இனி ஒரு வழி செய்வோம்
இனி ஒரு வழி செய்வோம்
ஆக்கம் கணபதிப்பிள்ளை ரஞ்சன் ஆயிலி காரைநகர்.
பாகம் 1
ஆட்டோ புன்னாலை கடைசிப்பாலத்தை தாண்ட நடுக்கம் எடுத்தது. வியர்வையில் அவர் உடல் நனைந்து கை கால் உதற திடீரென வலந்தலை சந்தியில் புகையை கக்கியபடி ஒரு ஓரமாக நின்றது. சந்தியில் நின்ற சிலர் எங்களை நோக்கி வருவது தெரிந்தது.
காலையிலேயே எழுப்பி அண்ணை வெய்யில் வர முதல் போவம் என்று அவசரப்படுத்தி கல்லுண்டாய் வழியாக போனபோதும் சரி வையிரவருக்கு காசு போட்டு கற்பூரம் கொழுத்திய போதும் சரி நானும் அவரும் அந்தக்காற்றில் கலந்து தான் போயிருந்தோம். எத்தனை வருடம்? வையிரவப்பெருமானே நீ மட்டும் எப்படி இதே இடத்தில் அதே மெருகோடு. நீ கடவுள்! நான் மனிதன்! இல்லை! தவறு! நீயும் கடவுள்! என்ன கனடாவில் இருக்கும் நான் கடவுளாக முடியுமா? மனது பின்நோக்கி பயணித்தது. புவியியல் படித்தபோது உலகப்படத்தில் பார்த்த நாடுகள் பின்பு வஸ்கொடகாமா மகெலன் கொலம்பஸ் போல பயணம் செய்த தேசங்கள் பழகிய மக்கள்.... எத்தனை கலை: எத்தனை கலாச்சாரம்..........!
கோக் போத்தலில் இருந்த தண்ணீரை மடக் மடக்கென குடித்தும் வியர்வை குறையவில்லை. அண்ணை! ஆர் யு ஓகே? வரட்டுகௌரவத்தோடு ஆங்கிலம் நாவில் நடமாடியது எனக்கே அவமானமாயிற்று. என்ன செய்யுது அண்ணை? ஏன் அண்ணை வேர்க்குது. “நல்ல காத்து அடிக்குது இவருக்கு இப்படி வேர்க்குது” வந்தவர்கள் ஏதோ வாய்க்குவந்தபடி உளற....... சேட்டை கழட்டி பிழிந்த படியே
தம்பி எனக்கு “டயபிட்டீஸ்”. காலையிலை மருந்து போடேலை. அது தான்......
எனக்கு யாரோ சம்மட்டியால் உச்சந்தலையில் அடித்தது போன்று........ “டயபிட்டீஸ்”; ஓ! நோ! மை கோட். அன்பளிப்பாக கொண்டுபோன “ரோபள்ரோனை” உரித்து வாயில் போட்டு காலடியில் கிடந்த உறைந்து போன கிறீம் சோடாவையும் உடைத்து ஊற்றி..........
“அண்ணை ஏன் மருந்து போடேலை”.
ஏதோ பெரிய சவாரி. சும்மா டவுனுக்கை ஓடுறத்தை விட.
மகனும் சொன்னான் “அப்பா: அந்த கனடா அண்ணை அது தான் நேத்து திருநெல்வேலி சந்தைக்கு போனாரே நல்ல மனசுப்பா. ரொம்ப நல்லா கதைப்பாரப்பா! அடிக்கடி நிப்பாட்டி கூல்ரிங்ஸ் டீ காபி எண்டு. அவரு சவாரி என்டா உடனையே போ அப்பா! அது தான் தம்பி.........
வாஸ்தவம் தான். சந்தோஸமானவர்களை பார்ப்பது சந்தோஸமானவர்களோடு கதைப்பது இதைத்தான் இப்பொழுது “சத்சங்” என்கிறார்களோ?
எனக்கு டயபிட்டீஸ் பற்றித் தெரியாது அண்ணை. குறிப்பா உங்களுக்கு இது இருக்கெண்டு தெரியாமை போச்சே அண்ணை. ஐ ஆம் சோ சொரி அண்ணை!
வியர்வை நின்று சேட்டும் காய......... ஆட்டோ ஓட்டம் பிடித்து வலந்தலை ஆஸ்பத்திரிக்கு முன்பாக நிற்க ஏதோ ஒரு உத்வேகத்துடன் வலது காலை வைத்து இடப்பக்கமாக இறங்;கி சுற்று முற்றும் பார்த்த எனக்கு.........(இன்னும் வரும்).
பாகம் 2
ஆனந்த பவான். (அது தான் தொண்டன் கடை) முன்னால் வலந்தலை ஆஸ்பத்திரி கூடவே காரைநகர் இந்துக்கல்லூரி எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. வெய்யிலுக்கு நிறம் மாறி வெளுப்பாகி, சற்று உரு மாறி என்னையும் புதுப்பிக்க சொல்லு உங்கள் கோயில்கள் போல தான் நானும்.............
“ஒரு கை தட்டி ஓசை வருமா?”
“தனி மரம் தோப்பு ஆனதா?”
வலந்தலை ஆஸ்பத்திரி. இங்கே ஒரு நீரழிவு நோய் தகவல் பிரிவை உண்டாக்கினால் என்ன? “நீரழிவு”. என் புத்திக்கு எட்டியவரை சிறுநீரில் “எறும்பு” மொய்த்தால் அவருக்கு இந்த நோய் என்பது ஜதீகமாய் இருந்தது.
“எறும்பு” ஒரு அற்ப பிராணி. சில சமயம் கண்ணுக்கே தெரியாத ஒரு யந்து. அதற்கு வாய் அதில் பல் வேறு. கடிக்கிறது நோகிறது வலிக்கிறுது. கடித்ததும் ஆத்திரம் வர அப்படியே கால் கட்டைவிரலால் நசித்து எம் சினம் தீர்த்து......... இது தானா! அதன் மறுபக்கம் சுவாரஸ்யமானது. எறும்புக்கு மறுபக்கமா?
எனக்கோ இந்த 24 மணித்தியாலமும் போதாது. HWY401 427 407 ல் கார் ஓடி வாடிக்கையாளர்களுக்கு வீடு காட்டவும் மற்றைய வீடு விற்பனை முகவர்கள் சட்டவல்லுனர்கள் வங்கி முகாமையாளர்கள் மத்தியில் உரையாடவும் அது தொடர்பான பத்திரங்கள் இ-மெயில்.......................(நல்ல கொமிசன் தானே என நீங்கள் முனுமுனுப்பதும் கேட்கிறது. அதற்காக தானே மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து Tim Horton Drive Through விலேயே வயிற்றை நிரப்பி! அகழ்வாரை தாங்கும் நிலம் போல)
“செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம்”.
இத்தனை இடர்களிலும் எனது குடும்பத்தோடு மனைவி பிள்ளைகள் வயது வந்த அப்பா அம்மா (இது எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் பொருந்தும்)வோடு செலவிட நேரம் போதவில்லை என்ற வருத்தம். இதற்கு நீங்கள் எறும்பை அவதானித்தால் கூடுதலாக கற்க முடியும் என்பது தான்.
எறும்பின் முன்னால் நீங்கள் எந்த தடையை உருவாக்கினாலும் அது இலகுவாக தடையை சுற்றி அல்லது அதன் மேலாக கீழாக செல்லும். (Flexibility is a great quality in an ant)
எறும்பு தன்னுடைய குறிக்கோளில் இருந்து விலகாது. குறிக்கோளை நோக்கிய பயணத்திலேயே கண்ணாக இருக்கும். (it has the attitude of “winners never quit; Quitters never win”.)
கோடைகாலத்தில் அது மழைக்காக சேமிக்கும். (Tremendous Planning ability)
மழை காலத்தில் கோடைக்காக அமைதியாக இருக்கும். (Patience)
குறிக்கப்பட்ட ஒரு காலகட்;டத்தில் அந்த வேலையை மிக அழகாக செய்து முடிக்கும் திறனும் கட்டுக்கோப்பும் மிக்கதோடு தன் திறனை குறைத்து மதிப்பிடாது. (commitment to do its best)
அது ஒரு குழுவாகவே செயற்படும். (Team is together empowering to achieve more)
ஒரு தலமையின் கீழ் கீழ்படிந்து செயற்படும். (Humility is strength; not Weakness)
ஒற்றுமையாக ஒரு பொறியியல் நுட்பத்தோடு எறும்பு புற்றை கட்டி முடிக்கும் ஆற்றல் கோடையில் குளிர்ச்சியும் மாரியில் சூடும் என்ற தொழில்நுட்பத்தோடு. (Team and Team intelligence)
எறும்பு ஊர்ந்து செல்லும் பொழுது கூட தன்பாதையில் பின்னால் வருகின்ற எறும்போடு முழுமையான தகவல் தொடர்பையும் தன்னுடைய எண்ணத்தையும் வெளிப்படுத்தியபடியே செல்கிறது. (This communication chain has perfect networking)
என்ன எறும்பிடம் இவ்வளவா! அப்ப இப்ப எங்களையும் எறும்பைப்போல ஒரு வாழ்க்கையை திட்டமிட்டு.......
பார்க்கலாம்! “நீரழிவு” என்ன செய்யலாம். எழுதுங்கள். karainagar.com
பாகம் 3
சீ! என்ன அர்த்தமற்ற வாழ்க்கை! இதுவும் ஒரு பிழைப்பா? மனது இன்னெருவருக்கு கீழ்
வேலை செய்ய மறுக்கிறது. இப்படி எத்தனை நாளைக்கு தான். சொந்தமாக ஒரு வீடு
(புதிதாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை)401ல் பனிக்கு மழைக்கு நிற்காமல் ஓட
நல்ல வாகனம் (BMW NOT BAD) விடுமுறைக்கு கியூபா (march break or long weekend) அல்லது இந்தியா (summer vacation and shopping).
எத்தனை தடவை தான் நாயகரா மொன்றியல் என உள் ஊருக்குள் சுற்றித்திரிவது அட அமெரிக்கா பிற்ஸ்பேக் வெஸ்ற் வேர்யீனியா கூட தான்)
சொந்த தொழில் செய்வதில் தான் விருப்பம். இதற்கு எனக்கு அனுபவமும் முதலீடு
செய்ய பணமும் தேவை! இதுவரை காலமும் ஒரு கம்பெனியில் நான் ஒரு விற்பனை
முகவராக (வீடு வியாபார தாபனம் வாங்க விற்க முதலீடு செய்ய) தான் பணி
புரிகின்றேன். எனது இந்த தொழிலில் நான் வீடு வீடாகப் போக வேண்டும். பல்வேறுபட்ட கம்பெனிகள் தொழில் நிறுவனங்களில் பணி புரியும் பலதரப்பட்ட மக்களையும் பல தரத்தில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்களையும் பார்வையிட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவர்களை பார்வையிட
பல்லைக்கடித்துக்கொண்டு அகழ்வாரை தாங்கும் நிலம் போல்…………(வாழ்க வள்ளுவம்)
நேர ஒதுக்கீட்டிற்கு (for the appointment) கூட தவமாய் தவம் இருந்து……………
பல நேரங்களில் சில பேர் என்னை ஒரு முட்டாளாக! ஏதோ நாதியற்றவனாக!
இதனால் எனது “சுயகௌரவம்” (எனக்கு இப்ப இது முக்கியம்) கூட பாதிப்படைவதாக
நான் அனுமாநிப்பதுண்டு.
மாறாக சிலநேரங்களில் எங்களை சிலபேர் புகழுகின்ற பொழுது (புகழுகின்றவர்களே
பின்பு தூற்றுவது வேறு விடயம்)கெட்டிக்காரன்! திறமைசாலி! எங்களைப்பற்றி நாங்கள்
என்ன நினைக்கின்றோம்? ஓ! நான் திறமைசாலி தான்! புத்தியீவி தான்! நாமே எமக்குள்
இன்னும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை அடுக்கி அழகு பார்க்கின்றோம். ஆ! குற்றாலத்து
அருவியாக மனது குளிர்கிறது. சிந்தனை சிறகடிக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற அவா
வளருகிறது. எல்லோரையும் நண்பர்களாக இதயம் ஏற்றுக்கொள்கிறது. அன்பு ஆனந்த
தாண்டவம் ஆடுகிறது. குடும்பம் குதூகலமாக மாறுகிறது.
இன்னும் சில நேரங்களில் யாரோ இவன் முட்டாள்! கையால் ஆகாதவன்! செயலாற்ற
நாதியில்லாதவன் என்ற பொழுது உடனே மனது உடைந்து சுக்கு நுறாகி தாழ்வு
மனப்பான்மை நம்மை ஆட்கொள்ள இடம் அளித்து நமக்கு நாமே எதிரியாகி உற்றார்
உறவினர் அயலவர் நண்பர்களை எல்லாம் பகைவர்களாக்கி கடவுளையே வெறுத்து
பெரும் மனஉளைச்சலுக்கு (depression) ஆளாகிறது.
இப்பொழுது மதன் மோகன் மாளவிகாஸ் உடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பனாரஸ் இந்துப் பல்கழைக்கழகம் கட்டுவதற்காக மதன் மோகன் பட்ட கஸ்டங்களை
பட்டியலிட முடியாது.(கனடா காரை கலாச்சார மன்றம் போல!
அட ஒரு உதாரணத்துக்கு தான்) பொருளாதாரம் நிதி நெருக்கடி தான் குறிப்பிடக்கூடியது. அவர் மனம் தளரவில்லை. தினமும் பல நகரங்கள் செல்வந்தர்கள் வர்த்தகப் பிரமுகர்கள் என
சற்றும் சலிக்காமல் சென்று பார்த்தார்.
(கேளுங்கள் தரப்படும்;. தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கும். என்பது தானே
பைபிள்).
கடைசியாக ஹதராபாத் நவாப்பிடம் சென்றார் மதன் மோகன். கொதிப்படைந்த நவாப்
என்ன துணிவு இருந்தால் ஒரு இந்துப் பல்கழைக்கழகம் கட்டுவதற்கு ஒரு நவாப்பிடம்
பணம் கேட்டு வந்திருப்பாய் என்றபடி தன் ஒற்றைச் செருப்பை கழற்றி மதன் மோகனை
நோக்கி எறிந்தார். (புஸ்சுக்கு எறிந்தது வேறு கதை) இதை சற்றும் எதிர் பாராத மதன்
மோகன் மாளவிகாஸ் தன்னை சுதாகரித்துக்கொண்டு அந்த ஒற்றை செருப்பை அன்போடு
வாரிஎடுத்து தன் இரு கண்களிலும் ஒற்றியபடி அமைதி தவழும் புன்னகையுடன்
வந்தவழியை விட்டு நகர்ந்தார்.
நேராக ஒரு சந்தையை நோக்கி நடந்த மதன் மோகன் அந்தச் செருப்பை ஏலத்தில் விட்டார்
இது நவாப்புடைய செருப்பு என்று கூவி கூவி விற்றார். பல பேர் போட்டி போட்டு அந்தச்
செருப்பை வாங்க முன்வந்தார்கள். அதன் விலையோ பல மடங்கு கூடிக்கொண்டே போனது.
இதைக் கேள்விப்பட்ட நவாப் பொறுமையிழந்து சினங்கொண்டு சிங்கம் என கர்ச்சித்தான்.
மந்திரியை அழைத்து மற்றவர்கள் குறைய விலை கொடுத்து வாங்குவதைவிட என்ன விலை
கொடுத்தாலும் நீ அதை வாங்கி வா! எனக் கட்டளையிட்டான்.
மதன் மோகன் மாளவிகா நவாப்பினுடைய செருப்பை அவனுக்கே அதி கூடிய விலைக்கு
விற்று இந்துப் பல்கழைக்கழகம் கட்ட தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஏன் இந்த வாழ்க்கை? அல்லது இனி என்ன வாழ்க்கை! எதை தான் சாதிக்கப் போகின்றோம்!
என்ற பிதற்றல் ஏக்கப்பெருமூச்சு இல்லாமல் கசக்கினாலும் மிதித்தாலும் அழுக்கானாலும்
டொலர் நோட்டின் பெறுமதி குறையாதது போல வாழ்க்கையும் எங்களை இப்படித்தான்
கசக்குகிறது காலில் போட்டு மிதிக்கிறது உடனே நீங்கள் உங்கள் மதிப்பு குறைந்து
விட்டதாகக் கவலைப்படுகின்றீர்கள். உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்! உங்களை
நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
“துணிவு நிரந்தரமானால் தோல்வி நிரந்தரமல்ல!”
ஒருவருடைய சுயமுன்னேற்றத்தை தடுப்பது எது தெரியுமா? தகுதியோ அல்லது திறமையோ
அல்ல. “முயற்சி செய்யாமலே முடிவு எடுப்பது” தான். (முயற்சி திருவினையாக்கும்)
Do not give up under the impression that “Opportunity is No Where!”
ஆக்கம் கணபதிப்பிள்ளை ரஞ்சன் ஆயிலி காரைநகர்.



