Tag Archive: CKCA

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

ஜூலை 9, 2017 நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.   மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஆகஸ்ட் 31 கோடைகால ஒன்றுகூடலும்,   ஒக்டோபர் 8 தமிழ்த்திறன்போட்டிகளும்,  நவம்பர் 4 காரை வசந்தம் கலை விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மன்றத்துக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்களுக்கு மத்தியிலும்,  இந்நிகழ்வுகள் சிறப்பாக நடந்தமை வெற்றிப்படிகளுக்கு முதற்படியாகும்.  தலைவர்  காரை வசந்தம் கலை விழாவில் கூறியது போல TD Canada Trust கணக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாதளவில் வைக்கப்பட்டிருந்தது.  தலைவரின்  அதீத செயற்பாட்டால்  வங்கி அதிகாரிகள் வைப்பில் உள்ள தொகையை பயன்படுத்த கூடிய நிலைக்கு கொண்டுவர சம்மதித்து   கையொப்பமிடுமாறு பணித்தார்கள்.  வங்கி அறிக்கையின்படி நவம்பர் 6, 2017 கணக்கை அணுகவும், அதற்கு அடுத்த நாள் நவம்பர் 7, 2017  நிதியை பெறக்கூடியதாகவும் இருந்தது.

அந்த கணக்கில் இருந்து காரைவசந்தம் 2017 நிகழ்ச்சிகளுக்கான சில செலவுகளுக்குரிய  நிதி எடுக்கப்பட்ட துடன் , சுமார் $4500 தொகைப்பணம்    கடந்தகால நிர்வாகத்தினருக்கு மன்றத்தால் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் கையளிக்கபட்டுள்ளன.  மீதமுள்ள பணம் RBC வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா வாழ் காரை மக்களின் தொடர்ச்சியான ஆதரவும்,  ஊக்கமும்  எமது  மண்ணின் பெருமையையும்,  புகழையும்  இப்புலம்பெயர் நாட்டில் இன்னும் பல தலை முறைகளுக்கு இட்டுச் செல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.  இந்த உணர்வை தலை மேற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாகவும், பலமோடும் மன்றத்தை  வழிநடாத்துவோமாக.

மன்றத்தால் வருடம்தோறும்   நடாத்தப்படுகின்ற ஆருத்திரா  அபிஷேகம் இம்முறையும் வழமை போல  ஜனவரி 1, 2018 வெகு சிறப்பாக றிச்மன்ட் ஹில் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  அனைத்து அடியவர்களும் அன்றைய தினம்  கலந்து கொண்டு ஆட வல்லானின்  அருட்கடாட்சங்களை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன்  வேண்டிக்  கொள்கின்றோம்.

நன்றி

தங்கள் பணியில்

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகசபை

 

 

Video

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் காணொளி!

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி!

 

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் -2017

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம். என்கின்ற இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

காரை வசந்தம் தரும் சுகந்தம்‘ என்கின்ற இக்கட்டுரை 2015ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘காரை வசந்தம்’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் காரையின் சொந்தங்கள் கூடிக் களிக்கின்ற மற்றுமோர் பெரு விழாவான காரை வசந்தம் கலை விழாவின் சிறப்புக்களை பொதித்து வைத்துள்ள இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

 

 

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம்.

-கனக. சிவகுமாரன்-

அலையெறிந்து ஆர்ப்பரிக்கும் கடல்சூழ் நன்நகரான காரைநகரானது எந்தக் கிராமத்திற்கும் இல்லாத சிறப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற எமது கிராமத்தின் பாரிய இடப்பெயர்வானது ஊரின் அனைத்து வளங்களையும் பாதித்தது. ஊரின் வனப்பும் பொலிவிழந்து போனது.

எனினும் பிறந்த மண்மீது ஆழமான பற்றினைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்த காரைநகர் மக்களது உணர்வுமிக்க தொடர் செயற்பாடுகளினால் கிராமம் துரிதகதியில் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு அதன் புகழும் பெருமையும் என்றுமில்லாதவாறு சர்வதேசமெங்கும் பறைசாற்றப்பட்டு இத்துணை சிறப்பு மிக்க கிராமமா காரைநகர்? என பலரும் வியக்கும் வண்ணம் சிறப்புற்றிருக்கின்றது. இவ்வூரில் நாம் பிறந்தோம் என்ற உணர்வும் உரிமையும் எம்மைப் பேருவகை கொள்ளவைக்கின்றது.

புலம்பெயர் காரை அமைப்புக்களினதும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஊர்ப்பற்றும் சமூக உணர்வும் மிக்க தனவந்தர்களினதும் உதவிகள் ஊருக்குக் கிடைக்கின்றன. அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான பணிகள் இவ்வுதவிகளால் முன்பிருந்ததைக் காட்டிலும் வளமும் வனப்பும் மிக்க முன்னுதாரணமான கிராமமாக மாறி வருவதைக் கட்டியம் கூறுவதாகவுள்ளன.

மலேசியா நாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்ற காரைநகர் மக்கள் 1919ஆம் ஆண்டு Karai Union Of Malaya என்ற அமைப்பினை நிறுவி காரையின் மேம்பாட்டிற்கு உதவினார்கள். தொண்ணூற்றாறு ஆண்டுகளிற்கு முன்பாகவே புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து தாம் பிறந்த ஊருக்கு உதவி முன்னுதாரணமாகத் திகழ்ந்தோர் காரைநகர் மக்களாகவே இருக்கமுடியும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் தம்மண்ணை மறவாது அதற்கு உதவவேண்டும் என்கின்ற வரலாற்றுக் கடமை உண்டு என்பதையும் இச்செய்தி உணர்த்துகின்றது.

அக்காலகட்டத்தில் காரைநகர் இருந்த நிலைமை வேறு தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. இடர்மிகுந்த காலகட்டத்தில் நிம்மதியிழந்து நம்பிக்கையற்ற அவலவாழ்வு வாழ்ந்து பலவற்றையும் இழந்துவிட்ட உறவுகளிற்கு அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான மனோ பலத்தினை புலம்பெயர்ந்த அமைப்புக்களும் ஊர்ப் பற்றாளர்களும் வழங்கி வருகின்ற உதவிகளும் ஊக்கிவிப்புக்களும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் சேவையுள்ளம் கொண்ட பெரியோர்களினால் ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கம் என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 1992ஆம் ஆண்டு கனடா-காரை கலாசார மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாயக உறவுகளுக்கு உதவும் சேவையில் முழுமனதோடு ஈடுபட்ட இவ்வமைப்பு, தன் பணியில் 25ஆண்டுகளைக் கடந்து 26வது ஆண்டில் தடம் பதிக்கின்றது.

காரைநகரில் வாழும் உறவுகளிற்கு உதவுவதுடன் மட்டுமல்லாது கனடாவில் வாழும் காரை மக்களுக்கிடையேயான உறவினைப் பேணி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகின்றது. எமது கிராமத்திற்கே உரித்தான தனித்துவம் மிக்க கலை கலாசார சமய பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பேணி எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லக்கூடியவாறான செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த 25 ஆண்டுகளாக கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்து வரும் அளப்பரிய பணிகள் அனைவராலும் விதந்து பாராட்டப்படக்கூடியதாகும்.

மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வருடாந்த நிகழ்வு செயற் திட்டங்களுள் ‘காரை வசந்தம்’ என்கின்ற சிறப்பு மிக்க பெரும் கலைவிழா முதன்மை பெற்று விளங்குகின்றது.

காரைநகர் மக்களின் கலை ஈடுபாடும் பங்களிப்பும் அக்கிராமத்திற்கு பெரும் புகழ் சேர்ப்பனவாகவுள்ளன. கலைத்துறையில் காரை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகின்ற சாதனைகள் வரலாற்றுப் பதிவாகி வருகின்றன. காரைநகர் மக்கள் தமிழ்க் கலை உலகிலே பதித்த, பதித்து வருகின்ற தடங்கள் அவர்களின கலை ஆற்றலிற்கும் கலை உணர்விற்கும் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 16வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற ‘காரை வசந்தம்’ என்கின்ற பெரும் கலைவிழா ரொறன்ரோவில் ஊர்களின் பெயரால் நடாத்தப்பட்டு வருகின்ற நூற்றுக்கணக்கான கலைவிழாக்களுள் பிரபல்யம் மிக்க தலைசிறந்த ஒன்றாக மிளிர்வடைந்துள்ளது.

வளர்ந்து வருகின்ற காரையின் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது திறமைகளை வளர்ப்பதற்குக் காரை வசந்த அரங்கு களம் அமைத்துக் கொடுப்பதுடன் பல திறமை மிக்க கலைஞர்களை அறிமுகம் செய்து அவர்களிற்கும் அவர்களது படைப்புக்களிற்கும் மதிப்பளிக்கின்ற அரங்காகவும் அமைந்து விளங்குகின்றது. ரொறன்ரோவில் பல நவீன வசதிகளுடன் அமைந்த முதற்தர கலாசார மண்டபத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டு வருகின்ற இப்பெருவிழாவைக் கண்டு களிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்ற காரைநகர் மக்களால் மண்டபம் நிரம்பி வழிவது விழாவின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது. கலை வாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி வருகின்ற இவ்விழா காரைநகர் மக்களிற்கும் கலா ரசிகர்களிற்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஊர் உணர்வோடும் கலை உணர்வோடும் காரை மக்கள் சங்கமித்து வருகின்ற இவ்விழா அவர்களை காரை மண் பற்றி சிந்திப்பதற்கு தூண்டுவதாகவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதி வளத்தினை ஏற்படுத்துகின்ற உறுதியான ஊற்றாகவும் அமைந்து விளங்குகின்றது.

இவ்விழா ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் காரைச் சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித் திறன் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களிற்கும் பங்குபற்றியவர்களிற்கும் இவ்வரங்கில் பரிசளித்து வருகின்றமையும் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறும் சிறுவர்கள் இவ்வரங்கில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கின்ற முறைமையும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வம் ஏற்பட வழி செய்கின்றன.

நீண்ட காலமாகக் கனடாவில் வாழும் எமது பிள்ளைகள் எமது மொழி, கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் அறியாமலே கனடா நாட்டுக் கலாசார நீரோட்டத்தில் கலந்துகொள்வது தவிர்க்க முடியாதது போல் தோன்றினாலும் எமது கலாசாரத்தையும் மொழியையும் தக்கவைக்கும் முயற்சியில் ‘காரை வசந்தம்’ கலைவிழா ஆற்றிவரும் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாகும்.

கனடாவின் நான்கு பருவ காலங்களுள் ஒன்றான இலைதளிர் காலமே வசந்த காலம் எனப்படுகின்றது. கடும் குளிர்காலம் முடிவடைந்து மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நிலவுவதே வசந்தமாகும். இந்தப் பருவ வசந்தமும் எமது ஊரும் இணைந்து அனைவரையும் வசீகரிக்கின்ற அழகிய பெயராக மலர்ந்த ‘காரை வசந்தம்’ கலை விழாவினை வசந்த காலத்தில் கொண்டாடுவதே பொருத்தமானதாக அமையும் என்பதுடன் அதனை ஏன் குளிர்காலத்தில் கொண்டாட வேண்டும்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்படுவதும் உண்டு. உண்மையில் வசந்தம் என்கின்ற பருவத்தைக் கொண்டாடாது அதன் பண்புக் கூறுகளாக விளங்கும் பொலிவு, உற்சாகம், மகிழ்ச்சி, பூரிப்பு, குதூகலம் ஆகியனவே முதன்மைப்படுத்தப்படுகின்றன. வசந்த காலத்தில் பெறுகின்ற சுக அனுபவத்தினைக் குளிர்காலத்தில் கொண்டாடப்படுகின்ற ‘காரை வசந்தம்’ மூலம் காரை மக்கள் பெற்று இன்புறுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

 

கனடாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தினாலும் தரம் மிக்க சிறந்த கலை விழா எனப் பதிவுசெய்யப்பட்ட ‘காரை வசந்தம்’ குறித்து கனடாவின் முன்னணி வாராந்தப் பத்திரிகையான ‘கனடா உதயன்’, ‘கடும் குளிரை விரட்டியடித்த காரை வசந்தம்’ எனத் தலைப்பிட்டு ஒரு முறை விமர்சனம் வெளியிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது பொருத்தமானதாகும்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாகக் ‘காரை வசந்தம்’ என்ற சஞ்சிகை ஒன்றும் வரலாற்று ஆவணமாக விழா ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருகின்றது. தொன்மை மிக்க காரைநகரின் வரலாற்றுப் பெருமைகள் கலை, கலாசாரம், கல்வி, சமயம், பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் காரைநகர் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய ஆக்கங்களையும் காலவோட்டத்திற்கு ஏற்ப சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியதான பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் தாங்கிய சிறந்த வரலாற்று ஆவணமாகவும் தமிழ் வாசனையையும், காரை மண்ணின் வாசனையையும் நுகருவதாகவும் இக் ‘காரை வசந்தம்’ சஞ்சிகை அமைந்துள்ளது. படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஊக்கிவித்து மேம்படுத்துகின்ற களமாகவும் இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது. அத்துடன் காரைநகர் சார்ந்த சமய சமூக கல்வி கலாசார அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கலைஞர்கள், ஊர்ச் சான்றோர்கள் வழங்கி வருகின்ற வாழ்த்துச் செய்திகள் எழுச்சியை ஏற்படுத்தி வலுச்சேர்ப்பனவாகவுள்ளன. மன்றப் பணிகளிற்கு உதவிடவேண்டும் என்ற நல்நோக்குடன் விளம்பரங்களை வழங்கி வரும் வர்த்தகத்துறை சார்ந்தோர் இச்சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காரைச் சிறார்கள் உள்ளிட்ட அனைத்து காரைநகர் மக்கள் நெஞ்சங்களிலும் நிலைத்து அவர்கள் உச்சரிக்கின்ற ஓரு சொல்லாக ‘காரை வசந்தம்’ என்ற நாமம் உள்ளது. காரைநகர் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வசீகரிக்கின்ற சிறந்த கலை நிகழ்வுகளை கண்டு களிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் வெளியிடத்தைச் சேர்ந்த பலரும் கலையுணர்வுடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

காரைநகர் மக்களின் அடையாளம் ‘காரை வசந்தம்’ என்று கூறுமளவிற்கு இச்சொல் அனைவர் நெஞ்சங்களிலும் வியாபித்து நிற்கின்றது. அவ்வப்போது அமையப்பெற்று வருகின்ற நிர்வாகங்களின் செயற்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க உழைப்பு, கலைஞர்களின் உற்சாகமான பங்களிப்பு, அனுசரணையாளர்கள் விளம்பரதாரர்கள் ஆகியோரின் பேருதவி, காரைநகர் மக்கள் மற்றும் கலாரசிகர்களின் அமோக ஆதரவு என்பவற்றின் இணைந்த செயற்பாட்டின் விளைவே காரை வசந்தத்தின் வெற்றியின் இரகசியமாகும்.

காரை வசந்தத்தின் சிறப்பிற்கும் பொலிவிற்கும் நிறைவான பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. விளம்பரப்படுத்தப்பட்ட நேரத்திற்குப் பதிலாக சில மணித்துளிகள் தாமதித்த நிகழ்ச்சிகளின் ஆரம்பமும் இதன் காரணமாகப் பின்தள்ளப்பட்டு இடம்பெறும் இறுதி நிகழ்சியின்போது ரசிகர்கள் மண்டபத்திலிருந்தது கலைந்து செல்லுதலும் அவ்வப்போது நிகழும் குறைபாடுகளாகும். ஒரு சில சந்தர்ப்பங்களில் நேரப் பற்றாக்குறை காரணமாக இறுதி நிகழ்வு இடம்பெறாமல் போனதால் படைப்புக்களைத் தயார் செய்து வந்த கலைஞர்கள் ஏமாற்றமடைந்தமை துரதிஷ்டவசமானதாகும். இவற்றினை நீக்கி வைப்பதில் ஏற்பாட்டாளர்களுடன் ரசிகர்களும் ஒத்துழைக்கவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டு செயற்பட்டால் கரையிலா ‘காரை வசந்தத்தின்’ தரம் மேலும் மேன்மையுற்று கரை புரண்டோடும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

Video

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை ஒன்றுகூடல் 2017 காணொளி!

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்!

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்

கனடா வாழ் காரைநகர் மக்களின் வரலாற்று பெருவிழாவான காரை வசந்தம் வழமைபோல் இம்முறையும் கோலாகலமாக நவம்பர் 4, 2017 மாலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் தேவைப்படுமிடத்து ஒழுங்கு செய்து கொடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து வசதிகள் Brampton /Mississauga, Markham /Stouffville, Ajax /Pickering மற்றும் Scarborugh பகுதிகளுக்கு உட்பட்ட அனைவரும் விழாவை கண்டுகளித்து செல்லும் வண்ணம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு மன்ற மின்னஞ்சல்: Karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

                                                                   நன்றி

                நிர்வாகசபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

Image

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

 

Image

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கனடா-காரை கலாச்சார மன்றம் 08.10.2017 அன்று நடாத்திய தமிழ் மொழித்திறன் பண்ணிசை போட்டிகளின் முடிவுகள்!

காரை  கலாச்சார மன்றத்தினால்  இம்முறை நடாத்தப்பட்ட  தமிழ்த்திறன் போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்  விபரம் வருமாறு.

 

                                                                 பேச்சு போட்டி

 

பாலர் பிரிவு

முதலாம் இடம்

இஷானி முரளி

இரண்டாம் இடம்

இளநிலா விஜயகுமார்

 

கீழ்ப் பிரிவு

முதலாம் இடம்

அர்வின் சிவகுமார்

இரண்டாம் இடம்

அபிஸ்னன்  சிவானந்தன்

மூன்றாம் இடம்

பைரவி சிவராசா

 

மத்திய பிரிவு

முதலாம் இடம்

அபிஷன் நந்தகுமார்

இரண்டாம் இடம்

மலரவன் விஜயகுமார்

மூன்றாம் இடம்

ஹிரண்யா பரந்தாமன்

 

மேற்பிரிவு

முதலாம் இடம்

சயந்தன் கணேசலிங்கம்

இரண்டாம் இடம்

ராகுலன் செந்தூரன்

மூன்றாம் இடம்

அபிலாஷ் சிவகுமார்,  ஜெனகன் செந்தூரன்

(இருவர் பெற்றுக் கொள்கின்றனர்)

 

                                                           வாசிப்புப் போட்டி

பாலர் பிரிவு

முதலாம் இடம்

ராகவி சிவானந்தன்

இரண்டாம் இடம்

மாயவன் தேவகுமார்

மூன்றாம் இடம்

யதுஷ்யா  விமலரூபன்

 

கீழ்ப் பிரிவு

முதலாம் இடம்

அர்வின் சிவகுமார்

இரண்டாம் இடம்

அபிஷன்   சிவானந்தன் , பைரவி  சிவராசா

(இருவர் பெற்றுக் கொள்கின்றனர்)

மூன்றாம் இடம்

மனோஜன் தயாபரன்

 

மத்திய பிரிவு

முதலாம் இடம்

அபிஷன் நந்தகுமார்

இரண்டாம் இடம்

மலரவன் விஜயகுமார்

மூன்றாம் இடம்

ஹிரண்யா பரந்தாமன்

 

மேற்பிரிவு

முதலாம் இடம்

சயந்தன் கணேசலிங்கம்

இரண்டாம் இடம்

ஜெனகன் செந்தூரன்

மூன்றாம் இடம்

ராகுலன் செந்தூரன் , மதுமிதா தேவகுமார்

(இருவர் பெற்றுக் கொள்கின்றனர்)

 

அதிமேற்பிரிவு

முதலாம் இடம்

தனுஷன் மகாராஜா

இரண்டாம் இடம்

விஷ்வா பிரமேந்திரதீசன்

 

                                                      எழுத்துப் போட்டி

 

பாலர் பிரிவு

முதலாம் இடம்

மயூரா சோதீஸ்வரன்

இரண்டாம் இடம்

இளநிலா விஜயகுமார்

மூன்றாம் இடம்

ராகவி சிவானந்தன்

 

கீழ்ப் பிரிவு

முதலாம் இடம்

இலக்கியா விஜயகுமார், அபிஸ்னன்  சிவானந்தன் , பைரவி சிவராசா

(மூவர் பெற்றுக் கொள்கின்றனர்)

இரண்டாம் இடம்

சுபாங்கி மகாராஜா, மனோஜன்     தயாபரன்  , அர்வின் சிவகுமார்

(மூவர் பெற்றுக் கொள்கின்றனர்)

மூன்றாம் இடம்

ருக்க்ஷியா விமலரூபன்

 

மத்திய பிரிவு

முதலாம் இடம்

அபிஷன்  நந்தகுமார்

இரண்டாம் இடம்

ஹரணி பரந்தாமன்

மூன்றாம் இடம்

ஹிரண்யா பரந்தாமன்

 

மேற்பிரிவு

முதலாம் இடம்

தீபிகா பிரமேந்திரதீசன்

இரண்டாம் இடம்

சயந்தன் கணேசலிங்கம்

மூன்றாம் இடம்

அபிலாஸ் சிவகுமார்

 

அதிமேற்பிரிவு

முதலாம் இடம்

தனுஷன் மகாராஜா

இரண்டாம் இடம்

விஷ்வா பிரமேந்திரதீசன்

மூன்றாம் இடம்

ஹரணி தயானந்தராஜா

 

                                                 பண்ணிசைப் போட்டி

 

பாலர் பிரிவு

முதலாம் இடம்

ராகவி சிவானந்தன்

இரண்டாம் இடம்

இஷானி முரளி

மூன்றாம் இடம்

இளநிலா விஜயகுமார்

 

கீழ்ப் பிரிவு

முதலாம் இடம்

ராகவி முரளி

இரண்டாம் இடம்

அர்வின் சிவகுமார்

மூன்றாம் இடம்

பைரவி சிவராசா

 

மத்திய பிரிவு

முதலாம் இடம்

சுருதி பிரசன்னா

இரண்டாம் இடம்

அபிஷன் நந்தகுமார்

மூன்றாம் இடம்

அன்ஜனன் சிவகுமார்

 

மேற்பிரிவு

முதலாம் இடம்

ராகவி  சிவராசா

இரண்டாம் இடம்

பிரணவி பஞ்சலிங்கம்

மூன்றாம் இடம்

சயந்தன் கணேசலிங்கம்

 

அதிமேற்பிரிவு

முதலாம் இடம்

மிதுஷா ஸ்ரீவர்ணசூரியா

இரண்டாம் இடம்

நிலுக்சன்  தயானந்தராஜா

மூன்றாம் இடம்

மீரா ஸ்ரீவர்ணசூரியா

Image

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

தமிழ்த்திறன் போட்டிகள் தொடர்பான அறிவித்தல்

 

தமிழ்த்திறன் போட்டிகள் தொடர்பான அறிவித்தல்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால்  வழமைபோல வருடம்தோறும் நடாத்தப்படுகின்ற தமிழ்த்திறன் போட்டிகள் இம்முறையும்  October 8, 2017 ஞாயிற்றுக்கிழமை Scarborough Civic Center  இல் காலை 8.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ளன. இப் போட்டிகளில் பங்குபற்றும் சிறுவர், சிறுமியர் அனைவரும் தங்கள் விபரம்களை அன்றைய தினம் காலையில்  பதிந்து ,  சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம்.  பதிவுகள்  காலை  8.30  –  9.00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.  போட்டிகள் 9.00 மணிக்கு ஆரம்பமாகி 12 மணி வரை இடம்பெறும்.  இப்போட்டிகளில் பங்குபற்றி இளம் சிறார்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து,  அவர்களின்  ஆளுமை விருத்திக்கு ஊக்கப்படுத்துமாறு பெற்றோர்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

 

              நிர்வாகக்குழு

கனடா காரை கலாச்சார மன்றம்

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logoகாரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் September 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் September 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

  “WORKING TOGETHER IS SUCCESS”

 

Video

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை ஒன்றுகூடல் 2017 காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் October 8,2017 அன்று நடைபெறவுள்ள தமிழ்த்தினப் போட்டிகளில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றத்தின் october 8,2017 அன்று நடைபெறவுள்ள தமிழ்த்தினப் போட்டிகளில்  பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்!


வருடம்தோறும் எமது மன்றத்தினால்  நடாத்தப்படுகின்ற தமிழ்த்தினப் போட்டிகள் இவ்வருடமும்  October 8, 2017 காலை 8 மணி முதல் Scarborough Civic Center இல் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் தொண்டர்களாக கடமை புரிய விரும்பும் பல்கலைக்கழகம்,  கலாசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் தங்கள் பெயரை மன்றத்தின் உபதலைவர் திரு .தம்பையா அம்பிகைபாகன் (முன்னாள் ஆசிரியர் யாழ். இந்துக்  கல்லூரி) அவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.  

அவர்களுக்கு  ஐந்து  மணித்தியால சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கம் :-  (647) 629 8517.

                                                                       நன்றி 

             நிர்வாகம் 
காரை கலாச்சார  மன்றம்   

 

கனடா-காரை கலாசார மன்றம் தமிழ்மொழித் திறன்/பண்ணிசைப் போட்டிகள் – 2017

CKCA logo

கனடா-காரை கலாசார மன்றம்
தமிழ்மொழித் திறன்/பண்ணிசைப் போட்டிகள் – 2017

போட்டி விதிகள்:

போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும்
1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு)
2.கீழ்ப் பிரிவு (தரம்1, தரம்2)
3.மத்திய பிரிவு (தரம்3, தரம்4)
4.மேற் பிரிவு (தரம்5, தரம்6)
5.அதிமேற் பிரிவு (தரம்7, தரம்8, தரம்9)
6.உயர் பிரிவு (தரம்10, தரம்11, தரம்12)

யூலை மாதத்தில் பாடசாலையில் இறுதியாகக் கற்ற வகுப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.

 

பண்ணிசைப் போட்டி:
1.பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
2.கீழ்ப் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
3.மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம், ஏதாவது ஒரு புராணம்
4.மேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம், ஏதாவது ஒரு புராணம்
5.அதிமேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம், ஏதாவது ஒரு புராணம், ஏதாவது ஒரு திருவாசகம்
6.உயர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம், ஏதாவது ஒரு புராணம், ஏதாவது ஒரு திருவாசகம்

 

தமிழ்மொழித் திறன் போட்டி:
பேச்சு: தரப்பட்டுள்ள விடயத்தை மனனம்செய்து பேசுதல்.
வாசிப்பு: தரப்பட்டு தயார் செய்து வந்த விடயங்களுள் நடுவர்கள் காண்பிக்கும் பகுதியை வாசித்தல்.
சொல்வதெழுதுதல்: தரப்பட்டு தயார்செய்து வந்த விடயங்களுள் நடுவர்கள் சொல்பவற்றைக் கேட்டு எழுதுதல். 

பங்குபற்ற விரும்புவோர் 05-10-2017ஆம் திகதிக்கு முன்னதாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்

தொலைபேசி இலக்கம்: 416-6424912

மின்னஞ்சல் முகவரி: karainagar@gmail.com

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

போட்டிகள் ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி Scarborough Civic Centreஇல் காலை 8.30மணிக்கு நடைபெறும்.

 பேச்சுப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 1ஆம் இடத்தைப் பெற்ற போட்டியாளர்களுக்கு ‘காரை வசந்தம்’ விழாவில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

 

 

கனடா காரை கலாசார  மன்றம்

தமிழ்மொழித்  திறன்  பண்ணிசைப்  போட்டிகள் – 2017

விண்ணப்ப படிவம்

 

விண்ணப்ப படிவத்தை  பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Thamil-Thiran-Potty-Vinnappam-2017.pdf

 

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

                                                           பிரிவுகள்: 

 

                    பாலர் பிரிவு:        Junior/Senior Kindergarden students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Speech-JK-SK-FF.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Reading-JK-SK.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Writing-JKSK-f.pdf

 

 

                                       கீழ்ப்பிரிவு:        Gr 1 / Gr 2 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Speech-1-2-FF.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Reading-12.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Writing-Grade-1-2-ff.pdf

 

                                     மத்தியபிரிவு:        Gr 3 / Gr 4 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Speech-3-4-FF.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Reading-34.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Writing-34.pdf

 

                                 மேல்பிரிவு:        Gr 5 / Gr 6 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Speech-5-6-FF.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Reading-5-6.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Writing-56.pdf

 

 

                       அதிமேற்பிரிவு:    Gr 7 / Gr 8 / Gr 9 students 

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Speech-78-9-FF.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Reading-78-9.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Writing-78-9.pdf

 

 

                                  உயர்பிரிவு:   Gr 10 / Gr 11 / Gr 12 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Speech-1011-12-FF.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Reading-1011-12.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/Writing-1011-12-ff.pdf

 

 

30.07.2017 அன்று இனிதே நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடல் 2017 காட்சிகள்!

CKCA logo

 

 பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/h9H8UmIT6yJeoNUt1

கனடா வாழ் காரை உறவுகளின் நாளைய வரலாற்றுப் பெரு விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி! கலந்து கொள்ளவுள்ள வாகனப் பாவனையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

CKCA logo

கனடா வாழ் காரை உறவுகளின் நாளைய வரலாற்றுப் பெரு விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கலந்து கொள்ளவுள்ள வாகனப் பாவனையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

கனடாவில் வதியும் காரை. மக்கள் தமது மண் சார்ந்து முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் முன்னணி நிலையினைப் பெற்றவையாக அமைந்தன என்பது மட்டுமல்லாது முன்னுதாரணமானவையாக விளங்கக்கூடியவை என்பதும் வரலாறாகும். அத்தகைய வரிசையில் இவ்வாண்டுக்கான கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டிகளும் நாளைய தினம் வெகு சிறப்பாக நடெபெறுவதற்கான முக்கியமான அனைத்து ஏற்பாடுகளும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தினால் மிக நேர்த்தியான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

நாளைய தினம் மழையில்லாததும் அதிக வெப்பநிலையற்றதுமான சிறந்த காலநிலையினைக் கொண்டுள்ளது என காலநிலை அவதான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் காரையின் சொந்தங்கள் எவ்வித அசௌகரியங்களையும் எதிர்கொள்ளாது மகிழ்ச்சிகரமாகவும் மனநிறைவாகவும் நாளைய பகற் பொழுதைக் களிப்பதற்கு இயற்கை அன்னை எமக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கின்ற நல்ல செய்தியாகும். பெற்ற தாய்க்கு ஒப்பானதாகப் போற்றப்படுகின்ற பெருமைக்குரிய  காரை மண்ணின் பெயரால் நடாத்தப்படுகின்ற பெருவிழாவில் ஆவலோடு கலந்துகொள்ள நாளைய பகற் பொழுதை ஒதுக்கிவைத்து பெருந்திரளான காரை. மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Morningside பூங்காவிலுள்ள வாகனத் தரிப்பிட வசதி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் வாகனப் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் காலை 9.00மணிக்கு முன்னதாக  உங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொள்வது விரும்பத்தக்கது. தாமதித்து வருபவர்களுக்கு வாகனத் தரிப்பிட வசதி கிடைக்கவில்லையானால் பூங்காவிற்கு அண்மையிலுள்ள பொதுத் தரிப்பிடங்களுள் ஒன்றில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துவந்து  நிகழ்விடத்தை சில நிமிடங்களில் வந்தடையலாம்.

                நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்   

தொடர்புகளுக்கு:

பாலச்சந்திரன்: 647 818 7443

தேவகுமார்: 647 853 7027

பிரபாகரன்: 416 455 8836

 

 

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும் பெரு விழா! ஞாயிறு காலை ஆரம்பம்!

CKCA logo

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும்

பெரு விழா! ஞாயிறு காலை ஆரம்பம்!

 

காரை மக்களை திரண்டு வருமாறு அன்புரிமையோடு  அழைக்கின்றது கனடா-காரை கலாசார மன்றம்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் ஞாயிறு காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மனதிற்கு இதமளிக்கும் அமைதியான சூழலில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய Morningside பூங்காவில் காரையின் உறவுகள்  உறவு கொண்டாடி மகிழ சங்கமிக்கவுள்ளனர்.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும்  நிகழ்வு

நாம் காரை மண்ணின் மைந்தர்கள் என்கின்ற உறவுத் தொடர்பினைப் பேணவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்து எம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வு

ஊர் சார்ந்த மனப் பதிவுகளைத் தாங்கிய வண்ணம் உரிமையோடு கலந்துகொள்ளும் காரை மக்களின் உன்னதமான நிகழ்வு

தாயக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் BBQ

பாலப்பம், பழஞ்சோற்றுத் தண்ணீர், ஒடியல் கூழ், கொத்து றொட்டி  உள்ளிட்ட பெரியோர், சிறியோர் விரும்பும் பலதரப்பட்ட சுவையான உணவுகளை அனுபவம் மிக்க எமது தொண்டர்களின் உடனடித் தயாரிப்பில்  சுடச் சுட பெற்று சுவைத்து மகிழலாம்

தாயக பாரம்பரிய விளையாட்டுக்கள்

தாய்ச்சி, கிரிக்கட், கால்பந்து, தாம்பிழுவைப் போர் போன்ற விறு விறுப்பான குழு நிலை விளையாட்டுக்கள்

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கவர்ச்சி மிகு விளையாட்டுக்கள்

வயதுக் கட்டுப்பாடின்றி அனைவரும் பங்கேற்கும் வினோத உடைப் போட்டி

போட்டியாளர்களின் வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கிடையிலான போட்டி

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு 

ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழவும் உணவு வகைகளை உண்டு சுவைக்கவும் போட்டிகளில் பங்கேற்கவும் அவற்றைக் கண்டு களிக்கவும் ஞாயிறு காலை முதல்  Morningside பூங்காவில் ஒன்று கூடத் தவறாதீர்கள். 

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் நடைபெறவும் நிகழ்வை வெற்றிகரமானதாக அமைத்து வரலாற்றில் இடம் பிடித்துக்கொள்ளவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன்கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும் தொண்டர்களும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் உழைத்து வருகின்றனர்.

காரை மாதாவின் புதல்வர்கள் தத்தமது குடும்பங்களுடன் திரளாகக் கலந்துகொண்டு மகிழ்வது மட்டுமல்லாது  காரை மண்ணை பெருமைப்படுத்துமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றது உங்களுக்கான சேவையிலுள்ள உங்கள் கனடா-காரை கலாசார மன்றம்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்


கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2012ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
4. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 7 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள் 
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2008, 2009ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2006, 2007ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2004, 2005ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் – ஆண்கள்
26 அஞ்சல் – பெண்கள்

18 & Under – 2000 முதல் 2003ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 19  – 1999 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
33. 200M – ஆண்கள்
34. 200M – பெண்கள்
35. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
36. சாக்கு ஓட்டம் – பெண்கள்
37. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
38.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 60
39. முதியோர் மெதுநடை – ஆண்கள்
40. முதியோர் மெதுநடை – பெண்கள் 

41.வினோத உடை போட்டி:  வினோத உடை போட்டியில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பங்கு பற்றலாம்.

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 

மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:
 

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                
BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH
 
YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 
 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 30,2017 திகதி நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 30,2017 திகதி நடைபெறவுள்ளது.  இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு  karainagar@gmail.com  அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
 
                                                                 நன்றி

                  நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

                       

                                              "WORKING TOGETHER IS SUCCESS"

 

 

CKCA GET TOGETHER 2017 REGISTRATION

 

Verification

 

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி!

Greetings to CKCA Committee – Scanned copy

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 30.07.2017 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 28.07.2017 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

28.07.2017 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதள் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.
 
                                                                       நன்றி

 

                      நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

 

                                                  "WORKING TOGETHER IS SUCCESS"

 

 

 

CKCA GET TOGETHER 2017 VOLUNTEER REGISTRATION

 

Verification

 

கனடா-காரை கலாசார மன்றத்திற்கு சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் 11பேர் கொண்ட புதிய நிர்வாக சபை அமையப்பெற்றுள்ளது.

CKCA__POST

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 30,2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் -2017

  இடம்:  MORNINGSIDE PARK AREA 1&5 
     
     390 Morningside Ave, Toronto, ON M1C 1B9 

   காலம்: ஜூலை 30,2017 ஞாயிற்றுக்கிழமை 

       நேரம்: காலை  8.00 மணி முதல் 

 


            தொடர்புகளுக்கு:

கனடா-காரை கலாச்சார மன்றம்

தொலைபேசி இல: 416 642 4912

மின்னஞ்சல்: karainagar@gmail.com

CKCA GET TOGETHER 2017

 

09.07.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!

CKCA logo

 கனடா காரை கலாச்சார மன்றம்
புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்


 காலம்:  09.07.2017 ஞாயிற்றுக்கிழமை

 நேரம்: மாலை 3.00 மணிக்கு 

 இடம்: பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் (1148 Bellamy Road (Bellamy & Ellesmere) Scarborough) 
 


                                                               நிகழ்ச்சி நிரல்

 

1. கடவுள் வணக்கம்

2. அக வணக்கம்

3. தலைவர் உரை

4. சென்ற பொதுக்கூட்ட அறிக்கைகள்

5. புதிய நிர்வாக சபை தெரிவு

6. புதிய எதிர்கால திட்டங்கள் 

       A. காரை ஒன்றுகூடல் (கோடை கால ஒன்றுகூடல்)
 
       B. தமிழ்த்திறன் போட்டிகள்

       C. காரை வசந்தம்

       D. ஆருத்திரா தரிசனம்

7. சமாதானக் குழுவின் இணைப்பாளர் உரை

8. நன்றியுரை 


       தலைவர், உப தலைவர்                
கனடா காரை கலாச்சார மன்றம்
     

    "WORKING TOGETHER IS SUCCESS"

Image

HAPPY CANADA DAY

CANADA_DAY_CKCA

கனடா காரை கலாச்சார மன்றம் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம்- 2017

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்

புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான

விண்ணப்ப படிவம்- 2017


கனடா காரை கலாச்சார மன்றம் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளதால் நிர்வாக சபைக்கு தம்மை தெரிவு செய்ய விரும்புவோர் கீழே உள்ள விண்ணப்பபடிவத்தை நிரப்பி போஷகர் திரு.கனகராசா கந்தையா அவர்களுக்கு  ckcaelection2017@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது  P O BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1 என்ற தபால் முகவரிக்கு  ஜூலை 7ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். நிர்வாக சபை தெரிவு கூட்டத்தின் போதும் விண்ணப்பிக்கலாம்.

 

கனடா காரை கலாச்சார மன்றம்

 

  விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/06/CKCA-ELECTION-APPLICATION-FORM-JULY-09-2017-1.pdf

 

 

CKCA ELECTION APPLICATION FORM JULY 09, 2017

 

கனடா காரை கலாச்சார மன்றம் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்

CKCA logo

 கனடா காரை கலாச்சார மன்றம்

புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்  

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை  மாலை 3.00 மணிக்கு பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் (1148 Bellamy Road (Bellamy & Ellesmere) Scarborough) நடைபெறவுள்ளது.

 கனடா வாழ் காரைநகர் மக்களும் அவர்களுடன் தொடர்புபட்ட அனைவரும் அன்புடன் வருமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.


                இவ்வண்ணம்
       தலைவர், உப தலைவர் 
கனடா காரை கலாச்சார மன்றம்

Image

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் -2017

CKCA GET TOGETHER 2017

Older posts «