தமிழ்மொழித் திறன் போட்டிகள்
தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்
கனடா – காரை கலாச்சார மன்றம்
வருடாந்தம் நடாத்தும்
தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்
எதிர்வரும் Decmber 6, 2009இல் நடாத்தப்படவுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி: November 15, 2009
இடம்: Scarborough Civic Centre
காலம்: ஞாயிற்றுக்கிழமை, Decmber 6, 2009
நேரம்: காலை 8.00மணி
இத் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில்
பேச்சுப் போட்டி
வாசிப்புப் போட்டி
பண்ணிசைப் போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.
இதற்கான விதிமுறைகள் பின்வருமாறு:
பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பேச்சினை மனனம் செய்து பேசுதல் வேண்டும்.
வாசிப்புப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட விடயங்களை வாசித்துப் பயிற்சி செய்து வரவும். இவற்றுள் கேட்கப்படும் பகுதிகளை போட்டியின் போது வாசித்துக் காட்டுதல் வேண்டும்.
பண்ணிசைப் போட்டி:
பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு: ஏதாவதுதொரு தேவாரம்
மத்திய பிரிவு, மேற் பிரிவு: ஏதாவதொரு தேவாரமும், புராணமும்.
அதிமேற்பிரிவு: ஏதாவதொரு தேவாரமும், திருவாசகமும், புராணமும்.
ஒவ்வொரு பிரிவிலும பங்குபற்றும் போட்டியாளர்களுள் வெற்றி பெறும் முதல் மூவருக்கு வெற்றிக் கிண்ணங்களும், பங்கு பற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன் வெற்றியாளர்கள் மூவரதும் புகைப்படங்கள் காரை விழுதுகள் சிறப்பு மலரிலும், மன்ற இணையதளத்திலும் (முயசயiயெபயச.உழஅ) இடம்பெறச் செய்யப்படும்.
பேச்சுப்போட்டியில் பங்கு பற்றி ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது இடத்தைப் பெறும் போட்டியாளர்களுக்கு காரை விழுதுகள் கலையரங்கத்தில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தூய தமிழ்ப்பெயர்
மன்ற உறுப்பினர்களின் அல்லது மன்றத்தில் உறுப்புரிமை பெறத்தகுதி வாய்ந்த காரைநகர் தொடர்புடையவர்களின் பிள்ளைகளாகவும் 18வயதுக்குட்பட்டவர்களாகவும் தூய தமிழ்ப்பெயர் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
எல்லாப் போட்டிகளிலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
October 27, 2009





