17.12.2010 நேற்று காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் நடைபெற்ற மணிவாசகர் விழாப் படங்கள்
17.12.2010 நேற்று காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் நடைபெற்ற மணிவாசகர் விழாப் படங்கள்
காரைநகர் மணிவாசகர் சபையின் மணிவாசகர் முதலாம்நாள் விழாவில் சமயபாடப் பரீட்சையில் சித்தியடைந்த பெற்ற முதல் 5மாணவர்களுக்கும் விருந்தினர்கள் தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவிக்கின்றனர்.
காரைநகர் மணிவாசகர் சபையின் காரைநகர் மணிவாசகர் சபையின் 56வது விழா 17.10.2010 வெள்ளிக்கிழமை மாலை சபையின் தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் மணிவாசகர் திருவுருவ வீதியுலா சடையாளி ஞானவைரவர் கோயிலில் இருந்து வலந்தலை மடத்துக்கரை அம்மன் கோயிலுக்குச் சென்று அதிலிருந்து ஊர்வலமாக காரைநகர் ஈழத்துச்சிதம்பர விழா மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. இவ்வூர்வலத்தில் செந்தில்செல்வர்; ஆதிதிருமுருகர், மற்றும் சிவனருட்செல்வர், சிவனருட்காவலர் ஆ.செந்தில்நாதன் மற்றும் ஈழத்துச்சிதம்பரத்துக்கு வருகைதந்துள்ள உலகசைவப்பேரவையைச் சேர்ந்த உயர்திரு முருகு இராமலிங்கம் அவருடன் திருப்பரந்தாள் காசி திருமடத்தின் இணையடிகள் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவற்றிற்கு மேலாக இலண்டன் மெய்கண்டான் ஆதீனத்தலைவரும் உலக சைவப்பேரவைத்தலைவருமாகிய யோகானந்த அடிகளும் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டமை சிறப்புக்குரியது.
இவ்விழாவின் முதல்நாள் ஆரம்பவிழாவில் காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதம்பிள்ளை தலமையில் நடைபெற்று இவ்விழாவின் ஆரம்ப உரையை நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆரம்பித்து வைத்தார். முக்கிய நிகழ்வாக மணிவாசகர் சபையின் பரீட்சையில் சித்தியடைந்த 5 திறமையான மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அம்மாணவர்களின் விபரம் வருமாறு:
தரம் 3 ச.வசீகரன் - வலந்தலை வடக்கு அ.மி.க.த பாடசாலை
தரம் 5 செ.கீர்த்தனா - யாழ்ரன் கல்லூரி
தரம் 7 தி.சயந்தன் - யாழ்ரன் கல்லூரி
தரம் 9 க.சாந்தினி - தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம்
தரம் 11 இ. கிரிஜா - யாழ்ரன் கல்லூரி
இந்த 5மாணவர்களும் தங்கப்பதக்தத்தினைப் பெற்றுக்கொண்டனர். இத்தங்கப்பதக்கத்தினை
யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன், இந்த விழாவினை ஆரம்பித்துவைத்த நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பரந்தாள் காசி திருமடத்தின் இணையடிகள் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், உலக சைவப்பேரவைத்தலைவருமாகிய யோகானந்த அடிகள், மணிவாசகர் சபையின் போசகராக விளக்கும் கனடா - சைவசித்தாந்த மன்றத்தலைவர் தி.விசுவலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர். செந்தில்செல்வர்; ஆதிதிருமுருகர், மற்றும் சிவனருட்செல்வர், சிவனருட்காவலர் ஆ.செந்தில்நாதன் ஆகியோரின் சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.





