11வது ஆண்டு காரை வசந்தம் 2011

Published Date

11வது ஆண்டு காரை வசந்தம் 2011
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வசந்தகால கலைவிழா 11வது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 9.10.2011 இல. 5183 Sheppard Ave East இல் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது மண்டபம் நிறைந்த மக்களுடன் மாலை 5.45க்கு ஆரம்பமாகி தொடர்ந்து விறுவிறுப்பான நிகழ்ச்சிகளுடன் மிக வெற்றிகரமான விழாவாக அமைந்தது.
இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அனைத்து மக்களுக்கும் முதற்கண் எமது மன்றம் தனது நன்றியைத் தெரிவிப்பதுடன் இவ்விழாவில் கலைப்படைப்புக்களை அள்ளித்தந்த கலைஞர்களுக்கும், இவ்விழாவை சிறப்புற நடாத்த உதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் தொண்டர்களுக்கும் மன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்து வகையிலும் உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
 அதற்கும் மேலாக காரைநகரில் அமையப்பெற்று வரும் நூலகப்பணிக்கு கனடாவாழ் காரை மக்கள் அன்றைய விழாவில் அளித்த நன்கொடைகள் மிகவும் பராட்டப்படவேண்டிய அம்சமாகும். இப்படியான கல்விசார்ந்த செயற்திட்டத்திற்கு கனடா வாழ் காரைநகர் மக்கள் ஆற்றிய பங்களிப்புக்கு கனடா-காரை கலாச்சார மன்றம் நன்றியைத்தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் முற்போக்கு சிந்தனையுள்ள காரைமக்கள் அனைவரும் இம்மன்றத்துடன் இணைந்து செயற்படவேண்டுமென இம்மன்றத்தின் நிர்வாகசபையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
நிர்வாகம் - கனடா-காரை கலாச்சார மன்றம்.

புகைப்பட உதவி பாரத் ஸ்ரூடியோ .


 

Copyright 2011 11வது ஆண்டு காரை வசந்தம் 2011. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.