லண்டன் பெர்ஸ்ட் ஆடியோவின்( LONDON FIRST AUDIO) 100 வது பொன்மாலைப் பொழுது போட்டி நிகழ்வில் ''காரை வைரஸ்'' (KARAI VIRUS) குழு முதல் இடத்தில் வெற்றி பெற்றது.

லண்டன் பெர்ஸ்ட் ஆடியோவின்( LONDON FIRST AUDIO) 100 வது பொன்மாலைப் பொழுது போட்டி நிகழ்வில் ''காரை வைரஸ்'' (KARAI VIRUS) குழு முதல் இடத்தில் வெற்றி பெற்றது.

எம்மவர் கலைத்திறங்களின் சங்கமமான பொன்மாலைப் பொழுது 100 வது போட்டி நிகழ்வு நேற்றைய தினம் 18-02-2012 சனிக்கிழமை WOOFORD GREEN , BROOMHILL ROAD இல் அமைந்துள்ள SIR JAMES HAWKEY HALL எனும் மண்டபத்தில் பிற்பகல் 5 .30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடனம், பாட்டு போட்டிகள் தனித்தனியே இடம்பெற்றது. நடனப் போட்டியில் பல  குழுக்கள் ஐரோப்பிய மட்டத்தில் பங்கு பற்றியிருந்தன, இவற்றுள் ஒன்றாக 'காரை வைரஸ்' குழுவும் போட்டியில் கலந்து கொண்டு மண்டபத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் அதிகப்படியான வாக்குகள் மூலம் முதல் இடத்தை தட்டிக்கொண்டது பாராடுக்குரியது.
''காரை வைரஸ்'' குழுவில் சிந்து சர்வானந்தன், சர்மிலன் சர்வானந்தன், பிரவீனா ரமேஷ் , லவீனா ரமேஷ் , அபிதன் தவராஜா , திவிதன் தவராஜா ஆகியோர் பங்கு பற்றியிருந்தார்கள். இவர்கள் போட்டியில் வழங்கிய இந் நிகழ்ச்சி , கடந்த மாதம் நடைபெற்ற லண்டன் காரை அபிவிருத்தி சபையின் வருடாந்த  நிகழ்வான ''காரைக் கதம்பம் 2012 '' இலும் வழங்கியிருந்த்தார்கள். பொன்மாலைப் பொழுது 100 வது நிகழ்வினை பிரபல வானொலி அறிவிப்பாளர் திரு நடா மோகன் ஒருங்கமைத்திருந்தார்.

  

Copyright 2011 லண்டன் பெர்ஸ்ட் ஆடியோவின்( LONDON FIRST AUDIO) 100 வது பொன்மாலைப் பொழுது போட்டி நிகழ்வில் ''காரை வைரஸ்'' (KARAI VIRUS) குழு முதல் இடத்தில் வெற்றி பெற்றது. . Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.