குளிர்கால ஒன்றுகூடல் - 25-12-2011

Published Date

குளிர்கால ஒன்றுகூடல் - 2011
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குளிர்கால ஒன்றுகூடல்(Winter Get together) மிகவும் சிறப்பாகவும், உற்சாகமானதாகவும் இனிதே நடைபெற்றது. 25.12.2011 ஞாயிற்றுக்கிழமை Toronto Baba Banquet Hall மண்டபத்தில் நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரை மக்கள் ஒன்றுகூடி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருந்தனர். கடந்த வருடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும் சிற்சில தடங்கல்களால் நிகழ்ச்சி நடைபெறாமை குறிப்பிடத்தக்கது. C.K.C.A இன் இக் கன்னி முயற்சியின் வெற்றியை பலர் பாராட்டி நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிகழ்வின் படங்களை இங்கே காணலாம்.


 

குளிர்கால ஒன்றுகூடலில் கலந்துகொள்ள விரும்புபவர்கள்

Published Date

எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவிருக்கும் குளிர்கால ஒன்றுகூடலில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே அழுத்திப் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குளிர் கால ஒன்றுகூடல் -2011

Published Date
குளிர் கால ஒன்றுகூடல் -2011
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 25ம் திகதி மாலை 6மணிக்கு நடைபெறவுள்ளது. நடைபெறும் இடம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
கனடா காரை கலாசார மன்றம் குளிர்காலத்திலும் உங்களுடன் ஒன்றுகூட விரும்புகின்றது. இதற்கு ஏதுவாக நாம் ஓர் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு எமது மன்றம் தயாராகி வருகின்றது. இதன் மூலம் உங்களையும்  உங்கள் குழந்தைகளையும் மகிழ்விக்கவும், எமது ஊர் மக்களுடன் கதைத்து மகிழவும் இலகுவாக இருக்கும். இது மன்றத்தின் ஓர் கன்னிமுயற்சியாகும். இதற்கு உங்கள் ஆதரவும் கருத்துக்களும் எமக்குத் தேவை. இதற்கு குறிப்பிடத்தக்களவு உங்கள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இதனை நாம் நடாத்த முடியும்.பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டவும் சந்தர்ப்பம் உண்டு.
கட்டணம்
தனிநபர் -30.00டொலர்கள் 4பேர் அடங்கிய குடும்பத்திற்கு 60.00டொலர்கள் மண்டப வாசலில் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி டிசம்பர் 15ம்திகதி இந்த குளிர்கால ஒன்றுகூடலில் கலந்து  கொள்ளவிரும்புபவர்கள் இங்கே அழுத்துவன் மூலம் உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறும் அல்லது எமது மன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
எமது மின்னஞ்சல் முகவரி:  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  Tel: 416.642.4912  இராப்போசன விருந்தும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இந்த குளிர்கால ஒன்றுகூடலில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயர் தொலைபேசி இலக்கங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 டிசம்பர் 15ம்திகதி  இத்திகதிக்குப் பின்னர் வரும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பதிவு செய்து நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ளமுடியும்.
மண்டப வாசலில் நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.
நிகழ்ச்சி வழங்கல் பற்றிய விபரம்
இக்குளிர்கால ஒன்றுகூடலுக்கு நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் குழுக்களாக மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்கமுடியும்.
சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் பங்கு பற்றமுடியும் ஒரு குழுவில் ஆகக்குறைந்தது 3பேர் முதல் இருக்கவேண்டும் ஒரு குழுவினரிற்கு 3 நிமிடங்கள் தொடக்கம் 6 நிமிடங்கள் வரை மட்டுமே வழங்கப்படும்.இந்நிகழ்ச்சிகள் தத்தமது ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.இவை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கலாம், திரையிசை நடனமாக இருக்கலாம். போட்டி நிகழ்ச்சியாக இருக்கலாம்.நீங்கள் வழங்க இருக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் டிசம்பர் மாதம் 15 ம் திகதிக்கு முன்னதாக எமக்கு அறியத்தரல் வேண்டும்.
இந்நிகழ்ச்சிகள் பற்றிய பதிவுகள் இன்றிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படும்.
 

 

Copyright 2011 குளிர்கால ஒன்றுகூடல். Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.