திருமதி. கமலாதேவி வேலுப்பிள்ளை (பலகாடு, காரைநகர்)
மரண அறிவித்தல்
திருமதி. கமலாதேவி வேலுப்பிள்ளை
(பலகாடு, காரைநகர்)

அன்னை மடியில்: 23-11-1933 ஆண்டவன் அடியில்: 03-01-2012
காரைநகர், கருங்காலியைப்; பிறப்பிடமாகவும், காரைநகர், பலகாட்டை வசிப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி.கமலாதேவி வேலுப்பிள்ளை அவர்கள் செவ்வாய்க்கிழமை (03-01-2012) அன்று கொழும்பில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான திருவாதர்-அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், வேலுப்பிள்ளை (இளைப்பாறிய பிரதம கணக்காளர், கச்சேரி, யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற ஜெயதேவி (ஆசிரியை, கொழும்பு), அம்பிகாதேவி (வருமான வரித்திணைக்களம், அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற ஆனந்தவேல் (மின்சார தொழில் நுட்பவியாளர், கொழும்பு), கலாதேவி (இந்து கலாச்சார அமைச்சு, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயரும், காலஞ்சென்ற பரஞ்சோதி, விவேகானந்தராஜா(மின் தொழில்நுட்பவியாலாளர், கொழும்பு) ஆகியோரின் மாமியும், கந்தசாமி (சிவகாந்தா ஸ்ரோஸ், யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற மாகாதேவன், காலஞ்சென்ற யோகேஸ்வரன், கொழும்பு), சரோஜினிதேவி(கனடா), தர்மராஜா (ராஜா குரோசரீஸ், வவுனியா, கனடா), புஸ்பதேவி (காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லதம்பி, மற்றும் சிவபாக்கியம், தவமணி, பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆசிரியர், கனடா), தனலட்சுமி(கனடா), வேலுப்பிள்ளை(பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், காரைநகர்) ஆகியோரின் மைத்துனியும், ரூபன், ஆதித்தியா, விசாகன் ஆகியோரின் ஆசைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை (05-01-2012) காலை 8:00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, தெகிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
112556358 (கணவர், பிள்ளைகள்) 714402305(மகள்)
திரு.தர்மராஜா (தம்பி) (905)554 3725, (416)303 0658
சறோஜினிதேவி (தங்கை) (289)997 0934
அம்பிகா (மகள், அவஸ்ரேலியா) 612 9633 9106



