அருணாசலம் கருணாகரன் (கரு)

Published Date

மரண அறிவித்தல்


அருணாசலம் கருணாகரன் (கரு)
புதுறோட் S.M கேணியடி,காரைநகர்.
பட்டயக்கணக்காளர் (Charted Accountant)

மலேசியாவை பிறப்பிடமாகவும் காரைநகரை வசிப்பிடமாகவும் சம்பியா, ஜமேக்கா(Zambia-Jamaica)ல் வசித்து வந்தவரும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கருணாகரன் 30.12.2011 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
   அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகலட்சுமியின் அன்புக்கணவரும், பாலகரன்(கண்ணன்), பாலலட்சுமி(கண்ணம்மா), சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் அன்பழகி, ஜீவேந்திரா (ஜீவன்), யதுநந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் அஞ்சலி, அனீசன், சகானா, மாயன், கீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் மதிவதனா (ஆச்சா), மனோகரன் (அப்பன்), கமலாகரன் (இளைப்பாறிய ஆசிரியர்), கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற வெற்றிவேல், மற்றும் குணதேவி, சறோஜினிதேவி, பரஞ்சோதி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, மற்றும் யோகலட்சுமி, மங்கையற்கரசி (ஞானம்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மற்றும் திலகவதி, காலஞ்சென்ற இராசலட்சுமி, மற்றும் கதிர்காமநாதன், காலஞ்சென்ற நவரத்தினராசா (ராஜா), மற்றும் தேவகி, சிற்சபேசன் (செல்லப்பா ஸ்ரோஸ், காரைநகர்), சந்திரவதனா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 1591 Elgin Mills Road East, Richmond Hill ,y; mike;Js;s Elgin Mills Cemetery ,y;;  புதன்கிழமையும், வியாழக்கிழமையும் (4-01-2012, 5-01-2012) பி.ப 6.00யில் இருந்து பி.ப 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதே இடத்தில் வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

84 Raymerville Drive, Markham, ON L3P 4J6

Home 905-472-1163

Kannan 416-587-6153  Jeevan 416-457-5896   Anba 647-929-8301

Yathu 416-562-7586

மலர் வளைய அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் அப்பெறுமதியை கீழ் வரும் இணையத்தளத்தினுடாக மார்க்கம் வைத்தியசாலை அல்லது கனடா நீரழிவுச் சங்க (Markham Stouffville Hospital or Canadian Diabetic Association) வளர்ச்சிக்கு அன்பளிப்பு செய்துகொள்ளவும்.

www.msh.on.ca/foundation/msh    OR   http://www.diabetes.ca/get-involved/supporting-us/donate-online/   a donation in memory of Mr A. Carunakaran

 


 

Copyright 2011 அருணாசலம் கருணாகரன் (கரு). Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.