Category Archive: கண்ணீர் அஞ்சலி

அறிஞர் கென்னடி விஐயரட்ணம் அவர்களின் மறைவு குறித்து காரைமத்தி மேம்பாட்டுக்கழகத்தின் கண்ணீர் அஞ்சலி

தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள்

தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.அவர்கள் 10.01.2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயர் பகிர்கின்றோம்.

சிறந்த கல்விமானாய் திகழ்ந்த நீ உன் ஊரையும் ஊரைச் சார்ந்தவர்களையும் கல்வி, கலை, கலாச்சாரம் எனப் பல துறைகளிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்று துடித்தாய் அதற்காக இரவு பகல் பாராது உழைத்தாய். உனது அறிவுத் திறனால் பல துறைகளிலும் சிறந்தவர்களை இனங்கண்டு மகுடம் சூட்டினாய் உறங்கிக் கிடந்த சிந்தனையாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து உணர்வு கொடுத்து ஊன்று கோலாய் நின்றாய். மண்ணையும் மக்களையும் நேசித்து மதிப்பளித்த உன்னை காலன் விரைவாய் அழைத்த காரணம்தான் என்ன? உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ?

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை விருத்திக்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களது துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.

அன்னாரது பிரிவால் துயர்ருற்றிருக்கும் குடும்பத்தவர்,உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணக்கர் ஆகியோருடன் ஆழந்த துயரைப் பகிர்கின்றோம். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல தில்லைக் கூத்தனைப் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
18.01.2018

 

 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமரரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவினிலிருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில்போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து

கடன்முறை பேசும் என உரைநாவும்
உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளைபிறை போல எயிரும் உரோமம்
முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

 

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்களின் மறைவு குறித்து எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களின் இரங்கல் செய்தி

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்களின் மறைவு குறித்து எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களின் இரங்கல் செய்தி

அறிவுச்சுடர் அணைந்தது

வாழவேண்டிய மலர் ஜம்பதில் கருகி விட்டது.
மாங்கன்று வடிவில் மனைகளில் புகுந்து விட்டாயோ?
மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்டவனே!
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையில் முத்தமிழ் மன்றம்,
தியாகவேண்டுபித் திறன் ஆகியவற்றில் ஆணிவேர்.
கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி எங்கு சென்றாய்?
மலையாக நம்பி இருந்தோம் சிலையாகி விட்டாய்?

வாய் திறந்து பேச வார்த்தை வரவில்லை.
பொறுப்புக்களை விரைவில் சுமப்பேன் என்றாய், சுமக்க வைத்து விட்டாய்.
விடியலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் பகல் நிலா ஆகி விட்டது.
விவாத அரங்கு, வினாடி வினா, நாடகப் போட்டிகள் எல்லாவற்றையும் தனித்தே சாதித்தாய்.
இன்று தோள் கொடுப்பவர் யார்?

அணையப் போகும் விளக்கு சுடர்விட்டுப் பிரகாசிக்கும் எல்லாத் துறையிலும் பிரகாசித்தாய்.
முத்தமிழ் நிகழ்வுகள் நடைமுறைகளைத் திட்டமிட்டு அமுல்படுத்தினாய்? இனி யார்?
எத்துணை ஆளுமை, எத்துணை ஆற்றல்? இவ்வளவும் எங்கே?
03.12.2017 இல் கௌரவித்து வாழ்த்தி அறிவுச்சுடர் பட்டம் வழங்கினோம்.
வாழ்த்துப் போதும் என்று 10.01.2018இல் உறங்கி விட்டாய்.

கனவு கலைந்து எழுந்திரு.
நீ இறக்கவில்லை இறக்கவும் மாட்டாய்?
அத்தனை அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய விரைவாய் வருவாய்?
உனது உடற்பூந்துக்கள் மண்ணில் விதைக்கப்பட்டுவிட்டன அவை மீண்டும் வளரும்.

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உனது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கும்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினரின்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு.
18.01.2018

 

 

 

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமரரும்பு கமடம் இதென்று
பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப
உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவினிலிருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேசம்
முத்தமிழின் கலையும் கரை கண்டு
வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து
மதனசொரூபன் இவன் என மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில்போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி

வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிரோத குரோதமடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாய் அறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து

கடன்முறை பேசும் என உரைநாவும்
உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளைபிறை போல எயிரும் உரோமம்
முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து

வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

 

உலகளந்த அறிவுச் சூரியன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம்

அறிஞர் கென்னடி விஐயரட்ணம் அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரியின் விழிநீர் சொரிகின்றோம்

Kennedy Vijayaratnam

கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து நீங்காத நினைவுகளுடன் நினைவு கூறிடும் பிரான்ஸ் வாழ் காரைமக்கள்

Paris memory of Kennedy

காரை இளம் கல்விமான் மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சி

காரை இளம் கல்விமான் மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சி

பிறந்த மண்ணை தமிழ்தேசியத்தை நேசித்து வாழ்ந்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் எதியோப்பியாவில் 10-01-2018 அன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்

எனது நெருங்கிய நண்பராக இருந்த இவரது தந்தை விஜயரத்தினம் (மாஸ்டர்)ஆங்கில ஆசிரியராகவும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது போல் பல்கலைக் கழக ஆங்கில இணைப் பேராசிரியராகவும் தமிழ் இலக்கியத்தில் மிக ஈடுபாடு கொண்டவராகவும் அறிஞர் உலகின் பாராட்டைப் பெற்றவர் கல்விமான் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்கள்

இவர் எதியோப்பியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பிப்பிள்ளை மாணிக்கம் தொலைபேசி மூலம் அறிமுகம் செய்து கதைக்கவைத்த தொடர்பு நெருக்கமாக வளர்ந்தது. எனது “கறுப்பு யுலை 83- குற்றச்சாட்டு” நூலை திரு.மாணிக்கம் தனது வீட்டில்வைத்து அவருக்கு வழங்கினார். அந் நூலை படித்தபின் என்னுடன எதியோபியாவிலிருந்து தொலைபேசி மூலம் அரை மணித்தியாலம் உரையாடியது மறக்க முடியாத வரலாறு. இலண்டன் வரும் பொது சந்திப்பேன் என்று கூறியவரை காலன் கவர்ந்து சென்று விட்டான்

தமிழ் மக்கள் விடுலை பெற்று வாழ வேண்டுமென்று அரசியலிலும் பெரும் பங்களித்து வந்தவர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பிண்ணணியிலிருந்து செயற்பட்டவர். அவ்வாறாயின் உயர்ந்த அரசியல் மட்டத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.

இவர் 10-01-2018ல் மறைந்தபோது யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழ் ஆராய்சிமாநாட்டின்போது உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மறக்கமுடியாத தினத்தில் நாட்டுப்பற்றாளன் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மறைந்தார் மறக்க முடியாத மறைவு.

பிறந்த மண்ணை நேசித்த கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் புதவுடல் காரை மண்ணில் நல்லடக்கம் செய்வது அவரது அபிலாசையே. அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்தானைப் பிரார்த்திப்போமாக.

ஐ.தி.சம்பந்தன்
இலண்டன்

 

கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் பாடசாலைகளில் அன்னாருடன் கல்வி கற்ற 1967 இல் பிறந்த பள்ளி நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் பாடசாலைகளில் அன்னாருடன் கல்வி கற்ற 1967 இல் பிறந்த பள்ளி நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

துள்ளித் திரிந்த கால
பள்ளித் தோழனே! கென்னடி!
கள்ளமில்லாத உன்னைத் தெரிந்து
அள்ளி எடுத்தானோ அந்த ஆண்டவன்?

உலகப் பந்தின் தேசங்களில்
உறங்கிக் கிடந்த எம்மை
ஊக்கம் கொடுத்து ஒன்றிணைத்தாயே!
உள்ளெழும் கேள்விக்கு பதில் இல்லையே!

உற்ற தோழனாய்
உண்மைச் சகோதரனாய்
பெண்மையைப் போற்றிய
புதுமைப் பாரதியே!

சின்னச் சின்ன திறனையெல்லாம்
செதுக்கி வளர்த்த சிற்பியே!
அடுத்த சந்ததிக்கு
அடியெடுத்துக் கொடுத்தவனே!

சென்று வா நண்பா!
உன்னத நட்பு எம்நெஞ்சில் நிலைத்திருக்கும்!
உன் சிந்தனைகள் எமக்கு வழிகாட்டும்!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திண்ணபுரத்து தில்லைக் கூத்தனைப் பிரார்த்திக்கின்றோம்

 

உன் பிரிவால் துயருறும் 1967 இல் பிறந்த காரைநகரைச் சேர்ந்த பள்ளித் தோழர்கள்

 

 

கலாநிதி. ஜோன் மனோகரன் கெனடி விஜயரட்ணம் அவர்களின் மறைவு குறித்து காரை இந்துக் கல்லூரி சமூகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

சமூக மேம்பாட்டின் ஒளிவிளக்கு அணைந்தது.

சமூக மேம்பாட்டின் ஒளிவிளக்கு அணைந்தது.

காரைநகரில் தனது சிறு வயதில் இருந்தே தான் கல்வி பயின்ற பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் நடக்கும் விழாக்களையும் கலை நிகழ்வுகளையும் திறமையாக நடாத்துவதற்கு முன்னின்று உழைத்தவர் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள். ஒரு இனத்தின் மொழி, கலை, கல்வி, மேம்பாடுகளை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு தன்னாலான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்ற உயர்ந்த எண்ணக்கருவோடு வாழ்ந்தவர்.

சிறந்த கல்விமானாய் திகழ்ந்த கென்னடி அவர்கள் தழிழர்களின் ஆன்மீகம், கலை இலக்கியம், அரசியல் ஆகியவற்றின் மூலக்கருக்களை தெளிந்த சிந்தனையோடு தன்னகத்தே வைத்துக் கொண்டு சமூகத்திற்கான ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து கொண்டு வந்தார்கள்.

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் ஆங்கில் இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்கள் (11-08-2013) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ விஷ்ணு துர்க்கைஅம்மன் ஆலயத்தில் எமது சபையால் ஓழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அன்றில் இருந்து எமது சபையுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணி வந்தார்கள். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இலத்திரனியல் மூலமான மேற்பிரிவு மாணக்கரின் கட்டுரைப் போட்டிக்கான தனது பங்களிப்பை செலுத்தியிருந்தார்கள்.

2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணவர்களுடையே அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உருவாக்கம் பெறுவதற்கும்,எமது சபைக்கு ஆலோசனை வழங்கியும் அதனை செயற்படுத்தினாரகள். அதன் இணைப்பாளராகவிருந்து பல விதமான திறன்கள் சார்ந்த போட்டிகளை நடாத்துவதற்கு நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தார்கள். இக் குழுவின் மூலம் 2015ஆம் ஆண்டு மாணக்கர்களுக்கான கட்டுரைப்போட்டி (அ)கீழ்ப்பிரிவு, (ஆ) மத்தியபிரிவு (இ) மேற் பிரிவு என விரிவாக்கம் பெற்று வெகு சிறப்பாக நடைபெறவதற்கும் தனது பங்களிபை வழங்கி இருந்தார்கள்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மைகண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்தமகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற ஆசிரிய சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து எமதுசபையினரால் ஓழுங்குசெய்யப்பட்ட அமரரது நூற்றாண்டுவிழாவும், “தியாகச்சுடர்” நினைவுத் தொகுப்புவெளியீடும் கடந்த 17.07.2016இல் .Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில இணைப் பேராசிரியர் அமரர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் “தியாகச்சுடர்” நினைவுத் தொகுப்பின் ஆசிரியராக சேவையாற்றி இத் தொகுப்பு சிறப்பாக வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

2016ஆம் ஆண்டிலிருந்து மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளராக சேவையாற்றி வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக “தியாகத்திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் நடாத்தத் தீர்மானித்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, பொதுஅறிவு – வினாடிவினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளிலும் நடாத்தி அனைத்துப் போட்டிகளும் சிறப்பாக நடைபெறுவதற்கு தனது நேரடியான பிரசன்னத்துடன் ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள்.

எமது சபையின் மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு “தியாகத் திறன் வேள்வி-2017” இல் சுவிஸ் நாதன் அவர்களது முழமையான அனுசரணையுடன் காரை மண்ணில் மீண்டும் முத்தமிழாம் இயல் இசை நாடகத்தின் மறுமலர்ச்சியை அறிமுகப்படுத்தி நாடகப் போட்டியையும் நடாத்த தீர்மானித்தது. முதற் பரிசுரூபாய் ஆறுபதாயிரம், இரண்டாம் பரிசுரூபாய் நாற்பதாயிரம், மூன்றாம் பரிசுரூபாய் பத்தாயிரம் எனவும் அத்துடன் அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர் கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம் எனவும் அக்குழு அறிவித்திருந்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரைநகரின் அபிவிருத்திப் பணிகளுள் நேரடியாகவே மாணவர்களின் ஆளுமை விருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்துவருகின்றது. அதன் ஒரு பகுதியாக நம்மூரின் கலை மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக நாடகப் போட்டியை நடாத்தத் தீர்மானித்தது.

வருடாந்தம் நடாத்தப்படும் தியாகத்திறன் வேள்வியின் ஓர் அங்கமாக இது இடம்பெற்றாலும் நாடகப் போட்டி மட்டும் பாடசாலைக்கு வெளியே உள்ள பரந்துபட்ட மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமானதாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. நம் காரைச் சமூகத்தின் சிந்தனைப் போக்கு கலையுணர்வு சமூகஉறவு ஆகிய தளங்களில் புது இரத்தம் பாய்ச்சும் நோக்கிலேயே நாம் நாடகப் போட்டிகளை நடாத்தினோம்.

கடந்த ஆடி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் காரைநகருக்கு நேரடியாகச் சென்று இந் நாடகப் போட்டி, மற்றும் மாணவரின் அனைத்துப் போட்டிகளையும் சிறப்பாக நடாத்தியிருந்தாரகள். எமது வேண்டுகோளையேற்று கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு தலைமையேற்றும் அதனை சிறப்பாக நடாத்துவதற்கும் தனது ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.

ஊரின் கல்விமான்களையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமது சபையின் நோக்குகளில் ஒன்றாகும்.

எமது சபையால் நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை எங்கள் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மிகத் திறமையாக எழுதி வந்தார்கள் தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பால் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் எழுதி வந்தார்கள்

ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களுக்கு கடந்த 03.12.2017இல் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் எமது சபையால் மதிப்பளிக்கப்பட்டது. கலாபூஷணம் பண்டிதை. சோ. யோகலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்) அவர்களால் வாழ்த்துரை எழுதி வாழ்த்துரைக்கப்பட்டு திரு.ஆறுமுகம் சிவசோதி (முன்னாள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்) அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கப்பட்டது.

அமரர் நல்லதம்பி விஜயரத்தினம், சிவயோகம் விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் இளைய மகன் ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் அருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக சுவிற்சர்லாந்திலும், காரைநகரிலும் எமது சபையுடன் சேர்ந்து செயலாற்றி இருந்தாரகள், அவர்களது செயற்பாட்டின் நிழற்படங்களை கீழே காணலாம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

இங்ஙனம்
சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
16.01.2018

 

மகிமை மிக்க பழைய மாணவன் பேராசிரியர் ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

தமிழ் பற்றாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையின் கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி

தமிழ் பற்றாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் திடீர் மறைவு காரைநகர் மக்களுக்கு மீயாத் துயரினையும் அதிர்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவை அளப்பெரியது.

சிறந்த கல்விமானான அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா தில்லைக் கூத்தன் திருவடி நிழலில் சேர ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமைனைப் பிரார்த்திக்கின்றோம்.

காரைநகர் அபிவிருத்திச் சபை,
காரைநகர்.

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி

எமது பாடசாலை பழைய மாணவனும் தமிழ் உணர்வாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் திடீர் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய மருதடி வீரகத்தி விநாயகப் பெருமைனைப் பிரார்த்திக்கின்றோம்.

பாடசாலை சமூகம்,
வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை
காரைநகர்.

கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

கலாநிதி கெனடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து புலம்பெயர் வாழ் காரைநகர் மக்கள் பிரான்ஸ் கண்ணீர் அஞ்சலி

தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள்

தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள்

இலங்கை கிழக்கு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன்; கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்கள் 10.01.2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயர் பகிர்கின்றோம்.

சிறந்த கல்விமானாய் திகழ்ந்த நீ உன் ஊரையும் ஊரைச் சார்ந்தவர்களையும் கல்வி, கலை, கலாச்சாரம் எனப் பல துறைகளிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்று துடித்தாய் அதற்காக இரவு பகல் பாராது உழைத்தாய். உனது அறிவுத் திறனாமையால் பல துறைகளிலும் சிறந்தவர்களை இனங்கண்டு மகுடம் சூட்டினாய் உறங்கிக் கிடந்த சிந்தனையாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து உணர்வு கொடுத்து ஊன்று கோலாய் நின்றாய். மண்ணையும் மக்களையும் நேசித்து மதிப்பளித்த உன்னை காலன் விரைவாய் அழைத்த காரணம்தான் என்ன? உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ?

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது கல்விச் செயற்பாட்டிற்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களது துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.

அன்னாரது பிரிவால் துயர்ருற்றிருக்கும் குடும்பத்தவர்,உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணக்கர் ஆகியோருடன் ஆழந்த துயரைப் பகிர்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அவரது ஆத்ம சாந்திக்காப் பிராத்திக்கும்.

 

சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
11.01.2018

 

சின்னர் இராமநாதர் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

காரைநகர் இடைப்பிட்டியை சேர்ந்த

சின்னர் இராமநாதர்

அவர்கள் இறைபதமடைந்துள்ளார்.

அன்னார் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிர்வாக உறுப்பினர் சிவசுப்ரமணியம் (Banker) அவர்களின் தந்தையார் ஆவார். அன்னாரின் தகனக்கிரியை காரைநகரில் 07/01/2018 (ஞாயிறு) அன்று நடைபெறுகிறது.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்ம சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர தில்லைக்கூத்தனை வேண்டுகிறோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

பிரிவில் துயர் பகிரும்,

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

 

இதய அஞ்சலி அமரர் திருமதி.சரோஜினிதேவி விக்கினேஸ்வரன்

notice(1)

திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி, தருமலிங்கம் பாலச்சந்திரன்

20930293_10156596360474251_1654259220_o (1)

இளைப்பாறிய யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் அமரர் திரு.நா.வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம் கண்ணீர் அஞ்சலி

Mr.N.Veluppilai 15.05.2017

திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

                 கண்ணீர் அஞ்சலி

Saba

                                  திரு.சபாபதி சபாநடேசன்

தோற்றம்:17-08-1932                                                                                  மறைவு: 21-04-2017

காரை. மக்களின் நலனை நோக்காகக்கொண்டு  ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அரும்பணியாற்றிய மண்ணின் சேவையாளர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது காரை மக்களுக்கு குறிப்பாக கனடா வாழ் காரை. மக்களுக்கு பேரிழப்பாகும்.

'ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கம்' என்ற அமைப்பு 1989ஆம் அண்டு உதயமாவதற்கு அடித்தளமிட்டவர்களுள் ஒருவர் என்பதுடன் அதன் ஆரம்ப காலத் தலைவராகவும் பணியாற்றியவர். 1994ஆம் ஆண்டு இவ்வமைப்பு 'கனடா-காரை கலாசார மன்றம்' என பெயர் மாற்றம் பெற்றபோதும் இரு அமைப்புக்களிலும் தொடர்ச்சியாக 12ஆண்டுகள் தலைவராக பணியாற்றிய அளப்பரிய சேவையாளர். ஆழமான மண் பற்றுடன் ஆளுமை மிக்க திரு.சபாநடேசன் அவர்களது 12 ஆண்டுகால தலைமைத்துவத்தின் கீழ் மன்றம் பல பயனுள்ள சாதனைப் பணிகளை நிறைவுசெய்திருந்தது. மன்றத்தின் நிதி வளத்தினை ஏற்படுத்துகின்ற மூலமாகவும் ரொறன்ரோவில் ஊர் சார்ந்த கலை விழாக்களுள் முன்னணி விழாவாகவும் பிரபல்யம் பெற்று விளங்கும் 'காரை வசந்தம்' கலைவிழா அன்னாரது தலைமைத்துவத்தின் கீழ் அமைந்திருந்த நிர்வாகத்தின் முயற்சியினால் 2000ஆம்  ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும். இன மொழி சமயப் பற்றுடன் கலை ஆர்வமும்  மிக்கவராக விளங்கியவர். 'கனடா தமிழ் பண்பாட்டுக் கழகம்' 'ரொறன்ரோ கிழக்கு சாயி நிலையம்' 'மொன்றியல் ஒன்றியம்' ஆகியவற்றில் தலைவராக பதவி வகித்து சேவையாற்றியதன் ஊடாக காரை. மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். இலங்கை, எத்தியோப்பியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் 33 ஆண்டுகள் சமூக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் ஆசிரியப் பணியாற்றிய பேராசான்.

திரு.சபாநடேசன் அவர்களது மறைவினால் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் அன்னாரது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் கனடா-காரை கலாசார மன்றம் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றது.

                                       கனடா-காரை கலாசார மன்றம்

Tribute_for_Sabanadesan1

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Sabanadesan Master-page-001

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

sabanadesan-3 copy

அமரர் நல்லதம்பி ஆறுமுகம் அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Aarumugam Aiya

திருமதி.பரமசிவம் பரமேஸ்வரி அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

tributetomrsparameswary

திரு.ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களின் மறைவு குறித்து கனடா வாழ் களபூமி மக்களின் கண்ணீர் அஞ்சலி

thill_copy

திரு.ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் இந்துக் கல்லூரிபழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

Tribute to Mr.Thillainatahan

பரமு கிருபாலரட்ணம் அவர்களின் மறைவு குறித்து பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

1 2 3 4

Older posts «