சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை வழங்கும் காரைத் தென்றல் 2012
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை வழங்கும் காரைத் தென்றல் 2012

உலகின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல்.....! 'அம்மா
இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகின்றது.
அம்மா
உலகின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல்.....! 'அம்மா
இன்று நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு அடியும் வணிக மயமாகிவிட்டது. பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம். கனடாவிலும் இது விதிவிலக்கல்ல. பாசத்தின் வேர்களில் தான் எம் பண்பாடு; பூத்துக்குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டி விடாதீர்கள்.
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே! என்ற வாலியின் வரிகள் வேதமாகட்டும்.-------
வலய மட்டத்திலான கணித நாடகப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாமிடம்
வலய மட்டத்திலான கணித நாடகப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாமிடம்
(12 -05 -2012) நடைபெற்ற தீவக வலயத்திற்கான கணித நாடகப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாமிடத்தினைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளிற்குத் தெரிவாகியுள்ளது. இந்நாடகத்தில் பங்கு பற்றிய மாணவர்களையும், இந்நாடகத்தைப் பயிற்றுவித்த ஆசிரியைகளான செல்வி சர்மிலா பாலகிருஷ்ணன், திருமதி கவிதா பிரதீஸ்வரன் ஆகியோரையும் அதிபர் பாராட்டுவதுடன் மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
மாவட்ட மட்ட தமிழ்த்தின தனிநடனப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்
மாவட்ட மட்ட தமிழ்த்தின தனிநடனப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான 2012ம் ஆண்டுக்கான தமிழ்த்தினப் போட்டிகளில் பிரிவு II தனி நடனத்தில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தன் 1ம் இடத்தைப் பெற்றுள்ளார். இம் மாணவனுக்கும், இம் மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து மாணவன் தேசிய மட்டத்தில் 1ம் இடம் பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
தமிழ்த்தினப் போட்டிகளில் தீவக வலயத்தில் யாழ் மாவட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளிற்கு தெரிவான பாடசாலை யாழ்ற்ரன் கல்லூரி மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்றாவது ஆண்டாக சிறப்புடன் நடைபெற்ற பிரான்ஸ் - காரை ஸ்வரங்கள் கலை விழா
மூன்றாவது ஆண்டாக சிறப்புடன் நடைபெற்ற பிரான்ஸ் - காரை ஸ்வரங்கள் கலை விழா
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினால் மூன்றாவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 06.02.2012இல் 'காரை ஸ்வரங்கள்' கலைவிழா நடைபெற்றது. அன்று மதியபோசன விருந்துடன் ஆரம்பமாகிய இவ்விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கலைவிழாவில் ஊடகவியாலாளர் திரு.தயானந்தா அவர்கள் தலைமையில் காரை மான்மியம் புத்தக வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிலிருந்து சில காட்சிகளை கீழே காணலாம்.மேலும் படங்கள் விரைவில் காண்பிக்கப்படும்.
காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய ஆலய மகாகும்பாபிஷேக விழா
காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய ஆலய மகாகும்பாபிஷேக விழா
திருமதி.சிவக்கொழுந்து சுப்பிரமணியம்(காரைநகர்)
திருமதி.சிவக்கொழுந்து சுப்பிரமணியம்(காரைநகர்)
மலர்வு: 25.05.1925 உதிர்வு: 05.05.2012
விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் 40 1/2 உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு-06ஐ வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய திருமதி.சிவக்கொழுந்து சுப்பிரமணியம் 05.05.2012 சனிக்கிழமை மு.ப.5.15 மணிக்கு இறையடி சேர்ந்தார்.
கனடா காரை கலாச்சாரமன்றத்தின் காரைஒளி TV பகுதியில் நேரடி ஒளிபரப்பு (live telecast)
கனடா காரை கலாச்சாரமன்றத்தின் காரைஒளி TV பகுதியில் நேரடி ஒளிபரப்பு (live telecast)
வெகுவிரைவில் கனடா காரை கலாச்சாரமன்றத்தின் காரைஒளி TV பகுதியில் நேரடி ஒளிபரப்பாக
(live telecast) காரைநகரில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும் கனடாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும ஒளிபரப்பாகவுள்ளது
நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
வறிய மக்களிற்கு இலவச சத்திரசிகிச்சை! காரைநகர் இணையத்தளத்திற்கு மூளாய் வைத்தியசாலையின் தலைவர் எஸ். ஞானேஸ்வரன் தெரிவிப்பு!
வறிய மக்களிற்கு இலவச சத்திரசிகிச்சை! காரைநகர் இணையத்தளத்திற்கு மூளாய் வைத்தியசாலையின் தலைவர் எஸ். ஞானேஸ்வரன் தெரிவிப்பு!
மூளாய் வைத்தியசாலையில் நேயம் அமைப்பின் அனுசரனையுடன் வறிய மக்களிற்கு இலவசமாக கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியசாலையின் தலைவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதனால் காரைநகர் வறிய மக்களும் இலவசமாகவோ அல்லது நியாயமான குறைந்த செலவில் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மூளாய் வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை இயந்திரம் காரைநகர் சுவிஸ் வாசியினால் அன்பளிப்பு!
மூளாய் வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை இயந்திரம் காரைநகர் சுவிஸ் வாசியினால் அன்பளிப்பு!
ஓருமாதமாக தடைப்பட்டிருந்த சிகிச்சை தொடர்கின்றது!
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் பழுதடைந்தமையினால் கடந்த ஒரு மாதகாலமாக கண் சத்திரசிகிச்சைகள் தடைப்படடிருந்தன. இதனால் காரைநகர் உட்பட்ட பல நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையை அறிந்த காரைநகர் கோவளத்தைச் சேர்ந்தவரும் தற்போது சுவிஸில் வாழ்பவருமான வர்த்தகர் சு.கதிர்காமநாதன் தமது தந்தையார் அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக பதின்மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான அவ் இயந்திரத்தினை கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதனால் ஒரு மாதகாலமாக தடைப்பட்டிருந்த கண் சத்திரசிகிச்சை இவ்வாரம் முதல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இதனால் ஏழை நோயாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிய நிறைவு ஏற்பட்டுள்ளது. அன்பளிப்புச் செய்த இயந்திரத்தினை படங்களில் காணலாம்.
கருங்காலி முருகனிற்கு வாரிவளவிலிருந்து பால் காவடிகள்
கருங்காலி முருகனிற்கு வாரிவளவிலிருந்து பால் காவடிகள்
கருங்காலி முருகன் ஆலயத்திற்கு வாரிவளவு பிள்ளையார் ஆலயத்திலிருந்து இரு சிறுவர்கள் 3ம் திருவிழா அன்று பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.அக்காட்சிகளை இங்கே காணலாம்.
கருங்காலி போசுட்டி முருகன் ஆலய 2ம் திருவிழா
கருங்காலி போசுட்டி முருகன் ஆலய 2ம் திருவிழா காட்சிகளை இங்கே காணலாம்.
கருங்காலி போசுட்டி முருகன் ஆலயத்தில் 27.04.2012 அன்று நடைபெற்ற கொடியேற்ர திருவிழா
கருங்காலி போசுட்டி முருகன் ஆலயத்தில் 27.04.2012 அன்று நடைபெற்ற கொடியேற்ர திருவிழா காட்சிகளை இங்கே காணலாம்.
வலந்தலை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் பொங்கல், மற்றும் தீ மதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
வலந்தலை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் பொங்கல், மற்றும் தீ மதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
வலந்தலை கண்ணகை அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவமும் தீமிதிப்பு வைபவமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தியால் உள்ளம் உருக்கிய காட்சிகளை இங்கே காணலாம்.
பலகாடு இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருப்பணி!
பலகாடு இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருப்பணி!
பலகாடு இராஜ ராஜேஸ்வரி அம்மன் திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக ஆலய அடியார்கள் தெரிவித்துள்ளனர். ஆலய படங்களை இங்கே காணலாம்.
சமூர்த்தி வங்கியின் புத்தாண்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்!
சமூர்த்தி வங்கியின் புத்தாண்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்!
காரைநகர் சமுர்த்தி வங்கியின் புத்தாண்டுவிழா அண்மையில் யாழற்ரன்கல்லூரியில் நடைபெற்றது. முகாமையாளர் தி.சசிக்குமார் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரீன், மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ்மாவட்ட உதவி ஆணையாளர் சி.சிவசிறி, காரைநகர் பிரதேசசெயலர் திருமதி தே.பாபு அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ற்ரன்கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தியும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் அணிவகுப்பு வரவேற்பினையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் படங்களில் காணலாம்.
பொன்னம்பலம் கருணாகரன்
மரண அறிவித்தல்
பொன்னம்பலம் கருணாகரன்
தோற்றம்:- 28-02-1979 மறைவு:- 28-04-2012
நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கருணாகரன் அவர்கள் (28-04-2012)இல் சனிக்கிழமை அகாலமரணமடைந்தார்.
திருமதி. கனகலெட்சுமி கணேசபிள்ளை(பபி)
மரண அறிவித்தல்
திருமதி. கனகலெட்சுமி கணேசபிள்ளை(பபி)
தோற்றம்: 06.05.1938 மறைவு: 27.04.2012
காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த கனகலெட்சுமி கணேசபிள்ளை அவர்கள் 27.04.2012 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
More Articles...
- காரை இந்நு நடராஜா மண்டபம் புனரமைக்க 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு. பொறியியளாளர் குழு நேரில் விஜயம்!
- விளையாட்டு மைதானமும் புனரமைத்து பார்வையாளர் அரங்கு அமைக்க நடவடிக்கை!
- பஸ்நிலைய திறப்புவிழாவின்போது பிரசுரிக்க மறந்த மறக்கமுடியாத படங்கள்!
- திரு.செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன்
- லண்டன் காரை நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் இன்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.video-2
- லண்டன் காரை நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் இன்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.Video-1
- லண்டன் காரை நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் இன்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.
- பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு காரைநகர் வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
- வலந்தலைச்சந்தி பஸ்நிலையம் ஞாயிறு திறப்புவிழா!
- காரைநகரில் இரானுவத்தினரின் பாரம்பரிய விளையாட்டுவிழா!




