காரைநகரில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிலையான வைப்புப்பணம் சுமார் 4இலட்சம் ரூபாய்கள் மோசடி அதிபர் வாக்குமூலம்

Published Date

காரைநகரில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிலையான வைப்புப்பணம் சுமார் 4இலட்சம் ரூபாய்கள் மோசடி அதிபர் வாக்குமூலம்

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் 4இலட்சம் ரூபா பெறுமதியான நிலையான வைப்புச்சான்றிதழ் இன்றுவரை தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என வித்தியாலய அதிபர் பொன்.சிவானந்தராஜா கவலை தெரிவித்துள்ளார். எமது இணையத்தளத்திற்கு தகவல் தருகையில் காரை தியாகராஜா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கடந்த மாதம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் பொருளாளராக கடமையாற்றிய ந.பாரதி அவர்கள் தமது அறிக்கையில் நிலையான வைப்பாக 4இலட்சம் ரூபா இருப்பதாக காட்டியுள்ளார். ஆனால் இன்றுவரை(14.02.2012) புதிய நிர்வாகசபையிடம் இந்நிலையான வைப்புச் சான்றிதழ் ஒப்படைக்கப்படவில்லை என்று எமது இணையத்தளத்திற்கு வித்தியாலயத்தின் அதிபர் பொன்.சிவானந்தராஜா கவலையுடன் தெரிவித்துள்ளார். பழைய மாணவர் சங்கக்கூட்டம் நடைபெற்று சுமார் 45நாட்கள் கடந்த நிலையிலும் முன்னாள் பொருளாளரான பாரதி அவர்களை இந்நிலையான வைப்புச் சான்றிதழ் தொடர்பாக கேட்கும் பொழுதெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லிவரும் இவர் இறுதியாக அந்த நிலையான வைப்புச்சான்றிதழ் தொலைந்து விட்டது எனவும் கூறுகின்றார். ஆனால் அதனை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும் அதுவும் பயனளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இங்கு குறிப்பிட்ட ந.பாரதி அவர்கள் கடந்த பழைய மாணவர் சங்கத்தில் பொருளாளராக கடமையாற்றியவர் தற்போது இப்பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளராகவும் மணிவாசகர் சபையின் பொருளாளராகவும் காரை கிட்ஸ்பார்க் முன்பள்ளியின் அங்கத்தவராகவும் செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் செய்திகளை அலசி ஆராயாமல் முற்றிலும் போலியான செய்திகளினைப் பிரசுரித்தும் உலகம் வாழ் காரைநகர் மக்களை மிகவும் இழிவான முறையில் எழுதிவரும் காரைநியூஸ்  இணையத்தளத்தின் காரைநகர் செய்தியாளருமாவார்.

இப்பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் கடமைக்கு மேலதிகமாக சில வேளைகளில் தவறுகள் ஏற்பட்டாலும் கூட அதனை உடனடியாக திருத்தி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இந்த நிலையான வைப்புச்சான்றிதழ் தொடர்பாக அறிந்த காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

அதிபர் திரு. பொன். சிவானந்தராஜா

Published Date

காரைநகர் ஆ.தியாகராஜா ம.ம வித்தியாலய அதிபர் திரு. பொன். சிவானந்தராஜா karainagar.com க்கு வழங்கிய பேட்டியை இங்கே காணலாம்

களபூமி பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 250 லீற்றர் பால் நாளாந்தம் சேமிப்பு! காரைநகரில் உள்ளூர் உற்பத்தியில் பாரிய முன்னேற்றம்!

Published Date

களபூமி பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 250 லீற்றர் பால் நாளாந்தம் சேமிப்பு! காரைநகரில் உள்ளூர் உற்பத்தியில் பாரிய முன்னேற்றம்!
காரைநகரில் நெஸ்லே கம்பனியானது பால்சேகரிப்பு நிலையம் ஒன்றினை தனியாரினூடாக நிறுவி பால்சேகரித்து வருகின்றது. இதனால் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிய இன பாற்பசுக்களை கொள்வனவுனவு செய்து பசுவளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பால் கொள்வனவு நிலையத்தினால்     வேலை வாய்ப்பின்றியிருந்தவர்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பு பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அத்துடன் காரைநகரின் பால்உற்பத்திப் பொருளாதாரத்தில்  தன்னிறைவு ஏற்படவாய்பு ஏற்பட்டுள்ளது.
 

கிழவன்காடு கலாமன்றம் புனரமைக்கப்படுகிறது!

Published Date

கிழவன்காடு கலாமன்றம் புனரமைக்கப்படுகிறது!
காரைநகர் மாணவர்களின் கலைகளையும் திறன்களையும் வளர்த்து காரைநகர் கிழவன்காடுகலாமன்றம் ;புதுப்பொழிவுடன் புனரமைக்கப்பட்டுவருகின்றது. சமயஅறிவுடன்கூடிய நற்பிரஜைகளை உருவாக்க பாடுபடும் இம்மன்றம் புதுப்பொழிவுபெற்றுவருகின்றது. மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர புதியமண்டபமும் அமைக்கப்படவுள்ளது.

Read more...

Copyright 2011 காரைச் செய்திகள். Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.