காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து
காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து பயணிகள் இருவர், சாரதியுமாக மூவர் மயிரிழையில் உயிர்தப்பினர்.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று முற்சக்கரம் காற்றுப்போனதால் பாலத்தின் கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிய சாரதி, அதனுள் இருந்த இரு பயணிகள் உட்பட மூவர் சிறு காயங்களுக்குள்ளானர். இச்சம்பவம் கடந்த 16.01.2012 அன்று மதியம் இடம் பெற்றது. இவற்றின்போது சாரதிக்கும் இரு பயணிகளுக்கும் சிறுகாயம் ஏற்பட்டதால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேநேரம் இச்சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிசார் விபத்துக்குரிய காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 17.02.2012 புதுவீதி சிவன்கோயில் வீதியில் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதால் சிறுமி ஒருவர் சிறுகாயத்துக்குள்ளானார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது பாடசாலை சிறுமிகளை ஏற்றிவந்த ஆட்டோ வாகனம் வீதியிலிருந்த மின்கம்பத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டது. அண்மைக்காலமாக காரைநகரிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.





