கண்படர் அகற்றல் சிகிச்சை

Published Date

கண்படர் அகற்றல் சிகிச்சை
 
 செல்வி  வர்ஷினி தியாகலிங்கத்தின் தொண்டு நீச்சல் மூலம் கிடைக்கப்பெற்ற   நன்கொடையில் முதல் கட்டமாக , கடந்த ஞாயிற்றுக்கிழமை 22-01-2012 அன்று மூளாய் வைத்தியசாலையில் டாக்டர் எஸ்.குகதாசன் அவர்களால் , காரைநகரைச் சேர்ந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கண் பார்வை  நோய் குறைவுடையோர் பரிசோதிக்கப்பட்டு  , இதில் பன்னிரண்டு ( 12) உடனடி சிகிச்சையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று சிகிச்சை நிறைவுற்று வீடு திரும்பினர். மேலும் எட்டு பேர் அடுத்த வார சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
 
இவர்கள் அனைவரும் செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தை மனதாரா வாழ்த்தி நன்றியையும் தெரிவித்தனர், அத்துடன் பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கத்தினருக்கும் தங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

  இங்கு இவர்களுக்காக வழங்கப்பட்ட நிதி அனைத்தும் , கடந்த வருடம் செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தின் தொண்டு நீச்சல் மூலம் கிடைக்கப்பெற்ற நன்கொடையில் ஒரு பகுதி என்பதை , லண்டன் காரை நலன் புரிச் சங்கத்தினர் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் அறியத்தருகின்றனர்.

Copyright 2011 கண்படர் அகற்றல் சிகிச்சை. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.