சுவிஸ் காரைஅபிவிருத்தி சபையால் மாணவர் நூலகத்திட்டத்திற்கு பத்துலட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு

Published Date

 

சுவிஸ் காரைஅபிவிருத்தி சபையால் மாணவர் நூலகத்திட்டத்திற்கு பத்துலட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு. காரைநகரை சேர்ந்த இளம் யுவதிக்கான சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி.

   சுவிஸ் காரை அபிவிருத்தி சபையால் (22-01-2012)ல் நடாத்தப்பட்ட காரைநக்ருக்கான அபிவிருத்திட்டங்களும்இ புலம்பெயர் மன்றங்களின் இன்றைய நிலைப்பாடும் என்ற கருத்தரங்கும் ஒன்றுகூடலும் வெகுசிறப்பாக நடைபெற்றது.

           கருத்தரங்கு மதியம் 11.30 மணியளவில் ஆரம்பமானது. முப்பதிற்கும் மேலதிகமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். சிதம்பரப்பிள்ளை யோகேந்திரனின் தேவாரத்துடன் தொடங்கியது அதனைத்தொடர்ந்து உறவுகளின் நினைவாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தலைவர் பூபாலபிள்ளை விவேகாந்தா சுவிஸ் காரை அபிருத்தி சபையின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிகூறியதோடு இரண்டு திட்டத்திற்கான நிதி உதவி சுவிஸ் காரை அபிவிருத்திசபையிடம் கோரிக்கை விடப்பட்டிருப்பததாக செல்லிஇருந்தார். முதலாவது காரைநகர் அபிவிருத்தி சபை நூலக திட்டம். மற்றது  காரைநகரைசேர்ந்த இளம் யுவதிக்கான சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கான உதவிஇ ஆகிய திட்டங்களுக்கு அனுசரனை வழங்குமாறு கேட்டிருப்பதாக சொல்லி இருந்தார். 

           இத்திட்டங்களுக்கு கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் பல ஆலோசனைகள் வழங்கிஇருந்தனர் அதன் அடிப்படையில் நூலகத்திட்டத்திற்கு பத்துலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதியை நீண்டகால அடிப்டையில் வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நூலகத்திட்டத்திற்கு கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் (2254.00Sfr)  நிதி பங்களிப்பு செய்திருந்தனர்;. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் நிதியிலிருந்து (1000Sfr) வழங்குவது என்றும். விரும்பியவர்கள் இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யலாம் என்று சபையோரால் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக (1752Sfr) நிதி சேகரிக்கப்பட்டது. இவ்விரண்டு திட்டத்திற்கும் நிதி பங்களிப்பு செய்தோர் விபரம் தரப்படுகின்றது. பங்களிப்பு செய்யாதோர் உங்களால் இயன்ற பங்களிப்பு செய்யுமாறு சுவிஸ் காரை அபிவிருத்தி சபை கேட்டுக்கொள்கின்றது. ஒன்றுகூடல் மதியபோசனத்துடனும் பலர்ருடைய கலந்துரையாடலுடனும் திருமதி சி.மங்கையற்கரசி அவர்களின் கவிதையுடனும்இ பின்னர் தேவாரத்துடன் மாலை 17.00 மணிக்கு  இனிதேநிறைவு பெற்றது.

      இங்ஙனம்
 சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
செயற்குழு உறுப்பினர்கள்


 

Copyright 2011 சுவிஸ் காரைஅபிவிருத்தி சபையால் மாணவர் நூலகத்திட்டத்திற்கு பத்துலட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.