Oct 27 2010 Projects

Published Date

 Oct 24, 2010 - இல் கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திரு. சிவானந்தராஜா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு Multi Media Projector ரூபா 144,000.00விற்கு காரை அபிவிருத்திச்சபை மூலம் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக நடாத்தக்கூடிய வகையில் இந்த உபகரணம் உதவுகின்றது.

mul3

Sept 28, 2010 - காரைநகரில் தரம் 5இல் புலமைப்பரிசில் பெற்ற 5மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக தலா 5000ரூபாய்களும், அத்துடன் சமுர்த்தி சிறுவர் கழகங்களின் மாவட்ட கலாசார போட்டிகளின் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள ஆறு காரைநகர் மாணவிகளுக்கும் தலா 3000ரூபாய்களும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் எதிர்வரும் வாரத்தில் காரை அபிவிருத்திசபையினூக வழங்கப்படவுள்ளது.

Aug 14, 2010 - காரைநகரில் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொதநூலகம் அமைப்பது பற்றி பொதுக்கூட்டம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி கனடா காரை கலாசார மன்றத்தினால் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் ஏற்கனவே பொதுநூலகத்துக்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பொதுநூலகம் அமைப்பதற்கு கூட்டத்திற்கு வந்திருந்த அநேகரின் ஆதரவுடன் உதவிகளை மேற்கொள்ள, மற்றும் நிதிசேகரித்தல் சம்பந்தமாக இதற்கென மன்றத்தினால் 10 பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு. ராஜேந்திரம் வேலுப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 Aug 6, 2010 - யா/ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம்திகதி நடைபெற்றது. இந்தவிழாவிற்கான உதவித்தொகையான ரூ50,000ஐ கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கியிருந்தது. 

Copyright 2011 Oct 27 2010 Projects. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.