Category Archive: நினைவஞ்சலி கூட்டம்

நினைவு அஞ்சலிக் கூட்டம்.

நினைவு அஞ்சலிக் கூட்டம்.

இலங்கை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்களின் மறைவு குறித்து நினைவு அஞ்சலிக் கூட்டம். ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காலம்: 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: 13.30 மணி

இடம்: Hohlstrasse 67, 8004 Zürich, Switzerland.

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் அனுதாபங்களை தெவிக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

 

சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
18.01.2018

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.

க. நந்தகுமார்: 078 666 26 40
த. தயாபரன்: 079 370 50 58
அ. லிங்கேஸ்வரன்: 079 273 92 31

 

 

 

 

 

07.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்ட நிகழ்வு!

 

அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் எதிர்வரும் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது

அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி தத்துவக்கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்தி வழிபாடும் நினைவு வணக்கக் கூட்டமும்

சைவத்தமிழ் வளர்ச்சிக்கு ஏழு தசாப்தங்களிற்கு மேலாக அயராது அருந்தொண்டாற்றியவரும் காரை மண்ணின் பெருமைகளை வெளிக்கொணர உழைத்தவரும் காரை மண்ணிற்கு பெரும் புகழ் சேர்த்தவருமாகிய அமரர் சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி தத்துவக்கலாநிதி சிவத்திரு. க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவு வணக்கக் கூட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.05.2015) அன்று கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் மண்டபத்தில் பிற்பகல் 3:30 இற்குத் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

கனடா வாழ் காரைநகர் மக்களும் சைவத்தமிழ் அன்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி ஆத்ம சாந்தி வழிபாடு மற்றும் நினைவு வணக்கக் கூட்டத்திற்கு கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமை வகித்து வழிநடத்தினார்.

கனடா வரசித்தி விநாயகர் பிரதம குரு சிவஸ்ரீ. விஜயகுமாரக் குருக்கள், சைவ சமய சேவையாளர் சிவஸ்ரீ.திருஞானசம்பந்தக் குருக்கள், குருக்கள் ஐயாவின் பெறாமகள் திருமதி.கௌரியம்பாள் தாமோதரஐயர் குடும்பத்தினர், கனடா இந்து சமயப்பேரவைத் தலைவர் கவிஞர் வி.கந்தவனம், செயலாளர் திரு.சிவ முத்துலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வே.இராசேந்திரம், கனடா-காரை கலாச்சார மன்ற முன்னைநாள் நிர்வாகத்தினர், கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நிர்வாகத்தினர் மற்றும் சைவத்தமிழ் அன்பர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.  

மூதறிஞர் பண்டிதமணி க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் பெறாமகள் திருமதி.கௌரியம்பாள் தாமோதர ஐயர் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றியமையைத் தொடர்ந்து தத்துவக் கலாநிதி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட "வைத்தீசுரவம்"  என்ற வழிபாட்டு மலரில் உள்ள பஞ்சபுராணம், சிவபுராணம், திருவாசகம் ஆகிய திருமுறைகளை சமூகமளித்திருந்த அனைவரும் இணைந்து பாடி வழிபாடு செய்தனர். 

இரண்டு மணித்துளி அகவணக்கத்தைத் தொடர்ந்து சபையோர் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் தனது தலைமையுரையில் குருக்கள் ஐயாவின் சைவத்தமிழ் பணிகளைக் குறிப்பிட்டதுடன் அவர் பதிப்பித்த அரும் பெரும் நூல்களான 'ஈழத்துச் சிதம்பர புராணம்' , 'மணிவாசகர் சபை பொன் விழா மலர்,' கார்த்;திகேயப் புலவர் இயற்றிய திண்ணபுர அந்தாதி, ஆண்டிகேணி ஐயனார் புராணம், 'திக்கைத் திரிபந்தாதி' என்பனவும், 'சைவக் களஞ்சியம்' போன்ற நூல்களையும்;, திரு. திருமதி தம்பிராசா அவர்கள் ஐயாவின் உதவியோடு பதிப்பித்த கார்திகேயப் புலவரின் 'தன்னை யமக அந்தாதி;'  நூலையும், திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்கள் குருக்கள் ஐயாவிடம் பெற்று வந்த 'திக்கைத் திரிபந்தாதி'  இன் ஏட்டுப் பிரதியையும் சபையோருக்குக் காண்பித்து உரையாற்றினார். 

அத்துடன் குருக்கள் ஐயா தமக்குப் பணித்த சில பணிகளில் இன்னமும் நிறைவேறாத ஒரு பணியாக 'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ச.அருணாசலம்' என்ற நூலை மீள்பதிப்புச் செய்யும் பணி இருப்பதாகவும் அதனை மிக விரைவில் நிறைவேற்ற உள்ளதாகவும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டினார். 

சைவத்திற்கும் தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய வாழ்நாள் சாதனையாளரைப் போற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

வரசித்தி விநாயகர் பிரதம குரு சிவஸ்ரீ விஜயகுமாரக் குருக்கள் அன்னாரின் ஆசியைத் தாம் பெற்றதாகவும் இந்த நிகழ்வில் தாம் கலந்து கொண்டமை தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும் தெரிவித்தார். 

கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்கள் உரையாற்றும்போது 'வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் கற்றவர், கற்றபடி வாழ்வில் ஒழுகியவர், ஞானச் செருக்கு அற்றவர்' என்றும் கூறினார். 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக உறுப்பினர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள் தனது உரையில் சைவ சமய நாயன்மார்கள் அந்தக் காலத்தில் செய்த பணியைத் தற்காலத்தில் எங்களுடைய மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர் க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் செய்திருப்பதாகவும், எனவே நாயன்மாருக்கு அளிக்கும் மதிப்பை நாம் அவருக்கும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

கனடா-காரை கலாச்சார மன்ற முன்னாள் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா அவர்கள் உரையாற்றும் போது வைத்தீசுவரக்குருக்கள் ஐயாவின் பணியை நாம் தொடர வேண்டுமாயின் எமது பிள்ளைகளுக்கு சைவ சமயக் கல்வியை போதிக்கும் சமய வகுப்புகளை நடத்த வேண்டும் இதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

கனடா இந்து சமயப்பேரவைத் தலைவர்; கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் உரையாற்றும்போது 1973 ஆம் ஆண்டு மணிவாசகர் விழாவில் உரையாற்றுவதற்காக தம்மை குருக்கள் அழைத்திருந்ததாகவும் அப்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் 'வைத்தீசுவரக் குருக்கள் காரைநகர் மண்ணில் பிறந்தமை காரைநகர் மண் செய்த தவம்' என்றும் குறிப்பிட்டுப் பேசினார். 

திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் தனது உரையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சைவத்தைப் பாதுகாத்த தனிமனித பேரியக்கமான காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் பணிகளையும் அண்மைக்கால அரசியல் சூழலில் சைவத்தமிழ்ப்பணி செய்த மாமனிதர் மூதறிஞர் க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் பணிகளையும் ஒர் ஒப்பீடு செய்து உரையாற்றினார். 

கனடா இந்துசமயப் பேரவையின் செயலாளர் திரு.சிவ முத்துலிங்கம் அவர்கள் தமது உரையில் காரைநகர் மக்களின் சைவத்தமிழ்பற்று பற்றியும் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றியும் காரைநகர் மணிவாசகர் சபையும் அதனைத் தோற்றுவித்த சிவத்தமிழ் வித்தகர் க.வைத்தீசுவரக்குருக்கள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார். 

கனடா-காரை கலாச்சார மன்ற முன்னாள் செயலாளர் திரு.தீசன் திரவியநாதன் அவர்கள் உரையாற்றும்போது குருக்கள் ஐயா அவர்கள் தனது வரவை எதிர்பார்த்திருந்ததாகவும், அவரை தாம் சந்தித்தபோது யோகர் சுவாமிகளின் 'எப்பவோ முடிந்த காரியம்' என்ற கூற்றிற்கமைய தமது ஊர்ப்பணியும் ஊடகப்பணியும் தமது பேரனார் செய்த பணியே என்று தாம் அறிந்திராத செய்தியைத் தமக்குக் கூறி வாழ்த்தியதாகவும் கூறினார்.  

சைவசமய சேவையாளர் சிவஸ்ரீ திருஞானசம்பந்தக்குருக்கள் அவர்கள் உரையாற்றும்போது வைத்தீசுவரக் குருக்களுடன் பழகும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கவில்லை என்றும் இருந்தபோதும் குருக்கள் ஐயாவைப்பற்றி அறிவதற்காகவே தாம் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்ததாகவும் மேலும் மனித வாழ்க்கையின் தத்துவங்களையும் குறிப்பிட்டுப் பேசினார். 

சைவத்தமிழ் ஆர்வலரான கலாநிதி.தம்பிராசா ரவிச்சந்திரன் அவர்கள் தனது உரையில் ஈழத்தில் சைவ சமய வராலற்றினை கி.பி 1500 ஆம் ஆண்டளவிலான வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டு குருக்களின் நான்கு தலைமுறையினர் வரையிலான பரம்பரையையும் அவர்கள் செய்த பணியையும் குறிப்பிட்டுப் பேசியதுடன் தமது பரம்பரைக் கோவிலான ' களபூமி, தன்னைப் பிள்iளார்' கோயிலுக்கான 'தன்னை அந்தாதி' நூலினைப் பதிப்பிக்க குருக்கள் ஐயா உதவியமையையும் நன்றியுடன் குறிப்பிட்டுப் பேசினார். 

காரைநகர் மணிவாசகர் சபை முன்னாள் செயலாளரும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் செயலாளருமாகிய திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் நீண்ட காலம் குருக்கள் ஐயாவுடன் நெருக்கமாகப் பழகிப் பணி செய்தவர் என்ற வகையில் காரைநகர் மணிவாசகர் சபையின் தோற்றத்தையும் அதன் பணிகளையும் தனது இனிமையான நினைவுகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்ட 'குருக்கள் ஐயாவின் திருத்தொண்டு பரவும் மலர்' மற்றும் செய்தி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றையும் காட்டிப் பேசினார்

நினைவுரை நிகழ்த்திய அனைவரினதும் உரையில் மனிதருள் மாணிக்கமாக ஒரு நூற்றாண்டு வாழ்ந்து சைவத்திற்கும் தமிழிழுக்கும் அரும் பெரும் தொண்டாற்றிய வாழ்நாள் சாதனையாளரான சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் தத்துவக்கலாநிதி. பண்டிதமணி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் விட்ட பணிகளைத் தொடர்வதுடன் என்றும் அவரை நினைவு கூர்ந்து போற்றித் துதிக்கும் வழிவகைகளைச் செய்யும் கடப்பாடு எமக்கு இருக்கின்றது என்ற கருத்து தொனிக்கத் தவறவில்லை.  

திரு.கனக.சிவகுமாரன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இராப்போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

DSC_0535 DSC_0536 DSC_0537 DSC_0538 DSC_0539 DSC_0540 DSC_0541 DSC_0542 DSC_0543 DSC_0544 DSC_0545 DSC_0546 DSC_0547 DSC_0548 DSC_0549 DSC_0550 DSC_0551 DSC_0552 DSC_0553 DSC_0554 DSC_0555 DSC_0556 DSC_0557 DSC_0558 DSC_0559 DSC_0560 DSC_0561 DSC_0562 DSC_0563 DSC_0564 DSC_0565 DSC_0566 DSC_0567 DSC_0568 DSC_0569 DSC_0570 DSC_0571 DSC_0572 DSC_0573 DSC_0574 DSC_0575 DSC_0576 DSC_0577 DSC_0578 DSC_0579 DSC_0580 DSC_0581 DSC_0582 DSC_0583 DSC_0584 DSC_0585 DSC_0586 DSC_0587 DSC_0588 DSC_0589 DSC_0590 DSC_0591 DSC_0592 DSC_0593 DSC_0594 DSC_0595 DSC_0596 DSC_0597 DSC_0598 DSC_0599 DSC_0600 DSC_0601 DSC_0602 DSC_0603 DSC_0604 DSC_0605 DSC_0606 DSC_0607 DSC_0608

அமரர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவு வணக்கக் கூட்டமும்

       சைவத்தமிழ் வளர்ச்சிக்கு ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அயராது    அருந்தொண்டாற்றியவரும் காரை மண்ணின் பெருமைகளை வெளிக்கொணர          உழைத்தவரும் காரை மண்ணிற்கு பெரும் புகழ் சேர்த்தவருமாகிய

                அமரர் சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி தத்துவகலாநிதி 
                           சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின்

 ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவு வணக்கக் கூட்டமும்

தலைமை: சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் B.Sc. அவர்கள் (தலைவர், கனடா சைவ சித்தாந்த மன்றம்)

இடம்; கனடா ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்
               01, Golden Gate, Unit # 01, Scarborough

காலம்: 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பிற்பகல் 3.30 மணி

கனடா வாழ் காரைநகர் மக்கள் சைவத்தமிழ் அன்பர்கள் அனைவரும் இக்கூட்டத்திலும் அதன் பின்னரான இராப்போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

                                                      உறவினர்கள் நண்பர்கள் சைவத்தமிழ் ஆர்வலர்கள்

 

முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்

kv_kurukkal_copy

அமரர் சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி தத்துவகலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவு வணக்கக் கூட்டமும்

Vythees-ST

சைவத்தமிழ் வளர்ச்சிக்கு ஏழு தசாப்தங்களுக்கு  மேலாக அயராது அருந்தொண்டாற்றியவரும் காரை மண்ணின் பெருமைகளை வெளிக்கொணர உழைத்தவரும் காரை மண்ணிற்கு பெரும் புகழ் சேர்த்தவருமாகிய

அமரர் சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி தத்துவகலாநிதி 
சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின்

ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவு வணக்கக் கூட்டமும்

 

தலைமை: சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் B.Sc.  அவர்கள்      (தலைவர், கனடா சைவ சித்தாந்த மன்றம்)

இடம்: கனடா ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்
01,Golden Gate, Unit # 01, Scarborough.

காலம்: 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பிற்பகல் 3.30 மணி

                 விபரமான நிகழ்ச்சி அட்டவணை பின்னர் அறியத்தரப்படும்


கனடா வாழ் காரைநகர் மக்கள் சைவத்ததமிழ் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

                                               உறவினர்கள் நண்பர்கள் சைவத்தமிழ் ஆர்வலர்கள்

கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்களின் அஞ்சலி காரைநகர் மணிவாசகர் மடாலயத்தில் நடைபெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வசிட்ட மாமுனி வைத்தீஸ்வர குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டம் இன்று மாலை (03/05/2015) நிறைவுற்றது.

வைத்தீஸ்வர குருக்கள் அவர்களின் ஆத்ம திருப்திக்கு  இணங்க தேவாரம், திருவாசகம், திருமதிரம் பண்ணிசை கச்சேரியுடன், பல அறிஞர்களின் உரையும் இடம்பெற்றது.

பண்ணிசை பாடிய செல்விகள் சாம்பவி உதயகுமார், மாதங்கி உதயகுமார் இருவருமே ஈழத்து சிதம்பர புராணத்தின் நூலாசிரியர் புலவர்மணி சோ .இளமுருகனார் , உரையாசிரியர் பண்டிதைமணி திருமதி ப.இளமுருகனார் ஆகியோரின் பூட்டிகள் என்பது பாடி முடித்த பின்பே திரிய வந்தது கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது. அது மட்டுமல்ல இந்த தொடர்பு எப்படி வந்தது , ஏன் வந்தது என்பவற்றை தாண்டி இதன் பின்னால் ஒரு சூக்கும சக்தி இதனை வழிநடத்தியத்தை உணரமுடிந்தது.

எட்மொண்டன்(Edmonton ) நாகபுஷணி அம்மன் ஆலய பிரதம குரு  சிவஷிறி கமலநாதக் குருக்கள், எமது மண்ணின் ஊடகவியலாளரும், பிருத்தானியா தமிழோசை வானொலி சேவையின் அறிவிப்பாளருமான திரு இளையதம்பி தயானந்தா, சுடரொளி ஆசிரியர் திரு .ஐ.தி . சம்பந்தன் அவர்கள், செந்தமிழ் வித்தகி , சித்தாந்த ரத்தினம் திருமதி அருளாம்பிகை குணராசா, காரை சுந்தரம்பிள்ளையின் புதல்வி திருமதி மாதவி சிவலீலன், சர்வதேச இந்து இளைஞர் மன்ற இஸ்தாபகர் திரு. சிவபாதம் கணேஷ்குமார், மற்றும் திரு க .ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 மணிவாசகர் சபையினால் வருடம் தோறும் நடாத்தப்படும் திருவாசகம் முற்றும் ஓதல் மனனப் போட்டியில் சித்திபெறும் முதல் மாணவ மாணவியர்களுக்கான தங்கப் பதக்கம் இனிவரும் காலங்களில்  ''கலாநிதி சிவஷிறி க.வைத்தீஸ்வரர் ஞாபகார்த்த  புலமைப் பதக்கம்'' எனும் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதியுதவியினை வருடம் தோறும் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்  வழங்க வேண்டும் என்றும் போஷகர் சபை சார்பாக ப.தவராஜா வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.

மேலும் விபரமான செய்திகள், பண்ணிசைக் காணொளிகள், அறிஞர்கள் உரைகள், மேலதிக புகைப்படங்கள்  என்பன ஓரிரு தினங்களில்  எடுத்துவரப்படும்.


நன்றி.

நிர்வாகம்.

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் 

 

1 (Copy) 2 (Copy) 3 (Copy) 4 (Copy) 5 (Copy) 6 (Copy) 7 (Copy) 8 (Copy) 9 (Copy) 10 (Copy) 11 (Copy) 12 (Copy) 13 (Copy) 14 (Copy) 15 (Copy) 16 (Copy) 17 (Copy)

 

 

நினைவஞ்சலி கூட்டம்!

Vythees4

அன்பார்ந்த சைவத் தமிழ் உறவுகளே,

கடந்த சனிக்கிழமை 25/04/2015 அன்று எமது ஈழ மண்ணின்  வசிட்ட மாமுனி என்று வருணிக்கப்பட்ட சிவத்தமிழ்  வித்தகர், பண்டிதர், கலாநிதி சிவஸ்ரீ க. வைதீஸ்வர குருக்கள் அவர்களின் மறைவையொட்டி, வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை 03/05/2015 அன்று பிற்பகல் 05:00 மணியளவில் Hanuman Community Center (ஆஞ்சநேயர் ஆலயம்) , Marsh Drive , West Hendon ,NW9 7QE , எனும் மண்டபத்தில் அன்னாருக்கான ஆத்மா சாந்தி பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ஒழுங்கு செய்துள்ளது.

 பல அறிஞர்களின் நல்லுரையுடன், திருமுறை ஓதலும், பண்ணிசையும், ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெறும். அனைவரையும் கலந்துகொண்டு ஐயா அவர்களின் ஆத்மா சிவனடிசேர பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம் 

 

மேலதிக தொடர்புகளுக்கு 

நாதன்:-  07944 232014

குமார்:- 07951 950843

 

நன்றி 

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்