Category Archive: News Latest

News From karainagar

மரண அறிவித்தல், திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா (​லோயர் சின்னம்மா) (தங்கோடை,காரைநகர்) (மில் வீதி,வவுனியா)

                           மரண அறிவித்தல்

                     திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா (​லோயர் சின்னம்மா)

தோற்றம்: 20.08.1925                                                                                மறைவு: 16.11.2017

யாழ்ப்பாணம் காரைநகர் தங்கோடையை​ ​​​பிறப்பிடமாகவும், வவுனியா மில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா 16.11.2017 (வியாழக்கிழமை) அன்று சிவபதமடைந்தார்.

அன்னார்​,​ காலம் சென்றவர்களான தம்பிமுத்து பார்வதி ​​தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான ஆறுமுகம் நல்லம்மா ​​தம்பதிகளின் அன்பு மருமகளும், ​மற்றும்​ ​​காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவர்.

அன்னார்​,​ காலம் சென்றவர்களான மீனாட்சி, வீரசிங்கம், குமாரசாமி, செல்லையா (ஜெமினி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவர்.

அன்னார்​,​ ​​இராமச்சந்திரன் (இலங்கை), ​​மகாலிங்கம் (இலங்கை), ​​அமிர்தலிங்கம் (இலங்கை), ​​இராஜேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.

அன்னார்​,​ பத்மராணி (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை), பாலராஜன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமி​​யாரும்,

​இளங்கோவன் (சிங்கப்பூர்), கெளதமி (இலங்கை), காயத்திரி (இலங்கை), திருமுகன் (லண்டன்), கஜமுகன் (லண்டன்), பிரகலாதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தி​​யாரும் ஆவர்.

அன்னாரின் மரணஅறிவித்தலை உற்றார் ​​​​உறவினர்கள் நண்பர்கள் யாவரும் ​ஏற்றுக்கொள்ளுமாறு ​​​கேட்டுக்கொள்ளுகின்றோம்​.​

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் ​​​​ஞாயிற்றுக்கிழமை 19.11.2017 அன்று காலை 09:00 அளவில் அவரது இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தகனம் செய்யக் கொண்டுசெல்லப்படும்.

தகவல்

ம​​க​ள்​ ​- ​இராஜேஸ்வரி​ ​​(ராஜேஷ்)​
00442089046141

மருமகன் ​- ​​பாலராஜன்
​00447405743470

மகன் – இராமச்சந்திரன்
0094242221373

​மகன்- ​​மகாலிங்கம்
0094242221031

​​மகன்-அமிர்தலிங்கம்​

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

ஜூலை 9, 2017 நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.   மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஆகஸ்ட் 31 கோடைகால ஒன்றுகூடலும்,   ஒக்டோபர் 8 தமிழ்த்திறன்போட்டிகளும்,  நவம்பர் 4 காரை வசந்தம் கலை விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மன்றத்துக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்களுக்கு மத்தியிலும்,  இந்நிகழ்வுகள் சிறப்பாக நடந்தமை வெற்றிப்படிகளுக்கு முதற்படியாகும்.  தலைவர்  காரை வசந்தம் கலை விழாவில் கூறியது போல TD Canada Trust கணக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாதளவில் வைக்கப்பட்டிருந்தது.  தலைவரின்  அதீத செயற்பாட்டால்  வங்கி அதிகாரிகள் வைப்பில் உள்ள தொகையை பயன்படுத்த கூடிய நிலைக்கு கொண்டுவர சம்மதித்து   கையொப்பமிடுமாறு பணித்தார்கள்.  வங்கி அறிக்கையின்படி நவம்பர் 6, 2017 கணக்கை அணுகவும், அதற்கு அடுத்த நாள் நவம்பர் 7, 2017  நிதியை பெறக்கூடியதாகவும் இருந்தது.

அந்த கணக்கில் இருந்து காரைவசந்தம் 2017 நிகழ்ச்சிகளுக்கான சில செலவுகளுக்குரிய  நிதி எடுக்கப்பட்ட துடன் , சுமார் $4500 தொகைப்பணம்    கடந்தகால நிர்வாகத்தினருக்கு மன்றத்தால் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் கையளிக்கபட்டுள்ளன.  மீதமுள்ள பணம் RBC வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா வாழ் காரை மக்களின் தொடர்ச்சியான ஆதரவும்,  ஊக்கமும்  எமது  மண்ணின் பெருமையையும்,  புகழையும்  இப்புலம்பெயர் நாட்டில் இன்னும் பல தலை முறைகளுக்கு இட்டுச் செல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.  இந்த உணர்வை தலை மேற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாகவும், பலமோடும் மன்றத்தை  வழிநடாத்துவோமாக.

மன்றத்தால் வருடம்தோறும்   நடாத்தப்படுகின்ற ஆருத்திரா  அபிஷேகம் இம்முறையும் வழமை போல  ஜனவரி 1, 2018 வெகு சிறப்பாக றிச்மன்ட் ஹில் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  அனைத்து அடியவர்களும் அன்றைய தினம்  கலந்து கொண்டு ஆட வல்லானின்  அருட்கடாட்சங்களை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன்  வேண்டிக்  கொள்கின்றோம்.

நன்றி

தங்கள் பணியில்

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகசபை

 

 

அமெரிக்கா Boston நகரத்தில் வசிக்கும் சிவகாமி அம்மன் வீதியை சேர்ந்த திரு.தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் குடும்பத்தினரின் நிதி ஆதரவில் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட மதிப்பளித்தல் நிகழ்வும் ஊக்குவிப்பு வைபவமும் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

அமெரிக்கா Boston நகரத்தில் வசிக்கும் சிவகாமி அம்மன் வீதியை சேர்ந்த திரு.தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் குடும்பத்தினரின் நிதி ஆதரவில் காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் அனைத்திலும் கல்வி பயிலும் தரம் 4, தரம் 5ம் வகுப்பு மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் ஊக்குவிக்கும் முகமாகவும், இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் இரண்டும் பாடங்களிலும் மொத்தம் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி ஊக்குவிப்பும், புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தியடைந்த 20 காரைநகரை சேர்ந்த மாணவர்களிற்கு தலா 3,000 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

1958.03.01 இல் ஆரம்பிக்கப்பட்டு இற்றைவரை சிறப்புற சமூகப்பணியாற்றிவரும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சனசமூக நிலலையத்தினரால் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நிலைய தலைவர் திரு.க.விஜயகாந் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுகளிற்கு முதன்மை அதிதியாக காரை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.அ.குமரேசமூர்த்தி அவர்களும், சிறப்பு அதிதிகளாக கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம், யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, காரை மத்தி கிராம அலுவலர் செல்வி மு.அருந்தசா, ஒளி அரசி சஞ்சிகை துணை ஆசிரியர் திருமதி சூரியகுமாரி சிவரூபன், மன்றத்தின் ஆதரவாளர் திரு.தி.பிரபாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளை சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலய பிரதம ஆலய குரு மங்களேஸ்வரக்குருக்கள் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

2017ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயின்று வெட்டுப்புள்ளிகளிற்கு மேல் பெற்று சித்தியடைந்த 18 மாணவர்கள் மற்றும் அயல்கிராம பாடசாலைகளில் கல்வி கற்று சித்தியடைந்த மேலும் 2 மாணவர்கள் உட்பட 20 மாணவர்களிற்கு தலா 3,000 ரூபா ரொக்க பணமும் தலா ஒரு மாணவருக்கு 250 ரூபாய்கள் மதிப்புள்ள கற்றல் உபகரணங்களும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

அத்துடன் காரைநகர் அனைத்து பாடசாலைகளிலும் அடுத்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளிற்கு தயாராகும் தரம் 4 இல் கல்வி கற்கும் மொத்தம் 161 மாணவர்களுக்கும் தலா 390 ரூபாய்கள் மதிப்புள்ள கற்றல் உபகரங்கள், பரீட்சை வழிகாட்டி புத்தகங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

அத்துடன் வருடந்தோறும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் செய்யும் நோக்குடன் வருடந்தோறும் தரம் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்களிற்கு தலா 70 ரூபாய்கள் மதிப்புள்ள மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய அறிவு பொது அறிவு வளர்க்கும் மாணவர் புத்தகங்கள் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளதாக அனுசரணையாளர் திரு.விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் மாதாந்தம் வெளியாகும் ‘ஒளி அரசி’ குடும்ப சஞ்சிகை இதழ் வழங்கப்பட்டது, இம்மாத இதழானது பாடசாலை சிறுவர்களின் பொது அறிவினை வளர்க்கும் நோக்குடன் வெளிவருவதுடன் பரீட்சை கருத்தரங்குகள் மாதிரி வினாத்தாள்களை கொண்டும் மாதாந்தம் வெளிவருகின்றது. இத்திட்டத்திற்கு இச்சஞ்சிகை சார்பாக ஊடக அனுசரணை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளிற்கு பெற்றோர்கள், நிலைய நலன்விரும்பிகள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்து விழாவினை சிறப்படைய வைத்ததுடன் இந்நிகழ்விற்கு நிதி முழுமையான நிதி அனுசரணை வழங்கி இந்நிகழ்வினை நடாத்துவதற்கு உதவி புரிந்த அமெரிக்கா பொஸ்ரன் நகரில் வதியும் சிவகாமி அம்மன் வீதியை சேர்ந்த திரு.விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் குடும்பத்தினரை வாழ்த்தியதுடன் இந்நிகழ்வினை சிறப்புற ஒழுங்கமைப்பு செய்த சேவையாளர்களையும் வாழத்திச்சென்றனர்.
இந்நிகழ்வு மூலம் பயனடைந்த பாடசாலைகள் மாணவர்கள் விபரம் வருமாறு:

2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 20 பேர்களிற்கு தலா 3,000 ரூபாய்கள் பணப்பரிசுடன் 350 ரூபாய்கள் பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1. யாழ்ற்ரன் கல்லூரி 8 மாணவர்கள்
2. வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை 6 மாணவர்கள்
3. சுப்பிரமணியம் வித்தியாசாலை 1 மாணவர்
4. ஊரி அ.மி.த.க.பாடசாலை 2 மாணவர்கள்
5. மெய்கண்டான் வித்தியாலயம் 1 மாணவர்
6. காரை மத்தியை சேர்ந்த அயலூர் பாடசாலை மாணவர்கள் 2

அத்துடன் 2017ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளிற்கு மேல் பெற்ற 100 மாணவர்களுக்கு தலா 250 ரூபாய்கள் மதிப்புள்ள கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

1. யாழ்ற்ரன் கல்லூரி 19 மாணவர்கள்
2. சுப்பிரமணியம் வித்தியாசாலை 17 மாணவர்கள்
3. மெய்கண்டான் வித்தியாசாலை 8 மாணவர்கள்
4. வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை 13 மாணவர்கள்
5. ஊரி அ.மி.த.க.பாடசாலை 16 மாணவர்கள்
6. தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம் 9 மாணவர்கள்
7. வியாவில் சைவ வித்தியாலயம் 1 மாணவர்
8. வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை 10 மாணவர்கள்
9. வேரப்பிட்டி கணேசா வித்தியாசாலை 6 மாணவர்கள்
10. பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை 1 மாணவர்

அடுத்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் தரம் 4 மாணவர்கள் மொத்தம் 161 பேர்களிற்கு தலா 390 ரூபாய்கள் பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

1. யாழ்ற்ரன் கல்லூரி 30 மாணவர்கள்
2. சுப்பிரமணியம் வித்தியாசாலை 17 மாணவர்கள்
3. ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம் 10 மாணவர்கள்
4. மெய்கண்டான் வித்தியாலயம் 08 மாணவர்கள்
5. வலந்தல தெற்கு அ.மி.த.க.பாடசாலை 21 மாணவர்கள்
6. வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை 14 மாணவர்கள்
7. ஊரி அ.மி.த.க.பாடசாலை 22 மாணவர்கள்
8. தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம் 8 மாணவர்கள்
9. சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் 8 மாணவர்கள்
10. வியாவில் சைவவித்தியாலயம் 5 மாணவர்கள்
11. பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை 3 மாணவர்கள்
12. வேரப்பிட்டி கணேசா வித்தியாலயம் 15 மாணவர்கள்

 

மேலும் ஒவ்வொரு மாதமும் ‘ஒளி அரசி’ மாதாந்த குடும்ப சஞ்சிகை காரைநகரில் உள்ள அனைத்து சனசமூக நிலையங்கள் மற்றும் நூல் நிலையங்கள் உட்பட 20 இடங்களிற்கு மாதாந்தம் வழங்குவுதற்கும் அனுசரணையாளர் ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் மாதவி சிவலீலனின் இமைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் 11.11.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது!

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் மாதவி சிவலீலனின் இமைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் 11.11.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.


காரைநகர் இளைஞர் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தோழமை அறக்கட்டளையின் ஆரம்ப வைபவமாக 2017 ஆம் ஆண்டிற்கான தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.

காரைநகர் இளைஞர் சமுதாயத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தோழமை அறக்கட்டளையின் ஆரம்ப வைபவமாக 2017 ஆம் ஆண்டிற்கான தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழகத்தின் கணித புள்ளிவிபரவியல் பேராசிரியரும் தகவல் தொழிநுட்பவியல் பீடாதிபதியுமான சிவகொழுந்து சிறி சற்குணராசா கலந்து சிறப்பித்தார்.

Video

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் காணொளி!

மரண அறிவித்தல், திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர் (மருதடிப் பிள்ளையார் கோவிலடி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

                    மரண அறிவித்தல்

               திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர்

 

தோற்றம் : – 1957.07.20                                                    மறைவு :- 2017.11.10

காரைநகர் மருதடிப் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி சிவபாதவிருதயர் அவர்கள் 10.11.2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவபாதவிருதயரின் (ஓய்வு பெற்ற ஆசிரியர் ) அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் நாகம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் இராசம்மாவின் அருமை மருமகளும், சிவகௌரி, சிவகாந்தனின் பாசமிகு தாயாரும், சசிவர்ணாவின் அன்பு மாமியாரும், ஹீசஞ்சயின் பாசமிகு பேத்தியும், சரோஜினிதேவி, தனலக்‌ஷமி, கமலாதேவி, நகுலாதேவி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், மங்கையர்க்கரசி, புனிதவதி, சுந்தரமூர்த்தி, அருணந்தி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் சனிக்கிழமை ( 11.11.2017 ) காலை 10:00 மணியளவில் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை ( 12.11. 2017 ) காலை 7:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று 10:00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்
குடும்பத்தினர்
011-94-77-897-5189.

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் நினைவேந்தலும் மாதவி சிவலீலனின் இமைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழாவும் 11.11.2017 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது!

காரைநகர் தங்கோடை புளியங்குளம் திருவருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 09.11.2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்வுகள்!

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டவராக விளங்குகின்றார்.

பாடவிதானம், இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் ஆசிரியரது செயற்பாடுகள் மற்றும் வரவு இஒழுக்கம் ஆகியன உள்ளிட்ட பல விடயங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வலய மட்டத்தில் முதற்கட்டத் தெரிவுகள் இடம்பெற்றதுடன் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாகாண மட்டத்திலான இறுதித் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் 28-10-2017இல் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது திரு.அரவிந்தனுக்கான நல்லாசிரியர் விருது (குரு பிரதீபாபிரபா) வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு திரு.சண்முகம் அரவிந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அயற்கிராமமான மூளாயைச் சேர்ந்த திரு.சண்முகம் அரவிந்தன் விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழும் பெற்றுக்கொண்டவர். விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரசாயனவியல் பாடத்தையும் சிறப்பாக கற்பித்து மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர். இக்கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்ற அமரர் ஆறுமுகசாமி அமரர் நாகபூசணி தியாகராசா, திருமதி. சிவபாக்கியம் அருமைநாயகம் ஆகியவர்கள் மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

திரு.அரவிந்தன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமை குறித்து கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைவதுடன் திரு.அரவிந்தனை பாராட்டி வாழ்த்துகிறது. திரு.அரவிந்தனின் சிறந்த கல்விச் சேவையினால் மாணவர்கள் அடைந்துவரும் பயன்குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், விருது பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோருடன் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.ச. அரவிந்தன் அவர்களும் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டிருந்த கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற காரை இந்துவின் மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சென்ற வாரம் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது செல்வன் கோபிநாத் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கோலம் போடும் மாகாண மட்டத்திலான போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற காரை. இந்துவின் மற்றொரு மாணவி செல்வி அபினோசா கருணாகரன் அவர்களும் இவ்விழாவின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகிய இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.

அதேவேளையில் செல்வன் கோபிநாத்தின் வெற்றிக்கு வழிகாட்டி ஊக்குவித்த கணிதபாட ஆசிரியர் திரு.நாகரத்தினம் கேதாரநாதன் செல்வி அபினோசாவின் வெற்றிக்கு ஊக்குவித்த இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அகியோரையும் பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றி கூறுகின்றது.

OLYMPUS DIGITAL CAMERA

 

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் நவரட்ணம் (கோவளம்,காரைநகர்) (கொழும்பு)

 

                     மரண அறிவித்தல்

                                 திரு ஆறுமுகம் நவரட்ணம்

 

பிறப்பு : 15 ஒக்ரோபர் 1936                                                         இறப்பு : 6 நவம்பர் 2017

 

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நவரட்ணம் அவர்கள் 06.11.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவிகா, கிருபாகரன், தர்மராஜா, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாதேவா, கோமளாதேவி, துஷ்யந்தி, யுகாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகந்தன், வசீகரன், நவினேஷ், அபிமன்யு, அக்‌ஷயன், ஹரிசா, பிரதீகா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:
தேவிகா — இலங்கை
தொலைபேசி: +94112595023
செல்லிடப்பேசி: +94714969267

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/11/2017, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Colombo 00700, Sri Lanka.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Colombo 00700, Sri Lanka
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 02:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors (Pvt) Ltd, Colombo 00700, Sri Lanka.

 

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி!

 

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் -2017

காரைநகர் களபூமி சத்திரந்தை ஞானவைரவர் ஆலயத்தில் 04.11.2017 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற ஐப்பசி பரணி திருவிழா நிகழ்வுகள்!

காரைநகர் புளியங்குளம் திருவருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் தேவஸ்தானம் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 09.11.2017 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது!

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆங்கில தின விழா 31.10.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய திரு கா. குமாரவேலு அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆங்கில பாடத்துறைக்கான தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு ந. பத்மராஜா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், பேச்சு, வினாடி வினா, நாடகம் போன்ற பல நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. அத்துடன் வலய மட்ட ஆங்கில தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழெ காணலாம்.

 

மரண அறிவித்தல், பொன்னம்பலம் கதிரவேலு (உரிமையாளர் ,லலிதா டெக்ஸ்,யாழ்ப்பாணம், ஶ்ரீ லலிதா பெஷன்,யாழ்ப்பாணம், நியூ லலிதா டெக்ஸ்,வவுனியா ,லலிதா சூ பலஸ்,வவுனியா) ( சின்னாலடி,தங்கோடை,காரைநகர்) ( 194/3 பிறவுண் வீதி,யாழ்ப்பாணம்)

                   

                     மரண அறிவித்தல்

                        பொன்னம்பலம் கதிரவேலு

 மண்ணில்:- 22.04.1934                                                                      விண்ணில்  02.11.2017  

பொன்னாவளை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும்      சின்னாலடி,தங்கோடை,காரைநகரை வசிப்பிடமாகவும் தற்போது 194/3 பிறவுண் வீதி,யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கதிரவேலு         (உரிமையாளர் ,லலிதா டெக்ஸ்,யாழ்ப்பாணம், ஶ்ரீ லலிதா பெஷன்,யாழ்ப்பாணம், நியூ லலிதா டெக்ஸ்,வவுனியா ,லலிதா சூ பலஸ்,வவுனியா)  02.11.2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் வள்ளியம்மையின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையாபிள்ளை வள்ளியம்மையின் அன்பு மருமகனும்,சிவமணியன் பாசமிகு கணவரும்,சிறீஸ்கந்தராஜா (லலிதா டெக்ஸ்,யாழ்ப்பாணம்),சிறீறமணகுமார் (சுவிஸ்லாந்து),சிறீதரன் (லலிதா டெக்ஸ், வவுனியா ),மஞ்சுளா (கொழும்பு),சுஜா (கொழும்பு ) ஆகியோரின். பாசமிகு தந்தையும், அன்புமலர்,சுதர்சினி,வசந்தி,ஜெயசீலன்(General Manager of Drive one Pvt Ltd),தணிகைவாசன் ( சிவசுப்பிரமணியம் அன் கோ, கொழும்பு ) ஆகியோரின் அன்பு மாமனாரும், சாரங்கா( சுண்டுக்குளி மகளிர் கல்லூரி ,யாழ்ப்பாணம்) அபிநயா (Angel International school,மானிப்பாய்),யதுர்ஷனா(Lake land International American School),அபிலாஸ்,துளசியா (சுவிஸ்லாந்து), ரிஷிகா,பரணிகா,லக்‌ஷாயினி (சைவமங்கையர் வித்தியாலயம்,கொழும்பு),ஹரிகரன்,ஜெகா (ESKOLA International School),ஆகியோரின் பேரனும், தியாகலக்சுமி,பரமேஸ்வரி,நித்தியலக்சுமி,ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம்,சுந்தரலிங்கம்,நடராஜா,மார்க்கண்டு, பரஞ்சோதி,மற்றும் கதிரவேலு,அன்னபூரணம்,பாலசுப்பிரமணியம்,சண்முகராஜா ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற உமாதேவி மற்றும் தனபாக்கியம், நேசரத்தினம், விமலாதேவி, அன்னபாக்கியம் ஆகியோரின் சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் 194/3 பிறவுண் வீதி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 தகவல்:              

குடும்பத்தினர்.

தொலைபேசி:

  0775632013

   0776617935

   0212229832

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 25.10.2017 நடைபெற்ற சூரன்போர் காட்சிகள்!

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம். என்கின்ற இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

காரை வசந்தம் தரும் சுகந்தம்‘ என்கின்ற இக்கட்டுரை 2015ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘காரை வசந்தம்’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் காரையின் சொந்தங்கள் கூடிக் களிக்கின்ற மற்றுமோர் பெரு விழாவான காரை வசந்தம் கலை விழாவின் சிறப்புக்களை பொதித்து வைத்துள்ள இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

 

 

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம்.

-கனக. சிவகுமாரன்-

அலையெறிந்து ஆர்ப்பரிக்கும் கடல்சூழ் நன்நகரான காரைநகரானது எந்தக் கிராமத்திற்கும் இல்லாத சிறப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற எமது கிராமத்தின் பாரிய இடப்பெயர்வானது ஊரின் அனைத்து வளங்களையும் பாதித்தது. ஊரின் வனப்பும் பொலிவிழந்து போனது.

எனினும் பிறந்த மண்மீது ஆழமான பற்றினைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்த காரைநகர் மக்களது உணர்வுமிக்க தொடர் செயற்பாடுகளினால் கிராமம் துரிதகதியில் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு அதன் புகழும் பெருமையும் என்றுமில்லாதவாறு சர்வதேசமெங்கும் பறைசாற்றப்பட்டு இத்துணை சிறப்பு மிக்க கிராமமா காரைநகர்? என பலரும் வியக்கும் வண்ணம் சிறப்புற்றிருக்கின்றது. இவ்வூரில் நாம் பிறந்தோம் என்ற உணர்வும் உரிமையும் எம்மைப் பேருவகை கொள்ளவைக்கின்றது.

புலம்பெயர் காரை அமைப்புக்களினதும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஊர்ப்பற்றும் சமூக உணர்வும் மிக்க தனவந்தர்களினதும் உதவிகள் ஊருக்குக் கிடைக்கின்றன. அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான பணிகள் இவ்வுதவிகளால் முன்பிருந்ததைக் காட்டிலும் வளமும் வனப்பும் மிக்க முன்னுதாரணமான கிராமமாக மாறி வருவதைக் கட்டியம் கூறுவதாகவுள்ளன.

மலேசியா நாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்ற காரைநகர் மக்கள் 1919ஆம் ஆண்டு Karai Union Of Malaya என்ற அமைப்பினை நிறுவி காரையின் மேம்பாட்டிற்கு உதவினார்கள். தொண்ணூற்றாறு ஆண்டுகளிற்கு முன்பாகவே புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து தாம் பிறந்த ஊருக்கு உதவி முன்னுதாரணமாகத் திகழ்ந்தோர் காரைநகர் மக்களாகவே இருக்கமுடியும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் தம்மண்ணை மறவாது அதற்கு உதவவேண்டும் என்கின்ற வரலாற்றுக் கடமை உண்டு என்பதையும் இச்செய்தி உணர்த்துகின்றது.

அக்காலகட்டத்தில் காரைநகர் இருந்த நிலைமை வேறு தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. இடர்மிகுந்த காலகட்டத்தில் நிம்மதியிழந்து நம்பிக்கையற்ற அவலவாழ்வு வாழ்ந்து பலவற்றையும் இழந்துவிட்ட உறவுகளிற்கு அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான மனோ பலத்தினை புலம்பெயர்ந்த அமைப்புக்களும் ஊர்ப் பற்றாளர்களும் வழங்கி வருகின்ற உதவிகளும் ஊக்கிவிப்புக்களும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் சேவையுள்ளம் கொண்ட பெரியோர்களினால் ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கம் என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 1992ஆம் ஆண்டு கனடா-காரை கலாசார மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாயக உறவுகளுக்கு உதவும் சேவையில் முழுமனதோடு ஈடுபட்ட இவ்வமைப்பு, தன் பணியில் 25ஆண்டுகளைக் கடந்து 26வது ஆண்டில் தடம் பதிக்கின்றது.

காரைநகரில் வாழும் உறவுகளிற்கு உதவுவதுடன் மட்டுமல்லாது கனடாவில் வாழும் காரை மக்களுக்கிடையேயான உறவினைப் பேணி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகின்றது. எமது கிராமத்திற்கே உரித்தான தனித்துவம் மிக்க கலை கலாசார சமய பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பேணி எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லக்கூடியவாறான செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த 25 ஆண்டுகளாக கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்து வரும் அளப்பரிய பணிகள் அனைவராலும் விதந்து பாராட்டப்படக்கூடியதாகும்.

மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வருடாந்த நிகழ்வு செயற் திட்டங்களுள் ‘காரை வசந்தம்’ என்கின்ற சிறப்பு மிக்க பெரும் கலைவிழா முதன்மை பெற்று விளங்குகின்றது.

காரைநகர் மக்களின் கலை ஈடுபாடும் பங்களிப்பும் அக்கிராமத்திற்கு பெரும் புகழ் சேர்ப்பனவாகவுள்ளன. கலைத்துறையில் காரை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகின்ற சாதனைகள் வரலாற்றுப் பதிவாகி வருகின்றன. காரைநகர் மக்கள் தமிழ்க் கலை உலகிலே பதித்த, பதித்து வருகின்ற தடங்கள் அவர்களின கலை ஆற்றலிற்கும் கலை உணர்விற்கும் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 16வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற ‘காரை வசந்தம்’ என்கின்ற பெரும் கலைவிழா ரொறன்ரோவில் ஊர்களின் பெயரால் நடாத்தப்பட்டு வருகின்ற நூற்றுக்கணக்கான கலைவிழாக்களுள் பிரபல்யம் மிக்க தலைசிறந்த ஒன்றாக மிளிர்வடைந்துள்ளது.

வளர்ந்து வருகின்ற காரையின் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது திறமைகளை வளர்ப்பதற்குக் காரை வசந்த அரங்கு களம் அமைத்துக் கொடுப்பதுடன் பல திறமை மிக்க கலைஞர்களை அறிமுகம் செய்து அவர்களிற்கும் அவர்களது படைப்புக்களிற்கும் மதிப்பளிக்கின்ற அரங்காகவும் அமைந்து விளங்குகின்றது. ரொறன்ரோவில் பல நவீன வசதிகளுடன் அமைந்த முதற்தர கலாசார மண்டபத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டு வருகின்ற இப்பெருவிழாவைக் கண்டு களிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்ற காரைநகர் மக்களால் மண்டபம் நிரம்பி வழிவது விழாவின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது. கலை வாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி வருகின்ற இவ்விழா காரைநகர் மக்களிற்கும் கலா ரசிகர்களிற்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஊர் உணர்வோடும் கலை உணர்வோடும் காரை மக்கள் சங்கமித்து வருகின்ற இவ்விழா அவர்களை காரை மண் பற்றி சிந்திப்பதற்கு தூண்டுவதாகவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதி வளத்தினை ஏற்படுத்துகின்ற உறுதியான ஊற்றாகவும் அமைந்து விளங்குகின்றது.

இவ்விழா ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் காரைச் சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித் திறன் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களிற்கும் பங்குபற்றியவர்களிற்கும் இவ்வரங்கில் பரிசளித்து வருகின்றமையும் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறும் சிறுவர்கள் இவ்வரங்கில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கின்ற முறைமையும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வம் ஏற்பட வழி செய்கின்றன.

நீண்ட காலமாகக் கனடாவில் வாழும் எமது பிள்ளைகள் எமது மொழி, கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் அறியாமலே கனடா நாட்டுக் கலாசார நீரோட்டத்தில் கலந்துகொள்வது தவிர்க்க முடியாதது போல் தோன்றினாலும் எமது கலாசாரத்தையும் மொழியையும் தக்கவைக்கும் முயற்சியில் ‘காரை வசந்தம்’ கலைவிழா ஆற்றிவரும் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாகும்.

கனடாவின் நான்கு பருவ காலங்களுள் ஒன்றான இலைதளிர் காலமே வசந்த காலம் எனப்படுகின்றது. கடும் குளிர்காலம் முடிவடைந்து மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நிலவுவதே வசந்தமாகும். இந்தப் பருவ வசந்தமும் எமது ஊரும் இணைந்து அனைவரையும் வசீகரிக்கின்ற அழகிய பெயராக மலர்ந்த ‘காரை வசந்தம்’ கலை விழாவினை வசந்த காலத்தில் கொண்டாடுவதே பொருத்தமானதாக அமையும் என்பதுடன் அதனை ஏன் குளிர்காலத்தில் கொண்டாட வேண்டும்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்படுவதும் உண்டு. உண்மையில் வசந்தம் என்கின்ற பருவத்தைக் கொண்டாடாது அதன் பண்புக் கூறுகளாக விளங்கும் பொலிவு, உற்சாகம், மகிழ்ச்சி, பூரிப்பு, குதூகலம் ஆகியனவே முதன்மைப்படுத்தப்படுகின்றன. வசந்த காலத்தில் பெறுகின்ற சுக அனுபவத்தினைக் குளிர்காலத்தில் கொண்டாடப்படுகின்ற ‘காரை வசந்தம்’ மூலம் காரை மக்கள் பெற்று இன்புறுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

 

கனடாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தினாலும் தரம் மிக்க சிறந்த கலை விழா எனப் பதிவுசெய்யப்பட்ட ‘காரை வசந்தம்’ குறித்து கனடாவின் முன்னணி வாராந்தப் பத்திரிகையான ‘கனடா உதயன்’, ‘கடும் குளிரை விரட்டியடித்த காரை வசந்தம்’ எனத் தலைப்பிட்டு ஒரு முறை விமர்சனம் வெளியிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது பொருத்தமானதாகும்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாகக் ‘காரை வசந்தம்’ என்ற சஞ்சிகை ஒன்றும் வரலாற்று ஆவணமாக விழா ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருகின்றது. தொன்மை மிக்க காரைநகரின் வரலாற்றுப் பெருமைகள் கலை, கலாசாரம், கல்வி, சமயம், பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் காரைநகர் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய ஆக்கங்களையும் காலவோட்டத்திற்கு ஏற்ப சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியதான பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் தாங்கிய சிறந்த வரலாற்று ஆவணமாகவும் தமிழ் வாசனையையும், காரை மண்ணின் வாசனையையும் நுகருவதாகவும் இக் ‘காரை வசந்தம்’ சஞ்சிகை அமைந்துள்ளது. படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஊக்கிவித்து மேம்படுத்துகின்ற களமாகவும் இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது. அத்துடன் காரைநகர் சார்ந்த சமய சமூக கல்வி கலாசார அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கலைஞர்கள், ஊர்ச் சான்றோர்கள் வழங்கி வருகின்ற வாழ்த்துச் செய்திகள் எழுச்சியை ஏற்படுத்தி வலுச்சேர்ப்பனவாகவுள்ளன. மன்றப் பணிகளிற்கு உதவிடவேண்டும் என்ற நல்நோக்குடன் விளம்பரங்களை வழங்கி வரும் வர்த்தகத்துறை சார்ந்தோர் இச்சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காரைச் சிறார்கள் உள்ளிட்ட அனைத்து காரைநகர் மக்கள் நெஞ்சங்களிலும் நிலைத்து அவர்கள் உச்சரிக்கின்ற ஓரு சொல்லாக ‘காரை வசந்தம்’ என்ற நாமம் உள்ளது. காரைநகர் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வசீகரிக்கின்ற சிறந்த கலை நிகழ்வுகளை கண்டு களிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் வெளியிடத்தைச் சேர்ந்த பலரும் கலையுணர்வுடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

காரைநகர் மக்களின் அடையாளம் ‘காரை வசந்தம்’ என்று கூறுமளவிற்கு இச்சொல் அனைவர் நெஞ்சங்களிலும் வியாபித்து நிற்கின்றது. அவ்வப்போது அமையப்பெற்று வருகின்ற நிர்வாகங்களின் செயற்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க உழைப்பு, கலைஞர்களின் உற்சாகமான பங்களிப்பு, அனுசரணையாளர்கள் விளம்பரதாரர்கள் ஆகியோரின் பேருதவி, காரைநகர் மக்கள் மற்றும் கலாரசிகர்களின் அமோக ஆதரவு என்பவற்றின் இணைந்த செயற்பாட்டின் விளைவே காரை வசந்தத்தின் வெற்றியின் இரகசியமாகும்.

காரை வசந்தத்தின் சிறப்பிற்கும் பொலிவிற்கும் நிறைவான பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. விளம்பரப்படுத்தப்பட்ட நேரத்திற்குப் பதிலாக சில மணித்துளிகள் தாமதித்த நிகழ்ச்சிகளின் ஆரம்பமும் இதன் காரணமாகப் பின்தள்ளப்பட்டு இடம்பெறும் இறுதி நிகழ்சியின்போது ரசிகர்கள் மண்டபத்திலிருந்தது கலைந்து செல்லுதலும் அவ்வப்போது நிகழும் குறைபாடுகளாகும். ஒரு சில சந்தர்ப்பங்களில் நேரப் பற்றாக்குறை காரணமாக இறுதி நிகழ்வு இடம்பெறாமல் போனதால் படைப்புக்களைத் தயார் செய்து வந்த கலைஞர்கள் ஏமாற்றமடைந்தமை துரதிஷ்டவசமானதாகும். இவற்றினை நீக்கி வைப்பதில் ஏற்பாட்டாளர்களுடன் ரசிகர்களும் ஒத்துழைக்கவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டு செயற்பட்டால் கரையிலா ‘காரை வசந்தத்தின்’ தரம் மேலும் மேன்மையுற்று கரை புரண்டோடும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

மூன்றாம் வருட நினைவேந்தல் அமரர் சுப்பிரமணியம் உருத்திரர்

மூன்றாம் வருட நினைவேந்தல்

அமரர் சுப்பிரமணியம் உருத்திரர்

மண்ணில்                                                                                                                            விண்ணில்
16.11.1962                                                                                                                                  30.10.2014

நீங்கள் பிறந்த போது அன்னை மகிழ்ந்தார். நீங்கள் மாலையிட்ட போது மனைவி மகிழ்ந்தார். உங்கள் மழழைகள் அப்பா என்ற போது நீங்கள் மகிழ்ந்தீர்கள்.

மனமெல்லாம் மகிழ்ச்சி பகிர்ந்து விட்டு பறந்து தான் சென்றீர்களோ!
மண்ணில் மலர்ந்த மனிதரெல்லாம் மடிவது இயற்கையின் நியதி ஆனாலும் இத்தனை அவசரபயணம் ஏனோ?

இருமனம் ஒருமனமாகி மலர்ந்த மண வாழ்க்கை போதவில்லை எங்களுக்கு ஆனாலும் போக விரைந்தீரே.

நினைவுகளை நிரந்தரமாக்கி
நெஞ்சமதை நிறைத்துவிட்டு
நீங்கள் மட்டும் நீங்கி விட்டீர்களே.
இது தான் விதியா?

உங்கள் நினைவுகள் நெஞ்சத்தை விட்டு அகலாது——————-
உங்கள் ஆத்மா சாந்தியடைய வாரிவளவு கற்பக விநாயகரை துதிக்கின்றோம்

     இங்ஙனம்
மனைவி, பிள்ளைகள்

Video

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை ஒன்றுகூடல் 2017 காணொளி!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- மூன்று திருக்குறள் மனனப் போட்டிகளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- மூன்று
திருக்குறள் மனனப் போட்டிகளின் முடிவுகள்.

திருக்குறள் மனனப் போட்டிகளில் அ. ஆ. ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் எண் மூன்று திருக்குறள் மனனப் போட்டிகள் கடந்த 10-09-2017 அன்று ஞாயிறு காலை திருக்குறள் மனனப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான முன்னாள் அதிபர் கலாபூஷணம் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களது நெறிப்படுத்தலில் மேற்படி இரு பிரிவுகளுக்குமாக இடம்பெற்றன.

170 மாணவ மாணவியரின் பங்கேற்புடனும் 9 நடுவர்களின் கணிப்பீட்டுப் பணியுடனும் இப்போட்டிகள் மிகவும் களைகட்டிய நிலையில் இடம்பெற்றன. திருக்குறள் மனனப் போட்டிகளை இவ்வாண்டு மிக நேர்த்தியா ஒழுங்கு செய்த மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினரான முன்னாள் அதிபர் கலாபூஷணம் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.

திருக்குறள் மனனப் போட்டிகள் ஆரம்பப் பாடசாலை மாணாக்கருக்காக மட்டும் ஒழுங்கு செய்யப் பட்டதால் சிறார்களை ஊக்குவிக்கு முகமாக விசேட பரிசுத்திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்களும் சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படும்.

இரு பிரிவுகளிலும் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அ. பிரிவு (தரம் 02 – 03)

அதிகாரம்- அன்புடமை

இல        நிலை                             பெயர்                          தரம்                                                       பாடசாலை

1       முதலாமிடம்                    செ. கனிஷ்கா               02                                   ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்
2       இரண்டாமிடம்                அ. ஐஸ்வினி                  02                                             சுப்பிரமணிய வித்தியாசாலை
3        மூன்றாமிடம்                    ச. கிருசனா                  03                                           சுப்பிரமணிய வித்தியாசாலை
4        மூன்றாமிடம்                   க. கஜரூபன்                  03                                   காரை. மெய்கண்டான் வித்தியாலயம்
5        நான்காமிடம்                  ம. பவித்ரன்                    03                                                      யாழ்ற்ரன் கல்லூரி
6        நான்காமிடம்                  சி. நிரோஜா                   03                                                      யாழ்ற்ரன் கல்லூரி
7        ஐந்தாமிடம்                    சி. நிகேதனா                   02                                                      யாழ்ற்ரன் கல்லூரி

 

அ. பிரிவில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சிறப்புப் பரிசில்கள் பெறவிருப்போர்

இல              பெயர்                      தரம்                                                       பாடசாலை

1               வி. அபிராமி                  02                          சுப்பிரமணிய வித்தியாசாலை
2               சி. அபிநயா                   02               வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை
3                கி. ஆரவி                        03                         சுப்பிரமணிய வித்தியாசாலை
4                பா. சரூன்                      02                                     யாழ்ற்ரன் கல்லூரி
5                 ச. மயூரன்                     02                                     யாழ்ற்ரன் கல்லூரி
6                யோ. கஜானி                02                        காரை. ஊரி அ.மி.த.க. பாடசாலை
7              சோ. கம்சிகா                 02                   சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
8               த. சாதுஷன்                   02                            காரை. ஊரி அ.மி.த.க. பாடசாலை
9               தி. மிதுஷன்                   02                                         யாழ்ற்ரன் கல்லூரி
10             ப. சுஜாதா                       02                   வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
11            செ. ரடீஸ்வரன்               03                            வியாவில் சைவ வித்தியாலயம்

 

ஆ. பிரிவு (தரம் 04 – 05)

அதிகாரங்கள்: இனியவை கூறல் மற்றும் வாய்மை

இல      நிலை                        பெயர்                     தரம்                                                        பாடசாலை

1       முதலாமிடம்          சி. சீராளன்                                                     வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை
2       இரண்டாமிடம்      ச. சயந்தா                     04                               வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
3        இரண்டாமிடம்      க. அபிஷானி              05                              வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
4        மூன்றாமிடம்        ரூ. சோபிதன்               04                       தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்
5        நான்காமிடம்        சி. தனுசினி                  05                                                 யாழ்ற்ரன் கல்லூரி
6        ஐந்தாமிடம்           சி. பவித்திரா                04                                                  யாழ்ற்ரன் கல்லூரி

 

ஆ. பிரிவில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சிறப்புப் பரிசில்கள் பெறவிருப்போர்

இல              பெயர்                                               தரம்                                                       பாடசாலை

1               ச. தேனுஜா                                           05                                        வியாவில் சைவ வித்தியாலயம்
2               ப. துவாரகா                                         05                              வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை
3               ம. தாரணி                                            04                                                   யாழ்ற்ரன் கல்லூரி
4              யோ. கபிசாந்                                       05                                           சுப்பிரமணிய வித்தியாசாலை
5               நி. கோபிஷன்                                     05                                       காரை. ஊரி அ.மி.த.க. பாடசாலை
6                ச. கஜலக்சுமி                                      04                                            சுப்பிரமணிய வித்தியாசாலை
7               மோ. நிவேதினி                                   04                                                      யாழ்ற்ரன் கல்லூரி
8                த. மதுசன்                                            05                                          சுப்பிரமணிய வித்தியாசாலை
9               செ. ரிஷாந்தன்                                    05                                          சுப்பிரமணிய வித்தியாசாலை
10              க. ஹரிஸ்காந்                                     04                                     காரை. மெய்கண்டான் வித்தியாலயம்
11              ச. ரமணன்                                           04                          தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்
12              ச. மதிவதனி                                        05                                       காரை. மெய்கண்டான் வித்தியாலயம்

 

                                                                                                            நன்றி

                                                                                    “ஆளுயர்வே ஊருயர்வு”.
                                                                “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

 

                                                                                                                                                            இங்ஙனம்
                                                                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                        சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                         24 – 10 – 2017

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 23/10/2017 அன்று இடம்பெற்ற ஐப்பசி மாத விநாயகர் சதுர்த்தி திருவிழா நிகழ்வுகள்!

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்!

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்

கனடா வாழ் காரைநகர் மக்களின் வரலாற்று பெருவிழாவான காரை வசந்தம் வழமைபோல் இம்முறையும் கோலாகலமாக நவம்பர் 4, 2017 மாலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் தேவைப்படுமிடத்து ஒழுங்கு செய்து கொடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து வசதிகள் Brampton /Mississauga, Markham /Stouffville, Ajax /Pickering மற்றும் Scarborugh பகுதிகளுக்கு உட்பட்ட அனைவரும் விழாவை கண்டுகளித்து செல்லும் வண்ணம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு மன்ற மின்னஞ்சல்: Karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

                                                                   நன்றி

                நிர்வாகசபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.

இதற்கமைய இக்கண்காட்சி காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இத்துறை சார்ந்த ஆசிரியர்களினதும் வலயக் கல்வி அலுவலர்களினதும் முழுமையான ஒத்துழைப்புடனும்; வெகு சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

சென்ற 17-10-2017 செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கணித விஞ்ஞான ஆய்வுகூடத்தில் காலை 9.00மணிக்கு அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்த இக்கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியையும் ஊட்டப்பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளிப் பள்ளிக்கூடம்)பாடசாலையின் அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

கல்லூரி மாணவர்களின் மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறைத் திறமையினை வெளிக்கொணர்ந்ததுடன் அவர்களின் செய்முறை அறிவினையும் மேம்படுத்த உதவிய இக்கண்காட்சியை அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பயன்பெற்றனர்.

இக்கண்காட்சி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தியாகத் திறன் வேள்வி 2017 திறன் எண்- ஐந்து பொது அறிவு வினாடி-வினாப் போட்டிகளின் முடிவுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
தியாகத் திறன் வேள்வி 2017
திறன் எண்- ஐந்து
பொது அறிவு வினாடி-வினாப் போட்டிகளின் முடிவுகள்.

பொது அறிவு வினாடி-வினாப் போட்டிகளின் அ. ஆ. ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டிய மாணாக்கர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

தியாகத் திறன் வேள்வி 2017 இன் திறன் எண் ஐந்து:- பொது அறிவு வினாடி வினாப் போட்டிகளின் முதற் சுற்று கடந்த 15-07-2017 அன்று சனிக்கிழமை காலையும் இரண்டாம் சுற்று கடந்த 29-09-2017 வெள்ளிக்கிழமை மாலையும் இடம்பெற்றன.

 

பொது அறிவு வினாடி வினாப் போட்டிகளுக்கான பொறுப்பாளரான ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களது நெறிப்படுத்தலில் மேற்படி இரு பிரிவுகளுக்குமான போட்டிகள் இடம்பெற்றன.

இ. பிரிவில் பங்கு பெற காரை இந்துக்கல்லூரி மாணாக்கர் சிலரே விண்ணப்பித்த படியால் இப்பிரிவுக்கான போட்டிகள் இரத்தாயின.

வெற்றியாளர்களில் முதல் மூன்று மாணாக்கருக்கு பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நான்காம் ஐந்தாம் இடங்களைப் பெற்ற மாணாக்கருக்கு திறமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2017 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபையால் குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2017 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பரிசளிப்பு வைபவம் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

 

                                                                         அ. பிரிவு

நிலை                                பெயர்                                         பெற்ற புள்ளிகள்                                          பாடசாலை
முதலாமிடம்          செல்வி. தனுசா தம்பிராசா                        90                                                  காரை. இந்துக் கல்லூரி
இரண்டாமிடம்      செல்வன். மகேந்திரராசா பானுஜன்       84                                                 காரை. இந்துக் கல்லூரி
மூன்றாமிடம்         செல்வன். முருகதாஸ் சஜீவன்                  79                                                     யாழ்ரன் கல்லூரி
நான்காமிடம்         செல்வி. மயூரிகா செல்வகுமார்               70                                                  காரை. இந்துக் கல்லூரி
ஐந்தாமிடம்            செல்வி. நேசகுமார் ஹரணி                      65                     சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

 

                                                                          ஆ. பிரிவு

நிலை                      பெயர்                                               பெற்ற புள்ளிகள்                                      பாடசாலை
முதலாமிடம்        செல்வி. இ. தமிழினி                                 85                          சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
இரண்டாமிடம்     செல்வி. கீர்த்தனா நந்தகுமார்              80                                                 யாழ்ரன் கல்லூரி
மூன்றாமிடம்        செல்வி. அ. அனுரேகா                             82                          சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
நான்காமிடம்        செல்வன். கு. கஜேந்திரகுமார்              78                                வியாவில் சைவ வித்தியாலயம்

 

                                                                                                           நன்றி

 

                                                                                      “ஆளுயர்வே ஊருயர்வு”.
                                                               “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”.

                                                                                                                                                            இங்ஙனம்
                                                                                                                                 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                                                                          செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                                               மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                                                            சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                                                              22 – 10 – 2017

 

 

Image

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

 

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தின பூர்த்தி பெருவிழா நிகழ்வுகள்!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக 48ம் தின பூர்த்தி பெருவிழா நிகழ்வுகள் மற்றும் முத்தமிழ் பேரவையின் கலை நிகழ்வுகளும் தன்னை சித்தி விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கு அமரர் சதாசிவம் நவரத்தினம் அவர்களின் ஞாபகமாக பரிசில்களும் வழங்கப்பட்டன.

 

 

 

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம் மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

புலமைப் பரிசில் பரீட்சையில தீவக வலயத்தில் வலந்தலை தெற்கு அ.மி.த.க மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடம்
மேலும் 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி
கனடா கலாசார மன்ற நிரந்தர வைப்பு செயற்திட்டத்திற்கும் அதிபர்கள் பாராட்டு

கடந்த வாரம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவி பரமேஸ்வரன் துவாகரா 181 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 30 வீத மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்திபெற்று தீவக வலயப் பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப் புள்ளியைத் தாண்டி கூடிய வீதமான பிள்ளைகள் சித்தியடைந்த பாடசாலையாக பதிவாகியுள்ளது.

இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்த ஆறு மாணவர்களின் விபரம் வருமாறு

பரமேஸ்வரன் துவாரகா (181 புள்ளிகள்)
கம்சன் அபிசாலி (172 புள்ளிகள்)
சரவணபவன் அபிசாயினி (170 புள்ளிகள்)
சிவராசா ரஜீபன் (170 புள்ளிகள்)
திருநீலகண்டசிவம் றஜீவன் (169 புள்ளிகள்)
பூபாலசிங்கம் கபிலன் (157 புள்ளிகள்)

இருபது வருடங்களுக்குப் பின்னர் கடந்த ஜந்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களினால் மீள ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் ஒன்றுடன் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக ஏனைய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு முதற் தடவையாக கடந்த ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் இரு மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இவ்வாண்டு ஆறு மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.
அத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் தமிழ்த்தின மற்றும் ஆங்கிலப் போட்டிகளில் தீவக வலயத்தில் அதி கூடிய இடங்களைப் பெறுவதுடன் மாகாண மற்றும் தேசிய ரீதியிலும் பரிசில்களைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடசாலை மீள ஆரம்பிப்பதற்கு ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே.சதாசிவம்,அன்று வடமாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ப.விக்னேஸ்வரன்,அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் பாடசாலை சமூகம் இவர்களுக்கான நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

 

தெடர்ந்து மேலும் காரைநகர் கோட்டத்தில் சித்தியடைந்த 12 மாணவர்களின் விபரம் வருமாறு.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லுரி கனிஸ்ட பிரிவில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு-

அருமைநாயகம் நேத்ரா (169 புள்ளிகள்)
யோகேஸ்வரன் கலையரசன் (167 புள்ளிகள்)
ராதாகிருஸ்ணன் கீர்த்திகன் (164 புள்ளிகள்)
கிருபானந்தன் டனுசா (162 புள்ளிகள்)
சிவபாலன் கிருத்திகா (160 புள்ளிகள்)
அருள்ராஐh கிறிஸ்ணவி (160 புள்ளிகள்)
பிரபாகரன் தனுசினி (159 புள்ளிகள்)
சிதம்பரநாதன் லக்சனா (157 புள்ளிகள்)

 

 

காரைநகர் ஊரி அ.மி.த.க பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்
மணியழகன் சஜீவன் (167 புள்ளிகள்)
நிசாந்தன் கோபிஷன் (164 புள்ளிகள்)

 

 

சுப்பிரமணிய வித்தியாலயம் மாணவன் எஸ்.பிரசன்னா 169 புள்ளிகள்

 

 

காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய மாணவன் சண்முகராசா பவித்திரன் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

 

 

மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்ற நோக்குடனும் ஆரம்பப் பாடசாலைகளின் கற்பித்தல் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கனடா காரை கலாசார மன்றத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் வைப்பிடப்பட்ட நிரந்தர வைப்பு நிதியின் வட்டிப்பணத்தில் குறிப்பிட்ட ஒரு தொகைப் பணம் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கும் பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மாணவர்கள் பயிற்சியினை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தியதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வருடா வருடம் இந்தச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து மாணவர்களின் கல்வித்தரத்தினை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிபர்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை, ஊரி அ.மி.த.க பாடசாலை, யாழ்ற்ரன் கல்லுரி மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் போற்றுதற்குரிய நிரந்தர வைப்புத் திட்டத்திற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தீவகக் கல்வி வலயம்,வேலணை. காரைநகர் கோட்ட தரம் 5 புள்ளிப் பகுப்பாய்வு – 2010,2011,2012,2013,2014,2015,2016

 

GR 5

 

 

காரைநகர் பாடசாலைகளின் மாணவர்கள் விபரம் 2016

 

D.s education

 

Older posts «