர்கள் தோன்றுவதற்கும் அயராது உழைத்த உத்தமர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்கள் 1920ஆம் ஆண்டு தை மாதம் 17 ஆம் தேதி (17-01-1920) இரவு அன்னாரது காரைநகர் குமிழங்குளி இல்லத்தில் உயிர் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். சிவபதம் அடையும் போது அன்னாருக்கு வயது 55 மாதம் 2 நாட்கள் 15

    ஐக்கிய போதனா பாடசாலை தற்போது கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியாகத் திகழ்கின்றது. அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இலட்சியமான சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையை திரு. சு. இராசரத்தினம் (இந்துபோட்) அவர்களின் ஆமை வேகத்தில் 1928 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ஆரம்பித்தார். இதில் முதல் மாணவனாக அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இளைய மகன் சிவபாதம் சேர்க்கப்பட்டார்.  இவரே 1930 ஆம் ஆண்டு முதற் பயிற்சி பெற்ற சைவாசிரியனாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் இருந்து ஆண்டு தோறும் பலர் பயிற்சி பெற்று சைவாசிரியர்களாக வெளியேறினார்கள்.  இவ்வாசிரிய பயிற்சிக் கலாசாலையில் காலஞ்சென்ற பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியராகக் கடமையாற்றினார். இவரே 1950 ஆம் ஆண்டளவில் 'அவர்களுக்குப் பின் அருணாசலம் தான்' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தார். அவர்கள் என்பது ஆறுமுகநாவலரையே குறிப்பிட்டார். இக்கட்டுரையை அப்போது காரைநகர் இநதுக் கல்லூரியின் சயம்பு சஞ்சிகையில் வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலையில் படித்து வெளியேறிய மாணவர்களில் ஒருவர் தொண்டமானாறு கெருடாவில் கந்தசுவாமி கோயில் முன்பாக வசித்த சைவசீலர் சிவபூசகர் திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.  'சைவாசிரியர் களைத் தோற்றுவித்த திரு. சி. அருணாசல உபாத்தியாயர்' என்ற தலைப்பில் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.  அன்னார் எனக்குச் சொல்லிய தகவல்களை வைத்தும் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

   அன்னார் 1920 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தொடர்ந்து சில காலம் வாழ்ந்து இருப்பாராகில் மிசனரிமார் எப்படி சமய போதகர்களைப் பயிற்றுவித்து கிராமங்கள் தோறும் சமயத்தைப் பரப்ப நியமித்தார்களோ அதே மாதிரி உபாத்தியாயர் அவர்களும் சைவப் பிரசாரகர்களையும் பயிற்றுவித்து சைவ சமயத்தைப் பரப்ப முயற்சி செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

   அன்னாரின் இலட்சியங்கள் மூன்று.  முதலாவது சைவப் பாடசாலைகளை ஆரம்பித்தல்.  இரண்டாவது பயிற்சி பெற்ற சைவாசிரியர்களை தோற்றுவித்தல்.  மூன்றாவது சைவப் பிரசாரகர்களைப் பயிற்றுவித்து சமயத்தைப் பரப்புதல்.  இதனையே செயற்படுத்தத் திட்டமிட்டிருந்தார் என அன்னாரின் மாணவரான திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் என்னிடம் தெரிவித்தார் என இக்கட்டுரையிற் குறிப்பிடுகிறேன்.

       காரைநகரின் தவப்புதல்வன் அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இலட்சியங்கள் நிறைவேற நடராசப் பெருமான் அருள் புரிவாராக.

நன்றி: அன்புநெறி, ஒக்ரோபர் 2014 

 

 

செல்வப் பிரபுவே! காரைநகரமே! நீ அந்த மகானை மறந்து விட்டாயா?

செல்வப் பிரபுவே! காரைநகரமே! நீ அந்த மகானை மறந்து விட்டாயா?

 

Pandithamny

சைவ உலகமே, அந்த மகானை நீ நன்றாக மறந்து விட்டாயா! அருணாசலம் அவர்களின் ஞாபகம் எங்கே! சரி நீ நில். காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு! உனது கருத்தென்ன!!

மேற்கண்டவாறு 1967 இல் காரைநகர் சைவ மகா சபையினால் வெளியிடப்பட்ட பொன் விழா மலரில் குரல் எழுப்பியவர் அருணாசால மகான் அவர்களை நேரில் கண்ட பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்.

காரைநகர் மகான் சிவத்திரு.சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள் “ என்ற நூல் காரைநகர் சைவமகா சபையினால் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பினை கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிடவுள்ள நிலையில் மகான் சிவத்திரு.ச.அருணாசாலம் அவர்கள் தொடர்புபட்ட தகவல்கள் கட்டுரைகள் இவ்விணையத்தளம்  ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் கீழ்வரும் கட்டுரை எடுத்து வரப்படுகின்றது.

“அவர்களுக்குப் பிறகு அருணாசலந்தான்”  

–  பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை –

ஒரு சமயம் நாவலர் அவர்களின் தமையனார் புத்திரரும், யாழ்ப்பாணத்து நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மானேஜரும் ஆகிய ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் மேற்கண்டவாறு சொன்னார்கள். ‘அவர்கள்’ என்று அவர்கள் சொல்லுவது நாவலர் அவர்களை. ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பிறகு … பிள்ளை அவர்களும், சுன்னாகம் ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களும் தழிழை அபிவிருத்தி செய்வதற்கும் சைவத்தை ஒரு அளவுக்கேனும் பாதுகாப்பதற்கும் வெகுதூரம் பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் பிரயத்தனம் அவர்கள் எண்ணியவாறு அநுகூலப்படவில்லை. அக்காலம் ஆங்கில மோகம் ஆகாயத்தை அளாவி அண்ட முகட்டுக்கு அப்பாலேயும் போய்க்கொண்டிருந்தது.

1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாசம் ‘இந்துசாதன’த்தில் ஒரு விளம்பரம் வந்தது. பிள்ளை அவர்களும் புலவர் அவர்களும் சேர்ந்து செய்த விளம்பரம் அது நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஒரு காவிய வகுப்பு உண்டியும் உறையுளும் பிறவும் உதவி இலவசமாக நடத்தப்படும் என்றிருந்தது. என்னையுள்ளிட்டுப் பதினெண்மர் அவ் வகுப்பிற் சேருதற்குச் சென்றோம்.

புலவர் அவர்கள் நேர்முகப் பரீட்சை நடத்தினார்கள். பக்கத்தில் மானேஜர் த. கைலாசபிள்ளை அவர்கள் இருக்கிறார்கள். என்முறை வந்தது. நான் போய் அவர்கள் முன்னிலையில் நிமிர்ந்தேன். எனக்குப் பதினெட்டு வயசு முடிந்தது, அடுத்த வயசு நடக்கின்றது. பத்து வயசுக்குமேல் பள்ளிக் கூடப் பயிற்சிவாசனை கிடையாது. இடையிடையே திண்ணைப் பள்ளிக் கூடங்களிற் போய் நித்திரை தூங்குவதுண்டு. காகித ஆட்டங்கள் வேறு சூதுகளிலேதான் எனக்குப் போதிய பயிற்சி. இப்படிப்பட்ட என்னைப் புலவர் அவர்கள் சில கேள்விகள் கேட்டுவிட்டு இறுதியில், ‘கிறிஸ்தவ பள்ளியிற் படித்ததோ’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சிறிதும் கூசாமற் சொன்னேன். புலவர் அவர்கள் மானேஜர் அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள், அவ்வளவுதான்.

என்னை அப் பரீட்சைக்குக் கொண்டு செலுத்தியவர்கள், நாவலர் அவர்களுக்கும் அவர்கள் மருகர் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளைக்கும் மாணவராகிய உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களின் இளைய புத்திரரும், காரைநகர் இந்துக்கல்லூரி முன்னைநாள் ஆசிரியரும், அப்போது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிற் படித்துக் கொண்டிருந்தவருமாகிய திரு. நடராஜா அவர்கள். திரு. நடராஜா அங்கே நடந்தவைகளைக் கவனித்துவிட்டு அவர்களைத் தனிமையிற் கண்டு வெகுபரிதாபகரமான வேண்டுதல் செய்தார். ஆறுமாசம் வைத்துப் பார்த்து முடிவு சொல்லுவதாக எனக்கு உத்தரவு கிடைத்தது.

அடுத்த நாளே அரிவரியிலிருந்து பாடம் ஆரம்பமாயிற்று. ஆறு மாசத்துக்கிடையில், என்னுடன் சேர்ந்தவர்களிற் பலர், ‘இந்த படிப்பு வயிற்றுப் பிழைப்புக்குதவுமா” என்று சொல்லிக் கொண்டு மெல்ல மெல்லக் கழன்று விட்டார்கள். ஒரு வருஷத்தில் விடுதிக்குரியவர்கள் எல்லாருமே போய்விட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் தனித்து எஞ்சியிருந்தேன்.

ஒருநாள் புத்தம் புதிய மனிதர் ஒருவர் என் முன்னிலையிற் தோன்றினார். பொதுவான கரிய நிறம், மெலிந்த வரண்ட தேகம், வறுமையில் அடிபட்டதற்கு அறிகுறிபோன்ற தோற் சுருக்குகள், முதுகோடு ஒட்டிய சுருங்கின வயிறு, சிந்தனை தேங்கிய முகம், நிலத்தை நோக்கிய பார்வை, தலை முண்டிதம், மயிர் முளையாத வழுக்கையல்ல, ஒரு துண்டினால் போர்த்தியிருந்தார். கக்கத்திற் காகிதச்சுருள்கள். நான் திடீரென்று எழுந்து நின்றேன். அந்த மனிதர் சொன்னார்:

“உந்தப் படிப்பு உபயோகப்பட வேண்டுமானால், உபாத்தியாயர்ப் பத்திரம் ஒன்று வேண்டும். நீ என்னுடன் வா. உணவு உடையெல்லாம் உதவி, உன்னை ஒரு உபாத்தியாயர் ஆக்கி வைக்கிறேன்”

“இங்கே எல்லா உதவியும் கிடைக்கிறது. நான் இங்கேதானே படிக்கப்போகிறேன். உபாத்தியாயர்ப் படிப்புக்குரிய வல்லமை எனக்கு இல்லை” என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன். எவ்வளவோ அந்த மனிதர் முயன்றும் வாய்க்கவில்லை.

“உனக்கு நான் சொல்லுவதொன்றும் விளங்கவில்லைப் பிள்ளை. நன்றாக யோசி” என்று சொல்லிவிட்டு அந்த மனிதர் போய்விட்டார்.

அந்தப் புதிய மனிதர் ஆர்?

அந்தக் காலத்தில் வண்ணார்பண்ணையில் விடுதி விடுகிறவர்கள் விடியமுன் நாலுமணிக்கு எழுந்து, வில்லூன்றிக்கோ, பறைச்சேரி வெளிக்கோ வெளியே போவது வழக்கம். அந்த நேரத்தில் மழைபோலப் பனிபொழியுங் காலமாய் இருந்தாலுங் கூட அந்த மனிதர், அந்தத் துண்டினாலேதான், தலையையும் மூடிப்போர்த்துக் கொண்டு, பறைசேரி வெளித் தெருவிலே, கிழக்குமுகமாக, யாழ்ப்பாணம் நேக்கி, வெகு தூரத்திலிருந்து நடந்து வருவதை அடிக்கடி நான் காணுவதுண்டு. மனிதரைத் தூரத்தே நான் கண்டதும் மெல்ல விலகிவிடுவேன்.

அந்த மனிதர் ஆர்?

புலவர் அவர்கள் புத்தகம் படிப்பிப்பார்கள். மனேஜர் அவர்கள் கதைசொல்லி உலகம் படிப்பிப்பார்கள். இது அவர்கள் வழக்கம். ஒரு நாள், “அவர்களுக்குப் பிறகு அருணாசலம் தான்” என்று, ஏதோ சந்தர்ப்பத்தில் மனேஜர் அவர்கள் கதை தொடங்கினார்கள். கதை சிறிது வளரத் தொடங்கவே, “அந்தப் புதிய மனிதர்தான் அருணாசலம்” என்று எனக்குத் தெரிந்துவிட்டது. வெகு உற்சாகமாகக் கதையை உற்றுக் கேட்கத் தொடங்கினேன். கதை முழுவதையும் இங்கே அவிழ்க்க முடியாது. இனிக்கிற பகுதி-இல்லை உயிர் துடிக்கிறபகுதி இதோ வருகிறது.

ஸ்ரீமான் அருணாசலம் அவர்கள் காரைதீவிற் பிறந்தவர்கள். வானசாஸ்திர மகா பண்டிதரான அலன் ஆபிரகாம் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.

அருணாசலத்துக்கு ஆங்கிலம் படிக்க வாய்க்கவில்லை. தெல்லிப்பழையில் அமெரிக்கமிஷன் ஆசிரிய கலாசாலையிற் படித்து மூன்றாந் தராதரப்பத்திர வகுப்பிற் சித்தியெய்தினார். இனி இரண்டாந் தராதரப் பத்திர வகுப்பிற் படிக்கவேண்டும். இரண்டிற்கும் இடையில் ஒரு அக்கினி ஆறு. அஃதாவது ஞானஸ்நானம். அது பெற்றால்தான் அடுத்த வகுப்பிற்கு உயரலாம். இல்லையேல் அவ்வளவில் ஸ்தம்பனம்.

அடுத்த நாள் ஞானஸ்நான தினம். முதல்நாள் இரவு அருணாசலத்துக்கு நித்திரையில்லை. அருணாசலம் இருக்கிறார். நிற்கிறார், கிடக்கிறார், நடக்கிறார், அவருடைய ஆத்மா சுழலுகின்றது. நீண்ட யோசனை. கோழி கூவுகின்றது. கோழியுங்கூவ அருணாசலத்தின் திருவுள்ளத்திலும் ஏதோ கூவினது. யோசனை முற்றுப் புள்ளியடைந்தது. துணிவு பிறந்தது. இன்னும் இருள் விடியவில்லை. அது புறத்திருள். ஆனால், அருணாசலத்தின் அகத்திருள் விடிந்தது. அருணாசலம் தமது பெட்டியைத் தூக்கினார். மதிலில் ஏறினார், தெருவிற் குதித்தார். இல்லை! அவர் வெறுந்தெருவிற் குதிக்கவில்லை! சைவ உலகத்திற் குதித்தார்! அருணாசலம் குதித்தார்!! அக்கினி ஆற்றை ஒரு தாண்டில் தாண்டினார்! மகான் தாண்டினார்!!

முப்பது வருஷ காலம், ஊண் இல்லை, உறக்கம் இல்லை, இயக்கம் இல்லை, பெண்டு இல்லை, பிள்ளை இல்லை, எதையும்- யாரையும்-திரும்பிப் பார்க்க நேரமில்லை. தெருத்தெருவாய்-ஊர் ஊராய்-அருணாசலம் அலைந்தார். காரைதீவிலிருந்து கொழும்புக்கு, சேர் பொன். அருணாசலந் துரையைக் காண, நடந்து போய் நடந்து வந்தார் என்று கூடக்கதை. “சைவப் பள்ளிக் கூடங்கள் ஊர் தோறும் கட்ட வேண்டும். அதற்கு முன், சைவ உபாத்தியாயர்களை உற்பத்தி செய்ய வேண்டும். அப்படியானால் முதலில் சைவர்களுக்கு ஒரு ஆசிரிய கலாசாலை வேண்டும்” இது அருணாசலத்தின் சங்கற்பம்.

“சைவர்களுக்கு ஒரு ஆசிரிய கலாசாலை வேண்டும்”!

முப்பது வருஷ முயற்சிக்குப் பிறகு-அருணாசலம் அவர்கள் ‘ஊழையும் உப்பக்கம்’ கண்டதன் பயனாக, அரசாங்கம், ‘சைவர்களுக்கு ஒரு ஆசிரிய கலாசாலையைத் தனித்து நடத்தப் பரிபக்குவமில்லையே’ என்று வெகு காலம் கண்ணீர் வடித்து, 1915 ஆம் ஆண்டு வரையில் ‘கிறிஸ்தவர்களோடு பங்காளிகளாய்ச் சைவர்களும் நடத்தலாம்’ என்று ஒருவாறு இரங்கியது. கத்தோலிக்கர் சேர மறுத்து விட்டார்கள். ஏனைய கிறிஸ்த மிஷனரிமாரும் சைவர்களிள் பிரதிநிதியான அருணாசலமுஞ் சேர்ந்து நடத்த முன் வந்தார்கள்.

கோப்பாயில் ஐக்கிய ஆசிரிய போதனாசாலையொன்று தோன்றியது. சைவப் பகுதியை அருணாசலம் நடத்த முன் வந்தார். மங்கல்ய தாரண தருணம். வாத்தியங்கள் கோஷிக்கின்றன. மாப்பிள்ளையும் எழுந்துவிட்டார். மங்கல்யம் நல்ல மங்கல்யம். ஒரே ஒரு குறை. மணப்பெண் வரவில்லை. விலக்கு. எப்படி இருக்கிறது திருமண வைபவம்!

அருணாசலம் சைவ விடுதியை நடத்த முன்வந்துவிட்டார். எல்லாம் ஆயத்தம். ஒரே ஒரு குறை. விடுதிக்குப் பிள்ளைகள் இல்லை.

அமெரிக்க மிஷன் நடத்தும் கிராமப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் கிடையாது. ஆறாம் ஏழாம் எட்டாம் வகுப்புக்கள் தாண்டி, அவற்றுக்குமேல் ‘என்றன்ஸ்’ (Entrance) வகுப்பிலும் சித்தி எய்தியவர்களே ஆசிரிய கலாசாலைக்குரியவர்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளே அருணாசலம் அவர்களின் விடுதிக்குத் தேவை. பிள்ளைகளுக்கு என்ன செய்வது!

அப்பொழுது சைவப் பள்ளிக்கூடங்கள் வெகு அருமை. நாவலரின் சைவப்பள்ளிக் கூடங்கள் இரண்டே இரண்டு. ஒன்று கோப்பாயிலுள்ளது. மற்றது வண்ணார்பண்ணையில் உள்ளது. அந்தப் பள்ளிக் கூடங்களில் மேல் வகுப்புக்கள்-‘என்றன்ஸ்’ வரை வகுப்புக்கள்-நடந்துவதற்கு அருணாசலம் முயற்சி செய்தார். அன்றி, குறிப்பிட்ட சில கிறிஸ்தவ பாடசாலைகளில், மேல்வகுப்பிற் படிக்கும் சைவப் பிள்ளைகளை-அஃதாவது ஞானஸ்நானத்துக்கென்று கிறிஸ்தவர்கள் அடைகாக்கும் பிள்ளைகளை-முற்றுக்கையும் இட்டார்.

பிள்ளைகளைத் தேடுவதற்கு மகான் அருணாசலம் நாய்படாப்பாடு பட்டார். என்னிற்கூட ஒரு கண் வைத்தவர் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யாழ்ப்பாணம் முழுவதும் திரிந்தார். வடமாகாணம் எங்கும் அலைந்தார். மட்டக்களப்புக்கு ஓடினார். அங்கும் இங்கும் பெரியவரும், சிறியவர்களுமாகப் பிள்ளைகள் சிலரைச் சேர்த்தார். உண்டி தருவேன், உடை தருவேன், புத்தகம் இனாம், என்றெல்லாம் ஆசைகாட்டிச் சேர்த்தார். சேர்ந்த பிள்ளைகளைப் போஷிப்பதெப்படி?

அருணாசலம் பெற்ற பிள்ளைகள், தமது தகப்பனார் தங்கள் சொத்துக்களை ஊர்தோறும் திரிந்து பெற்ற பிள்ளைகளின் பொருட்டு, விரயஞ் செய்கின்றார் என்று, கோட்டில் அந்த மகான்மீது வழக்குத் தொடுத்தவர்கள் என்று கூடக் கேள்வி. காரைதீவு வாசரும், ஒரு காலத்தில் பிரபல வர்த்தகரும், கப்பல் வைத்திருந்தவரும் மகா பிரபுவும், வள்ளலுமான திரு. வைரமுத்து ஆறுமுகம்பிள்ளை அவர்கள் அருணாசலமவர்கள் சேர்த்துவரும் பிள்ளைகளுக்கு உண்டி-உடை-உறையுள் உபகரித்து இன்முகங்காட்டி, இன்சொற் பேசி வலக்கரம் போல உதவினார்கள்.

அருணாசலம் அவர்களின் ஆசிரியகலாசாலைக் கனவு-அவர்கள் கண்முன்னே நனவானது.

அருணாசலம் அவர்கள் அன்று இட்ட வித்துதான், கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையாயும், பிறகு, ஆண், பெண் ஆசிரிய கலாசாலையாயும் கிளைவிட்டிருக்கிறது. அதே வித்துத்தான் சைவ வித்தியாவிருத்திச் சங்கமாயும், நூற்றுக் கணக்கான சைவப் பாடசாலைகளாயும் சைவாசிரிய கலாசாலையாயும், பரிணமித்து இருக்கிறது. சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் அதிபரான அப்புக்காத்து, திரு. சு. இராசரத்தினம் அவர்கள், அக்காலத்தில் அருணாசலம் அவர்களின் சைவப் பைத்தியங்களை இங்கிலிசுப் படுத்திக் கொடுப்பதுண்டு. சங்கதி அதுதான்.

‘உனக்கு நான் சொல்லுவதொன்றும் விளங்கவில்லை. உனக்கு ஒரு உபாத்தியாயர்ப் பத்திரம் வேண்டும்’ என்று 1918இல் அருணாசலம் அவர்கள் எனக்கு உபதேசித்தார்கள். அந்த உபதேசம் பத்து வருஷத்துக்குப் பிறகு என்னிடம் பலித்தது. 1929இல் உபாத்தியாயர்ப் பத்திரத்துடன் வெளிவந்தேன்.

அன்று தொடக்கம் பலவருடங்களாக-சாதாரண பள்ளிக் கூடத்திலல்ல-ஒரு சைவாசிரிய கலாசாலையில் படிப்பித்து வந்தேன். என்னையும் ஒரு ஆசிரியன் என்று சொல்ல வைத்தது இந்த மகான் அன்று ஒருநாள் செய்த உபதேசம்.

ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் விடியமுன் நாலு மணிக்கு எழுந்து ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்பவர்கள். எழுந்தவுடன் தெருக்கதவைப் போய்த் திறப்பார்கள். திறக்கும்பொழுதெல்லாம் அருணாசலம் அவர்களையே நினைந்து கொண்டு திறப்பதாகச் சொல்லுவார்கள்.

அருணாசலம் அவர்கள் வெகு நேரத்துக்கு முன்னமே, காரைதீவிலிருந்து நடந்து வந்து, தம்முடன் ஏதாவது யோசிப்பதற்கு கதவு திறக்கும் தருணம் பார்த்து, குந்திக்கொண்டு பெரும்பாலும் காத்திருப்பார்களாம். நல்லது!

சைவ உலகமே, அந்த மகானை நீ நன்றாக மறந்து விட்டாயா! அருணாசலம் அவர்களின் ஞாபகம் எங்கே! சரி நீ நில். காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு! உனது கருத்தென்ன!!

(நன்றி: காரைநகர் சைவ மகாசபை பொன்விழா மலர் -1967)

திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி

        திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி
                                     – எஸ்.கே.சதாசிவம் –

image001
    யா/காரைநகர் இந்துக் கல்லூரியில் (கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம்) பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றியதன் பயனாக காரைநகர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டவர். பௌதீகவியல், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்தலில், கற்பித்தல் நுட்பங்களைக் கையாண்டதுடன் தேவைப்படும் உபகரணங்களையும் தன் முயற்சியினால் ஆக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர். 

    தன் கல்லூரிக் காலத்தில் மெய்வல்லுனர் நிகழ்வுகள், மற்றும் உதைபந்தந்தாட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றியமையினால் தொடர்ந்தும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு அக்கறையுடன் உழைத்தவர்.

    காரைநகரில் இருந்து 1983ல் இடமாற்றம் பெற்று சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் விஞ்ஞானபாட சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றினார். கற்பித்தலில் சிறப்பான அணுகுமுறை. பாடம் தொடர்பான தெளிவான அறிவு. நிறைவான சிந்தனை, சிரமம் பாராது கருமம் ஆற்றும் பண்பு ஆகியன கல்வி உலகில் திரு.சோமாஸ்கந்தனுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தன. க.பொ.த.சாதாரண தர விடைத்தாள்கள் திருத்தம் செய்கின்ற குழுவில் பிரதம புள்ளியிடும் பரீட்சகராக கடமையாற்றினார்.

    வட்டுக்கோட்டை வட்டாரப் பாடசாலைகளின் மெய்வல்லுனர் நிகழ்வுகளின் செயலாளராக நீண்ட காலமாகக் கடமையாற்றினார்.

    கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் நடத்திய மத்தியஸ்தர் பரீட்சையில் சித்திபெற்று இரண்டாம் தர மத்தியஸ்தராகவும் (Class – II Referee) மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய ஆரம்பிப்பாளர், நேரங்கணிப்பாளர், மைதான சுவட்டு நிகழ்வுகளின் நடுவர் தேர்வுகளில் சித்திபெற்று விளையாட்டுத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.

    1965ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியமனம் பெற்று காரைநகருக்கு வருகைதந்த சோமாஸ்கந்தன் அன்றைய காலத்தில் காரைநகரில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தங்கும் அல்லின் வீதியில் அமைந்துள்ள விடுதியில் 1970 வரை வசித்தார். 

    திரு.சோமாஸ்கந்தன் கடமையேற்ற வேளை காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், சிறந்த ஓட்ட வீரரும் உதைபந்தாட்ட வீரருமான திரு.ஆ.குமாரசாமி இந்தியாவில் Y.M.C.A. யில் விளையாட்டுத்துறைப் பயிற்சியை நிறைவு செய்து விளையாட்டுத்துறை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இருவரும் சிறந்த நிபுணத்துவம் பெற்றிருந்தமையால் கல்லூரியின் விளையாட்டுத்துறை உன்னத நிலையை நோக்கி நகர்ந்தது.

    கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் அமெச்சூர் மெய்வல்லுனர் சங்க (Amateur Athletic Association) விதிகளுக்கமைவாக நடைபெறுவதை திரு.சோமாஸ்கந்தன் உறுதி செய்தார். (மைதான சுவட்டு நிகழ்வுகளுக்கு மைதானத்தை தயார்செய்தல், போட்டி நடைபெறும் ஒழுங்குமுறை) 

    விளையாட்டுப்போட்டி தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகள், மைதான சுவட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பெற்ற திறனை (புறப்படுகை, நிறைவு செய்தல், அஞ்சல் கோல் பரிமாற்றம், எறிதல், பாய்தல், விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக போட்டியில் பங்குபற்றல்) ஏனைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கண்டு கொள்வதற்கான வகையில் அமையும்.

    விளையாட்டுப் போட்டி அழைப்பிதழின் இறுதிப்பக்கத்தை சாதனையாளர் பட்டியல் அலங்கரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சாதனைகள் ஏற்படுத்தப்படும்பொழுது போட்டி முடிவு கிடைத்தவுடன் சாதனையாளரின் சாதனை விபரம் அறிவிக்கப்படும். பரிசளிப்பு நிகழ்வின் போது விஷேட பரிசில்கள் வழங்கி சாதனையாளர் கௌரவிக்கப்படுவர். 

    விளையாட்டுப் போட்டிப் பணிகள் ஆரம்ப தினத்திருந்து சுவடுகள் அமைத்தல் விளையாட்டுப்போட்டி முடிவடைந்த பின் அனைத்து தளபாடங்களையும் பாடசாலை வளாகத்திற்குள் எடுத்துச் செல்வது வரை சுயமாகச் செயலாற்றும் மாணவர் அணி பணிக்காகக் காத்திருக்கும். 

    விளையாட்டுப்போட்டிகளுக்கு குறிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய தகுதி பெற்றவர்கள் அலுவலர்களாகப் பணியாற்ற அழைக்கப்படுவர். விளையாட்டுத்துறையில ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக விளையாட்டுப் போட்டியில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதன் மூலம் தகுதி வாய்ந்த அலுவலர்குழாம் ஒன்றை திரு.சோமாஸ்கந்தன் உருவாக்கினார்.

    1970களின் நடுப்பகுதிகளில் யாழ் மாவட்ட கல்வித்திணைக்களம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடத்திய மெய்வல்லுனர்ப்போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது. தனி வீரர்களுக்கிடையிலான மெய் வல்லுனர் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை எதுவென தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை மைதானத்தில் காணப்பட்டது. இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற 4x100m, 4x400m  அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் காரைநகர் இந்துக்கல்லூரியின் அஞ்சல் ஓட்டக் குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை அகன்று யாஃகாரைநகர் இந்துக் கல்லூரியின் முதலாம் இடம் உறுதி செய்யப்பட்டது. 

    விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதம கல்வி அதிகாரி திரு.எஸ்.தங்கராசா அவர்கள் உரையாற்றும் பொழுது கிராமியப் பாடசாலை ஒன்று நகரப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்றமை அப்பாடசாலையும், சமூகமும் விளையாட்டுத்துறையில் காட்டுகின்ற அர்ப்பணிப்பும், அக்கறையும், முயற்சியும் பாராட்டப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார். 

    1934ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் (All Ceylon Inter School Alhletic Meet) திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோர் தேசிய ரீதியில் பரிசு பெற்ற கல்லூரியின் முதல் மாணவர்கள்.

    திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பின்வரும் மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசியப் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பெற்றனர். 

இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டிகள் 

திரு.செல்வரத்தினம் இராதகோபாலன் 1973ஆம் ஆண்டு போட்டியில் 100மீற்றர் உயரம் பாய்தல் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கமும் 1974ஆம் போட்டியில் 100மீற்றரில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றரர்.

    திரு.கந்தமூர்த்தி ஆனந்த சற்குணநாதன் 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 200மீற்றர், 400மீற்றர், 400 மீற்றர் தடை தாண்டல், ஈட்டி எறிதல், தட்டெறிதல், முப்பாச்சல் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி 400 மீற்றர் தடை தாண்டல் நிகழ்ச்சியில் பரிசு பெற்றார்.

    திரு.சபாரத்தினம் கோவிந்தராசா 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 100மீற்றர், 200மீற்றர், நீளம் பாய்தல் நிகழ்வுகளில் பங்குபற்றினார்.

    திரு.திருநாவுக்கரசு யோகராஜா 1977 – 1982 வரை நடைபெற்ற போட்டிகளில் 1500மீற்றர். 3000 மீற்றர் நிகழ்வுகளில் பங்குபற்றி பரிசில் பெற்றரர்.

    திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் யாழ் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு இலங்கைப் பாடசாலை உதைபந்தாட்ட அணித்தெரிவிற்கான போட்டிகளில் பங்குபற்றினார்.

    பாடசாலை மாணவர்களின் பயிற்சி நிறைவடையும் வரை பொறுமையுடன் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும் பழைய மாணவர்கள். கழகங்களின் வீரர்களுடன் உதைபந்தாட்டத்தில் பங்குபற்றுவார். இவர்களுக்கு விளையாட்டுக்குத் தேவையான பயிற்சிகள், சட்டவிதிகள் பற்றி போதனை வழங்கப்படும். மாலை முடிவடைகின்றது. வீடு செல்ல வேண்டும் என்கின்ற அவசர நிலை என்றுமே திரு.சோமாஸ்கந்தன் முகத்தில் தெரிவதில்லை. திரு.சோமாஸ்கந்தன் பாடசாலைக்கு வெளியே வாழ்ந்த காரைநகர் இளைய சமூதாயத்தின் நன்மதிப்புக்கும் பாத்திரமானவர்.

    திரு.சோமாஸ்கந்தன் சிறந்த பயிற்றுனராக ஊக்குவிப்பாளராக திகழ்ந்தமையினால் அவர் காலத்தில் மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் காணப்பட்டது. இதன் பயனாக அவர்களின் பணிக்காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இளைய தலைமுறை விளையாட்டுத் துறையில் தகுதி பெற்றது. 

    பாடசாலைக்கு வந்தோம். படித்தோம், விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம், விளையாடினோம் என்ற நிலையை மாற்றி ஒரு அசைவு நிலையை ஏற்படுத்தியவர். 

    திரு.சோமாஸ்கந்தனிடம் விஞ்ஞானம் கற்றோம், விளையாட்டுப் பயின்றோம் என்று சொல்கின்ற மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து செயற்படும் விழிப்பு நிலையை அவதானிக்கலாம்.

 காரை நலன்புரிச்சங்கம் லண்டன் திரு. சோமாஸ்கந்தன் இடமாற்றம் பெற்றுச்சென்று  30 ஆண்டுகள் கடந்த பின்னர் தனது இருபத்தைந்தாவது ஆண்டு "காரை சங்கமம்" விளையாட்டு நிகழ்விற்கு திரு.சோமாஸ்கந்தன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிப்பதன் மூலம் திரு.சோமாஸ்கந்தன் அவர்கள் ஏற்படுத்திய அசைவின் உணர்வு இன்று வரை உணரப்படுகின்றதே என்பதே பொருளாகும்.

சங்க காலத்தில் இசை மரபு

Parama  ST

  கவின் கலைகளில் இசைக்கலை புனிதமானது. மனித நாகரிகம் வளர்ச்சியடைய முன்னரே இசைக்கலை ஒரு தனிமொழியாக விளங்கியது. மொழிமூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத காலத்திலேயே மனிதன் தன் உணர்ச்சிகளை ஓசைமூலம் வெளிப்படுத்தினான்.

இவ் ஓசைகளே இசைதோன்றக் காரணமாய் இருந்தன. மகிழ்ச்சியை ஆரவாரித்தும் பயத்தை இரைந்தும் துன்பத்தை ஓலமிட்டும் மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான். இவ்வாறு இனிமையற்ற ஓசை தவிர்ந்த ஏனையவை நாதம் என அழைக்கப்பட்டன. இந்த நாதமே இசைக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த வகையில் சங்ககால இசைமரபு பற்றி நோக்குவோம்.
 
சங்ககாலத்தில் ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய பண்களும் இருந்தன. அவையாவன குறிஞ்சிப்பண் முல்லைப்பண்- மருதப்பண்- நெய்தற்பண-; பாலைப்பண் என்பவையாம். விபுலானந்தர் தனது நூலில் பன்னிரண்டு ஸ்வரஸ்தான அமைப்பை உடையது ஆயர்பாலை எனவும், நாற்பத்தெட்டு ஸ்வரஸ்தான அமைப்பை உடையது சதுரப்பாலை எனவும், தொண்ணூற்றியாறு கால ஸ்வர நரம்புகளை உடையது திரிகோணப்பாலை எனவும் குறிப்பிடுகின்றார். இவை பின்பு ரி-க-த-நி- தமிழிசையில் தத்தம் கைக்கிளை- விளரி- தாரம் என்னும் ஸ்வரஸ்தானங்களுடன் இணைந்து பதினாறு பண்களாயின. இவை ஒவ்வொன்றும் அகம், புறம், அருகு, பெருகு என்றும் நான்கு பேதமடைந்து அறுபத்துநான்கு பண்களாயின என்றார்.
 
மேலும் குறிஞ்சி நிலத்திற்குரிய தோற்கருவியாக பிறையும் மருதநிலத்திற்குரிய தோற்கருவியாக முழவும் முல்லை நிலத்திற்குரிய தோற்கருவியாக ஏறு கோட்பறையும் புல்லாங்குழல், நெய்தல் நிலத்திற்குரிய கருவியாக விளரியாழும், நாவாயப்பம்பை முதலியவையும் தோற்கருவியாக தடியும் இசைக்கப்படுகின்றது. பட்டினப்பாலை என்னும் சங்கநூல் காவிhப்பூம்பட்டின பண்டகசாலையில் யாழ்கள் இருந்தன என்று கூறுகிறது.
 
பரிபாடல் என்பது பண்ணுடன் கூடிய எழுபது இசைப்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும். பரிபாடல் முழுவதும் இசைப்பாடல் ஆகும். இதனைப் பாடிய புலவர்கள் பதின்மூன்றுபேர் இவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர், இப்பாடலில் குறிப்பிட்டுள்ள பதினொரு பாடல், பண், பாலை, யாழ் என்னும் இவற்றுள் ஐந்து பாடல் பண் நேர்திறம் என்றும் குறிப்பிட்டுன்ளது. யாழ், குழல், முழவு, பாட்டு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய பெரிய தொகுதியாக பரிபாடல் விளங்குகிறது. பரிபாடலில் பண் வழக்கு தற்போது மறைந்துவிட்டது.
 
எட்டுத்தொகையைச் சேர்ந்த புறநானூற்றில் பண்கள் பற்றியும் வேய்ங்குழல், ஆம்பற்குழல், சீறியாழ், பேரியாழ், தண்ணுமை, பெருவாத்தியம், முழவு முதலிய இசைக்கருவிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப்பண்ணும் இசைக்கப்படும் மரபு இருந்திருக்கிறது. தவிர புறநானூற்றில் நடுகல் வழிபாடு இருந்திருக்கிறது. போரிடும் வீரனுடைய சிறப்புக்கள் கொடை, புகழ், வீரம் என்பவைபற்றி பாடற் பொருள் அமைந்திருந்தது. இத்தகைய பாடல்களை ஒத்தவையே ஆற்றுப்படை நூல்கள் ஆகும். ஆற்றுப்படுத்தல் என்பது வழிப்படுத்தல் ஆகும். பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் மன்னர் கலைஞர்களை எவ்வாறு ஆதரித்தனர் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது. வெறியாட்டு எனப்படும் ஆடலுடன் கூடிய பாடல் முருகன் பெயரில் பாடப்பட்ட இசை வடிவமாகக் காணப்படுகின்றது.
 
இசைத் தமிழின் அடிப்படை இலக்கணம் பற்றிய குறிப்புக்கள் இடைச்சங்க நூலாகிய தொல்காப்பியத்திலும் கடைச்சங்க நூலாகிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு கீழ்க் கணக்கு நூல்களிலும் காணப்படுகிறது. மேலும் தொல்காப்பியத்தில் பண்ணத்தி பரிபாடல் முதலிய இசைப்பகுதிகள் காணப்படுகின்றன. கலிப்பாவினுள் தாழிசைப் பகுதி இசைப்பாட்டாக உள்ளது.
 
பத்துப்பாட்டு பாடல்தொகுதி நூல்களில் பாணர்- விறலியர்-கூத்தர்- பொருணன் என்ற நால்வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவர்கள் யாவரும் இசைக்கலையிலும் இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். பொருநர் ஆற்றுப்படையில் கூறப்பட்டுள்ள வில்யாழே யாழில் தோற்றமாக இருந்திருக்கிறது. யாழில் தோற்றத்தின் ஆரம்பநிலை வில்யாழிலிருந்தே தோற்றம் பெற்றது.
 
பேரியாழ் இருபத்தொரு நரம்புகளையும் – மகரயாழ் பத்தொன்பது நரம்புகளையும் – சகோட யாழ் பதின்மூன்று நரம்புகளையும் – செங்கோட்டு யாழ் ஏழு நரம்புகளையம் உடையது. யாழை முதலில் கரிகாம்போதியில் (அதாவது செம்பாலை எனக் கூறுவர்) இசைத்து பின்பு கிரக பேதத்தினால் மத்திமத்தை சட்சமாகக் கொண்டு சங்கராபரணமும் இசைக்கப்பட்டது.
 
இவ்வாறாக சங்ககாலத்தில் பல்வேறு நூல்களிலும் இசைபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த இசையே பிற்காலத்தில் இசைவளர்ச்சி தமிழிசை வளர்ச்சி இரண்டிற்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை. 

சங்க காலத்தில் காணப்பட்ட பண்களும் அவை சுட்டும் நூல்களும்

பண்கள்                                           நூல்கள் 
1.    ஆம்பல்பண்                நற்றிணை, ஐங்குறுநூறு, குறிஞ்சிப்பாட்டு

2.    காஞ்சிப்பண்                மலைபடுகடாம் – புறநானூறு,
                                                சிறுபாணாற்றுப்படை

3.    சாமரப்பண்                    சிறுபாணாற்றுப்படை

4.    குறிஞ்சிப்பண்            மலைபடுகடாம், நற்றிணை, திருமுருகாற்றுப்படை

5.    செவ்வழிப்பண்        அகநானூறு, புறநூனூறு, மதுரைக் காஞ்சி

6.    நைவளப்பண்            குறிஞ்சிப்பாட்டு- பரிபாடல், சிறுபாணாற்றுப்படை

7.    பஞ்சுரப்பண்               ஐங்குறுநூறு

8.    படுமலைப்பண்        நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு

9.    பாலைப்பண்              பரிபாடல், பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுப்படை,                                          பொருணாராற்றுப்படை

10.    மருதப்பண்                     மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்

சங்க இசைக்கருவிகளும் அவை சுட்டும் நூல்களும்

இசைக்கருவிகள்                                 நூல்கள்

1.    யாழ்                     புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, 
                         பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருமுருகாற்றுப்படை, பொருனா ஆற்றுப்படை,       சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம்

2.    கின்னரம்                                    பெரும்பாணாற்றுப்படை

3.    குழல்               பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து

4.    சங்கு                           திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பதிற்றுப்பத்து

5.    தம்பு                                 ஐங்குறுநூறு, பரிபாடல், மலைபடு கடாம்

6.    தண்ணுமை                நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு

7.    முழவு              குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், ஐங்குறுநூறு

8.    முரசு           மதுரைக்காஞ்சி, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து, அகநானூறு

9.    பறை        புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, மலைபடு கடாம், சிறுபாணற்றுப்படை
        
இராகசுரபி. செல்வி. பரமேஸ்வரி கணேசக்கம்பர் 
முதுநிலை விரிவுரையாளர், 
இசைத்துறை, 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நன்றி: சயம்பு மலர் – 2005

 

 

தமிழிசை மூவர் இசைப்பணி – ஓர் ஒப்புநோக்கு

Parameswary

இந்திய சங்கீதத்தில் நமக்குக் கிடைத்துள்ள இராகதாள அமைப்புடன்கூடிய இசைவடிவங்களுள் மிகப் பழமையான இசைவடிவங்கள் தேவார பதிகங்களாகும். தேவார முதலிகள் காலத்தின் பின் 16, 17, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழிசை மூவர் என அழைக்கப்படும் சீர்காழிமூவர் முத்துத்தாண்டவர் மாரிமுத்துப்பிள்ளை – அருணாசலக கவிராயர் ஆகியோராவர். இவர்கள் மூவரும் தமிழிசைக்கு வித்திட்டவர்கள். இவர்களின் கீர்த்தனைகளே பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றி தமிழிசையை வளர்ப்பதற்கு முன்னோடியாக அமைந்தன என்று கூறினால் மிகையாகாது.

கர்நாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் எனப்போற்றப்படும் தியாகராஜசுவாமிகள் சியாமாசாஸ்திரிகள் – முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் தமிழிசை மூவர் காலத்தால் பெரிதும் பிற்பட்டவர்களாவர். தமிழிசை மூவரின் செல்வாக்கு பிற்காலத்தில் தமிழிசைப் புலவர்கள் பலர் தோன்றக் காரணமாய் அமைந்தது.

முத்துத்தாண்டவர் (1560 – 1640) 

17 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் சிறந்து விளங்கிய வாக்கேயகாரர் முற்காலத்தில் கீர்த்தனைகளில் பல்லவியும் சரணங்களுமே இடம்பெற்றிருந்தன. பல்லவி அனுபல்லவி சரணம் என்ற அமைப்பு முறையில் முதன் முதலில் கீர்த்தனைகளை இயற்றியவர் முத்துத்தாண்டவராவார். எனவே தான் கீர்த்தனை மரபின் தந்தை எனப்போற்றப்படுகின்றார். இவர் பாடிய கீர்த்தனைகள் அனைத்தும் சிதம்பர நடேசர் மீது பாடப்பட்டவையாகும். தாண்டவர் கீர்த்தனைகளில் நடனத்திற்கேற்ப சொற்கட்டுக்கள் அமைந்திருக்கும். நீண்ட தாளக்கோர்வைகள் கொண்டமைந்ததாக இவரது சொற்கட்டுகள் அமைந்திருந்தன. உதாரணமாக 'ஆடிய வேடிக்கை பாரீர் என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. இது சாருகேசி இராகத்தில் அமைந்தது. சரணப்பகுதியில் நீண்ட சொற்கட்டு கொண்டதாக அமைந்துள்ளது.

முத்துத்தாண்டவரைப் பின்பற்றியே கோபாலகிருஸ்ணபாரதியார், பாபநாசம் சிவன், சுந்தானந்தபாரதியார், நீலகண்டசிவன் மாரிமுத்துப்பிள்ளை ஆகியோர் சிவதாண்டவத்தை வர்ணித்து சொற்கட்டுகளோடு கூடிய கீர்த்தனைகளை அமைத்தனர்.

இவர் பூலோககைலாயம் என்ற தொடர்மொழியை முதலடியாக கொண்டு கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தார். இவர் இயற்றிய கீர்த்தனைகள் 60 பதங்கள் 25 தெருவாறானோ என்ற கமாஸ் இராக பதம் பிரபல்யம் வாய்ந்தது.இடது பாதம் தூக்கி ஆடும் (கமாஸ்) மாயவித்தை செய்கிறானே. அம்மபவாணன் – (கரகரப்பிரியா) ஆடிக்கொண்டார் (மாயாமாளவகௌளை) இப்பாடலின் சரணத்தில் இரட்டித்த கால சாகிர்த்தியம் அமைக்கப்பட்டுள்ளது. 

'ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாட சிதம்பரத் தேர் ஆட'

இதில் ஆட என்னும் பதம் இறுதியில் வருகின்றது. இம்முறை சம்பந்தர் தேவாரத்திலும் காணப்படுகின்றது. 

'சடையா யெனுமால் சரண்நீ எனும்மால் 
விடையா யெனுமால் வெருவா விழுமால';

இவருடைய கீர்த்தனைகளில் சைவசித்தாந்தக் கருத்துக்களும் பழைமையான வரலாறுகளும் சொற்சுவை, பொருட்சுவை, எதுகை மேனை, தொடை ஆகியவை நயங்கள் கொண்டவையாகவும் விளங்குகின்றன.

அருணாசலக் கவிராயர் (1711 – 1779)

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மயூரத்தை அடுத்துள்ள தில்லையாடி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவர் தருமபுரத்திலுள்ள சைவமட்டத்தில் தங்கி சமயநூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவர். தமிழ்இலக்கண இலக்கியங்களிலும் வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். இவர் கற்ற நூல்களில் கம்பராமாயணரும் திருக்குறளும் குறிப்பிடத்தக்கவை. இதுவே பிற்காலத்தில் இராமநாடக கீர்த்தனைகள் இயற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தவை. இராமநாடகக் கீர்த்தனைகளில் சூழ்நிலைக்கேற்பவும் பாத்திரங்களின் குண நலனுக்கேற்பவும் இசைவடிவங்களைப் படைத்துள்ளார். இவ்வாறாக 197 கீர்த்தனைகளை அமைத்துள்ளார். இவை தவிர கொச்சகம், விருத்தம் தரு கலிப்பா, கலித்துறை திபதைகள் தோடயம் என பல்வேறு பாவினங்களைக் கையாண்டுள்ளார். இவை தவிர சீர்காழி தலபுராணம் சீர்காழிக்கோவை அசோமுகி நாடகம் என்பவைகளையும் இயற்றியுள்ளார்.

அருணாசலக் கவிராயருடைய இராமநாடகக் கீர்த்தனைகள்

இராமருடைய புகழைப் பாடுவதனால் இராமநாடகக் கீர்த்தனை என பெயர் கொடுத்துள்ளார். கவிராயர் இராம நாடகக் கீர்த்தனைகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டு 19 ஆம் நூற்றாண்டில் பெருவழக்கிலிருந்தது. இராம நாடகத்தை கீர்த்தனைகளாக இயற்றியமைக்கான காரணங்கள்.

1. இதுவரையில் இராமநாடகத்தை கீர்த்தனையாக எவரும் செய்யாமை
2. கீர்த்தனை பாமரமக்களும் கேட்டு இன்புறும் வடிவம்
3. இராக தாளங்களை குறிப்பதற்கு இரு இசையாளர் உதவியமை

இந்நூல் தமிழ் நாடக நூல் என்று சொல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. மேடை நாடகத்திற்கும் ஹரிகதை முறையில் மேடை பிரசங்கம் செய்வதற்கும் ஏற்றவகையில் அமைந்துள்ளது. அக்காலத்தில் தெலுங்கிலும் தமிழிலும் புராணக்கதைகள் இதிகாசக்கதைகள் என்பன மராட்டிய ஹரிகதைப் பாணியில் கீர்த்தனைகளாக இடையோடுபாடப்பட்டு கதாகாலட்சேப முறையில் மன்னர்கள் முன்னிலையில் அரசவையில் பாடப்பட்டு வந்துள்ளன. இதனால் இவருடைய இராமநாடக கீர்த்தனைகளுக்கும் பெருவரவேற்பு இருந்து வந்தது.

இராமாயணம் கவிதை நாடகம் சொற்பொழிவு திரைஇசை கதாகாலசேபம் போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிவந்தன. அருணாசலக் கவிராயரும் கம்பர் இயற்றியது போன்றே இராமாயணத்தை ஆறு காண்டங்களாகப் பிரித்துள்ளார். பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிஸ்கிந்தா காண்டம், சுந்தரா காண்டம், யுத்த காண்டம் என்பவையாகும். 12,000 பாடல்களாக இராமாயணத்தை கம்பர்பாட இயற்றமிழ் செய்யுட்களை கொண்ட பல விருத்தப்பாக்களை தொடக்கமாக கொண்டும் தமிழில் 197 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

எடுத்துக்காட்டாக சுந்தரகாண்டம் என்னும் பகுதியை நோக்கின் தோடையம், திபதைகள், தருக்கள் கொச்சக்கம், கலித்துறை ஆகிய பாவினங்களைக் கையாண்டு பாடல்கள் 268 அமைந்துள்ளன. கீர்த்தனைகள் தரு என்ற பெயரில் குறிப்பிடுகிறார். இதில் வசனங்கள் வருவதில்லை. தரு என்னும் கீர்த்தனைப் பகுதி முழுவதும் பாத்திரங்கள் பேசிப்பாடி ஆடுகின்ற பகுதிகளாகும். தருக்கள், வர்ணனைத்தரு, வாக்குத்தரு, புலம்பல்தரு எனபலவகைப்படும். அவற்றும் சிலவற்றை காண்போம். 

தருக்கள் 

1. பாய்ந்தானே அனுமன் நாதநாமக்கிரியை ஆதிதாளம்
2. எட்டு நாளையே பாரும் அம்மா 
  இராவணன் போரும் இவன் ஊரும் – சாரங்கா ஆதிதாளம்

அசோகவனத்தில் இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதாதேவி தனது உள்ளக் குறுமலை திரிசடையோடு முறையிடும் சந்தர்ப்பத்தில் சோகத்தை வெளிப்படுத்த திபதையை பயன்படுத்தியுள்ளார்.

3. ஐயா நானொரு பெண்பிறந்த கதையை 
  யாருடனே சொல்வேன் திரிசடையே – நீலாம்பரி இராகம் ஆதிதாளம். 

இராவணர்காக் கண்ட அனுமன் தனது போபத்தினை வெளிப்படுத்தும் போது அடானா இராகத்தினை கையாண்டுள்ளார்.

இந்த இராவணைக் கண்டு சும்மா போனால்
என்ன அனுமன் நானே – அடானா ஆதிதாளம்

எனவே பாத்திரங்களின் குணநலனுக்கேற்ப பொருத்தமான இசைவடிவாக்கப்படைத்தல் இவரின் இசை நுட்பமாகும். தனது 60 வது வயதில் தமிழ்நாடு முழுவதும் இராமகதையை இனிதாய் தமிழில் பாடியவர். பல இசைவடிவங்களை கொண்ட முதல் தமிழிசை நாடகமாக இராமநாடகம் விளங்குகிறது.

மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1782)

இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மாரிமுத்தாப்பிள்ளை சிதம்பரத்திற்கு வடக்கே அமைந்துள்ள தில்லைவிடங்கன் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே கீர்த்தனைகளை இயற்றும் ஆற்றல் பெற்றவர். நடராஜப் பெருமான் கனவில் தோன்றி இவ்வூருக்கு ஒரு பிரபந்தம் இயற்றும்படி கேட்க இவரும் இறைவன் திருவருனை வியந்து 'புலியூர் வெண்பா' என்னும் நூலைப்பாடி முடித்தார். இவைப் பாடல்களில் இவ்வளவு பொருட்சுவை உடைய பாடல்களைக் காண்பதரிது. இறைவனை நிந்திப்பது போன்று அமைந்த கீர்த்தனைகள் நிந்தாஸ்துதி எனப்படும். இவை இவர் கீர்த்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நடராஜ பொருமான் மீது பாடிய பாடல்கள் ஐம்பது என்று கூறப்படுகின்றது. இவற்றில் நமக்குக் கிடைத்திருப்பவை இருபத்தைந்து ஆகும். முத்துத் தாண்டவர் பாடல்களிலும் நிந்தாஸ்துதி கீர்த்தனைகளைக் காணலாம். தாண்டவரைப் பின்பற்றியே மாரிமுத்தாப்பிள்ளை நிந்தாஸ்துதி கீர்த்தனைகள் இயற்றியதாகக் கூறப்படுகின்றது.

இவர் தமது 12 வது வயதிலேயே உமையவள் மீது உமையவள்மாலை என்னும் பிரபந்தம் இயற்றினார். அதன் பின் புலியூர்வெண்பா எனும் வருணாபுரி ஆதிமூலகர் குறவஞ்சி, ஆதி மூலகர் நொண்டி நாடகம், அநீதி நாடகம புலியூர் சிங்கார வேலர் பதிகம், விடங்கேசர் பதிகம், நடராஜ பெருமான் மீது ஐம்பது பாடல்கள் இரதபந்தம் முதலிய சித்திரக் கவிகள் பல்வித வர்ணங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். சீர்காழி அருணாசலக்கவிராயரும் இவரும் ஒரு காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனைகள் 

1. என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா – வேளாவளி; இராகம் ஆதி தாளம். (நிந்தாஸ்துதி)

2. ஒருக்கால் சிவசிதம்பரம் – ஆரபி இராகம் – ஆதி தாளம்

3. எந்நேரமும் ஒரு காலை – தோடி இராகம் ஆதி தாளம் (நிந்;தாஸ்துதி)

4. காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே – எதுகுலகளம்போதி ஆதி

5. என்ன காரியத்துக்கு இப் பேயாண்டிமேலே – இச்சை கொண்டாய் மகளே – தர்மவதி இராகம்

6. ஏதுக்கித்தனை மோடிதான் – சுருட்டி இராகம் – ரூபக தாளம்

முடிவுரை

இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற இம்மூவரும் சீர்காழிப் பதியிலே தோன்றியமையினால் சீர்காழி மூவர் என அழைக்கப்பட்டனர். இவர்களுள் முத்துத்தாண்டவரும். மாரிமுத்தாப்பிள்ளையும் தில்லைநடராசரைப் போற்றிப் பாடினார்கள். மாரிமுத்தாப்பிள்ளை பூலியூர்வெண்பாவை சிதம்பரத்தலம் சம்பந்தப்பட்ட 100 பாடல்களைப் பாடியள்ளார். மாரிமுத்தாப்பிள்ளையின் சமகாலத்தவராக திருப்புகழ் பாலபாரதி என்ற கவிஞர் மாரிமுத்தாப்பிள்ளையின் புலமைத் திறன்போல் முழுதும் தெளிந்த மனம்போல் எங்கும் காணவில்லை என்று பாடுகின்றார். இவரைப் போலவே அருணாசலக் கவிராயரும் சீர்காழிக்கு அருகே உள்ள மாயுரத்தை அடுத்த தருமபுரம் சென்று அங்கிருந்த சைவ ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர்களிடம் சமயக்கல்வியும் வடமொழியும் கற்றிருந்தார். இம்மூவர்களது பாடல்களினாலும் தமிழ் சேர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கின்றது. தமிழ் இசைச் சங்கத்தினால் இவரது கீர்த்தனைகளை இசை ஆய்வாளர்களும் கலைஞர்களும் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளனர். இவர்களது பாடல்களினால் தமிழ் இசை என்றும் வளம்பெறும் என்பது திண்ணமாகும்.

உசாத்துணை நூல்கள்

1. தமிழிசை தொன்மையும் பெருமையும், தொகுதி – 1 இசைத்துறை தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2006.

2. தென்னக இசையியல் னுச.வு.P.செல்லத்துரை, வைகறைப்பதிப்பகம், திண்டுக்கல் 5ம் பதிப்பு, 2005

3. இசையும் பிறநுண்கலைகளும் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2005

4. தமிழிசைக் கலைக்களஞ்சியம், 4ம் தொகுதி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2000.

இராகசுரபி. பரமேஸ்வரி கணேசக்கம்பர் 
சிரேஷ்ட விரிவுரையாளர், 
இசைத்துறை, 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நன்றி: காரை நிலா – 2014

அமரர் என்.கே.கணேசன் அவர்களின் மூத்த புதல்வியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளரமான செல்வி பரமேஸ்வரி கணேசக்கம்பர் அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக யூன் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள இன்னிசைக் கச்சேரி வழங்குவதற்காக கனடாவிற்கு கலைப்பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் தொடர்பான கட்டுரைகள் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் எமது நேச அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவத ஆண்டு நிறைவினையொட்டி வெளியிடப்பட்ட 'காரை நிலா' சிறப்பு மலரில் இடம்பெற்ற இக் கட்டுரை இரண்டாவாதாக எடுத்து வரப்படுகின்றது.

 

களபூமி தன்னையம்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்

                                  களபூமி தன்னையம்பதி

                      ஸ்ரீ சித்தி  விநாயகர் கோவில்

ஈழமணித் திருநாட்டின் சிரசென மிளிரும் யாழ்நகரின் வடமேல் 23 கிலோ மீற்றர் தொலைவில் கற்றவரும், வணிகர்களும், வாரி வழங்கும் வள்ளல்களும் நீறணிந்த பெருமானை திருநீறணிந்து வழிபடும் வழிபாட்டாளர்களும் வாழ்ந்து வருகின்ற கிராமம் காரைநகராகும்.

     இக் காரைநகர் கிராமத்தில் உள்ள பிரதான குறிச்சிகளில் களபூமியும் ஒன்றாகும். களபூமி எனும் இக்குறிச்சியானது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தன் வரலாற்றை பறை சாற்றி உள்ளதையும் பல களங்களை கண்ட பூமி ஆகையால் களபூமி ஆகவும் பெயர் பெற்றது என்பதையும் காரைநகர் ஏடுகளில் காணலாம்.

களபூமி பல சிறு குறிச்சிகளைக் கொண்ட காரைநகரின் கிழக்குப் பகுதியாகும். இப் பகுதியில் உள்ள ஒரு இடமே "தன்னை" ஆகும். இத் தன்னை எனும் இடத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும்  ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் பற்றியே இக் கட்டுரைத் தொடர் விளைகின்றது.

        தன்னை என்றால் பழமை என்பது கருத்தாகும். தொன்மை என்றாலும் பழமை என்றே கருத்துக் கொள்ளப்படும். இந்த தொன்மை என்ற பதமே மருவி தன்னை என்றாகியது எனவும் சிலர் கூறுவர். தொன்மை என்ற பதத்திற்கு இணங்க காரைநகரில் உள்ள கோவில்களில் காலவரையறை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு பழமை வாய்ந்த ஆலயமே தன்னை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலாகும்.

    இராமேஸ்வரத்தில் கணபதித்திட்டு எனும் குக்கிராமத்திலிருந்து இலங்கைக்கு வந்த அந்தண குடும்பத்தினராலேயே இவ்வாலயம் தொடங்கப்பட்டது. இக் குடும்பம் இரண்டு சிறு வள்ளங்கள் மூலம் இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டனர். ஒரு வள்ளத்தில் அந்தணர் குடும்பமும் மற்றைய வள்ளத்தில் மிகப் பெரியதும் பாரம் கொண்டதுமான விநாயகர் சிலையும் பயணத்தை தொடங்கின. வரும் வழியில் இரு வள்ளங்களும் விபத்துக்குள்ளாகின. இரண்டு வள்ளங்களும் திசை மாறிச் செல்லத் தொடங்கின. அந்தண குடும்பம் வந்து கொண்டிருந்த வள்ளம் திக்குத் தெரியாமல் தடுமாறி இன்று "திருவடி நிலை" என்று அழைக்கப்படும் இடத்தில் கரையை அடைந்தது. இக்கரையிற்றான் ஸ்ரீராமருடைய திருப்பாதம் பட்டதனால் திருவடி நிலை என்ற பெயர் ஏற்பட்டது என்பர். இங்கு தான் பொன்னாலை ஸ்ரீ வரதராசப் பெருமாள் தீர்த்த உற்சவத்திற்கு எழுந்தருளுவார். அவ்விடங்களைத் தரிசிக்கும் புண்ணியம் இந்த அந்தணர் குடும்பத்திற்கு இருந்தமையால் தான் என்னவோ இக் கரையில் அவ்வள்ளம் கரை சேர்ந்தது. கரையில் இறங்கிய அந்தண குடும்பம் பற்றைக் காடுகளின் ஊடாக சங்கானை, மானிப்பாய் ஆகிய இடங்களைத் தாண்டி உடுவிலை அடைந்தனர். அங்குள்ள மீனாட்சி அம்பாள் கோவிலில் தங்கினர்.

       இவ்வாறு கரை சேர்ந்த அந்தணர் குடும்பம் தாங்கள் கொண்டு வந்த விநாயகர் சிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தனர். இறைவன் திருவுளக் கருணையினால் வள்ளம் கரைசேர்ந்த இடம் பற்றி அந்தணருக்கு கனவு மூலம் தெரியவந்தது. விநாயகர் வந்த வள்ளம் காரைநகர் கிழக்குக் கடற்கரையில் இருப்பதாக அறிந்த அந்தணர் அன்பர்களின் உதவியுடன் தேடுதல் செய்து சிலையைக் கண்டனர். மிகப் பெரியதும், பாரமானதுமான சிலைiயானதால் சிரமப்பட்டு இன்று ஆலயம் இருக்குமிடம் வரை கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.

       பின் அவ்விடத்திலிருந்து அச்சிலையை எடுக்க முயன்றபோது முடியாமற் போகவே அவ்விடத்திலேயே கோவிலை அமைத்தனர். சிலையும் பீடமும் ஒரே கல்லால் ஆனவை. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது பீடத்தின் அடியில் உள்ள துவாரம் வழியாக அபிஷேகமான திரவியங்கள், பால், நீர் என்பன செல்வதைக் காணலாம். இக் கோவிலில் பூசை செய்து வந்த அந்தண குடும்பத்திற்கு ஆண் வாரிசு இல்லாமையால் பெண்வழி வந்த குமாரவாமி ஜயர் பூசைப் பொறுப்புக்களை பொறுப்பேற்று நடாத்தி வந்தார். இவர் இக்கோவிலின் வரலாற்றில் ஜந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவராவார். இக் கோவிலின் வழிபாட்டில் ஏற்பட்ட சச்சரவு காரணமாகச் சிலர் பிரிந்து சென்று இன்று திக்கரையில் பிரசித்தமாக இருக்கும் முருகன் கோவிலை ஆரம்பித்தனர் என அறியக்கிடக்கின்றது. காரைநகர் கோவளம் வெளிச்ச வீட்டின் பக்கத்தே முருகேசு சுவாமிகள் ஆச்சிரமம் ஒன்றை அமைத்து இருந்தார். இவர் பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். யோகர் சுவாமிகள் போன்று ஞானியாகத் திகழ்ந்தவர். இவரை பேப்பர் சாமியார் என்றழைப்பர். இவர் இக்கோவிலைப் பற்றிக் கூறும் போது காரைநகரின் முதற் கோவில் தன்னைப் பிள்ளையார் கோவில் என்றும், அதீத சக்தி வாய்ந்தது என்றும் கூறியுள்ளார். தனது சிஷயர்களை இப்பிள்ளையாரை வழிபாடு செய்யத் தவறாதீர்கள் என்றும் அவர் கூறுவார். அவரின் சீடர்களில் சிலர் இன்றும் ஆலயக் கடமைகளில் முன் நிற்கின்றனர்.

        மேலும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வரலாறு  "கத்தரை" முறை பேணல் மூலம் தற்போதும் பாதுகாக்கப்படுகின்றது. அதாவது தற்போதுள்ள தலைமுறையிலிருந்து பின்னோக்கி ஒன்பதிற்கும் மேற்பட்ட தலைமுறைப் பெயர்களைக் கொண்டவர்களாக உள்ளனர். இக் "கத்தரை" முறைகளில் இரு மரபால் உயர்ந்த, இருமரபும் சிறந்த, கன உடையார், இராம உடையார், முதலியார் வம்சம் எனப் பல பெயர்களைக் கொண்ட வழித்தோன்றல்கள் தற்போதும் அதனைப் பேணி வருகின்றனர். தத்தம் "கத்தரைகளை" சேர்ந்தவர்கள் தங்கள் "கத்தரைகளிலுள்ள" உறவுக்காரர்கள் இல்லங்களில் நிகழும் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் முன்னிறுத்தப்படுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதில் "துடக்கு காத்தல்" (ஆசூசம்) என்பது  கடல் கடந்து, பிரதேசம் மாறி, நாடு மாறி, கண்டம் மாறி வாழ்ந்து வந்த போதும் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்ததும் இந்நாடே" என்ற பாரதியார் பாடல்களை நியமாக்கி தொடர்ந்தும் "மரபுளோர் கொடுக்க வாங்கி" என்ற கம்பன் வரியையும் வாழ்வாக்கி மரபு பேணுகின்ற தன்மை இப்போதும் பேணப்பட்டே வருகின்றது. 

      தன்னைப்பிள்ளையார் கோவிலை இருமரபுஞ்சிறந்த மானாமுதலி வம்சத்தினர் ஆதரித்து வழிபட்டு வந்தனர். இக்கோயிற் சூழலில் வாழ்ந்து வந்த முதலியார் மரபினைச் சேர்ந்த விநாசித்தம்பி சந்ததியினரும் தன்னைப் பெருமானை வழிபட்டு வந்தார்கள். 

      இருமரபுஞ்சிறந்த மானாமுதலி வம்சத்தினரைச் சேர்ந்தவர்களால் தன்னைப் பிள்ளையாருக்கு நித்திபூசை சிறப்பாக நடைபெறுவதற்காகத் தங்களுக்குச் சொந்தமான நெல் வயல்களைக் கோயிலுக்கு உரிமையாக்கியதுடன் அந்தணப்பெருமக்களுக்கு ஆதரவு நல்கியும் வந்தனர்.

       இம்மரபில் வந்த வேலாயுதர் சின்னக்குட்டி தம்பதியினர் பல ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆண் சந்ததி இல்லாத குறை நீங்குவதற்காக வரம் வேண்டித் தமது குல தெய்வமான பிள்ளையாரைப் பக்தி சிரத்தையுடன்  வழிபட்டு வந்தார்கள். இதன் பயனாக ஏழு புதல்வர்கள் தோன்றினார்கள். வேலாயுதர் மகன் சிற்றம்பலமும் அவர் மனைவியாராகிய அபிராமிப்பிள்ளையும் பத்து ஆண்டுகள் வரை பிள்ளைப்பாக்கியம் இல்லாது மிக வருந்தி தங்கள் குல தெய்வமான தன்னைப் பிள்ளையாரிடம் வரம் வேண்டியும் சந்தானகோபாலரைப் பிரதிட்டை செய்தும் வணங்கி ஆண்மகவு ஒன்றைப் பெற்று மனநிறைவுற்;றனர். தொடர்ந்தும் ஜந்து பிள்ளைகளைப் பெற்று மனமகிழ்சி அடைந்தனர்கள்.  தன்னைப் பதியில் வீற்றிருந்து வேண்டுவர்க்கு வேண்டிய வரங்களை வழங்கி அற்புதங்கள் பல நிகழ்த்தும் விநாயக பெருமானை வணங்கி அப்பகுதி மக்கள் பல சிறப்புக்களுடன் வாழ்ந்து வந்தனர்.  அப்பகுகியில் வாழ்ந்த பண்டாரி முருகர் தம்பிப்பிள்ளை தம்பதியினர். பிள்ளையாரை வரம் வேண்டி வணங்கிப் பெற்ற ஆண்மகன் கல்வியிற் சிறந்து விளங்கிப் புகழ் பெற்ற நியாயதுரந்தரராக (அப்புக்காத்து) விளங்கியமையும் இராமு உடையார் வம்சத்தைச் சேர்ந்த வெற்றிவேலு கந்தையா ஆசிரியரும் மனைவியாரும் தன்னைப் பெருமானை வரம் சேண்டிப் பிரார்த்தித்தும் பெற்ற புதல்வன் அமரர் கனகரத்தினம் நன்கு கற்ற பிரபல மருத்துவ கலாநிதியாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கன.

       கோயிற் சூழலில் வாழ்ந்து வந்த முதலியார் வம்சத்தைச் சேர்ந்த விநாசித்தம்பி சந்ததியினரும் வேலுப்பிள்ளை சந்ததியினரும் விநாயகப் பெருமான் அருளால் வளங்கள் பல பெற்று இன்றும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.  விநாசித்தம்பியின் இரண்டாவது மனைவி தாம் விதவையானபோது தன்னைப் பிள்iளையாரே தஞ்சமென்று பெருமான் அடியில் வீழ்ந்து வணங்கி அப்பெருமான் அருளால் தமது ஒரே மகனுடன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்.

       தன்னைப் பெருமானை வணங்கி வாழ்ந்த மக்களின் உறவினர்கள் அனைவரும் அப்பெருமானின்அருளால் உலகெங்கும் பரந்து புகழுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

      பிள்ளையாரை ஆதரித்து வந்த மானாமுதலி வம்சத்தினரும் தன்னைத் திருப்பதியில்  வாழ்ந்த பண்டாரி முருகர் சந்ததியினரும் தன்னைப் பிள்ளையாரின் நினைவாக மருதடி விநாயகர் ஆலயத்தை அமைத்தனர் என்று முதியோர் கூறுவர்.

      அண்மைக்காலத்தில் ஆலய அர்ச்சகராக இருந்து வேதாகம முறைப்படி பூசை செய்து எல்லோரதும் பெருமதிப்பைப் பெற்ற அசாரசீலர் சிவத்திரு குமாரசுவாமிக்குருக்கள் ஆவார். குருக்களின் பாரியாராகிய ஜீவரட்னசணியம்மா சைவ அனுட்டானம் உள்ளவர்.  வயதான காலத்திலும் கோயிற் தொண்டு செய்து வந்தவர். வுழிபாட்டுக்கு வரும் அடியார்களைத் தாயன்போடு உபசரித்து அனுப்பும் பெருமை உள்ளவர். அத்துடன் அவரது மகன் "பாப்பா" ஜயர் அவர்கள் பிரம்மச்சரியாக வாழ்ந்து தன் தாயாருடன் இறுதிக்காலம் வரை 1991ம் ஆண்டு சித்திரை மாதம் இடப்பெயர்வைக் காரைநகர் கண்டபோதும் தன் கடவுள், தன் தாய் ஆகியோருடன் அசையா மனவுறுதியுடன் வாழ்ந்த அந்தணரை இவ்விடத்தில் குறிப்பிடுவது சாலப்பொருத்தமானதாகும். மேலும் குமாரசாமிக்  குருக்கள் தம்பதியரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அனைத்து செல்வங்களையும் பெற்று மிகச்சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்

       இக்கோவிலின் இன்னொரு சிறப்பு மிக்க விடயமாக குறிப்பிட்டுக் கூறக்கூடியது "தன்னை யமக அந்தாதி" ஆகும். இதனை பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து வந்த முத்தமிழ் வித்தகராகிய முருகேசையர் இக் கோவிலில் பூசை செய்து வந்த காலப்பகுதியில் விநாயகப் பெருமானின் கருணையினால் தன்னை யமக அந்தாதி 70 செய்யுள்களாகப் பாடினார். இருப்பினும் இவ் அந்தாதி பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. 1810ம் ஆண்டு பிறந்த முருகேசருடைய மகன் கார்த்திகேசு ஜயர் தம் தந்தையாரால் பாடப்பட்டு பூர்த்தி செய்யப்படாதிருந்த தன்னை யமக அந்தாதியைப் பூர்த்தி செய்து தமது புலமையை வெளிப்படுத்தினார். கங்காதர சாஸ்த்திரியாரால் இவருக்குப் "புலவர்" எனும் பட்டம் சூட்டப்பட்டது. அப்போது இவருக்கு வயது 18. அன்று தொடக்கம் இவரது பெயர் "கார்த்திகேசுப்புலவர்" என வழங்கப்பட்டது.

       அந்தாதி முற்றுப் பெற்றும் நீண்ட காலமாக ஏட்டுச்சுவடியாகவே இருந்தது. இதனை உரையுடன் வெளியிட வேண்டுமென்று கார்த்திகேசுப்புலவர் அவர்களின் வம்ச மரபு வழித்தோன்றலும் அகில இலங்கைச் சைவகுருமார் சபைத்தலைவராக இருந்து பெரும் பணியாற்றியவரும் ஈழத்து சிதம்பர தேவஸ்தான பிரதம குருவாக இருந்தவருமான வேதாகம கிரியா பூஷணம் சிவத்திரு ச.கணபதீஸ்வரக்குருக்கள் அவர்களின் புதல்வரான ஆழ்ந்த அகன்ற தமிழ்ப் புலமை படைத்தவரும், தமிழ்ப் பண்டிதரும் கலாநிதி சிவத்திரு க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் விழைந்தார்கள். உரை எழுதுவதற்குப் பேரறிஞரும் பெரும் புலவரும் பல நூல்களின் ஆசிரியருமான பண்டிதமணி க.மயில்வாகனனார் ஒப்புதலையும் பெற்று உதவினார்கள். பேருதவி புரிந்த குருக்கள் அவர்களினாலும் விநாயகர் ஆதரித்து வந்த மரபு வழித்தோன்ற பெருந் தவத்தினால் பிறந்த அமரர். சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் 2004ஆம் ஆண்டு இந்நூலினை வெளியிட்டுள்ளார். 

       மேலே கூறப்பட்ட வரலாறும், பெருமைகளும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற தன்னையம்பதியில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமான் திருக்கோவில் தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாலயத்தில் இதுவரை காலமும் வருடம் முழுவதும் வருகின்ற முக்கிய விசேட தினங்கள், பிள்ளையார் கதை, திருவெம்பாவைப் பூசை, மாதப்பிறப்பு பூசை, சதுர்த்தி திதி போன்ற விழாக்கள் நடைபெற்று வந்தன. எனினும் நடைபெற இருக்கின்ற இக் கும்பாபிஷேத்தை தொடர்ந்து கொடியேற்றத் திருவிழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் "வேண்டத்தக்கது" அறிவோனாக தன் அருளினை பாலித்து தன்னையம்பதியில் வீற்றிருக்கின்றான்.

           ஆலய பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுகோள்

    மேற்படி திருக்கோயில் பல ஆண்டுகளாக எவ்வித திருப்பணி வேலைகளும் நடைபெறாதமையால் தரை மட்டத்தில் இருந்து புனர்நிர்மாண வேலைகள் நடைபெற்று ஓரளவு பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. அன்பர்கள் அடியவர்களின் உதவியால் மிகுதி திருப்பணி வேலைகளையும் பூர்த்தி செய்து வெகு விரைவில் குடமுழுக்கு விழா நடைபெற தன்னை வரசித்தி விநாயகரின் திருவருள் கூடியுள்ளது. எனவே மேலும் அன்பர்களிடம் நிதியுதவியை வேண்டி நிற்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர். 

                     "தன்னையன் போடு துதிப்பாரகத்னிற்சார்ந்திடுநா
                      தன்னையன் போற்று தகர்வாகனற்குத் தனிப்பின்றிய 
                      தன்னையன் போத வுருவானவன் தமியேற்குத் துணை
                      தன்னையன் போர்புரி யங்குச பாசம் தரித்தவனே"

                                    –  தன்னை யமக அந்தாதி –

IMG_2213 (Copy) IMG_2225 (Copy) IMG_2238 (Copy) IMG_2243 (Copy) IMG_2244 (Copy) IMG_2256 (Copy) IMG_2260 (Copy) IMG_2262 (Copy) IMG_2264 (Copy) IMG_2271 (Copy) IMG_2272 (Copy) IMG_2274 (Copy) IMG_2280 (Copy) IMG_2281 (Copy) IMG_2282 (Copy) IMG_2285 (Copy) IMG_2309 (Copy) IMG_2310 (Copy)

காரை மாதாவிற்கு பெரும் புகழ் சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் என்.கே.கணேசன்

Karai_N.K.Kanesan

கலைஞர்கள் தோன்றுகிறார்கள், மறைகிறார்கள். சிலர் பிறவிக் கலைஞர்களாகவே தோன்றுகிறார்கள். சிலர் தமது முயற்சியால் ஆற்றலால் ஆளுமையால் பார் போற்றும் கலைஞர்களாகிறார்கள். இருப்பினும் ஒரு சிலரே உச்ச நிலையை அடைகிறார்கள். மக்களின் மனதில் இடம் பிடித்துக்கொள்கின்றார்கள்.

இது அவர்களது கலைகளில் கண்ட தனித்துவம் திறமை ரசிகர்களை சுண்டியிழுக்கும் பாங்கு; மற்றது இங்கிதம் என்று கூறுவார்களே. கலைஞர்களிற்கு இது மிக அவசியமாகிறது. எத்துணை திறமையிருந்தும் அவரிடம் இங்கிதம் – மனிதனுடன் பண்பாக அன்பாக பழகும் பாங்கு இல்லாதவிடத்து அவர் ஒரு புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவார்.

இந்நிலையில் நாம் இங்கு நினைவுகூர வந்திருக்கும் நீத்தார் பெருமை கூறவந்திருக்கும் இசை அறிஞர் பூரண தகமைகளை கொண்டிருந்த இசை அறிஞர் என்றே கூறவேண்டும். இசைநாத மணி, இசைச்சக்கரவர்த்தி மறைந்த நாதஸ்வர வித்துவான் காரையம்பதி என்.கே.கணேசன் இசை உலகிற்கு அரும்பணியாற்றியவர். வாழும்பொழுதே கௌரவிக்கப்பட்டார். பல இளம் கலைஞர்களிற்கு உதாரணமாக இருந்தவர். இவர் பெருமை கூறி அஞ்சலி செலுத்துவது நமது கடமைப்பாடுகளில் ஒன்றாகும். 

இதனைத் தவறாது இவ்விசை வேள்வியில் சேர்த்துக்கொண்ட கம்பன் கழகத்தினை முதற்கண் பாராட்ட வேண்டும். நாதஸ்வர வித்துவான் என்.கே.கணேசன் அவர்களது இழப்பு இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இவ்வருடம்(2001ஆம் ஆண்டு) யூலை மாதம் 28ஆம் திகதி மரணமெய்தினார். 

காரைநகரையே பிறப்பிடமாகக் கொண்டவர் இவர். முதலில் தந்தையார் நல்லகண்ணு கம்பரிடமும் பின்னர் மூளாயைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் அமரர் ஆறுமுகம் அவர்களிடமும் பின்னர் மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் அமரர் ரசா அவர்களிடமும் நாதஸ்வர இசையை முற்றாகவும் முறையாகவும் கற்றார். 

அளவையூர் நாதஸ்வர சக்கரவர்த்தி கலாசூரி என்.கே.பத்மநாதனை சம்பந்தியாக கொண்டார். இந்திய நாதஸ்வர தவில் வித்துவான்களோடு ஈழத்துச் சிதம்பர திருவாதிரை உற்சவ காலத்தில் இணைந்து வாசித்து பாராட்டைப்பெற்றவர். இவரது வாசிப்பு தனித்துவமானது. கேட்போர் மனதை கவரும் தன்மையது என்று கேள்விப்பட்டுள்ளேன். தமிழகத்தின் பிரபல தவில் மேதைகளான அரித்துவாரம் மங்களம் A.K.பழனிவேல் திருவானப்புத்தூர் T.A.கலியமூர்த்தி திருச்சேரை முத்துக்குமாரசாமி போன்றோரால் ஈழத்துச் சிதம்பரத்தில் பாராட்டப்பெற்றவர்.

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் கூத்தபிரான் வீதியுலா வருங்காலத்தில் நாதஸ்வரம் வாசிப்பதை தமது முக்கிய கடமையாகக் கொண்டவர். அமரர் கணேசன் அவர்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் ஆஸ்தான வித்துவானாக நாதஸ்வர மாமேதையாக 40 ஆண்டு காலமாக இருந்தவர். நாடு போற்றும் நன் மக்களையும் பெற்று இன்று நாதஸ்வர மேதையாக பல பட்டங்களையும்பெற்று காரை மாதாவிற்கு புகழ் சேர்த்த என்.கே.கணேசன் அகவை 53 வரை வாழ்ந்தவர். 

நாதஸ்வர கலாநிதி நாதஸ்வர இசைமணி, நாத இசைச் சக்கரவர்த்தி எனும் பல பட்டத்தால் கௌரவிக்கப்பட்டார். காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பிகையின் ஆஸ்தான வித்துவானுமாவார். இலங்கை வானொலிக் கலைஞராக பங்குபற்றியவர். இவரது பிள்ளைகளும் நாதஸ்வரம் தவில் வாய்ப்பாட்டில் புகழ்பூத்து நிற்கிறார்கள். சென்ற ஆண்டுகூட(2000ஆம் ஆண்டு) கம்பன் விழாவிற்கு வருகை தந்த மாம்பழம் சிவா குழுவினரை ஈழத்துச் சிதம்பர திருவாதிரை உற்சவத்திற்கு வாசிக்க வைத்த பெருமை அமரர் கணேசனையே சாரும். 

1975ல் வலங்கைமான் சண்முகசுந்தரத்துடன் வாசித்த பாராட்டைப் பெற்றவர். இந்தவகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வம்சத்து வழித்தோன்றலான திரு.நல்லக்கண்டு செல்லையா சம்பத்துவின் தம்பி நல்லக்கண்டு கயிலாயக்கம்பரின் மகனாகப் பிறந்து ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர் வரிசையில் இடம்பெற்று தனது தெய்வீக இசைமூலம் இசைப் பணியாற்றி ஈழத்துச் சிதம்பர ஆஸ்தான வித்துவானாகவிருந்த நாதஸ்வரமேதை அமரர் என்.கே.கணேசன் அவர்களது மறைவு தமிழ் மக்களிற்கும் கலைத்துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கொழும்பு கம்பன் கழகம் 2-12-2001 வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்திய இசை வேள்வியின்போது கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் ஆற்றிய அஞ்சலி உரை.

நன்றி: மூதறிஞர் பண்டிதர் தத்துவகலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்

பதிப்பாசிரியர்: அருள்நெறித்தொண்டர் அமரர் கே.கே.சுப்பிரமணியம்

அமரர் என்.கே.கணேசன் அவர்களின் மூத்த புதல்வியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் மூத்த விரிவுரையாளரமான செல்வி பரமேஸ்வரி(பரமா) கணேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக யூன் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்ளும்பொருட்டு கனடாவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில் அவர் தொடர்புபட்ட தகவல்கள் கட்டுரைகள் இவ்விணையம் ஊடாக எடுத்துவரப்படும் செயற்பாட்டின் வரிசையில் மேற்குறித்த கட்டுரை முதலாவதாக எடுத்து வரப்படுகின்றது.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி யஸ்மின் நவரட்ணராஜா.

SWISS LOGO

காரைநகரின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியன

     சைவத்தையும் தமிழையும் போற்றி வளர்த்ததில் வட இலங்கைப் பிரதேசத்தில் குறிப்பாக யாழ்ப்பாண பிரதேசம் தனக்கே உரிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளது. ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியை எடுத்து நோக்குகையில் சமய, சமூக, பொருளாதார அம்சங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

                       "பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால்
                                           ஆற்ற விளைவது நாடு"

 என்பது வள்ளுவர் வாக்கு. இத்தகைய கேடுதல் இல்லாதாகிய மிகுதியான விளைச்சலை உடையதாகியதாகவும் விளங்கும் பெருமை மிக்கதே இச்சிவபூமியாகிய காரைநகர். யாழ்ப்பாணத்தில் வடமேல் திசையில் 22 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் காரைதீவானது தற்போது காரைநகர் என வழங்கப்பட்டு வருகின்றது. சப்த தீவுகளின் அணிகலனாய் விளங்கும் காரைநகர் புராதன காலத்தில் காரைச்செடிகள் மிகுந்து காணப்பட்டமையினாலும் இங்கு வாழ்ந்த மக்கள் காரைக்குடிகள் என்று அழைக்கப்பட்டதாலும் இது காரைதீவு எனப்பெயர் பெற்றது. பின்னர் இலங்கையின் ஏனைய சில பிரதேசங்களும் காரைதீவு என வழங்கப்பட்டமையினால் பல்வாறான இடைஞ்சலை தவிர்ப்பதற்காக என இப்பிரதேசம் ஆங்கிலேயரால் காரைநகர் என குறிப்பிடப்பட்டது.

  இத்தீவானது மேற்கிலும் வடக்கிலும் இந்தியாவுடன் தொடுகடலான பாக்கு நீரிணையும் கோடை காலங்களில் வற்றுகின்ற தன்மையுடையதான பொன்னாலைக்கடலாலும் தெற்கில் அகலம் குறைந்த ஆழம் மிக்க ஊர்காவற்றுறைக் கடலும் சூழ்ந்த தனித்துவமான பிரதேசமே காரைநகர். பண்பாட்டு மரபைப் பேணும் இயற்கைச் சூழல் கொண்ட காரைநகர் பிரதேசம் 7 கிலோமீற்றர் நீளமும் 4 ½ கிலோமீற்றர் அகலமும் உடையது.

  இத்தகைய சிறப்பிடமான காரைநகர் கல்வி, கலை, கலாச்சாரம் என்பவற்றில் தடையற்ற சிகரமாய் மிளிர்ந்ததற்கு காரைநகர் தந்த பெரியோர்கள் சாட்சி. திரு.ச.அருணாசலம் உபாத்தியாயர், காரைப்புலவர் ஏறு பிரம்மஸ்ரீ கார்த்திகேயப்புலவர், நாகமுத்துப்புலவர், பிரம்மஸ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள், சுப்பிரமணிய தேசிகர் போன்ற பெரியார்கள் இம்மண்ணில் வாழ்ந்து மடிந்துள்ளனர். காரைநகரின் சிறப்பும் தனித்தன்மையும் இன்னும் போற்றப்பட வேண்டியது இன்றியமையாததொன்றாகும். இத்தகைய பெரியோர் பற்றிய ஆய்வுகள் முழுமைப்படுவதும் காலத்திற்குக் காலம் இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதும் அவசியம். காரைநகரின் வளர்ச்சிக்கு இத்தகு பெரியோரின் பெயர்கள் நிலைக்கப் பெயரிடுவதும் பொது இடங்களில் திருவுருவச்சிலை அமைத்துப் பேணுவதும் இவர்கள் ஆக்கிய நூல்களைப் பாதுகாத்தலும் எம் அனைவரதும் முக்கிய கடமையாகும். இன்று வலந்தலையில் அமையப்பெற்றுள்ள சயம்பு வீதி மற்றும் யா/கலாநிதி.ஆ.தியாகராஜா.மத்திய.மகா.வித்தியாலயப் பகுதியில் அமைந்துள்ள சயம்பரின் சிலை மற்றும் இப்பாடசாலையின் கட்டடங்கள் பெரியார் நடராஜா மற்றும் சயம்பரினையும், பாடசாலையின்பெயர் மதிப்புமிகு தியாகராஜா அவர்களை நினைவு கூருவதைப்போல் காரைநகரின் ஏனைய பிரதேசங்களும் பகுதிகளும் இப்பெரியார் பெயர் கூறினால்தான் வருங்கால சமுதாயம் வளம்பெறும் வகையில் பெரியார் கனவு மெய்ப்படும். 

        மேலும் சுமார் 22 சதுர கிலோமீற்றர் பரப்பளவினையுடைய இப்பிரதேசமானது ஒன்பது கிராமசேவையாளர் பிரிவினையும் 94 கிராமங்களையும் 3600 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 12000 பேர் தற்போது இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்கின்ற குடும்பங்களில் பெரும்பாலானோர் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் தமது சீவனோபாயத்திற்காக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

       நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட இச்சிறுதீவு கடற்றொழிலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு கொண்டு சென்றே விற்பனையாகின்றன. இதனால் உள்ளுர் நுகர்வானது வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றது. காரைநகரில் ஐந்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் காணப்பட்டு வருகின்றது. எனவே வெளியூர் மீன் விற்பனையை இவர்கள் தம் கவனத்தில் எடுக்க வேண்டும். வெளியூரில் மேற்கொள்ளப்படும் விற்பனையை நம் ஊரில் அதற்கேற்ப பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளுர் வருமானம் உயரும் என தெளிவாகின்றது.

         மேலும் காரைநகரில் கல்வி விருத்தியானது ஓரளவு திருப்தியான நிலையை எட்டியபோதும் பெரும்பாலான மாணவர்கள் யாழ்நகர் நோக்கி கல்வி நடவடிக்கைக்காக செல்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் காரைநகரில் சகல வளங்களும் சேர்ந்த பாடசாலைகள் காணப்படுகின்றன. இங்கு செயற்படுகின்ற 15 பாடசாலைகளில் சுமார் 2000 மாணவர்கள் கல்விகற்று வருவதுடன் சுமார் 200 ஆசிரியர்கள் கல்வி போதித்து வருகின்றனர். அத்துடன் சில தனியார் கல்வி நிலையங்களும் கிழவன்காடு கலாமன்றமும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே வெளியூருக்கு கல்விக்காகச் செல்லும் மாணவர்கள் எமது பிரதேசத்திலேயே கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். எமது பிரதேச பிள்ளைகள் வெளியூர் பாடசாலைகளில் பெறும் பெறுபேற்றை எமது ஊர்ப் பாடசாலைகளில் பெற்றால் அது எமது பிரதேசத்திற்கே பெருமை சேர்க்கும் விடயம் ஆகும்.

       மேலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் எமது பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்பதுடன் மேலதிக கல்விக்காக யாழ்நகர் நோக்கிச் செல்லும் நிலை கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்வதை அவதானிக்க முடிகின்றது. காரைநகரின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் போக்குவரத்து இடரினைத் தவிர்க்கவும் எமது பிரதேசத்திலேயே உயர்தர மாணவர்களுக்கான கல்விநிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கு வளமான ஆசிரியர்களைப் பெற்று வழங்குவதன் மூலம் காரை மாணவர்களின் பெறுபேற்றை உயர்த்த முடியும்.

                  
                                                                            அத்துடன் 2010ஆம் ஆண்டு வரை யா/கலாநிதி.ஆ.தியாகராஜா.மத்திய.மகா.வித்தியாலயத்தில் மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் கல்வி பெறும் சாதக நிலை காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்நிலை மாற்றமடைந்துள்ளது. இன்றைய மாணவர்கள் பெரிதும் ஆங்கில மொழிமூல கல்வியை விரும்புவதால் மீண்டும் காரைநகர்ப் பாடசாலைகளில் ஆங்கில மொழிக்கல்வியை ஆரம்பிக்க வேண்டும். இத்தகைய கல்விப் பணிகளை மேற்கொண்டால் காரைநகரின் வளர்ச்சி கல்வியில் உச்ச நிலையினை அடைய முடியுமென்று தெரியவருகிறது. மேலும் காரைநகரில் காணப்படும் பாலர் பாடசாலைகள் மற்றும் நவீன கற்றல் செயற்பாடுகளுடன் கூடிய காரை கிட்ஸ் பார்க் பாடசாலையும் இயங்குகின்றன. காரைநகர் முன்பள்ளிகளின் அபிவிருத்தியில் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் மற்றும் கனடா காரை நலன்புரிச்சங்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவருகின்றது. மேலும் பாடசாலை நூலகங்களுடன் வியாவில் ஐயனார் ஆலய நூலகம், புதுவீதியில் மாணவர் நூலகம் என்பனவும் மாணவர் கல்வி வளர்ச்சியில் பங்களிப்பினை வழங்கி வருகின்றது. மேலும் இங்கு நூலக வசதிகளில் இலத்திரனியல் கணினி நிலையங்கள் அமைக்கப்பட்டால் மாணவர்களின் வாசிப்பு அறிவும் கணினி அறிவும் மேம்படையும் என தெரிகின்றது. எனவே காரைநகர் கல்வி வளர்ச்சிக்கு இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததொன்றாகும்.

             தொடர்ந்து சுகாதாரத்தைப் பொறுத்தமட்டில் எமது பிரதேசத்தில் ஒரு பிரதேச வைத்தியசாலையும் ஆயுள்வேத வைத்தியசாலை ஒன்றும் உள்ளது. மேலும் ஓரிரு தனியார் மருந்தகங்களும் காணப்படுகின்றன. எனினும் இப்பிரதேச மக்களுக்கு சுகாதார வசதியின்மை தொடர்ந்தும் நிலவி வருகின்றது. ஆயள்வேத வைத்தியசாலை ஆரம்பிப்பதற்குரிய நிலம், கட்டடம் மற்றும் ஏனைய வசதிகளை லண்டன் மற்றும் கனடா நலன்புரிச்சங்கங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை வைத்தியசாலை ஒன்றும் களபூமி விளானையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நலன்புரிச்சங்கங்களின் உதவியோடு நடமாடும் மருத்துவ முகாம்களின் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. எனவே மக்கள் இதனைப் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.

         காரைநகரில் வங்கிச்சேவையைப் பொறுத்தமட்டில் இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பன தமது கிளைகளை காரைநகரின் மேற்கு வீதியில் அமைத்து தமது சேவைகளை வழங்கி வருகின்றன. இவர்களது சேவைகளில் சேமிப்பு மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமன்றி கடன் வசதிகளும் சிறப்பிடம் பெறுகின்றன. அந்த வகையிலே விவசாயக்கடன், மீன்பிடிக்கடன், சுயதொழிற்கடன், வாழ்வாதாரக்கடன் போன்றன வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் உதவியுடன் மக்கள் தமது சுயதொழிற் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமுர்த்தி வங்கி, கிராமிய வங்கி என்பனவும் மக்களுக்கான கடன் வசதிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கான விதைகள், பசளைகள், வியாபார உபகரணங்கள், தென்னங்கன்றுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் கோழிக்குஞ்சுகள் என்பனவற்றையும் வழங்கி மக்களின் சுயதொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. எனினும் இச் சுயதொழில்கள் வீட்டுப்பாவனையுடன் மட்டும் நின்றுவிடாது பொருளியல் ரீதியிலும் வளர்ச்சி பெறவேண்டிய வசதிகளை பிரதேசசபை மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால் உள்ளுர் வியாபாரத்தை மேம்படையச் செய்ய முடியும். 

            இத்துடன் சமூக சேவைகளை நோக்கும்போது 15 கிராம அபிவிருத்திச் சங்கங்களும் 5 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் 10 இற்கு மேற்பட்ட சனசமூக நிலையங்களும் உள்ளன. அத்துடன் 14 விளையாட்டுக்கழகங்களில் 06 கழகங்களின் செயற்பாடுகள் பதிவின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. இவை மட்டுமல்லாமல் 03 இளைஞர் மன்றங்கள் காணப்படுவதுடன் காரைமத்தி மேம்பாட்டுக்கழகம், ஓய்வூதியர் சபை, மணிவாசகர் சபை, யோகா ஆரணியம், களபூமி கலையகம், காரைநகர் அபிவிருத்திச்சபை மற்றும் ஒளியகம் போன்ற பொது அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. இவ் அமைப்புக்கள் மூலம் பலவாறான சேவைகள் மற்றும் பண்ணிசை, பேச்சு, கவிதை, நடனம், நாடகம் போன்ற போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. முதியோர் மற்றும் கணவனை இழந்த பெண்களிற்கான கொடுப்பனவுகள், சுயதொழில் ஊக்குவிப்புக்கள், மாணவர்களுக்கான மேலதிக இலவசக்கல்வி போன்றவற்றை கனடா, பிரான்ஸ் மற்றும் லண்டன் போன்ற காரை நலன்புரிச்சங்கங்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்டுடன் இச் செயற்பாடுகள் தொடர வேண்டும். இதற்காக இயங்காத நிலையில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டு பிரதேசசபையின் அனுமதி பெற்று இயங்க வேண்டும். உதாரணமாக இளஞ்சோலை விளையாட்டுக்கழகத்தை எடுத்துக் கொண்டால் இக்கழக உறுப்பினர்கள் மிக குறைந்தளவு தொகையிலேயே காணப்படுகின்றனர். இக்கழக பிரதேசத்தில் மாணவர்கள் ஏராளமானோர் இருந்தபோதிலும் அவர்கள் கழக செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகிறது. எனவே பிரதேசசபை, காரை அபிவிருத்திசபை மற்றும் இளைஞர் கழகங்கள் மூலம் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடாத்துவதன் மூலம் இது போன்ற கழகங்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

        மேலும் காரைநகரின் போக்குவரத்து நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டோமானால், பிரதான சுற்று வீதியும் 92 உப வீதிகளும் அமைந்துள்ளன. உபவீதிகளில் பெரும்பாலானவை புனரமைக்கப்பட்டு வரும் போதிலும் சில வீதிகள் இன்னும் இடங்கலுள்ளாகிய நிலை காணப்பட்டு வருகின்றது. உதாரணமாக சந்தம்புளியடி வீதி, களபூமி கல்லொழுங்கை போன்ற வீதிகள் இன்னும் புனரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இதனை பிரதேச சபையின் கவனத்திற்கு எடுத்துச்சென்று இவற்றை சீர்செய்ய வேண்டும். இது பிரஜைகளாகிய எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். இவை மட்டுமல்லாது காரைநகருக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துச் சேவை திருப்திகரமானதாகவே அமைந்துள்ளது. அவ்வகையில் காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு போன்ற இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் பிரதானம் பெறுகின்றன. இவ்வகையில் போக்குவரத்து சிறப்பிடம் பெற்றாலும் காரைநகர், யாழ்ப்பாணம் 782, 786, 784 இலக்கப்பாதைகள் புனரமைக்கப்படவில்லை. யாழ்ப்பாண வீதிகளெங்கும் காப்பெற் வீதிகளாக புனரமைக்கப்பட்டு வரும்போது காரைநகரில் எந்தவொரு வீதியும் இதுவரை காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவில்லை. அத்துடன் பொன்னாலைப்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், இப்பாலத்தில் இரவுநேர மின்விளக்குகளை ஒளிரவிட்டால் இவ்வாறான விபத்துக்களை தவிர்க்க முடியும.; இதனையும், பிரதேச சபையினரதும் ஊரக்கு தொண்டாற்றுவோரதும் கவனத்திற்கும் கொண்டுவர வேண்டும். 
        காரைநகரின் குடிநீரைப் பொறுத்தவரையில் ஆலங்கன்றடி உள்ளிட்ட ஐந்தாறு கிணறுகளும் பிரித்தானிய நலன்புரிச்சங்க குடிநீர்ப் பவுசர்களுமே மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதுடன் வரட்சிகால குடிநீர் விநியோகத்தை பிரதேசசபையும் மேற்கொண்டு வருகின்றமை காரைநகர் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும். 

மேலும் காரைநகரின் சைவப்பணி குறிப்பிடத்தக்கது. ஆலய சபைகளுடாக சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பெரியார் அருணாச்சலரின் வாக்கு மெய்ப்படுவதைக் காணலாம். இந்நிலை மேலும் வளர்ச்சி பெற வேண்டும். 

அந்த வகையிலே காரைநகரின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியன என்று தொகுத்து நோக்கும்பொழுது கல்வி, சுயதொழில், போக்குவரத்து, சமயம், பண்பாடு, சமூகம் என அனைத்து வகைகளிலுமே வளர்ச்சி பெற்ற அறிவும் பண்பாடும் நிறைந்த ஒரு நற்சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டியது இன்றியமையாததொன்றாகும். எனவே மாணவரிடம் விழுமிய பண்புகளை வளர்த்தல், மொழி, பண்பாடு, சமய, கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றைப் பேணுதல், பொது அமைப்புகளில் தொண்டாற்றுதல், வேலை வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுத்தல், திருப்பணிச்சபைகள் அமைத்தல், மாதந்தோறும் கலை, பண்பாட்டு நிகழ்வுகளை நடாத்துதல், கூட்டு வழிபாடுகள் நடாத்துதல், நூற்தொகுதிகள் பேணுதல் போன்ற சமூக தொண்டுகளில் ஈடுபட்டு எமது பிரதேசத்தை மிளிரச் செய்யும் நோக்குடன் செயற்பட வேண்டும் என உறுதி பூண்டு திண்ணிய மனத்துடன் ஒவ்வொருவரும் இயன்றளவு முயலுதல் வேண்டும்.


                                          "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

                                                                         ***நன்றி***

kadduraipoddi  05 20140001

புலம்பெயர் தேசத்திலிருந்து எமது ஊருக்கான அபிவிருத்தி

PHOTO

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவு எனினும் பொன்னாலைப் பாலத்தினால் நகரானது எமது காரைநகர். அகிலம் போற்றும்  ஈழத்து சிதம்பரதத்தினையும், மேலும் பல கோவில்களையும், இருகல்விச் சாலைகளையும் மற்றம் பல பாடசாலைகளையும், குடிமனைகளையும், நெல்வயல்களையும், தரைவைநிலங்களையும் கொண்டது எமது ஊர்.  வடக்கு மேற்குக் கடற் பகுதிகள் ஆழமான பெருங்கடலின் பகுதியாக இருக்கவும்  தெற்கு,கிழக்குப் பகுதிகள் யாழ்ப்பாண கடல் நீர் ஏரியின் பகுதிகளாகவும் ஏழு கிலோமீற்றர் நீளமும், நான்குஅரை கிலோமீற்றர் அகலத்தையும் தன்னகத்தே கொண்டது காரைநகர் என்னும் அழகிய கிராமம்.
 
          காரைநகரின் இன்றைய மக்கள் தொகை 11000க்கு மேற்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முன்னர் 30000க்கு மேற்பட்ட மக்கள் இருந்துள்ளனர். 1991ஆம் ஆண்டு இடம்பெயர்வு ஏற்படாதிருப்பின் இன்று 40000 மக்களைக் கொண்டு இருக்கலாம். 

                                  "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் 
                                      வாய்நாடி வாய்ப்பச் செயல்"
குறள்

         நாட்டில் ஏற்பட்ட இன்னலகளின்; இடப்பெயர்வு காரணமாக நாம் இன்று பூமிப்பந்தில் இலங்கையின் பிறமாவட்டங்கள், இந்தியா,கனடா,  ஐக்கியராச்சியம் (இலண்டன்), யேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் குறிபிடத்தக்களவு பரந்து வாழ்கின்றோம். அருட்செல்வம், கல்விச்செல்வம், பொருட்செல்வம், நிறைந்த எமது கிராமம் இயற்கை அழிவுகளை சந்தித்ததில்லை. 1991ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு காரணமாக வயற்காணிகளில்  உரிய பருவங்களில் நெல் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்படவில்லை. மழைநீர் தேக்கப்படாத காரணத்தால்; நன்னீருக்கான ஊற்று அற்றுப்போயுள்ளது. இதனுடைய தாக்கம் இன்னும் தீரவில்லை. முதற் கட்ட நடவடிக்கையாக நன்னீருக்கான நிரந்தர தீர்வு வழிமுறைகளைக் கண்டறிதல் வேண்டும். மனித வாழ்வின் அன்றாடத்தேவையாக இருப்பது நன்னீர். இதைச் சரிவர புரிந்து கொண்டு நாம் செயல் படுவோமானால் மீள் குடியேற்றத்திற்கான மக்கள் தொகையும், அபிவிருத்தியும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

       காரைநகரின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருப்பது புலம்பெயர் அபிவிருத்திச்சங்ககளின் பங்களிப்புக்களும் உழைப்பக்களும் ஆகும். ஊள்ளுரிலும் வெளிநாடுகளிலும் மிக்க கடின உழைப்பு நல்குபவர்களும் மூலதனம் உடையவர்களும் பலர்  இருக்கின்றனர். கடல்வளம், நிலவளம் (நெற்செய்கை), பனைவளம், சிறு-சிறுநடுத்தர கைத்தொழில்கள் இயற்கை துறைமுகத்தின் அமைவிடம், சீநோர் தொழிற்சாலை என்பன சிந்தனைக்குரியன. மேலும் எமது ஊருக்கான கைத்தொழில் முயற்சிகளுக்க  புலம் பெயர் அபிவிருத்திச் சங்கள்புலம்பெயர் தேசத்திலுள்ள எமது கிராமத்து அமைப்புக்கள் ஓரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தல் வேண்டும். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் அபிவிருத்திக்கான அத்திவாரம் ஆகும்.

           எமது கிராமத்தின் இயற்கை எழில்மிகு துறைமுகத்தின் அமைவிடத்தினால் வியாபாரத்துறையில் நாம் முன்னணி வகித்து வந்துள்ளோம். தென்இந்தியாவுடன் ஆன்மீக வியாபார, தொடர்புகள் இருந்ததாக வரலாற்றச்சான்றகள் கூறுகின்றன. "திரை கடல் ஓடியும்  திரவியம் தேடு" என்று எமது கிராமத்தவரின் வியாபாரத்துறை தென் இலங்கை முழுவதும் ஆக்கிரமித்திருந்த காலத்தில் கிராமம் பொருhதார விருத்தியடைந்திருந்தது. மேலும் எமது ஊர் விவசாயிகளும், அரச ஊழியர்களும், கிராம அபிவிருத்திக்கு முக்கியமானவர்களே. 

                      எமது கிராமத்தில் நிதிவளம் படைத்த முயற்சியாளர்கள் இருக்கின்ற பொழுதும், இவர்கள் உற்பத்தி துறைகளில் அனுபவம் பெற்றவர்களாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை நிவர்த்தி செய்வதற்கு எமது கிராமத்து உறவுகளின் உழைப்பு பல நாடுகளில் வலுப்பெற்று இருக்கின்றது.  எம் மக்கள் கிராம அபிவிருத்திக்கு  வேண்டிய தொழில்சார் நிறுவனங்களில் கூடுதலாக பணிபுரிகின்றார்கள். இவர்களுடைய தொழிநுட்பங்களைப்பெற்று எமது கிராமத்திற்கான கைத்தொழில் மையங்களை நிறுவலாம். கிராமத்தின் அபிவிருத்தி என்பது தனிமனித வருமானத்தை  அதிகரிக்கச்செய்வதாகும். 

                                            காரைநகர் மக்கள் சைவ சமயத்திற்கும் தமிழ்க்கல்விக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்து வந்துள்ளனர் என்பது சமய குரவர் பெயரிலும் பாடசாலைகள் உள்ளமையினால்  புலனாகின்றது. "கண்ணுடையர் என்பர் கற்றோர்" பொறியிலாளராக பட்டம் பெற்று ஊருக்கு சேவை செய்த ஐயம்பிள்ளை வெற்றிநாதன் அவர்களை நாம் மறப்பதற்கில்லை. மேலும் தொழில்சார் நிபுணத்துவம் பெற்றவர்களும், கலாநிதிகளும் பல உலக நாடுகளில் பணிபுரிகின்றார்கள்.  இவர்கள் தங்களின் பங்களிப்புக்களையும் ஆலோசனைகளையும் புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது கிராமத்தின் சபைகளுக்கும், மன்றங்களுக்கும் வழங்கினால் நாம் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு ஏதுவாக இருக்கும். 

           உலகம் அறிவுசார் நவீனத்தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் சமகாலத்தில் பயணிக்கிறது;. இதனுடன் எமது கிராமத்தையும் முன் நகர்த்துவது புலம்பெயர் தேசத்திலுள்ள அனைவரதும் தலையாயகடமையாகும். தொழிற் கல்வியை நாம் ஊக்கப்படுத்துவதன் மூலமே கிராம அபிவிருத்திக்கு வழிகோலும் முயற்சியில் ஈடுபடலாம். நிலவளம், கடல்வளம், பனைவளம் ஆகியவளங்களை மனித உழைப்பு என்ற கருவியினாலும் நவீன தொழில்நுட்பங்களினாலும் அபிவிருத்தி செய்யலாம். புலம் பெயர் தேசத்திலுள்ள சபைகளும், மன்றங்களும் முதல் ஐந்து வருடத்திற்கு 200 இளையோருக்கான தொழில்கல்வி பயிற்சி வழங்கி அதனுடாக கிராமத்திலுள்ள மூலப்பெருளில் இருந்து உற்பத்தி பொருட்களை தயார் செய்கின்ற கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி இளம் சமுதாயத்தினருக்கு வேலைவாய்ப்பினை வழங்கலாம். 

                 எமது கிராமத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதும், அன்பளிப்புக்கள் வழங்துவதும் அபிவிருத்தியல்ல.  மாறாக தனிமனித வருவாயை அதிகரிப்பதன் மூலமும், கிராமத்தில்லுள்ளோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்துவதன் மூலமும், ஊரில் சிரமதானப்பணிகளை நிறைவேற்றுவதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது மூலமாகவும்  நாம்  அபிவிருத்தி பாதையில் செல்லலாம். இலங்கையின் பிற மாவட்டங்களில் வாழ்கின்ற எமது கிராமத்து உறவுகளையும் இணைப்பதன் மூலமும் அபிவிருத்தி என்ற இலக்கை நாம் அடையலாம்.

                                 குஞ்சி யழகுங்  கொடுந்தானைக் கோட்டழகும்
                                  மஞ்ச ளழகும் மழலை – நெஞ்சத்து
                                  நல்லம்யா அமன்னு நடுவு நிலைமையாற்
                                  கல்வி யழகே யழகு.  
                                                                          –    நாலடியார்
                     
                                                                 நன்றி

                                                                                                      காரை நிலாவுக்காக
                                                                          சுவிற்சர்லாந்திலிருந்து காரை மைந்தன்.

 

         

 
           
      

 

“நான் அறிந்த காரைநகர் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம்03

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி லோகராசன் கஜவதனி

        நான் விரும்பும் காரைநகர் பெருமான் ஆ. தியாகராசா ஆவார் இவர் ஆடம்பரமற்ற தோற்றம், கம்பீரமான நடை, தூய்மையான நெஞ்சம், துணிவு கொண்ட எண்ணம், எடுத்ததை முடிக்கும் ஆற்றல், எளிமையான வாழ்வு என்பவற்றை அணிகலனாகக் கொண்டு மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டெனப் பணியாற்றிய பெருந்தகை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமையாற்றிய திரு.ச. ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியருக்கு கனிஷ்ட புத்திரனாக 1916ம் ஆண்டு ஏப்ரல் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட்டு வயதில். இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் பேரன், பேத்தியுடன் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இந்தியாவில் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில்  கல்வி கற்பதற்கு அவரது தந்தையார் அனுப்பிய போது வயது குறைவு காரணமாக சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றார்.

1932இல் சீனியர் பரீட்சையிலும் 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும்,1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம் .ஏ பரீட்சையிலும் சித்தி பெற்றார் 1938ம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றதன் பின்னர் 1940ம் ஆண்டு வரை  சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார் 1941 இல் எம்.லிற் பட்டத்தை பெற்று இலங்கை திரும்பிய  தியாகராசா காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமை ஏற்றார். இவர் கல்வி பயிலும் காலத்தில் வறாக்கி அணி வீரர், சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

திரு. தியாகராசா இந்தியாவில் கல்வி பயின்ற காலமானது தன்னலம் துறந்து பூசல்களை விடுத்து மக்களும் தேசகக்தர்களும் தேச விடுதலைக்காக காந்திஜி தலைமையில் அணி பெற்ற அனுபவங்களுடன் காரைநகர் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942 இல்  ஆடம்பரம், நவநாகரிகம் துளியும் கிடையாத திரு.சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணைவியாகக் கொண்டார். தியாகராசாவின் கருத்தறிந்து நடந்து  கணவரின் வெற்றிக்குப் பக்க பலமாக இருந்தார் மகேஸ்வரி

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.ஏ. கனகசபை பீ.ஏ. அவர்கள் 1945 இல் ஓய்வு பெற திரு.ஆ.தியாகராசா 16.04.1946 இல் அதிபரானார். இவர் பதவி ஏற்ற ஆரம்ப காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

    காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்ககள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5ம் வகுப்புடன் கல்வியை  இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் கரைநகர் இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார் 1915இல் பழைய டிஸ்னெ;சரிக்கு எதிரே ஆரம்பிக்கப்பட்டு ஆங்கில மொழி மூலம் 7ம் ஆண்டு வரை கல்வி வழங்கிய அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையின் (சாமி பள்ளிக் கூடம்)
மாணவர் தொகை குறைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் காரைநகர் மேற்குபகுதியில் வசித்த மாணவர்களும் காரைநகர் இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினர். கல்லூரிக்கு மிக அதிகமான  மாணவர் அனுமதி கோரியமை தியாகராசாவுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

இச் சாவாலை பல முயற்சி செய்து இலகுவாக முறியடித்தர். அதாவது மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கு மேசையோ, இடவசதியோ, இருக்கவில்லை, கற்பிற்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. ஏந்த வித பாகுபாடும் இன்றி மாணவர்களின் நன்மை கருதி மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்.

    இவர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதற்கு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தை கட்டினார் காரை பெற்றோர்களின் உதவியுடன் மேசை வாங்குகளை இந்துக்கல்லூரி  சபையினரின் அனுசரனையுடன் நல்ல அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆவன செய்தார்.

காரைநகர் சாமி பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலனுக்காக ஆங்கிலப்பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள் கல்விஆர்வலர்கள் வர்த்தக பிரமுகர்கள்  ஆகியோர் தீர்மானித்ததன். சார்பாக இப்பாடசாலையின் ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகாராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது. ஆதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு பாடசாலையை மீண்டும் ஆரம்பித்தரார். 

திரு.தியாகாராசாவை யாழ்ற்ரன் கல்லூரி அதிபராக பதவியேற்குமாறு பலர் வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரி முன்னிலை எய்த வேண்டும்; என்பதற்காக அக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதி உயர் திரு ந. நடராஜா சி. ஆவர்களின் திடீர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கமா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபா செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டது மண்டபம் அமைக்கும் பணியில் தியாகராசா செயற்பட்டார். அத்துடன் தியாகராசா பாடசாலைக்கு பின்புறமாக இருந்தார் காணியையும் திருமதி தங்கம்மா நடராசா அவர்களுடம் தர்ம ஆதனமாகப் பெற்று மைதானத்தை அமைத்தார். 

இரசாயனம், பௌதிகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனியான கூடாரங்களை அமைத்தார். இவை உயர் தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வு கூடங்களாக விளங்கினார் .

1955ல் மனையியல் ஆய்வுகூடம் ஆய்வு கூடம் திருமதி என்.ரி.சம்மந்தன் அவர்களும் 1956ல் புதிய நூலகம் புவியல் அறை என்பன மனேஜர் திரு.ரி. முத்துச்சாமிப்பிள்ளை அவர்களும.; இருவருடைய காலத்தில் திறந்த வைக்கப்பட்டன.

தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரில் 1950ஆகஸ்ட் 19 திகதி முதல் 21 திகதி வரை மூன்று நாட்கள் கல்லூரியல் வைர விழாவும். 1963 பவள விழாவும் 1968 இல் முத்து விழாவும் கொண்டாடினார்.

1919இல்  ஸ்தாபிக்கப்பட்ட காரையூனியன் மலாய சங்கத்தின் உறுப்பினர்கள் காரைநகருக்கு வருகை தரும் போது பாடசாலைகளுக்கு உதவிகள் வழங்கினார். தியாகராசா மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து 'சமயம்பு ஞாபகர்த்த கட்டிடத்தை அமைத்து கீழ் மாடியில் வகுப்பறையும், மேல் மாடியில் நூலகத்தையும் கட்டினார்.

        இவருடைய சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆராம்பிக்கப்பட்டு பல்கழைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆன்யை கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சிறப்புத்தார் அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்றாகும்.

    கல்வித் திணைக்களத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டபோதும் அவற்றினை நிராகரித்து தான் வளர்த்த நேசித்த கல்லூரியின் தரத்தை சிறப்பு தரத்திற்கு உயர்த்தி தனக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்ந்த கல்லூரிகளின் வரிசையில் காரைநகர் இந்துக் கல்லூரியையும் உயர்த்திய  பெருமைக்குரியவர் இவர் ஆவார்.

திரு. தியாகராசா சிறப்புத்தார் பதவியில் உயர்நிலை சம்பளங்கள், ஓய்வூதியம் என்பனவற்றுக்கு காத்திராது 02.04.1970ல் ஓய்வு பெற்ற மாணாக்கர் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக பணியாற்றி பெற்ற அனுபவங்களை வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியின் அக்கறை செலுத்தினார். இலங்கை பல்கலைகழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தார். இப் பல்கலைக்கழகம் 1974ல் பரமேஸ்வரா கல்லூhயில் ஆரம்பிக்கப்பட்டது. இது மட்டுமல்ல இவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து யாழ்ப்பாண கல்லூhயில் விஞ்ஞான பாட படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தில் இன்னொரு பிரிவை ஆரம்பித்தார்.

    1979 ஆண்டு இந்திய சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு இலங்கையும் தென்னாசியாவில் பொருளாதார ஒத்துழைப்பு என்ற நூலை எழுதினார். இந் நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கலக பொருளியல் துறை தலைவர் கலாநிதி தியாகராசா இந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் வகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்புக்கான தென்னாசிய சம்மேளனம் உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவரின் புலைமைமிற்க அனுகூல முறையும் அரசியல் அனுகூல முறையுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந் நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும், அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

1981ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபை தேர்தலில் போட்டியிட்டார் இதன் காரணமாக 24.05.1981ல் பின்னிரவில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட வேளையில் மரணத்திரைக்குள் மறைந்தார். அன்னாரின் பூதவுடல் காரைகநரைச் சுற்றி எடுத்துவரப்பட்டு வலந்தரை சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை மூடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானது.

வேணன் அணைக்கட்டுக்கு நீர் ஏந்தும் பிரதேசம் கடல் கடல் மண்ணும் களி மடண்ணும் சேர்ந்த மணல்தன்மையுடைய பிரதேசம் என்பதால் புற்கள் முளைப்பதுக்கு ஏது நிலை எதுவும் இல்லை அப்பகுதியும் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தானம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமை காரைநகர் , பொன்னாலை, தாம்போதிய வழியே செல்லும் மக்கள் பார்க்க கூடியதாக இருக்கின்றது இது பூமாதேவிதான் உத்தமபுத்திரனை நினைவில் தாங்கி வைத்திருக்கிறதற்கான சான்றாகும்.

     "ஊழிய பெரியனுந் தாம் பெயரார்"   

      என்ற முதுமொழிக்கு இலக்காணவர்

         "சொல்லுதல் யாருக்கும் எளிய" அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற வள்ளுவர் வாக்கிற்குச் சவால் விடுத்து சொல் வல்லவனும்,  சோர்வு இல்லாதவனும் சொன்னதை செய்ய வல்லவனும் யான் என்பதை வாழ்ந்து காட்டினார்.

நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்தரும் பணியை செய்தவர்டகளை என்றுமே மறக்கக் கூடாது என்பதற்காக இப்போதும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் எனும் காரைநகர் இந்து கல்லூரியில் "வரலாற்று அதிபர்" எனும் பெயருடன் வாழ்ந்து வருகிறார். இத்தகைய பெருமையுடைய தியாகராசாவின் வாழ்க்கை பாதையை பின்பற்றி நாமும் வாழ்வில் முன்னேறுவோம்.

                          கலாநிதி ஆ.தியாகராசா M.A.M. Lit. (வெள்ளி விழா அதிபர்)
                                                          (1946-1970)

Thejakaraja PHOTO

kadduraipoddi  06 20140001

 

 

“நானறிந்த காரைநகர் பெரியோர் கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம் 02

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி டிலானி கார்த்திகேசு


இலங்கை திரு நாட்டிலே வட மாகாணத்திலே யாழ்ப்பாணத்திலே எண்திசை புகழும் அருளின் நிறைந்த காரைநகரிலே வலந்தலை சுட்டில் அறிவுக் கண்ணை திறக்கும் அறிவுக் கூடமாக யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் உள்ளது. இன்று அப் பாடசாலையானது தனது காரைநகர் இந்துக்கல்லூரி என்னும் பெயரை யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என மாற்றியமைக்கு காரணம் திரு.ஆ.தியாகராசா அவர்களினால் ஆற்றப்பட்ட தன்னலம் அற்ற சேவையே ஆகும். தற்போதும் இவரது மகள் திருஆ..தியாகராசா அவர்களின் நினைவாக காரைநகரில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி பணம் வழங்குவது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ்வாறான புகழும் பெருமையும் கொண்ட திருஆ..தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமை ஆற்றிய திரு.ச.ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியாரின் செல்வப்புத்திரனாக 1916ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதற்கினங்க ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட'டு வயது வரை மலேசியாவிலேயே கற்றார். பின்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது பேரன் பேத்தியுடன் இருந்து இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே இந்தியாவில் உள்ள கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஸ்பாரதி பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வயது குறைவாக காணப்பட்டமையால் சென்னை அடையாறு கலாசேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி கற்றார். தனது பதினாறாவது  வயதில் அதாவது 1932இல் சீனியர் பரீட்சையிலும் பதினெட்டாவது  வயதில் அதாவது 1934இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும் இருபதாவது  வயதில் அதாவது 1936 இல் பீ.எ பரீட்சையிலும் 22ஆவது வயதில் அதாவது 1938இல் எம்.ஏ பட்டமும் பெற்றதன் பின்னர் 1940வரை சிங்கப்புர் மருத்துவக்கல்லூரியில் கல்வி பயின்றார் 1941இல் அதாவது 25ஆவது வயதில் எம்.லிற் பட்டத்தை பெற்றார். பின்னர் இலங்கை திரும்பிய தியாகராசா அவர்கள் காரைநகரில் உள்ள இந்துக்கல்லூரி அதாவது தற்போது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்படும் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் இக் கல்லூரி கடமையாற்றிய காலம் "பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது. இவர் கல்வி பயிலும் காலத்தில் ஹாக்கி அணிவீரர் மற்றும் சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தியாகராசா அவர்கள் இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் இந்திய தேசத்திற்கான விடுதலைக்கான அண்ணல் காந்திஜி தலைமையில் அணிவகுத்து போராடியவர். இவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தன்னலம் துறந்து புசல்களை விடுத்து மக்களும் தேசபக்தர்களும் தேசவிடுதலைக்காக போராடி பெற்ற அனுபவங்களைக் கொண்டு தன் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942ம் ஆண்டு தனது 26ஆவது வயதில் ஆடம்பரமும் நவநாகரீகமும் துளியும் கிடையாத திரு.சிவகுநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணையாக கொண்டவர். தியாகராசா அவர்களின் வெற்றிக்கு மிக பக்கபலமாக காணப்பட்டதுடன் தியாகராசா அவர்களின் கருத்தறிந்து நடந்து கொண்டார்.

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.கனகசபை அவர்கள் 1945இல் ஓய்வு பெற திருஆ.தியாகராசா அவர்கள் 16.04.1946 இல் அதிபராக கடமையேற்ற காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகரில் சிரேஷட பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி மட்டுமே திகழ்ந்தது. இதனால் ஏனைய பாடசாலையில் தரம் 5ம் வகுப்புடன் இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் காரைநகர் இந்துகல்லூரியில் அனுமதி கோரினர். 1915இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையில் மாணவர்தொகை வெகுவாகக் குறைவடைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. மற்றும் காரைநகரில் உள்ள மேற்கு பிரதேச மாணவர்களும் இந்துக்கல்லூரிக்கு அனுமதிகோரி வந்திருந்தனர். இக் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அணுமதி கோரியமை பெரும் சவாலாக காணப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்பிற்பதற்கு ஆசிரியர்களோ வாங்கு மேசைகளோ இடவசதியோ இல்லை இதனால் உடனடியாக ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டினார். மாணவர்களுக்கு தேவையான வாங்குமேசைகளை பெற்றோர்களிடமும் அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை இந்துக்கல்லூரி சபையின் அனுசரனையுடன் பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்கினார்.

அமெரிக்கன் மிஷன் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக காரைநகரில் மேற்குபகுதியில் உள்ள மாணவர்கள் அணைவரும் இந்துக் கல்லூரிக்கு வந்து கல்வி கற்பதனால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைசேர்ந்த பெற்றோர்களும் கல்விமான்களும் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகராசாவின் வீட்டிலே நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப் பாடசாலைக்கு அதிபராக கடைமையாற்றுவதற்கு திரு க.கனகசபை அவர்களும் ஆசிரியர்களாக கடைமையாற்ற திருவாளர் கு.பொன்னம்பலம்  மு.சீவரத்தினம் ஆகிய மூவரையும் காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு கடைமையாற்ற விடுவிக்கப்பட்டார். திரு தியாகராசா அவர்களை யாழ்ற்ரன் கல்லூரிக்கு அதிபராக கடைமை ஏற்குமாறு காரைநகர் மேற்கை சேர்ந்த பல வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக் கல்லூரி முன்நிலை எய்ய வேண்டும் என்பதற்காக அக் கோரிக்கையை நிராகரித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா K.C அவர்களின் திடிர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபத்தையாயிரம் செலவில் நடராசா ஞாபகார்த்த மண்டபம் அமைத்தார். இம் மண்டபம் அமைக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்.  "கோபுரம் இல்லாத கோயில் தான் பாடசாலை" அதற்கினங்க மண்டபத்திற்கு தேவையான ஓடுகள் இல்லாதவிடத்து "தனது வீட்டு ஓட்டினை எடுத்துவந்து கட்டினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்." இம் மண்டபத்தை கட்டுவிக்க திரு.ஆதியாகராசா அவர்களுடன் இனைந்து மிகவும் உழைத்த ஒருவர்தான் திரு.வீ.தம்பிப்பிள்ளை ஆவார். இவர்களால் கட்டப்பட்ட நடராஜா ஞாபகார்த்த மண்டபமானது யாழ்ப்பாணத்திலேயே மிகவும் பெரிய அகலமான மண்டபம் என கூறுகின்றனர். 19.08.1950இல் கௌரவ நீதிஅமைச்சர் DR.L.A.ராஜபக்ஸ அவர்களால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள காணியை தர்மஆதாரமாக பெற்று பாடசாலைக்கு மைதானம் அமைத்தார்.

உயர்தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வுகூடங்களாக இரசாயனம் பௌதீகம் விலங்கியல் உயிரியல் மற்றும் மனையியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்களை அமைத்ததோடு புவியியல் நூலகம் என்பவற்றுக்கு அறைகளைக்கட்டுவித்தார்.

பாடசாலை வரலாற்றுச்சான்றாக அமையும் காரைநகர் இந்துக்கல்லூரி எனும் சஞ்சிகை 1948இல் வெளியிடப்பட்டது. மற்றும் 1953, 1957, 1959ம் ஆண்டுகளில் "சயம்பு" எனும் கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது. எமது பாடசாலையின் வரலாற்றுச்சுவடுகளாக இச் சஞ்சிகை காணப்படுகின்றன. மற்றும் வைரவிழா பவளவிழா முத்துவிழா என விழாக்களும் இவரது காலங்களில் கொண்டாடப்பட்டவையாகும்.

திரு.தியாகராசா அவர்கள் மலேசியா சென்று பழையமாணவர்களிடம் நிதி சேர்த்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்து கீழ்மாடியில் வகுப்பறையையும் மேல்மாடியில் நூலகத்தையும் அமைத்தார். இம்மண்டப அமைப்பு பணியில் ஆ.தியாகராசாவுடன் திரு.த.அருளையா அவர்களும் ஈடுபட்டார்.

திரு.தியாகராசாவின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் சிறப்புத்தர அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இந்துக் கல்லூரியும் ஒன்றாகும். கல்விதிணைக்களத்தால் உயர்பதவி வழங்கப்பட்ட போதிலும் தான் வளர்த்த நேசித்த பாடசாலையை சிறப்புத்தரத்திற்கு(1AB) உயத்தினார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்த்த பாடசாலைகள் வரிசையில் இந்துக்கல்லூரியை உயர்த்திய பெருமைக்குரியவர்.

திரு.தியாகராசா அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை அரவணைத்து சென்றமை கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. கல்வி போதனையிலும் பண்புடனும் பணிவுடனும் செயற்பட ஒழுக்கம்மிக்க மாணவர்களை உருவாக்குவதிலும் அல்லும்பகலும் அமரர் தியாகராசாவின் உள்ளம் ஈடுபட்டிருந்தது. கல்வி திணைக்களகத்தில் காத்திரமான பணிகளைப்பெறுவதற்கு அதற்கு பொருத்தமான பெற்றோர்களை அனுப்பி கருமம் ஆற்றினார். கல்லூரி உள்ளக நிர்வாகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தலையிட எத்தனித்த சமயத்தில் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிநின்றார்.

சமூகம் எதிர்பார்த்த கல்வியை வழங்கியமையால் நகர்புற பாடசாலையை நோக்கி மாணவர்கள் செல்வது அரிதாக காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் சுமுகமாக காணப்பட்டமையால் பிரத்தியோக வகுப்புக்கள் செல்லவேண்டிய தேவையிருக்கவில்லை. திரு.தியாகராசா அவர்கள் சிறப்புதர பதவியில் உயர்நிலை சம்பளம் ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970இல் மாணாக்கர்களின் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக கடைமையாற்றி பெற்ற அனுபவங்களைக் கொண்டு வட்டுகோட்டைதொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக கடைமையாற்றிய காலத்தில் வட்டுகோட்டைதொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவனம் செய்தார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் செலவழிக்காத வருடத்தின் இறுதி மாத ஆரம்பத்தில் பெற்று வருடம் முடிவடைவதற்கு முன்னர் பல நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்க விடையமாகும். இவற்றை உரிய காலங்களில் நிறைவேற்றியமையால் அதிபர் திரு.K.K.நடராஜா யாழ்மாவட்ட 1AB பாடசாலை அதிபர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.W.D.C.மகதந்தில்ல அவர்களால் பாரட்டப்பட்டார். இதுவே இவர் இந்துக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது பணியை தொடர்ந்து செய்தார் என்பதற்கு சான்றாக அமைகிறது. க.பொ.த(உ.த) வகுப்புக்களில் 150இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். வட்டுகோட்டை மூளாய் சுழிபுரம் மாவடி ஊர்காவற்றுறை போன்ற அயற்கிராம மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து கல்வி கற்றமை என்பது சிறப்பான விடையமாகும். அமரர் திரு.தியாகராசா அவர்கள் கல்வி மேல் கொண்ட பற்று உறுதிக்கு அதிபர் திரு. K.K.நடராஜா செயல் வடிவம் கொடுத்தார்.

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கéர்வமான கருத்துக்களை முன்வைத்தார். கல்வி அமைச்சுடன் தொடர்பினை ஏற்படுத்தி கல்வியாளர் என்ற தகமையில் சிறப்புடன் பேணிவந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

1979ம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாhதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென்ஆசியா சம்மேளனம் உதயமாவதந்கு முன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நூலின் கருத்திற் கொள்ளப்பட்ட வைசார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதிஆ.தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெருகின்றது. திருஆ..தியாகராசா அவர்கள் மிக்க கவனத்தையும் ஆக்க பூர்வமான பரிசீலனைகளையும் விடயங்களின் எல்லா அம்சங்களிலும் செலுத்தினார். கலாநிதிஆ.தியாகராசாவின் புலமைமிக்க அனுகுமுறையும்  அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடுமிக்க இந்நூல் "பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆடம்பரமற்ற தோற்றமும் கம்பீரமான நடையும் தூய்மையான நெஞ்சும் துணிவுகொண்ட எண்ணம் எடுத்ததை முடிக்கும்ஆற்றல் என்பவற்றை அணிகலனாக் கொண்டு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என பணியாற்றிய  திரு.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ்.மாவட்ட சபை தேர்லில் போட்டியிட்டதால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அன்னாரின் பூதவுடல் வலந்தலைச்சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை முடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானார். அப் பகுதியில் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடதக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமையை காரைநகர் பொன்னாலை தாம்போதிய வழியேசெல்லும் மக்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது. இது பூமாதேவி தன் உத்தம புத்திரனை நினைவில் வைத்திருக்கினறமைக்கு சான்றாகும்.

                               "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
                                       சொல்லியவண்ணம் செயல்"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு சவால் விடுத்து சொல்லவல்லவனும் சொன்னதைச் செய்பவனும் யான் என்பதை பறைசாத்தியவர் ஆவார். அமரர் தியாகராசா அவர்களை "வரலாற்று அதிபர்" எனவும் அழைக்கப்பட்டார். இன்றும் அவரது சேவையை நினைவுகூறும் முகமாகவும் பாராட்டும் முகமாகவும் நன்றிகூறும் முகமாகவும் அவரது கல்லூரிக்கு அவரது பெயரை அழைக்கின்றனர். அமரர் திரு.தியாகராசா அவர்கள் இறையடி சேர்ந்தாலும் அவர் எமது ஊருக்காக ஆற்றிய சேவை மறக்கமுடியாதவொன்றாகும்.

                                                                            * * *

                                                       ஆக்கம்: டிலானி கார்த்திகேசு
                                                           தரம்: 12 A/L 2016 COM
                   பாடசாலை: யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

kadduraipoddi  07  20140001

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வன் வினோதன் கனகலிங்கம்.

                              நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

                         கலாநிதி ஆ.தியாகராசா ஆவார்.

"இந்து சமுத்திரத்தின் முத்து" எனவும்,"தெட்சணகைலாயம்" எனவும், திருமந்திரத்தை அருளிய திருமூலரால் "சிவபூமி" எனவும் போற்றப்படுகின்ற இலங்கை திருநாட்டின் வடமாகாணத்தின் சிகரமாய் செந்தமிழ் பேணி சிவநெறி காக்கும் பண்பாட்டின் உறைவிடமாய் அமையப்பெற்ற குடாநாடே யாழ்ப்பாணம். அதன் வடமேற்குத் திசையிலே பதின்நான்கு மைல் தொலைவில் எண்திசை புகழும் அருளும் நிறைந்த சௌந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் குடிகொண்ட ஈழத்துச்சிதம்பரம் என்னும் திவ்வியசேத்திரம் இனிதே அமைந்து சுந்தர ஈசனின் திருவருட்கடாட்சம் இனிதே பொழிய நல்லருள் அதனால் நலம் பல பெற்று வளம் பல கொழிக்கும் திருநிறை கொண்ட கவின் பெறும் ஊர் காரைநகர் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நானறிந்தபெரியார்களுள் ஒருவர் கலாநிதி .ஆ.தியாகராசா ஆவார்.

இவர் பிரிட்டிஷ் மலாயாவில் புகையிரதப்பாதை இடப்பட்ட பொழுது அதன் சமிக்ஞைப் பொறியமைப்பை நிர்மாணித்த திரு. ஆறுமுகம் என்பவருக்கும் அமிர்தவல்லிக்கும் கனிஷ்ட புத்திரனாக 1916 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆந் திகதி முக்காலமும் நன்கு உணர்ந்த ஞானியான திருவள்ளுவரின்

                     "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                              தோன்றலின் தோன்றாமை நன்று."  
 

என்ற ஈரடி வாக்குக்கு இணங்க புகழோடு மலேசியாவில் பிறந்தவரே பெரியார் கலாநிதி ஆ. தியாகராசா ஆவார். 

இப் பெரியார் கம்பீரமான ஆடம்பரமற்ற தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் துணிவு கொண்ட எண்ணத்தையும் தூய்மையான நெஞ்சத்தையும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலையும் எளிமையான வாழ்வையும் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்தார். இவர்,

                                "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
                                       உயிரினும் ஓம்பப்படும்."

என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க ஒழுக்கத்தை தனது உயிரினும் மேலாக நேசித்தார். அத்தோடு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற அதி உன்னத சிந்தனையுடன் மக்களுக்குப் பணியாற்றிய பெருந்தகை ஆவார்.

    இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலே ஆரம்பித்து தனது எட்டு வயதிலே இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் தனது பேரன் பேர்த்தியுடன் இருந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். இவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவரது தந்தையார் இந்தியாவிலுள்ள விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு அனுப்பிய போது இவருக்கு வயதுக் குறைவு காரணமாக இவர் சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வியை பயின்றார்.

    இவர் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற ஒளவைப்பிராட்டியாரால் அருளப்பட்ட கொன்றைவேந்தனில் குறிப்பிடப்பட்டுள்ள "கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" அதாவது அழிவில்லாத நிலையான பொருள் கல்வி என்பதனை நன்கு உணர்ந்து 1932 இல் சீனியர் பரீட்சையிலும், 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும், 1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம். ஏ. பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவர் 1938 இல் எம்.ஏ பட்டம் பெற்ற பின் 1940 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1941 இல் எம். லிற் பட்டத்தைப் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய இவர் காரை வாழ் மாணவர்களின் கல்விப்புலத்தைமேம்படுத்தும் நோக்கோடு பெரியார் சயம்புவால் 1888 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காரைநகரின் கலங்கரை விளக்காய் விளங்கும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார்.

    இப்பெரியார் 1942 இல் "மனைத்தக்க மாண்புடையாள்" அதாவது மனையறத்திற்கு தகுந்த நற்குண நற்செயல்களை உடையவளான திரு. சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டார். இப் பெரியாரின் வெற்றிக்கு பக்கபலமாக இவரது துணைவியார் இருந்தார்.

    பின் 1946 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி முத்து சயம்பு,ஈ.கே.சிவசுப்பிரமணியஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ணஐயர், திரு பொ.வேலுப்பிள்ளை, திரு ந. கந்தையா, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு அ.சரவணமுத்து, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு ஏ.கனகசபை ஆகிய இந்துக்கல்லூரியின் அதிபர்களின் வரிசையிலே திரு ஏ.கனகசபை ஓய்வுபெற 11 வது அதிபராக பெரியார் ஆ.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்றார்.

    இக்காலத்தில் இலவசக்கல்வியின் தந்தையான சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரால் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்கள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5 ஆம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள்; அனைவரும் காரை இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார். மாணவர்கள் அனைவரும் நன்கு கற்க வேண்டும் என்ற அவாவுடன் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். 1915 இல் சாமி பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு 7 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர் எண்ணிக்கை நன்கு குறைய 1945 இல் இப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது இதனால் காரைநகர் மேற்குப் பகுதியில் வசித்த மாணவர்களும் இக் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தமை பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கோ, மேசையோ, இடவசதியோ இருக்கவில்லை. அத்தோடு கற்பிப்பதற்கும் ஆசிரியர் இருக்கவில்லை. மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவித்தார். பெற்றோரின் உதவியுடன் வாங்குமேசைகளையும் இந்துக்கல்லூரி சபையின் அனுசரணையுடனும் கடமை உணர்வு நிறைந்த ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆதரவு வழங்கினார்.

    கோபுரம் இல்லாத கோயிலாக பல வித்தைகளைக் கற்பிக்கின்ற பூணூல் அணியாத பல பூசகர்கள் அதி உன்னத அபிஷேக ஆராதனையை அன்றும் இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கு "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற சிறப்பிற்குரிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர் மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை சிவத்தொண்டிற்காக செலவளித்தார். ஆனால் எங்கள் பெரியார் தியாகராசா அவர்கள் தனது வீட்டிலே வேயப்பட்டிருந்த ஓட்டைக் கழற்றி வந்து இந்தக் கோபுரம் இல்லாத கோவிலின் ஓட்டைகளை எல்லாம் வேய்ந்தார்.

    சாமி பள்ளிக்கூடம் (அமெரிக்கன் மிஷன் பாடசாலை) மூடப்பட்டதன் காரணமாக காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சைவ பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு தியாகராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலையைத் தாமதமின்றி ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

    பின்னர் பெரியார் ஆ.தியாகராசா அவர்களை யாழ்ற்றன் கல்லூரி அதிபராக பதவி ஏற்குமாறு பலர் வற்புறுத்தியும் 

                              "எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
                                    திண்ணியர் ஆகப் பெறின்"

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற அதி உன்னத நோக்கோடு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவரது காலத்திலே உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபாய் செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டு 19ஆம் திகதி ஆவணி மாதம் 1950 ஆண்டில் கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து இப் பெரியார் திருமதி தங்கம்மா நடராஜா என்பவரிடமிருந்து பாடசாலைக்கு பின்புறம் இருந்த காணியை தர்ம ஆதீனமாகப் பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்தார். இரசாயனம், பௌதீகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்கள் அமைத்தார் மற்றும் இவரது காலத்தில் மனையியல் ஆய்வுகூடம், புதிய நூலகம், புவியியல் அறை என்பன உருவாக்கப்பட்டன. பின்னர் 1942 இல் "காரைநகர் இந்துக் கல்லூரி"என்ற பெயரிலே சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953, 1956, 1959 ம்ஆண்டுகளில் "சயம்பு" என்ற கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது மற்றும் கல்லூரியின் வைரவிழா, பவளவிழா, முத்துவிழா என்பன இவரது காலத்திலே கொண்டாடப்பட்டன. இப் பெரியார் மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்தார். பின் இதன் மேற்குப்புறத்தில் "சியவச" நூல் நிலையத்தை அமைக்க அரசினால் வழங்கிய நிதியை விட மேலதிக நிதி தேவைப்பட்ட பொழுது நன்கொடையாளரிடம் பெற்று நூல்நிலையத்தையும் அதனோடு சேர்ந்த வகுப்பறைத் தொகுதியையும் அமைத்தார். இவர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து கல்லூரியின் தரத்தை சிறப்புத் தரத்துக்கு (1AB) உயர்த்தினார்.

    இவர் கல்விப் போதனையில் பண்புடனும் பணிவுடனும் செயற்பட்டு தன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை மதித்து ஒழுக்கம் மிக்க மாணவரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார். இவர் இருபத்தைந்து ஆண்டுகள் காரை இந்துவின் வெள்ளி விழா கண்ட அதிபராக இருந்து திறமை மிக்க உதாரண புருஷராக நிருவாகத்தை நடாத்தி மாணவர் சமுதாயம் சீரிய எதிர்காலத்தை எதிர்கொள்ள கலங்கரை விளக்கானார். இவர் சிறப்புத்தர பதவியில் உயர்நிலை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970 இல் ஓய்வு பெற்று மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார். 

இவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரை மண் புதுப் பொலிவு பெற்று விளங்கியது எனலாம். மின்சாரம், குழாய்நீர்த்திட்டம், நன்னீர்மயமாக்கல், வேணன் அணைக்கட்டு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் விசேடமாக கல்வி ஆளணி நியமனங்களின் போது கிடைக்க வேண்டிய இடங்களை தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவன செய்தார். பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார். இப் பல்கலைக்கழகம் 1974 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணகல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தின் இன்னொரு பிரிவை ஆரம்பித்தது.

    இப்பெரியார் 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் "கலாநிதி தியாகராசாஇந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் பகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென் ஆசியா சம்மேளனம் (SAARC)உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நூலில் கருத்திற் கொள்ளப்பட்டவை சார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதி தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் மிகக் கவனத்தையும் ஆக்கபூர்வமான பரிசீலனைகளையும் விடயத்தின் எல்லா அம்சங்களிலும் செலுத்தியுள்ளார். கலாநிதி தியாகராசாவின் புலமை மிக்க அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந்நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவரது திறமை வெளிப்படுகிறது.

    இவ்வுலகமானது நேற்று உண்டு, உடுத்தி, களித்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் இன்றில்லை என்னும் பெருமையுடையது. இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இதனை,

                       "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
                                  பெருமையுடைத்து இவ்வுலகு"

என்று பொய்யாமொழிப் புலவர் வாக்கு கூறுகிறது. விதியை யார் தான் வெல்ல முடியும். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயம் என்பது உலக நியதியாகும். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்" என்று ஈழத்துச் சித்தரில் ஒருவரான யோகர் சுவாமிகள் கூறுகின்றார். இவ்வாறான உலக வாழ்க்கையிலே காரை மண்ணிற்கு சேவை ஆற்றிக் கொண்டிருந்த போது 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது எம் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசாவின் உயிர் பறிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையால்,

                       "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
                           தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க மறைந்தும் காரை வாழ் மக்களின் மனங்களிலே மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

                                                               நன்றி.

    

kadduraipoddi  08  20140001

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று காரைத்தென்றல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி டினோஜா நவரட்ணராஜா.

 SWISS LOGO

          காரைநகர் மக்கள் பெரிதும் சிறந்து விளங்குவது

                            அருளால் பொருளால் அறிவால்

 

          காரைநகர் மக்கள் பெரிதும் சிறந்து விளங்குவது அறிவால்

எமது ஊரான காரைநகர் நலம் நிறைந்து நாலா புறமும் கடலால் சூழ்ந்துள்ள இயற்கையின் எழில் கொஞ்சும் நிலவளமும் நீர் வளமும் நிறைந்த தமிழர் தம் கலையையும் கலாசாரத்தையும் இன்றும் பேணிக்காத்து வரும் தனித்தன்மை இழக்காத மண்மணம் காக்கும் புனித பூமியாகும்.

இத்தகைய வளம்மிக்க எமது காரைநகர்ப் பிரதேசமானது அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகின்றது. இவ் நன்நிலையானது பண்டைய காலம் தொட்டு இன்று வரையிலும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அறிவாலும் அருளாலும் பொருளாலும் சிறந்து விளங்கும் எம் காரைநகர் மக்கள் அன்று தொட்டு இன்றுவரை பெரிதும் சிறந்து விளங்குவது அறிவினாலேயே ஆகும். 

                       "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு"

என்ற சான்றோர் வாக்கிற்கு இணங்க கல்வி கரையற்றது ஆகும். இத்தகைய கல்வி சமூகத்தின் அனைத்து வினைத்திறனையும் உயர்நிலைக்குச் செலுத்துவதாகும். இன்றைய காலகட்டத்தில் தெளிவான திருத்தமான ஆரோக்கியமான சிந்தனைகளையே இவ் உலகம் வரவேற்கின்றது. இத்தகைய மதிப்பு மிக சவால்களை புத்தி சாதுரியத்துடன் எதிர்கொள்ள கூடிய வகையில் ஒவ்வொரு பிரஜைகளும் இருத்தல் வேண்டும். அந்த வகையிலே  காரைநகரில் எம்மவர்கள் அனைவரும் சமூகத்தவரால் அடையாளங் காணப்பட்ட அறிஞர்களாக பெரியோர்களாக உள்ளனர்.

கல்வியில் சிறந்த காரைநகரில் அறிஞர்களும், புலவர்களும் நிறைந்து காணப்பட்ட காரணத்தால் கல்வி கற்ற பண்பாடுமிக்க சமுதாயம் உருவாகியது என்று சொன்னால் மிகையாகாது. இத்தகைய புண்ணிய பூமிதனில் மக்கள் சிறந்து விளங்குகின்றார்கள் என்றால் அதற்கு அருளையும் பொருளையும் விட அறிவே பிரதானம் ஆகும்;. இத்தகைய அறிவு  இன்று வரை இச் சிறு தீவு வரலாற்றில் இடம்பெறுகின்றது என்றால் அது மிகையாகாது. அறிவு சார் விடயங்களை நோக்குவோம்.

முதலில் அறிவு என்றால் என்ன என்பதனை நோக்கினால், அறிவு என்பது ஒரு மனிதனின் கல்வியறிவு, அறப்பண்பு என்பனவே அறிவாகும். மனிதனின் வினைத்திறன், அவனது அறிவு, ஆன்மீகம், ஒழுக்கம் ஆகியவற்றின் விருத்தியே சமூகத்தின் வெற்றியை ஈட்டும் அடிப்படை அம்சமாகும். உலகம் போற்றும் உண்மைத் திருக்குறளில்,

"பின்னால் நடப்பதை முன்கூட்டியே தன் 
        மதிநுட்பத்தால் அறிந்து கொள்வது அறிவு"
 என்றும்,

"பிறர் கூறும் கருத்துக்களின் நன் 
        நுட்பத்தை காண்பது அறிவு" என்றும்,

"ஒருவன் தான் சொல்லுகின்ற கருத்தை பிறர் எளிதில் புரிந்து    கொள்ளுமாறு விளக்கமாகச் சொல்வது அறிவு" என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் உண்மைப்பொருளை நோக்குகையில், அறிவு என்பது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த செயற்பாடாகும். இவ்வகையில் காரைநகர் மக்கள் சிறந்து விளங்குவது பெரிதும் அறிவினாலேயே ஆகும்.

திரு.து.கார்த்திகேசுப்புலவர், பண்டிதர் சிவஸ்ரீ.பஞ்சாட்சரக்குருக்கள், திரு.ந.நாகமுத்துப் புலவர் போன்ற பெரும் புலவர்களாலும், மேலும் தமிழும் இந்து சமயமும் ஓங்க பல படைப்புக்களை வழங்கிய புலவர் சுப்பையா, க.வைத்தீஸ்வரக்குருக்கள், சுப்பிரமணிய தேசிகர், காரை.செ.சுந்தரம்பிள்ளை, அ.அருளம்பலவாணர், எவ்.எக்ஸ்.சி.நடராசா, ஆகியோர் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் கூடவே எம் சைவ சமயத்தையும் வளர்த்த பெரியோர்களாகவும், மேலும் திரு.அலன் ஆபிரகாம் அம்பலவாணர் மருத்துவ துறையிலும், திரு.இ.கனகசுந்தரம், திரு.தி.சிவகுமாரன்;, திரு.ஜி.பரமேஸ்வரன், திரு.வே.இராமகிருஸ்ணன், திரு.நடராஜா மற்றும் சிறிஸ்கந்தராஜா போன்றோர் மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்துறையிலும் தொல்பொருள் துறையிலும், சிறந்த அறிஞர்களாக உள்ளனர். இந் நிலை அடைய அவர்கள் கற்ற கல்வியே பெரிதும் பிரதானம் ஆகும். இதை விடுத்து அருள்தான்  பிரதானம் என்றோ இல்லை பொருள்தான் பிரதானம் என்றோ இருந்திருந்தால் இவர்கள் இன்று வரலாற்றில் இடம் பெற்றிருக்க முடியாது. இவ்வாறு காரை மக்களின் உயர்நிலைக்கு வித்திடும் காரைநகரின் கல்வி நிலையில் காணப்படுமாற்றினை நோக்குவோம்.

காரைநகரில்  பதினைந்து பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் பின்வரும் பாடசாலைகளான யா/கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய.மகா.வித்தியாலயம் மற்றும் யா/யாழ்ற்றன் கல்லூரி என்பவற்றில் க.பொ.த உயர்தரம்; வரையிலும்; மேலும் பின்வரும் பாடசாலைகளான யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் மற்றும் யா/வியாவில் சைவ வித்தியாலயம் என்பவற்றில் க.பொ.த சாதாரணதரம் வரையிலும் உள்ளன. ஏனைய பத்து பாடசாலைகளும் தரம் ஒன்று முதல் தரம் 5 வரை கல்வி கற்கும் பாடசாலைகளாக உள்ளன. இவை மட்டுமல்லாமல் 14 பாலர் பாடசாலைகளும் 15 விளையாட்டு கழகங்களும், மாணவரின் கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் கல்வியானது உலகின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய இளம் சமுதாயத்தை முன்பள்ளியில் இருந்தே வளர்த்தெடுக்கும் நன்நிலை காரைநகரில் காணப்படுகின்றது.

 இவை மட்டுமல்லாமல் எமது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் எம் உறவுகள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எம் காரைநகர் மக்கள் இவ்வாறு அயற் பிரதேசங்களிலும் எம் நாட்டிலும் புகழ் பெற காரணம் அவர்களின் அறிவு நிலையே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய காலகட்டத்தில் பாடசாலை மற்றும் சமூக உறவானது மிகவும் முக்கியமானதொன்றாகும். இவ்வுறவு மேலும் வலுப்பெற கற்ற அறிவார்ந்த சமூக குழுவினர் நேர் மனப்பாங்குடனும், நன்னிலையான சிந்தனைக்கண்ணோட்டத்திலும் இருக்க வேண்டும். இவ் நிலையை எமது பிரதேசத்துடன் ஒப்பிட்டு நோக்குகையில் ஏனைய பிரதேசத்தினை விட காரைநகரில் சமூகத்திற்கும் பாடசாலைக்குமிடையிலான உறவு நன்நிலையிலேயே உள்ளது என தெரிய வருகின்றது.

இவ்வகையிலே காரைநகர் சிறந்து விளங்குவது பெரிதும் அறிவினாலேயே ஆகும். காரை மக்களுக்கு அருளையும் பொருளையும் விட அறிவே பிரதானம் ஆகும். அத்துடன் சிறந்த அறிவுள்ள எதிர்கால தலைமுறையையே நாளைய சமூகம் எதிர்பார்க்கின்றது. ஏனெனில் ஒரு வளமான சமூகத்தை ஒரு அறிவு நிறைந்த தலைமுறையினரால் மட்டுமே பேணிப்பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறையினரிற்கு கையளிக்க முடியும். இவ் வகையில் காரைநகர் அருளினாலும் பொருளினாலும் சிறந்து விளங்கினாலும் எம் ஊரினை வழிப்படுத்துவது ஒவ்வொரு அறிவு நிறைந்த தலைமுறையினரே. 

மேலும் ஒரு தனிமனிதனது முன்னேற்றத்திற்கு அறிவே பிரதானம் ஆகும். எவ்வகையில் எனில் ஒரு மனிதனானவன் தனது வாழ்விலே பணம் பொருள் செல்வத்தையோ அல்லது இறை மற்றும் பெரியாரின் அருளையோ பெற வேண்டுமெனில் அவற்றை பெறும் நன் மார்க்கத்தை அறிந்திருத்தல் இன்றியமையாத தொன்றாகும். ஆகவே இவற்றையெல்லாம் இவ்வுலகில் பெறும் வழிகளை அறிவிப்பது அவன் அறிந்த அறிவே ஆகும். எனவே காரைநகர் மக்கள் சிறந்து விளங்குகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அருளையோ பொருளையோ விட அவர்களின் நல்லறிவே ஆகும். 

அவற்றுடன் காரைநகரில் இளந் தலைமுறையினர் நல்ல அறிவைப்பெறும் வழிகள் ஏராளம் காணப்படுகின்றன. அதில் முக்கியமானதாக மாணவர்களின் வாசிப்புத்திறனை விருத்திசெய்ய பாடசாலை நூலகங்களுடன் மேலதிகமான திறன்களை விருத்தி செய்யும் நோக்குடன் காரைநகர் பிரதேச சபை நூலகம், வியாவில் ஐயனார் ஆலய கணபதீஸ்வரக் குருக்கள் நூலகம் என்பன மட்டுமன்றி கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் புதிதாக ஆரம்பிக்;கப்பட்ட மாணவர் நூலகம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறான நூலகங்கள் இத்தனை செலவுடன் அமைக்கப்பட்டுள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணம் எதிர்கால சமுதாயம் அறிவின் சிகரத்தை தொடவேண்டும் என்பதனாலேயே ஆகும்.

இவை மட்டுமல்லாமல் தற்பொழுது தீவக வலயத்தில் தனியொரு கோட்டமாக காரைநகர்க் கோட்டம் காணப்படுகின்றது. அத்துடன் காரைநகர்க் கல்விக்கோட்டம் ஏனைய தீவக கல்விக்கோட்டத்தை விட மிக சிறப்பியல்பு வாய்ந்த கோட்டமாக காரைநகர்க் கல்விக் கோட்டம் காணப்படுகின்றது. அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருகின்றமையும் காரைநகர் மாணவர்கள் அறிவார்ந்த விடயங்களில் ஆர்வம் செலுத்துகின்றமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றுடன் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத்துறைகளிலும் காலத்திற்கு காலம் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றார்கள். 1934 இல் கனிஸ்ட விடுகைப்பத்திர பரீட்சையில் வடமாகாணத்தில் முதற்தரத்தில் சித்தியடைந்த ஒரே ஒரு மாணவன் காரைநகர் இந்துக்கல்லூரி மாணவனாவான். அத்துடன் எம் பிரதேச மாணவர்கள் அன்று தொட்டு இன்று வரை அனைத்து துறைகளிலும் சாதனையை நிலைநாட்டிய வண்ணம் உள்ளனர். மேலும் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட தகவல் தொடர்பாடற் தொழில் நுட்ப துறை சார்ந்த மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி மாணவர்களில் மூன்று மாணவர்கள் வெள்ளிப்பதக்கங்களையும் ஏனைய ஆறு மாணவர்கள் திறமைச்சித்தி பெற்றமை குறிப்பிடதக்கது. இதன்மூலம் தெரிய வருவதாவது, காரைநகர் மக்கள் பெரிதும் சிறந்து விளங்குவது அறிவினாலேயே ஆகும்.

இத்துடன் காரைநகர் மக்கள் ஒழுக்கம், சமய விழுமியங்கள், ஆளுமை விருத்தி, சமூக மயமாக்கல் என்பவற்றிலும் தம்மை விருத்தி செய்து புதுமைகாண் உயிர்ப்பு அமைப்பாக காரைநகர் சமூகத்தை வளர்த்தெடுக்க முயல்கின்றனர். இதற்கு அவர்கள் அறிந்த அறிவே ஆதாரம் ஆகும். மேலும் காரைநகரின் அருள் சார்ந்த விடயங்களை நோக்குகையில் சைவ வித்தியா விருத்திச் சங்கம், காரைநகர் சைவ மகா சங்கம், களபூமி ஆரணிய நிலையம் போன்ற அமைப்புகளும் ஆன்மீக தியான கருத்தரங்குகள், திருவாசக திருமுறைகள் ஓதுதல், சைவ தமிழ் போட்டிகளை நடாத்துதல், ஆலயங்களில் நூற்தொகுதிகள் பேணுதல் போன்ற சைவ தமிழ் சார் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. காரைநகரில் எதற்காக இவ்வாறான செயல்கள் நடைபெறுகின்றது என்பதை நோக்குமிடத்து இங்கு ஒரு சமயப்பற்றுள்ள அருளார்ந்த சமயம் ஒன்று உருவாக வேண்டும் என்பதனாலேயே ஆகும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் காரைநகரில் இடம்பெற அறிவே பிரதானம் ஆகும். எவ்வாறெனில், இச் செயற்பாடுகள் இங்கு இடம்பெற வேண்டும் எனும் சிந்;தனையை ஊருக்கு தொண்டாற்றும் தொண்டர்களுக்கும் புலம்பெயர் அமைப்புகளிற்கும் வழங்கியது அவர்களின் அறிவே ஆகும். எனவே இவ் வகையில்; நோக்கும் பொழுது காரை மக்கள் பெரிதும் சிறப்புற்று விளங்குவது அறிவினாலேயே ஆகும்.  

காரைநகர் மக்கள் பழமைப்போக்குகளை விட  புதுமை தேடுதலிலேயே அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள். பெற்றோர்கள், நலன்விரும்பிகள், அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், மற்றும் பெரியோர்கள் அனைவருமே கல்விகற்ற விருத்தி அடைந்த சமுதாயத்தினை வளர்த்தெடுத்து அதன் மூலம், அருளிலும் செல்வத்திலும் செழித்த தலைமுறைகளை உருவாக்க வேண்டுமென்றே செயற்படுகின்றார்கள். ஆயினும் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு காரைநகர் மக்கள் அறிவால் மட்டும் தான் சிறந்து விளங்குகின்றார்கள் என்று நாம் கருதிவிடக்கூடாது. காரைநகர் மக்கள் அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் அதற்கு அடிப்படை வழிகோலியது அவர்களின் அறிவே ஆகும். ஆயினும் இதற்கு துணைக் காரணிகளாகவே அருள், பொருள் என்பன காணப்படுகின்றது.

மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையினரதும் பாடசாலை மட்டத்தில் கல்வி விருத்தியானது ஆய்வுகள் அபிவிருத்திகள் பெறுபேறுகள் என்பற்றின் மூலம் நீண்ட காலம் நிலைத்திருக்கும் விளைவுடன் தொடர்புபடுகின்றது. அந்த வகையில் பிரஜைகள் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட வளர்ச்சியுமே பிரதேசத்தின் வினைத்திறனை தீர்மானிக்கின்றது. எனவே ஒவ்வொருவரதும் அறிவார்ந்த உள்ளக வெளியக காரணிகள் சமூகத்தை வளர்தெடுக்கின்றது. இவ்வாறான அறிவின் நோக்கம் என்னவென்று நோக்குவோமெனில், 

"இயற்கையுடன் முரண்படாமல் அதன் தோற்றப்பாடுகளினை உணர்ந்து அதனுடன் ஒட்டிவாழ்தல் விலங்கிடப்படாத மனச்சாட்சியுள்ள மனிதன் தோன்றல் எனவும், வாழும் தகைமையும், வாழ்வதற்குத் தகைமையும் பெற்றவராக்கப்படல் கல்வியின் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது."

இதன் மூலம் தெரிய வருவதாவது சமூகத்தில் மேன்மையான எண்ணம், கீர்த்தியான செயல், புகழுடைய தொலைநோக்கு என்பவற்றிற்கு வளர்ச்சி அடைந்த அறிவு படைத்த பிரஜைகள் தேவை. சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான வளம் அருளோ பொருளோ அல்ல, அறிவே ஆகும். எதிர்காலத்திலும் அறிவே காரை மக்கள் வளர்ச்சியின் பிரதான வளமாக இருக்கும். அறிவு பெறுகின்ற முக்கியத்துவத்தின் காரணமாக 21ம் நூற்றாண்டில் சமூகம் ' அறிவு சார் சமூகம்' எனும் பெயரை பெறுகின்றது. இவற்றின் அடிப்படையில் நோக்கும் பொழுது காரைநகர் மக்கள் பெரிதும் அருளையும் பொருளையும் விட அறிவினாலேயே சிறந்து விளங்குகின்றனர் என்றும் இவ்வாறாக அருளும் பொருளும் மனிதரின் அறிவிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிய வருகின்றது. எனவே காரைநகர் மக்கள் வையத்தில் சிறந்து விளங்க அறிவே பிரதானம் ஆகும்.

                         "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

                                                          *****நன்றி*****

kadduraipoddi  04 20140001

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று காரை இளஞ்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் செல்வி சாந்தினி கனகலிங்கம்.

        SWISS LOGO                       

                       நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

       பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணர்

"இந்துமா சமுத்திரத்தின் முத்து" எனவும் "தெட்சணகைலாயம்" எனவும் "சுவர்ணபூமி" எனவும் 'குபேரபூமி' எனவும்  வர்ணிக்கப்படும் ஈழமணித் திருநாட்டின் சிகரமாக வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் மேற்பால் உள்ள ஏழு பெரும் தீவுகளில் இயற்கை எழிலும் கடலாற் சூழப்பட்டு நீரரண் பொருந்தி இயற்கை பாதுகாப்புடையதும், பழமையும், பெருமையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான ஈழத்துச்சிதம்பரம் என்றும் புண்ணிய திருத்தலத்தை தன்னகத்தே கொண்டு அமையப்பெற்ற ஊரே காரைநகர் ஆகும். இவ்வூர் மக்கள் கல்வியால் உயர்ந்தும், செல்வத்தால் செழித்தும், சைவம் வளர்த்த சான்றோராக, செந்தமிழ் காவலர்களாக, திருப்பணிச் செம்மல்களாக தம் மண்ணின் பெருமையை பேணி வந்துள்ளார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நான் அறிந்த பெரியார் பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணர் ஆவார்.

இப் பெரியார் கந்தர்ப்பர் சுப்பிரமணியத்திற்கும் பார்வதிக்கும் சிரேஷ்ட புதல்வராக 1865 ஆம் ஆண்டு காரைநகர் சக்கலாவோடையில்

                                "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                                            தோன்றலின் தோன்றாமை நன்று"

           என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க பிறந்தவரே பேராசிரியர் அலன் ஆபிராம் அம்பலவாணர் ஆவார். இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும், சிறந்த கணித மேதையாகவும், தமிழிசை வல்லுனராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும், சைவத் திருமுறைகளைப் பக்தி சிரத்தையுடனும் கிறிஸ்தவ கீதங்களை நெஞ்சுருகிப் பாடுபவராகவும், ஒழுக்கமானவராகவும் விளக்கினார். இவர்

                                       "உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால்
                                                        எண்ணப்பட வேண்டாதார்"

         என்ற வள்ளுவனின் வாக்கை மக்களுக்கு புரிய வைத்து மது ஒழிப்பிற்காக போராடினார். அத்தோடு இனிமையான சுபாவம் உடையவராகவும் எளிய ஆடைளை (வேட்டியும்,கோட்டும்) அணிபவராகவும் கீழைத்தேய, மேலைத்தேய மொழி, பண்பாடு, நாகரிகம் என்பவற்;றை அறிந்தவராகவும் தனது மனதிற்கு சரியெனப் பட்ட கருத்துக்களை அஞ்சாது துணிவுடன் முன்வைப்பவராகவும் தனிப்பட்ட பசுமை, கருத்து, முரண்பாடுகளுக்கு இடமளியாது சிந்திக்க வல்லவராகவும் விளங்கினார்.

    இப் பெரியார் 1876 ஆம் ஆண்டில் பரவிய கொள்ளை நோய் காரணமாக தாய், தந்தையரை இழந்தார். பின்னர் சிறிய தந்தையரான கந்தப்பர் சரவணமுத்தின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். திண்ணைப் பள்ளியில் கல்வியில் கல்வியை ஆரம்பித்த அம்பலவாணர் தொடர்ந்து கார்த்திகேசு ஐயரிடம் கல்வியைக் கற்றார். தெல்லிப்பளை ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணக்கல்லூரியில் பணியாற்றிய பொழுது Senior Local Matriculation. FA, BA பரீட்சைகளில் சித்தி பெற்றார்.

    இப் பெரியார் சுப்பர் சங்கரப்பிள்ளை மகள் முத்தாச்சியை திருமணம் செய்து இரண்டு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றெடுத்தார். முத்தாச்சியின் மரணத்தைத் தொடர்ந்து பொன்னையா தையல்முத்தை இரண்டாம் தாரமாக மணந்தார்.

    யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆரம்பம் முதல் வானசாஸ்திரம் கற்பிக்கப்பட்டு வந்தமை இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தன் வாழ்நாள் பூராகவும் வானியலைப் பொழுது போக்காக கருதினார். வான் மண்டலத்தையும் விண்மீன்களையும் காரைதீவில் இருந்தே இம் மாமேதை ஆய்வு செய்தார். வசதிகளும் வாய்ப்புக்களும் படைத்த மேற்கத்தைய நாட்டு விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் நவீன கருவிகளின் உதவிகளுடன் கணிப்பிட்டுத் தெரிவிக்கும் எதிர்வுகூறல்களை காரைநகரில் தனது இல்லத்தில் தன் மாணவர்களின் உதவியுடன் நெடிது ஓங்கி வளர்ந்த 'கற்பகதரு' என அழைக்கப்படும் பனை மரங்களுக்கிடையே பரண் அமைத்து பிரபஞ்சத்தை ஊடறுத்துப் பார்க்க வல்ல திருவிழிகளால் பார்த்தும் மதிநுட்பம் மிக்க கணிப்பீடுகளாலும் தீட்சண்யம் மிக்க எதிர்வு கூறல்களாலும் படங்களின் உதவியுடனும் விளக்கி ஹேலிஸ் வால்வெள்ளி ஆனது 1910 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் காலை 9.00 மணிக்கும்; 10.00 மணிக்கும் இடையில் பூமிக்கு மிக அண்மையில் தோன்றும் என நிகழ முன்னரே தெரிவித்தார்.

    இப் பெரியாரின் கட்டுரையும் கணிப்புகளும் கிடைக்கப்பெற்ற பிரித்தானிய ஆராய்ச்சி கழகம் (Royal Astronomical Society) ஆராய்ச்சிப் பெறுபேற்றின் சாதனைகளை ஏற்றுக்கொண்டு 1911 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் Follow of the Astronomical Society (F.R.A) சான்றிதழை வழங்கி தமது கழகத்தின் உறுப்பினராக்கி பெருமை கொண்டது. 1921 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியா வானியல் ஆராய்ச்சிக்கழகம் (Royal Astronomical Society) அகரவரிசைப்படி வெளியிட்ட பட்டியலில் இப் பெரியாரின் பெயர் முதலில் காணப்படுகின்றது. வானியல் ஆராய்ச்சிக் கழகத்தில் (Royal Astronomical Society) அங்கத்துவம் பெற்ற முலாவது இலங்கையரும், எட்டாவது ஆசிய நாட்டவரும் என்கின்ற பெருமையை எம் பெரியார் பெற்றுக்கொண்டார்.

    இவர் 1910 ஆம் ஆண்டு ஹேலி வால்வெள்ளி வரவுரைத்து சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி எமது கிராமத்துக்கு சர்வதேச அந்தஸ்த்தைப் பெற்று சர்வதேசத்தை எம்பால் ஈர்க்க வைத்த உலகப்புகழ் பெற்ற எம்பெரியார் 'விஞ்ஞானத்துறையில் ஈழத்தமிழரின் முன்னோடி' என்றால் மிகையாகாது. இவரின் காலத்தில் வாழ்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பையும் விஞ்சி மதிநுட்பம் வாய்ந்ததும் மிகச் சரியானதுமாக இவரின் ஆராய்ச்சி அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

    ஹேலி வால்வெள்ளி வரவுரைத்தல் தொடர்பான விரிவுரைகளின் போது இவரின் திறமை தொடர்பாக இரண்டு விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். 1910 சித்திரை மாத நடுப்பகுதியில் வால்வெள்ளியை வெற்றுக்கண்களால் பார்க்க முடியும் என்பதை வரைபடங்களின் உதவியுடன் விளக்கினார். ஆனால் ஏனைய வானிலை ஆராய்ச்சியாளர்கள் அவ்வளவு விரைவாக தோன்றும் என எண்ணவில்லை. உண்மையாகவே டாக்டர் வூல்ப் முதன் முதலாக படத்தில் 1909 செப்ரெம்பர் 11 இல் அவதானித்தார். 1909 செப்ரெம்பர் 19 இல் பேராசிரியர் பேர்னகாம் தொலைநோக்கு கருவி மூலம் அவதானித்தார். 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ம் நாள் இவர் வெற்றுக் கண்களால் கண்ணுற்று வால்வெள்ளியை எங்கு பார்வையிடலாம் என கொழும்பு பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். 1910 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18,19,25 திகதிகளில் பம்பாய், இங்கிலாந்து, ஆகிய இடங்களில் வால்வெள்ளியை பார்க்கக் கூடியதாக இருந்தது. Royal Astronomical Society 1704 இல் காணப்பட்ட வால்வெள்ளியை அவதானித்து ஆய்வு செய்து அவ் வால்வெள்ளி 1758 இல் மீண்டும் தோன்றும் என எதிர்வு கூறினார். 1758 இல் ஹேலி அமரத்துவம் எய்திய போதும் தோமஸ் ஹேலியின் தீர்க்க தரிசனத்திற்கு மதிப்பளித்து அவருடைய நாமம் சூட்டப்பட்டது. 1834 இல் இவ் வால்வெள்ளி மீண்டும் தோன்றியது.

    தூமகேது அல்லது புகைவெள்ளி அல்லது வால்வெள்ளி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வால்நட்சத்திரம் என்பது ஏனைய கிரகங்களைப் போன்று சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருகின்றது. இவற்றின் சுற்றுப்பாதைகள் சமீபத்திலுள்ள கிரகங்களினால் மாற்றமடைகின்றன. இதன் காரணமாக வால்வெள்ளி எப்போது தோன்றும் எவ்வளவு காலம் பார்க்கமுடியும் என்பவற்றைக் கணிப்புச் செய்வது கடினமானதாகக் கருதப்படுகின்றது.

    வால்நடசத்திரங்கள் நீள்வளையப்பாதையில் சுற்றிக் கொண்டு சூரியனுக்கு அண்மையில் வரும் போது பிரகாசமாகத் தோன்றுகின்றன. சூரியன் உதயமாகும் விடியற் காலையிலும் அஸ்தம