Category Archive: UK Library News

காரை மாணவர் நூல் நிலையத்திற்கு நூற்றுக் கணக்கான நூல்கள் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினரால் அன்பளிப்பு.

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், காரை மாணவர் நூல் நிலையத்திற்கு கடந்த வாரம் ரூபாய் 720,361.00(ஏழு இலட்சத்து இருபதுனாயிரத்து முன்னூற்று அறுபத்து ஒரு  ரூபாய் )பெறுமதியுள்ள  சுமார் 1800 நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


இன் நூல்கள்  அனைத்தும் காரை இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ரன் கல்லூரி ஆசிரியர்களால் பாடத்திட்டதிற்கு அமைய தெரிவு செய்யப்பட்டவை. இந் நூல்கள்  வருங்கால காரை மாணவர் கல்வி மேம்பாட்டுக்கு  பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை.


  இந் நூல்கள் அனைத்தும் கொழும்பு ''QUENCY BOOKS  DISTRIBUTORS''  உரிமையாளர் திரு . சுந்தரலிங்கம்  கணநாதன் அவர்களின் பேருதவியுடனும்இ பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் நீண்ட நாள் முயற்சியின் பயனாகவும் கடந்த வாரம் எமது நூலகத்தை சென்றடைந்துள்ளது. நூல்களின்  விற்பனைத் தொகை மேற்குறிப்பிட்ட 720,361.00 ரூபாய்களாக இருந்த போதும் திருவாளர் கணநாதன் அவர்கள் எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு 30% விலைத்  தள்ளுபடியுடன் எமக்கு இந்நூல்களை  வழங்கி வழங்கியுள்ளார். பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் இவருக்கு எமது நன்றிகளையும் பாராடுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

   மேற்படி நூலகத்திற்கு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் தளபாடங்கள், நூல்கள் கொள்வனவு செய்வதற்கென 1மில்லியன் (பத்து இலட்சம்) ரூபாய்களை கடந்த வருடம் வழங்கியிருந்தது. இவ் உதவித் தொகையில் இருந்தே வழங்கப்பட்ட இந் நூல்கள், மற்றும் நூலகத்திற்கான  ஒரு பகுதி தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி பெற்றுவரும் எமது மாணவர் நூலகத்தை முற்று முழுதாக  பூரணப்படுத்துவதற்கு அனைத்து  புலம்பெயர் மன்றங்களும், காரை மக்களும், செல்வந்த்தர்களும், கல்விமான்களும் முன்வரவேண்டும் .

நன்றி
வணக்கம்
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்

காரைநகர் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.UPDATED

L18காரைநகர் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.
காரை அபிவிருத்தி சபை நூலக முதல் மாடி கட்டிடத்தின் 60 அடி நீளப்பகுதிக்கான கொங்கிறீற் வேலைகள் முடிவடைந்து மீதி 40 அடி நீளப்பகுதிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முதற்கட்டமான நூலக செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கப்பட உள்ளது. அதாவது 60 அடி நீளம் 30 அடி அகலப்பகுதிக்கான நிலப்பகுதி வேலைகள் மின் இணைப்பு வேலைகள் தளபாட கொள்வனவு நூல்கள் என பல தரப்பட்ட வேலைகள் உள்ளன.நூலக குழு இதற்கான ஒழுங்குகளை செய்கிறார்கள்.

பரந்து வாழும் காரைநகர் கொடைவள்ளல்களாகிய உங்கள் அமோக ஆதரவு கிடைக்குமாயின் இப்பணி வெகுவிரைவில் முடிவடைந்து நூலக சேவை இவ்வருட இறுதியில் ஆரமப் பிக்கப்படலாம்.

காரைநகர் மக்களாகிய நீங்கள் ஒவ்வொரும் இந்த அரிய பணியில் பங்கேற்க வேண்டும் என்பது நூலக குழுவாகிய எங்களது தயவான வேண்டுகோளாகும்.

இதில் பங்குபற்றுவதன் மூலம் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த பணியில் உங்களையும் இணைத்துக்கொண்ட மன நிறைவு பெறுவீர்கள்.

இது வரை என்ன நடைபெறுகிறது என தூர இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் இப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு நூலக குழு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றது.
இப்பணியில் சேர்ந்து கொண்ட அனைவரது பெயர் அடங்கிய வரவு செலவு விபரம் இறுதியில் வெளிவரும்.
தொடர்புகளுக்கு
கனடா  – CKCA 416-642-4912 (ext 1-தலைவர் ext.2 – செயலாளர் ext 3 –பொருளாளர்
நூலக உப குழு 647-693-2622 அல்லது 905-526-1435
கனடாவில் நன்கொடை அளிக்க விரும்புவர்கள் PAYPAL மூலம் அல்லது அருகில் உள்ள TD வங்கிக்கு சென்று A/C இல. 711 Branch# 1029 இற்கு deposit செய்து விபரத்தை ரிசீற் பெற எமக்கு அறிவிக்கவும
லண்டன்-44-7951950843

France  – 33-145-892-330  or  33-148-654-401

Germany – 49-2161-997-469   or 49-2389-535-459

Swiss        –  41-34-423-0405

[contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Email’ type=’email’ required=’1’/][contact-field label=’details of payment’ type=’textarea’ required=’1’/][contact-field label=’Comment’ type=’textarea’/][/contact-form]

காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம்

காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம்

மேற்படி திட்டம் தொடர்பாக கலந்துரையாடலும் அங்குரார்ப்பணக் கூட்டமும் 29-08-2010 மாலை 4.00 மணியளவில் லண்டன் வெம்பிளியில் உள்ள Moore Spice Restaurant மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏற்பாட்டாளர் திருDr. S நடராசா அவர்கள் தலைமை தாங்கினார். பின்வரும் அன்பர்கள் சமூகமளித்திருந்தனர்.

1. திரு இ. சிவசுப்பிரமணியம்

2. திரு தி. ஞானேஸ்வரன்

3. திரு பொ. தருமநாயகம்

4. திரு த. கமலதேவி

5. திரு வி. நாகேந்திரம்

6. திரு பொ. ஞானானந்தன்

7. திரு தி. இரகுபதிரஜா

8. கலாநிதி ச. சபாரட்ணம்

9. திரு சு. சரவணபவான்

10. திரு ச. ஞானப்பிரகாசம்

11. திரு சிவா. தி. மகேசன்

12. திரு ந. ரவீந்திரன்

13. திரு வே. கயிலைநாதன்

14. திரு ச. பிரபாகரன்

15. திரு க. அனந்தராஜ்

16. திரு செ. கிருபாகரன்

17. திரு க. பாலகிருஸ்ணன்

18. திரு மு. தங்கராஜா

Dr. S நடராசா அவர்கள் இத்திட்;டத்தின் நோக்கத்தினையும் அதனை செயல்படுத்தும் வழிமுறை பற்றியும் எடுத்துக்கூறினார். முதலாவதாக இத்திட்டத்திற்கு வேண்டிய நிதி சேகரிப்பதற்கும் மேற்கொண்டு  அதனை நடைமுறைபடுத்துவதற்கும் பிருத்தானியாவில் ஒரு குழு அமைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவில் இணைப்பாளர்கள் மூவரும் அங்கத்தவர்கள் பத்து பேரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இணைப்பாளர்களாக –

1. திரு நடராசா ரவீந்திரன்

2. திரு இராமநாதன் சிவசுப்பிரமணியம்

3. திரு முருகேசு தங்கராசா

அங்கத்தவர்களாக

1. கலாநிதி ச. சபாரட்ணம்                6.  திரு தி. ரகுபதிராஜா

2. திரு வி.நாகேந்திரம்                      7.  திரு தி. ஞானேஸ்வரன்

3. திரு சிவா. தி. மகேசன்                  8.  திரு சு. சரவணபவான்

4. திரு பொ. ஞானானந்தன்               9.  திரு ச. பிரபாகரன்

5. திரு க. பாலகிருஸ்ணன்               10. திரு  பொ. தருமநாயகம்

தெரிவு செய்யப்பட்டனர்

நிதி சேகரிப்பு

1. முதலாம் கட்டமாக இத்திட்டத்திற்கு  முழு ஈடுபாட்டுடன் ஆதரவளிக்கும் அன்பர்களை அணுகி அவர்களிடம் கணிசமான நிதியை திரட்டுவது என்றும் இரண்டாம் கட்டமாக லண்டன் வாழ் காரை அன்பர்கள் அனைவரிடமும் இத்திட்டத்தினை தெரியப்படுத்தி அவர்களிடமும் நிதியை திரட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

2. லண்டன் காரைநலன்புரிச் சங்கம் இங்கிலாந்திலுள்ள அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குச் சேகரிக்கும் நிதி அவ்வறக்கட்டளையின் கோட்பாடுகளுக்குள் அமைவதால் திரட்டப்படும் நிதி லண்டன் காரைநலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் அதனூடாகச் செலுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் நிமித்தம் காரைநலன்புரிச் சங்கம் தனிப்பட ஒரு வங்கிக் கணக்கினைத் துவக்கியுள்ளது. இந்தமுறையினைப் பின்பற்றுவதனால் நூலகத்திட்டத்திற்கு வரிச்சலுகைகள் கிடைக்கவுள்ளது. சேகரிக்கப்படும் நூலக நிதியினை லண்டன் காரைநலன்புரிச் சங்கம்  மேற்கூறிய கணக்கில் வைப்பிலிட்டு நூலகத்திட்டக்குழுவின் அனுமதியுடன் தேவைக்கேற்பப் காரைநகரிலுள்ள அபிவிருத்திச் சபைக்கு அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

3. நூலக திட்டப் பணிகள் காரைநகரிலுள்ள காரைஅபிவிருத்திச் சபையால் செயல்படுத்தப்படும் என்றும் இப்பணிகளிற்கு உதவியாக இணைப்பாளர் ஓருவரை தெரிவு செய்து அவரின் உதவியுடன் இத்திட்டத்தினை மேற்பார்வை செய்து செயற்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் இணைப்பாளராக Dr. S நடராசா அவர்கள் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இவ்விணைப்பாளர் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஏனைய சபைகளினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவைகளுடன் தொடர்புகொண்டு இப்பணியினைத் துரிதப்படுத்வேண்டுமென்று  கேட்டுக் கொள்ளப் பட்டார்.

4. இத்திட்டத்திற்கான நிதியை இலங்கையிலுள்ள காரைநகர் அன்பர்களிடமிருந்தும் பெறலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான முயற்சியும் எடுக்கப் படவேண்டுமென்றும்

தீர்மானிக்னப்பட்டது

கடிதத்தலைப்பு

(Letterhead) –

காரைநகர் நூலகத் திட்ட குழுவிற்கென ஒரு தனியான Letterhead  அச்சிடுவதென முடிவெடுக்கப்பட்டது.

பற்றுச்சீட்டு புத்தகம் –

இத்திட்டத்திற்குப் பெறப்படும் நிதிக்குப் பற்றுச்சீட்டு வழங்குவதற்குப்  பற்றுச்சீட்டுப் பத்தகம் அச்சிடப் படவேண்டுமெனவும் அதில் காரைநலன்புரிச்சங்கத்தின் அறக்கட்டளை இலக்கத்தினையும் குறிப்பிடவேண்டமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

கணிசமான நிதி வழங்குவோர்

இத்திட்டத்திற்கு கணிசமான நிதி பங்களிப்பு செய்வோரின் விபரம் கட்டிடத்தில் பொருத்தமான இடத்தில் பொறிக்கப்படும்.

நூலகத்தினை நிர்வகிக்கும் பொறுப்பு

இந்நூலகத்தினை காரைநகர் அபிவிருத்திசபையே நிர்வகிக்கும் என்றும் காரைஅபிவிருத்திச் சபையின் அலுவலகமும் இக்கட்டிடத்தில் இயங்குவதே சிறந்தது என்றும் கூறப்பட்டது.

கூட்டம் நன்றி உரையுடன் பிப. 7.00 மணிக்கு நிறைவுபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கு பற்றியோர் நூலகத் திட்டத்திற்கு மொத்தம் £24,000 நிதி   வழங்குவதாக உறுதி அளித்தனர்.

Dr S நடராசா

ஏற்பாட்டாளர்