Category Archive: காரைநகர் இந்துக் கல்லூரி

காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு நடைபெற்றது.

கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்ட இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்ம சாந்திக்காக இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.

கலாநிதி கென்னடி அவர்கள் சிறந்த கல்விமானாகவும் மக்களின் தொண்டனாகவும் விளங்கி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் தமிழ் மக்களுக்கான பணியிலும் காரை.மண்ணின் மக்களுக்கான பணியிலும் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்தி அனைவர் நெஞ்சங்களிலும் நிலைபெற்றுவிட்ட உன்னதமான மக்கள் சேவையாளன் என திருமதி சிவந்தினி தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டிருந்தார். கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அன்னாருக்கு அஞ்சலி தெரிவித்து பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

 

கலாநிதி. ஜோன் மனோகரன் கெனடி விஜயரட்ணம் அவர்களின் மறைவு குறித்து காரை இந்துக் கல்லூரி சமூகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

உயிரியல் விஞ்ஞானம் – 1, உயிர் முறைமை தொழில்நுட்பம் – 2, வணிகம் – 1, கலைத்துறை – 4 உள்ளிட்ட 8 மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெறும் வாய்ப்பு! 

முதல் தடவையாக  உயிர்முறைமைகள் தொழினுட்பவியலில் 2 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்!

சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

இப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரைநகர் கோட்ட மட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

இப்பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 21 மாணவர்கள் குறித்த கற்கைநெறிகளுக்குரிய 3 பாடங்களிலும் சித்தியடைந்ததன் மூலம் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகமையினைப் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள மாவட்ட நிலையினை கருத்திற்கொள்ளும்போது குறைந்தது எண்மருக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைப்பது உறுதியானது எனக் கூறப்படுகிறது. வெட்டுப் புள்ளி நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

உயிரியல்(1), வணிகம்(1), கலை(4), உயிர் முறைமை தொழில்நுட்பம்(2), ஆகிய கற்கைநெறிப் பிரிவுகளைச் சேர்ந்த 8 மாணவர்களே பல்கலைக் கழகம் செல்கின்ற வாய்ப்பினை பெற்றுள்ள அதேவேளை உயிர் முiறைமை தொழில்நுட்பப் பிரிவுக்கு இக்கல்லுரியிலிருந்து முதல் தடவையாக இரு மாணவர்கள் செல்லவுள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்.

இக்கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள் குறித்து மகழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் இம்மாணவர்களுக்கும் இவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பராட்டி வாழ்த்துகின்றது.

மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேற்றின் விபரங்களை கீழுள்ள அட்டவணையில் பார்வையிடலாம்:

 

No

 

Name Subject stream Results District Rank Entrance stream
1 Tharmalingam Nagaranjan commerce 2A B 75 Management
2 Vickneswaran Pathmini commerce BCS
3 Rasathurai Bavananthan commerce 2CS
4 Suntharalingam Umakanthan commerce 2CS
5 Krishnapillai Ajthkumar commerce C2S
6 Vickneswaran Kuruparan commerce C2S
7 Navaratnarajah Jasmina commerce 3S
8 Perinpanayakam Saranya Arts 2AB 100 Arts
9 Kantheeswaran Saransiya Arts 2BC 374 Arts
10 Yogaratnam Jusitha Arts ABC 273 Arts
11 Thevarasa Romila Arts 2BS
12 Kanagaratnam Abirami Arts 2BC 360 Arts
13 Uthayakumar Mehala Arts B2C
15 Kirishnapillai Dilakshan Arts C2S
16 Yoganathan Dharmitha Bio Tec 2BC 21 Bio Tec
17 Komaleswaran

Balasayanthan

Bio Tec ACS 33 Bio Tec
18 Somasuntharam

Jasitharan

Eng.Tec 3S
19 Krishnapillai

Ajithkumar

Eng.Tec 3S
20 Sriskantharasa Sarangan Eng.Tec 3S
21 Sivapatham Vithusa Bio B2S 574 Bio

 

அதிபர், ஆசிரியர்களுடன் சாதனை மாணவர்கள் பாடசாலை முன்றலில் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். பாடசாலையை சூழவுள்ள பொருத்தமான காணிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாடசாலைச் சமூகம் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. மடத்துக்கரை அம்பாள் ஆலயத்திற்கு எதிர்ப்புறமாக பிரதான வீதியுடன் அமைந்துள்ள இரண்டு பரப்புக் காணியை சென்ற ஆண்டு கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியிருந்தது. இக்காணியுடன்; இணைந்த மூன்று பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை உதவியிருந்தது. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்திருக்கும் ஐந்தரைப் பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பெரிய பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தினர் உதவியிருந்தனர். குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் எமது கல்லூரிக்குக் கிடைத்ததில் முன்னைநாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் பங்களிப்பு பாராட்டப்படக்கூடியது என்பதுடன் இத்திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது முதலாக அதற்குரிய காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு மேற்குறித்த காணிகள் பாடசாலைக்கு கிடைக்கச் செய்திருந்தார். காணிக் கொள்வனவு தொடர்பில் வாசுகி தவபாலன் விட்டுச் சென்ற பணியினை தற்போதய அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கறையோடு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

தற்போது ஏழு பரப்பு பரப்பளவுடைய மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் சென்ற வாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காணிக்குரிய பெறுமதி பதினேழரை இலட்சம் ரூபாவும் முத்திரைச் செலவு அறுபத்தொன்பதாயிரம் ரூபாவும் ஆக மொத்தம் பதினெட்டு இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது. வலந்தலைச் சந்திக்கு அண்மையாக மேற்கு பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக இக்காணி; அமைந்துள்ளது.

பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயலாற்றி வருகின்ற பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அதிபருக்கும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்திற்கும் உறுதுணையாகவிருந்து செயற்பட்டு வருபவர். அத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட காணிகளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் துப்புரவு செய்வதற்கு தனது பக்கோ இயந்திரத்தின் சேவையை இலவசமாக வழங்கி உதவி வருகின்றார். இவரது பெரு முயற்சியே குறிப்பிட்ட ஏழு பரப்புக் காணியையும் பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு உதவியுள்ளது.

இக்காணிக்குரிய சட்ட ஆவணத்தினை (உறுதி) பாடசாலையின் பெயரில் எழுதிய பணி கல்லூரியின் பழைய மாணவியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சாந்தி சிவபாதம் அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள பணிமனையில் இடம்பெற்றிருந்த சமயம் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், திரு.நேசேந்திரம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி, தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நடராசா பாரதி, பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், உதவிச் செயலாளர் திரு.நாகராசா, நிர்வாக சபை உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அகிலன், பழைய மாணவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களினால் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவரும் சமூகமளித்திருந்தனர். சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் காணிக்குரிய சட்ட ஆவணங்களை(உறுதி) எழுதும் பணியை இலவசமாகவே செய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணிக்குரிய பெறுமதியின் கொடுப்பனவிற்கான காசோலையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.கனகசபாபதி காணிக்குரிய சட்டரீதியான அதிகாரத்தினை கொண்டுள்ளவரிடம் வழங்குவதையும் சட்டத்தரணியின் காரியாலயத்தில் சமூகமளித்திருந்த அதிபரையும் ஏனையோரையும் கீழேயுள்ள படங்களில் பார்க்கலாம்.

 

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத், மாகாண மட்டத்தில் கோலம் போடுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி செல்வி அபினோசா கருணாகரன் ஆகியோரைப் பாராட்டி மதிப்பளித்த வைபவம் சென்ற வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வைபவத்தில் கலந்துகொண்டு நல்லாசிரியர் அரவிந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் பாராட்டுக் கேடயத்தினையும் வழங்கி மதிப்பளித்தார். அதேவேளை கல்லூரியின் ஆசிரியர்கள்; நலன்புரிக் கழகத்தின் சார்பில் உப-அதிபர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களாலும் பாராட்டு விருது வழங்கப்பெற்று நல்லாசிரியர் திரு.அரவிந்தன் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். சாதனை மாணவர்களான செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகியோருக்கான பாராட்டு விருதுகளும் ஊக்குவிப்புப் பரிசிலாக தலா ஐயாயிரம் ரூபா ரொக்கமும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் திரு.கனகசபாபதி அவர்களினால் வழங்கப்பெற்றிருந்தது.

இவ்வைபவத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய அதபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சிறப்பாக, சாதனை மாணவர்களுக்கு சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவே மதிப்பிடப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அதிபர், அடைவு மட்டத்திற்கு அண்மித்த தரத்திலுள்ள மாணவர்கள்; மேம்பட்டநிலையை அடைந்து பரிசிலைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற ஆர்வத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி; முயற்சியில் ஈடுபடுவதற்கான உந்துதலாக சங்கத்தினர் உதவி வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் அமைந்துள்ளன என மேலும் குறிப்பிட்டார். கல்லூரியின் தேவைகளை அறிந்து வழங்கி வருகின்ற அளப்பரிய உதவிகளுக்காக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இப்பாராட்டு வைபவத்தில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டவராக விளங்குகின்றார்.

பாடவிதானம், இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் ஆசிரியரது செயற்பாடுகள் மற்றும் வரவு இஒழுக்கம் ஆகியன உள்ளிட்ட பல விடயங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வலய மட்டத்தில் முதற்கட்டத் தெரிவுகள் இடம்பெற்றதுடன் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாகாண மட்டத்திலான இறுதித் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் 28-10-2017இல் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது திரு.அரவிந்தனுக்கான நல்லாசிரியர் விருது (குரு பிரதீபாபிரபா) வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு திரு.சண்முகம் அரவிந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அயற்கிராமமான மூளாயைச் சேர்ந்த திரு.சண்முகம் அரவிந்தன் விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழும் பெற்றுக்கொண்டவர். விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரசாயனவியல் பாடத்தையும் சிறப்பாக கற்பித்து மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர். இக்கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்ற அமரர் ஆறுமுகசாமி அமரர் நாகபூசணி தியாகராசா, திருமதி. சிவபாக்கியம் அருமைநாயகம் ஆகியவர்கள் மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

திரு.அரவிந்தன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமை குறித்து கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைவதுடன் திரு.அரவிந்தனை பாராட்டி வாழ்த்துகிறது. திரு.அரவிந்தனின் சிறந்த கல்விச் சேவையினால் மாணவர்கள் அடைந்துவரும் பயன்குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், விருது பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோருடன் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.ச. அரவிந்தன் அவர்களும் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டிருந்த கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற காரை இந்துவின் மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சென்ற வாரம் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது செல்வன் கோபிநாத் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கோலம் போடும் மாகாண மட்டத்திலான போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற காரை. இந்துவின் மற்றொரு மாணவி செல்வி அபினோசா கருணாகரன் அவர்களும் இவ்விழாவின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகிய இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.

அதேவேளையில் செல்வன் கோபிநாத்தின் வெற்றிக்கு வழிகாட்டி ஊக்குவித்த கணிதபாட ஆசிரியர் திரு.நாகரத்தினம் கேதாரநாதன் செல்வி அபினோசாவின் வெற்றிக்கு ஊக்குவித்த இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அகியோரையும் பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றி கூறுகின்றது.

OLYMPUS DIGITAL CAMERA

 

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆங்கில தின விழா 31.10.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய திரு கா. குமாரவேலு அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆங்கில பாடத்துறைக்கான தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு ந. பத்மராஜா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், பேச்சு, வினாடி வினா, நாடகம் போன்ற பல நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. அத்துடன் வலய மட்ட ஆங்கில தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழெ காணலாம்.

 

காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.

இதற்கமைய இக்கண்காட்சி காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இத்துறை சார்ந்த ஆசிரியர்களினதும் வலயக் கல்வி அலுவலர்களினதும் முழுமையான ஒத்துழைப்புடனும்; வெகு சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

சென்ற 17-10-2017 செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கணித விஞ்ஞான ஆய்வுகூடத்தில் காலை 9.00மணிக்கு அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்த இக்கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியையும் ஊட்டப்பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளிப் பள்ளிக்கூடம்)பாடசாலையின் அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

கல்லூரி மாணவர்களின் மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறைத் திறமையினை வெளிக்கொணர்ந்ததுடன் அவர்களின் செய்முறை அறிவினையும் மேம்படுத்த உதவிய இக்கண்காட்சியை அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பயன்பெற்றனர்.

இக்கண்காட்சி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள், உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகின்றனர். அத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியர்களை நினைவு கூரும் வகையிலும் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்ற வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையுடன் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் பெருங்காப்பாளரும் அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.

உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் கதிர்காமநாதன் கஐந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு.கார்த்திகேசு குமாரவேலு அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்திருந்தனர்.

மாணவர்களுக்கு அறிவு என்னும் ஞானச் சுடரினை ஏற்றி வைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பா மூலமாக வாழ்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்ததுடன் பசுமையை நிலைநாட்டும் முகமாக மரக் கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் அதிபரும் ஆசிரியர்களும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு அகமகிழ்ந்திருந்தனர். இந் நிகழ்விற்கான முழுமையான அனுசரணையை வழங்கிய கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு மனமார்நத நன்றியை அதிபர் தமது உரையின்போது தெரிவித்திருந்தார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பழைய மாணவர் சங்கம் அனுசரணை வழங்க வேண்டும் என்ற சங்கத்தின் கொள்கைக்கு அமைவாக 4வது ஆண்டாக ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை இவ்வாண்டும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் 16.09.2017 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நாடகப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் “வெல்க மானுடம் ” எனும் தலைப்பிலான நாடகத்தை திருமதி வி. ரமணன் ஆசிரியரின் இயக்கத்தில் செல்வி யோ. விம்சியா அவர்களின் உதவியுடன் மேடைறே;றி 2ம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றனர்.

இப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவிகளாக:
1. சி. அறிவரசன்
2. ர. சயுவண்ணன்
3. ஏ. துசியந்தன்
4. த. சுகிர்தன்
5. ச. யோன்
6. க. டிலோசினி
7. தே. ஜென்சிகா
8. வ. பவீனா
9. யோ. அஸ்மிலா
10. சி. விதுசா
11. கி. சர்மிளா
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியைகளான திருமதி வி. ரமணன், செல்வி யோ. விம்சியா ஆகியோரையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

 

வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்

வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர் 

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையிலிருந்து க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர் செல்வி உஷாந்தினி சோதிநாதன்.  தற்போது இந்துக் கல்லூரியில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் உஷாந்தினி தந்தையாரை இழந்துவிட்ட நிலையில் இவரது குடும்பம் வாழ்வாதார வசதிகளற்றுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு திறமை மிக்க மாணவியான உஷாந்தினி இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் வரைக்குமான இரண்டு ஆண்டுகளுக்கும் ஏற்படக்கூடிய கற்றல் செயற்பாட்டிற்கான உதவியை வழங்கி உதவ முன்வரவேண்டும் என கல்லூரி அதிபர் பரிந்துரை செய்திருந்தார். கனடாவில் வதியும் கல்லூரியின்  பழைய மாணவரான திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வுதவியை வழங்க முன்வந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினூடாக இதனை வழங்கியுள்ளார். திரு.மாணிக்கம் கனகசபாபதி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். செல்வி உஷாந்தினி இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கருசனையுடன் செயலாற்றிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் மாணவியின் குடும்பநிலையைப் புரிந்துகொண்டு உதவிய திரு.கனகசபாபதிக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திரு.மாணிக்கம் கனகசபாபதி கல்லூரிக்கு பயணம் செய்தபோது இவ்வுதவியின் முதலாவது தவணைக்கான உதவிக் கொடுப்பனவினை செல்வி உஷாந்தினி சோதிநாதனிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே பார்க்கலாம். அருகில் கல்லூரியின் அதிபரும் தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் காணப்படுகின்றார்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான பாராட்டு விழா 04.08.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு வே. புவனேந்திரராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு N. லோகநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர் சங்க கனடாக்கிளை பொருளாளர் திரு மா. கனகசபாபதி அவர்களும், பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு ந. யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 


இந்நிகழ்வில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 12 மாணவர்களும், 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 8 மாணவர்களும், 2017ஆம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும் ரொக்கப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் ரொக்கப் பரிசில்களை வழங்குவதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முப்பத்தையாயிரம் ரூபாவினை வழங்கி உதவியிருந்தது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறான சிறப்புச் சித்திகளை பெற காரணமாக இருந்த ஆசிரியர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களுக்கான பாராட்டு விருதினை வழங்க பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினரும் யோகா றான்ஸ்போட் நிறுவனத்தின் அதிபருமான திரு.ந.யோகநாதன் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு


வடமாகாண விளையாட்டுப் போட்டியில் 100அ நிகழ்வில் நான்காமிடம் பெற்று செல்வன் காந்தரூபன் மயூரன் தேசிய மட்டத்திற்கு தெரிவு


வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான 10 வது மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 10.07.2017 அன்று துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

10.07.2017 அன்று இடம்பெற்ற 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 100mபோட்டியில் செல்வன் காந்தரூபன் மயூரன் 11 செக்கன் 9 விநாடியில் ஓடி 4ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன் இம் மாணவன் வடமாகாணப் பாடசாலை விளையாட்டுக்கள் நிறப்பரிசளிப்பையும் (Colours Award) பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் 100 m போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும், மாணவன் வெற்றியடைய சகல வழிகளிலும் ஊக்குவித்த ஆசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்) அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

செல்வன் காந்தரூபன் மயூரன் அதிபர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் ஆகியோருடன் எடுக்கப்பட்ட நிழற்படத்தையும், மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளையும் கீழே காணலாம்.

MayooranProvincialAwardMayooranColourAwardMayooranSportsProvincialAward

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

 

எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக 

1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது

3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்

4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் 

7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.

 

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு : 

1. அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.

திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு

திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

3. அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள் 

திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின் 

• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

 செல்வி கே.  லாவண்யா

 செல்வி ந. ஜஸ்மினா

 செல்வி கி. சுதர்சனா 

• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது. 

 

4. அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு

திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் "A"  தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி  லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.

 

                            விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

1 6 copy 7 copy 9 copy 10 copy 11 copy 13 copy 15 copy 18 copy DSC_8700 DSC_8715 DSC_8719 DSC_8720 DSC_8723 DSC_8724 DSC_8728 DSC_8730 DSC_8735 DSC_8736 DSC_8737 DSC_8738 DSC_8739 DSC_8740 DSC_8741 DSC_8742 DSC_8743 DSC_8744 DSC_8745 DSC_8746 DSC_8747 DSC_8748 DSC_8752 DSC_8755 DSC_8756 DSC_8757 DSC_8758 DSC_8760 DSC_8761 DSC_8762 DSC_8764 DSC_8765 DSC_8768 DSC_8769 DSC_8770 DSC_8772 DSC_8773 DSC_8775 DSC_8778 DSC_8780 DSC_8782 DSC_8784 DSC_8785 DSC_8786 DSC_8787 DSC_8788 DSC_8789 DSC_8790 DSC_8791 DSC_8792 DSC_8793 DSC_8794 DSC_8796 DSC_8797 DSC_8798 DSC_8799 DSC_8800 DSC_8801 DSC_8802 DSC_8803 DSC_8804 DSC_8805 DSC_8807 DSC_8808 DSC_8809 DSC_8810 DSC_8811 DSC_8812 DSC_8813 DSC_8814 DSC_8815 DSC_8816 DSC_8817 DSC_8818 DSC_8819 DSC_8820 DSC_8821 DSC_8822 DSC_8823 DSC_8824 DSC_8825 DSC_8826 DSC_8827 DSC_8829 DSC_8830 DSC_8831 DSC_8832 DSC_8833 DSC_8834 DSC_8835 DSC_8836 DSC_8837 DSC_8838 DSC_8839 DSC_8840 DSC_8841 DSC_8842 DSC_8843 DSC_8844 DSC_8845 DSC_8846 DSC_8847 DSC_8848 DSC_8849 DSC_8850 DSC_8851 DSC_8852 DSC_8853 DSC_8854 DSC_8855 DSC_8856 DSC_8857 DSC_8858 DSC_8859 DSC_8860 DSC_8861 DSC_8862 DSC_8863 DSC_8864 DSC_8865 DSC_8866 DSC_8867 DSC_8868 DSC_8869 DSC_8870 DSC_8871 DSC_8872 DSC_8873 DSC_8874 DSC_8875 DSC_8876 DSC_8877 DSC_8878 DSC_8879 DSC_8880 DSC_8881 DSC_8882 DSC_8883 DSC_8884 DSC_8885 DSC_8886 DSC_8887 DSC_8888 DSC_8890 DSC_8891 DSC_8910 DSC_8911 DSC_8912 DSC_8913 DSC_8914 DSC_8915 DSC_8916 DSC_8917 DSC_8918 DSC_8919 DSC_8920 DSC_8921 DSC_8922 DSC_8923 DSC_8924 DSC_8925 DSC_8926 DSC_8927 DSC_8928 DSC_8929 DSC_8930 DSC_8931 DSC_8932 DSC_8933 DSC_8934 DSC_8935 DSC_8936 DSC_8937 DSC_8938 DSC_8939 DSC_8940 DSC_8941 DSC_8942 DSC_8943 DSC_8944 DSC_8945 DSC_8946 DSC_8947 DSC_8948 DSC_8949 DSC_8950 DSC_8951 DSC_8952 DSC_8953 DSC_8954 DSC_8955 DSC_8956 DSC_8958 DSC_8959 DSC_8960 DSC_8966 DSC_8967 DSC_8969 DSC_8970 DSC_8972 DSC_8974 DSC_8975 DSC_8979 DSC_8980 DSC_8981 DSC_8982 DSC_8983 DSC_8984 DSC_8985 DSC_8986 DSC_8987 DSC_8988 DSC_8990 DSC_8991 DSC_8992 DSC_8993 DSC_8994 DSC_8996 DSC_8997 DSC_8998 DSC_8999 DSC_9001 DSC_9002 DSC_9003 DSC_9004 DSC_9005 DSC_9006 DSC_9007 DSC_9008 DSC_9009 DSC_9010 DSC_9011 DSC_9012 DSC_9013 DSC_9016

 

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவம் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை (04-07-2017) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியருமாகிய திரு.வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

நிறுவுனர் தின உரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய  திரு.பொன் சிவானந்தராசா அவர்கள் ஆற்றவிருக்கின்றார்.

விழாவிற்கான நிதி அநுசரணை மூன்றாவது ஆண்டாக இவ்வாண்டும் 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இலிருந்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.   

PRIZE DAY INVITATION2017

காரைநகர் இந்துக் கல்லூரியின் ‘மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay_

காரைநகர் இந்துக் கல்லூரியின் 'மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2015ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம்(Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. 

இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர் மருத்தவக்கலாநிதி வி.விஜயரத்தினம்  அவர்கள் சென்ற ஆண்டு யூலை மாதம் 8ஆம் திகதி வைப்பிலிட்டிருந்தார். மீண்டும் யூன்27 மேலும் அரை மில்லியன் ரூபாவினை இவர் வைப்பிலிட்டதன்மூலம் நிதியத்தின் மொத்த வைப்புத்தொகை இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
 
இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை இந்நிதியத்தின் அனுசரணையிலான 3வது பரிசில் தின நிகழ்வு எதிர்வரும் யூலை4ஆம் திகதி நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

    கடந்த ஆகஸ்ட் 2016 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களின் விபரம் வருமாறு:

1.    செல்வி டிலானி கார்த்திகேசு முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம், வவுனியா வளாகம்.

2.    செல்வி யாழினி நடேசு கலைப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.

3.    செல்வன் சிவசக்திவேல் கோகுலன் நாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் பீடம் 

4.    செல்வன் பஞ்சராசா மகீபன் இசைத்துறை, இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம்.


கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள  மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களையும் கல்லூரிச்சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

காரை இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் விருந்துபசாரமும் நதி சஞ்சிகை வெளியீடும் அழைப்பிதழ்

AL Lunch Invitation1AL Lunch Invitation2

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 30.05.2017 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் காரைநகர்க் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர் திரு வே. முருகமூர்த்தி அவர்களும், கல்லூரி ஆசிரியர் திரு ச.அரவிந்தன் அவர்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு ந. பாரதி அவர்களும், ஓய்வுநிலை அதிபர் திரு தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். 

காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது.

காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது.

நடப்பாண்டில் காரைநகர் இந்துக் கல்லூரியின்  பல்வேறு அவசிய தேவைகளை நிறைவு செய்யவும் கற்றல்இ கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை மேம்படுத்துவதில் ஏற்படக்கூடிய செலவீனங்களை ஈடுசெய்யவும் என மொத்தம் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது. தாய்ச் சங்கத்தின் பின்வரும் கோரிக்கைகளே நிர்வாக சபையினால் ஆராயப்பட்டு உதவி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டவையாகும். 

1.அலுவலக உதவியாளரின் மாதாந்த வேதனம்

2.இலத்திரனியல் நூலகம் மற்றும் பொது மின் பாவனைக்கான கட்டணம்

3.விருந்தினர் உபசரணை

4.நானாவித செலவுகள்

5.ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

6.Wi-Fi  இணைய சேவைக் கட்டணம்

7.க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள்

8.க.பொ.த.(சாதாரணம்), க.பொ.த.(உயர்தரம்) ஆகிய பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கல்

குறித்த உதவித் தொகை தாய்ச் சங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வுதவியை வழங்கியமைக்காக தாய்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் கல்லூரியின் பிரதி அதிபருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினைப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துள்ளார். 

பழைய மாணவர் சங்கத்தின் உதவியைத் தவிர சங்கத்தின் உறுப்பினர் திரு.S.P.அரிகரன் அவர்கள் தமது தந்தையாரான அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கவும் இப்பரிசில் வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கவும் ஐம்பதாயிரம் ரூபாவினை எமது சங்கத்தினூடாக அனுப்பிவைத்திருந்தார்.

 

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Sabanadesan Master-page-001

க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.


க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. சிறப்பாக 8A 1B என்ற அதிசிறந்த பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கல்விக் கோட்டத்தில் முதன்மை மாணவியாக விளங்கும் செல்வி கம்சிகா தேவராசாவினதும் 8A என்ற பெறுபேற்றினைப் பெற்று இரண்டாவது நிலை மாணவனாக விளங்கும் செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மர் ஆகியோரது சாதனை கல்லூரியின் வரலாற்றில் பதிவாகி பெருமை சேர்க்கின்றது என்ற வகையில் பேருவகையடைகின்ற பாடசாலைச் சமூகத்துடன் எமது சங்கமும் இணைந்துகொள்கின்றது.

பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட பொதுத் தகமைத் தேர்ச்சிக்கான விருதினை செல்வி கம்சிகா தேவராசா 2014ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டவர் என்பது இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
உதவியும் ஊக்குவிப்பும் வழங்கிய பெற்றோர்கள் சிறந்தமுறையில் கற்பித்து பரீட்சைக்கு தயார்படுத்திவிட்டிருந்த ஆசிரியர்கள ஆதாரதளமாக இருந்து வழிகாட்டிய முன்னைய அதிபர் திருமதி வாசுகி தவபாலன பதில் அதிபராக பணியாற்றியவரும் தற்போதய பகுதித் தலைவருமாகிய திருமதி கலாநிதி சிவநேசன் ஆகிய அனைவரும் இம்மாணவர்களுடைய சாதனைக்கு காரணமாகவிருந்துள்ளார்கள் என்ற வகையில் அவர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றிகூறிக்கொள்கின்றோம். தற்போது இப்பாடசாலையின் நிர்வாகத்தினைப் பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களும் மாணவர்கள் மேலும் பல சாதனைகளை ஏற்படுத்த பணியாற்றுவார் என உறுதியாக நம்பும் எமது சங்கம் இதனை அடைவதற்கு சாத்தியமானவற்றை வழங்கி உதவும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவருகின்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில்களை ரொக்கமாக வழங்க கடந்த மூன்று ஆண்டுகளாக உதவிவருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இம்முறையும் இவ்வுதவியினை வழங்கி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

             நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு க.பொ.த சா-த 2016 பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறு 8 A B !

கடந்த டிசம்பர் மாதம் 2016 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச் சிறந்த  8 A, 1 B  என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி கம்சிகா தேவராசா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

                                  மாணவர் பெயர்                                                            பெறுபேறு

1.    செல்வி கம்சிகா தேவராசா                                                                          8A B
2.    செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மா                               8A
3.    செல்வன் சோமசுந்தரம் யசிந்தன்                                                              6A 2B S
4.    செல்வன் கோடீஸ்வரன் மிறோஜன்                                                           6A B C
5.    செல்வன் கனகலிங்கம் கமலரூபன்                                                           6A 2B
6.    செல்வி கிருத்திகா இராசலிங்கம்                                                               5A 2B C S

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களிற்கு காரைநகரின் பிரபல வர்த்தகர் S.P.S என அழைக்கப்படும் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மூத்த மகனான பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அரிகரன் அவர்களின் உதவியுடன் ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு 17.03.2017 அன்று பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக் கழக ஆங்கில மொழியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை அதிபரான கலாபூசணம், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும், கௌரவ விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.. கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

மேலும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், கல்லூரியின் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இந்நிகழ்வில் 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம்இ கிழக்கு ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு கலைஇ வணிகமஇ; நுண்கலை ஆகிய துறைகளுக்கு தெரிவாகிய செல்வன் நவரத்தினம் லோகதாஸ், செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன், செல்வி தர்ஜிகா மூர்த்தி, செல்வி ஷஜிதா பாலசிங்கம், செல்வி கஜிந்தினி நதிசீலன், செல்வி ஹீந்துஜா முடிராசா ஆகிய ஆறு மாணவர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு; கல்லூரியின் பான்ட் அணியின் இசையோடு விருந்தினர்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். தேசியக் கொடி கல்லூரிக் கொடி என்பவற்றை முறையே பிரதம விருந்தினர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா அவர்களும் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களும் மண்டப முன்றலில் ஏற்றிவைத்தனர். கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து அடுத்து மாணவி செல்வி ஜீவிசா சிவசக்திவேல் அவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கல்லூரியின் பகுதித் தலைவர் திருமதி கலாநிதி சிவநேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து பிரதி அதிபரின் தலைமையுரையும் விருந்தினர்களின் உரையும் கௌரவம் பெற்ற மாணவர்களின் சார்பில் செல்வன் நவரத்தினம் லோகதாஸ் வழங்கிய ஏற்புரையும் இடம்பெற்றன. அத்துடன் தேசிய மட்ட போட்டியாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசா இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தி சபையோரை மகிழ்வித்தார். 

அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கும் திட்டத்துக்கு  அன்னாரது மகன் திரு.S.P.S.அரிகரன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக உதவி வருவதுடன் இன்றைய நிகழ்விற்கான முழு அனுசரணையினையும் அவரே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர் அதற்காக பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இத்திட்டத்தினை சீரியமுறையில் முறையில் நடைமுறைப்படுத்த சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தையும் பாராட்டி நன்றியும் கூறினார். ஆறு மாணவர்களுக்கும் தலா ஏழாயிரம் ரூபா வீதம் ரொக்கப் பரிசிலும் பாராட்டு விருதும் விருந்தினர்களினாலும் பிரதி அதிபரினாலும் வழங்கப்பட்டிருந்தன. கல்லூரியின் ஆசிரியையும் பழைய மாணவர சங்க நிர்வாக சபை உறுப்பினருமான செல்வி சிவரூபி நமசிவாயம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில் வழங்கும் திட்டத்தின் 3வது கட்டமாக  இந்நிகழ்வில் திரு.அரிகரனால் வழங்கப்பட்ட உதவி அமைந்திருந்தது. முதற்கட்டமாக க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்கள 2014ம் ஆண்டு 2ம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களிற்கும் இரண்டாவது கட்டமாக 2015ம் ஆண்டு பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசில்கள் திரு.அரிகரனின் உதவியிலிருந்து வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

cd55c60a8553f2e237c4c23434fe

bb7a90f198747ca129519bc2f4e0

89366501e8582b79a6788846bfd2

1a34776c496066baa17a75be24f3

c31f04ea802958f0c402035c86d5

065a6674975440d6901fc7665082

86ba192f53792b5a0278a6a0df22

ad9cf74e850d1f1b635de261ec42

1769c28c48298a534ec711a20524

f39199e9a38dd1c92d882141f7f9

fbee3d4380269892d5b842e264b2

bd22b21e63c2e5f1a1aac539cef4

05e79e07a67c2709974e3f28cd6f

94a8d73547aa5b51f74ce42393e8

997ceeb649a1b898548c7a109709

c7f794c8887a8fe5687e0a3a4a4c

5174ba20c6b981229f7eed6da978

a59240ab32bcedba532d1519bf58

10cb64167a0576d40b0702181df2

7ec2fcf2d230eb2499d95d71a6c9

b144b760661d8df9410178bc9920

eba051b90f67bd4d41faaac85805

3d978ab820fbaf62909e8f72aae6

82e369ad1d9bdbbb67dae26402de

87e3c9446786139957d304766e4c

ab5a8611f90b3b1fcde0404f6957

0fb3c34b6a57d1c2eea5340ef16f

3877d576ddca17bc5b8361c410db

c5cb395656d29222afe0817aa8a8

f8a1cdcff2034ebc6c66b56fa2b7

211af80be464396827882f3666e7

ffdd31878ae763340388cb42b9fb

8b5db14fcc9697efab4463db2035

c95bd18246c0534df670bd688f18

67c1be2fb6d4d46f56922980ca13

199584b5460c9ca8dbdcf504d551

6e161a384d7db2ac07ef960dc71d

64b3ff8e51f04e165a761817f74e

fc0f558ce606ad45e6b820e2ae66

0be7ef6d1ccf421f8c2ad0bcff54

f696379cfaca13e7ae0360397df1

9d27ba7fc25daf5ed6d5e66cfe80

28845d9054556cbd169af212f6bc

8703189185f7a1f186bbe26d2035

1a47f384ade7b2199cd02a869b2f

1a47f384ade7b2199cd02a869b2f

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற இரண்டாம் அமர்வு 07.03.2017 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் திரு வு. அகிலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கௌரவ விருந்தினர் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வைத் தொடக்கி வைத்தார். மேலும் சபாநாயகர் வருகையுடன் சபை அமர்வு இடம்பெற்றது. இவ் அமர்வில் பத்து அமைச்சர்கள் தங்களது பிரேரணைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதமர், செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், அமைச்சர்கள் ஆகியோருக்கு அவர்களது பெற்றோர்களால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

IMG_0973 IMG_0977 IMG_0981 IMG_0983 IMG_0985 IMG_0986 IMG_0989 IMG_0990 IMG_0993 IMG_0995 IMG_0996 IMG_0999 IMG_1000 IMG_1002 IMG_1003 IMG_1007 IMG_1011 IMG_1012 IMG_1013 IMG_1014 IMG_1015 IMG_1020 IMG_1029 IMG_1031 IMG_1033 IMG_1035 IMG_1039 IMG_1042 IMG_1045 IMG_1048 IMG_1050 IMG_1052 IMG_1065 IMG_1069 IMG_1076 IMG_1082 IMG_1088 IMG_1089 IMG_1093 IMG_1097 IMG_1099 IMG_1103 IMG_1105 IMG_1107 IMG_1117 IMG_1118 IMG_1119 IMG_1126 IMG_1152 IMG_1153 IMG_1154 IMG_1157 IMG_1167 IMG_1175 IMG_1179 IMG_1184 IMG_1192 IMG_1194 IMG_1198 IMG_1202 IMG_1204 IMG_1206

Karainagar Hindu College Student Parliament Invitation-2017

STUDENT PARLIAMENT INVITATION

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.

Shivanthini

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதவியேற்று கடமையாற்றி வருகின்றார். கடந்த மூன்று ஆண்டு காலமாக அதிபராகக் கடமையாற்றிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தீசுவராக் கல்லூரி அதிபராக மாற்றாலாகிச் சென்றமையை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றிய திருமதி.சிவந்தினி வாகீசன் B.Sc.(Hons) Dip.In Ed. ,SLPS-3 அவர்கள் பிரதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.சிவந்தினி வாகீசன் தமது தொடக்கக் கல்வியை வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையிலும் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கல்வியியல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றவர். 

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியாகிய திருமதி.சிவந்தினி வாகீசன் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலையில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தவர் ஆவர். பாடவிதானச் செயற்பாடுகளுடன் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக் குழு பொறுப்பாசிரியராக இருந்து பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி வந்த ஒர் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியை ஆவார்.  

இவர் கல்லூரியின் முன்னாள் உப-அதிபரும், கவிஞருமாகிய அமரர்.சி.பொன்னம்பலம் அவர்களின் பெறாமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தாம் கல்வி கற்ற பாடசாலை மீதும் தாம் பிறந்து வளர்ந்த ஊர்மீதும் பற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானையும் வேண்டுகின்றது.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு

கடந்த ஆகஸ்ட் 2016 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகபிரிவு

 மாணவர் பெயர்                                                பெறுபேறு                 மாவட்டநிலை
செல்வி டிலானி கார்த்திகேசு –                            A B C                                 131
செல்வி தீபிகா நவரத்தினம் –                              A 2B                                   155
செல்வன்.தர்மகுலசிங்கம் நாகரஞ்சன் –          A B C                                  221
செல்வி கஸ்தூரி கோபாலபிள்ளை  –                A B C                                  240

 

கலைப்பிரிவு

மாணவர் பெயர்                                                பெறுபேறு             மாவட்டநிலை
செல்வி யாழினி நடேசு  –                                      2B C                          314
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் –                3B                             362
செல்வன் கனகலிங்கம் வினோதன்  –                 B 2C                        413
செல்வி தேவராசா றோமிலா  –                          A B S                          506

 

தொழினுட்பப்பிரிவு

மாணவர் பெயர்                                                              பெறுபேறு     மாவட்டநிலை
செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன்-                    B C S                  79
செல்வி நிரோஜினி பாலகிருஸ்ணன்-                               2 C S                160
செல்வி காயத்திரி புவிராஜசிங்கம் –                                     3S                265
செல்வி பிரசாளினி சிவசுப்பிரமணியம் –                            3S                284

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக்கல்லூரி மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்

Sports Meet Invitation 2017

Older posts «