Category Archive: காரை வசந்தம்

Video

காரை வசந்தம் 2017 கலை விழாவிற்கு காரைநகரில் இருந்து ஆவண விபரண படத்தொகுப்பு “காரைநகர் ஊர்வலம்”

Video

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் காணொளி!

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் -2017

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம். என்கின்ற இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

காரை வசந்தம் தரும் சுகந்தம்‘ என்கின்ற இக்கட்டுரை 2015ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘காரை வசந்தம்’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் காரையின் சொந்தங்கள் கூடிக் களிக்கின்ற மற்றுமோர் பெரு விழாவான காரை வசந்தம் கலை விழாவின் சிறப்புக்களை பொதித்து வைத்துள்ள இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

 

 

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம்.

-கனக. சிவகுமாரன்-

அலையெறிந்து ஆர்ப்பரிக்கும் கடல்சூழ் நன்நகரான காரைநகரானது எந்தக் கிராமத்திற்கும் இல்லாத சிறப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற எமது கிராமத்தின் பாரிய இடப்பெயர்வானது ஊரின் அனைத்து வளங்களையும் பாதித்தது. ஊரின் வனப்பும் பொலிவிழந்து போனது.

எனினும் பிறந்த மண்மீது ஆழமான பற்றினைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்த காரைநகர் மக்களது உணர்வுமிக்க தொடர் செயற்பாடுகளினால் கிராமம் துரிதகதியில் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு அதன் புகழும் பெருமையும் என்றுமில்லாதவாறு சர்வதேசமெங்கும் பறைசாற்றப்பட்டு இத்துணை சிறப்பு மிக்க கிராமமா காரைநகர்? என பலரும் வியக்கும் வண்ணம் சிறப்புற்றிருக்கின்றது. இவ்வூரில் நாம் பிறந்தோம் என்ற உணர்வும் உரிமையும் எம்மைப் பேருவகை கொள்ளவைக்கின்றது.

புலம்பெயர் காரை அமைப்புக்களினதும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஊர்ப்பற்றும் சமூக உணர்வும் மிக்க தனவந்தர்களினதும் உதவிகள் ஊருக்குக் கிடைக்கின்றன. அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான பணிகள் இவ்வுதவிகளால் முன்பிருந்ததைக் காட்டிலும் வளமும் வனப்பும் மிக்க முன்னுதாரணமான கிராமமாக மாறி வருவதைக் கட்டியம் கூறுவதாகவுள்ளன.

மலேசியா நாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்ற காரைநகர் மக்கள் 1919ஆம் ஆண்டு Karai Union Of Malaya என்ற அமைப்பினை நிறுவி காரையின் மேம்பாட்டிற்கு உதவினார்கள். தொண்ணூற்றாறு ஆண்டுகளிற்கு முன்பாகவே புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து தாம் பிறந்த ஊருக்கு உதவி முன்னுதாரணமாகத் திகழ்ந்தோர் காரைநகர் மக்களாகவே இருக்கமுடியும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் தம்மண்ணை மறவாது அதற்கு உதவவேண்டும் என்கின்ற வரலாற்றுக் கடமை உண்டு என்பதையும் இச்செய்தி உணர்த்துகின்றது.

அக்காலகட்டத்தில் காரைநகர் இருந்த நிலைமை வேறு தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. இடர்மிகுந்த காலகட்டத்தில் நிம்மதியிழந்து நம்பிக்கையற்ற அவலவாழ்வு வாழ்ந்து பலவற்றையும் இழந்துவிட்ட உறவுகளிற்கு அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான மனோ பலத்தினை புலம்பெயர்ந்த அமைப்புக்களும் ஊர்ப் பற்றாளர்களும் வழங்கி வருகின்ற உதவிகளும் ஊக்கிவிப்புக்களும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் சேவையுள்ளம் கொண்ட பெரியோர்களினால் ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கம் என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 1992ஆம் ஆண்டு கனடா-காரை கலாசார மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாயக உறவுகளுக்கு உதவும் சேவையில் முழுமனதோடு ஈடுபட்ட இவ்வமைப்பு, தன் பணியில் 25ஆண்டுகளைக் கடந்து 26வது ஆண்டில் தடம் பதிக்கின்றது.

காரைநகரில் வாழும் உறவுகளிற்கு உதவுவதுடன் மட்டுமல்லாது கனடாவில் வாழும் காரை மக்களுக்கிடையேயான உறவினைப் பேணி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகின்றது. எமது கிராமத்திற்கே உரித்தான தனித்துவம் மிக்க கலை கலாசார சமய பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பேணி எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லக்கூடியவாறான செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த 25 ஆண்டுகளாக கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்து வரும் அளப்பரிய பணிகள் அனைவராலும் விதந்து பாராட்டப்படக்கூடியதாகும்.

மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வருடாந்த நிகழ்வு செயற் திட்டங்களுள் ‘காரை வசந்தம்’ என்கின்ற சிறப்பு மிக்க பெரும் கலைவிழா முதன்மை பெற்று விளங்குகின்றது.

காரைநகர் மக்களின் கலை ஈடுபாடும் பங்களிப்பும் அக்கிராமத்திற்கு பெரும் புகழ் சேர்ப்பனவாகவுள்ளன. கலைத்துறையில் காரை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகின்ற சாதனைகள் வரலாற்றுப் பதிவாகி வருகின்றன. காரைநகர் மக்கள் தமிழ்க் கலை உலகிலே பதித்த, பதித்து வருகின்ற தடங்கள் அவர்களின கலை ஆற்றலிற்கும் கலை உணர்விற்கும் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 16வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற ‘காரை வசந்தம்’ என்கின்ற பெரும் கலைவிழா ரொறன்ரோவில் ஊர்களின் பெயரால் நடாத்தப்பட்டு வருகின்ற நூற்றுக்கணக்கான கலைவிழாக்களுள் பிரபல்யம் மிக்க தலைசிறந்த ஒன்றாக மிளிர்வடைந்துள்ளது.

வளர்ந்து வருகின்ற காரையின் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது திறமைகளை வளர்ப்பதற்குக் காரை வசந்த அரங்கு களம் அமைத்துக் கொடுப்பதுடன் பல திறமை மிக்க கலைஞர்களை அறிமுகம் செய்து அவர்களிற்கும் அவர்களது படைப்புக்களிற்கும் மதிப்பளிக்கின்ற அரங்காகவும் அமைந்து விளங்குகின்றது. ரொறன்ரோவில் பல நவீன வசதிகளுடன் அமைந்த முதற்தர கலாசார மண்டபத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டு வருகின்ற இப்பெருவிழாவைக் கண்டு களிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்ற காரைநகர் மக்களால் மண்டபம் நிரம்பி வழிவது விழாவின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது. கலை வாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி வருகின்ற இவ்விழா காரைநகர் மக்களிற்கும் கலா ரசிகர்களிற்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஊர் உணர்வோடும் கலை உணர்வோடும் காரை மக்கள் சங்கமித்து வருகின்ற இவ்விழா அவர்களை காரை மண் பற்றி சிந்திப்பதற்கு தூண்டுவதாகவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதி வளத்தினை ஏற்படுத்துகின்ற உறுதியான ஊற்றாகவும் அமைந்து விளங்குகின்றது.

இவ்விழா ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் காரைச் சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித் திறன் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களிற்கும் பங்குபற்றியவர்களிற்கும் இவ்வரங்கில் பரிசளித்து வருகின்றமையும் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறும் சிறுவர்கள் இவ்வரங்கில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கின்ற முறைமையும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வம் ஏற்பட வழி செய்கின்றன.

நீண்ட காலமாகக் கனடாவில் வாழும் எமது பிள்ளைகள் எமது மொழி, கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் அறியாமலே கனடா நாட்டுக் கலாசார நீரோட்டத்தில் கலந்துகொள்வது தவிர்க்க முடியாதது போல் தோன்றினாலும் எமது கலாசாரத்தையும் மொழியையும் தக்கவைக்கும் முயற்சியில் ‘காரை வசந்தம்’ கலைவிழா ஆற்றிவரும் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாகும்.

கனடாவின் நான்கு பருவ காலங்களுள் ஒன்றான இலைதளிர் காலமே வசந்த காலம் எனப்படுகின்றது. கடும் குளிர்காலம் முடிவடைந்து மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நிலவுவதே வசந்தமாகும். இந்தப் பருவ வசந்தமும் எமது ஊரும் இணைந்து அனைவரையும் வசீகரிக்கின்ற அழகிய பெயராக மலர்ந்த ‘காரை வசந்தம்’ கலை விழாவினை வசந்த காலத்தில் கொண்டாடுவதே பொருத்தமானதாக அமையும் என்பதுடன் அதனை ஏன் குளிர்காலத்தில் கொண்டாட வேண்டும்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்படுவதும் உண்டு. உண்மையில் வசந்தம் என்கின்ற பருவத்தைக் கொண்டாடாது அதன் பண்புக் கூறுகளாக விளங்கும் பொலிவு, உற்சாகம், மகிழ்ச்சி, பூரிப்பு, குதூகலம் ஆகியனவே முதன்மைப்படுத்தப்படுகின்றன. வசந்த காலத்தில் பெறுகின்ற சுக அனுபவத்தினைக் குளிர்காலத்தில் கொண்டாடப்படுகின்ற ‘காரை வசந்தம்’ மூலம் காரை மக்கள் பெற்று இன்புறுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

 

கனடாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தினாலும் தரம் மிக்க சிறந்த கலை விழா எனப் பதிவுசெய்யப்பட்ட ‘காரை வசந்தம்’ குறித்து கனடாவின் முன்னணி வாராந்தப் பத்திரிகையான ‘கனடா உதயன்’, ‘கடும் குளிரை விரட்டியடித்த காரை வசந்தம்’ எனத் தலைப்பிட்டு ஒரு முறை விமர்சனம் வெளியிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது பொருத்தமானதாகும்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாகக் ‘காரை வசந்தம்’ என்ற சஞ்சிகை ஒன்றும் வரலாற்று ஆவணமாக விழா ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருகின்றது. தொன்மை மிக்க காரைநகரின் வரலாற்றுப் பெருமைகள் கலை, கலாசாரம், கல்வி, சமயம், பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் காரைநகர் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய ஆக்கங்களையும் காலவோட்டத்திற்கு ஏற்ப சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியதான பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் தாங்கிய சிறந்த வரலாற்று ஆவணமாகவும் தமிழ் வாசனையையும், காரை மண்ணின் வாசனையையும் நுகருவதாகவும் இக் ‘காரை வசந்தம்’ சஞ்சிகை அமைந்துள்ளது. படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஊக்கிவித்து மேம்படுத்துகின்ற களமாகவும் இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது. அத்துடன் காரைநகர் சார்ந்த சமய சமூக கல்வி கலாசார அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கலைஞர்கள், ஊர்ச் சான்றோர்கள் வழங்கி வருகின்ற வாழ்த்துச் செய்திகள் எழுச்சியை ஏற்படுத்தி வலுச்சேர்ப்பனவாகவுள்ளன. மன்றப் பணிகளிற்கு உதவிடவேண்டும் என்ற நல்நோக்குடன் விளம்பரங்களை வழங்கி வரும் வர்த்தகத்துறை சார்ந்தோர் இச்சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காரைச் சிறார்கள் உள்ளிட்ட அனைத்து காரைநகர் மக்கள் நெஞ்சங்களிலும் நிலைத்து அவர்கள் உச்சரிக்கின்ற ஓரு சொல்லாக ‘காரை வசந்தம்’ என்ற நாமம் உள்ளது. காரைநகர் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வசீகரிக்கின்ற சிறந்த கலை நிகழ்வுகளை கண்டு களிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் வெளியிடத்தைச் சேர்ந்த பலரும் கலையுணர்வுடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

காரைநகர் மக்களின் அடையாளம் ‘காரை வசந்தம்’ என்று கூறுமளவிற்கு இச்சொல் அனைவர் நெஞ்சங்களிலும் வியாபித்து நிற்கின்றது. அவ்வப்போது அமையப்பெற்று வருகின்ற நிர்வாகங்களின் செயற்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க உழைப்பு, கலைஞர்களின் உற்சாகமான பங்களிப்பு, அனுசரணையாளர்கள் விளம்பரதாரர்கள் ஆகியோரின் பேருதவி, காரைநகர் மக்கள் மற்றும் கலாரசிகர்களின் அமோக ஆதரவு என்பவற்றின் இணைந்த செயற்பாட்டின் விளைவே காரை வசந்தத்தின் வெற்றியின் இரகசியமாகும்.

காரை வசந்தத்தின் சிறப்பிற்கும் பொலிவிற்கும் நிறைவான பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. விளம்பரப்படுத்தப்பட்ட நேரத்திற்குப் பதிலாக சில மணித்துளிகள் தாமதித்த நிகழ்ச்சிகளின் ஆரம்பமும் இதன் காரணமாகப் பின்தள்ளப்பட்டு இடம்பெறும் இறுதி நிகழ்சியின்போது ரசிகர்கள் மண்டபத்திலிருந்தது கலைந்து செல்லுதலும் அவ்வப்போது நிகழும் குறைபாடுகளாகும். ஒரு சில சந்தர்ப்பங்களில் நேரப் பற்றாக்குறை காரணமாக இறுதி நிகழ்வு இடம்பெறாமல் போனதால் படைப்புக்களைத் தயார் செய்து வந்த கலைஞர்கள் ஏமாற்றமடைந்தமை துரதிஷ்டவசமானதாகும். இவற்றினை நீக்கி வைப்பதில் ஏற்பாட்டாளர்களுடன் ரசிகர்களும் ஒத்துழைக்கவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டு செயற்பட்டால் கரையிலா ‘காரை வசந்தத்தின்’ தரம் மேலும் மேன்மையுற்று கரை புரண்டோடும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்!

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்

கனடா வாழ் காரைநகர் மக்களின் வரலாற்று பெருவிழாவான காரை வசந்தம் வழமைபோல் இம்முறையும் கோலாகலமாக நவம்பர் 4, 2017 மாலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் தேவைப்படுமிடத்து ஒழுங்கு செய்து கொடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து வசதிகள் Brampton /Mississauga, Markham /Stouffville, Ajax /Pickering மற்றும் Scarborugh பகுதிகளுக்கு உட்பட்ட அனைவரும் விழாவை கண்டுகளித்து செல்லும் வண்ணம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு மன்ற மின்னஞ்சல்: Karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

                                                                   நன்றி

                நிர்வாகசபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

Image

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

 

Image

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logoகாரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் September 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் September 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

  “WORKING TOGETHER IS SUCCESS”

 

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logoகாரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் ஆகஸ்ட் 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் ஆகஸ்ட் 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
                                  
                                      "WORKING TOGETHER IS SUCCESS"

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மற்றும் காரை விழுதுகள் 2000ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை கலை விழா சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் விபரம்!

CKCA logo

காரை வசந்தம் – 2000 கலை விழா சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் விபரம்:

1. என்னை உயிர்ப்பித்து விடு………..(திருமதி கோதை அமுதன்)

2. கடல்சூழ் காரைநகர் (சி.தம்பிராசா B.Sc.  முன்னாள் உப-அதிபர் காரைநகர் இந்துக் கல்லூரி)

3. காரை மாதா பெற்ற தவப் புதல்வர்கள் (அருளம்பலம் சிவானந்தநாதன் B.A.  ஓய்வுநிலை ஆசிரியர்)

4. காரைநகர் சிவத்தமிழ் அறிஞர் பண்டிதர் க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களை வாழ்த்துகின்றோம் கவிதை ஆக்கம்: வே.குமாரசாமி காரைநகர் நன்றி: உதயன், யாழ்ப்பாணம்

5. தமிழே! அமுதே! (திருமதி வசந்தா நடராசன் B.A.)

6. கனடாவில் தமிழ்ப் பெற்றோர்கள் அனுபவிக்கும் மனவேதனைகளும் அவர்களுக்கு ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புக்களும் (டாக்டர் ரி.சூரியபாலன்  M.D., MRCP sych , MRCP(C) (Consultant Psychiatrist,Toronto)

7. மனமது செம்மையானால் வாழ்வும் நிறைவு பெறும் (எஸ்.ஆர்.எஸ். தேவதாசன் B.A.  முன்னாள் கொத்தணி அதிபர் காரைநகர்)

8. ஈழத்தில் இசை வளர்ச்சி (திருமதி நவராஜகுலம் முத்துக்குமாரசாமி முன்னாள் இசைக் கட்டுப்பாட்டாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)

9. நூற்றாண்டு கண்ட யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள்)

10. யாழ்ற்ரன் கல்லூரி (திருமதி விஜயலட்சுமி மகேந்திரன் B.Sc., Dip.In Ed. ஓய்வுநிலை ஆசிரியை)

காரை வசந்தம்-2000 நடைபெற்ற காலம்: மே மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்ற இடம்: Winston Churchill Collegiate Institute,                                     2239,Lawrence Avenue East.

 

                                 

 

 

காரை வசந்தம் 2001 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (26.05.2001)

1.            1991 இன் பின்னர் காரைநகர்….(செல்வி.இராணி வைத்தீசுவரக்குருக்கள், காரைநகர்)

2.            கூரையே கூரிய காரை வசந்தம் (கவிஞர் சிவா சின்னத்தம்பி)

3.            திருக்குறளின் பெருமை (எஸ்.பத்மநாதன் B.A. , Dip-in-Ed.

4.            மன இருள் (சிறுகதை) (கலைவாணி இராஜகுமாரன்)

5.            பற்களைப் பேணிக் காக்கும் முறைகளும் பல்முரசு சம்பந்தமான வியாதிகளும் (பல்வைத்திய நிபுணர் திருமதி.தவமணி ஸ்ரீஸ்கந்தராசா)

6.            தாய் மண் (காரை பாண்டியன்)

 

காரை வசந்தம் 2002 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (21.09.2002)

1.            ஈழத்துச் சிதம்பரத்தில் 58 வருடங்கள் சிவபூசை ஆற்றிய புண்ணியவான் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை)

2.            ஆதியும் அந்தமும் இல்லா இந்துசமயம் (பெரி.முத்துராமன்)

3.            குழந்தைகள் சாப்பிட மறுப்பதேன்? (குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் வி.விஜயரத்தினம்)

4.            அமுத சுரங்கம் (கவிஞர் கலாநிதி வி.கந்தவனம்)

5.            கும்பிட்டு செல்க நன்றே (கவிஞர் வே.குமாரசாமி, காரைநகர்)

6.            கனடிய புதிய குடிவரவுச் சட்டம் எவ்வாறு அமைந்துள்ளது? (திரு.எஸ்.திருச்செல்வம் பிரதம ஆசிரியர் தமிழர் தகவல்)

7.            பண்பாட்டைப்பேணி பிணக்குகளை தீருங்கள். அது முடியாவிட்டால் மட்டுமே சட்டத்தை நாடுங்கள் (சட்டத்தரணி திரு.தம்பையா ஸ்ரீதரன்)

8.            கண்திற! கரம் கொடு! (மீனா செல்வரட்ணம்)

9.            கனடாவில் சைவ ஆலயங்களின் எதிர்காலம் (பேராசிரியர் இ.பாலசுந்தரம்)

10.          கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் கனடியத் தமிழ் மாணவர் தொண்டர் அமைப்பினரின் செயற்பாடுகள் (கனடியத் தமிழ் மாணவர் தொண்டர் அமைப்பு)

11.          முதுமையைப் போற்றுவோம் (செல்வி.இராணி வைத்தீசுவரக்குருக்கள், காரைநகர்)

12.          திரையிசை – ஒரு கண்ணோட்டம் (அமலன்)

13.          தண்டனை (திருமதி.கலைவாணி இராஜகுமாரன்)

14.          சிந்தனைச் சிதறல்கள் (தொகுப்பு செ.சிவசுப்பிரமணியம்)

 

காரை வசந்தம் 2003 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (13.12.2003)

1.            காரைவசந்தமும் காலவசந்தமும் (சட்டத்தரணி கனக.மனோகரன்)

2.            திண்ணபுர அந்தாதி – ஒரு கண்ணோட்டம் (பேராசிரியர் (அமரர்) கைலாசநாதக் குருக்கள்)

3.            நன்றியுணர்வும் நடுவுநிலைமையும் – ஓர் ஒப்புநோக்கு (கலாநிதி நா.சுப்பிரமணியன், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம், இலங்கை)

4.            விழுமிய விழுதுகள் -சக்திக்கனல் (வள்ளிநாயகி இராமலிங்கம்)

5.            காரைநகரின் இன்றைய நிலை

6.            காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (திரு.நடராசா பாரதி, உதயன் செய்தியாளர், காரைநகர்)

7.            சக்தி என்றால் காப்புறுதி (காப்புறுதி முகவர் க.சக்திவேல்)

8.            பரதக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் கலைமணி நாட்டியதாரகை திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம் (B.A (Dance), Dip in Edu)

9.            இலக்கியத் திறனாய்வு (எஸ்.பத்மநாதன் B.A (Hons.), Dip.in.Edu.)

10.          நாம ஸங்கீர்த்தனம் (கணபதிப்பிள்ளை ரஞ்சன், ஆயிலி, காரைநகர்)

11.          இராமாயணம் கூறும் அறங்கள் (டாக்டர் ஆனைமுகன் நியூசிலாந்து)

12.          வீட்டு அடமானக் கடன் பெறுவது பற்றி (நா.முருகதாஸ்)

 

காரை வசந்தம் 2004 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (30.10.2004)

1.            கரை காணாக் காரை வசந்தம் (சாமி அப்பாத்துரை)

2.            தமிழீழத்திலும் ஒரு சிதம்பரநாதன் (அபிரா)

3.            எமது குழந்தைகள் (சிந்தனைப்பூக்கள் எஸ்.பத்மநாதன்)

4.            சமுதாயத்தில் ஏன் இளங்குற்றவாளிகள் உருவாகின்றனர்? (எஸ்.ஆர்.ராஜபாலன்)

5.            The Neem Tree ( By Kumar Punithavel)

6.            குரு சரித்திரம் (பரம்ம பூஜ்ய கணபதி சச்சிதானந்த சுவாமிகள்)

7.            Karainagar’s Development Potential is immense

8.            அந்தப்புர(ற)த்தில் ஓர் அம்ஸ்ரடாம் (சிவமணி)

9.            Route 782  (அல்லது) காரைநகர் 'கொத்து' (ரிஷி)

10.          இன்றெமதினத்தை வருத்தும் இன்னல்கள் தீர்க! (க.நவம்)

11.          அறப்பணி நிலையமாக விளங்கும் ஐயனார் ஆலயம் (ந.கணேசமூர்த்தி வீரகேசரி நிருபர்)

12.          சுவாமி விபுலானந்தரின் கல்விப்பணி

13.          தமிழன் என்ற இனமும் இங்கே! தனிப்பெரும் குணங்கள் எங்கே? (கனக. மனோகரன்)

14.          தவறுகள் (டாக்டர் மு.வரதராஜன்)

15.          தட்டுங்கள் திறக்கப்படும் (டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி)

16.          காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும்

 

காரை வசந்தம் 2005 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (10.12.2005)

1.            எனது மனது எழுதும் மண்….. (இளையதம்பி தயானந்தா B.A)

2.            திருவடிப் பெருமை (சிவநெறிச்செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் B.Sc)

3.            சேவையின் சிகரம் மு.சு.வே. (நடராசா கணேசமூர்த்தி)

4.            கடற்கோட்டை (பேராசிரியர் பொன்னம்பலம் ரகுபதி)

5.            புலம்பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் (திரு.சிவசம்பு பிரபாகரன்)

6.            இளையவரே எழுக! (மதுரகவி காரை எம்.பி.அருளானந்தன் B.A)

7.            கனடாத் தமிழர்களின் கலைப் பரிணாம நிலை (பேராசிரியர் இ.பாலசுந்தரம்)

8.            காரைநகர் தொன்மையும் வன்மையும் நூல் ஆய்வு (விஜயன்)

9.            காண்டீபன் கேட்காத கீதை கலாநிதி பாலகிருஷ்ணா ஸ்ரீதரன்

10.          சக்தி என்றால் காப்புறுதி மனவேதனையற்ற காப்புறுதித் திட்டத்தைப் பெறும் ஒரு சில முக்கிய அணுகுமுறைகள் (சக்திவேல்)

11.          எனது பார்வை…. எங்கள் ஊர் (திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்)

12.          காரைநகரின் பெருமையை உயர்த்திய இருமாணவ சாதனையாளர்கள்

13.          இடப்பெயர்வின் பின்னர் தளிர்விடும் காரைநகர் (திரு.நடராசா பாரதி)

14.          காரைநகர் நிலப்பரப்பின் இடப்பெயர்களின் ஆய்வு (நன்றி: காரை மான்மியம் வித்துவான் F.X.C நடராசா)

15.          காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2005) (ந.பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

16.          16 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (திரு.கனக.சிவகுமாரன்)

 

காரை வசந்தம் 2006 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (21.10.2006)

1.            காரைநகர் முன்னேற்றத்தில் காரைநகர் அபிவிருத்திச்சபை (ஜெ.தில்லையம்பலவாணர், செயலாளர் – காரை அபிவிருத்தி சபை);

2.            காரைநகர் வாழ் மக்களின் கிராமசேவையாளர் பிரிவு ரீதியான விபரம்

3.            காரைநகர் உதவி அரசாங்க அதிபர் ஆர்.ரீ.ஜெயசீலன் அவர்களுடன் நேர்காணல் (நடராசா பாரதி)

4.            காரைநகர் செழிப்புறச் செய்வோம் (கந்தப்பு அம்பலவாணர்)

5.            மெய்ஞான ஆன்மீக அறிவியல் (க.பாலசிங்கம் இளைப்பாறிய ஆசிரியர்)

6.            காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில் தல வரலாறு (சிவா தி.மகேசன் இலண்டன்)

7.            காரைநகர் இலங்கைவங்கி கிளையின் செயற்பாடுகள் (வை.ஸ்ரீஸ்கந்தவரோதயன், முகாமையாளர், இலங்கை வங்கி, காரைநகர்)

8.            தன்னை யமக அந்தாதி நூல் பெருமை (கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை)

9.            விலாசம் அற்றவன் (நடுத்தெரு. பிரமேந்திரதீசன்)

10.          காப்புறுதியில் சிந்தனைக்கு (சக்தி)

11.          ஆனந்தப் பெருவாழ்வு (புலவர் பூரணம் ஏனாதிநாதன் B.O.L)

12.          காரைநகர் வடகிழக்கு கிராம அலுவலர் பிரிவு (திரு.இ.திருப்புகலூர்சிங்கம், கிராம அலுவலர், காரைநகர் வடகிழக்கு J/47)

13.          ஹோமியோ மருத்துவம் Dr.S.Joseph

14.          காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் தலைவரிடமிருந்து…. (நடராசா சோதிநாதன், தலைவர்)

15.          புனிதமான செயல்கள் வேதரடைப்பு RDS (கலாநிதி.வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன், தங்கோடை, காரைநகர்)

16.          தனிமனித ஒழுக்கம் காப்போம் செந்தமிழ்வாரிதி, பேராசிரியர் அரிமா, டாக்டர், முனைவர் இரா.செல்வக்கணபதி (எம்.ஏ.பி.எட்.,பிச்.டி)

17.          காரைநகர் பெற்ற சேவையாளன் கலாநிதி ஆ.தியாகராசா (சி.சிவானந்தரத்தினம், இளைப்பாறிய ஆசிரியர், ஆயிலி, காரைநகர்)

18.          “ஊக்கம் உயர்வு தரும்” (பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கொழும்பு பல்கலைக்கழகம்)

19.          சேகுவரா ஒரு வரலாற்று நாயகன் தொகுப்பு: பிரவின் காரைநகர்

20.          மகாத்மா காந்தி (தொகுப்பு: விஷ்வா, காரைநகர்)

21.          காரைநகரை வளப்படுத்துவோம் (புதிய காரை ஒளி ஆசிரியர் திரு.ஐ.தி.சம்பந்தன் சமாதான நீதவான்)

22.          காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2006) (ந.பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

 

காரை வசந்தம் 2007 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (27.10.2007)

1.            காரை அபிவிருத்திப்பணிகளும் கனடா காரை கலாசார மன்றமும் (திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன், செயலாளர்)

2.            காரைபிரதேச சபையின் உருவாக்கமும் அதன்பின் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திப் பணிகளும்(இரா.லோகநாதன்)

3.            காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2007) (ந.பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

4.            காரைநகரில் சிறப்புற நடைபெற்ற தேசிய கலை இலக்கிய விழா (ப.ஐங்கரன்)

5.            காரைநகரின் சைவப்பெரியார்கள் (அதிபர் யாழ்ற்றன் கல்லூரி, ந.பரமசிவம் B.A Dip. in Ed., S.P.L.S-1)

6.            ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவம் (அ.க.ந.விஜயரத்தினம் B.A (Lond),இளைப்பாறிய ஆசிரியர்

7.            இலங்கை சிவபூமியா? (அமரர்.கலாநிதி.க.ந.வேலன் Ph.D அவர்கள்)

8.            பெண்களே உங்களுக்கு (ஸ்ரீசுவாமி சிவானந்தர்)

9.            கடவுளை நம்பினோர் கைவிடப்படார் (க.க.அம்பலவாணர்)

10.          காரைநகர் அறிஞர்கள்(ச.ஆ.பாலேந்திரன்)

11.          ஈழத்தில் முதலாவது மதுரைப் பண்டிதர் திரு.சி.சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் (கனடா திரு.அ.சிவானந்தநாதன்)

12.          காரைநகரின் தொன்மை

13.          A Letter from Grandpa (V.John Manoharan Kennedy M.A (Ph.D)

14.          திருக்காரைநகர் (கவிஞர் வி.கந்தவனம்)

15.          ஆலய வலம்

16.          காரைமக்களின் சைவப்பற்றும் தாய் மண் உறவும்…. (கிருஷ்ண பங்குஷக் குருக்கள், ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானம், பிரம்ரன்)

17.          உயிர்த்தோர் வாழ்த்து ( வி.ஜோன் மனோகரன் கெனடி)

18.          நமது வாழ்வும் வளமும் (பேராசிரியர் நடராசா ஸ்ரீஸ்கந்தராசா, உப்சலா, சுவீடன்)

19.          காரைநகர் ஈழத்து உரையாசிரியர் “சங்க நூற்செல்வர்” “திருவாசகமணி” திருசு.அருளம்பலவனார் (கனடா திரு.அ.சிவானந்தநாதன்)

20.          மனிதப்பிறவியின் மகத்துவம் (சைவப்புலவர் க.சிற்றம்பலம்)

21.          I lived in the 20th century You are going to live in the 21st century. What is your role?  By V.Kanapathy

22.          காரைதீவு (பொன்னம்பலம் இரகுபதி)

23.          காரைநகருக்கு பெருமை தேடிய கல்விமானை நினைவு கூருவோம்(ஐ.தி.சம்பந்தன்-ஆசிரியர் லண்டன் சுடரொளி)

 

காரை வசந்தம் 2008 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (27.10.2008)

1.            மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் “பட்டுமாமா” (க.தில்லையம்பலம் ஒய்வுபெற்ற அதிபர் பரீட்சைச் செயலாளர், மணிவாசகர்சபை)

2.            அமரர் தியாகராசா மகேஸ்வரன் அரசியல்வாழ்வும் பணியும் (ஐ.தி.சம்பந்தன் முன்னாள் இந்துசமய விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர்)

3.            நிறைவான பணிசெய்து நெஞ்சங்களில் நிறைந்தவர் அமரர் ஜெ.தில்லையம்பலவாணர் (திரு. K.K.நடராசா இளைப்பாறிய அதிபர், காரைநகர்)

4.            காரைநகரும் அமரர் தியாகராசா மகேஸ்வரனும் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, இளைப்பாறிய அதிபர், காரைநகர்)

5.            பாவாரம் (நூலாசிரியர்: கவிநாயகர் வி.கந்தவனம்)

6.            புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் பணிகளும் (பொன்னையா விவேகானந்தன்)

7.            Cancer: What do you know about it?

8.            காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் (2008) (நடராசா பாரதி உதயன் செய்தியாளர், காரைநகர்)

9.            கனடா நாட்டில் தமிழ் மொழியின் எதிர்காலம் (பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்)

10.          The Spiritual Leader –Bhagavan Sri Sathya Sai Baba (S.Balachandran)

 

காரை  விழுதுகள்  2009  மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (12.12.2009)

1.            தமிழ், சமய மறுமலர்ச்சி இயக்கம் (அன்புநெறி மலர் 12 இதழ் 10 சைவசித்தாந்த மன்றம்)

2.            சந்தோஸமாக வாழும் கலை (கணபதிப்பிள்ளை ரஞ்சன், ஆயிலி, காரைநகர்)

3.            காரைநகர் அபிவிருத்தி சபை செயற்பாடுகள் (காரைநகர் அபிவிருத்தி சபை, காரைநகர்)

4.            இனி வானம் கூட வாழ்க்கைப்படும்

5.            காரைநகர் அபிவிருத்திப் பார்வை (பேராசரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை(Ph.D.Durham) முன்னாள் துணைவேந்தர்)

6.            “Opportunity Now” இதுதான் சந்தர்ப்பம் அல்லது சந்தர்ப்பம் இதுதான் (கணபதிப்பிள்ளை ரஞ்சன், ஆயிலி, காரைநகர்)

 

காரை வசந்தம் 2010 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (09.10.2010)

1.            பத்தாவது ஆண்டில் பாதம் பதிக்கும் காரை வசந்தத்தின் பிறப்பு (கனக.சிவகுமாரன்)

2.            காரையில் வசந்தம் வீசவைக்க கனடாவில் காரை வசந்தம் (திரு.த.ஜெயசீலன், காரைநகர் உதவி அரசாங்க அதிபர்)

3.            அரங்கேற்றம் கண்டு வளர்ந்துவரும் காரைக் கலைஞர்கள் தொகுப்பு: திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன்

4.            காரைநகருக்கு பெருமை சேர்த்த நாதஸ்வரமேதை அமரர் N.K.கணேசன் (நன்றி: சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களின் திருத்தொண்டு பரவும் மலர்)

5.            விஞ்ஞானக் கலாநிதிப்பட்டம் பெற்ற காரைநகரின் முதற் பேராசிரியர் அமரர் இரகுநாதன் கனகசுந்தரம் M.B.B.S (Ceylon), Ph.D(Cambridge), F.I.Biol(London), F.A.M.S, Honorary D.Sc (Univ. of Sri Lanka)

(Dr.தில்லைநாதன் சிவகுமாரான் M.Sc, Ph.D, FRSC, FCACB, DABCC, மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

6.            கலைமகளும் திருமகளும் கழிநடம்புரியும் கவின்மிகு காரைநகர் (காரைக் கூத்தன்)

7.            காலம் எட்டாக் காரைநகர் (இரா.சம்பந்தன்)

8.            கனடா வாழ் காரை மக்களின் நிரந்தர முகவரி “காரை வசந்தம்” (ஊரவன் தீசன் திரவியநாதன்)

9.            இசையின் போக்கு…. (த.சிவபாலு B.Ed, Hons. M.A

10.          தமிழர் ஆடற்கலை (வாசுகி)

11.          தன்னை சித்தி விநாயகர் ஆலய வரலாறு (திரு.சி.தம்பிராசா B.Sc முன்னாள் உப-அதிபர் தியாகராசா ம.ம.வித்தியாலயம்)

12.          உண்மையான கல்வியின் நோக்கம் (திரு.ந.சபாரத்தினம் B.A அதிபர் யாழ் இந்துக்கல்லூரி)

13.          அகவை எழுபது கடந்த காரைநகர் மணிவாசகர் சபை (முன்னாள் செயலாளர் காரைநகர் மணிவாசகர் சபை)

 

 

காரை வசந்தம் 2011 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (09.10.2011)

1.            தங்கடை எல்லாம் புட்டு (இளையதம்பி தயானந்தா)

2.            கிராமியக் கலைகள் (காரை செ.சுந்தரம்பிள்ளை)

3.            11 வது காரை வசந்தத்தை அலங்கரித்த கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்ற காரைக் கலைஞர்களின் கலை வரலாற்றுக் குறிப்புகள் (தொகுப்பு: காரைகூத்தன்)

4.            காரைக் கல்வி வரலாற்றில் திறக்கப்படும் புதிய அத்தியாயம் K.A.S நூலகத்திட்டம் (நடராசா அமிர்தலிங்கம் B.Sc நூலக அமைப்பு உபகுழு இணைப்பாளர் கனடா-காரை கலாச்சார மன்றம்)

5.            A Message From Dr.(Mrs.)Veeramankai Yoharatnam ( Senior Lecturer in English, University of Jaffna)

6.            யாதும் ஊரே யாவரும் கேளீர் (குரு அரவிந்தன்)

7.            இன்றைய காரைநகர் (ப.ஐங்கரன்)

8.            காரைநகர் மண்ணை நெஞ்சில் நிறுத்திய காரை (திருமதி.மாதவி சிவசீலன் B.A(Hons), M.Phil.

9.            கவிஞர் வி.கந்தவனம் பார்வையில் கவிஞர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை (வி.கந்தவனம்)

10.          ஈழத்து சங்கநூற் செல்வர் திரு.சு.அருளம்பலவனார் அவர்களின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரைக்கு எழுதப்பட்ட மதிப்புரை (அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர், சித்தாந்தப் பேராசிரியர், விரிநூற் புலவர், உரைவளம்மகாவித்துவான் திருதண்டபாணி தேசிகர் அவர்களால் எழுதப்பெற்றது)

காரை வசந்தம் 2012 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (07.10.2012)

1.            காரைநகரும் இன்றைய கல்வி நிலையும் (தம்பையா அம்பிகைபாகன் B.A, B.Ed சமாதான நீதவான்(அகில இலங்கை) முன்னாள் ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்விப் பணிமனை, கொழும்பு)

2.            கொடும்பாவி சாகாளோ கோடி மழை பெய்யாதோ (அ.காண்டீபன்)

3.            காரைநகரும் விளையாட்டுத்துறையும்

4.            காரைநகர் வலந்தலை அருள்மிகு ஸ்ரீகண்ணகை அம்மன் வரலாறு (பொ.வன்னியசிங்கம் அவர்கள், இளைப்பாறிய தபால்தந்தி தொடர்பு பரிபாலன செயலாளர், ஐவனை, காரைநகர்)

5.            காரைநகர் மாணவர் நூலகத்தின் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது (Dr.நடராசா, நூலக இணைப்பாளர் காரைநகர் அபிவிருத்தி சபை)

6.            தன்னை வரசித்தி விநாயகர் வரலாறு

7.            கருணை உள்ளம் கொண்ட கருணாகரன்

8.            பரமசிவனாடும் பரதக்கலைக்கு பாரினில் உயர் ஒப்பு உண்டோ (பரதக்கலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் அதிபர் பாலவிமலநர்த்தனாலயம்)

9.            வானொயின் செவிநுகர் வனப்பில் ஓரு புதிய பரிமாணம் இளையதம்பி தயானந்தா (பேராசிரியர் கா.சிவத்தம்பி)

10.          கோவளம் வெளிச்சவீடு (அ.காண்டீபன்)

11.          வசந்தத்தில் ஓரு நாள் (ப.தவராசா தலைவர் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்)

12.          என் மனம் (திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை)

13.          கவிச்சரம் (பூ.விவேகானந்தா சுவிஸ்காரை அபிவிருத்தி சபை)

 

காரை வசந்தம் 2013 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (07.12.2013)

1.            இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் N.V.Q தர டிப்ளோமா சான்றிதழ் கற்கைநெறி, காரைநகர்

2.            கல்வியும் சமூகமும் (திருமதி.வாசுகி தவபாலன் B.Sc.(Hons), PGDE, M.Ed, MPhil அதிபர் யா-கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், காரைநகர்)

3.            கல்வியில் சிறந்த காரைநகர் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை)

4.            காரைநகரும் இன்றைய மக்கள் நிலையும் (தம்பையா அம்பிகைபாகன் B.A, Dip Ed

5.            காரைநகர் கோவளம் – ஒரு கண்ணோட்டம் (அருளையா நமசிவாயம்பிள்ளை ஓய்வுநிலை ஆசிரியர்)

6.            நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் இராமநாதர் கந்தையா (R.கந்தையா மாஸ்ரர்) (முன்னாள் மக்மாஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர். தில்லைநாதன் சிவகுமாரன்)

7.            வளர்ச்சிப் பாதையில் செல்லும் காரைநகர் (நடராசா பாரதி –காரைநகர்)

8.            யா-சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் தோற்றமும் சாதனையாளர்  கார்த்திகேசு உபாத்தியாயரும் (திரு.க.தில்லையம்பலம் ஓய்வுநிலை அதிபர்)

9.            காரைநகர் அபிவிருத்திச் சபையும் அதன் செயற்பாடுகளும் (திரு.இ.திருப்புகழுர்சிங்கம், செயலாளர் காரைநகர் அபிவிருத்திச்சபை, காரைநகர்)

10.          வித்தியாலயத்தில் சாதனை நிலைநாட்டிய அதிபர்கள் (கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் M.A. B.Ed, Ph.D)

11.          முத்தமிழ்மணி வித்துவான் க.முருகேசன் (புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன்)

12.          காரைநகர் சைவமகா சபை (செம்மொழிச் செல்வி அறநெறிச்செல்வி சிவநெறிப்பிரசாரகர் பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம் B.A, Dip in Ed.)

13.          English Education in Karainagar Then and Now (Mrs.Sivapakiam Nadarajah(Daughter of R.K Master, Retired Asst.Director of Education –English)

 

14.          நம்முன்னோர் சிந்தித்தவையும் இன்று சிந்திக்க வேண்டியவையும் (அ.மனோகரன் ஆசிரியர், யாழ்ற்றன் கல்லூரி, காரைநகர்)

15.          காரைநகரில் கருங்காலி எனும் சிறுகிராமம் (தொகுப்பு: தம்பையா நடராசா, கருங்காலி காரைநகர்)

16.          காரைநகரில் கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக மக்கள் தொகை விபரம்

17.          காரைநகர் பாடசாலைகளும் ஆசிரியர் மாணவர் விபரங்களும் டிசம்பர் 31, 2012 வரையான புள்ளிவிபரம்

 

காரை வசந்தம் 2014 மலரில் வெளிவந்த ஆக்கங்கள் (25.10.2014)

1.            காரைநகர் கோட்டப் பாடசாலைகள் (காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய செய்தி)

2.            வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை(அப்புத்துரை)

3.            ஊரி அ.மி.த.க பாடசாலை (அதிபர் இ.சிறிதரன்)

4.            யா-காரை மெய்கண்டான் வித்தியாலயம் (திருமதி புஸ்பராணி சந்திரராசா அதிபர்)

5.            யா-வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை (சடையாளி) (செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அதிபர்)

6.            யா-சுப்பிரமணிய வித்தியாசாலை

7.            யா-தோப்புக்காடு மறைஞானசம்பந்த வித்தியாசாலை (திருமதி ம.தேவராசா அதிபர்)

8.            காரைநகர் கல்விப்புலத்தில் மங்கா ஒளிவிளக்கு யாழ்ற்றன் கல்லூரி

9.            யா-பாலாவோடை இந்து தமிழ்கலவன் பாடசாலை

10.          யா-வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலயம் (சி.இளங்கோ, அதிபர்)

11.          யா-வியாவில் சைவ வித்தியாலயம் (க.சுந்தரலிங்கம், அதிபர்)

12.          யா-சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் (வி.சாந்தகுமார், அதிபர்)

13.          யா-ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்

14.          கல்வித்தர அபிவிருத்திப் பாதையில் காரை தியாகராசா ம.ம.வித்தியாலயம்…

15.          காரைநகர் பிரதேச செயலக செயற்பாட்டு அறிக்கை

16.          காரைநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு J-42

17.          காரைநகர் தெற்கு கிராமசேவையாளர் பிரிவு J-44

18.          காரைநகர் தென்மேற்கு கிராம சேவையாளர் பிரிவு J-45

19.          காரைநகர் வடகிழக்கு கிராமசேவையாளர் பிரிவு J-47

20.          காரைநகர் மத்தி கிராமசேவையாளர் பிரிவு J-48

21.          காரைநகர் மேற்கு கிராமசேவையாளர் பிரிவு J-40

22.          காரைநகர் வடமேற்கு கிராமசேவையாளர் பிரிவு J-41

23.          காரைநகர் தென்கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு J-43

24.          காரைநகர் வடக்கு கிராமசேவையாளர் பிரிவு J-46

25.          காரைநகர் பிரதேச வைத்தியசாலை (மருத்துவகலாநிதி கெ.இந்திரமோகன், பிரதேச மருத்துவ அதிகாரி)

26.          காரைநகர் வரவேற்கின்றது

27.          மணிவிழா காணும் மாணிக்கவாசகர் சபை (கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்)

28.          25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கனடா காரை கலாச்சார மன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

29.          ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய ஓர் அனுபவப் பகிர்வு (கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் M.A, B.Ed. Ph.D)

30.          வளமான வாழ்வளிக்கும் கனடாவில் நாம் (நன்றி: தங்கதீபம்)

31.          Karainagar – An Introduction to our root Thambipillai Nanthivarman CA, ACMA Sydney, Australia

32.          In Memory of Velupillai Suntharesu ( ரஞ்சன் கணபதிப்பிள்ளை)

33.          காரைநகர் அபிவிருத்திச் சபையின் குறிப்பிடத்தக்க கடந்த இரண்டு வருடச் செயற்பாடுகள்

34.          புயலைத் தாண்டினால் தென்றல் (தவராசா பரமேஸ்வரன்)

35.          சிவஸ்ரீ பொன் பஞ்சாட்சரக் குருக்களின் வாழ்க்கை வரலாறு

 

 

காரை வசந்தம் 2015 கலைவிழா சிறப்பிதழில் வெளிவந்த ஆக்கங்கள் (19.12.2015)

1.            காரைநகருக்கு பெரும்புகழ் சேர்த்த சிவஸ்ரீ அமரர் வைத்தீஸ்வரக்குருக்கள் (கனடா காரை கலாச்சார மன்றம்)

2.            காரைநகருக்கு பெருமை சேர்த்த முன்னோடி எழுத்தாளர்

3.            காலனித்துவ எதிர்ப்பாகக் கல்வி: அருணாசல உபாத்தியாயரின் கதை (கவிஞர் பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி, கனடா வின்சர் பல்கலைக்கழகம்)

4.            எழுதி மறைந்தவர்களும், நாம் எழுத மறந்தவர்களும் என் மண்ணின் பத்திரிகையாளர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பு (இளையதம்பி தயானந்தா)

5.            தில்லைச் சிதம்பரமும் ஈழத்துச் சிதம்பரமும் அருளும் அற்புதமும் மிக்க நிகழ்வு ஒன்று (சிவாசரணன் என்பவர் எழுதிய ஈழத்துச்சிதம்பரம் என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி)

6.            காரைநகர் மக்கள் பெரும் பாக்கியசாலிகள் (புலவர் திருமதி.பூரணம் ஏனாதிநாதன்)

7.            காரை மண்ணில் மலர்ந்த மலர்கள் (கலாபூஷணம், பண்டிதை செல்வி.யோகா சோமசுந்தரம்)

8.            குறைநிறைகள் – புலம் பெயர்வில் எம்மிளையோர் பரமநாதர் தவராசா

9.            தமிழர் வாழ்வில் கோயில்கள் (மருத்துவ கலாநிதி மகேசன் இராசநாதன், நியூசிலாந்து)

10.          தாயகத்தில் பொதுசன நூலக சேவை (விமலா பாலசுந்தரம், உதவி நூலகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)

11.          காரைநகர் மக்களுக்கு கலங்கரை விளக்காக மாணவர் நூலகம் (பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை)

12.          விண்மீன் கண்டு வியந்த விஞ்ஞானி எம்மண்ணின் அல்லின் ஏபிரகாம் அம்பலவாணர் (திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.Sc)

13.          கலங்கரை விளக்கம், கோவளம் வெளிச்சவீடு, கோவளம் (எஸ்.கே.சதாசிவம்)

14.          வாழ்க்கை அனுபவமும் கடமையும் (கலாநிதி தி,சிவகுமாரன் M.Sc, Ph.D, FRSc, FCACB, DABCC)

15.          காரைநகர்ச் சிவன் அந்தாதி இருபது (கலாநிதி கென்னடி விஜயரத்தினம்)

16.          A Few Words! Women in Social Service (Dr.Kennedy Vijayaratnam)

17.          ஆயிரம் கூட்ட மேளம் (தவராஜா பரமேஸ்வரன்)

18.          காரைநகரின் அண்மைக்கால கல்விப்போக்கு(அமிர்தேஸ்வரசர்மா மனோகரன்)

19.          சமய சமூகப் பணியாற்றிய அமரர் கே.கே.சுப்பிரமணியம் (க.க.அம்பரவாணர்)

20.          தமிழ் மொழிக் கற்றல் – கற்பித்தலில் உள்ள இடர்பாடுகளும், தீர்வுகளும் (சண்முகநாதன் இரமணீகரன்)

21.          துளிர்ப்பின் வாட்டம் (முருகேசு ரவீந்திரன்)

22.          இன்றைய காரைநகர் (தம்பையா அம்பிகைபாகன்)

23.          தலைமுறைகளை தலைமுழுகும் ஒர் தானம்? (சிவமணி)

24.          காரைநகரின் கலை வளர்ச்சியில் கிழவன்காடு கலா மன்றத்தின் பங்களிப்பு நுண்கலைமாணி திருமதி கலாசக்தி றொபேஷன் (B.F.A, PGDE)

25.          காரைவசந்தம் தரும் சுகந்தம் (கனக.சிவகுமாரன்)

“ஊரில் இருந்து”

காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் "ஊரில் இருந்து" என்னும் பகுதியில் காரைவசந்தம் – 2016 விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.

காரை மண்ணின் மணம் வீசி மனங்களை நிறைத்த வசந்த விழா காரைவசந்தம் 2016 காணொளி!

காரை வசந்தம் 2016 மலர்

காரை வசந்தம் 2016 மலர்

காரை மண்ணின் மணம் வீசி மனங்களை நிறைத்த வசந்த விழா காரைவசந்தம் – 2016

காரை மண்ணின் மணம் வீசி மனங்களை நிறைத்த வசந்த விழா காரைவசந்தம் – 2016
                                                                                                                                                                                                                                                                                          –  ஒளவையார் – 


கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கலைவிழாவான 'காரை வசந்தம்-2016' கடந்த சனிக்கிழமை மாலை 5:30 இற்கு ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் காரை மண்ணின் மணம் வீசி கனடா வாழ் காரை மக்களின் மனங்களை நிறைத்த வசந்தமாக வீசிச் சென்றுள்ளது. 

இவ்வாண்டு நூறு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் காரை மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியாளர்களையும், காரைநகரின் அடையாளச் சின்னங்களையும் போற்றி எடுக்கப்பட்ட காரை வசந்த விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக பிருத்தானியாவிலிருந்து வருகை தந்திருந்த லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.ஆறுமுகம் நல்லநாதன் அவர்களும், சுவிற்சலாந்திலிருந்து வருகைதந்திருந்த காரைநகர் மணிவாசகர் சபை முன்னாள் செயலாளர் சிவத்தமிழ்காவலர் திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக மன்றத்திற்கு தொடர்ச்சியாக தமது நிதி அநுசரணையை வழங்கி வருபவர்களான குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம், பல்மருத்துவ நிபுணர் ஆதிகணபதி சோமசுந்தரம், Double Seal Insulation Inc.அதிபர் பாலசுப்பிரமணியம் மகாதேவன், வீடுவிற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா, Olympic Development அதிபர் திரு.கரன் பஞ்சலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 

கௌரவ விருந்தினர்களாக கனடாவிலிருந்து சென்று காரைநகரில் தொண்டர் சேவையாற்றியவரும், அமரர் வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் பேத்தியும், குற்றவியல் வழக்கறிஞருமான செல்வி.தீபா பாலச்சந்திரன் அவர்களும், வெஸ்ரன் பல்கலைக்கழக விஞ்ஞானமானி பட்டதாரியும் comdu.it அமைப்பினூடாக இலங்கை உட்பட உலகில் வாய்ப்பு கிடைக்காத சமூகத்தினருக்கு தொண்டுப்பணி செய்பவருமாகிய செல்வி.அச்சனா நடராசா, மன்றத்திற்கு தொடர் ஆதரவளித்துவரும் குடும்ப உறுப்பினர் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

விழாவை திரு.திருமதி பரமேஸ்வரன் திலகேஸ்வரி, திரு.திருமதி பாலச்சந்திரன் ரட்சாயினி, திரு.திருமதி. நாகராசா விமலாதேவி மங்கள விளக்கேற்றித் தொடக்கி வைத்தனர். காரைச் சிறார்கள் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடாப் பண், மன்றப் பண் ஆகியனவற்றை இசைத்தமையைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

விழாவிற்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்று நிர்வாகசபை உறுப்பினர் திரு.குமரேசன் கனகசபை அவர்கள் வரவேற்புரையாற்றினார். அடுத்து நடன ஆசிரியை திருமதி.பாமினி சத்தியலிங்கம் அவர்களின் மாணவிகளின் கும்மி நடனம் சபையோரை உற்சாகப்படுத்தியது. 

அடுத்து கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன் பண்ணிசை, தமிழத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற, பங்கு பற்றிய மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அடுத்து சாயிசகானா நடனப் பள்ளி அதிபர் நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம் அவர்களின் மாணவிகள் வழங்கிய ' பழனி' என்ற நாட்டிய நாடகம் வீரமணி ஐயர் இயற்றி இசையமைத்து வர்ணராமேஸ்வரனின் குரலில் பாடல்கள் ஒலித்த தரமான ஒரு நாட்டிய நாடகமாக அமைந்தது. ஒரு பழத்திற்கு ஆண்டியாகிய முருகனின் திருவிளையாடலைச் சித்தரித்திருந்த கதை இன்றைய எமது இளைஞர்களின் சிறுபிள்ளைத்தனமான பிடிவாத மனப்போக்கை நினைவு படுத்தியது.  

காரை மணிவண்ணனின் உருவாக்கத்தில் இடம்பெற்ற  Facebook-2 என்ற நகைச்சுவை நாடகம் இன்றைய உலகம் உள்ளங்கைக்குள் அடங்கியிருப்பதைச் சித்தரிப்பதாக காரை சிறார்களின் நடிப்பில் இடம்பெற்றது. 

நிகழ்ச்சிகளுக்கு இடையே காரைநகர் பாடசாலை அதிபர்கள், காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் 'ஊரில் இருந்து' என்னும் பகுதியில் விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.

அடுத்ததாக மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தமது தலைமையுரையில், காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளுக்கான நிரந்தர வைப்புத்திட்டத்தில் வியாவில் சைவ வித்தியாசாலைக்கான நிரத்திர வைப்பிற்கான நிதியத்திற்காக இன்றைய காரை வசந்தம் விழாவினையொட்டி சேகரிக்கப்பட்ட பத்து லட்சம் இலங்கை ரூபாய்கள் மூன்று தினங்களுக்கு முன்னரேயே காரை அபிவிருத்தி சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் நிறைவு பெற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.  

அடுத்து விழாவின் கருவாகிய இவ்வாண்டு நூற்றாண்டு கண்ட கல்வியாளர்களையும் காரை மண்ணின் சின்னங்களையும் போற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றன. 'காரைநகர் சைவமகா சபை' என்னும் பொருளில் மன்றத்தின் நிறுவுனர்களில் ஒருவரும் கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவருமாகிய சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களும், 'கலாநிதி.ஆ.தியாகராசா' என்னும் பொருளில் பல்மருத்துவ நிபுணர் ஆதிகணபதி சோமசுந்தரம் அவர்களும், 'கோவளம் வெளிச்ச வீடு' என்ற தலைப்பில் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களும், 'மூதறிஞர் க.வைத்தீசுவரக்குருக்கள்' என்ற தலைப்பில் சிவத்தமிழ்காவலர் திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்களும் சிறப்புரைகளை ஆற்றினர். 

அமல்குமார் நெறியாள்கையில் செல்வா. விமல், சுபாஸ், கிருஸ்ணன் ஆகியோர் நடிப்பில் 'அகல்விழி' என்ற நகைச்சுவை நாடகம் அரங்கத்தில் சிரிப்பொலியை எதிரொலிக்க வைத்தது. 

அடுத்து இசைக்கலாமணி இசைக்கலா வித்தகர் திருமதி.பவானி ஆலாலசுந்தரம் அவர்களின் மாணவிகள் செல்வி கவிதா சிவநாதன், செல்வி காவிரி சிவநாதன் ஆகியோரின் 'தமிழ் இசை' என்னும் இசை நிகழ்ச்சி தமிழின் சுவையை இசைவடிவில் தந்தது. 

காரைக் கலைஞர்களின் உருவாக்கத்தில், காரைச் சிறார்கள் வழங்கிய 'காரை விழுதுகள்' என்ற சமூக நாடகம் காரைநகரின் சிறப்புகளை எடுத்து வந்து சபையோரை காரைநகருக்கு அழைத்துச் சென்ற அழகான படைப்பாக அமைந்தது. இந்த நாடகத்தின் முன்னோடி ஒளியிழைக்கு கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிபர் திரு.இளையபாரதி அவர்களும், திருமதி.நிர்மலா இரட்ணசபாபதி அவர்களும் குரல் வழங்கியிருந்தனர்.

பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் அனைவரையும் கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகத்தினர் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

கலைநிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் கனடா-காரை கலாச்சார மன்றம் பாராட்டு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.  

இடைவேளை இல்லாமல் தொடர்ந்து இடம்பெற்ற விழாவில் இடையிடையே சபையோர் இலவசமாக வழங்கப்பட்ட சிற்றுண்டி, கோப்பி, குளிர்பானங்களை அருந்தி சோர்வின்றி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். 

விழாவின் வெற்றிக்கு உழைத்து உதவிய அனைவருக்கும் மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திரு.அரியரட்ணம் மனோகரன் நன்றி கூறி உரையாற்றினார். 

மூத்த வானொலி அறிவிப்பாளர் திரு.பா.ஞானபண்டிதன், கனடியத்தமிழ் வானொலி அறிவிப்பாளர் திரு.கோகுலன் திருஞானசம்பந்தர், கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் செல்வி பைரவி சிவராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தனர். 

சிறப்பான நிகழ்ச்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தும் வழமைபோலவே நேரக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படாதமை ஏமாற்றமளிப்பதாக இருந்தபோதிலும் 'ஊருடன் கூடி வாழ்', 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' என்ற ஒளவையின் அமுத வாக்குகளுக்கு அமைய கனடா வாழ் காரை கலா ரசிகர்கள் சுகந்தம் வீசிய காரை வசந்தத்தை சுவாசித்துச் சென்றனர்.   

0-7 0-8 0-9 0-10 0-11 199a2514 199a2515 199a2516 199a2517 199a2518 199a2519 199a2520 199a2521 199a2522 199a2524 199a2525 199a2526 199a2527 199a2528 199a2529 199a2530 199a2531 199a2532 199a2533 199a2534 199a2535 199a2539 199a2541 199a2543199a2545 199a2547 199a2548 199a2549 199a2550 199a2551 199a2552 199a2553 199a2554 199a2555 199a2556 199a2557 199a2558 199a2559 199a2560 199a2561 199a2562 199a2563 199a2564 199a2565 199a2566 199a2567 199a2568 199a2569 199a2570 199a2571 199a2572 199a2573 199a2574 199a2575 199a2576 199a2577 199a2578 199a2580 199a2581 199a2582 199a2584 199a2585 199a2586 199a2588 199a2589 199a2591 199a2597 199a2598 199a2599 199a2600 199a2601 199a2602 199a2603 199a2604 199a2605 199a2606 199a2607 199a2608 199a2609 199a2610 199a2611 199a2612 199a2614 199a2615 199a2616 199a2617 199a2618 199a2619 199a2620 199a2621 199a2622 199a2623 199a2624 199a2625 199a2626 199a2627 199a2628 199a2629 199a2630 199a2631 199a2632 199a2633 199a2634 199a2635 199a2636 199a2637 199a2638 199a2639 199a2640 199a2641 199a2642 199a2643 199a2644 199a2645 199a2646 199a2647 199a2648 199a2649 199a2650199a2651 199a2652 199a2653 199a2654 199a2655 199a2656 199a2657 199a2658 199a2659 199a2660 199a2661 199a2662 199a2663 199a2664 199a2665 199a2666 199a2667 199a2668 199a2669 199a2670 199a2671 199a2672 199a2673 199a2674 199a2675 199a2676 199a2677 199a2678 199a2679 199a2680 199a2681 199a2682 199a2683 199a2684 199a2685 199a2686 199a2687 199a2688 199a2689 199a2690 199a2691 199a2692 199a2693 199a2694 199a2695 199a2696 199a2697 199a2698 199a2699 199a2700 199a2701 199a2702 199a2703 199a2704 199a2705 199a2706 199a2707 199a2708 199a2709 199a2710 199a2711 199a2712 199a2714 199a2715 199a2716 199a2717 199a2718 199a2719 199a2720 199a2721 199a2722 199a2723 199a2724 199a2725 199a2726 199a2727 199a2730 199a2731 199a2732 199a2733 199a2734 199a2735 199a2737 199a2738 199a2739 199a2740 199a2741 199a2742 199a2743 199a2744 199a2746 199a2747 199a2749 199a2750 199a2751199a2752 199a2753 199a2754 199a2755 199a2756 199a2757 199a2758 199a2759 199a2760 199a2761 199a2762 199a2763 199a2764 199a2765 199a2766 199a2767 199a2768 199a2769 199a2770 199a2771 199a2772 199a2773 199a2774 199a2775 199a2776 199a2777 199a2778 199a2779 199a2780 199a2781 199a2782 199a2783 199a2784 199a2785 199a2786 199a2787 199a2788 199a2789 199a2790 199a2791 199a2792 199a2793 199a2794 199a2795 199a2796 199a2797 199a2798 199a2799 199a2800 199a2801 199a2802 199a2803 199a2804 199a2805 199a2806 199a2807 199a2808 199a2809 199a2810 199a2811 199a2812 199a2813 199a2814 199a2815 199a2816 199a2817 199a2818 199a2819 199a2820 199a2821 199a2822 199a2823 199a2824 199a2825 199a2826 199a2827 199a2828 199a2829 199a2830 199a2831 199a2832 199a2833 199a2834 199a2835 199a2836 199a2837 199a2838 199a2839 199a2840 199a2841 199a2842 199a2843 199a2844 199a2845 199a2846 199a2847 199a2848 199a2849 199a2850 199a2851 199a2853 199a2854 199a2855 199a2856 199a2857 199a2860 199a2864 199a2865 199a2866 199a2872 199a2873 199a2884 199a2885 199a2886 199a2887 199a2889 199a2890 199a2891 199a2894 199a2895 199a2897 199a2898 199a2899 199a2900 199a2901 199a2902 199a2903 199a2904 199a2905 199a2906 199a2907 199a2908 199a2909 199a2910 199a2911 199a2912 199a2913 199a2914 199a2915 199a2916 199a2917 199a2918 199a2919 199a2920 199a2921 199a2922 199a2923 199a2924 199a2925 199a2926 199a2927 199a2928 199a2929 199a2930 199a2931 199a2932 199a2933 199a2934 199a2935 199a2936 199a2937 199a2938 199a2939 199a2940 199a2941 199a2942 199a2943 199a2944 199a2945 199a2946 199a2947 199a2948 199a2949 199a2950 199a2951 199a2952199a2953 199a2954 199a2955 199a2956 199a2957 199a2958 199a2959 199a2960 199a2961 199a2962 199a2963 199a2964 199a2965 199a2966 199a2967 199a2968 199a2969 199a2970 199a2971 199a2972 199a2973 199a2974 199a2975 199a2976 199a2977 199a2978 199a2979 199a2980 199a2981 199a2982 199a2983 199a2984 199a2985 199a2986 199a2987 199a2988 199a2989 199a2990 199a2991 199a2992 199a2993 199a2994 199a2995 199a2996 199a2997 199a2998 199a2999 199a3000 199a3001 199a3002 199a3003 199a3004 199a3005 199a3006 199a3007 199a3008 199a3009 199a3010 199a3011 199a3012 199a3013 199a3014 199a3015 199a3016 199a3017 199a3018 199a3019 199a3020 199a3021 199a3022 199a3023 199a3024 199a3025 199a3026 199a3027 199a3028 199a3029 199a3030 199a3031 199a3032 199a3033 199a3034 199a3035 199a3036 199a3037 199a3038 199a3039 199a3040 199a3041 199a3042 199a3043 199a3044 199a3045 199a3046 199a3047 199a3048 199a3049 199a3050 199a3051 199a3052 199a3053 199a3054 199a3055 199a3056 199a3057 199a3058 199a3059 199a3060 199a3061 199a3062 199a3063 199a3064 199a3065 199a3066 199a3067 199a3068 199a3069 199a3070 199a3071 199a3072 199a3073 199a3074 199a3075 199a3076 199a3077 199a3078 199a3079 199a3080 199a3081 199a3082 199a3083 199a3084 199a3085 199a3086 199a3087 199a3088 199a3089 199a3090 199a3091 199a3092 199a3093 199a3094 199a3095 199a3096 199a3097 199a3098 199a3099 199a3100 199a3101 199a3102 199a3103 199a3104 199a3105 199a3106 199a3107 199a3108 199a3109 199a3110 199a3111 199a3112 199a3113 199a3114 199a3115 199a3116 199a3117 199a3118 199a3119 199a3120 199a3121 199a3122 199a3123 199a3124 199a3125 199a3126 199a3127 199a3128 199a3129 199a3130 199a3131 199a3132 199a3133 199a3134 199a3135 199a3136 199a3137 199a3138 199a3139 199a3140 199a3141 199a3142 199a3143 199a3144 199a3145 199a3146 199a3147 199a3148 199a3149 199a3150 199a3151 199a3152 199a3153 199a3154 199a3155 199a3156 199a3157 199a3158 199a3159 199a3160 199a3161 199a3162 199a3163 199a3164 199a3165 199a3166 199a3167 199a3168 199a3173 199a3174 199a3175 199a3176 199a3177 199a3178 199a3179 199a3180 199a3181 199a3182 199a3183 199a3184 199a3185 199a3186 199a3187 199a3188

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கலைவிழாவான "காரை வசந்தம்-2016" இன் பிரதம விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொள்ளும் உலக அளவில் காரை மண்ணுக்கு பெருமை சேர்த்துவரும் கல்வியாளர் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் நேற்று மாலை 4:00 மணிக்கு ரொரன்ரோ சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தபோது கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.  

பிருத்தானியா, லண்டன் பல்கலைகழக கணனிப் பொறியியல்துறை பேராசிரியரான ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் கீர்த்திமிகு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று உலக அளவில் புகழ்பெற்று காரை மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாண்டு நூறு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் காரை மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியாளர்களையும், காரைநகரின் அடையாளச் சின்னங்களையும் போற்றி எடுக்கப்படும் "காரை வசந்தம் -2016" இன்று  சனிக்கிழமை மாலை  5:00 மணிக்கு ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்,  இன்றைய எம் காரை மண் பெற்ற மாணவ தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக சேவையாற்றும் பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் பிரதம விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொள்வது சாலப் பொருத்தாமனது. 

விமான நிலையத்தில் பேராசிரியர் ஆ.நல்லநாதன் அவர்களை கனடா-காரை நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றபோது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

img_1683 img_1684 img_1685 img_1686 img_1687 img_1688 img_1689 img_1690 img_1691 img_1692 img_1693 img_1694

 

 

 

எதிர்வரும் சனிக்கிழமை கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் சைவசித்தாந்த ஜோதி, தமிழ் சுடர், சிவத்தமிழ்காவலர் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து 25.10.2016 இன்று கனடா வந்திறங்கினார்.

எதிர்வரும் சனிக்கிழமை கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் சைவசித்தாந்த ஜோதி,  தமிழ் சுடர், சிவத்தமிழ்காவலர் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து 25.10.2016 இன்று கனடா வந்திறங்கினார். கனடா காரை கலாச்சார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இவ்வரவேற்பில் கலந்து கொண்டனர்.

காரை வசந்தம் நிகழ்வுகள் இவ்வருடம் நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த காரை மண்ணின் பெயர் விளங்க வைத்த பெரியவர்களான மூதறிஞர் க. வைத்தீஸ்வரகுருக்கள், கலாநிதி ஆ.தியாகராசா மற்றும் காரை மண்ணின் அடையாள சின்னங்களாக விளங்கும் சைவ மகா சபை, கோவளம் வெளிச்ச வீடு ஆகியய மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் நினைவு கூரும் வகையில் நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் சிறார்கள் பலரது கலை படைப்புக்கள் மேடையேறவுள்ளன. காரை வசந்தம் விழா மலர் பிரத்தியேகமாக காரைநகர் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்களின் முழுமையான விளக்கங்களுடனும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வரலாற்று பதிவாக நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தினையும் தாங்கி கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொக்கிஷமாக, காரைநகர் பாடசாலைகளின் நிலமைகளை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையிலும் வெளிவரவுள்ளது.

கனடாவில் தீபாவளி தினமான 29.10.2016 அன்று வீசவுள்ள காரை வசந்தம் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தீமைகள் பல புரிந்த நரகாசுரனை அழித்த இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.

img_1662 img_1663 img_1664img_1673img_1674 img_1675 img_1676 img_1677img_2796 img_2798img_2803 img_2805img_2808 img_2809 img_2810 img_2811 img_2812

காரை வசந்தம் – 2016. நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த காரை அறிஞர்கள் மற்றும் காரை மண்ணின் சின்னங்களை நினைவுகூரும் வசந்த விழா!

karai-vasantham-2016

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் அறியத்தரும் கனடா காரை பட்டதாரிகள் கௌரவிப்பு நிகழ்வு!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் அறியத்தரும் கனடா காரை பட்டதாரிகள் கௌரவிப்பு நிகழ்வு!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் மற்றுமோர் செயற்பாடாக கனடாவில் வதியும் காரைநகர் மக்களின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிற்கு தெரிவாகி கல்வி கற்று வருபவர்கள் மற்றும் கடந்த காலங்களில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களை கௌரவிக்க எண்ணியுள்ளது.
எதிர்வரும் 29.10.2016 அன்று நடைபெறவுள்ள ‘காரை வசந்தம் – 2016’ நிகழ்வுகளின் போது கனடா வாழ் காரைநகர் பெற்றோர்களின் பிள்ளைகள் கனடாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிற்கு அனுமதி பெற்று பட்ட படிப்பு மேற்கொண்டு வருபர்கள் மற்றும் இதுவரை படித்து முடித்து பட்டம் பெற்றவர்களை வெளிக்கொண்டு வருவதுடன் அவர்களை கௌரவிக்க எண்ணியுள்ளது.

காரைநகர் மண்ணை அடியாக கொண்ட பேரன், பேத்திகளை அல்லது பெற்றோர்களை அடியாக கொண்ட கனடாவில் பல்கலைக்கழக அனுமதி அல்லது கல்லூரி அனுமதி பெற்று கனடாவில் பட்ட படிப்பு கல்வியை தொடரும் மாணவர்கள் உடனடியாக கனடா காரை கலாச்சார மன்றத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் பெற்ற கல்வியின் மூலம் எமது ஊர் காரை மண் பெருமை கொள்கின்றது. ‘காரை வசந்தம் 2016’ இன் போது உங்களை எமது ஊரின் சார்பாக கனடா காரை கலாச்சார மன்றம் கௌரவிக்க எண்ணியுள்ளது. மிகவும் குறுகிய கால இவ்வேண்டுகோளினை ஏற்று தங்களது பெயர், விபரம், கல்வி கற்கும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி, பட்ட படிப்பு மேற்கொள்ளும் பிரிவு, அத்துடன் படித்து முடித்து பட்டம் பெற்றவராக இருந்தால் அதன் முழு விபரம் என்பவற்றினை கனடா காரை கலாச்சார மன்றத்தின் karainagar@gmail.com  இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நிகழ்வானது பிரபல வீடுவிற்பனை முகவரும், காரை மண் அபிமானியுமான திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை அவர்களின் ஆதரவுடன் நடைபெறவுள்ளது. இக்கௌரவிப்பு நிகழ்வின் போது கலந்து கொண்டு தங்களிற்கான கௌரவத்தினை பெற்றுக்கொண்டு மண்ணையும் மக்களையும் பெருமை கொள்ள அழைக்கின்றோம்.

இது தொடர்பான உங்களது மேலதிக தொடர்புகளுக்கு:

karainagar@gmail.com
416 642 4912: கனடா காரை
 கலாச்சார மன்றம்
அல்லது திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை – 647 406 6352

                   நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் காரை வசந்தம் 2016 பற்றிய அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் காரை வசந்தம் 2016 பற்றிய அறிவித்தல்!


 இவ்வருடம் காரை வசந்தம் கலை விழா நிகழ்வுகள் காரை மண்ணில் பெருமை சேர்த்த பெரியவர்களும் நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்தவர்களுமான கலாநிதி ஆ.தியாகராசா அவர்களினதும் மூதறிஞர் க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் மற்றும் காரை மண்ணின் கலாச்சார சின்னமாக விளங்கும் காரைநகர் சைவ மகா சபையின் நூறாவது ஆண்டு மற்றும் காரை மண்ணின் அடையாள சின்னமாக விளங்கும் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள கோவளம் வெளிச்சவீடு ஆகியனவற்றின் பெருமைகளை உணர்ந்து கொள்ளும் வகையில் முத்தமிழ் விழாவாக இலையுதிர் காலத்தில் இனிய வசந்தமாக வீசவுள்ளது.


ஒக்டோபர் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை 1120 Tapscott Road இல் அமைந்துள்ள தமிழ் இசை கலாமன்ற கலை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 10.30 வரை நடைபெறவுள்ளது.


இயல், இசை, நாடகம் அத்துடன் காரை மண்ணின் பெயர் விளங்கும் வகையில் கலை நிகழ்வுகளும் சிறுவர்களின் தமிழ் மொழி அறிவு பேச்சுக்களும் இடம் பெறவுள்ளன. கலையார்வலர்கள், கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள், காரை மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றனர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாகத்தினர்.


இந்நிகழ்வுகள் மூலம் பெறப்படும் நிதி காரைநகர் பாடசாலைகளின் கல்வியினை மேம்படுத்த மட்டும் வழங்கப்படவுள்ளது. அனுமதி சீட்டுக்கள் மண்டப வாயிலில் தனியொருவருக்கு 15 டொலர்கள் மட்டுமே. குடும்பத்திற்கான 50 டொலர்கள் மற்றும் 100 டொலர்கள் பெறுமதியான வி.ஐ.பி ரிக்கட்டுக்கள் என்பன முற்கூட்டியே பெற்றுக் கொள்ள 416 642 4912 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

                                                                நன்றி

 கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா-காரை கலாச்சார மன்றம் சங்கீத இசைக்கருவிகள் பழகும் கலைஞகர்களிற்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா-காரை கலாச்சார  மன்றம் சங்கீத இசைக்கருவிகள் பழகும் கலைஞகர்களிற்கான அறிவித்தல்!

எதிர்வரும் 29.10.2016 அன்று நடைபெறவுள்ள காரை வசந்தம் – 2016 நிகழ்வுகளின் போது செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் நெறியாழ்கையில் "லயஅமுதம்" நிகழ்வு அரங்கேறவுள்ளது. இந்நிகழ்வானது மேற்கத்தைய மற்றும் கர்நாடக இசைகளின் சங்கமமாக அமையவுள்ளது. இந்நிகழ்விற்கு மேற்கத்தைய மற்றும் கர்நாடக இசைக் கருவிகளை பழகி வரும் காரை கலைஞர்கள் கலந்து சிறப்பிக்க அரிய சந்தர்ப்பம்.

உடனடியாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு karainagar@gmail.com இமெயில் ஊடாகவோ அன்றி 416 400 3198 தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொள்ளவும். அல்லது அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களுடனான தொடர்புகளுக்கு 416 999 7874 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

                                                             நன்றி!

கனடா காரை கலாச்சார  மன்றம்

காரை வசந்தம் – 2016. நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த காரை அறிஞர்கள் மற்றும் காரை மண்ணின் சின்னங்களை நினைவுகூரும் வசந்த விழா!

காரை வசந்தம் – 2016. நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்த காரை அறிஞர்கள் மற்றும் காரை மண்ணின் சின்னங்களை நினைவுகூரும் வசந்த விழா!

karai-vasantham-2016

காரை மண்ணின் பெருமைகளை விளங்க வைக்கும் வகையில் செயற்பட்ட கல்விசார் அறிஞர்கள் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா, மூதறிஞர் சிவத்திரு க.வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களுடன் காரை மண்ணின் அடையாள சின்னங்களாக விளங்கும் கோவளம் வெளிச்சவீடு, சைவமகா சபை ஆகியனவற்றின் நூற்றாண்டுகளை சிறப்பிக்கும் வகையில் காரை வசந்தம் – 2016 கனடாவிலே இலையுதிர் காலத்தில் இளவேனில் வசந்தமாக ஒக்டோபர் 29ம் திகதி வீசவுள்ளது.


நூற்றாண்டுகளை கடந்தும் எமது ஊர் மண்ணின் வரலாற்றில் பின்னி பிணைந்து நீக்கமற நிறைந்து நிற்கும் அறிஞர்களையும் சின்னங்களையும் கனடா காரை கலாச்சார மன்றம் கௌரவித்து சிறப்பளிக்கும் வகையில் காரை வசந்தம் – 2016.


இந்நிகழ்வு சிறப்படையவும் கனடா வாழ் காரை மக்களின் ஒற்றமை வலுவோங்கவும் கலந்து கொண்டு சிறப்பிக்க கனடா வாழ் காரை மக்களுடன் உலகம் முழுவதும் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக… காரை மண்ணின் புகழ் பரவட்டும்….! நன்றி!


                நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம்

karai-vasantham-2016

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA logo

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார  மன்றம் விடுக்கும் அறிவித்தல்!


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் ஊடாக கடந்த வருடம் 05.05.2015 அன்று காரைநகரில் உள்ள 10 ஆரம்ப பாடசாலைகளுக்கும் பின்னர் அதனை தொடர்ந்து மேலும் ஒரு ஆரம்ப பாடசாலைக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்கள் வீதம் நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. மேலும் இதுவரை மற்றுமொரு பாடசாலையான வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு இந்நிதியானது வழங்கப்படவில்லை. எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள ‘காரை வசந்தம்’ நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்பு நிதியத்திற்கு வழங்கப்பட்டு முறையே மற்றைய 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு வழங்கப்பட்டது போன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவதற்கு நிர்வாக சபையில் 10.09.2016 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


காரை வசந்தம் – 2016 நிகழ்வின் போது விளம்பர அனுசரணை மற்றும் விழா அனுசரணையின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியுதவிகள் மூலம் மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்புக்குரிய நிதி வழங்கப்படும் என்பதுடன் எதிர்வரும் காரை வசந்தம் நிகழ்வின் போது கனடா வாழ் காரை சிறார்களிற்கு பெறுமதி மிக்க சிறப்பு பரிசில்கள் தமிழ் மொழித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களிற்கு வழங்கப்படவுள்ளதுடன் காரை வசந்தம் நிகழ்வு சிறப்புடன் அதிக நிதி செலவு இன்றி நடாத்துவதற்கும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.


காரை வசந்தம் நிகழ்விற்கு அனுமதி ரிக்கெட்டுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு கனடா வாழ் காரை மக்கள் அலை அலையாக உரிமையுடனும் நம்பிக்கையுடனும் கலந்து கொண்டால் மட்டும் போதுமானது. மன்றமும் மண்ணும் வளம் பெறும் என்பதுடன் கனடாவில் காரை மக்களின் ஒற்றுமையும் வலுப்பெறும்.


           நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம்

                               
                                       "WORKING TOGETHER IS SUCCESS"

காரை வசந்தம் 2016 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logo

காரை வசந்தம் 2016 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2016 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது. 

காரை வசந்தம் 2016 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் செப்டெம்பர் 30, 2016ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர்   செப்டெம்பர் 30, 2016ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.comஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
                                  
                                   
  "WORKING TOGETHER IS SUCCESS"

கனடா- காரை கலாச்சார மன்ற காரை வசந்தம் விழா உபகுழுவில் இணைந்து கொள்ள விரும்புவர்களுக்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா- காரை கலாச்சார மன்ற காரை வசந்தம் விழா உபகுழுவில் இணைந்து கொள்ள விரும்புவர்களுக்கான  அறிவித்தல்!

  அன்புடையீர்!

 கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் காரை வசந்தம்  ஒக்டோபர் மாதம் 29ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற இருப்பதால் காரை வசந்தத்தில்  பணியாற்ற விரும்புவர்கள் மன்றத்தின் உபகுழுவில் இணைந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

பணியாற்ற விரும்புவர்கள்  தங்கள் பெயர்களை எதிர்வரும் 16.09.2016 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

                                                             நன்றி  

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

                                    "WORKING TOGETHER IS SUCCESS"
 

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2016”

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் "காரை வசந்தம் 2016"

கனடா காரை கலாச்சார மன்றத்தின் "காரை வசந்தம் 2016" எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்  பின்னர் அறிவிக்கப்படும் 

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்.

Image

மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’ 2015

Video

மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’ 2015

 

Karai Vasantham – 2015 Dec 19, 2015

Posted by Skp Delft Ekuruvi Aiya on Saturday, 19 December 2015

மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய ‘காரை வசந்தம்’

galleryமண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் கரை புரண்டோடிய 'காரை வசந்தம்'


-காரைக் கூத்தன்-

 

கனடா-காரை கலாச்சார மன்றம் வழங்கிய காரை வசந்தம் 2015, நவீன வசதிகளுடன் அமைந்த சீன கலாசார மண்டபத்தில்  அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் வெற்றிகரமாக நேற்றய தினம் நடந்து அனைவரதும் பாராட்டினைப் பெற்ற கலைகளின் சங்கமமாக அமைந்து விளங்கியது.

சரியாக மாலை 6.00 மணிக்கு விழாவின் முதன்மை அனுசரணையாளர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம், மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபால் மயில்வாகனமும் பாரியாரும், முன்னாள் பொருளாளர்களான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரனும் பாரியாரும, மன்றத்தின் தலைவர் இரவி இரவீந்திரனும் பாரியாரும்,  கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரனும் பாரியாரும் ஆகியோரினால்  மங்கள விளக்கேற்றிவைக்கப்பட்டு விழாவின் நிகழ்ச்சிகள்  மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன. அக வணக்கத்தைத் தொடர்ந்து காரைச் சிறார்களினால் கனேடிய தேசியப் பண், தமிழ்மொழி வாழ்த்து, மன்றப் பண் என்பன அழகுற இசைக்கப்பட்டன. மன்றத்தின் உப-தலைவரான திரு.குமரேசன் கனகசபை வரவேற்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து லயபிருந்தம் நுண்கலைக் கல்லூரி அதிபர் மிருதங்க கலாவித்தகர் ரதிரூபனின் உருவாக்கத்தில் 25க்கு மேற்பட்ட சிறுவர்கள் வழங்கிய 'லயபிருந்தம்' இசை நிகழ்வு ரசிகர்களை 45 நிமிட நேரத்திற்கு கட்டிப்போட்டிருந்த அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது. பாடல்களின் இசை, மிருதங்கம, வயலின, கீபோட,   போன்ற இசைக்கருவிகளின் இசை ஆகியவற்றின் சங்கமமாக வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது 'லயபிருந்தம.;'

காரை வசந்தம் விழாவினை முன்னிட்டு காரைச் சிறார்கள் மத்தியில் வழமைபோன்று இவ்வாண்டும் நடாத்தப்பட்டிருந்த தமிழ்மொழித் திறன் பண்ணிசை ஆகியவற்றில் வெற்றி பெற்ற சிறார்களிற்கான விருதுகளும் பங்குபற்றியவர்களிற்கான ஊக்கிவிப்பு விருதுகளும் வழங்கப்பட்டபோது சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றினைப் பெற்றுச் சென்றனர். பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் தமது பேச்சினை இவ்வரங்கில் நிகழ்த்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்ற முறைமை பாராட்டப்படக்கூடியதாகும்.

 

இவ்விழாவின் சிறப்பம்சங்களுள் ஒன்றான சிறப்பு மலரின் வெளியீட்டிற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்ட திரு.கனக.சிவகுமாரன் மலர்க்குழுவின் சார்பில் வெளியீட்டுரையினை சுருக்கமாக நிகழ்த்திய பின்னர் முதற்பிரதியை முன்னாள் மக்மாஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி தி.சிவகுமாரன் அவர்களிற்கு வழங்கி வெளியிட்டுவைத்திருந்தார். காரைநகரிலிருந்தும் காரை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்தும் அவ்வப்போது சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு வருகின்றதாயினும் கனடாவில் மட்டுமே தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக காரை மண் சார்ந்த விடயங்களை ஆவணப்படுத்தி வெளிவருகின்ற ஒரு சிறப்புச் சஞ்சிகையாக 'காரை வசந்தம்' அமைந்திருப்பது என்பதை சாதனைப் பதிவாகப் பார்க்க முடியும் எனத் தெரிவித்ததுடன் இதையிட்டு கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமைப்படமுடியும் என கனக சிவகுமாரன் தமது வெளியீட்டுரையில் குறிப்பிட்டார்.

விகடன் குழுவினர் வழங்கிய 'நாங்களும் கனடா தான்' என்ற நகைச் சுவை நாடகத்தில் பங்கு கொண்ட வானொலிக் கலைஞர்கள் தென்னிந்திய சினிமா நகைச்சுவைக் கலைஞர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துச் சென்றனர். விவேக், வடிவேலு ஆகியோரை விகடன் குழுவினர் தூக்கி எறிந்து விட்டதாக இவ்விழாவினைக் கண்டு களித்துச் சென்ற கனடாவின் பிரபல பத்திரிகையான கனடா உதயனின் செய்திப் பிரிவினர் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்ததுடன் விழாவின் தரமான நிகழ்ச்சிகளை வெகுவாகப் பாராட்டி விமர்சித்திருந்தமை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

எப்போழுதுமே வித்தியாசமான தயாரிப்புக்கனை வழங்கி ரசிகர்களின் பாராட்டினைப்பெற்று வரும் பால விமல நர்த்தனாலயம் அதிபர் திருமதி சித்திரா  தர்மலிங்கத்தின் உருவாக்கத்தில் 'திண்ணபுர தரிசனம்' என்ற நடனம் ரசிகர்களை மெய்மறக்கச் செய்திருந்தது. அதேபோன்று அபிநயாலயா நாட்டியாலயம் அதிபர் திருமதி ரஜனி சக்திரூபன் வழங்கிய கண்ணன் நடனம், கலை அருவி கலைக் கல்லூரி அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் வழங்கிய Fusion நடனம் என்பனவும் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தன.

குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படக் காரணம் பெற்றோர்களா? பிள்ளைகளா? என்ற தலைப்பிலான பட்டி மன்றத்தில் காரைச் சிறார்கள் பங்குகொண்டு அசத்திவிட்டார்கள். பயிற்சி பெற்று இப்பட்டிமன்றத்தில் இவர்கள் தங்களது வாதத்தினை வைத்திருந்தாலும் பக்குவப்பட்ட  பேச்சாளர்கள் போன்று இவர்கள் அடுக்குத் தமிழில் அழகாகப் பேசி வாதிட்டிருந்தமை அனைவரையும் வியக்கவும் சிந்திக்கவும் பூரிக்கவும் வைத்திருந்தது.

பிரபல வானொலி தொலைக்காட்சிக் கலைஞரான P.S.சுதாகரனின் உருவாக்கத்தில் ‘கனடா TO காரைநகர்’ என்ற நடன நாடகம் மண்டபத்திலிருந்தோருக்கு ஒரு கணம் காரைநகருக்கு சென்று வந்தது போன்ற உணர்வினை ஏற்படுத்தியிருந்தது.

KK Electronics நிறுவனத்தின் அதிபர் திரு.பொன்னம்பலம் குழந்தைவேலுவின் தொழில்நுட்பம் ஊடாக ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் காரைநகர்க் காட்சிகள் உள்ளிட்ட பொருத்தமான காட்சிகளை அரங்கின் பின்னால் அமைந்திருந்த பெரிய அளவிலான வெண்திரையில் விழுத்தியிருந்தமை இந்நிகழ்ச்சிகளிற்கு மெருகூட்டி அவற்றினை உன்னதமடையச் செய்திருந்தது..

பிரபலமான இசைக் குழுவான பயஸ் இசைக்குழுவின் இசை நிகழ்வு நேரப்பற்றாக்குறை காரணமான சுருக்கவேண்டி ஏற்பட்டமை ஏமாற்றமளிப்பதாகவிருந்ததாயினும் இக்குழுவினால் குறுகிய நேரத்தில் வழங்கப்பட்ட இனிமையான இசையில் அனைவரும் மூழ்கித்திளைத்தனர்.

கனடா-காரை கலச்சார மன்றத்தின் தலைவர் திரு.இரவி இரவீந்திரன் தமது தலைமையுரையில் வழமைக்கு மாறாக விடுமுறை காலமான டிசம்பர் மாதத்தில் இந்நிகழ்வினை நடாத்தியிருந்தபோதும் நாம் எதிர்பார்தததற்கு மேலாக காரைநகர் மக்களின் வருகை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளதாக தெரிவித்ததுடன் இவ்விழாவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கி ஒத்துழைத்த அனைவரையும் பாராட்டி நன்றி கூறினார்.

பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த மருத்துவ கலாநிதி சிவதேவி பாலசிங்கம் தமதுரையில்  காரைச் சிறார்கள் தமிழோடு விளையாடியதும் கலைநிகழ்வுகளில் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்ததும் தம்மை வியக்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயலாளர் கணேசன் பாலசுப்பிரமணியம் விழாவின் வெற்றிக்கு காரணமாகவிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

கனடா பல்கலாசார வானொலியின் செய்தி வாசிப்பாளர் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன், கனேடிய தமிழ் வானொலியின் அறிவிப்பாளர் ரி.எஸ்.கோகுலன, திரு.சங்கரப்பிள்ளை தவராசா ஆகியோர் நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கி நிகழ்விற்கு அணிசேர்த்தனர்.

கலைஞர் P.S..சுதாகரன் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு தொய்வின்றி நிகழ்ச்சிகள் நடந்தேற சிறப்பாக அவற்றினை ஒழுங்கமைத்திருந்தார்.

நேரப்பற்றாக் குறையினை கருத்திற்கொண்டு இடைவேளை விடப்படாமலிருந்தமை ரசிகர்களிற்கு சிறிது சலிப்பினை ஏற்படுத்தியிருந்தது.  

 

கைத்தொலைபேசியில் படங்களைப் பார்ப்பதற்கு
  இங்கே அழுத்தவும்

KARAI VASANTHAM 2015 PHOTOS

https://picasaweb.google.com/m/viewer#album/109143386914539225429/6230964373718552449

Video

காரைவசந்தம் 2015 நேர்காணல் TVI

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2015

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2015

KV2015

Older posts «