இனிதே நடைபெற்ற காரைக் கொண்டாட்டம் 2011
இனிதே நடைபெற்ற காரைக் கொண்டாட்டம் 2011 - வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டிகளும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை 17.07.2011இல் கனடா காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் காரைக்கொண்டாட்டமாகிய கோடைகால ஒன்றுகூடல் மிகவும் சிறப்பான முறையில் இனிதே நடைபெற்றது.
காலை 8மணி;க்கு ஆரம்பமாகி மாலை 7மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 400க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், விநோத உடைப்போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் கடந்த வருடங்களைப்போன்று நடைபெற்றன. இம்முறை புதிய முயற்சியாக உதைபந்தாட்டப் போட்டி பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இரண்டு பிரிவுகளாக நடாத்தப்பட்டது. இவ்விளையாட்டுக்குத் தேவையான அனைத்துத்தேவைகளையும் அமெரிக்காவிலிருந்து இங்கு வருகைதந்திருந்த திரு. நடராஜா தயாபரன் அவர்கள் வழங்கி ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது முக்கிய அம்சம்.
பலதரப்பட்ட எமதுமண்ணின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. வழமைபோல் காரைமக்கள் தமது உறவினர் நண்பர்களுடன் அளவாளாவியதனைக் காணமுடிந்தது. சிலர் வேலை நிமித்தம் காரணமாக சமூகம்தர முடியவில்லை என அறியத்தந்தார்கள். அன்றைய தினம் காலநிலையும் வெப்பம் அதிகமாகக்காணப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தக் காரைக்கொண்டாட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிகள் செய்த அனைத்துத் தொண்டர்கள், மற்றும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த காரைமக்கள் அனைவரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நிர்வாகசபை
கனடா-காரை கலாச்சார மன்றம்
காரைக் கொண்டாட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.
காரைக் கொண்டாட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.
நேற்று காலை 8மணிக்கு ஆரம்பமாகி மாலை 8மணிவரை நடைபெற்ற காரைக்கொண்டாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,
விநோத உடைப்போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் முன்னைய வருடங்களைப்போன்று நடைபெற்றன.
பலதரப்பட்ட எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. வழமையைப்போல் காரை மக்கள் தமது உறவினர், நண்பர்களுடன் அளாவளாவியதைக் காணமுடிந்தது. சிலர் வேலை நிமித்தம் காரணமாக சமுகம் தரமுடியவில்லை என அறியத்தந்தார்கள்.
இந்த காரைக் கொண்டாட்டம் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவிகள் செய்த அனைத்து காரைநகர் மக்கள் அனைவருக்கும் எமது மன்றம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.





