திரு. தில்லையம்பலம் சுப்பிரமணியம்
மரண அறிவித்தல்

திரு. தில்லையம்பலம் சுப்பிரமணியம்
(தங்கொட்டுவ முன்னாள் வர்த்தகர்)
பிறப்பு 15-6-1921 இறப்பு: 11-01.2012
காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 11.012012 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிதம்பரம் தம்பதியினரின் மருமகனும், செல்லம்மா அவர்களின் அன்புக்கணவரும், யோகேஸ்வரியின் பாசமிகு தந்தையும், சிவலிங்கத்தின் அன்பு மாமனாரும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பொன்னம்பலம், பாக்கியம் மற்றும் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தனலெட்சுமி, ஆறுமுகம், சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். மயூரன்(இலங்கை), அருந்ததி(கனடா), சிவரூபி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் சாதனா, சந்தோஷ், சங்கவி(கனடா), மகஜன்(இலங்கை) ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் வியாழக்கிழமை 12.01.2011 பிற்பகல் 1மணிக்கு இல.75 கொட்டடி ரோட் கொக்குவிலில் இடம்பெற்று காரைநகர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு:
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்(இலங்கை)
077-6161606
0777-447971
031-2275659
கனடா 416 751 2114



