காரைநகர் கோட்ட மட்ட குழு நிலை விளையாட்டுப் படங்கள்
காரைநகர் கோட்ட மட்ட குழு நிலை விளையாட்டுப் படங்கள்
ஸ்தாபகர் சயம்பரின் பூட்டி குடும்பம் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயம்! பழைய மாணவர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபா அன்பளிப்பு!
ஸ்தாபகர் சயம்பரின் பூட்டி குடும்பம் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயம்! பழைய மாணவர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபா அன்பளிப்பு!
காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலய ஸ்தாபகர் முத்து சயம்பு அவர்களின் பூட்டி மற்றும் கணவர் ஆகிய திரு.திருமதி தர்மலிங்கம், ஜெகசொரூபி ஆகியோர் இன்று 22.02.2012ம் திகதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்திருந்தனர். தமது பூட்டன் ஆரம்பித்து வைத்த பாடசாலையைச் சுற்றி பார்வையிட்ட இவர்கள் இப்பாடசாலையின் வறிய மாணவர் கல்வி நிதிக்காக ஒரு லட்சம் ரூபா அன்பளிப்பாக அதிபரிடம் வழங்கினார்கள். பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலை அதிபருமாகிய பொ.சிவானந்தராஜா பழைய மாணவர் சங்க பொருளாளருக்கு தெரியப்படுத்தி அக்கணமே வங்கி உத்தியோகத்தர் முலம் நிலையான வைப்பிலிடப்பட்டது.
தற்போது கனடாவில் வசிக்கும் இவர்கள் கனடா காரை கலாசார மன்றம் தங்களிற்கும் நிகழ்ச்சிகளிற்கு அழைப்பு அனுப்புகிறவர்கள் எனவும், தெரிவித்ததுடன் காரைநகர்.கொம் இணையத்தள செய்தியாளரையும் சந்தித்து மகிழ்ந்து கொண்டனர்.
திருமதி. தவமணி அருணாசலம்(தங்கோடை, காரைநகர்)
மரண அறிவித்தல்
திருமதி. தவமணி அருணாசலம்
(தங்கோடை, காரைநகர்)
மண்ணில்: 11-12-1930 விண்ணில்: 20-12-2012
காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், காரைநகர், கொழும்பு, வெள்ளவத்தை, புகையிரதநிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தவமணி அருணாசலம் அவர்கள் திங்கட்கிழமை (20-02-2012) அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
கோட்ட மட்ட குழுப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகின!
கோட்ட மட்ட குழுப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகின!
காரைநகர் கல்விக்கோட்ட பாடசாலைகளிற்கிடையே நடைபெற்ற குழு விளையாட்டுப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் அதிக முதல் இடங்களை யாழ்ற்ரன் கல்லூரியும், சுந்தரமூர்த்திவித்தியாசாலையும் பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு.
காரைநகர் பிரதேச செயலக விளையாட்டு விழாவில் கலாநிதி விளையாட்டுக்கழகம் முதலாம் இடம்
காரைநகர் பிரதேச செயலக விளையாட்டு விழாவில் கலாநிதி விளையாட்டுக்கழகம் முதலாம் இடம்
காரைநகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டுப்போட்டி வியாவில் சைவ வித்தியாசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலாநிதி விளையாட்டுக்கழகம் 202 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தைப்பெற்றது.காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தே.பாபு தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 8 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின.
யாழ்ற்ரன் கல்லூரி சாரணர் இயக்கச் செயற்பாடுகள்
யாழ்ற்ரன் கல்லூரி சாரணர் இயக்கச் செயற்பாடுகள் நேற்று (20 -02 -2012 ) கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சாரணருக்கான வகுப்புகளை யாழ் மாவட்ட உதவிச் சாரணர் ஆணையாளர் திரு.செ. சிவகுமாரன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில் நடாத்தினார். அவர் சாரணர் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன பற்றியும் இதனால் சமூகத்துக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.
விக்கிரகத் திருட்டுடன் தொடர்பென சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது!
விக்கிரகத் திருட்டுடன் தொடர்பென சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது!
காரைநகர் பலகாடு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் திருட்டுடன் சம்பத்தப்பட்டவர்களென சந்தேகத்தின்பெயரில் இருவர்; கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரம் செய்யும் இவர்கள் காரைநகரில் பழைய இரும்பு கொள்வனவு செய்யவென வந்தசமயம் ஊர்காவற்றுறை பொலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வருகின்றனர். இவ் விக்கிரக களவு சம்பந்தமாக பொலீசார்,மற்றும் படையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!
சிறப்புற நடைபெற்றது காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!
இந் நிகழ்வுப்படங்களை இங்கே காணலாம்.
காரைநகர் பலகாடு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் எழுந்தருளி விக்கிரகங்கள் திருட்டு!
காரைநகர் பலகாடு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் எழுந்தருளி விக்கிரகங்கள் திருட்டு!
காரைநகர் பலகாடு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் அம்பாள், பிள்ளையார் எழுந்தருளி விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் பெர்ஸ்ட் ஆடியோவின்( LONDON FIRST AUDIO) 100 வது பொன்மாலைப் பொழுது போட்டி நிகழ்வில் ''காரை வைரஸ்'' (KARAI VIRUS) குழு முதல் இடத்தில் வெற்றி பெற்றது.
லண்டன் பெர்ஸ்ட் ஆடியோவின்( LONDON FIRST AUDIO) 100 வது பொன்மாலைப் பொழுது போட்டி நிகழ்வில் ''காரை வைரஸ்'' (KARAI VIRUS) குழு முதல் இடத்தில் வெற்றி பெற்றது.
கனடாவில் காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் உதயம்
கனடாவில் காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் உதயம்
காரைநகர், களபூமி பாடசாலைகளுக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் நேற்று 18.2.2012 சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Middlefield and Finch சந்திப்பில் அமைந்துள்ள GTA Square Hall இல் நடைபெற்றது. களபூமியைச் சேர்ந்த பல கல்விமான்களும் பழைய மாணவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் களபூமிப் பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
காரை இந்துக்கல்லூரிக்கு பணம் கிடைத்தது!கல்லூரி அதிபர் SMS இல் தகவல்
கடந்த 11.02.2012 அன்று நடைபெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கென கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினரால் அனுப்பிவைக்கப்பட்ட 65ஆயிரம் ரூபா பணம் கிடைக்கப்பெற்றதாக பாடசாலையின் அதிபர் திரு.பொன்.சிவானந்தராஜா SMSமூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ற்ரன் கல்லூரியில் விசேட பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
யாழ்ற்ரன் கல்லூரியில் விசேட பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் ஆங்கிலக்கல்வியையும் கணினிக்கல்வியையும் மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ற்ரன் கல்லூரியில் விசேட ஆங்கில மற்றும் கணினி வகுப்புக்கள் கடந்த
08.02.2012ம் திகதி அன்று ஆரம்பமாகி சிறப்பாக நடாத்தப்பட்டு வருவதாக கல்லூரியின் அதிபர் திரு.முருகமூர்த்தி அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலய விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றது.
காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கு கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கம் ரூபா 65ஆயிரம் நிதியுதவி
காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கு கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கம் ரூபா 65ஆயிரம் நிதியுதவி.
கனடா-காரை கலாச்சார மன்றம் இரண்டாவது அன்பளிப்பாக காரை மாணவர் நூலக நிர்மாணப்பணிக்கு பத்தாயிரம்($10,000) கனேடிய டொலர்கள் அனுப்பிவைப்பு
காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் மாணவர் நூலகத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றம் இன்று இரண்டாவது அன்பளிப்பாக பத்தாயிரம்($10,000) கனேடிய டொலர்களை காரை அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைத்துள்ளது.
யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 28-02-2012
யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2012
மணமகன் தேவை
மணமகன் தேவை
காரைநகர் சைவ வேளாள குலத்தை சேர்ந்த 1985 இல் பிறந்த புனர்பூச நட்சத்திரமும் (2 பாதம்) 5 "5 " உயரமும் உள்ள B .COM பட்டதாரியும் Charteard Accountancy final படித்துக்கொண்டு கொழும்பில் பிரபல்ய கணக்காய்வகத்தில் பணிபுரியும் மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்கின்றனர்.
Tel 416. 566 4139 அல்லது 01194779098741
தொடர்பிலக்கம் K1512
மின்னஞ்சல்:
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
More Articles...
- காரைநகர் வேம்படியில் நவீன தொழில் நுட்பத்துடன் தொடர்பாடல்!
- காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா கலாசார மன்றம் கணணி அன்பளிப்பு!
- ஆலடி மீன் சந்தைக் கொட்டில் வீழ்ந்தும் பல வாரமாக புணரமைக்கவில்லை!
- கிட்னி மாற்றுச்சிகீச்சைக்கு உடன் உதவுங்கள்.
- கிழவன் காடு கலாமன்ற அலங்கார வளைவு மற்றும் புணரமைக்கப்பட்ட கட்டட திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.
- கண்ணீர் பூக்கள்
- சங்கீத பூஷணம் காரை.ஆ. புண்ணியமூர்த்தி
- காரைநகரில் மாண்புமிகு பிரதமர் D.M ஜெயரட்னா!
- களபூமி பாடசாலைகளுக்கான புதிய நிர்வாக சபைத்தெரிவுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- காரை இந்துக் கல்லூரிக்கு ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின்கீழ் புதிய மாடிக்கட்டடம்


