Tag Archive: Karai Hindu O.S.A

காரை மண் பெற்றெடுத்த பிரபல இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் கனடாவிற்கு வருகைதரவுள்ளார்.

Parameswary.Kகலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அழைப்பினை ஏற்று யாழ் பல்கலைக்கழக இசைத் துறை மூத்த விரிவுரையாளரும் தமிழ் இசையுலகின் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞருமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் இம்மாத இறுதியில் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இசைக்கச்சேரி நிகழ்த்தவுள்ளார். 

தமது இசைத்திறமையினால் காரை மண்ணிற்கு பெருமை சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.K.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி சுவிற்சலாந்து ஜேர்மனி பிரான்ஸ் பின்லண்ட் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிற்கு கலைப் பயணங்களை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கர்நாடக இசையில் M.A., M.Phil.  ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர். 

ஈழத்துச் சிதம்பரத்தில் நீண்டகாலம் ஆஸ்த்தான வித்துவானாக (நாதஸ்வரம்) பணியாற்றி காரைநகர் மக்களின் அன்பையும் நன்மதிப்பினையும் பெற்ற கயிலாயக்கம்பரினதும் மற்றொரு நாதஸ்வர வித்துவான் சுப்பையாக்கம்பரினதும் பேத்தியே செல்வி பரமேஸ்வரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இரண்டு வாரங்கள் கனடாவில் தங்கியிருக்கும் செல்வி பரமேஸ்வரி நிகழ்த்தவுள்ள இசைக்கச்சேரி கனடாவாழ் காரைநகர் மக்களிற்கும் மற்றும் கர்நாடக இசை இரசிகர்களிற்கும் பெருவாய்ப்;பாக அமையும் என தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகம் இவர் மூலமாக கனடாவில் கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் பயிற்சிப்பட்டறை ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது. 

 

மூதறிஞர் க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

VaitheesOSA CaST   

 ஆன்மீகப் புரட்சியினை ஏற்படுத்திய ஒப்பற்ற சாதனையாளர்  

                மூதறிஞர் தத்துவ கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள்

அளப்பரிய ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றியதன் மூலம் தாம் பிறந்த காரை மண்ணிற்கு மட்டுமல்லாது தமது வளமான வாழ்விற்கு வழி காட்டிய கற்ற பாடசாலையான கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கும் பெரும் புகழ் சேர்த்த ஒப்பற்ற சேவையாளர் சிவஸ்ரீ க.வைத்திஸ்வரக் குருக்கள் அவர்கள் 100வது அகவையினை எட்டி வெகு விரைவில் நூற்றாண்டு விழாவினை காணவிருந்த வேளையில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது. அன்னார் காரை மண்ணிற்கு பத்தி என்கின்ற விதையினை விதைத்து உரமூட்டி வளர்த்ததுடன்; பவள விழா கண்ட மணிவாசகர் சபையினை நிறுவி அதன் வளாச்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டு ஆன்மிகப் புரட்சியினை ஏற்படுத்திய ஆளுமையும் பேரறிவும் மிக்க பெரும் சாதனையாளர். நாட்டின் உயர் கல்வி பீடமர்க கருதப்படும் யாழ் பல்கலைக் கழகம் தத்துவகலாநிதி என்கின்ற பட்டத்தினை வழங்கியிருப்பதும்; அகில இலங்கை கம்பன் கழகம் மூதறிஞர் என்கின்ற கௌரவ பட்டத்தினை வழங்கியிருப்பதும் அன்னாரது தமிழறிவின் ஆழத்தினையும் சைவத் தமிழ்ப் பணியின் மகத்துவத்தினையும் உணர்த்துவதாக உள்ளன. அன்னாரது இழப்பானது காரை மண்ணிற்கு மட்டுமல்லாது சைவத் தமிழுலகிற்கே பேரிழப்பாகும். என்றும் சிவ சிந்தனையுடன் வாழ்ந்து சிவனுடைய திருவடிகளை அடைந்து விட்ட அன்னாரது ஆத்மா சாந்தியடைய சௌந்தராம்பிகை சமேத சந்தரேசப் பெருமானை இறைஞ்சுவதுடன் ஆறொணாத் துயருற்றிருக்கும் அன்னாரது பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் அனுதாபத்தினையும் பழைய மாணவர் சங்கத்தின கனடா கிளை தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி (காரை இந்து) பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

முழுமையான கண்ணீர் வணக்கப் பிரசுரத்தைக் கீழே காணலாம்.

VaitheesOSA Ca

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

KARAI HINDU LOGO

இடம்: Scarborough Civic Centre, 150,Borough Dr. Committee Room # 2
காலமும் நேரமும்: 2015 ஏப்பிரல் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமை: சங்கத்தின் தலைவர் திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்

நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. பாடசாலைப் பண் இசைத்தல்
3. தலைவர் முன்னுரை
4. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
5. செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
6. வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தல் (ஜனவரி2014 – டிசம்பர்2014) – பொருளாளர்
7. புதிய நிர்வாகசபை தெரிவு: தலைவர், உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர்
மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். நிர்வாக சபை தெரிவு முறை தொடர்பான விபரத்தினை karaihinducanada.com  இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடமுடியும்.

8. புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
9. அங்கத்தவர் பிரேரணைகள்: 
அ. யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ. வேறு பிரேரணைகள்
15-04-2015ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்
10. சங்கத்தின் நிதிவளத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல்.
11. வேறு விடயங்கள்
12. அங்கத்தவர்கள் கருத்துரைகள்
13. .நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.

தபால் முகவரி: 3875,Sheppard Avenue Apt # 411 Scarborough ON. M1T 3L6
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி இல. 647-766-2522

அனைத்து அங்கத்தவர்களும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

மு. வேலாயுதபிள்ளை              கனக. சிவகுமாரன்                        ந. பிரகலாதீஸ்வரன்
        தலைவர்                                     செயலாளர்                                        பொருளாளர்

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015

KARAI HINDU LOGO

போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது முதல் தேர்தலை நடாத்தி தெரிவுகளை பிரகடனப்படுத்துவது வரைக்குமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

25-04-2015ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் 7வது நிகழ்வாக நிர்வாக சபை தேர்தல் இடம்பெறும்

தலைவர், உப தலைவர், செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர், உதவி பொருளாளர், மற்றும்; ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் ஆகிய பதவிகளிற்கு போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 15-04-2015ஆம் திகதிக்கு முன்னதாக தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கலாம். நேரிலும் கையளிக்கமுடியும்.

ஒருவர் ஏதாவது இரு பதவிகளிற்கு விண்ணப்பிக்க முடியும் ஆயினும் இவ்விண்ணப்பங்கள் தனித்தனியாக அனுப்பப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இரு அங்கத்தவர்களினால் முறையே பிரேரித்து வழிமொழியப்பட்டிருக்க

வேண்டும்  விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து தேர்தல் அலுவலரால் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரிகளிற்கு உறுதிப்படுத்தப்படும்.

விண்ணப்பதாரியும் பிரேரிப்பவரும் வழிமொழிபவரும் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக சங்க அங்கத்துவத்தை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலரும், நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் karaihinducanada.com  இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஒரு பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் nதிரிவு இடம்பெறும். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான வெற்றிடம் சமூகமளித்திருக்கும்

அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து நிரப்பப்படும். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பதாரர் விரும்பின் தமது விண்ணப்பத்தினை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்.

தபால் முகவரி: Mr. T. Visuvalingam, 1008-50 Elm Drive, Mississauga, ON. L5A 3X2.

மின்னஞ்சல் முகவரி: tvisuvalingam@yahoo.com  தொலைபேசி இல.: 905-566-4822

விண்ணப்பப் படிவத்தை இங்கே அழுத்தித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Application Form

பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்தும் – 125 வது ஆண்டு விழா

Invitation Letter f

Hindu ADDS 2
OSA Flyer

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நடாத்தும் பேச்சுப் போட்டி பொது அறிவுப்போட்டி பற்றிய அறிவித்தல்

J Drகலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா நடாத்தும்
பேச்சுப் போட்டி பொது அறிவுப்போட்டி பற்றிய அறிவித்தல்
கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) 125வது ஆண்டுவிழாவையொட்டி பேச்சுப் போட்டி  பொது அறிவுப் போட்டி ஆகியன நடாத்தப்படவுள்ளன. போட்டிகள் தொடர்பான விபரங்களை இங்கே பார்வையிடலாம்.

SPEECH copy (1)2

க.பொ.த (சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன.:2013-04-25

Shanthini_K-195x255க.பொ.த (சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன.2013-04-25

 

க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து இந்துவின் மாணவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் மிகச்சிறந்த 7 A, B, C என்ற பெறுபேற்றினை பெற்ற இந்துவின் மாணவி சாந்தினி கனகலிங்கம் தீவக வலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குவதுடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அதிக எண்ணிக்கையையுடைய மாணவர்களை கொண்டு விளங்கும் பாடசாலையாகவும் இந்து விளங்கி தீவக வலயத்தின் முதல்நிலை பாடசாலை என்ற தகைமையினை பெற்றுக்கொண்டுள்ளது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஒன்பது பாடங்களிலும் சித்தியெய்திய முதல் பதினான்கு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள்; பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

க.பொ.த (சாதாரணம்) தரப் பரீட்சையில் சித்தியெய்தி க.பொ.த உயர்தர வகுப்பில் கற்பதற்கு 26 மாணவர்கள் தகமை அடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாடவிதான செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தீவக வலயத்தில் முதன்மைப் பாடசாலை என்கின்ற பெயரை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற காரை இந்து யாழ் நகரப் பாடசாலைகளுடன் போட்டியிடக்கூடிய காலம் தூரத்தில் இல்லை என்பதற்கு கட்டியம் கூறுவதாக கல்லூரியினால் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற தொடர் சாதனைகள் அமைந்துள்ளன.

J/Dr.A.Thiyagarajah Madhya Maha Vidyalayam

(Karainagar Hindu College)

Karainagar.

G.C.E O/L (2012) Results

No Student Full Name Total Result
1. Shanthini Kanagalingam 7A B C
2. Kasthuri Kopalapillai 5A 2B 2C
3. Rojana Thavaraja 5A B 3C
4. Thanuja Komaleswaran 4A 2B 2C S
5. Dinoja Navarathnaraja 3A 2B 2C 2S
6. Tharanya Somasuntharam 3A B 2C 3S
7. Nimalendran Pirasanth 3A B 2C 3S
8. Gajinthini Nathiseelan 3A B 5S
9. Thulasika Suntharasivam 2A 3B 4C
10. Thushyanthini Ariaputhiran 2A 2B 3C 2S
11. Mekalai Theventhiram 2A B 4C S
12. Thargika Moorthy A 2B 3C 3S
13. Navanithi Kajenthiran A 2B 3C 3S
14. Shajitha Balasingam A 2B 3C 3S

கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

J Drகோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

காரைநகர் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 63 முதல் இடங்கள் உட்பட 124 இடங்களைப் பெற்று காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) முன்னணி வகிக்கின்றது.

காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வலய மட்டப்போட்டிக்கு தெரிவாகி உள்ள 274 போட்டியாளர்களில் 124 போட்டியாளர்கள் தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) இருந்து தெரிவாகி காரைநகர் பாடசாலைகளிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதன்நிலை வகிக்கின்றது.

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும் காரை இந்து முன்னணியில்

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும் காரை இந்து முன்னணியில்

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும்; காரைநகர் இந்துக் கல்லூரி ஒன்பது முதல் இடங்கள் உட்பட 17 இடங்களைப் பெற்று முன்னணி வகிக்கின்றது.

ஆரம்பப் பாடசாலை இன்றி தரம் 6–13 வரை கொண்ட தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) இவ் ஆண்டு இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் அதிகூடிய இடங்களைப் பெற்று முன்னணி வகிப்பதுடன் வலய மட்டப்போட்டியில் அதிகூடிய மாணவர்கள் பங்குபற்றும் பாடசாலையாக தீவக வலயத்தில் தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) விளங்குகின்றது.

தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)
காரைநகர் கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டி – 2013

 

பிரிவு நிகழ்ச்சி     நிலை மாணவர் பெயர்
II வாசிப்பு 1 அ.பிரணவரூபன்
II     பேச்சு 1 ஏ.கோபிநாத்
III     பேச்சு 2 பா.குலமதி
IV     பேச்சு 1 சி.விஷாளினி
II தனி இசை 3 சி.புருஷோத்தமி
III தனி இசை 1 க.கமலரூபன்
IV தனி இசை 2 இ.பவதாரணி
V தனி இசை 1 பா.வதனி
III தனி நடனம் 2 இ.நிரூபமா
V தனி நடனம் 1 மு.சகீதா
இசைக்குழு    I 2
இசைக்குழு   II 2
நடனம் குழு 1
தமிழறிவு வினாவிடை 2
விவாதம் 2
சமூக நாடகம் 1
நாட்டிய நாடகம் 1

க.பொ.த.(சாதாரணம்) க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் சாதனை படைத்து காரை இந்துவிற்கு புகழ்சேர்த்த மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதி வழங்க 40000.00ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது.

2Nadarasa Rahiniக.பொ.த.(சாதாரணம்) க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் சாதனை படைத்து காரை இந்துவிற்கு புகழ்சேர்த்த மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதி வழங்க 40000.00ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது.

க.பொ.த.(உயர்தரம்)தர பரீட்சையில் காரைநகர் கோட்ட மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி ராகினி நடராசாஇ க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் தீவக வலய மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி சாந்தினி கனகலிங்கம் ஆகிய இருவருக்கும் மற்றும் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கான தகமையினையும் உயர்தரவகுப்பிற்கு செல்வதற்கான தகமையினையும் பெற்ற ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தமது பாராட்டுக்களை கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுக்கு ஊடாகத் தெரிவித்துள்ளது.

இவர்களுடைய சாதனையினால் கல்லூரி அடைந்துள்ள பெருமை குறித்து Shanthini_K-195x255மகிழ்வுற்றிருக்கும் கல்லூரிச் சமூகத்துடன் கனடாக் கிளைச் சங்க உறுப்பினர்களும் இணைந்து கொள்வதாகவும் இந்த மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களிற்கு வழங்கி உதவும் பொருட்டு தமது கிளை, நாற்பதினாயிரம் ரூபாவினை(40000 ரூபா) பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் கணக்கிற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தலைவர் திரு.சி.தம்பிராஜா அவர்கள் இவ்விணையத்தளத்திற்கு அறியத் தந்துள்ளார்.

மேலும் இம்மாணவர்களின் சாதனைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் திரு.பொன்.சிவானந்தராசா, தற்போதயை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் ஆகியோரின் சிறந்த வழிநடத்தலையும் மற்றும் இம்மாணவர்களுக்குக் கல்வி புகட்டிய அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதுடன் அவர்களுக்கு கனடாக் கிளைச் சங்கத்தின் சார்பில் தமது நன்றியினையும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா வருடாந்த பொதுக் கூட்ட அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா
வருடாந்த பொதுக் கூட்ட அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் பற்றிய அறிவித்தலையும் நிகழ்ச்சி நிரலையும் இங்கே நீங்கள் பார்க்கக் கூடியதாகவுள்ளது.இதுவும் பொருளாளர்,செயலாளர் ஆகியோரின் அறிக்கைகளும் அனைத்து அங்கத்தவர்களிற்கும் மின்னஞ்சல் மூலமும் மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களிற்கு தபால்மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அறியத்தந்துள்ளதுடன் அறிக்கைகளை பார்வையிட விரும்புவோர் சங்கத்தின் இணையத்தளமான www.karaihinducanada.com  என்பதற்கு சென்று Reports என்ற பகுதியின்மேல்  Click செய்வதன் மூலம் பார்வையிடமுடியும் எனவும் மேலும் அறியத்தந்துள்ளார்.

PAGE 1M.pmd

காரையில் ஒளி பரப்பும் இந்துவின் புகழ் பரப்ப www.karaihinducanada.com இணையத்தள சேவை உதயமாகியது.

காரையில் ஒளி பரப்பும் இந்துவின் புகழ் பரப்பwww.karaihinducanada.com இணையத்தள சேவை உதயமாகியது.
பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் இணையத்தள சேவை www.karaihinducanada.com 17-03-2013 முதல் ஆரம்பத்துவைக்கப்பட்டுள்ளது.Scarborough Civic Centre ல் நடைபெற்ற நிர்வாகசபை உறுப்பினர்கள் கல்ந்து கொண்டிருந்த கூட்டத்தின்போது சங்கத்தின் தலைவர் திரு.சி.தம்பிராசா இவ்விணையத்திற்கு முதலில் விஜயம் செய்தும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களை அழைத்து தெரியப்படுத்தியும்இணையத்தள சேவையினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.சங்கத்தின் போசகர் திரு.மு.வேலாயுதபிள்ளை தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களை அழைத்து தெரியப்படுத்தியிருந்ததுடன் இருவரும் தமது மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொண்டனர்..இணையத்தளத்தின் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களிற்கும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களிற்கும் தொலைபேசி ஊடான உரையாடலின்போது  தமது மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் நன்றியினையும் திரு.சதாசிவமும் திருமதி தவபாலனும் தெரிவித்துக்கொண்டதுடன் இச்செய்தியினை பாடசாலைச் சமூகத்திற்கும் காரைநகர் மக்களிற்கும் அறிவிக்கவுள்ளதாகவும் கூறினர்.
இவ்விணையத்தளத்தினை சிறப்புற வடிவமைத்து உதவியதுடன் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கிவருகின்ற திரு. சிவகணேசன் வேலாயுதபிள்ளை அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி அதிபருக்கும் தாய்ச் சங்க நிர்வாகத்திற்கும் மற்றும் வாழ்த்துச் செய்திகள் வழங்கி ஆதரவளித்தவர்களிற்கும்.
போசகர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் சங்கத்தின் சார்பில் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

காரைநகர் ஆ.தியாகராஜா மத்தியமகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 02.03.2013இல் நடைபெறவுள்ளது.
J Dr. ThiyagarayaJ Dr. Thiyagaraya.jpg2

வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

ckca -m

காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
காரைநகர் இந்துக்கல்லூரி 125வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற இவ்வேளையில் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்ற அமைப்பாக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையும் இணைந்து கொண்டிருக்கின்ற செய்தி பாடசாலைச் சமூகத்தினையும் தரணியெங்கம் பரந்து வாழும் காரை இந்து அன்னையின் புதல்வர்ளையும் பேருவகையும் பெருமையும் கொள்ளவைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.கனடா வாழ் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் வழங்கிய வியத்தகு ஆதரவே இதற்கு வித்திட்டதெனலாம்.
ஓர் அமைப்பினுடைய அடிப்படையாகவும் அச்சாணியாகவும் விளங்கி பயனுள்ள வலுவான அமைப்பாக மாற்றி அமைக்கக்கூடியவர்கள் அதில் இணைந்து ஆதரவளிக்கின்ற அங்கத்தவர்களாகும்.தங்களுடைய வளமான வாழ்விற்கு கல்வியையும் ஒழுக்கத்தினையும் ஊட்டிவளர்த்த கல்லூரி அன்னையின் மேம்பாட்டில் பங்குகொள்ளவேண்டும் என்கின்ற ஆவலில் நூற்றுஜம்பது பழைய மாணவர்கள் அங்கத்துவம் பெற விண்ணப்பித்திருப்பது பெருமகிழ்வும் உற்சாகமும் தருவதாக அமைந்துள்ளது.ஏனைய அனைத்து பழைய மாணவர்களையும் அங்கத்தவர்களாக இணைந்து நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளிற்கு ஆதரவளிக்குமாறு நிர்வாகம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றது.
அங்கத்தவர்கள் இணைவு தொடர்பாக நிhவாக சபை உறுப்பினர்கள் எவருடனாவதோ அன்றி பின்வருவோருடனோ தொடர்புகொண்டு விண்ணப்ப படிவங்களையும் விபரங்களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
சி;தம்பிராசா – தலைவர் – 416-4386735
கனக.சிவகுமாரன் – செயலாளர் – 647-7662522
ஆ.சோதிநாதன் – பொருளாளர் – 647-8389323