Category Archive: சுவிஸ் காரை

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் “சாதனையாளன்” உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு வழங்கிய மாபெரும் கௌரவம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் “சாதனையாளன்” உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு வழங்கிய மாபெரும் கௌரவம்.

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்ட ஆலங்காரப் பந்தலில் விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.

நிகழ்வில் அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்ப பற்றியதான பிரதம விருந்தினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பாடசாலை மாணக்கர், பெற்றோர்கள் எனப் பலரும் சொற்பொழிவுகள் ஆற்றியிருந்தார்கள். ஊர்மக்களும், பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து வழங்கிய சிறப்புமிக்க விழா மலர்மாலைகளாலும், கவிதை மழைகளாலும் மேடையை பொழிவு செய்து இருந்தது எனக் குறிப்பிடலாம்.

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் வருடம்தோறும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அதே விசேடமாக அமைக்கப்பட்ட ஆலங்காரப் பந்தலில் பிற்பகல் 2.45 மணிக்கு பிரதம அதிதிகளாக கலந்து கொண்டவர்களின் மங்கள விளக்கேற்றலுடன் முத்தமிழ் விழா இனிதே ஆரம்பமானது.

இயல், இசை, நாடகம், “தியாகத்திறன் வேள்வி-2017” போட்டிகளுக்கான பரிசளிப்பு, சான்றோர் கௌரவிப்பு, என நிகழ்வுகள் இடம் பெற்று இருந்தன.

சிறப்பு நிகழ்வாக சான்றோர் கௌரவிப்பு இடம்பெற்று இருந்தது. நிகழ்வில் அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.

சிவயோகச்செல்வன் ஆக்கிய கவிதை வரிகளின் வாழ்த்துப்பாவினை கலாபூஷணம் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளைஅவர்கள் (ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபை காப்பாளர், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி,கல்வி மற்றும் கலைமேம்பாட்டுக் குழு உறுப்பினர், காரை அபிவிருத்திச்சபை பொருளாளர்) வாழ்த்துரைக்க பேராசிரியர் வேலுப்பிள்ளை தருமரத்தினம் (வாழ்நாள் பேராசிரியர்,முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக, பேரவை உறுப்பினர்) பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவினை வழங்கியிருந்தார்கள்.

 

கிழே நிகழ்வின் நிழற்படங்களையும் வாழ்த்துப்பாவினையும் காணலாம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்
திருவாளர் வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களுக்கு
காரைக் கணித நல்லாசான் விருது வழங்கி வாழ்த்திய
வாழ்த்துப்பா

முருகென்ற தமிழ்மொழியின் மெல்லழகுப் பெயர் கொண்டாய்!
மருகொண்ட மாண்பு வேலுப்பிள்ளை திருமகனாய் வந்துதித்தாய்!
தருகொண்ட சடையாளிப் பதிபெருமையுற உருக்கொண்டாய்!
அருள்கொண்ட கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்றாய்! வாழி! வாழி!

சடையாளி! யாழ் இந்து! எழில் பேராதனை தந்த உளியோ!
இடை யாழி நாமகள் கணிதம் இணையாளி இல்லாது கற்றாய்!
விடையாளி இல்லாத கணக்கும் விளக்கி மாணவரின் மனத்து
வினா ஆழி நீந்திப் பலவூழி நீளச் செதுக்கி வைத்தாய்! வாழி! வாழி!

தூய கணிதமதை நேயமுடன் பலாலி மகரகம எனப்பயின்று
தோய அறிந்து கொழும்பு யாழ் கிளி வன்னியெங்கும் பரவித்
தாயாய் நினைந்து நாற்பதாண்டாய் நூற்றோரையேற்றி வைத்தாய்!
சேயோன் பெயர் கொண்ட முருகமூர்த்தி! பல்லாண்டு வாழியவே!

இருபத்தியேழு ஆண்டாயதிபராய் குருசித்தமேயிருந்து ஆண்டாய்!
அறுபத்துகளே அகவையானாய்! திருசித்தமேயிருந்து விழாக்கண்டாய்!
குருபக்தியோடு உவகையானோம்! குருசித்தமாய்ச் சிரம் தாழ்த்துகிறோம்!
திருசக்தியோடு “காரைக் கணித நல்லாசான்” விருதீந்தோம் வாழி! வாழி!

ஆக்கியோன்: சிவயோகச் செல்வன்

முத்தமிழ் விழா                                                                       வாழ்த்தி வழங்கியோர்கள்
யாழ்ற்றன் கல்லூரி                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
03.12.2017                                                                காரைநகர் செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

 

 

 

Video

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து பெருமையுடன் வழங்கிய முத்தமிழ் விழா-2017 காணொளி!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட தியாகத் திறன் வேள்வி 2017 வெற்றியீட்டிய மாணவர்களின் பெயரும், பரிசுத்தொகை விபரங்களும்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்பட்ட
தியாகத் திறன் வேள்வி 2017 வெற்றியீட்டிய மாணவர்களின் பெயரும், பரிசுத்தொகை விபரங்களும்

swisskarai13.11.2017

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழா -2017

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகருக்கு பெருமை சேர்த்த சேவையாளர்கள் கௌரவிப்பும், மாணவர்களுக்கான பரிசளிப்புக்களும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகருக்கு பெருமை சேர்த்த சேவையாளர்கள் கௌரவிப்பும், மாணவர்களுக்கான பரிசளிப்புக்களும்.

கலை, கல்வி, பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், செல்வ வளத்திலும் மனிதவளத்திலும் சிறப்புப் பெற்றது எமது கிராமம். வாழ்வியல் சடங்குகள், சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் குலமரபு வழக்கமும் வழக்காறுகளம் பெருஞ் செல்வாக்குச் செலுத்துகின்ற வேளையில் புவியல் அமைவிடச்சிறப்பும் மனிதவாழ்விற்கு வளமான நிலப்பரப்பாக அமைகின்றது.

புத்திஜீவிகள், வானியல்விற்பன்னர்கள், சோதிடர்கள், வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர்கள்,விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வாழ்நாள்பேராசிரியர்கள், நியாயதுரந்தரர்கள், அப்புக்காத்தர், நொத்தாரீசுமார், முகாந்தரங்கள், விதானைமார், உடையார், வித்துவான்கள், புலவர்கள், பண்டிதமணிகள், ஆங்கில ஆசான்கள், தமிழ் ஆசான்கள், ஒப்பந்தக்காரர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், தொல் பொருள் ஆய்வாளர்கள், ஆன்மீக வள்ளல்கள் (பேப்பர் சுவாமி, செல்லம்மா சாமி) தவில் நாதஸ்வர வித்துவான்கள் ( சுப்பையா கம்பர், கைலாயக் கம்பர், கணேசன், வீராச்சாமி) இசை நடனக் கலைஞர்கள் எனப் பல துறைகளிலும் சிறந்த மேதைகளைக்கொண்டு பெருஞ் செல்வாக்குடன் விளங்குகின்ற கிராமமே காரைநகர்.

பெருளாதார நிபுணர் அடம்சிமித் அவர்களின் கொள்கைக்கு இணங்க “மனித தேவைகள் அளவிறந்தவை” என்ற கூற்றுக்கிணங்க எமது ஊரின் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பல தேசங்களில் பரந்து வாழ்ந்தாலும் கிராமத்து சமகாலத்து பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு விழுமியங்களையும், பாரம்பரியங்களை வெளிக்கொணர்வதில் முன்நின்று சேவையாற்றி வருகின்றனர் எனலாம்.

வருங்கால சந்ததியினர் எமது தொன்மையை, பாரம்பரியத்தை, பண்பாட்டை இழந்து விடக்கூடாது. எமது ஊர் என்று பெருமை பேசுவதை விட எமது பாரம்பரியங்களையும், பண்பாட்டையும் பேணிக்காப்பதில் ஒவ்வோருவரும் முயற்சி எடுக்க வேண்டும். அதுவே நாம் எமது ஊருக்குச் செய்யும் கடப்பாடாகும்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந் நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந் நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந் நாடே – இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?
என்றார் பாரதியார்.

 

2014ம் ஆண்டிலிருந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஆளுமை விருத்திப் போட்டிகளையும் பரிசளிப்பு விழாவையும், கலைநிகழ்வுகளையும் காரைநகரிலும், சுவிற்சர்லாந்திலும் நடாத்திவருகின்றமை யாவரும் அறிந்ததே! இவ் விழாக்களில் எமது ஊருக்குச் சேவையாற்றிய கல்வியாளர்களையும் கலைஞர்களையும் இன்னபிற சேவையாளர்களையும் மதிப்பளிப்பதன் மூலம் எம் இளையவர்களுக்கு அவர்களை முன்னுதாரணங்காட்டுவதும் அவ்விழாக்களின் ஒரு பகுதியாக இடம்பெற்று வருகிறது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் 08-06-2014இல் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைத்தென்றல் நிகழ்வில் ஊடகவியளாளர் திரு இளையதம்பி தயானந்தா தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்ட சிறப்பு மலராகிய காரைநிலா -2014ஐ எமது ஊரவருக்கும், ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும், தெரியப்படுத்தும் நோக்குடன் நடராசா ஞாபகார்த்த மண்டபம் கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலயம், காரைநகர் 2014- 09- 07 (ஞாயிற்றுக் கிழமை) காலை 8;.30 மணிக்கு நூல் அறிமுகவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இவ் விழாவில் எமது கிராமத்தில் பல நீண்ட காலமாக மாணவர்களுக்காக பணியாற்றிவருபவரும், பல நூல்களைப் பதிப்பித்ததன் மூலம் சைவத்திற்கும், தமிழிற்கும் உழைத்து வருபவருமாகிய மதிப்புக்குரிய கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களையும் மாணவர்களின் சொத்தாகக் கருதப்படும் இரண்டு நூலகங்களை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் பங்கேற்றுப் பெரும் தொண்டாற்றி வரும் ஓய்வு பெற்ற மருத்துவர் (RMP) சி. நடராசா அவர்களும் கௌரவிக்கபட்டிருந்தனர். இவர்களில் சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மங்கல வாழ்த்துப்பாவினை பதிவு செய்கின்றோம்.

சிவத்தமிழ் வித்தகர், பண்டிதைமணி,கலாநிதி
மூதறிஞர் சிவத்தி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின்
நூலக சேவையைப் பாராட்டும் வகையில்
2014.09.07 இல் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும்
காரை நிலா மலர் அறிமுக விழாக் குழுவினரும்,
வாழ்த்தி வழங்கிய

மங்கல வாழ்த்துப்பா
திணை – பாடான்                                                              துறை – வாழ்த்தியல்

(எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்)

ஈழத்து வடபுலமாம் காரை நகரில்
இனித்துறையும் சிதம்பரத்தான் எமக்கா மீந்த
அழமுற நூல் வேதம் அறங்கம் தேர்ந்தே
அகத்தூய்மை புறத்தூய்மை வாழ்வு மாகி
அழமான பக்தியுடன் பூசை களாற்றி
அமையுற ஆன்றோரை உறுவாய்கொண்டும்

தோழமையாய் எந்நாளும் மக்கள் துயரைத்
துடைத்திடுவார் கலாநிதியெம் வைத்தீசுவரரே

மீடுயரும் விழாவெடுத்து மகிழ்ச்சி பொங்கப்
பெரு விருப்பாய்ச் சங்கத்தார் ஒன்ற கூடி
நாடுபுகழ் நின்னையே நயந்து வேண்டி
நற்கருமஞ் செய்தமையால் அழைத்தா ருன்னை
கூடுசபை யினரன்பால் நின்னை யேத்திக்
குவிந்த நூலக்கமெல்லாம் நிரையாய் சொன்னார்
பாடுபுகழ் நலஞ்சிறக்க பரவிக் கொள்வோம்
பல்லாண்டு நின்புகழே வாழி! வாழி!

ஈழத்துச் சிதம்பரனார் புராணம் வேண்ட
இளமுருகனார் தானுமன்பால் அதனைச் செய்தார்
சூழவரும் பெருமைதாய் மொழியின் ஆக்கம்
செய்திடவே தமிழ்வளர்ச்சி கழகங் கண்டீர்
வாழுமன்பர் வெளிநாட்டில் நின்னைச் சேர்ந்தே
வகுத்தநின் செயலுக்காய் ஊக்கமானார்
ஆழமாய்க் கடலிருக்கும் முத்தா யிருந்தே
அருங்செயல்கள் ஆற்றுவீர் வாழி! வாழி!

ஆண்டி கேணிஜயன் புராண மோடு
ஆய்ந்தநற் பதிப்புக்கள் அநந்தம் அநந்தம்
மாண்புறு புலவரெல்லாம் செய்த நூல்கள்
மல்கு நீர் காரைநகர் எங்கணு மாகி
தூண்டுசுடர் வைத்தீசு வரனார் மலரின்
செய்தியெல்லாம் கேட்டுலகம் வியந்த தன்றோ
ஈண்டுறையும் நூலகமும் இனிதே கண்டோம்
இனிதுநின் மாண்பெல்லாம் வாழி! வாழி!

(நேரிசை வெண்பா)
இனித்த செயலும் இணங்கியநல் வாழ்வும்
பணியாய் என்றும் பரவும் – பணிவுடைய
சேவையால் வாழ்வான் திருவுடையான் என்றென்றும்
சேவையே இன்பத் திருப்பு

நூறாண்டு காணும் ஐயா வாழ்க!
பல்லாண்டு இனிது வாழ்க வாழ்கவே

   வாழ்த்தி வழங்கியோர்
சுவிஸ் – காரை அபிவிருத்திச் சபையினரும்,
காரைநிலா நூலறிமுக விழாக்குழுவினரும்.
காரைநகர்
2014-09-07

 

காரைத்தென்றல்-2014இல் சரஸ்வதி வித்திலாலய அதிபர்(சுவிஸ்) திருமதி. தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களுக்கு கலையரசி விருது வழங்கி மதிப்பளித்தது.
காரைத்தென்றல் -2015 நிகழ்வில் தொழில் அதிபர் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு “அறக்கொடை அரசு” என்னும் விருது வழங்கியும், நாஸ்வர தவில் வித்தவான்களான கோவிற்குளம் வீராச்சாமி அரிகரபுத்திரன் அவர்களுக்கு “லயகேசரி” விருதும், உடுப்பட்டி பத்மநாதன் செந்துரன் அவர்களுக்கு “சிவநாத லயவாரிதி” விருதும். சுதுமலை நாகராசா மதுசூதனன் அவர்களுக்கு “சுவிஸ்நாதச் சாரல்” விருதும், திருமலை முத்துலிங்கம் யோகேஸ்வரன் அவர்களுக்கு “ஸ்வரஞான வேந்தன்” விருது வழங்கியும் மதிப்பளித்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள் மூன்றாவது ஆண்டாக தயாரித்த நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா 24.12.2015இல் காரைநிலா-2014 நூல் ஆசிரியர் கலாபூசணம்,பண்டிதை யோகா சோமசுந்தரம் அவர்களுக்கு, “செந்தமிழ் காவலர்” பட்டம் வழங்கியும், மன்றத்திற்கான கீதம் இயற்றிய தமிழ்மணி திரு. அகளங்கன் அவர்களுக்கு “கலைமாமணி” பட்டம் வழங்கியும், எமது கிராமத்தின் தவில் வித்துவான் கலாபூசணம், கைலயாய கம்பர் வீராச்சாமி அவர்களுக்கு “லயச் சக்கரவர்த்தி” விருது வழங்கியும் மதிப்பளித்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 09 – 01 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் அதன் அதிபர் வே. முருகமூர்த்தி தலைமையில் நடாத்திய “முப்பெரும் விழா – 2017” இல் முன்னாள் அதிபர் மதிப்பிற்குரிய கதிரவேலு தில்லையம்பலம் ஐயா அவர்களுக்கு “கல்விக் காவலர்” விருது வழங்கியும் கலாபூஷணம், பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கு “தமிழ்த் தொண்டன்” விருது வழங்கியும், சித்தாந்த வித்தகர், கலாபூஷணம் அவர்களுக்கு சேவைகளை பாராட்டும் வாழ்த்துப்பாவினை வழங்கியும் மதிப்பளித்தது.

இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் சார்ந்த பல ஆராய்ச்சிச் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற பெருமை கொண்டவர். மேற்படி துறைகளின் மிகச் சிறந்த ஆய்வு மாநாடுகளின் ஏற்பாட்டுக்குழுக்களில்; உறுப்பினராவிருந்தவர். மின்னியல் மறறும் இலத்திரனியல் பொறியியல் சாரந்த தகவற் தொழிநுட்பத்திற்கான சங்கத்தினரது உயர்ந்த சேவையாளர் என்;னும் விருதை இருமுறை பெற்றுக்கொண்டவர். ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை நேரடியாகச் சந்தித்த எமது சபையின் முன்னை நாட் தலைவர் பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் தம் செந்தமிழால் இயற்றப்பட்ட வாழ்த்துப்பாவையும் ஆங்கில வாழ்த்துப் பாவையும் வழங்கி மதிப்பளித்தார்.

“அடிசில் வினையும் யாழின் துறையும்
கடிமலர்ச் சிப்பமும் கரந்துறை கணக்கும்
வட்டிகை வரைப்பின் வாக்கின் விகற்பமும்
கற்றவை எல்லாம் காட்டுமின் எமக்கு”
                                                                                                 கொங்கு வேளிர் என்பார் எழுதிய
                                                                                              பெருங்கதை என்னும்
                                                                                                   உதயண குமார சரித்திரத்திலிருந்து
                                                                                            (1.34.166-9)

சபையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு 2014ஆம் ஆண்டு காரைத்தென்றல் நிகழ்வில் காரைநிலா நூல் ஒன்றை வெளியீடு செய்தோம் இன் நூலிற்கு மாணவர்களின் ஆக்கங்கள் வெகு குறைவாகவே காணப்பட்டன அதானால் உலகில் பரந்து வாழும் காரைநகர் மேல் பிரிவு மாணவருக்கான கட்டுரைப் போட்டியை நடாத்தி வெற்றிபெற்ற மாணவருக்கான பரிசில்களை பண்டிதை செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் தலைமையில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கு ஈழத்து சிதம்பர சிவன் கோவிலில் திருவாருவாதிரை நாளில் ஈழத்துச் சிதம்பர வசந்த மண்டபத்தில் காரைநகர் மணிவாசகர் சபையுடன் இணைந்து பரிசில்களை வழங்கியிருந்தோம்
• செல்வன் ஜெயபாலசிங்கம் நிசாந்தன், கொழும்பு இந்துக் கல்லூரி,
காரை இளவறிஞர் விருது – 2014
• செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி காரை இளஞ்சுடர் விருது–2014
• செல்வி சாந்தினி கனகலிங்கம் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி
காரைத் தென்றல் விருது – 2014
ஐந்து மாணவருக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட்டன

2015ஆம் ஆண்டு போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய யா/ கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தின் சயம்பு மண்டபத்திலும், சூரிச் சரஸ்வதி வித்தியபலயத்திலும். 26.09.2015இல் கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டது.
(அ) கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள,;
(ஆ) மத்தியபிரிவு 10ஆம்,11ஆம், கல்வியாண்டு மாணவர்கள்.
(இ) மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் இவ்வாண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்களும் பரீட்சையில் தோற்றினார்கள்.
• செல்வன் ஜெயபாலசிங்கம் நிசாந்தன், கொழும்பு இந்துக் கல்லூரி,
காரை இளவறிஞர் விருது – 2015
• செல்வி தீபிகா நவரத்தினம் யா/ கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி
காரை இளஞ்சுடர் விருது – 2015
• செல்வி நவநிலா மகாதேவன் யா/ யாழ்ற்னர் கல்லூரி
காரைத் தென்றல் விருது – 2015

ஒவ்வொரு பிரிவும் பத்து மாணவருக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்பட்டன.

09.01.2017 திங்கட்கிழமை எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு நினைவுத் தொகுப்பான “தியாகச் சுடர்” அறிமுகத் நூற் தொகுப்பு வெளியீட்டையும், சான்றோர்கள் மதிப்பளிப்பையும்,

தியாகத்திறன்வேள்வி-2016 மாணக்கர் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பையும் இணைத்து முப்பெரும் விழாவாக யாழ்ற்றன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகிற மாணவர்களுக்கான “தியாகத் திறன் வேள்வி” போட்டிகள் இம்முறையும் விரிவாக்கம் பெற்று “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கர்நாடக சங்கீதப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, முத்தமிழின் மூன்றாம் எழிலாம் நாடகத்திறன் வளர்க்கும் போட்டியும் என ஆறு வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளிலும் நடாத்தப்பட்டன. இப் போட்டிகளுக்கான வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும், பெறுமதியான பரிசில்களும், சான்றோர்கள் மதிப்பளிப்பும் எதிர்வரும் 03.12.2017 ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பிரதான மண்டபத்தில் எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும்.

முத்தமிழ்-2017 விழாவில் மாண்பு பெறுவோர்கள்

 திருவாளர்.கே. கார்த்திகேசு நடராஜா அவர்கள்
(முன்னாள் அதிபர் யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)

 திருவாளர்.பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள்
(முன்னாள் வடமாகண கல்விப் பணிப்பாளர், காரை
அபிவிருத்திச் சபைத் தலைவர்)

 திருவாளர். வேலுப்பிள்ளை முருகமூர்த்தி
(ஒய்வுபெறும் அதிபர் யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)

 காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்கள்
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கமுகாமையாளர்.)

 கலாநிதி கென்னடி விஜயரத்தினம்
(ஆங்கில இணைப் பேராசிரியர் எதியோப்பிய பல்கலைக்கழகம்)

ஊரின் கல்வி மான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்ததின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமது சபையின் நோக்குகளில் ஒன்றாகும்.

“ஆளுயுர்வே ஊருயுர்வு”

“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
30.11.2017

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முத்தமிழ்விழா

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முத்தமிழ்விழா

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
காரை அபிவிருத்திச் சபையுடன்
இணைந்து நடாத்தும்

 இயல்,இசை,நாடகம்
 “தியாகத்திறன் வேள்வி-2017” போட்டிகளுக்கான பரிசளிப்பு
 சான்றோர் கௌரவிப்பு

 

முத்தமிழ்விழா

இடம்: காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பிரதான மண்டபம்
காலம்: 03.12.2017ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30மணி
தலைமை: கலாநிதி கென்னடி விஜயரத்தினம்
(ஆங்கில இணைப் பேராசிரியர், எதியோப்பிய பல்கலைக்கழகம்)

பிரதமஅதிதிகள்

பேராசிரியர் வேலுப்பிள்ளைதருமரத்தினமும் பாரியாரும்
(வாழ்நாள் பேராசிரியர்,முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி,
யாழ் பல்கலைக்கழக,பேரவை உறுப்பினர்)

திரு.ஆறுமுகம்;சிவசோதியும் பாரியாரும்
(முன்னாள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்)

தெய்வீகத்திருப்பணிஅரசு¸ அறக்கொடைஅரசு
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள்

வைத்திய கலாநிதி கணபதிப்பிள்ளைஅம்பிகைபாகன் அவர்கள்
(பிரதம வைத்திய அதிகாரி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை)

திருமதி சரஸ்வதி யோகலிங்கம் அவர்கள்
(முன்னாள் ஆசிரியர் யாழ்ற்றன் கல்லூரி)

திருமதி வாசுகி தவபாலன்
(அதிபர் வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி,
முன்னாள் அதிபர் காரை இந்துக்கல்லூரி)

 

நிகழ்ச்சி நிரல்

மங்கலவிளக்கேற்றல்
தேவாரம்
மன்றக் கீதம் இசைத்தல்
நீத்தார் அக வணக்கம்

    வரவேற்புரை
கலாபூஷணம் பண்டிதை சோ. யோகலட்சுமிஅவர்கள்
(ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்.)

வரவேற்புநடனம்

தலைமையுரை
கலாநிதி கென்னடி விஜயரத்தினம்
(ஆங்கில இணைப் பேராசிரியர் எதியோப்பிய பல்கலைக்கழகம்)

 

தியாகத்திறன் வேள்வி-2017போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பேச்சு

இசைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் குழுஇசைப்பாடல்

நாடகப் போட்டியில் முதலாமிடம் பெற்ற மருதடி இளைஞர் சங்கம் வழங்கும் “காவோலையும் குருத்தோலையும்” நாடகம்

சான்றோர் கௌரவிப்பு

பிரதம விருந்தினர் சொற்பொழிவு

நன்றியுரை

கலாபூஷணம் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளைஅவர்கள்
(ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபை காப்பாளர், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி,கல்விமற்றும் கலைமேம்பாட்டுக் குழு உறுப்பினர்,காரைஅபிவிருத்திச்சபைபொருளாளர்)

சிறப்புவிருந்தினர்கள்

காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,
பெற்றோர்கள், நலன்விரும்பிகள்

நிகழ்ச்சி தொகுப்பாளர்
செல்வன் வினோதன்கனகலிங்கம்
(காரைநகர் இந்துக்கல்லூரி)

மாண்பு பெறுவோர்

 திருவாளர்.கே. கார்த்திகேசு நடராஐhஅவர்கள்
(முன்னாள் அதிபர் யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)

 திருவாளர்.பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள்
(முன்னாள் வடமாகண கல்விப் பணிப்பாளர், காரை
அபிவிருத்திச் சபைத் தலைவர்)

 திருவாளர். வேலுப்பிள்ளைமுருகமூர்த்தி
(ஒய்வுபெறும் அதிபர்; யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)

 காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்கள்
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கமுகாமையாளர்.)

 கலாநிதி கென்னடி விஜயரத்தினம்
(ஆங்கில இணைப் பேராசிரியர் எதியோப்பிய பல்கலைக்கழகம்)

தியாகத்திறன்வேள்வி-2017இல்வெற்றிபெற்றமாணவர்களுக்கு
சிறப்புத் தேர்ச்சிச் சான்றிதழ்களும்,நினைவுப்பரிசில்களும்.

தியாகத்திறன் வேள்வி-2017இல் அ,ஆ,இ ஆகிய மூன்றுபிரிவுகளில் கட்டுரைப் போட்டி,பேச்சுப் போட்டி, இசைப்போட்டி,பொதுஅறிவு – வினாடிவினாப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கானபரிசுத்தொகைவிபரம்

 முதலாமிடம் பெற்றவர்களுக்குபரிசுத்தொகை 5000 ரூபாய்கள்
 இரண்டமிடம் பெற்றவர்களுக்குபரிசுத்தொகை 3500 ரூபாய்கள்
 மூன்றாமிடம் பெற்றவர்களுக்குபரிசுத்தொகை 1500 ரூபாய்கள்
 நான்காமிடம் பெற்றவர்களுக்குதிறமைச் தேர்ச்சிசான்றிதழ்
 ஐந்தாமிடம் பெற்றவர்களுக்குதிறமைச் தேர்ச்சிசான்றிதழ்

 திருக்குறள் மனனப் போட்டிஅ.ஆபிரிவுகளில்

 முதலாமிடம் பெற்றவர்களுக்குபரிசுத்தொகை 2000 ரூபாய்கள்
 இரண்டமிடம் பெற்றவர்களுக்குபரிசுத்தொகை 1500 ரூபாய்கள்
 மூன்றாமிடம் பெற்றவர்களுக்குபரிசுத்தொகை 1000 ரூபாய்கள்
 நான்காமிடம் பெற்றவர்களுக்கு500.00 ரூபாய்கள்
 ஐந்தாமிடம் பெற்றவர்களுக்கு 500.00 ரூபாய்கள்
இரு பிரிவுகளிலும் 75 புள்ளிகளுக்குமேல் பெற்றவர்களுக்கு 500 ரூபாய்கள் பெறுமதியான பரிசில்கள்.

 நாடகப் போட்டியில் வெற்றியீட்டியவர்களின் பரிசுத்தொகைவிபரங்கள் சுவிஸ் நாதன் அவர்களதுமுழுமையானஅனுசரணையில் முதற் பரிசுரூபாய் ஆறுபதாயிரம் இரண்டாம் பரிசுரூபாய் நாற்பதாயிரம். அத்துடன் அறக்கொடைஅரசுசுவிஸ் கதிர்காமநாதன் அவர்களதுதந்தையார் அமரர் கதிரவேலுசுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம்.

 முதலாம் பரிசு “காவோலையும் குருத்தோலையும்” இயக்கம் திரு.கோ.எடின்பரோ மருதடி இளைஞர் சங்கம். பரிசுத்தொகை60 000.ரூபாய்

 இரண்டாம் பரிசு “காலனைவென்றகற்புக்கரசி” இயக்கம் திரு.க.வடிவேலு சிவகௌரி நாடக மன்றம் பரிசுத்தொகை 40 000.ரூபாய்

 இரண்டாம்பரிசு “வெல்கமானுடம்” இயக்கம் திருமதி.வி.ரமணன் காரை இந்து மாணக்கர் பரிசுத்தொகை 40 000.ரூபாய்

 “அ,ஆ,இ”பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களது கவனத்திற்கு! பரிசுத் தொகைகள் மாணவர்களது வங்கிகணக்குகளில்; வைப்பில் இடப்படும். இதற்கான ஒழுங்குகளுக்கு காரைஅபிவிருத்திச் சபைப் பொருளாளர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களுடன் தொடர்புகொள்ளவும்.

 “தியாகத்திறன் வேள்வி-2017″இல்வெற்றிபெற்றமாணவர்களின் பெயர்,பரிசுத் தொகைவிபரங்கள் இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும்.

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவற்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

 

“ஆளுயர்வேஊருயர்வு”

“நன்றேசெய்வோம் அதை இன்றேசெய்வோம்”

                                                                                         நன்றி

 

                                                                                                                சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபை
                                                                                                                      செயற்குழுஉறுப்பினர்கள்
                                                                                                       மொழி,கல்வி,கலைமேம்பாட்டுக் குழு
                                                                                                                     சுவிஸ் வாழ் காரைமக்கள்.
                                                                                                                                   27.12.2017

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- மூன்று திருக்குறள் மனனப் போட்டிகளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- மூன்று
திருக்குறள் மனனப் போட்டிகளின் முடிவுகள்.

திருக்குறள் மனனப் போட்டிகளில் அ. ஆ. ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் எண் மூன்று திருக்குறள் மனனப் போட்டிகள் கடந்த 10-09-2017 அன்று ஞாயிறு காலை திருக்குறள் மனனப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான முன்னாள் அதிபர் கலாபூஷணம் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களது நெறிப்படுத்தலில் மேற்படி இரு பிரிவுகளுக்குமாக இடம்பெற்றன.

170 மாணவ மாணவியரின் பங்கேற்புடனும் 9 நடுவர்களின் கணிப்பீட்டுப் பணியுடனும் இப்போட்டிகள் மிகவும் களைகட்டிய நிலையில் இடம்பெற்றன. திருக்குறள் மனனப் போட்டிகளை இவ்வாண்டு மிக நேர்த்தியா ஒழுங்கு செய்த மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினரான முன்னாள் அதிபர் கலாபூஷணம் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

திருக்குறள் மனனப் போட்டிகள் ஆரம்பப் பாடசாலை மாணாக்கருக்காக மட்டும் ஒழுங்கு செய்யப் பட்டதால் சிறார்களை ஊக்குவிக்கு முகமாக விசேட பரிசுத்திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்களும் சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படும்.

இரு பிரிவுகளிலும் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அ. பிரிவு (தரம் 02 – 03)

அதிகாரம்- அன்புடமை

இல        நிலை                             பெயர்                          தரம்                                                       பாடசாலை

1       முதலாமிடம்                    செ. கனிஷ்கா               02                                   ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்
2       இரண்டாமிடம்                அ. ஐஸ்வினி                  02                                             சுப்பிரமணிய வித்தியாசாலை
3        மூன்றாமிடம்                    ச. கிருசனா                  03                                           சுப்பிரமணிய வித்தியாசாலை
4        மூன்றாமிடம்                   க. கஜரூபன்                  03                                   காரை. மெய்கண்டான் வித்தியாலயம்
5        நான்காமிடம்                  ம. பவித்ரன்                    03                                                      யாழ்ற்ரன் கல்லூரி
6        நான்காமிடம்                  சி. நிரோஜா                   03                                                      யாழ்ற்ரன் கல்லூரி
7        ஐந்தாமிடம்                    சி. நிகேதனா                   02                                                      யாழ்ற்ரன் கல்லூரி

 

அ. பிரிவில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சிறப்புப் பரிசில்கள் பெறவிருப்போர்

இல              பெயர்                      தரம்                                                       பாடசாலை

1               வி. அபிராமி                  02                          சுப்பிரமணிய வித்தியாசாலை
2               சி. அபிநயா                   02               வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை
3                கி. ஆரவி                        03                         சுப்பிரமணிய வித்தியாசாலை
4                பா. சரூன்                      02                                     யாழ்ற்ரன் கல்லூரி
5                 ச. மயூரன்                     02                                     யாழ்ற்ரன் கல்லூரி
6                யோ. கஜானி                02                        காரை. ஊரி அ.மி.த.க. பாடசாலை
7              சோ. கம்சிகா                 02                   சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
8               த. சாதுஷன்                   02                            காரை. ஊரி அ.மி.த.க. பாடசாலை
9               தி. மிதுஷன்                   02                                         யாழ்ற்ரன் கல்லூரி
10             ப. சுஜாதா                       02                   வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
11            செ. ரடீஸ்வரன்               03                            வியாவில் சைவ வித்தியாலயம்

 

ஆ. பிரிவு (தரம் 04 – 05)

அதிகாரங்கள்: இனியவை கூறல் மற்றும் வாய்மை

இல      நிலை                        பெயர்                     தரம்                                                        பாடசாலை

1       முதலாமிடம்          சி. சீராளன்                                                     வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை
2       இரண்டாமிடம்      ச. சயந்தா                     04                               வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
3        இரண்டாமிடம்      க. அபிஷானி              05                              வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
4        மூன்றாமிடம்        ரூ. சோபிதன்               04                       தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்
5        நான்காமிடம்        சி. தனுசினி                  05                                                 யாழ்ற்ரன் கல்லூரி
6        ஐந்தாமிடம்           சி. பவித்திரா                04                                                  யாழ்ற்ரன் கல்லூரி

 

ஆ. பிரிவில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சிறப்புப் பரிசில்கள் பெறவிருப்போர்

இல              பெயர்                                               தரம்                                                       பாடசாலை

1               ச. தேனுஜா                                           05                                        வியாவில் சைவ வித்தியாலயம்
2               ப. துவாரகா                                         05                              வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
3               ம. தாரணி                                            04                                                   யாழ்ற்ரன் கல்லூரி
4              யோ. கபிசாந்                                       05                                           சுப்பிரமணிய வித்தியாசாலை
5               நி. கோபிஷன்                                     05                                       காரை. ஊரி அ.மி.த.க. பாடசாலை
6                ச. கஜலக்சுமி                                      04                                            சுப்பிரமணிய வித்தியாசாலை
7               மோ. நிவேதினி                                   04                                                      யாழ்ற்ரன் கல்லூரி
8                த. மதுசன்                                            05                                          சுப்பிரமணிய வித்தியாசாலை
9               செ. ரிஷாந்தன்                                    05                                          சுப்பிரமணிய வித்தியாசாலை
10              க. ஹரிஸ்காந்                                     04                                     காரை. மெய்கண்டான் வித்தியாலயம்
11              ச. ரமணன்                                           04                          தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்
12              ச. மதிவதனி                                        05                                       காரை. மெய்கண்டான் வித்தியாலயம்

 

                                                                                                            நன்றி

                                                                                    “ஆளுயர்வே ஊருயர்வு”.
                                                                “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

 

                                                                                                                                                            இங்ஙனம்
                                                                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                        சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                         24 – 10 – 2017

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- ஐந்து பொது அறிவு வினாடி-வினாப் போட்டிகளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- ஐந்து
பொது அறிவு வினாடி-வினாப் போட்டிகளின் முடிவுகள்.

பொது அறிவு வினாடி-வினாப் போட்டிகளின் அ. ஆ. ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் எண் ஐந்து:- பொது அறிவு வினாடி வினாப் போட்டிகளின் முதற் சுற்று கடந்த 15-07-2017 அன்று சனிக்கிழமை காலையும் இரண்டாம் சுற்று கடந்த 29-09-2017 வெள்ளிக்கிழமை மாலையும் இடம்பெற்றன.

 

பொது அறிவு வினாடி வினாப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களது நெறிப்படுத்தலில் மேற்படி இரு பிரிவுகளுக்குமான போட்டிகள் இடம்பெற்றன.

இ. பிரிவில் பங்கு பெற காரை இந்துக்கல்லூரி மாணாக்கர் சிலரே விண்ணப்பித்த படியால் இப்பிரிவுக்கான போட்டிகள் இரத்தாயின.

வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

 

                                                                         அ. பிரிவு

நிலை                                பெயர்                                         பெற்ற புள்ளிகள்                                          பாடசாலை
முதலாமிடம்          செல்வி. தனுசா தம்பிராசா                        90                                                  காரை. இந்துக் கல்லூரி
இரண்டாமிடம்      செல்வன். மகேந்திரராசா பானுஜன்       84                                                 காரை. இந்துக் கல்லூரி
மூன்றாமிடம்         செல்வன். முருகதாஸ் சஜீவன்                  79                                                     யாழ்ரன் கல்லூரி
நான்காமிடம்         செல்வி. மயூரிகா செல்வகுமார்               70                                                  காரை. இந்துக் கல்லூரி
ஐந்தாமிடம்            செல்வி. நேசகுமார் ஹரணி                      65                     சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

 

                                                                          ஆ. பிரிவு

நிலை                      பெயர்                                               பெற்ற புள்ளிகள்                                      பாடசாலை
முதலாமிடம்        செல்வி. இ. தமிழினி                                 85                          சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
இரண்டாமிடம்     செல்வி. கீர்த்தனா நந்தகுமார்              80                                                 யாழ்ரன் கல்லூரி
மூன்றாமிடம்        செல்வி. அ. அனுரேகா                             82                          சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
நான்காமிடம்        செல்வன். கு. கஜேந்திரகுமார்              78                                வியாவில் சைவ வித்தியாலயம்

 

                                                                                                           நன்றி

 

                                                                                      “ஆளுயர்வே ஊருயர்வு”.
                                                               “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

                                                                                                                                                            இங்ஙனம்
                                                                                                                                 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                          செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                               மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                            சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                              22 – 10 – 2017

 

 

Image

அனைவருக்கும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- இரண்டு பேச்சுத் திறன் போட்டிளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- இரண்டு
பேச்சுத் திறன் போட்டிளின் முடிவுகள்.

 

 

 

 

 

 

முன்னாள் ஆசிரிய ஆலோசகர் கலாபூஷணம் பண்டிதை
செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்

பேச்சுத் திறன் போட்டிகளில் மூன்று பிரிவுகளிலும் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் எண் இரண்டு- பேச்சுப் போட்டிகள் கடந்த 16-07-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றன.

பேச்சுப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான முன்னாள் ஆசிரிய ஆலோசகர் கலாபூஷணம் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் மூன்று பிரிவுகளுக்குமான மேற்படி போட்டிகள் இடம்பெற்றன.

வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம்  இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

                                                                                  அ. பிரிவு

நிலை                                          பெயர்                                            பெற்ற புள்ளிகள்                        பாடசாலை
முதலாமிடம்              செல்வி. கோபிகா வரதராசா                               60                                 யாழ்ற்றன் கல்லூரி
இரண்டாமிடம்          செல்வன். புவிந்தன் கிருஷ்ணராசா                  53                                 யாழ்ற்றன் கல்லூரி
மூன்றாமிடம்             செல்வி. மதுஷனா பாலேந்திரன்                        50                                 யாழ்ற்றன் கல்லூரி
நான்காமிடம்             செல்வி. பிரசாயினி பிரதீபன்                              48                     வியாவில் சைவ வித்தியாலயம்
ஐந்தாமிடம்                செல்வி. விநாயகமூர்த்தி சதுஸ்ரி                       45                             காரை. இந்துக் கல்லூரி

                                                                                 

                                                                                       ஆ. பிரிவு

நிலை                                  பெயர்                                         பெற்ற புள்ளிகள்                           பாடசாலை
முதலாமிடம்        செல்வி. அனுரேகா அற்புதராசா                  70                   சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
இரண்டாமிடம்    செல்வன். துவாரகன் பரஞ்சோதி                65                                  காரை. இந்துக் கல்லூரி
மூன்றாமிடம்       செல்வி. கஸ்தூரி சண்முகசுந்தரம்             62                                         யாழ்ற்றன் கல்லூரி
நான்காமிடம்       செல்வி. அருட்செல்வி கதிர்காமநாதன்     54                                         யாழ்ற்றன் கல்லூரி
ஐந்தாமிடம்          செல்வி. சிந்துஜா சுபாஸ்கரன்                      51                             வியாவில் சைவ வித்தியாலயம்

                                                                                         

                                                                                          இ. பிரிவு

நிலை                                    பெயர்                                         பெற்ற புள்ளிகள்                              பாடசாலை
முதலாமிடம்           செல்வி. கிர்சிகா மோகநாகன்                    86                                        யாழ்ற்றன் கல்லூரி
இரண்டாமிடம்       செல்வன். வினோதன் கனகலிங்கம்          84                                    காரை. இந்துக் கல்லூரி
மூன்றாமிடம்          செல்வி. ஜானகி சற்குணராசா                    65                                         யாழ்ற்றன் கல்லூரி

 

நன்றி

‘ஆளுயர்வே ஊருயர்வு’.
‘நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்’.

                                                                                                                                                                  இங்ஙனம்
                                                                                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                                 செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                   மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                                சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                                  15 – 10 – 2017

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- ஒன்று கட்டுரையாக்கத் திறன் போட்டிளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- ஒன்று
கட்டுரையாக்கத் திறன் போட்டிளின் முடிவுகள்.

மூன்று பிரிவுகளில் கட்டுரைப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள்

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் – எண் ஒன்று – கட்டுiரையாக்கத் திறன் மூன்று பிரிவுகளுக்குமான போட்டிகள் கடந்த 17-07-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றன.

கட்டுரைப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திருவாளர் அருணாசலம் வரதராஜன் அவர்களின் நெறிப்படுத்தலில் மூன்று பிரிவுகளுக்குமான மேற்படி போட்டிகள் இடம்பெற்றன.

வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் தீர்மானிக்கப்படும் பொருத்தமான தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

                                                             அ. பிரிவு
நிலை                                       பெயர்                                            பெற்ற புள்ளிகள்                   பாடசாலை
முதலாமிடம்        செல்வன். சிவதாசன் சுஜிந்திரன்                           80                      காரை.இந்துக் கல்லூரி
இரண்டாமிடம்    செல்வி. சிவகௌரி ஸ்ரீமகேஸ்வரலிங்கம்           77                            யாழ்ற்றன் கல்லூரி
மூன்றாமிடம்       செல்வி. பவாநந்தன் டினோஜா                              70         சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
நான்காமிடம்       செல்வி. சிவகுமாரன் லக்சனா                               65                             யாழ்ற்றன் கல்லூரி

                                                             ஆ. பிரிவு
நிலை                                     பெயர்                                            பெற்ற புள்ளிகள்                     பாடசாலை
முதலாமிடம்        செல்வி. ஆனந்தராசா அமிர்தா                               75                        காரை.இந்துக் கல்லூரி
இரண்டாமிடம்    செல்வி. சிவபாலன் சுகன்யா                                   73                          யாழ்ற்றன் கல்லூரி
மூன்றாமிடம்       செல்வி. செல்வகுமார் நாகதீபா                              70                           யாழ்ற்றன் கல்லூரி
நான்காமிடம்       செல்வி. கணேசானந்தன் சுஜானா                         66                          காரை.இந்துக் கல்லூரி
ஐந்தாமிடம்         செல்வி. தேவராசா நிர்மலா                                       63                           யாழ்ற்றன் கல்லூரி

                                                              இ. பிரிவு
நிலை                                   பெயர்                                                 பெற்ற புள்ளிகள்                      பாடசாலை
முதலாமிடம்          செல்வி. கிர்சிகா மோகநாதன்                                 77                              யாழ்ற்றன் கல்லூரி
இரண்டாமிடம்      செல்வி. பிரதீபா சத்தியமூர்த்தி                               74                            யாழ்ற்றன் கல்லூரி

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

                                                                                                                                                                     இங்ஙனம்
                                                                                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                                   சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                                       05 – 10 – 2017

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- நான்கு இசைத் திறன் போட்டிளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- நான்கு
இசைத் திறன் போட்டிளின் முடிவுகள்.

மூன்று பிரிவுகளில் தனியிசையிலும் நாட்டாரிசையில் குழு நிலையிலும் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள்

 

 

 

 

 

 

 

 

செல்வி பரமேஸ்வரி கணேசன்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
(யாழ் பல்கலைக் கழக இசைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்)

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் எண் நான்கு- மூன்று பிரிவுகளுக்குமான தனி இசைப் போட்டிகளும் குழுநிலை நாட்டாரிசைப் போட்டியும் கடந்த 15-07-2017 அன்று சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இடம்பெற்றன.

இசைப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான யாழ் பல்கலைக் கழக இசைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியோர் விபரங்கள்.

வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

 

 

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

                                                                                                         

                                                                                                                அ. பிரிவு

நிலை                                       பெயர்                                                  பெற்ற புள்ளிகள்                                  பாடசாலை
முதலாமிடம்            செல்வி சரண்யா லிங்கராசா                                    92                                          யாழ்ற்றன் கல்லூரி
இரண்டாமிடம்              செல்வி. சரண்யா ஜெயமோகன்                        90                                              இந்துக் கல்லூரி
மூன்றாமிடம்           செல்வன் கோபிகாந் சத்தியானந்தன்                    89                                           யாழ்ற்றன் கல்லூரி
நான்காமிடம்           செல்வன். நிஷாந்தன் பாஸ்கரன்                             88                                          யாழ்ற்றன் கல்லூரி
ஐந்தாமிடம்               செல்வி மயூரிகா செல்வக்குமார்                             85                                               இந்துக் கல்லூரி

 

 

                                                                                                                     ஆ. பிரிவு

நிலை                                        பெயர்                                                      பெற்ற புள்ளிகள்                                   பாடசாலை
முதலாமிடம்          செல்வி அமிர்தா ஆனந்தராசா                                      90                                               இந்துக் கல்லூரி
இரண்டாமிடம்      செல்வி. புருசோத்தமி சிவனேஸ்வரன்                        80                                                 இந்துக் கல்லூரி
மூன்றாமிடம்         செல்வி வனிதா சிவானந்தன்                                        75                                            யாழ்ற்றன் கல்லூரி
நான்காமிடம்         செல்வி கோபிகா சிவராசா                                            70                                            யாழ்ற்றன் கல்லூரி
ஐந்தாமிடம்            செல்வி அபிராமி லிங்கேஸ்வரன்                                 65                                              யாழ்ற்றன் கல்லூரி

 

                                                                                                                         இ. பிரிவு

நிலை                                    பெயர்                                                             பெற்ற புள்ளிகள்                                   பாடசாலை
முதலாமிடம்          செல்வன் ப. மகீபன்                                                            80                                           யாழ்ற்றன் கல்லூரி
இரண்டாமிடம்      செல்வி நிரோஜினி சோதிலிங்கம்                                   70                                           யாழ்ற்றன் கல்லூரி
மூன்றாமிடம்         செல்வி கீர்த்திகா கங்காதரன்                                          65                                           யாழ்ற்றன் கல்லூரி

 

 

                                                                                          நாட்டார் இசை- குழு நிலைப் போட்டி

நிலை                                     வெற்றியீட்டிய பாடசாலை                                                         பெற்ற புள்ளிகள்
முதலாமிடம்                         காரைநகர் இந்துக் கல்லூரி                                                                     85
இரண்டாமிடம்                        யாழ்ற்றன் கல்லூரி                                                                                 70

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம”.

 

                                                                                                                                                                    இங்ஙனம்
                                                                                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                                  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                                   05 – 10 – 2017

 

ஸ்ரீ விஷ்ணு துர்க்காபீடத்தின் வாழும்போது வாழ்த்துவோம் நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை ஸ்ரீ விஷ்ணு துர்க்காபீடத்தின் வாழும் போது வாழ்த்துவோம் நிகழ்வுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி!

swisskarai24.09.2017

 

இலங்கை காரைநகர் ஈழத்துச்சிதம்பர ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் கைலாயக்கம்பர் அவர்களது மகன் தவில்வித்துவான் ந.கை.வீராச்சாமி அவர்களும் குழுவினரும் சுவிஸ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்களனைவரையும் ஸ்ரீ விஷ்ணு துர்க்காபீடம் ″வாழும்போது வாழ்த்துவோம் ″ என்ற தலைப்பின்கீழ் கௌரவிக்கவுள்ளது.

Programe List 24092017 Final1

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினரின் தியாகத் திறன் வேள்வி- 2017 திருக்குறள் மனனப் போட்டி சிறப்புற நிகழ்ந்தது

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினரின்
தியாகத் திறன் வேள்வி- 2017
திருக்குறள் மனனப் போட்டி சிறப்புற நிகழ்ந்தது

தியாகத் திறன்வேள்வி 2017 இன் முதல் நான்குபோட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஞாயிறு 10-09-2017 அன்று காலை 9 மணிக்குத் திருக்குறள் மனனப் போட்டி இடம் பெற்றது. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கிடையே இரு பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்பட்டது.

170க்கும் அதிகமான மாணவ மாணவியரின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக இப்போட்டிகள் காரைநகர் இந்துக் கல்லூரி வடக்கு வளாகத்தில் இடம் பெற்றன. ஒன்பது நடுவர்களுடன் மூன்று அவைகளில் இடம் பெற்ற இப்போட்டியில் மாணவ மாணவியர் பெருந்தொகையில் பங்குபற்றியமை பாராட்டுதற்குரியதாகும்.

திருக்குறள் மனனப் போட்டிக்கு பின்வருவோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள்:

1. திரு.க.ந.கடம்பேசுவரன் விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்,
2. திரு. நவரத்தினம் யா. அராலிமுருகமூர்த்திவித்தியாசாலை,
3. திருமதி. யோ. பங்கயச்செல்வி யா. சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி,
4. திரு. யோ சுதந்திரன் ஆசிரியர் இணுவில்,
5. திருமதி மயூரதி சந்திரகுமார் ஆசிரியர் மன். மூன்றாம்பிட்டி அ.த.க. பாடசாலை,
6. திரு.ல. அமலானந்குமார் அதிபர் மன். மாரீசன்கூடல் றோ.க.த.க. பாடசாலை,
7. திரு.ந.கிருபானந்தம் ஆசிரியர் யா. மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை,
8. செல்வி து. சுபாஷினி சுழிபுரம் மேற்கு,
9. செல்வன் து.சுதர்சன் சுழிபுரம் மேற்கு,
10. ஆகியோர்கள் நடுவர்களாகவும் உதவியாளர்களாகவும் கடமையாற்றியிருந்தார்கள்.

இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மொழி,கல்வி,கலைமேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் ஆகியோரின் உதவியுடன் திருக்குறள் மனனப் போட்டிக்கான பொறுப்பாளர் கலாபூஷணம் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களின் வழிகாட்டலில் மிகச் சிறப்பாக இப்போட்டி இடம் பெற்றது.

மாணாக்கர் பெற்றார்கள் நடுவர்கள் போட்டிப் பொறுப்பாளர் ஆகியோரின் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆளுயர்வே ஊருயர்வு!
நன்றே செய்வோம்! அதை இன்றே செய்வோம்!

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
21. 09. 2017

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் தியாகத் திறன் வேள்வி- 2017 நாடக விழாவும் போட்டியும்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்
தியாகத் திறன் வேள்வி- 2017 நாடக விழாவும் போட்டியும்

16.09.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற

1) திருமதி.வி.ரமணன் அவர்களின் இயக்கத்தில் வெல்க மானுடம் காரை இந்து மாணாக்கர் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்

17.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற

2) திரு.கோ.எடின்பரோ அவர்களின் இயக்கத்தில் காவோலையும் குருத்தோலையும் காரைநகர் கிறிஸ்த்தவ இளைஞர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்.

3) திரு.க. வடிவேலு அவர்களின் இயக்கத்தில் காலனை வென்ற கற்புக்கரசி சிவகௌரி நாடக மன்ற கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்.

4) திரு. க.செ.கந்தசாமி அவர்களின் இயக்கத்தில் திருந்துவார்களா? என்ற நகைச்சுவை நாடகமும் காரை இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக மேடையேற்றப்பட்டன.

 

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

 

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
21. 09. 2017

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் தியாகத் திறன் வேள்வி- 2017 நாடக விழாவும் போட்டியும்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் 
தியாகத் திறன் வேள்வி- 2017 
நாடக விழாவும் போட்டியும்

அன்புடையீர்!
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வருடந்தோறும் நடாத்தும் ஆளுமை விருத்திக்கான தியாகத் திறன் போட்டிகளின் ஒரு அங்கமாக 2017ம் ஆம் ஆண்டு நாடகப் போட்டியும் இடம்பெறுகிறது. ஊர் மக்களது ஆளுமை விருத்தியில் குறிப்பாக இளையோரின் ஆளுமை விருத்தியில் நாடகத்தின் பங்கு மிக அவசியமானது. 
இது தொடர்பான விரிவான  கட்டுரையை வாசிப்பதற்கு பின்வரும் வலை இணைப்புக்களை அழுத்தவும். www.karainagar.com 

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                       இங்ஙனம்
                                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                      11. 09. .2017

 

Nadaka Vizhaavum podiyum

“தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்  நினைவுப் போட்டியும்.

"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்

 நினைவுப் போட்டியும்.

THIYAGARAJAH

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற கல்வி சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், அவ்விழாவையொட்டிய "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் சூரிக்கில் கடந்த 17.07.2016 இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005  மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

இத் தொகுப்பு எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் மிக மிகக்குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற எமது சபையின் முப்பெரும் விழாவில் கடந்த12.01.2017இல் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 


இந்நூலின் ஆக்கங்களை வாரம் தோறும் இணையதளங்களில் பிரசுரித்து வந்துள்ளோம். இவ் வெளியீட்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஊக்குவிக்கு முகமாக "தியாக நினைவுப் போட்டி"    ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின்  தனிப்பட்ட கல்வி சமூக அரசியல்  வாழ்க்கை தொடர்பாக இத்தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பது வினாக்களடங்கிய கேள்விக் கொத்தினை இணைத்துள்ளோம். 


இக் கேள்விகளுக்கு சரியான பதில்களை 20.09.2017இற்கு முன்பதாக swisskarai2004@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சரியான பதில்களை அனுப்பும் முதல் மூன்றுவெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. ஒன்றுக்குமேற்பட்டவர்கள் சரியான பதில்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில் வெற்றியாளர்கள் திருவுளச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எதிர் வரும்  ஆதிரைத் விழாவின் போது இடம்பெறும் முத்தமிழ் விழாவில் வெற்றியாளர்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.


இதுவரை எல்லா கட்டுரைகளும் இணையதளங்களில் வெளிவந்த நிலையில் போட்டியாளர்களின் வசதிக்காக இத்தொகுப்பின் மென்பிரதியை கேள்விக் கொத்துடன் இணைத்து வெளியிடுகின்றோம் என்பதை அறியத்தருகின்றோம்.
கிழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கொத்து அனைத்தும் "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. போட்டியாளர்கள் கேள்வி இலக்கத்தை எழுதி சரியான முழுமையான விடையை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
உதாரணம்:- கேள்வி இல: 3) அ) காரை நிலா

                                                                     நன்றி


"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                     இங்ஙனம்
                                                                             சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                    செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                       சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                     20. 08. .2017

 

1) சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மன்ற கீதத்தை இயற்றியவர் யார்?
   அ) சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி 
   ஆ) கலாபூஷணம். கலாநிதி தமிழ்மணி அகளங்கன்
   இ) தமிழருவி த. சிவகுமாரன் 
    ஈ) யோகனந்த அடிகள் ச.பற்குணராஜா

2)    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது?
அ) உலக மரபு 
ஆ) சங்ககால மரபு 
இ) தமிழ் மரபு
ஈ) தெய்வ மரபு

3)    தனிச்சிங்கள  மொழிச் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
அ) 1920   ஆ) 1948 இ) 1960 ஈ) 1956

4)    பிரபலமான கல்வியாளனாகவும் சமூக சேவையாளனாகவும் அரசியற்களம் இறங்கி வெற்றி கண்டவர் யார்?
அ) பிரான்சிஸ் ஐயாவு 
ஆ) தோழர் சுந்தரம் 
இ) கலாநிதி ஆ. தியாகராஜா 
ஈ) தந்தை செல்வா

5)    காரைநகர் இந்துக் கல்லூரியில் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
அ) 17. 04. 2016  
ஆ) 17. 04. 1905 
இ) 17. 04. 1998  
ஈ) 17. 04. 2007

6)    ஆங்கில இந்துப் பாடசாலையென அழைக்கப்பட்ட பாடசாலை எது?
அ) யாழ்ற்றன் கல்லூரி 
ஆ) சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்  
இ) காரைநகர் இந்துக்கல்லூரி 
ஈ) வியாவில் சைவமகா வித்தியாலயம்

7)    கலாநிதி ஆ. தியாகராஜா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியில் எத்தனை ஆண்டுகள் அதிபராக கடமையாற்றினார்?
அ) 25 ஆண்டுகள்  ஆ) 27 ஆண்டுகள்  இ) 30 ஆண்டுகள்  ஈ) 24 ஆண்டுகள்

8)    நாவலர் வழிவந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர் யார்?
அ) யோகர் சுவாமிகள் 
ஆ) பேப்பர் சுவாமிகள் 
இ) அருணாசல உபாத்தியார் 
ஈ) சயம்பு உபாத்தியார்

9)    காரை மண் தந்த வித்துவான் பிரான்சிஸ் சேவியர் செல்லையா நடராசா அவர்கள் எழுதிய நூலின் பெயர் யாது?
அ) காரை மான்மியம்  
ஆ) காரை நிலா  
இ) வான் அலையின் வரிகள் 
இ) பொருளாதார அறிவு

10)    இந்துக் கல்லூரியில் முத்துவிழா கொண்டாடப்பட்ட ஆண்டு எது?
அ) 1950  ஆ) 1968 இ) 1963 ஈ) 1959

 11) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் வடிவமைத்த அணைக்கட்டின் பெயர் என்ன?
   அ) கரம்பன் அணை ஆ) வேணன் அணை 
   இ) பண்ணைப் பாலம் ஈ) பொன்னாலைப் பாலம்

12) எந்த ஆய்வு நூலைப் பாராட்டி கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களுக்கு 
   புதுடில்லிப் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் வழங்கியது?
        அ) இலங்கையின் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு; 
ஆ) இலங்கைப் பொருளாதார அபிவிருத்தி 
இ) கல்வியில் மாணவர்களின் முன்னேற்றம் 
ஈ) மகான்களின் பெரும் பங்கு

13)  யாருடைய காலத்தில் வியாவில் உப-தபால் நிலையம் திறக்கப்பட்டது?
         அ) சேர்பொன். இராமநாதன்     ஆ) அ. அமிர்தலிங்கம் 
இ) கலாநிதி ஆ.தியாகராஜா     ஈ) வைத்தீஸ்வரக் குருக்கள்

    14) அரசியலில் அடிமட்ட மக்களின் காதல் வாகனம் எது?
         அ) மாட்டுவண்டி ஆ) மோட்டார்வண்டி 
இ) மூச்சக்கரவண்டி  ஈ) துவிச்சக்கரவண்டி

 15) தியாகராசா அவர்களின் பிறந்த திகதி மாதம் ஆண்டு எது?
     அ) 17. 04. 1916   ஆ) 20. 02. 1920  இ) 05. 01. 1907  ஈ) 01. 10. 1910

     16) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் காரை இந்துக் கல்லூரியில் அதிபராக 
      சேவை ஆற்றிய காலப்பகுதி எது?
    அ) 1909 – 1920  ஆ) 1946 – 1970  இ) 1929 – 1972  ஈ) 1979 –  1987

17) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் உதவி பெற்றுக் கல்வி கற்று  மருத்துவர்  ஆகிய சிறுவன் பெயர் யாது?
     அ) சின்னத்தம்பி  ஆ) சிவபாதம்  இ) பெரியசாமி ஈ) செல்லையா

 18) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் 1970ஆம் ஆண்டு எந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்?
      அ) மானிப்பாய் ஆ) யாழ்ப்பாணம் 
      இ) வட்டுக்கோட்டை ஈ) காங்கேசன்துறை

19) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஆண்டு எது?
      அ) 1980 ஆ) 1970 இ) 1981 ஈ) 1998

 20) "அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம" என்ற கவி வரி எவ்விலக்கியத்தில்         உள்ளது?
       அ) ஆத்திசூடி ஆ) திருக்குறள் இ) நாலடியார் ஈ) முதுரை

21) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடம் எது?
     அ) அராலி ஆ) சுழிபுரம் இ) மாவடி ஈ) தாவடி

22) "நேர்மையைத் தத்தெடுத்த ஞானக்கிறுக்கன் நீ அதனால் நேராகவே நடக்கத்    தெரிந்தவன்" எனக் கவிதை எழுதியவர்?
     அ) சைவப்புலவர் பத்மானந்தன் ஆ) புலவர் பூரணம் ஏனாதி நாதன்
     இ) பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை ஈ) வித்துவான் மு. சபாரத்தினம்

23) காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தையென வர்ணிக்கப்படுபவர்?
     அ) பேப்பர் சுவாமிகள் ஆ) அருணாசல உபாத்தியர் 
     இ) கலாநிதி ஆ.தியாகராஜா  ஈ) கணபதிஸ்வரக் குருக்கள்

24) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப்பட்டம் பெற்ற  இடம் எது?
     அ) இலங்கை ஆ) இந்தோனோசியா இ) இந்தியா ஈ) யப்பான்

25) தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூலின் அறிமுகவுரை எழுதியவர் யார்?
     அ) வித்துவான் மு. சபாரத்தினம் ஆ) காரை சுந்தரம் பிள்ளை 
இ) தமிழருவி த. சிவகுமாரன் ஈ) கலாநிதி கென்னடி விஐயரத்தினம்

26) கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின் இறுதி பயணத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்த்தர் யார்?
    அ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஆர்.பிரேமதாஸ 
    ஆ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி 
      இ) சந்திரிக்கா குமாரதுங்கா 
      ஈ) மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா

27) கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர்பெற்றிருந்த பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்ற திகதி,மாதம்,ஆண்டு எது?
   அ) 17-08-1950  ஆ)  15-09-1970  இ) 04-01-2016 ஈ) 07-10-1987

  28) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் தாய் தந்தையர் நாமம் என்ன?
      அ) ஆறுமுகம் பாக்கியவதி ஆ) ஆறுமுகம் அமிர்தவல்லி 
      இ) ஆறுமுகம் வள்ளியம்மை ஈ) ஆறுமுகம் சின்னப்பிள்ளை

  29 கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் மனைவியாரின் திருநாமம் என்ன?
      அ) மகேஸ்வரி ஆ) உமையாள் இ) விஜயலட்சுமி ஈ) சித்திராதேவி

  30) காரைநகர் இந்துக் கல்லூரியில் எந்த அதிபரது ஓய்வுக்குப் பின்பு கலாநிதி ஆ.தியாகராசா அதிபரானார்?
       அ) சிவதிரு அ. சீதாராமஐயர்  ஆ) திரு.சரவணமுத்து 
       இ) திரு.ஏ.கனகசபை  ஈ) திரு. பொ. வேலுப்பிள்ளை

  31) இலங்கையில் யாரால் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது?
     அ) சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா ஆ) ஜே.ஆர் .ஜெயவர்த்தனா 
     இ) கலாநிதி ஆ.தியாகராஜா ஈ) திரு. அ. அமிர்தலிங்கம்

  32) காரைநகர் சாமியார் பள்ளிக்கூடம் எத்தனையாம் ஆண்டு மூடப்பட்டது?
     அ) 1919 ஆ) 1927 இ) 1945 ஈ) 1929

  33) 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சஞ்சிகையின் எது?
     அ) சயம்பு ஆ) காரைநகர் இந்துக்கல்லூரி இ) காரைமண் ஈ) கல்விவளர்ச்சி

  34) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் பதவி, உயர்நிலை, என்பவற்றுக்கு காத்திராது ஓய்வு பெற்ற ஆண்டு எது?
     அ) 02.04.1970  ஆ) 24.06.1972 இ) 29.08.1974 ஈ) 20.07.1970

  35) 'எல்லாம் எப்பவோ முடிந்த காரியம் ||என்று கூறியவர் யார்?
      அ) பொய்யாப் மொழிப் புலவர் ஆ) யோகர் சுவாமிகள் 
      இ) வள்ளுவப் பெருந்தகை ஈ) செல்லப்பா சுவாமிகள்

  36) காரைநகரையும் யாழ்ப்பாணக்குடா நாட்டையும் இணைக்கும் பொன்னாலைப் பாலத்தை அமைத்தவர் யார்?
         அ) கு.ஆ ஆம்ஸ்ரோங்  ஆ) தியாகச்சுடர் ஆ.தியாகராஜா 
        இ) திரு. நடராசா ஈ) திரு. வேலுப்பிள்ளை

  37) காரைதீவாக இருந்த எம்மூர் காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற தினம்?
     அ) 17.07.1969 ஆ) 19.01.1922 இ) 12.09.1923 ஈ) 24.12.1927

38) காரைநகரில் முன்னைய காலத்தில் துறைமுகமாக இருந்தது எது?
     அ) வேலணை ஆ) ஊர்காவத்துறை இ) கோவளம் ஈ) தம்பாட்டி

 39) "கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் அலைவார்கள்" என்ற கருத்தை கட்டுரைப் போட்டியில் முன் வைத்த மாணவி யார்? 
     அ) செல்வி தீபிகா நவரட்ணம் ஆ) செல்வி டிலானி கார்த்திகேசு 
     இ) செல்வி காரை ரதி குமார் ஈ) செல்வி உமையாள் பாரதி

  40) யாரை காரை மணிவாசகர் சபை "சிவத்தமிழ்ச் செல்வி" என்ற பட்டழம் வழங்கி கௌரவித்தது?
     அ) திருமதி தங்கம்மா நடராசா ஆ) திருமதி பாரதி சந்திரகுமார் 
     இ) திரு. வேலுப்பிள்ளை சேகரன் ஈ) செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

  41) கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் தனது 22ஆவது வயதில் பெற்றுக் கொண்ட பட்டம் என்ன?
    அ) M.A பட்டம் ஆ) M:Lit  பட்டம் இ) B .A  பட்டம் ஈ) கலாநிதிப் பட்டம்

 42) 19. 08. 1950ஆம் அன்று யாரால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டது?
      அ) திரு. கனகசபை ஆ) கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி எல்.ஏ.ராஜபக்ஷ 
     இ) திரு.மு.சீவரத்தினம் ஈ) திரு. அ. குலசிங்கம்

  43) காரைநகர் இந்துக் கல்லூரியின் சயம்பு மண்டபம் கீழ் மாடி வகுப்பறை, நூலகம் இவற்றை அமைத்திட கலாநிதியுடன் கூடி ஈடுபட்டவர்?
      அ) திரு.த. அருளையா ஆ) திரு.ச. பெரியதம்பி 
இ) திரு. சு.கலைவாணர் ஈ) திரு.க.கனகசபை

  44) காரைநகரின் வரலாற்று அதிபர் என்று அழைக்கப்பட்டவர்?
      அ) சயம்பு ஆ) அருணாசல உபாத்தியார் 
      இ) திரு. த. தர்மசீலன் ஈ) கலாநிதி ஆ.தியாகராசா

  45) "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகை சான்ற 
 சொற்காத்து சோர்விலான் பெண்" 
என்பதை வள்ளுவப் பெருந்தகை எத்தனையாவது குறளில் மொழிந்துள்ளார்?
 அ) 56 ஆ) 69 இ) 70 ஈ) 55

  46) "கற்பது பெண்களுக்கு ஆபரணம் 
கொம்புக் கல்வைத்த நகை தீராதரணம்" என்பதை கூறியவர்?
      அ) பாரதி  ஆ) பாரதிதாசன்  இ) வள்ளுவர்  ஈ) ஒளவையார்


  47) முதன் முதலில் சர்வதேச மகளிர் தினமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம்?
     அ) 19.03.1911 ஆ) 08.03.1921 இ) 07.03.1975 ஈ) 28.03.1970

  48) கல்வித் தாய் என்று குறிப்பிடப்படுபவர்?
     அ) கீயூரி  ஆ) நெலிசாக்ஸ்  இ) வங்காரி மாதாய்  ஈ) மரியா மொண்டிசோரி

  49) சிவத்திரு. கணபதீஸ்வரக் குருக்களின் புதல்வர்?
அ) ஞானசம்பந்த குருக்கள் ஆ) சீனி ஐயர் 
இ) நாகமுத்துப்புலவர் ஈ) வைத்தீஸ்வரக்குருக்கள்

  50) தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பினை வெளியிட கரம் கொடுத்து உதவியவர்?
      அ) கலைமாடக் கோன் திரு. ச. சிவஞானம். 
ஆ) கல்விக் காருண்யன் திரு. E.S. P.  நாகரத்தினம். 
ஈ) அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன்.

இ) முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன்.

 

காரைநகர் இந்துக் கல்லூரி
வெள்ளிவிழா அதிபர்
அமரர் கலாநிதி ஆ.தியாகராசா
M.A., M.Lit, Ph.D
நூற்றாண்டு நினைவுத் தொகுப்பு
(1916 – 2016)

final book thigaraja

காரைநகரின் புகழ் பூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்கள் சுவிற்சர்லாந்து வந்தடைந்தார்.

காரைநகரின் புகழ் பூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்கள் சுவிற்சர்லாந்து வந்தடைந்தார்.

 காரைநகரின் புகழ் பூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்கள் சுவிஸ் பேர்ண்  ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தின் கடந்த 25.06.2017இல்  வருடாந்த மகோற்சவத்திற்காக வருகைதர இருந்த பொழுதிலும் சுவிஸ் நாட்டின் விசா கிடைப்பதில் ஏற்பட்ட கால தாமத்தால் இன்று சுவிஸ் வாழ் காரை மக்களினதும், கோவில் நிர்வாகத்தினரதும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 16.08.2017 புதன் கிழமை காலை 6.40இற்கு சூரிக் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

காரைநகரின் புகழ் பூத்த மூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்களை  முதலாவதாக சுவிற்சர்லாந்துக்கு அழைத்து கௌரவிக்கப்பட விருப்பது குறிப்பிடத்தக்கது.

24.12.2015 வியாழக்கிழமை அன்று சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பும், மாணவர்கள் பரிசளிப்பும் நாட்காட்டி வெளியீடும் இணைந்த முப்பெரும் விழாவாக காரை அபிவிருத்திச் சபைத்தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில்  காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் முப்பெரும் விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பாவினை கிழேகாணலாம்.

 
                                                                     நன்றி

 

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                             இங்ஙனம்.
                                                                                       சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                                16.08.2017

 

Veerachamy

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரையிலான செயற்பாடுகளும், கணக்கு அறிக்கையும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரையிலான செயற்பாடுகளும், கணக்கு அறிக்கையும்.

 

அன்புடையீர் வணக்கம்!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தனது நான்காவது தடைவையாக சபையின் செயற்பாட்டு விளக்க உரையினையும், கணக்கு அறிகையினையும் வெளியிடுகின்றோம். கடந்த  காரைத்தென்றல் 15-06-2016இன் நிகழ்வில் சபையின் மூன்றாவது வெளியீடான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தோற்றமும் 2004ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையிலான செயற்பாடும் 01.01.2013இல் இருந்து 31.12.2015 வரையிலான கணக்கு அறிக்கையும் சமர்பித்திருந்தோம். இன்று பதினெட்டு மாதங்களுக்கான சபையின் செயற்பாடுகளும், கணக்கு அறிக்கையினையும்  வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகின்றோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2016ஆம் ஆண்டிற்கான மூன்று செயற்பாடுகள் இதற்கு முன் சமர்பித்த அறிக்கையில் பதிவு செய்திருக்கின்றோம். அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி அறிக்கையினை சமர்பிக்கின்றோம். 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பதினொராவது அண்டுவிழா காரைத்தென்றல்-2015

சுவிஸ் வாழ் காரை மக்களின் உன்னதமான நாற்பத்தாறு குடும்பஅங்கத்தவரின் உன்னதமான நிதிப்பங்களிப்பினால் வெகு சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே!

காரைத்தென்றல்-2015 ஆண்டுவிழாவின் செலவுகள் தவிர்த்து மிகுதிப்பணம் எதற்கு பயன்பட்டது என்பதை அகமகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.

  எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி  (26.09.2015) பிற்பகல் 3.00மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் பரீட்சை நடாத்தும் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும் அசொகரியங்கள் தொடர்பாக அவர்களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்த மண்டபத்திற்கான மின்சாரக் குறைபாட்டினை நிவர்த்தி செய்துதரும்படி காரை அபிவிருத்திச்சபை தலைவர் ஊடாக பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தனபாலன் அவர்களால் எமது சபையிடம் முன்வைக்கப்பட்டது. இதனை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து மண்டபத்திற்கு பதின்மூன்று ரியூப்லைற், ஏழு மின் விசிறிகள் மண்டபத்திற்கு தனியான மெயின்சுவிற் என்பன 90375.00ரூபா.செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. என்பதை அறியத்தருகின்றோம்.

  எமது சபையின் நாட்காட்டி 2016  காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் 24.12.2015 வியாழக்கிழமை அன்று 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்ட நாட்காட்டி 150 பிரதிகளில் 50பிரதிகள் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்திடம் கையளிகப்பட்டது. மிகுதி 100 பிரதிகள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை St. Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich. மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. நாட்காட்டி அச்சுப்பிரதிக்கான செலவு 133750.00 ரூபாய்க்கள் என்பதனையும் காரைநகரில் வெளியிடப்பட்ட நாட்காட்டியின் வருமானங்கள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. என்பதை அறியத்தருகின்றோம்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் 2016ஆம் ஆண்டு நலிவுற்றோருக்கான கண்படர் அகற்றல் அறுவைச் சிகிச்சையினை உங்களின் உதவிக்கரத்தினால் நிறைவேற்றியுள்ளது.

எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாக வறிய மக்களுக்கான கண் அறுவைச்சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016இல் காரை அபிவிருத்திச் சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு 25.03.2016இல் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 31 பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப்பேருக்கு 31.03.2016இலும், இதுவரை மொத்தமாக 27 பேருக்கு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 4பேருக்கு மூக்குகண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. மிகுதிப்பேருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறும் என்பதனையும், 31 பயனாளிகளுக்கான செலவுத்தொகை 567210.00 ரூபாய்கள் எமது தாய்சங்கத்திடம் 28.06.2016இல் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை  அறியத்தருகின்றோம்.

  காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இ.போ.சபையின் பொன்விழாவுக்கான நிதியுதவி.

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையின் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபையிடம் காரைநகர் சாலை அபிவிருத்திக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்;பட்டுள்ளது.

காரைநகர் போக்குவரத்துச் சாலையின் பொன்விழாச்சபையினரால் காரைநகர் அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் எமது காரைநகர் சாலை 1976ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.  1991 இல் இடம்பெற்ற யுத்தத்தினால்   இச் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை மீளவும் திருத்துவதற்கு இ.போ.சபையின் மான்புமிகு அமைச்சரிடம் நிதியுதவி கேட்டபோது திருத்துவதற்கான நிதி தங்களிடம் இல்லையென்று கூறிவிட்டார்கள். தற்போதும் எமது காரைநகர் சாலை தொடர்ந்தும் மிகமோசமாகப் பழுதடைந்தே காணப்படுகின்றது. எமது சாலையை அழியவிடாது மீளவும் புனரமைத்துத் தருவதற்கு காரைநகருக்கு வெளியேயும்  வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த காரைநகர் மக்கள் நிதியுதவி செய்து தருமாறு  சாலையின்   பொன்விழாவுக்கும், அபிவிருத்திக்குமான குழு சார்பில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கீழ்கானும் வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டி உள்ளன. காரைநகர் சாலையினுள் பஸ் வண்டிகள் செல்லும் பாதை புனரமைப்பு, பஸ் பழுதுபார்க்கும் ராம்ப், சுற்றுவேலி, வயறிங்வேலை, கட்டிடத்திருத்தம், என அண்ணளவாக முப்பது இலட்சம் ரூபாய்கள் திருத்தவேலைகளுக்கு தேவைப்படுவதாலும், பொன்விழா மார்கழி மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருப்பதாலும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேற்படி கோரிக்கைக்கு அமைவாக 30.12.2016இல் நடைபெற்ற சாலையின் பொன்விழாவின் செயற்பாட்டிற்கு உந்து சக்தியாக 100000.00 (ஓரு லட்சம் ரூபாய்) எமது சபையால் வழங்கப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பிரான்ஸ் நோக்கிய கலைப் பயணம் – 2016

 ''பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்க்கிணங்க எமது சகோதர அமைப்பான பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் அன்பான அழைப்பைஏற்று 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை 14.00மணிக்கு நடாத்தும் பத்தாவது ஆண்டுவிழாவான ''காரை ஸ்வரங்கள்|| நிகழ்விற்கு  23குடும்பங்களைச் சேர்ந்த 50 சுவிஸ் வாழ் காரை உறுப்பினர்கள் பேருந்தில் ஓரு கலைப்பயணத்தை ஏற்படுத்தி விழாவினை சிறப்பித்திருந்தார்கள்

  காரைநகர் மண்ணின் கல்விக்கு சுடர்ஒளி ஏற்றிய அமரர்கள் கலாநிதி ஆ.தியாகராசா, பண்டிதமணி கலாநிதி சிவஸ்ரீ.க.வைத்திஸ்வர குருக்கள் ஆகியோரின் நூறாவதுஅகவையை நினைவு சுமந்த காரைத்தென்றல் – 2016

காரைநகர் மருதடி விநாயகர் கருணையினாலும், தில்லைக்கூத்தனின் திருவருளினாலும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வருடம்தோறும் பெருமையுடன் வழங்கும் காரைத்தென்றல் விழா துர்முகி வருடம் வைகாசித்திங்கள் 15.05.2016ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமான நிகழ்வு சிறுவர்களின் இயல், இசை, நாடகம் கலந்த விழாவாக இரவு22.00மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக காரை இந்துக்கல்லூரியின் ஒய்வு நிலை அதிபர் திருமதி பாலசிங்கம் தவநாயகி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக  திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர்) பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.சண்முகநாதன் தவபாலன் அவர்களும்  பிரான்ஸ் காரை மன்ற உறுப்பினர்கள் திரு.தேவராஜா தேவஞானம், திரு.அருள்நேயன் தம்பையா, திரு.இராசையா சண்முகலிங்கம் (சந்திரி) செல்வன் தினேஷ் சண்முகலிங்கம், திரு. சிவகுருநாதன் கணேசன், திரு. சண்முகநாதன் ஜெயசிங்கம் (ஜேர்மன்)  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் காரைத்தென்றல்- 2016 மிகச் சிறப்பாக நிறைவுற்றமை மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும.; இவ்விழா சிறப்பாக நடைபெற சுவிஸ் வாழ் காரை மக்களும் பங்கெடுத்துக் கொண்டதோடு தங்களால் செய்யப்பட்ட பேருதவியும், பேருழைப்பும் உண்மையில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மேன் மேலும் வளரும் என்ற இமாலய வெற்றி எமக்கு கிடைத்துள்ளது. இதேபோன்று இனிவரும் காலங்களிலும் காரைத்தென்றலை வெகுசிறப்பாக நடாத்துவதற்கு தங்களின் மேலான உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  எல்லாவழிகளிலும் உதவிபுரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர்  கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிறன்று சூரிக் நகரில் சிறப்புற நடைபெற்றன 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

மங்கலச் சுடறேற்றலும், அகவணக்கமும், கடவுள் வணக்கமும், மன்றக் கீதமும்

சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள், திரு, திருமதி. சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திரு, திருமதி  பூபாலபிள்ளை விவேகானந்தா ஆகியோர் ஒளிச் சுடர் ஏற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின் நிகழ்ச்சி அறிவித்தலுக்கு அமைய கடவுள் வணக்கத்தினை செல்வி பாரதி லோகதாஸன் அவர்கள் இனிமையான குரலில் பாடினார்.

அமரத்துவமான கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களுக்கும் ஏனைய உறவுகளுக்கும் எல்லோரும் எழுந்து நின்று நீத்தார் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மன்றக் கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தினை செல்வி பைரவி லோகதாஸன் சிறப்புற நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகள்

எமது சபையின் போஷகரும் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய பிரதமகுருவுமான ஸ்ரீ சரஹணானந்தக் குரக்கள் ஆசியுரை வழங்கி  இருந்தார். அவர் தனது உரையில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் அரசியல்பணி, கல்விப்பணி, சமூகப்பணி பற்றி விரிவாக கூறியிருந்தார்கள். விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் தொடங்கியிருந்த பொழுதிலும் இன் நிகழ்வில் தனது வருகையை பதிவு செய்வதற்கு வந்திருப்பதாகவும் இது அன்னாருக்கு செலுத்தும் நன்றிக்கடனும் கடமையுமாகும் எனக் கூறியிருந்தார்கள். தொடர்ந்து சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்களது வாழ்த்துரை இடம் பெற்றது.

ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நீண்ட தலைமையுரையோடு விழா களை கட்டியது. 

நிகழ்வுகளின் வரிசையில் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் வாழ்த்துச் செய்திகளை திரு அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்) அவர்கள் வாசித்திருந்தார்கள். முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியனை திரு. கனகசபை சிவபாலன் அவர்கள் வழங்கியிருந்தார்கள். முன்னாள் அதிபர் ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர் திருமதி பாலசிங்கம் தவநாயகி  அவர்களின் வாழ்த்துரையை திரு. முருகேசு பாலசுந்தரம் வழங்கியிருந்தார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நினைவுத் தொகுப்பு மூன்று கிழமைகளில் ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டுத் துரித கதியில் வெளியிடப்பட்டது.  இதனால் காலம் தாழ்த்திக் கிடைக்கப்பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் திரு.வே.முருகமூர்த்தி காரைநகர் அவர்களின் நிறுவுநர் பக்தி மிக்க முதல்வர் என்ற ஆக்கம் உலக சைவப் பேரவைத் தலைவர் திரு.சதாசிவம்.பற்குணராஜா அவர்களால் வாசிக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபையின் வாழ்த்துச் செய்தி திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களால் வாசிக்கப்பட்டது. 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக  இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தியையும்   உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணவருக்கான வருடாந்தரப் போட்டிகளுக்கான தியாகத் திறன் வேள்வி 2016 புதிய திட்டம் பற்றிய செய்தியையும் திருவாளர். பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் வாசித்தார். 

இசை அஞ்சலி

காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி ஒரு மணிநேரம் இடம் பெற்றது. பார்வையாளர்கள் கானமழையில் நனையும் வண்ணம் மிக அற்புதமாக இசையமுது வழங்கியிருந்தார்கள்.

திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின்  நிகழ்ச்சி அறிவிப்புக்கு அமைவாக தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு செய்வதற்கு ஆரம்ப ஏற்பாடுகள் நடந்த வேளை செல்வி பாரதி லோகதாஸனின் இனிமையான பாடல் எல்லோரையும் கவரும் வண்ணம் ஒலித்தது.

தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு

ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்த அவர்களின் தமையில் தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது. சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் நூலை வெளியிட்டு வைத்தார். முதல் பிரதிகளை திருவாளர்களான சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,  இரத்தினம் கண்ணதாசன், தர்மலிங்கம் லோகேஸ்வரன், பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர் பிரான்ஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம்

அதனைத் தொடர்ந்து அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம் இடம்பெற்றது. நிகழ்வில் உலக சைவப் பேரவைத் தலைவர் திருவாளர்கள். சதாசிவம். பற்குணராஜா, (பிரான்ஸ்) பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர்- பிரான்ஸ்), கணபதிப்பிள்ளை கணா மாஸ்டர், த. மாணிக்கவாசகர்; (பிரான்ஸ்) ஆகியோர்கள் நினைவுரைகள் ஆற்றியிருந்தார்கள். ஓவ்வொருவருடைய உரையில் இருந்தும் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் கல்விப்பணி, அரசியல்பணி, சமூகப்பணி ஆகியனவும் அன்னாரின் பன்முக ஆளுமையும் வெளிப்பட்டிருந்தன.

அமரருக்கான நாட்டியாஞ்சலியும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்கள் ஒர் இசைப்பிரியர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சூரிக் திருக்கோணேஸ்வர நடனாலய மாணவிகள் முப்பது மணித்துளிகள் நாட்டியாஞ்சலி மிக அற்பதமாக நிகழ்த்தியிருந்தார்கள். இன் நிகழ்வு எல்லோரையும் கவர்ந்திருந்தது. இவர்களை கௌரவிக்கும் முகமாக நடனாலய அதிபர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களை திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார்கள். சிறந்த முறையில் நடனம் ஆடிய மாணவிகளை திருமதி சியாமளா செல்வச்சந்திரன் (பிரான்ஸ்) அவர்கள் நினைவு மாலை அணிவித்து கௌரவித்திருந்தார்கள்.

அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும், தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டின் இறுதி நிகழ்வாக  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளர் திரு முருகேசு பாலசுந்தரம் நிகழ்த்தியிருந்தார்கள். நிகழ்வுகள் அனைத்தும் இரவு 9.30 மணிக்கு இராப் போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

இன் நிகழ்வுகள் அனைத்திற்கும் நிதி ஆதரவு வழங்கியவர் S.K.T நாதன் கடை உரிமையாளர் திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். இப்படியான ஓர் வராலாற்று நாயகனுக்கான விழாவை தானே பிரேரித்து, விழா மற்றும் நூல் வெளியீடு இரண்டுக்குமான முழமையான நிதிப் பங்களிப்பைச் செய்தவர். எமது சபை அளித்த அறக்கொடை அரசு என்ற சிறப்புப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது அறப் பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம். அவருக்கும் எமது நன்றிகள்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் 'தியாகத் திறன் வேள்வி 2016' 

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகிற கட்டுரைப் போட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வேண்டுகோள்களுக்கு இணங்க இவ்வருடத்தில் இருந்து இப்போட்டிகள் பல்வேறு திறன்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் பெற்றுள்ளன என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

 இந்த ஆண்டிலிருந்து வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக "தியாகத் திறன் வேள்வி" என்ற நிகழ்வாக "ஆளுயுர்வே ஊருயர்வு" என்ற மகுட வாசகத்துடன் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடாத்தப்படட்ன.

பிரிவுகள்:

அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்

ஆ. பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்

இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2016 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர்.   மாணவர்களக்கான போட்டிகள் பின்வரும் திகதிகளில் நடாத்தப்பட்டன.

 பேச்சுப் போட்டி 24 – 09 –2016 சனிக்கிழமை காலை 9 மணி காரை இந்துக் கல்லூரி

 கட்டுரைப் போட்டி 24 – 09 –2016 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி காரை இந்துக் கல்லூரி

 திருக்குறள் மனனப் போட்டி  01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணிக்கு காரை இந்துக் கல்லூரி. மூன்று பிரிவுகளுக்குமானது.

 இசைப் போட்டி எதிர்வரும்  02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணி முதல் இந்துக் கல்லூரியில் நடைபெறும். மூன்று பிரிவுகளுக்குமானது.

 பொதுஅறிவு வினாடி வினாப் போட்டி 25- 09 –2016 ஞாயிறு காலை 10 மணி காரை இந்துக் கல்லூரி. மூன்று பிரிவுகளுக்குமானது.

தியாகத்திறன் வேள்வி – 2016 மாணவர்களுக்கான போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கு காரைநகர் இந்துக் கல்லூரி சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தை தந்துதவிய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினருக்கும், மாணக்கரை ஊக்கமளித்து போட்டியில் பங்குபற்றச் செய்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், இன்னும் பல வழிகளில் பிரதி பலன் எதிர்பாராது உதவிகள் செய்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.

  09.01.2017 திங்கட்கிழமை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை,  காரை அபிவிருத்திச்       சபையுடன் இணைந்து  நடாத்திய முப்பெரும் விழா

09.01.2017 திங்கட்கிழமை எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு நினைவுத் தொகுப்பான "தியாகச் சுடர்" அறிமுகத் நூற் தொகுப்பு வெளியீட்டையும்,  சான்றோர்கள் மதிப்பளிப்பையும், தியாகத்திறன் வேள்வி-2016 மாணக்கர்; போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பையும்  இணைத்து முப்பெரும் விழாவாக யாழ்ற்றன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் 31.12.2005இல் உருவாக்கப்பட்ட எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  இரண்டாவது வருடமாக முப்பெரும் விழாவினைக் காண்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

எமது அழைப்பினை ஏற்று விழாவிற்குத்  தலைமை தாங்குகிய திரு.வே.முருகமூர்த்தி (அதிபர் யாழ்ற்றன் கல்லாரி) அவர்களும், எமது சபையின் அழைப்பையேற்று 1919ஆம் ஆண்டு முதன்முதலாக  தோற்றம் பெற்ற புகலிடக் காரை ஒன்றியமாகிய மலாயா காரை ஒன்றியத்தின் தலைவர்  கலாநிதி டத்தோ சண்முகம் சிவானந்தனும் பாரியாரும் இவ்விழாற்கு பிரதமவிருந்தினராக வந்திருப்பது மேலும் இவ்விழாவிற்கு பெருமை சேர்க்கின்றது. 

மலேசியா நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் மலேசியா வாழ் காரை உறவுகள், மற்றும் கௌரவ விருந்தினராக வருகை தந்திருக்கும் திருவாளர் அறக்கொடை அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள்;, யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்கள், யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்கள், கிழவன்காடு கலாமன்றத் தலைவர் திரு.நடராசா சோதிநாதன் அவர்கள,; சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ள காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன்  ஆகியோர்களும், மற்றும் எமது சகோதர காரையூச்சங்களைச் சேர்ந்த வி.நாகேந்திரம், ப.தவராஜா, திரு.இ.சுப்பிரமணியம், திரு.செ.மனோ திரு.க.பாலையா (பிரித்தானியா), அருளானந்தம் செல்வச்சந்திரன் (பிரான்ஸ்), தீசன் திரவியநாதன் (கனடா), திரு.இளையதம்பி சச்சிதானந்தன் (அவுஸ்திரேலிய) காரை இந்து பழையமாணவர் சங்கம் கனடாக் கிளை செயலாளர் திரு கனகசுந்தரம் சிவகுமாரன், கொழும்பு பிரபல குஇன்சி நிர்வன உரிமையாளர் திரு. கணநாதன் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை கடந்த பன்னீரண்டு வருடங்காளக சுவிற்சர்லாந்தில் நமது இளம் சமூதாயத்தினரின் கலைத்திறன்களை வளர்க்கும் முகமாக காரைத்தென்றலில் சான்றோர்கள், மாணவர்கள் மதிப்பளிப்பினை வெகு சிறப்பாக நடாத்தி வருகின்றது. இன் நிகழ்வின் வெளிப்பாடே இன்று தாய் மண்ணிலும் முப்பெரும்விழாவாக விரிவாக்கம் பெற்றுள்ளது. 

இவ் முப்பெரும் விழாவில் எமது சபையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட  மன்றத்திற்கான கீதத்தை இயற்றிய தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு "கலைமாமணி" விருது வழங்கியும் எமது சபையின் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு உறுப்பினர், மாணிவாசகர் சபைக் காப்பாளர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கு "தமிழ்த் தொண்டன்" விருது வழங்கியும்  ஓய்வுநிலை அதிபர், சமூக சேவையாளர் திரு.கதிரவேலு தில்லையம்பலம் அவர்களுக்கு "கல்விக் காவலர்" விருது வழங்கியும்  சித்தாந்த வித்தகர் கலாபூசணம் வே.நடராஜா அவர்களுக்கு "சேவைநல வாழ்த்துரையும்" பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களுக்கு "கல்விச் சாதனையாளர்"  வாழ்த்துரை வழங்கியும்  கௌரவிப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். 

"தியாகத்திறன்வேள்வி-2016" மாணவருக்கான மொத்தம் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளுக்கான பரிசுத்தொகையினை கோவளத்தைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் அமரர் திரு.  சுப்பிரமணியம் அவர்களின் ஆகியோரின் ஞாபகார்த்தமாக வழங்கிய அவரது மகன் S.K.T நாதன் கடை உரிமையாளர் தெய்வீகத்திருப்பணி¸ அறக்கொடை அரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் சுவிஸ்) அவர்களும் பொது அறிவு வினாடி வினாப் போட்டிக்கான பரிசுத்தொகையினை நீலிப்பந்தனையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ஆங்கில  ஆசிரியர்களான திரு திருமதி விஜயரட்ணம் சிவயோகம் ஆகியோரின்; ஞாபகார்த்தமாக வழங்கிய அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் திரு. கென்னடி விஜயரட்ணம்  (Kennedy Vijaratnam. Associate Professor, Madawalaba University, Ethiopia.) அவர்களும் வழங்கி சிறப்பித்திருந்தார்கள். 

ஈழத்து சிதம்பர தில்லைக்கூத்தனின் திருவாருளால் இவ் முப்பெரும்விழாவை ஒருகிணைத்து நடாத்த உதவிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், நிர்வாக சபை உறுப்பினர்கள், கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை, கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம், கலாநிதி. கென்னடி விஜயரத்தினம், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி, வீரமங்கை யோகரட்ணம், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி, வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திரு திருமதி வரதராஜன் பராசக்தி ஆகியோருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இவ் விழாவின் நிகழ்ச்சிகளை தமிழில் தொகுத்து வழங்கிய திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களுக்கும், ஆங்கில மொழியாக்கம் செய்த யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், விழாவிற்கான இணைய விளம்பரத்தையும் பிரசுரத்தையும் வடிவமைத்த திருமதி மலர் குழந்தைவேலு  (கனடா) அவர்களுக்கும்.  சான்றோருக்கான வாழ்த்துப்பாக்களை இயற்றிய சிவயோகச் செல்வன் அவர்களுக்கும், கலாபூஷணம் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கும் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், விழாவிற்கான பிரசுரத்தையும்   அச்சிட்டுத் தந்த யாழ்ப்பாணம்  Andra printers நிறுவனத்தாருக்கும் இந்நிகழ்வின் ஒலி, ஒளிப்பதிவனை செய்து தரும் சிந்துஜா நிர்வனத்தாருக்கும், வரவேற்புநடனம், கோலாட்டம் வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும் எமது சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும். 

தமது கல்லூரி மண்டபத்தில் முப்பெரும்விழாவினை நடாத்த இடமளித்த யாழ்ற்றன் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகத்தினருக்கும், இவ் விழாவிற்கு ஆதரவு நல்கிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் அவர்களுக்கும், மற்றும் விழாவில் கலந்து சிறப்பித்த, அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகள் பல கோடி. 

 விழாவுக்கான விளம்பரங்களை தமது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்திய காரைநகர்.கோ, காரைநகர்.கொம், வெப் காரைஇந்துகனடா.கொம்  மற்றும் லங்காஸ்ரீ இணையதள நிர்வாகிகளுக்கும்; மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர் அமைப்பு உதயம். 

   கடந்த 12.02.2017இல் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகார பூர்வமாக அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏழுபேர் கொண்ட செயற்குழுவில் இரண்டுபேரகள் இளையோர்கள் இணைக்கப்படுவர் என்பது யாப்பின் விதிகளில் ஒன்றாகும். அதற்கிணங்க 2011இல் இருந்து சுவிஸ் வாழ் இளையோர்கள் எமது சபைக்கு தங்களாலான ஓத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இலை மறைகாயான செயற்பாடுகளின் வடிவமாக புதிதாக எமது சபைக்கு இளையோர் அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  19.05.2013இல் இடம்பெற்ற காரைத்தென்றல் நிகழ்வுவை இளையோரகள் ஒழுங்கமைத்து சிறப்புற நடாத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினராக வருகைதந்திருந்த ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் இளையோர் அமைப்பின் உருவாக்கத்தின் தேவை பற்றி அறிவுரை வழங்கியிருந்தார். அவருடைய சிந்தனையையொட்டிய இவ் இளையோர் அமைப்புகள் பிரித்தானியாவிலும், சுவிற்சர்லாந்திலும் தோற்றம் பெற்றன. 

   15.05.2016இல் காரைத்தென்றல் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்த காரை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி. தவநாயகி பாலசிங்கம் (B.Sc (Special), PGDE, PGDEM, MA in Teacher Education) அவர்களும்  தனது உரையில் சபையின் எதிர்கால திட்டங்கள், செயற்பாடுகள், பெண் விடுதலை, சபையில் இளையோரின் அளுமையின் வகிபாகம் என்பன பற்றி விரிவாக உரையாற்றியிருந்தார்கள். இளம் சமுதாயத்தினர் இவ்விழாக்களை பொறுப்பேற்று ஒழுங்கமைத்து செய்யும் பொழுது தேர்ச்சியையும், சபையைத் தொடர்ந்து செயற்படுத்தும் தலைமைத்துவத்தையும்   அவர்கள் பெற்றக் கொள்வார்கள்.  எனக் கூறியிருந்தார்.   அதற்கு உதாரணமாக 15.06.2016இல் நடைபெற்ற காரைத்தென்றல் நிகழ்வில் செல்வி பானுஜா பாலசுந்தரம், செல்வன்.  விஜயனந்தன் விதுர்சன். ஆகியோர்கள் தாமாகவந்து முன்வந்து  விருப்பம் தெரிவித்தமையை அடுத்து சபையின் செயற்குழுவில் இணைந்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு எமது சபையின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

   சுவிஸ் வாழ் இளையோர்களின் கோரிக்கைக்கு அமைவாக 12.02.2017இல் பிரத்தியேகமாக நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் இளையோர் அமைப்பு  உத்தியோகபூர்வாமாக அங்கிகாரம் செய்யப்பட்டது. அதற்கான நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டு அதன் எதிர் கால செயற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது மேல் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சித்திரை மாதத்திற்கு பின்னர் கற்கை செயற்பாட்டிற்கு நேரம் தேவைப்படுவதனால் அதற்கு முன்னதாக காரைத் தென்றலை நடாத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.    103 சுவிஸ் வாழ் காரை   குடும்பங்களைச் சேர்ந்த 200கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். எல்லா மாணவச் செல்வங்களின் கலைத் திறனைகளையும் உள்ளடக்கியதான காரைத்தென்றல் நிகழ்வு  அமைய வேண்டும். என்பதாலும,; நீண்ட தயார்படுத்துலுக்கான காலம்   தேவைப்படும் என்பதாலும், அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வருடா வருடம் நடாத்தும் காரைத் தென்றல் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் புதுவருடத்தினத்தன்று 14.04.2017 வெள்ளிக்கிழமை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர்  அமைப்பின் ஓன்றுகூடலும் கலை மாலையும் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் "தியாகத் திறன் வேள்வி 2017" தொடர்பான

   முன்னோடிக் கலந்துரையாடல். 

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி" மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகள் இம்முறை 2017 இல் இரண்டாம் தவணை விடுமுறைக்கு முன்பதாக இடம்பெறவுள்ளது. இந் நிலையில் எமது சபையின் தயார்நிலை உறுப்பினர் திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் அவர்கள் சமீபத்தில் காரைநகர் சென்றிருந்தார் தியாகத்திறன் வேள்வி 2017 க்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அவர் முன்னிலையில் நடாத்துவதென மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு திர்மானித்திருந்துது. இதற்கமைய இவ் ஆலோசனைக் கூட்டம்  07.04.2017 வெள்ளக்கிழமை  அன்று பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பெருமையுடன் வழங்கிய 

     இளையோர் ஒன்றுகூடலும் கலை மாலையும்.

  இளையோர் ஒன்றுகூடலும் கலை மாலையும் Zürcher Gemeinschaftszentren, GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 Zürich இல் நம் தமிழர் சித்திரை புதுவருடப் பிறப்பான  14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நாள் இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான கலாநிதி. பீமா ராவ் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரவேற்பு மண்டபத்தில் உள்ள மங்கள விளக்கினை திருமதி சந்திரகுமாரி நந்தகுமார், திருமதி சத்தியரூபி நகுலேஸ்வரனும் ஏற்றிவைத்தார்கள். மண்டபமேடையில் உள்ள விளக்கினை திருமதி  கமலா சிவநேயன், திருமதி  சிவசோதி சண்முகலிங்கம் (ஜேர்மன்), திருமதி ரஞ்சிதமலர் சற்குணராஜா, திருமதி கனகரூபா தயாபரன், திருமதி தனலட்சுமி விஜயானந்தா ஆகியோர்கள் ஏற்றிவைத்தார்கள்.

இறை வணக்கத்தினை செல்விகள் தர்ஷிகா பரமசிவம், சாம்பவி பூபாலபிள்ளை ஆகிய இருவரும் இசைத்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து நாட்டில் மடிந்த உள்ளங்களுக்கு இருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. நான்காவது நிகழ்வாக மன்றகீதம் அரங்கில் இசைக்கப்பட்டபோது இசையால் வசமாக இதயமெது என்பதற்கிணங்க எல்லோரும் தம்மை மறந்து எழுந்து நின்று அகமுருகி நின்றனர். இது மட்டும்மன்றி அன்றைய நிகழ்வுக்கு இன்னும் மகுடம் சூட்டுவதாய் பல நிகழ்வுகள் அரங்கேறின. 

விழாவின் நிகழ்ச்சி தொகுப்பினை செல்விகள் தர்ஷிகா பரமசிவம், விஐயத்தனா விஜயானந்தா, சாம்பவி பூபாலபிள்ளை, செல்வன் விதுர்சன் தயானந்தன் ஆகியோர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

வந்தோரை வரவேற்பது நம் தமிழர் பண்பாடு அதற்கமைய வரவேற்புரையினை செல்வி சுபாஐpனி சற்குணராஐh நிகழ்த்தியிருந்தார். நிறத்தால், பல்வேறு பட்ட மொழியால், இனத்தால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகத்துக்கள் வாழ்ந்து கொண்டு, எங்கள் பாரம்பரியத்தையும் கலை கலாச்சாரங்களையும் மறந்து விடாமல் தமிழர் என்ற அடையாளத்தையும், பண்பாடுகளையும் கட்டிக்காத்து வாழத் துடிக்கும் அடுத்த தலைமுறையின் அவாவையும், தனித்துவத்தையும்; எங்கள் குழந்தைகளின் நிகழ்வுகள் வெளிப்படுத்தின.

நன்றி மறக்காத தமிழர் தம் பாரம்பரியத்தை எடுத்தியம்புவதாய் நன்றியுரையினை செல்வி பானுஜா பாலசுந்தரம் வழங்கியிருந்தார். இளையோர் அமைப்பினர் அதன் இலட்சனை பொறிக்கப்பட்ட தேனிர் குவளைகள் நிகழ்ச்சியில் பங்கபற்றியோருக்கும், பெரியோர்களுக்கும் வழங்கி கௌரவித்திருந்தார்கள். நிகழ்வுகள் அனைத்தும் இரவு 10.30மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்  "தியாகத் திறன் வேள்வி 2017" இல் 

  நாடகப் போட்டியும் சேர்க்கப்படுகிறது.

சுவிஸ் நாதன் அவர்களது முழுமையான அனுசரணையில் காரை மண்ணில் மீண்டும் முத்தமிழாம் இயல் இசை நாடகத்தின் மறுமலர்ச்சி. முதற் பரிசு ரூபாய்  ஆறுபதாயிரம்  இரண்டாம் பரிசு ரூபாய் நாற்பதாயிரம். மூன்றாம் பரிசு ரூபாய் பத்தாயிரம். அத்துடன் அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர்  கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரைநகரின் அபிவிருத்திப் பணிகளுள் நேரடியாகவே ஆளுமை விருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக நம்மூரின் கலை மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக நாடகப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்துள்ளது. சித்தர்கள் வாக்கான உள்ளப் பெருங்கோயிலையும் ஊனுடம்பு ஆலயத்தையும் ஓம்புகின்ற பணியாகவே நாம் இதைக் கருதுகிறோம். 

  "தியாகத் திறன் வேள்வி 2017" மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற 15,16ஆம் திகதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றன.

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற   "தியாகத் திறன் வேள்வி-2017" மாணவர்களுக்கான போட்டி பரீட்சைகள் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து காரைநகர் பாடசாலைகள் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றன.

கீழ் காணும் மூன்று பிரிவுகளில் போட்டி பரீட்சைகள் நடாத்தப்பட்டன.

பிரிவுகள்: 

அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்

ஆ.  பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்

இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2017 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர். 

காரை இந்துக் கல்லூரி, சயம்பு, நடராசா ஞாபகார்த்த மண்டபங்களில் 15ஆம் திகதி சனிக்கிழமை  போட்டி எண்: நான்கு இசைப் போட்டிகள்;, போட்டி எண்: ஐந்து  பொது அறிவுப் போட்டிகள், 16ஆம் திகதி போட்டி எண்: ஒன்று கட்டுரைப் போட்டிகள்;, போட்டி எண்: இரண்டு பேச்சுப் போட்டிகள், வெகு சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன.

  சுவிஸ் காரைஅபிவிருத்தி சபை நடாத்தும் தியாகத் திறன் வேள்வி- 2017

   திருக்குறள் மனனப்போட்டி

இப்போட்டி சம்பந்தமாக தரம் 05 மாணவர்களும் இப் போட்டியில் பங்கு கொள்ளவைப்பதற்காக விண்ணப்ப திகதியை 08.09.2017 வெள்ளிக்கிழமைக் மாற்றியுள்ளோம். அத் திகதிக்கு விண்ணப்பத்தை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முதல் சுற்றுதிருக்குறள் போட்டி 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு இருபிரிவினருக்கும் நடைபெறும். இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

திருக்குறள்- நீதிநூல், அறநூல், தலைசிறந்தநூல், பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல், உலகப் பொதுநூல். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நம் தமிழ் மாணவர்களும் படித்துசுவைத்து மனனம் செய்து குறள் தந்தநெறியில் வாழ, நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும் வகையில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் மனனம் செய்விக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாடகப் போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதம் இடம்பெறும். சரியான திகதிகள்   07-07-2017 க்கு முன்பதாக அறிவிக்கப்படும். அறிவிக்கப்படும். வார இறுதிநாட்களில் காரைநகரில் இடம் பெறும் போட்டிகளுக்கு பல்கலைக் கழக நாடக மற்றும் அரங்கவியல் ஆய்வாளர்களும் விற்பன்னர்களும் நடுவர்களாக விளங்குவர்.

  காரைநகர் மாணிவாசகர் சபைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (50000.00) அன்பளிப்பு

     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கு காரைநகர் மாணிவாசகர் சபைத் தலைவர் திரு.வே.மூருகமூர்த்தி அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சபை நடாத்தும் மாணவர்களின் சமய பாட போட்டிக்கான பரிசில்கள் வழங்குவதற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளது. 

     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  கடந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு காசுத் தொகை காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பணத் தொகை சென்றடைந்ததும் பணத் தொகை மாணிவாசகர் சபையிடம் கையளிக்கப்படும் 

"பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்கு இணங்க தங்களின் பங்களிப்பின் மூலம் 2004ஆம் ஆண்டில் இருந்து நாம்  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து பல பணிகளும், சேவைகளும் ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே!

சுவிற்சர்லாந்து வாழ் அன்பான காரைநகரின் உறவுகளின் உதவிக்கரத்தால் நாம் எமது கிராமத்துச் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள், மருத்துவ உதவிகள், தொழில்சார் ஊக்கிவிப்புக்கள், சான்றோர்கள், பெரியோர்கள், கலைஞர்கள் மதிப்பளிப்புக்கள், மன்றத்திற்கான கீத இறுவெட்டு, புத்தகங்கள், நாட்காட்டிகள், வெளியீடுகள், காரைத்தென்றல், காரைநிலா அறிமுகவிழா, முப்பெரும்விழாக்கள், மக்கள் சந்திப்புக்கள். காரை மண்ணின் மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக நடாத்தப்படும் போட்டிகள், எமது சகோதர அமைப்புக்களான லண்டன், பிரான்ஸ் நலன்புரிச்சங்களின் ஆண்டு விழாக்களில் கலந்து சுவிஸ் வாழ் காரை இளையோரின் கலைத் திறன்களை வெளிப்படுத்தி ஊக்குவித்தல் என எமது சேவைகளும் பணிகளும் விரிவடைந்து செல்கின்றன. இச் செயற்திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணiயாகவும் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை சபையின் வளர்ச்சிக்கும் சந்தாப் பணமாகவும், அன்பளிப்பாகவும் பேருதவிகள் வழங்கிய அனைத்து சுவிஸ் வாழ் காரைநகர் மக்களுக்கும், முதற்கண் சபையின் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றிகள் பல கோடி.

அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்பாட்டு அறிக்கையுடன் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரைக்குமான கணக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கின்றோம். இக் கணக்கு அறிக்கையில் தங்களது அன்பளிப்புக்கள்  பதிவு செய்யப்படாவிட்டால் எமது நிர்வாககத்துடன் தொடர்பு கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

30.12.2014 அன்று Zürich இல் Gemeinschaft Brombeeriweg மடண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நான்காவது பொதுக்கூட்டம் இடம்பெற்றது. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பொதுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற யாப்பிற்கு இணங்க இவ் வருடம் மார்கழிமாதம் ஐந்தாவது பொதுக் கூட்டம் கூட்டப்படும் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

28.06.2017 தொடக்கம் 31.12.2017 வரைக்குமான கணக்கு அறிக்கையும் இளையோர் ஒன்று கூடல் செலவு அறிக்கையும் ஐந்தாவது பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

                                                                             நன்றி

 

                                                        "ஆளுயர்வே ஊருயர்வு"

                                    "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".

 

 

                                                                                                            இங்ஙனம்.

                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                                                                                         செயற்குழு உறுப்பினர்கள்

                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள்

                                                                                                                 14.08.2017

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரையிலான கணக்கு அறிக்கை

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/swisskaraiaccount-2016-01.pdf

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                            

               

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரைஅபிவிருத்தி சபை நடாத்தும் தியாகத் திறன் வேள்வி- 2017 திருக்குறள் மனனப்போட்டி பற்றிய அறிவித்தல்

           சுவிஸ் காரைஅபிவிருத்தி சபை நடாத்தும்

தியாகத் திறன் வேள்வி- 2017

திருக்குறள் மனனப்போட்டி பற்றிய அறிவித்தல்

 

பிரிவு- அ தரம் 02,03

                       அதிகாரம் 08 அன்புடைமை

பிரிவு- ஆ தரம் 04,05 

                     அதிகாரம் 10 இனியவைகூறல்

அதிகாரம் 30 வாய்மை

 

இப்போட்டி சம்பந்தமாக தரம் 05 மாணவர்களும் இப் போட்டியில் பங்கு கொள்ளவைப்பதற்காக விண்ணப்ப திகதியை 08.09.2017 வெள்ளிக்கிழமைக் மாற்றியுள்ளோம். அத் திகதிக்கு விண்ணப்பத்தை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

முதல் சுற்றுதிருக்குறள் போட்டி 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு இருபிரிவினருக்கும் நடைபெறும். இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

திருக்குறள்- நீதிநூல், அறநூல், தலைசிறந்தநூல், பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல், உலகப் பொதுநூல். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நம் தமிழ் மாணவர்களும் படித்துசுவைத்து மனனம் செய்து குறள் தந்தநெறியில் வாழ, நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும் வகையில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் மனனம் செய்விக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

ஒவ்வொரு வகுப்பிலும் பத்து மாணவர்களுக்கு குறையாது (பிரிவுக்கு 20) மாணவர்களைக் தயார் செய்து விண்ணப்பித்து போட்டியில் பங்குகொள்ள வழி செய்விக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

குறிப்பு:- 75 புள்ளிக்கு மேல் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசில் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியத்தருகின்றோம்.

 

                                                                        நன்றி

 

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

 

                                                                                                இங்ஙனம்                         

                                                                           திருக்குறள் போட்டித்தொடர்பாளர்

                                                                          பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை

                                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                                                                                 செயற்குழு உறுப்பினர்கள் 

                                                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 

                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள

                                                                             06.08.2017

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செய்திகளை மிக விரைவில் எதிர் பாருங்கள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செய்திகளை மிக விரைவில் எதிர் பாருங்கள்

1. "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்  நினைவுப் போட்டியும்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற ஆசிரிய சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் கடந்த 17.07.2016இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich  மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத் தொகுப்பு எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் மிக மிகக் குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற எமது சபையின் முப்பெரும் விழாவில் கடந்த 12.01.2017இல் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நூலின் ஆக்கங்களை வாரம் தோறும் இணைய தளங்களில் பிரசுரித்து வருகின்றோம். இவ் வெளியீட்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஊக்குவிக்கு முகமாக "தியாக நினைவுப் போட்டி"    ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அமரர் கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின்  தனிப்பட்ட சமூக அரசியல்  வாழ்க்கை தொடர்பாக இந்நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பது வினாக்களடங்கிய கேள்விக் கொத்தினை இணையதளத்தில்  வெளியிட இருக்கின்றோம். 

இக் கேள்விகளுக்கு சரியான பதில்களை 31.08.2017 இற்கு முன்பதாக  என்ற swisskarai2004@gmail.com  மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சரியான பதில்களை அனுப்பும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான பதில்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில் வெற்றியாளர்கள் திருவுளச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு; எதிர் வரும் ஆதிரைத் திருவிழாவின் போது இடம்பெறும் முப்பெரும் விழாவில் வெகுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

இதுவரை எல்லா கட்டுரைகள் இணைய தளங்களில் வெளிவந்த நிலையில் போட்டியாளர்களின் வசதிக்காக இந்நூலின் தொகுப்பினை இக் கேள்விக் கொத்துடன் இணைத்து இணையத்தளத்தில் வெளியிடுகின்றோம் என்பதை அறியத்தருகின்றோம்.

2. "தியாகத் திறன் வேள்வி 2017 " போட்டிகளில்; வெற்றியீட்டிய மாணவர்களின் பெயர் விபரங்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற   "தியாகத் திறன் வேள்வி-2017" மாணவர்களுக்கான போட்டி பரீட்சைகள் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து காரைநகர் பாடசாலைகள் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 15.07.2017, 16.07.2017இல் வெகு சிறப்பாக நடைபெற்றன.

கீழ் காணும் மூன்று பிரிவுகளில் போட்டி பரீட்சைகள் நடாத்தப்பட்டன.

பிரிவுகள்: 

அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்

ஆ.  பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்

இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2017 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர். 

காரை இந்துக் கல்லூரி, சயம்பு, நடராசா ஞாபகார்த்த மண்டபங்களில் 15ஆம் திகதி சனிக்கிழமை  போட்டி எண்: நான்கு இசைப் போட்டிகள், போட்டி எண்: ஐந்து  பொது அறிவுப் போட்டிகள், 16ஆம் திகதி போட்டி எண்: ஒன்று கட்டுரைப் போட்டிகள், போட்டி எண்: இரண்டு பேச்சுப் போட்டிகள், வெகு சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன.

மேற்படி போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களின் பெயர் விபரங்களை மிக விரைவில் இணையத்தளங்களில் காணலாம்.

3. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 31.12.2015இல் இருந்து 31.06.2017 வரைக்குமான செயற்பாட்டுகளும், கணக்கு அறிக்கையும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் கடந்த 15.06.2016இல் காரைத்தென்றல் நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்ட 2004ஆம் ஆண்டில் இருந்து 31.12.2015 ஆண்டுவரைக்குமான செயற்குழுவின் செயற்பாடுகளும், 01.01.2013இல் இருந்து 31.12.2015 வரையிலான கணக்கு அறிக்கையும் வெளியிட்டு வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே! 

மேற்படி சபையின் 31.12.2015இல் இருந்து 31.06.2017 வரைக்குமான செயற்பாட்டுகளும்  கணக்கு அறிக்கையும். இணையத்தளங்களில் வெளிவரவிருக்கின்றன என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

                                                              நன்றி

 

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                              இங்ஙனம்

                                                                                     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                                                                                            செயற்குழு உறுப்பினர்கள் 

                                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 

                                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்

                                                                                                            29.07.2017

 

 

 

 

 

 

 

  

 

  

 

 

     

 

 

    

   

 

   

   

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் நாடகப் போட்டி!! விதி மாற்றம் பற்றிய அறிவித்தல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் நாடகப் போட்டி!!

விதி  மாற்றம்  பற்றிய அறிவித்தல்.

 

மேற்படி போட்டிகளில் முற்றிலும் காரைநகரை பூர்வீகமாகக் கொண்டவர்களே பங்குபற்றலாம் என அறிவித்திருந்தோம் (முன்னைய அறிவிப்பின் விதி எண்கள் 5,6).

5) இலங்கை உட்பட உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே நாடகத்தின் அனைத்து துறைகளிலும் பங்கேற்க முடியும்.

6) மரபு வழிக் கூத்துக்கள் மற்றும் புராண நாடகங்களைத் தவிர ஏனைய நாடகங்களைப் பொறுத்த வரை பிரதி எழுத்தாளரும் காரை மண்ணைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருக்கவேண்டும். இவ்விதி மீறப்படும் பட்சத்தில் நாடகம் நிராகரிப்படும். 

பலரது வேண்டுகோளுக்கு இணங்க இவ் விதிகள் சற்று தளர்தப்படுகின்றன.

காரைநகரில் அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்ற அனைவரும், உதாரணமாக ஆசிரியர்கள், பிரதேசசபை, மருத்துவமனை, பிரதேச செயலகம், கமத்தொழில் திணைக்களம், தபால்கந்தோர், இ.போ.ச, மற்றும் சகல துறைகளையும் சார்ந்த ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றலாம் என்பதை  மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

 

நன்றி

 

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

 

                                                                                                         இங்ஙனம்

                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                                                                                       செயற்குழு உறுப்பினர்கள் 

                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 

                                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள்

                                                                                                          25.07.2017

 

  

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தியாகத் திறன் வேள்வி-2017 நாடகப் போட்டி பற்றிய இறுதி அறிவித்தல் 22.07.2017இல் யாழ் வலம்புரி பத்திரிகையில் வெளிவந்ததைக் காணலாம்

Arunasalam Lingeswaran 14 012

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2017” மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற 15,16ஆம் திகதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
"தியாகத் திறன் வேள்வி 2017"
மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற 15,16ஆம் திகதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற   "தியாகத் திறன் வேள்வி-2017" மாணவர்களுக்கான போட்டி பரீட்சைகள் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து காரைநகர் பாடசாலைகள் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றன.

கீழ் காணும் மூன்று பிரிவுகளில் போட்டி பரீட்சைகள் நடாத்தப்பட்டன.
பிரிவுகள்: 
அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்
ஆ.  பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்
இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2017 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர். 

காரை இந்துக் கல்லூரி, சயம்பு நடராசா ஞாபகார்த்த மண்டபங்களில் 15ஆம் திகதி சனிக்கிழமை  போட்டி எண்: நான்கு இசைப் போட்டிகள், போட்டி எண்: ஐந்து  பொது அறிவுப் போட்டிகள், 16ஆம் திகதி போட்டி எண்: ஒன்று கட்டுரைப் போட்டிகள், போட்டி எண்: இரண்டு பேச்சுப் போட்டிகள், வெகு சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன.

போட்டி எண்: மூன்று திருக்குறள் மனனப் போட்டி 
ஆ பிரிவு: ஆண்டு 4 மற்றும் 5 மாணவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டி புரட்டாதி மாதம் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

போட்டிப் பரீட்சையின் விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம். நிழற்படங்களை கீழே காணலாம். 


நன்றி

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                                 இங்ஙனம்.
                                                                                        சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                              செயற்குழு உறுப்பினர்கள்
                                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                                 20.07.2017


 

 

Arunasalam Lingeswaran 13 022 Arunasalam Lingeswaran 13 023 Arunasalam Lingeswaran 13 024 Arunasalam Lingeswaran 13 025 Arunasalam Lingeswaran 13 026 Arunasalam Lingeswaran 13 027 Arunasalam Lingeswaran 13 028 Arunasalam Lingeswaran 13 029 Arunasalam Lingeswaran 13 030 Arunasalam Lingeswaran 13 031 Arunasalam Lingeswaran 13 032 Arunasalam Lingeswaran 13 033 Arunasalam Lingeswaran 13 034 Arunasalam Lingeswaran 13 035 Arunasalam Lingeswaran 13 036 Arunasalam Lingeswaran 13 037 Arunasalam Lingeswaran 13 038 Arunasalam Lingeswaran 13 039 Arunasalam Lingeswaran 13 040 Arunasalam Lingeswaran 13 041 Arunasalam Lingeswaran 13 042 Arunasalam Lingeswaran 13 043 Arunasalam Lingeswaran 13 044 Arunasalam Lingeswaran 13 045 Arunasalam Lingeswaran 13 046 Arunasalam Lingeswaran 13 047 Arunasalam Lingeswaran 13 048 Arunasalam Lingeswaran 13 049 Arunasalam Lingeswaran 13 050 Arunasalam Lingeswaran 13 051 Arunasalam Lingeswaran 13 052 Arunasalam Lingeswaran 13 053 Arunasalam Lingeswaran 13 054 Arunasalam Lingeswaran 13 055 Arunasalam Lingeswaran 13 056 Arunasalam Lingeswaran 13 057 Arunasalam Lingeswaran 13 058 Arunasalam Lingeswaran 13 059 Arunasalam Lingeswaran 13 060

 

 

 

 

 
           

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தியாகத் திறன் வேள்வி-2017 நாடகப் போட்டி பற்றிய  இறுதி அறிவித்தல்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்
தியாகத் திறன் வேள்வி-2017
நாடகப் போட்டி பற்றிய 
இறுதி அறிவித்தல்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்  "தியாகத் திறன் வேள்வி 2017" இல் நாடகப் போட்டியும் சேர்க்கப்படுகிறது.

சுவிஸ் நாதன் அவர்களது முழுமையான அனுசரணையில் காரை மண்ணில் மீண்டும் முத்தமிழாம் இயல் இசை நாடகத்தின் மறுமலர்ச்சி. முதற் பரிசு ரூபாய்  ஆறுபதாயிரம்  இரண்டாம் பரிசு ரூபாய் நாற்பதாயிரம். மூன்றாம் பரிசு ரூபாய் பத்தாயிரம். அத்துடன் அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர்  கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம்.
 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரைநகரின் அபிவிருத்திப் பணிகளுள் நேரடியாகவே ஆளுமை விருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக நம்மூரின் கலை மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக நாடகப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்துள்ளது. சித்தர்கள் வாக்கான உள்ளப் பெருங்கோயிலையும் ஊனுடம்பு ஆலயத்தையும் ஓம்புகின்ற பணியாகவே நாம் இதைக்கருதுகிறோம்.
 

வருடாந்தரம் நடாத்தப்படும் தியாகத் திறன் வேள்வியின் ஓர் அங்கமாக இது இடம்பெற்றாலும் நாடகப் போட்டி மட்டும் பாடசாலைக்கு வெளியே உள்ள பரந்துபட்ட மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமானதாகும். கலைக் கழகங்கள், கோயில் சார்ந்த நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் சனசமூக நிலையங்கள், வாசக சாலைகள், நூல் நிலையங்கள் போன்ற சமூக நிறுவனங்கள் இப்போட்டியில் பங்குபற்றுவதை நாம் வரவேற்கிறோம். நம் காரைச் சமூகத்தின் சிந்தனைப் போக்கு கலையுணர்வு சமூக உறவு ஆகிய தளங்களில் புது இரத்தம் பாய்ச்சும் நோக்கிலேயே நாம் நாடகப் போட்டிகளை அறிமுகப்படுத்துகிறோம்.
 

தகவல்களும் விதிகளும்

1. தியாகத் திறன் வேள்வியின் ஏனைய போட்டிகள் மாணவர்களுக்கானது. நாடகப் போட்டி  பொதுமக்களுக்காகஅர்ப்பணிக்கப்படுகிறது. எனினும் அதிபரின் அனுமதியுடன் மாணவர்களும் பங்கு பற்றலாம்.

2.    கலைக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், வாசக சாலைகள், நூல் நிலையங்கள் கோயில் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்   சங்கங்கள் (உதாரணம்: கமத்தொழிற் சங்கம், கடற்தொழிலாளர் சங்கம்) விளையாட்டுக் கழகங்கள் போன்ற சமூக நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் ஊழியர் ஒன்றியங்கள் (உதாரணம்: வங்கி ஊழியர்கள், உள்ள10ராட்சி நிறுவனங்களின் ஊழியர்கள்) குறிச்சிவாரியான குழுக்கள் எனக் காரைநகரின் பரந்துபட்ட மக்களும் கலந்து கொள்ளலாம்.

3.    காரைநகரில் 91 ஆண்டு சித்திரை வரை ஏறத்தாள ஐம்பதாயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். தற்போது மக்கள் தொகை மிகவும் அருகிய நிலையில் உள்ளது. பௌதீக வளங்கள் மேம்படுத்தப்படுவதைப் போல இப்படியான கலை வடிவங்கள் மற்றும் அவற்றின் கருப்பொருள்கள் மூலமும் மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்கலாம் என நாம் நம்புகிறோம்.

4.    நாடகம் பல்வேறு வடிவங்களைக் கொண்டது. நாட்டிய நாடகம், கூத்து, நவீன நாடகம், துன்பியல் நாடகம், நகைச்சுவை நாடகம், வரலாற்று நாடகம், சமயம் சார்ந்த நாடகம் என விரிந்து செல்லும். ஓரங்க நாடகத்தையும் நாட்டிய நாடகத்தையும் தவிர ஏனைய நாடக வடிவங்கள் போட்டியில் ஏற்றுக் கொள்ளப்படும்.

5.    இலங்கை உட்பட உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே நாடகத்தின் அனைத்து துறைகளிலும் பங்கேற்க முடியும்.

6.    மரபு வழிக் கூத்துக்கள் மற்றும் புராண நாடகங்களைத் தவிர ஏனைய நாடகங்களைப் பொறுத்த வரை பிரதி எழுத்தாளரும் காரை மண்ணைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருக்கவேண்டும். இவ்விதி மீறப்படும் பட்சத்தில் நாடகம் நிராகரிப்படும். 

7.    நாடகத்தில் குறைந்தது 5 கதாபாத்திரங்கள் இருக்கவேண்டும்.

8.    கலைப்படைப்பிலும் பால்நிலை சமத்துவம் பேணப்படும் வகையில் குறைந்தது ஒரு பெண் கதாபாத்திரம் நாடகத்தில் இடம்பெறவேண்டும். அப்பாத்திரமேற்று ஆண்களும் நடிக்கலாம்.

9.    நாடகத்தின் நேரம் குறைந்த பட்சம் 45 நிமிடமாகவும் அதிக பட்சம் 120 நிமிடங்களாகவும் அமையவேண்டும்.

10.    வசனங்கள் தூய தமிழில் இடம்பெற வேண்டும். அவசியமான இடங்களில் நாடகத்தின் கருப்பொருள் தொடர்பான அவசியம் ஏற்படின் குறைந்த அளவு பிறமொழிக் கலப்பு இருக்கலாம். தேவையற்ற இடங்களில் பிறமொழிக் கலப்பு இருப்பின் புள்ளிகள் குறைக்கப்படும்.

11.    நாடகத்தின் கருப்பொருள் ஏதோ ஒருவகையில் காரை மண்ணின் சமூக உறவு, கலை, கல்வி, பொருளாதாரம், பண்பாடு எற்பவற்றின் விருத்தியை நோக்கி அமைய வேண்டும்.

12.    அரங்கு, திரை, ஒலிவாங்கி ஒலிபெருக்கி என்பன வழங்கப்படும். தெருக்கூத்து எனின் வெளியரங்கும் ஒழுங்கு செய்யப்படும்.

13.    பங்குபற்றும் நாடகக்குழு ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளராக குழு முகாமையாளர் ஒருவர் இருக்க வேண்டும். மாணவர் நாடகக் குழு எனில் பாடசாலை அதிபர் அல்லது பொறுப்பாசிரியர், நிறுவனம் சார்ந்த குழுவெனில் அதன் தலைவர் அல்;லது செயலாளர் வெறும் நண்பர்கள் குழுவெனில் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் நாடகக்குழுவின் முகாமையாளராகப் பொறுப்பேற்க வேண்டும்.

14.    நாடகத்தின் முகாமையாளரோ அல்லது வேறொருவரோ நாடகத்தின் இயக்குனராக இருக்கலாம்.

15.    முகாமையாளரே விண்ணப்ப உறுதிமொழியின் கீழ் கையெழுத்து இடவேண்டும்.

16.    விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 31-06-2017 க்கு முன்பதாக எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

17.    மற்றவர் மனம் புண்படும் வகையிலான வசனங்கள் கருப்பொருள் என்பன தவிர்க்கப்பட வேண்டும். சபையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நாடகத்தின் கருப்பொருள் உள்ளீடுகள் ஆகியன அமையக் கூடாது. அவ்வாறு இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் நாடகப்பிரதியும் நடிகர்களுடைய பெயர் மற்றும் குறிச்சி விபரங்களும் 20-08-2017க்கு முன்பதாக நேரில் அல்லது அஞ்சலில் காரை அபிவிருத்திச் சபை செயலாளருக்கும், அல்லது மின்னஞ்சல் மூலமெனில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.

18.    போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதம் இடம்பெறும். சரியான திகதிகள் 01-09-2017 க்கு முன்பதாக அறிவிக்கப்படும். வார இறுதி நாட்களில் காரைநகரில் இடம் பெறும் போட்டிகளுக்கு பல்கலைக் கழக நாடக மற்றும் அரங்கவியல் ஆய்வாளர்களும் விற்பன்னர்களும் நடுவர்களாக விளங்குவர்.

19.    நடுவர்குழுவின் தீரப்பே இறுதியானது.

20.    மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: swisskarai2004@gmail.com

தொலை பேசி – 0094- 770452475
விதிகள் அடங்கிய அறிவத்தலையும் விண்ணப்பப் படிவத்தையும் காரை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 

காரைச் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் கலை வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட தனிநபர்கள், அரச மற்றும் அரசு சாரா சமூக மேம்பாட்டு நிறுவனங்களும் சமூகக் குழுக்களும் எமது நாடகப் போட்டியில் பெருமளவில் கலந்து கொண்டு காரைநகர் மறுமலர்ச்சியில் பங்ககாளிகளாகும் வண்ணம் வேண்டுகிறோம். நன்றி

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".

இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
              செயற்குழு உறுப்பினர்கள்
               மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
20-07-2017

 

 

விண்ணப்பப் படிவம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் 

 

    தியாகத் திறன் வேள்வி 2017

நாடகப் போட்டிக்கான விண்ணப்பம்

 1.  

பங்கு கொள்ளும் நிறுவனத்தின் பெயர்:-

 

 1.  

முகவரி:-

 

 1.  

நாடக முகாமையாளர் பெயர்:-

 

 1.  

தொலை பேசி இலக்கம்:-

 

 1.  

நாடகத்தின் பெயர்:-

 

 1.  

நாடகத்தின் இயக்குனர் பெயர்:-

 

 1.  

நாடக வடிவம்

 

 1.  

பிரதான கருப்பொருள்

 

 1.  

கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அண்ணளவாக

 

 1.  

கால அளவு நிமிடங்களில்

 

 1.  

வேறு விசேட தகவல்கள் தேவைகள் இருப்பின் விபரங்கள்

 

 

மேற்படி சபையாரின் போட்டிகள் தொடர்பான தகவல்கள் விதிகள் ஆகியனவற்றை வாசித்து ஐயம்திரிபற விளங்கிக்கொண்டேன் எனவும் அவற்றை அடியொற்றியே எமது நாடகம் அமையும் எனவும் சபையாரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் நல்லலெண்ண அடிப்படையிலும் செயற்படுவோம் எனவும் நாடகத்தின் கருத்துகளுக்கு சட்ட ரீதியாக நானே முழுப் பொறுப்பாளியாகிறேன் எனவும் நாடகக்குழு சார்பாக அதன் முகாமையாளராகிய அல்லது நிறுவனத் தலைவராகிய திரு- திருமதி- செல்வன்- செல்வி ……………………….   ………………………. ஆகிய நான் உறுதியளிக்கிறேன்.

திகதி:………………………  

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழு “தியாகத் திறன் வேள்வி 2017” போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணக்கர் பெயர் விபரங்களும், நேர அட்டவணையும்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழு

"தியாகத் திறன் வேள்வி 2017"

போட்டிகளில் கலந்து கொள்ளும்

மாணக்கர் பெயர் விபரங்களும், நேர அட்டவணையும்

 

போட்டி எண்: ஐந்து 

பொது அறிவுப் போட்டி அ. பிரிவு

 

காலம்: எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை 

நேரம்: பிற்பகல் 2 மணிக்கு

இடம்: காரை இந்துக் கல்லூரி, வடக்கு வளாகம்.

 

யா-காரை இந்துக் கல்லூரி

1. குமாரசேகரன் வைஸ்ணவி

2. செல்வக்குமார்மயூரிகா

3. செல்வராசாசானுஜன்

4. சுரியகுமார்சசிகலா

5. மெய்ஞ்ஞானபதிலக்சனா

6. கதீஸ்குமார்அக்சயா

7. தம்பிராசாதனுசா

8. சிறீஸ்கந்தராசாபவித்திரா

9. சசிகரன் தனுஜன்

10. திருநாவுக்கரசுஆதிரை

11. அருள்ராசாரவிராஜ்

12. மகேந்திரராசாபானுஜன்

 

 

யா-யாழ்ற்றன் கல்லூரி

13. முருகதாஸ் சஜீவன்

 

யா-சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

14. நே.ஹரணி

15. பு.டினோஜா

16. சா.தசலோசனா

17. இ.தாஸ்

18. அ.ஜனார்த்தனன்

 

போட்டி எண்: ஐந்து 

பொது அறிவு வினாடி வினாப் போட்டி ஆ. பிரிவு

காலம்: எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை

நேரம்: காலை 9 மணிக்கு

இடம்: காரை இந்துக் கல்லூரி, வடக்கு வளாகம்.

 

யா-காரை இந்துக் கல்லூரி

 

1. சிவசுப்பிரமணியம் அறிவரசன்

2. திருச்செல்வம் லுகிர்தன்

3. விஜயகுமார் கஜந்தினி

4. கணேசராசா மோகனதாசன்

5. கருணாகரன் பகீரதன்

6. ரமேஸ் சயுவண்ணன்

7. நாகேந்திரன் கிறிஸ்ரீன்

8. கிளாஸ்ரர் சர்மிளா

9. அமுதசிங்கம் பிரணவரூபன்

10. கருணராசா மகாலட்சுமி

11. ஏகாம்பரம் கோபிநாத்

12. ஆனந்தராசாஅமிர்தா

13. பாலேந்திரா சிவராஜினி

 

யா-யாழ்ற்றன் கல்லூரி

 

14. நிர்மலா தேவராசா

15. சுகன்யா சிவபாலன்

16. அருட்செல்வி கதிர்காமநாதன் 

17. கீர்த்தனா நந்தகுமார்

18. கோடீஸ்வரன் இனியவன் 

19. தியாகராஜா சசிகரன் 

20. கிருபாகரன் துவாரகன்

 

யா-சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

 

21. பே.பிரசாந்

22. மு.அபிஹரன்

23. சௌ.சஜிதா

24. சு.பவிராஜ்

25. இ.தமிழினி

 

யா-வியாவில் சைவ வித்தியாலயம்

 

26. கு.கஜேந்திரகுமார் 

27. நா.சுலக்சன்

28. ர.லக்சனா

29. சி.தூயவன

30. ஜெ.ஜெயப்பிரகாஸ்

 

போட்டி எண்: ஐந்து 

பொது அறிவு வினாடி வினாப் போட்டி இ. பிரிவு

காலம்: எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை

நேரம்:  மாலை 4 மணிக்கு

இடம்: காரை இந்துக் கல்லூரி, நடராசா ஞாபகார்த்த மண்டபம்.

 

 

யா-காரை இந்துக் கல்லூரி

 

1. தபேந்திரன் குபேரதா

2. நிமலேந்திராகாயத்திரி

3. இராசாதுரைலக்சிகா

4. பவானந்தன் டிலக்சனா

5. சண்முகரத்தினம் சஜீபன்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழு தியாகத் திறன் வேள்வி 2017 போட்டிகள் இடம் பெறும் விபரங்கள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழு
தியாகத் திறன் வேள்வி 2017
 போட்டிகள் இடம் பெறும் விபரங்கள்

போட்டி எண்: ஒன்று
கட்டுரைப் போட்டிகள்

மூன்று பிரிவுகளுக்குமான கட்டுரைப் போட்டிகள் எதிர்வரும்
ஞாயிறு 16 -07 – 2017 காலை 9. 30 க்கு ஆரம்பமாகும்.

போட்டி எண்: இரண்டு
பேச்சுப் போட்டிகள்

அனைத்துப் பிரிவுகளுக்குமான பேச்சுப் போட்டிகளும் எதிர்வரும்
ஞாயிறு 16 -07 – 2017 பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகும்.

 போட்டி எண்: நான்கு
இசைப் போட்டிகள்;

தனியிசைப் போட்டி அ. பிரிவு

எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, நடராசா ஞாபகார்த்த மண்டபம்.

தனியிசைப் போட்டி ஆ. பிரிவு

எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, நடராசா ஞாபகார்த்த மண்டபம்.

 

தனியிசைப் போட்டி இ. பிரிவு
 எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, நடராசா ஞாபகார்த்த மண்டபம்.

குழு இசைப் போட்டி
எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, நடராசா ஞாபகார்த்த மண்டபம்.

         போட்டி எண்: ஐந்து
     பொது அறிவுப் போட்டிகள்
பொது அறிவுப் போட்டி அ- பிரிவு

எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, வடக்கு வளாகம்.

பொது அறிவுப் போட்டி ஆ. பிரிவு

எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, வடக்கு வளாகம்.

பொது அறிவுப் போட்டி இ. பிரிவு
 எதிர்வரும் 15-7-2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு
காரை இந்துக் கல்லூரி, நடராசா ஞாபகார்த்த மண்டபம்.

நன்றி

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                                இங்ஙனம்.
                                                                                         சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                                செயற்குழு உறுப்பினர்கள்
                                                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                                 12.07.2017

 

 

 

Older posts «