Category Archive: விசேட அறிவித்தல்

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி!

 

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அங்கத்தவர்களிற்கான விசேட அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அங்கத்தவர்களிற்கான விசேட அறிவித்தல்!

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வங்கி கணக்கு முன்னைய நிர்வாக சபையினரால் கையளிக்க மறுப்பு! 


 இத்தாள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறியத்தருவது யாதெனில் முன்னாள் நிர்வாக சபையின் தலைவர் திரு.ரவி ரவீந்திரன், முன்னாள் நிர்வாக சபையின் செயலாளர் திரு.பாலன் கணேசன், முன்னாள் நிர்வாக சபையின் பொருளாளர் திரு.தர்மலிங்கம் பரமசிவம் ஆகியோர் முன்னாள் நிர்வாக சபையின் சார்பாக மன்றத்தின் வங்கி கணக்கினை தமது நிர்வாக சபை முடிவின் பின்னரும் 03.10.2016 இன்றுவரை நடப்பாண்டு நிர்வாக சபையான திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கையளிக்க தவறியுள்ளனர். 


மன்றத்தின் யாப்பு விதிகளிற்கு அமையவும் மன்றத்தின் இறைமையினை பாதுகாக்கும் வகையிலும் உடனடியாக கையளிக்க தவறும் பட்சத்தில் எதிர்வரும் பொதுச்சபை கூட்டத்தில் பிரதான அங்கமாகவும், முதல் அங்கமாகவும் இவ்விடயம் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன் பொதுச்சபையின் தீர்மானங்களிற்கு அமைய இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனையும் 2015 மற்றும் 2016ம் ஆண்டு மன்றத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையானது 28.05.2016 அன்று நடைபெற்ற இக்கட்டானதொரு சூழ்நிலையில் கூட்டப்பட்ட பொதுச்சபை கூட்டத்தின் போது தற்காலிகமாக 7 பேர்கள் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களை மட்டும் கொண்டதாக திரு.தம்பிஐயா பரமானந்தராசா ஆகிய எனது தலைமையில் அமையப்பெற்றது.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையினராகிய திரு.இராசதுரை ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையினர் மன்றத்தின் வங்கி கணக்கினை தற்போதைய நிர்வாக சபையினரிடம் கையளிக்க இதுவரை தவறியுள்ளனர். சுமூகமான முறையிலும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பின் பிரகாரங்களின் அடிப்படையிலும் தற்போதைய நிர்வாக சபையின் சார்பில் மன்றத்தின் வங்கி கணக்கினை பெற்றுக்கொள்ள எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்று போன நிலையிலும், உத்தியோக பூர்வமான முறையில் பதலளிக்க தவறிய நிலையிலும் மன்றத்தின் கடந்த கால நிர்வாக சபை தலைவர் திரு.இராசதுரை ரவி ரவீந்திரன், செயலாளர் திரு.பாலன் கணேசன், திரு.தர்மலிங்கம் பரமசிவம் ஆகியோரினால் கையொப்பம் இட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த மன்றத்தின் வங்கி கணக்கினை மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் சார்பாக மேற்குறிப்பிட்ட மூவரும் தற்போதைய நிர்வாக சபையினரிடம் கையளிக்க தவறிவருகின்றனர்.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெரும் விழாவான "காரை வசந்தம்" நிகழ்வு 29.10.2016 அன்று நடைபெறவுள்ள நிலையில் மன்றத்தின் நிதி செயற்பாடுகளை முறையே வழிநடாத்தவும் அங்கத்தவர்கள் மற்றும் அனுசரணையாளர்களின் நிதி கொடுப்பனவுகள் முறையே மன்றத்தின் யாப்பு பிரகாரங்களின் நியதிப்படி நடைபெறவும் புதிய வங்கி கணக்கு ஒன்றினை தற்போதைய நிர்வாக சபையின் வங்கியில் திறப்பது எனவும் 25.09.2016 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கடந்த நிர்வாக சபையினரினரால் மன்றத்தின் யாப்பு விதியின் பிரகாரம் மன்றத்தின் நிர்வாக பதவிகளை விட்டு விலகிய பின்னரும் மன்றத்தின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கு என்பவற்றை முறையே கையளிக்க தவறியமை தொடர்பாக பொதுச்சபைக்கு அறிவிப்பது எனவும் அதன் மூலம் பொதுச்சபையின் தீர்மானங்களிற்கு அமைய மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


இந்த தற்காலிக 7 பேர்கள் கொண்ட நிர்வாக சபை அமைவதற்கு முன்னரான காலப்பகுதியில் திரு.இராசதுரை ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையானது கனடா ஒன்ராரியோ மாநில இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் வேண்டுகோளிற்கு இணங்க தமது நிர்வாக சபையினை முறையே பதிவு திணைக்களத்தில் பதிவு செய்ய பதிவு திணைக்கழத்தினால் விடுக்கப்பட்ட காலகெடுவை தவறவிட்ட நிலையிலும், தமது நிர்வாககத்தினை பதிவு திணைக்கழத்தில் பதிவு செய்யப் போவதில்லையென நிர்வாக சபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையிலும், அதனை தொடர்ந்து 3 நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்த நிலையிலும் இக்கட்டானதொரு சூழ்நிலையில் 28.05.2016 அன்று பொதுக்கூட்டத்தினை கூட்டியதோடு தமது பதவிகளை இராஜினாமா செய்ததுடன் மன்றத்தின் நிர்வாக செயற்பாடுகளில் இருந்து விலகிச் சென்றனர்.


இந்த நிலையில் திரு.தம்பிஐயா பரமானந்தராசா ஆகிய எனது தலைமையில் 7 பேர்கள் கொண்ட நிர்வாக சபை அமையப்பெற்றதுடன் 30.05.2016 அன்று இரண்டாவது தடவையாக பதிவு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னர் இரண்டொரு தினங்களில் முறையே நிர்வாகத்தினை பதிவு செய்து கொண்டதுடன் மன்றத்தின் செயற்பாடுகளை முறையே 7 பேர்கள் கொண்ட தற்காலிக நிர்வாக சபையினரின் உதவியுடன் நடாத்தி வருவதுடன். ‘காரை ஒன்றுகூடல் 2016’ சிறப்புற 31.07.2016 அன்று நடாத்தப்பட்டது.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையின் சார்பில் புதிய வங்கி கணக்கு ஒன்றினை ஆரம்பித்துக்கொள்வது மற்றும் மேற்குறித்த அறிவித்தல் தொடர்பாக மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினருக்கு மன்றத்தின் அங்கத்தவர்கள் தங்களது கருத்துக்களை எழுத்து மூலமாக தெரிவிக்கும் படியும் இத்தாள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                 நன்றி!

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம் 
                  03.10.2016