Category Archive: நினைவஞ்சலி

07.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்ட நிகழ்வு!

 

அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் எதிர்வரும் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது

அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

 

                  10ம் ஆண்டு நினைவஞ்சலி 
paramalingam

                                  அமரர் பரமலிங்கம் முருகேசு

 

பிறப்பு : 30 ஒக்ரோபர் 1938                                                 இறப்பு : 20 டிசெம்பர் 2006
    
திதி : 28 டிசெம்பர் 2016

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓர் பத்து ஆண்டுகள்! 
விழியோரம் வழியும் ஈரம் 
இன்னமும் காயவில்லை!! 
கன்னங்களில் காய்ந்த உப்பு 
இப்போதும் கரிக்கின்றது!!!

கடவுள் 
உனக்கு எல்லாச் செல்வத்தையும் 
அதிகமாகவே கொடுத்திருந்தான்! 
ஆனால் உன்னை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டான்!!

எங்கள் அறுவருக்கும் எமதன்னைக்கும்
தந்தையாய் தாயாய்
நண்பனாய் நல்லாசானாய் 
தலைவனாய் சேவகனாய் 
எல்லாமுமாய் இருந்தாய் நீ! 
பின் எதுவும் இல்லாமல் போனாய் 
உன் நினைவுகளை மட்டும் 
எங்களுக்குள் நிறைத்து விட்டு!

வறண்ட நிலத்திலும் வாழும் 
கற்பகதருக்கள் போல 
எங்களை வளர்த்து விட்டு 
உன் பேர் சொல்லும் பிள்ளைகளாய் 
நிமிர்த்தி நிறுத்திவிட்டு,
எங்களை தனியே விட்டு விட்டு போய் விட்டாய்

எங்கள் காரை மண்ணில் மட்டும் 
உப்பு அதிகம் இல்லை 
நீ போட்ட சோற்றில் 
நீ வளர்த்த வளர்ப்பில்
நீ காட்டிய உறவுகளில் 
எல்லாத்திலுமே அதனை 
அளவுக்கதிகமாகவே போட்டிருந்தாய்!

ஆதலினால் நன்றியுள்ள ஆறு ஜீவன்களாய் நிமிர்ந்திருக்கின்றோம்! 
அதற்கு மேல் அம்மா 
இன்று எங்களுக்கு அப்பாவுமாய்!

பாணந்துறையும், 
தங்கோடையும், 
பண்டத்தரிப்பும், 
இப்போதும் உன் பெயர் சொல்லும்.

வேறு என்னப்பா உங்களுக்கு சொல்லுவது? 
மறுபிறப்பு என்ற ஒன்று இருந்தால் 
பேரப்பிள்ளைகளை 
கல்லாப் பெட்டியில் உன் மடி மீது இருந்தி 
கன்டோஸ் சொக்கிலட் களவாக நீ கொடுக்க வேண்டும் 
அதை நாம் கண்டிக்க வேண்டும்!

உன் காரில் ஏற்றிக் கொண்டு 
பொன்னாலைப்பாலத்தின் அழகு நீ காட்டிவர வேண்டும்! 
மணக்காடு அம்மன் கோவில் வீதியில் அவர்களுடன் உலா வரவேண்டும்! 
வயலில் அரிவு வெட்டும் சூடு அடித்தாலும் காட்டிக்கொடுக்க வேண்டும். 
நாங்களும் அம்மாவும் அதனை பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும்!

உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

தகவல்
குடும்பத்தினர்

அமரர் ஆறுமுகம் தம்பிஐயா 40வது ஆண்டு நினைவலைகள்! (தங்கோடை, காரைநகர்)

 

        ஆருயிர் அப்பாவின் நினைவாக… 40வது ஆண்டில்…

 

     அமரர் ஆறுமுகம்  தம்பிஐயா 40வது ஆண்டு நினைவலைகள்!


                                           (தங்கோடை, காரைநகர்)

 

%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%90%e0%ae%af%e0%ae%be

 

தோற்றம்: 1930.01.22                                                       மறைவு: 1976.11.26

அன்பின் திருஉருவாக, உழைப்பின் சிகரமாக, ஊர் மக்களின் நண்பனாக, 
பார்போற்றும் குடும்ப தலைவனாக வாழ்ந்து, இயற்கையின் 
மரணத்திரைக்குள் மறைந்த எங்கள் தந்தையார் அமரர் ஆறுமுகம்  தம்பிஐயா 
அவர்களின் 40வது ஆண்டுகள் நினைவு பூக்களை அவன்தாழ் அடியில் 
சமர்ப்பிக்கின்றோம்.

வேண்டுவோர்க்கு இல்லையெனாது வேண்டியவைகளை தந்து, ஊரை 
மனதிலே நினைத்து, குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கொண்டு வாழ்ந்த 
அன்னாரின் 40வது ஆண்டு சிரார்த்த நினைவினையொட்டி அவரது பிள்ளைகள்
, மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் சார்பாக காரை பள்ளி சிறார்
கள் பயன்பெறும் வகையில் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக 
காரைநகர் அபிவிருத்தி சபையின் உதவியுடன் ரூபா ஒரு இலட்சம் 
பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சிறார்
களிற்கு வழங்கப்படுகின்றது.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்
னவையாயினும் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
 

                         தகவல்:

மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்