Category Archive: CKCA Library News

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக அபிவிருத்திக்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு


காரைநகர் நலனுக்காக பல சேவைகளை ஆற்றிவரும் மருத்துவர் சுப்பிரமணியம் நடராசா குடும்பத்தினரின் சிந்தனையில் உதித்த காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் இன்று பெருவிருட்சமாக எழுந்துள்ளது.


ஈழத்துச் சிதம்பர வீதிச் சந்தியிலிருந்நு (புதுறோட் சந்தி) நூறு மீற்றர் தூரத்தில் பிரதான வீதியில் எல்லோரும் சென்று எளிதில் சென்றடையக்கூடிய வகையிலும் படிப்போர் ஆர்வத்துடன் படிக்கும் வகையிலும் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் நிறைந்துள்ளதாகவும், அமைதி நிலவும் சூழலாகவும் இந்நூலகம் அமைந்துள்ளது.


இக்கட்டடம் முழுமையாகப் பூர்த்தியாக்கப்படவில்லை மாடிக்கட்டட வேலைகள் நிறைவு பெறாத நிலையில் அடித்தள அமைப்புடன் விஜயதசமி தினத்தன்று திறப்பு விழா நடைபெற்றது.


கடந்த புதன்கிழமை(23-04-2014) அன்று அனைத்துலக நூலக தின விழாவும் இந்நூலகத்தில் காரைநகர் அபிவிருத்தி சபையினால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இந்நூலக அபிவிருத்தி நிதிக்காக காரை அபிவிருத்தி சபை நல்வாய்ப்புச் சீட்டுக்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றது.


சீட்டிழுப்பு திகதி வெள்ளிக்கிழமை 20-06-2014 திகதிக்குப் பின்போடப்பட்டுள்ளது.


முதலாம் பரிசு:  மடிக் கணனி


இரண்டாம் பரிசு: 15' தொலைக் காட்சிப் பெட்டி


மூன்றாம் பரிசு: துவிச்சக்கர வண்டி


சீட்டு ஒன்றின் உள்ளுர் விலை ரூபா 200/=


கனடாவில் விலை 2.00 டொலர்கள் மட்டுமே


மேற்படி நல்வாய்ப்புச் சீட்டுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவோர் எமது மன்றத்துடன் தொடர்பு கொள்ளவும்

தொடர்புகளுக்கு: (416)642-4912
 

 

Library Lotto.
 

 

 

காரைநகர் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.UPDATED

L18காரைநகர் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.
காரை அபிவிருத்தி சபை நூலக முதல் மாடி கட்டிடத்தின் 60 அடி நீளப்பகுதிக்கான கொங்கிறீற் வேலைகள் முடிவடைந்து மீதி 40 அடி நீளப்பகுதிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முதற்கட்டமான நூலக செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கப்பட உள்ளது. அதாவது 60 அடி நீளம் 30 அடி அகலப்பகுதிக்கான நிலப்பகுதி வேலைகள் மின் இணைப்பு வேலைகள் தளபாட கொள்வனவு நூல்கள் என பல தரப்பட்ட வேலைகள் உள்ளன.நூலக குழு இதற்கான ஒழுங்குகளை செய்கிறார்கள்.

பரந்து வாழும் காரைநகர் கொடைவள்ளல்களாகிய உங்கள் அமோக ஆதரவு கிடைக்குமாயின் இப்பணி வெகுவிரைவில் முடிவடைந்து நூலக சேவை இவ்வருட இறுதியில் ஆரமப் பிக்கப்படலாம்.

காரைநகர் மக்களாகிய நீங்கள் ஒவ்வொரும் இந்த அரிய பணியில் பங்கேற்க வேண்டும் என்பது நூலக குழுவாகிய எங்களது தயவான வேண்டுகோளாகும்.

இதில் பங்குபற்றுவதன் மூலம் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த பணியில் உங்களையும் இணைத்துக்கொண்ட மன நிறைவு பெறுவீர்கள்.

இது வரை என்ன நடைபெறுகிறது என தூர இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் இப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு நூலக குழு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றது.
இப்பணியில் சேர்ந்து கொண்ட அனைவரது பெயர் அடங்கிய வரவு செலவு விபரம் இறுதியில் வெளிவரும்.
தொடர்புகளுக்கு
கனடா  – CKCA 416-642-4912 (ext 1-தலைவர் ext.2 – செயலாளர் ext 3 –பொருளாளர்
நூலக உப குழு 647-693-2622 அல்லது 905-526-1435
கனடாவில் நன்கொடை அளிக்க விரும்புவர்கள் PAYPAL மூலம் அல்லது அருகில் உள்ள TD வங்கிக்கு சென்று A/C இல. 711 Branch# 1029 இற்கு deposit செய்து விபரத்தை ரிசீற் பெற எமக்கு அறிவிக்கவும
லண்டன்-44-7951950843

France  – 33-145-892-330  or  33-148-654-401

Germany – 49-2161-997-469   or 49-2389-535-459

Swiss        –  41-34-423-0405

[contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Email’ type=’email’ required=’1’/][contact-field label=’details of payment’ type=’textarea’ required=’1’/][contact-field label=’Comment’ type=’textarea’/][/contact-form]

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்திற்குக் காணி அன்பளிப்பு

காரை அபிவிருத்திச்சபை மாணவர் நூலகத்திற்கு மேலதிகமாக இரண்டு பரப்புக் காணி அன்பளிப்பு

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகம் அமைக்கப்படும் காணிக்குக் கிழக்குப் பக்கமாக மேலதிகமாகத் தேவைப்படும் இரண்டு பரப்புக் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வன்பளிப்பினைத் திரு.பொன்னையா ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆறுமுகம் அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவா தி.மகேசன் அவர்களிடம் வழங்கினார். சட்டத்தரணி திருமதி. சாந்தி சிவபாதம் இதற்குரிய கட்டணத்தினைத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். அன்பளிப்பு நிகழ்வில் திரு.கோடீஸ்வரன் ஆறுமுகம் அவர்களும் கலந்து கொண்டார்.

இவ்வன்பளிப்பினை வழங்கிய திருமதி மனோன்மணி ஆறுமுகம் அவர்களுக்கும் அவரது மகன் திரு.கோடீஸ்வரன் ஆறுமுகம் அவர்களுக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபை நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றது.

காரை அபிவிருத்திச் சபை.

SAM_6889SAM_6888Image (2)

காரைநகர் மாணவர் நூலகத்திற்கு மூன்றாம் கட்டமாக மேலதிக நிதி அனுப்பிவைப்பு

காரைநகர் மாணவர் நூலகத்திற்கு மூன்றாம் கட்டமாக மேலதிக நிதி அனுப்பிவைப்பு
காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் மாணவர் நூலகத்திற்கு கனடா காரை கலாச்சார மன்றம் மூன்றாம் கட்டமாக சுமார் 331,000ரூபாய்களை நேற்று 04.02.2013இல் காரை அபிவிருத்திச் சபையினருக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்நிதியுதவிகளை வழங்கி ஆதரவு தந்த அனைத்து கனடா காரை அன்பு உள்ளங்களுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.


 

காரைக் கல்வியின் பெட்டகம்

காரைக் கல்வியின் பெட்டகம்

‘அரங்குஇன்றி  வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்’

 

இன்றைய சிறிய விதைகள், நாளைய பெரிய மரங்கள  இன்றைய சிறிய செயல்கள் நம்மைக்காக்கும் நாளைய நற்பணிகள். நூலகம் மனித வாழ்வுடன் இன்றியமையாததொன்று. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை பயன் கொள்ளுமிடம்.

எமது ஊரின் மத்தியில் அமைய இருக்கும் மாணவர் நூலகம் எங்கள் கல்வியறிவை   வளர்ப்பதற்கான இடமே. நூல்+ அகம் = நூலகம் ஏன் அவசியம் என்னும் போது எமது ஊர்பற்றிய வரலாறு, ஊரில் வாழ்ந்த பெரியார் வரலாறுகள், திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், தொழில்சார் வரலாற்றுப்பதிவுகள், கலைவடிவிலான வரலாற்றுபதிவுகள் பொது அறிவினை வளர்த்துக்கொள்வதற்கான இலக்கியங்கள், நாவல்கள் இப்படியாக பல படைப்பக்களை  களஞ்சிய படுத்தும் இடமாககொள்ளலாம்.

ஓரு கட்டித்திற்கு எவ்வாறு அத்திவாரம் அவசியமோ அவ்வாறு எமது ஊரின் மக்களுக்கு நூலகம் அவசியம். நாம் நாடுகள் தோறும் மன்றங்கள், சபைகள் அமைத்து அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்றோம். அந்த சிந்தனைக்கு அடியூற்றாக திகழ்வதும், அதன் அமைவிடங்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், திருகோயில்கள், வைத்தியசாலைகள் போன்ற பிரதான இடங்களாகும்.

அறிவுசார் உலகின்  இன்றைய படைப்புக்கள் எமது கிராமத்தின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவுகின்றன என்று நோக்கும் போது அவை அனைத்தும் நூல்வடிவில் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.  கோயில்களின் தோற்றம், தலவிருட்சம் எமது ஊரின் வளர்ச்சிக்கு உழைத்த பெரியார்களின் வரலாறுகள், மீன்பிடித்துறை, நெசவுத்துறை, கற்பகதரு பனைமரத்திலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் பற்றிய விளக்கம், விவசாயத்துறை, கட்டிடநிர்மாணத்துறை, வியாபாரத்துறை, எமது கலைவடிவான காத்தவராயன்கூத்து, கிராமிய நடனங்கள், நாடகங்கள், பரதநாட்டியம் சிறுவர் கலைவடிவங்கள் போன்றன நூல்வடிவில் நூலகத்தில் பாதுகாக்கப்படல் வேண்டும்.  தொழில்சார்துறைகள் காலநேரத்திற்கு மாறுபடும் தன்மைகொண்டவை. அதற்கு ஏற்றவாறு நூல்கள்மூலம் நாமும் மாறுதல் வேண்டும். ஒரு நூலின் முகப்பு திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தில்  ஆரம்ப பாடசாலையிலிருந்து    மாணவர்களுக்கு படங்களுடன் கூடியவிளக்கங்களுடன் வாசிப்பு திறனை வளாக்;கிறார்கள். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடக்கம்  பத்தாம் வகுப்பு மாணவாகள்;வரை நூலகத்தை கட்டாயமாக பயன்படுத்த செய்கிறார்கள். நூலகத்தை இவர்கள் கல்வியில் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள்  என்று பரீட்சித்துப் பார்க்கிறார்கள். ஒரு புத்தகத்தை அழமாக வாசித்து பின்னர் அதன் கேள்விக்கொத்தை Antolin என்ற இணையத்தளமூலமாக செய்யவிடுகின்றார்கள். அதன் மதிப்பு எண்களை வகுப்பாசிரியர் பார்வையிடுகின்றார். இவ்வாறாக மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.  Zürich மாநிலத்தில் குறிப்பிட்ட நான்கு மாதத்தில் 5000 மதிப்பு எண்களை பெற்று  தமிழ் மாணவன் முதலிடம் பெற்றான். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான். ஓரு சாதாரண மனிதன் ஒரு நிமிடத்திற்கு 150 தொடக்கம் 300 சொற்கள் வாசிக்கலாம். வாசிப்பு திறமை கொண்டவர்கள் ஒரு நிமிடத்திற்கு 1000 சொற்கள் வாசிக்கலாம். ஓருவர் உலகசாதனையாக ஒரு நிமிடத்திற்கு 4000 சொற்கள் வாசித்துள்ளார். கண் தெரியாதவனுக்குகூட வாசிப்பதற்கு ஓரு ஒளியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் வாசிப்பது என்பது மனிதனது வாழ்வில் இன்றியமையாதாக இருக்கின்றது. எமது கிராமத்தை பொறுத்தவரை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி நூலகமூலம் அவர்கள் அறிவுக்கு ஒளி கொகொடுக்கலாம்

சுவிற்சர்லாந்தில்  Zürich   மாநிலத்தில் 16 நூல்நிலயங்கள் இருக்கின்றன அவற்றில் 4 நூல்நிலயங்களில் மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய 416 தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன. படத்தில் காணப்படுவது மத்திய நூல்நிலயம் நிலத்திலிருந்து மேல் நான்கு மாடிகளையும் நிலத்தின் கிழ் ஐந்து மாடிகளையும் கொண்ட பிரமாண்டமான நூல்நிலயம். இதில் கூடுதலாக பல்கலைக்கழக மாணவரிலிருந்து பேராசிரியர்கள், பெரியவர்கள் பயன் கொள்கின்றனர். இங்கு 200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். வாரத்திற்கு 20,000பேர் தங்கள் அறிவு மேம்படச்செய்கின்றனர்.

KANTONS, STADT-UND UNIVERSITÄTSBIBLIOTH

காரைநகர் அபிவிருத்திச்சபையால் அமைக்கப்படும் மாணவர் நூல் நிலையம் என்பது எமது கிராமத்தின்  அபிவிருத்திக்கு இடப்படும் அத்திவாரம் ஆகும். சிந்தனைகள், அறிவுசார் படைப்புக்கள் நூல்நிலயத்திலிருந்து உருவாகின்றன பழைய நூல்களை திறந்து பார்க்கும் போது இன்றைய நாகரீக உலகிற்கு ஏற்றவாறு இன்னொரு படைப்பினை உருவாக்க முடியும். எம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஓத்துழைப்பு நல்குதல் வேண்டும். நாம் ஓருவிடயத்தை வார்த்ததைகளினால் இலகுவாக கதைக்கலாம். அதை திட்டமிட்டு செயல்படத்தும்  போதுதான் அதனுடைய வேலைப்பளு தெரியவரும். எனவே நாம் அனைவரும் சர்வதேசரீதியாக ஒன்று சேர்ந்து மேலும் உதவிகள் செய்தல் வேண்டும். எவ்வாறு எனின்  எம்மிடையே புலம்பெயர் தேசங்களில் ஏறத்தாள 10,000பேர் காரைநகரைச்சேர்ந்த மாணவர் கல்வி கற்கின்றார்கள் என்று வைத்துக்கொண்டால் ஒருவரிடமிருந்து  10டொலர்கள் சேகரிப்பு செய்து. அந்த மாணவர்களிடமிருந்து  நூல்நிலயத்திற்கு தேவையான நவினமுறையிலான தொழில்நுட்ப உதவிகளைப்பெற்று சிறந்த நூல்நிலயமாக மாற்ற முடியும். இணையத்தள மூலமாக எல்லா மொழிகள் மூலமும் கற்கை நெறியை மேற்கொள்ள இருப்பதனால் இந்த மாணவர்களிடம் இணையதளத்தொடர்பை பல்வேறு வழிகளில் ஏற்படுத்துவது சாலப்பொருந்தும்.

நன்றி

சுவிற்சர்லாந்திலிருந்து காரை மைந்தன்

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலக நிதி அன்பளிப்பை கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றமே முன்னின்று சேவையாற்றுகின்றது.

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலக நிதி அன்பளிப்பை கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றமே முன்னின்று  சேவையாற்றுகின்றது.

அன்பான கனடா வாழ் காரைநகர் மக்களே!

காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் காரைநகர் அபிவிருத்தி நூலகம் சம்பந்தமாக கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றத்தினூடாக கடந்த காலங்களில் கனடா வாழ் காரைநகர் மக்கள் சுமார் 12,000 ஆயிரம் டொலர்களை வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதனை யாவரும் அறிவீர்கள். கனடா வாழ் காரைநகர் மக்களாகிய நீங்கள் இம்மன்றத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கையே இதற்குச் சான்றாகும்.

இதுவரை நிதியுதவியளித்தவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நியமிக்கப்பட்ட நூலக உபகுழு இணைப்பாளர் திரு.நடராஜா அமிர்தலிங்கம் மூலம் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் PAY PAL மூலம் நிதியுதவி வழங்கியோருக்கும் உடனடியாக பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிர்மாணப்பணித்திட்டங்கள் எந்த வகையில் காரைநகர் மக்களுக்கு உதவும் என்பதற்;கும் இணையத்தளம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் அத்துடன் கடந்த இராண்டுகள் நடைபெற்ற காரை வசந்தம் கலைவிழாவின்போதும் எமது நூலக உபகுழு மூலமாக உரிய முறையில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நூலகத்தின் கட்டுமாணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கான விளக்கங்களும் புகைப்படங்களும் இந்த இணையத்தளத்தில் Library பகுதியில் பிரசுரிக்கப்பட்ட வண்ணம் உள்ளன என்பதனையும் அறியத் தருகின்றோம்.

மேலும் இந்நூலகக் கட்டுமாணப்பணிகளுக்கு மேலதிக நிதியுதவி தேவைப்படுவதனால் நிதியுதவி செய்ய விரும்புவோர் கனடா காரை கலாச்சார மன்றத்துடன் மட்டுமே தமது தொடர்பை ஏற்படுத்தி வழங்கும் வண்ணம் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். கனடா – காரை கலாச்சார மன்றம் ஒரு பதிவுசெய்யப்பட்ட இலாபநோக்கமற்ற பரந்து விரிவுபடுத்தப்பட்ட மக்கள் மயப்படுத்தப்பட்டதும் கடந்த இரண்டு தசாப்தங்களும் மேலாக கனடா வாழ் காரை மக்களுக்கும் காரைநகரில் வாழும் எமது உறவுகளுக்கும் இன்னோரன்ன பல சேவைகளைப் புரிந்து வருகின்றது என்பதை யாவரும் அறிவீர்கள்.

இங்ஙனம் நிர்வாகம் – கனடா காரை கலாச்சார மன்றம்.

தொலைபேசி: 416 642 4912.

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலக நிதி அன்பளிப்பை கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றமே முன்னின்று சேவையாற்றுகின்றது.

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலக நிதி அன்பளிப்பை கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றமே முன்னின்று  சேவையாற்றுகின்றது.

அன்பான கனடா வாழ் காரைநகர் மக்களே!

காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் காரைநகர் அபிவிருத்தி நூலகம் சம்பந்தமாக கனடாவில் கனடா காரை கலாச்சார மன்றத்தினூடாக கடந்த காலங்களில் கனடா வாழ் காரைநகர் மக்கள் சுமார் 12,000 ஆயிரம் டொலர்களை வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதனை யாவரும் அறிவீர்கள். கனடா வாழ் காரைநகர் மக்களாகிய நீங்கள் இம்மன்றத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற நம்பிக்கையே இதற்குச் சான்றாகும்.

இதுவரை நிதியுதவியளித்தவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நியமிக்கப்பட்ட நூலக உபகுழு இணைப்பாளர் திரு.நடராஜா அமிர்தலிங்கம் மூலம் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் PAY PAL மூலம் நிதியுதவி வழங்கியோருக்கும் உடனடியாக பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிர்மாணப்பணித்திட்டங்கள் எந்த வகையில் காரைநகர் மக்களுக்கு உதவும் என்பதற்;கும் இணையத்தளம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் அத்துடன் கடந்த இராண்டுகள் நடைபெற்ற காரை வசந்தம் கலைவிழாவின்போதும் எமது நூலக உபகுழு மூலமாக உரிய முறையில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நூலகத்தின் கட்டுமாணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கான விளக்கங்களும் புகைப்படங்களும் இந்த இணையத்தளத்தில் Library பகுதியில் பிரசுரிக்கப்பட்ட வண்ணம் உள்ளன என்பதனையும் அறியத் தருகின்றோம்.

மேலும் இந்நூலகக் கட்டுமாணப்பணிகளுக்கு மேலதிக நிதியுதவி தேவைப்படுவதனால் நிதியுதவி செய்ய விரும்புவோர் கனடா காரை கலாச்சார மன்றத்துடன் மட்டுமே தமது தொடர்பை ஏற்படுத்தி வழங்கும் வண்ணம் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். கனடா – காரை கலாச்சார மன்றம் ஒரு பதிவுசெய்யப்பட்ட இலாபநோக்கமற்ற பரந்து விரிவுபடுத்தப்பட்ட மக்கள் மயப்படுத்தப்பட்டதும் கடந்த இரண்டு தசாப்தங்களும் மேலாக கனடா வாழ் காரை மக்களுக்கும் காரைநகரில் வாழும் எமது உறவுகளுக்கும் இன்னோரன்ன பல சேவைகளைப் புரிந்து வருகின்றது என்பதை யாவரும் அறிவீர்கள்.

இங்ஙனம் நிர்வாகம் – கனடா காரை கலாச்சார மன்றம்.

தொலைபேசி: 416 642 4912.

கனடா-காரை கலாச்சார மன்றம் இரண்டாவது அன்பளிப்பாக காரை மாணவர் நூலக நிர்மாணப்பணிக்கு பத்தாயிரம்($10,000) கனேடிய டொலர்கள் அனுப்பிவைப்பு

காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் மாணவர் நூலகத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றம் இன்று இரண்டாவது அன்பளிப்பாக பத்தாயிரம்($$10,000) கனேடிய டொலர்களை காரை அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்நூலக கட்டுமாணப்பணிக்கு மேலும் நிதியுதவி தேவைப்படுவதால் இதுவரை நிதியுதவி வழங்காதவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை மன்றத்தின் இணையத்தளம்(Pay Pal) மூலமாகவும் தபால் மூலமாகவும் வங்கி மூலமாகவும் நிதியுதவியினை வழங்கமுடியும்.

இந்நூலகம் பற்றிய மேலதிக விபரங்களை Library பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்

மேலதிக தொடர்புகளுக்கு:

கனடா-காரை கலாச்சார மன்றம்: 416 642 4912

அல்லது

மன்றத்தின் மாணவர் நூலக இணைப்பாளர் திரு. நடராசா அமிர்தலிங்கம் – 1-205-201-2040

 

காரை அபிவிருத்தி சபை நூலகத்திற்கான நிதி உதவி

காரை அபிவிருத்தி சபை நூலகத்திற்கான நிதி உதவி

10-01-2012

அன்புடையீர்

காரை அபிவிருத்திச் சபை நூலக ( Ground floor) கட்டிட வேலைகள் 2012 ஆண்டு தை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு 3 தொடக்கம் 6 மாத காலத்தில் பூர்த்தி செய்வதற்;கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பங்களிப்பை தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

இதுவரை தாங்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி.

காரை அபிவிருத்திச்சபை நூலகத்திற்கென காரைநகர் இலங்கை வங்கி கிளையில் தனி கணக்கு இலக்கம் (009679316) உண்டு என அறியத் தருகிறோம்;.

அன்பளிப்பு செய்ய விரும்புவோர் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் அன்பளிப்பை செய்து கொள்ளலாம்.

1. பணம் பெறுபவர் CKCA எழுதி (காசோலை மூலம்)  140 Roxbury Street Markham ON  L3S 3T4 என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

2.Pay Pal மூலம் (karainagar.com )சென்று அன்பளிப்பு பட்டினை கிளிக் செய்து) உதவி தேவைப்படின் contact  416-642-4912 (அன்பளிப்பிற்கான ரிசீற் பெற கனடா உப குழு இணைப்பாளர் திரு சிவராமலிங்கத்திற்கு 905-526-1435 தெரிவிக்கவும்)

3. உங்கள் நாட்டில் உள்ள நூலக பணியில் ஈடுபடும் இணைப்பாளருடன் தொடர்பு கொண்டு; அன்பளிப்பு செய்யவும்

4. காரைநகர் அபிவிருத்திசபை நூலகம் A/C 009679316 என (காசோலை)Dr. S.Nadarajah Sivankovil Veethy, Karainagar Srilanka   எழுதி    என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

ரசீற்றும் வரவு செலவு விபரம் அறியத் தரப்படும் இணைப்பாளர்களுக்கு உங்கள் முகவரியை தெரிவிக்கவும்.

Dr சு. நடராசா

(முன்னாள் காரை வைத்தியசாலை உதவி வைத்திய அதிகாரி)

தலைமை இணைப்பாளர் காரை அபிவிருத்தி சபை காரைநகர்

சிவராமலிங்கம் உப குழு இணைப்பாளர் C.K.C.A நூலக உபகுழு கனடா 905-526-1435

அமிர்தலிங்கம் உப குழு இணைப்பாளர்  C.K.C.A நூலக உபகுழு கனடா 205-201-2040

ரவீந்திரன் இணைப்பாளர் உபகுழு லண்டன் 44-208-949-3226

சண்முகநாதன் தவபாலன் பிரான்ஸ 33-148-981-359

கணேசு மயில்வாகனம் பிரான்ஸ் 33-149-341-359

நவரட்னம் அரிகரன் உபகுழு பிரான்ஸ் 33-148-654-401

சங்கரப்பிள்ளை ரவீந்திரன் உபகுழு ஜேர்மனி

சுவிஸ் இணைப்பாளர் அவுஸ்ரேலியா இணைப்பாளர்கள் விபரம் பின்னர் தரப்படும்

காரைநகரின் அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

காரைநகரின்  அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

கனடா காரை கலாச்சாரமன்றத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம்திகதி மாலை 5.30மணிக்கு சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் காரைநகர் அபிவிருத்திபற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 70பேர் வரையில் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், நன்னீர் பற்றிக்கலந்துரையாடப்பட்டது. அதில் கல்வி சம்பந்தமாக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொது நூலகம் அமைப்பது பற்றிக்கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்திற்கு காரை அபிவிருத்திசபையினால் அமுல்நடாத்தபடவுள்ள காரை அபிவிருத்திசபை – பொது நூலகத்திட்டம் முன்மொழியப்பட்டபோது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.அந்தக்கருத்துக்களில் அநேகரின் கருத்துக்கள் நூலகம் அமைப்பதற்கு ஆதரவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மேலும் இத்திட்டத்தை எமது மன்றத்தின் சார்பில் உதவிகளை மேற்கொள்ளவென 11பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவிற்கு தலைமைதாங்க ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:

ஒருங்கிணைப்பாளர்:

திரு. அமிர்தலிங்கம் நடராஜா

அங்கத்தவர்கள்:

1.  வேலுப்பிள்ளை ராஜேந்திரம்

2. திரு. ரவிச்சந்திரன் தம்பிராஜா

3. திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா

4. திரு. கண்ணன் நடராஜா

5. திரு. அருள்செல்வன் ராசையா

6.  சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம்

7. திரு. சிவபாதசுந்தரம் கணபதிப்பிள்ளை

8. திரு. தயாபரன் நடராஜா

9 திரு. ரவி ரவீந்திரன்

10. திரு. குழந்தைவேலு பொன்னம்பலம்

 

இந்நூலகத்திற்கென ஏற்கனவே சில காரைஅன்பர்களின் உதவியுடன் ஒரு காணி காரை அபிவிருத்திச்சபையின் பெயரில் 2007 கொள்வனவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நூலகத்தை நான்கு பெரும் பிரிவுகளாக (Lending, Reference, Children, Computer) நடாத்த திட்டமிட்டுள்ளபோதும், கிடைக்கப்பெறும் மூலதனத்திற்கு அமைய அவ்வப்பிரிவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

காரை அபிவிருத்திச்சபை நூலகம் அமைப்பது தொடர்பான முதல்கட்ட கூட்டத்தொடர் இம்மாதம் ஆகஸ்ட் 19ம் திகதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த பொது நூலகத்தினை காரைநகர் அபிவிருத்திசபை, கனடா, பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள காரைநகர் மன்றங்களினதும், மற்றும் பொதுநலன் விரும்பிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமான விரிவான அறிக்கைகளும், கட்டட அமைப்பு, தேவைப்படும் மூலதனம் போன்ற திட்டவட்டமான அமைப்பு தகவல்களும், இதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரபூர்வமான பிரேரணைகள், உரிய ஆவணங்கள் என்பன கூடிய சீக்கிரம் காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்பு இது பற்றி மற்றும் வெளிநாட்டு மன்றங்களுடனும் நலன் விரும்பிகளுடனும் கனடா-காரை கலாச்சார மன்றம் விரிவான ஆலோசனைகள் செய்து எமது கணிசமான பங்களிப்பினை செய்ய நாம் தயாராக உள்ளோம்.

இந்தவகையில் கனடா வாழ் காரைமக்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தினூடாக தொடர்புகொண்டு உங்கள் கருத்துக்களை எமதுஇணையத்தள முகவரிக்கு (karainagar@gmail.com) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்